கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

டெல்லியில் மறு உத்தரவு வரும் வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளை மூட உத்தரவு...

 டெல்லியில் கொரோனா பரவல் அதிகரிப்பதால் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியை பொறுத்தவரையில் கொரோனா பரவல் என்பது நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 7,437 நபர்களுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் நேற்று ஒரே நாளில் 24 பேர் உயிரிழந்தனர். ஏற்கனவே டெல்லியில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.



குறிப்பாக இரவு நேர ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இரவு 10 முதல் காலை 5 மணி வரை அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து பிறகு எதற்கும் யாரும் வெளியே நடமாடக்கூடாது என்று அரசு அறிவித்துள்ளது. அதே நேரத்தில் காவல்துறையினர் இந்த விவகாரத்தை தொடர்ச்சியாக கண்காணித்து 10 மணிக்கு மேல்  பயணங்களை மேற்கொள்ளும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.  அணியாதவர்களுக்கு ரூ.2000 அபராதம் விதிக்கப்படுகிறது. இந்நிலையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கொரோனா தொற்று அதிகரித்ததன் காரணமாக காலவரையின்றி மூடுவதாக தற்போது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.


தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக இந்த செய்தியை பதிவிட்டுள்ள அவர்; தொடர்ச்சியாக தலைநகரில் கொரோனா பரவல் அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக மறு உத்தரவு வரும் வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மூடப்படுவதாகவும், ஆன்லைன் வாயிலாக கல்வியை வேண்டுமென்றால் பயிற்சி அளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

இன்றைய (11-04-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஏப்ரல் 11, 2021



வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும். வாகனப் பழுதுகளை சீர் செய்வீர்கள். மாற்றமான முயற்சிகளின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



அஸ்வினி : ஆதரவான நாள். 


பரணி : அனுபவம் கிடைக்கும்.


கிருத்திகை : பொருட்சேர்க்கை உண்டாகும். 

---------------------------------------




ரிஷபம்

ஏப்ரல் 11, 2021



உயர் அதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதார மேன்மை ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த மனவருத்தங்கள் நீங்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். 



அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



கிருத்திகை : மகிழ்ச்சியான நாள். 


ரோகிணி : மனவருத்தங்கள் நீங்கும். 


மிருகசீரிஷம் : துரிதம் உண்டாகும்.

---------------------------------------




மிதுனம்

ஏப்ரல் 11, 2021



மனமகிழ்ச்சி அதிகரிக்கும். பயணங்களால் நன்மை உண்டாகும். தொழிலில் மேன்மை ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். 



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



மிருகசீரிஷம் : நன்மை உண்டாகும்.


திருவாதிரை : மேன்மையான நாள்.


புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும். 

---------------------------------------




கடகம்

ஏப்ரல் 11, 2021



புதிய முயற்சிகளுக்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். தனவரவுகளின் மூலம் திருப்திகரமான சூழல் உண்டாகும். தொலைபேசி தொடர்பான போக்குவரத்தால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



புனர்பூசம் : திருப்திகரமான நாள். 


பூசம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 


ஆயில்யம் : நெருக்கடிகள் குறையும்.

---------------------------------------




சிம்மம்

ஏப்ரல் 11, 2021



சுபகாரியங்கள் தொடர்பான அலைச்சல்கள் ஏற்படும். பேச்சில் கவனம் தேவை. குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். 



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



மகம் : அலைச்சல்கள் ஏற்படும். 


பூரம் : அனுசரித்து செல்லவும்.


உத்திரம் : செலவுகள் ஏற்படும். 

---------------------------------------




கன்னி

ஏப்ரல் 11, 2021



உயர் அதிகாரிகளால் சாதகமான சூழல் உண்டாகும். தொழிலில் மேன்மையான சூழல் ஏற்படும். பொதுக்காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் முயற்சிக்கேற்ப முன்னேற்றம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். 



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்



உத்திரம் : சாதகமான நாள். 


அஸ்தம் : ஈடுபாடு உண்டாகும். 


சித்திரை : அன்பு அதிகரிக்கும். 

---------------------------------------




துலாம்

ஏப்ரல் 11, 2021



தந்தையிடம் நிதானமாக நடந்து கொள்ளவும். வெளியூர் பயணங்களால் சாதகமான பலன்கள் உண்டாகும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சுபச்செய்திகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் உயரும். பழைய கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். 



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



சித்திரை : நிதானம் வேண்டும்.


