கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
பிளஸ் 2 தேர்வு திட்டமிட்டப்படி மே 3ஆம் தேதி முதல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்...
💥 பிளஸ் 2 தேர்வு திட்டமிட்டப்படி மே 3ஆம் தேதி முதல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்
💥 பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தலைமையில் நடந்த ஆலோசனையில் முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்
மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடங்கள் நடத்த உத்தரவு...
கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பேராசிரியர்கள் கல்லூரிக்கு வந்து மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு பொதுத் தெர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. முன்னதாக 1 முதல் 11ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு தேர்வில்லாமல் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக மட்டுமே பாடங்கள் நடத்தப்படும் என பல்கலைக்கழகங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளன.
மதுரை உயர் கல்வி அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நடத்த அரசு அனுமதி அளிக்கவில்லை. எனவே, கல்லூரி பேராசிரியர்கள், கல்லூரி ஊழியர்கள் மட்டுமே கல்வி நிறுவனங்களுக்கு வந்து ஆன்லைன் வகுப்புகளை நடத்த வேண்டும்.
அரசு அனுமதி வழங்கினால் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்துவது குறித்த அறிவிப்புகள் வெளியாகும். தற்போது உள்ள சூழ்நிலையில் ஆன்லைன் வழியே தேர்வுகளும் நடத்தப்படும். அரசு நெறிமுறைகளை மீறி மாணவர்களை கல்லூரிகளுக்கு வரவழைத்தால் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
நீட் தேர்வை ஏற்க முடியாது; தமிழகத்திற்கு விலக்கு தேவை - சுகாதாரத்துறை அதிகாரிகள் வலியுறுத்தல்...
நீட் தேர்வை ஏற்க முடியாது; தமிழகத்திற்கு விலக்கு தேவை - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தலைமையில் நடந்த கூட்டத்தில் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் வலியுறுத்தல்...
ஆதாருடன் பதிவு செய்யப்பட்டுள்ள MOBILE எண் கண்டறிய வழிமுறைகள்...
நம்மில் சிலர் ஆதார் அட்டை வழங்கப்பட்ட காலத்தில் ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைக்க தவறியிருப்போம். ஆனால் இன்று நாம் செய்யும் அனைத்து வேலைகளுக்கும் ஆதார் எண்ணிலுள்ள மொபைல் எண் தேவைப்படுகிறது.
ஆதார் அட்டை வழங்கப்பட்ட போது இருந்த ஆதார் எண் தற்போது பலருக்கு மறந்திருக்கலாம். அவ்வாறு இருந்தால் மிக எளிய முறையில் ஆதார் அட்டையில் உள்ள உங்கள் பழைய எண்ணை தெரிந்து கொள்ளலாம்.
ஆதாரில் மொபைல் எண்ணை கண்டுபிடிக்க,
UIDAI யின் https://uidai.gov.in/ வலைதள பக்கத்துக்கு செல்ல வேண்டும்.
அதில் கொடுக்கப்பட்டுள்ள பல பிரிவுகளில் My ஆதார் வகையை தேர்வு செய்ய வேண்டும்.
அதில் ஆதார் Service என்பதை தெரிவு செய்யவும்.
பிறகு மின்னஞ்சல் அல்லது மொபைல் எண் குறித்த புதிய பக்கம் திறக்கப்படும்.
அதில் உங்கள் ஆதார் எண் மற்றும் மொபைல் எண்ணை பதிவு செய்யவும்.
பிறகு கொடுக்கப்பட்டுள்ள கேப்சாக் (Captcha) குறியீட்டை சரியாக பதிவிடவும்.
நீங்களாக ஒரு ஓடிபி எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
அந்த ஓடிபி எண்ணை பதிவு செய்த பிறகு உங்கள் மொபைல் எண் ஆதாருடன் இணைக்கப்பட்டிருந்தால் The Mobile you have entered already verified with our records என்று செய்தி அனுப்பப்படும்.
ஆதாரில் மொபைல் எண் பதிவு செய்யப்படவில்லை என்றால் The Mobile number you had entered does not match with our records என்ற செய்தி அனுப்பப்படும்.
இதே வழிமுறையை பயன்படுத்தி உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு ஆதரில் உள்ள தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...