சுவாதி : சுபச்செய்திகள் கிடைக்கும்.


விசாகம் : மதிப்புகள் உயரும்.

---------------------------------------




விருச்சகம்

ஏப்ரல் 11, 2021



கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். உறவினர்களுக்கிடையே மதிப்புகள் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் நன்மை உண்டாகும். சகோதரிகளின் வழியில் லாபம் அதிகரிக்கும். 



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



விசாகம் : அன்யோன்யம் அதிகரிக்கும்.


அனுஷம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.


கேட்டை : லாபம் அதிகரிக்கும். 

---------------------------------------




தனுசு

ஏப்ரல் 11, 2021



உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த பாதிப்புகள் நீங்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். மனைவி வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு அதிகரிக்கும். 



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு



மூலம் : பாதிப்புகள் நீங்கும். 


பூராடம் : முன்னேற்றம் உண்டாகும்.


உத்திராடம் : ஆதரவு அதிகரிக்கும். 

---------------------------------------




மகரம்

ஏப்ரல் 11, 2021



முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். புதிய செயல்பாடுகளில் நிதானம் வேண்டும். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் நீங்கும். தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



உத்திராடம் : வெற்றிகரமான நாள். 


திருவோணம் : தனவரவுகள் கிடைக்கும். 


அவிட்டம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.

---------------------------------------




கும்பம்

ஏப்ரல் 11, 2021



பிள்ளைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். உடல்நிலையில் சோர்வும், ஒருவிதமான சுறுசுறுப்பின்மையும் ஏற்பட்டு மறையும். குடும்ப உறவினர்களிடம் மாற்று கருத்துக்கள் தோன்றும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் ஏற்படும். நண்பர்களிடம் பொறுமை வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



அவிட்டம் : சோர்வு உண்டாகும். 


சதயம் : மாற்றமான நாள். 


பூரட்டாதி : பொறுமை வேண்டும்.

---------------------------------------




மீனம்

ஏப்ரல் 11, 2021



சுபவிரய செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். மனதில் இருந்துவந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறும். துணிவுடன் புதிய ஆராய்ச்சியில் ஈடுபடுவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



பூரட்டாதி : லாபம் கிடைக்கும். 


உத்திரட்டாதி : ஒற்றுமை அதிகரிக்கும். 


ரேவதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


---------------------------------------


துறைத் தேர்வுகள் - இனி வரும் காலங்களில் கொள்குறி வகை தேர்வுகள் கணினி வழியில் நடைபெறும்...



 துறைத் தேர்வுகள் - இனி வரும் காலங்களில் கொள்குறி வகை தேர்வுகள்  கணினி வழியில் நடைபெறும், விரிந்துரைக்கும் வினாக்கள் கொண்ட தேர்வு பழைய முறையில் நடை பெறும்...


>>> தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் - செய்தி வெளியீடு எண். 14/2021 நாள் : 10.04.2021...




ஆய்வக உதவியாளர்களுக்கு, இளநிலை உதவியாளர் பதவி உயர்வு வழங்கலாம் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை தீர்ப்பு...

 


அரசாணை எண் 11 நாள் 04.01.1989- ன் படி ஊட்டு வகை பணியிடத்தை உறுதி செய்து ஆய்வக உதவியாளர்களுக்கு இளநிலை உதவியாளர் பதவி உயர்வு வழங்கலாம் என உயர் நீதி மன்றம் மதுரை கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது...

உயர் கல்வித்துறை திரு.கோபால் அவர்களது கடிதம் ரத்து செய்யப்பட்டு ஆய்வக உதவியாளர்களுக்கு இளநிலை உதவியாளர் பதவி உயர்வு வழங்க வேண்டுமென  பாத்திமா கல்லூரி , மதுரை & விவேகானந்தா கல்லூரி ,மதுரை  தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து அரசு வழக்கு தொடுத்தது. இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் அரசு தொடுத்த வழக்கை ரத்து செய்து அரசாணை எண் 11 நாள் 04.01.1989- ன் படி ஊட்டு வகை பணியிடத்தை உறுதி செய்து ஆய்வக உதவியாளர்களுக்கு இளநிலை உதவியாளர் பதவி உயர்வு வழங்கலாம் என உயர் நீதி மன்றம் மதுரை கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது. 

W.A.(MD)Nos.114 and 9 of 2020, 

and

C.M.P.(MD)No.1012 of 2020 in W.A.(MD)No.114 of 2020

and

C.M.P.(MD)No.339 of 2020 in W.A.(MD)No.9 of 2020

BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT

DATED : 25.03.2021


>>> Click here to Download Judgement Copy...



பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட வாய்ப்பில்லை - தமிழக அதிகாரிகள் திட்டவட்டம்...



 தமிழகத்தில் நீட் தேர்வை ஏற்க முடியாது.


நீட் தேர்வில் இருந்து விலக்கு தேவை- மத்திய சுகாதாரத் துறை அமைச்சருடனான கூட்டத்தில் தமிழக அதிகாரிகள் திட்டவட்டம்.


ஏற்கனவே அமல்படுத்தி வரும் இட ஒதுக்கீடு முறை தொடர்ந்து கடைபிடிக்கப்படும் - தமிழக அரசு.


பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட வாய்ப்பில்லை - தமிழக அதிகாரிகள் திட்டவட்டம்...

தமிழகத்தில் 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு - பள்ளிக்கல்வி துறை முடிவெடுத்துள்ளதாக தகவல்...



தமிழகத்தில் 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்த பள்ளிக்கல்வி துறை முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


கொரோனா காரணமாக மாணவர்கள் நேரடியாக பள்ளிகளுக்கு சென்று வகுப்புகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு வரும் திங்கட்கிழமை முதல் பயிற்சி புத்தகம் ஒன்று வழங்கப்பட உள்ளது. அந்த பயிற்சி புத்தகத்தை மாணவர்கள் முழுவதும் பயில்வதற்கு ஆசிரியர்கள் அறிவுறுத்துவார்கள்.


இதனையடுத்து மாணவர்களுக்கு வாட்ஸ்அப் வாயிலாக அந்தப் புத்தகத்தில் உள்ள கேள்விகளை அனுப்பி அதன்மூலம் பதிலை பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.. ஒவ்வொரு பாடத்திலும் அந்தந்த பாடத்தலைப்புகளிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு மாணவர்களின் திறன் அறியப்பட உள்ளது..


இந்தத் தேர்வு மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை வைத்தே ஒன்பதாம் வகுப்பு மாணவர்களை பத்தாம் வகுப்பில் அனுமதிப்பது குறித்து பத்தாம் வகுப்பு மாணவர்களை பதினோராம் வகுப்பில் அனுமதிப்பது குறித்து முடிவு செய்ய உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


ஏற்கனவே பன்னிரண்டாம் வகுப்பு தவிர்த்து அனைத்து மாணவர்களுக்கும் அரசு தேர்ச்சி வழங்கியுள்ள நிலையில் தற்போது மாணவர்களின் திறனை அறிய பள்ளி அளவில் ஒரு தேர்வு நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது

ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர்களாக பணிபுரிந்த இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் 9 பேரை கட்டாய ஓய்வில் அனுப்ப மாநில தகவல் ஆணையம் பரிந்துரை...

 ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய போட்டித் தேர்வுகளில் வெளிப்படைத்தன்மை இல்லை - 2011 முதல் 2020 வரை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர்களாகப் பொறுப்பு வகித்த IAS அதிகாரிகளை கட்டாய ஓய்வில் அனுப்ப தலைமைச் செயலாளருக்கு தமிழ்நாடு தகவல் ஆணையம் பரிந்துரை...



ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வுகளில் வெளிப்படைத்தன்மையை கடைபிடிக்கவில்லை என 9 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது மாநில தகவல் ஆணையம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. கேள்வித்தாள் வடிவமைப்பில் குளறுபடி, தேர்வர்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றசாட்டுகள் எழுந்துள்ளது.

இதனடிப்படையில், மாநில தகவல் ஆணையம் தலைமைச் செயலாளருக்கு அனுப்பிய அறிக்கையில், சுர்ஜித் சவுத்ரி, விபூ நாயர், ககர்லா உஷா, ஜெகநாதன், சீனிவாசன், நந்தகுமார், ஜெயந்தி, வெங்கடேஷ், லதா ஆகிய ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு வழங்க பரிந்துரை செய்துள்ளது.  2011ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை ஆசிரியர் தேர்வு வாரியத்தில் பணியாற்றிய 9 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது தகவல் ஆணையம் புகார் தெரிவித்துள்ளது.


>>> தலைமைச் செயலாளருக்கு தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் பரிந்துரை ஆணை- தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...