கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு - ஞாயிறு முழு ஊரடங்கு அமல்...

 


தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு - ஞாயிறு முழு ஊரடங்கு அமல்...


* தமிழகத்தில் வரும் 20ஆம் தேதி முதல் இரவு நேரம் ( 10 மணி முதல் 4 மணி வரை)  ஊரடங்கு அறிவிப்பு.


* ஞாயிறு முழு ஊரடங்கு அமல்...




>>> Click here to Download தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு DIPR - P.R.No.219 - Press Release - Lockdown - Date 18.04.2021...


*🎯தமிழக அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் அனைத்தும் நாளை மறுநாள் (செவ்வாய்) காலை முதல் அமுலாகின்றன...!*


*🎯இரவு ஊரடங்கு அமலாகும் 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பேருந்துகள் ஓடாது...!*


*🎯ரயில் & விமான நிலையங்களுக்கு டாக்ஸி அனுமதிக்கப்படும் என்பதால் ரயில் & விமானங்கள் வழக்கம்போல இயங்கும்...!*



*🎯திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு 100 பேரும் இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 பேரும் பங்கேற்க அனுமதி...!*


*🎯நீலகிரி ,  கொடைக்கானல் , ஏற்காடு போன்ற சுற்றுலா தலங்களுக்கு உள்ளூர் &  வெளியூர் பயணிகள் செல்ல தடை...!*


*🎯பூங்கா & உயிரியல் பூங்கா & அருங்காட்சியகங்கள் அனைத்து நாட்களிலும் செயல்பட அனுமதி இல்லை...!*


*🎯முழு ஊரடங்கு ,  ஞாயிற்றுக்கிழமைகளில் உணவகங்களில் பார்சல்கள் மட்டுமே அனுமதி...!*


*🎯தகவல் தொழில் நுட்ப ஊழியர்கள் 50 சதவிகிதம் பேர் வீட்டிலிருந்தே பணிபுரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்...!*


*🎯தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும்...!*


*🎯சுற்றுலா தலங்களுக்கு உள்ளூர் &  வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல அனைத்து நாடுகளுக்கும் தடை...!*


*🎯அனைத்து கடற்கரை பகுதிகளுக்கும் அனைத்து நாட்களும் பொதுமக்கள் செல்ல தடை...!*


*🎯கல்லூரி & பல்கலைக் கழக தேர்வுகள் இணைய வழியில் மட்டுமே நடத்தப்பட வேண்டும்...!*


*🎯கல்லூரி &  பல்கலைக்கழக ஆசிரியர்கள் தங்கள் வீட்டிலேயே இணையவழி வகுப்பு நடத்த அறிவுறுத்தல்...!*


*🎯விதிமுறைகளை பின்பற்றாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்...!*


*🎯ஏப்ரல் 20ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்படும்...!*


*🎯இரவு நேர ஊரடங்கின் போது தனியார் / பொது போக்குவரத்து & ஆட்டோ &  டாக்ஸி அனுமதி இல்லை...!*


*🎯மருத்துவம் போன்ற அவசர தேவைக்கு மட்டும் வாடகை ஆட்டோ & டாக்ஸி போன்றவை அனுமதிக்கப்படும்...!*


*🎯அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் ஆலைகள் இரவு நேர ஊரடங்கின் போது செயல்பட அனுமதி...!*


*🎯தனியார் நிறுவன இரவு காவல் பணியில் ஈடுபடுவோர் வீட்டிலிருந்து பணி இடத்திற்கு சென்று திரும்ப அனுமதி...!*


*🎯பெட்ரோல் & டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதி...!*


*🎯தமிழக அரசு...!*


12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு - செய்முறைத் தேர்வுகள் மட்டும் திட்டமிட்டபடி நடைபெறும்...

 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு - செய்முறைத் தேர்வுகள் மட்டும் திட்டமிட்டபடி நடைபெறும்...


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிதீவிரமாக அதிகரித்து வருவதால் மாணவர்கள் நலன்கருதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.


தற்போது நடைபெற்றுவரும் செய்முறைத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும்.



சுகாதாரத்துறை,  தலைமைச் செயலாளருடன் முதல்வர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 




ஏற்கனவே CBSE,  ICSE மற்றும் சில மாநிலங்களும் பிளஸ் 2 பொதுத்தேர்வை ஒத்திவைத்த நிலையில் தமிழக அரசும் இந்த முடிவை எடுத்துள்ளது.




>>> தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 219 - Press Release - நாள்:  18.04.2021 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...





பிளஸ் 2 தேர்வு திட்டமிட்டபடி நடக்குமா? தலைமை செயலர் நடத்திய கூட்டத்தில் நடந்த ஆலோசனை என்ன?

 கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், பிளஸ் 2 தேர்வை நடத்தலாமா; தள்ளி வைக்கலாமா என்பது குறித்து, தலைமை செயலர் நடத்திய கூட்டத்தில், சூழ்நிலைக்கேற்ப முடிவு செய்து கொள்ளலாம் என்று, அதிகாரிகள் ஆலோசனை தெரிவித்து உள்ளனர்.




கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது மற்றும் பிளஸ் 2 தேர்வை நடத்துவதா; ரத்து செய்வதா என்பது குறித்து, தலைமை செயலகத்தில் நேற்று அவசர ஆலோசனை நடந்தது.




ஆலோசனைதலைமை செயலர் ராஜிவ் ரஞ்சன் தலைமையில் நடந்த கூட்டத்தில், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், பள்ளி கல்வி முதன்மை செயலர் தீரஜ்குமார், பல்வேறு துறை உயர் அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.




கூட்டத்தில், கொரோனா இரண்டாம் அலை பரவல் நிலவரம், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை, தடுப்பூசி நடைமுறைகள் குறித்து, விரிவாக விவாதிக்கப்பட்டது. பிளஸ் 2 மாணவர்களுக்கு மே, 5ல் பொதுத்தேர்வு நடத்தப்படுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, தமிழக பிளஸ் 2 தேர்வுகளையும் தள்ளி வைக்க வேண்டுமா; அதற்கான தேவையுள்ளதா என, அதிகாரிகளிடம் கருத்து கேட்கப்பட்டது.




அப்போது, ஆந்திரா உட்பட பல மாநிலங்களில், பிளஸ் 2 தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தப்படுவதை அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். கடந்த ஆண்டு கொரோனா பரவல் துவங்கியிருந்த போதும், பிளஸ் 2 தேர்வுகளை மாணவர்களுக்கு பாதிப்பின்றி, உரிய காலத்தில், தமிழக பள்ளி கல்வித்துறை நடத்தி முடித்தது.யோசனைஆனால், சி.பி.எஸ்.இ., தரப்பில், கடந்த ஆண்டு தேர்வை தள்ளி வைத்து விட்டு, பின் வேறு வழியின்றி, கொரோனா பரவல் அதிகம் உள்ள காலத்தில், தேர்வை நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதையும் அதிகாரிகள் நினைவு கூர்ந்தனர்.




திட்டமிட்ட தேதியில் தேர்வை முடித்து விட்டால், மாணவர்களும் சுமை குறைந்து, நுழைவு தேர்வுகளுக்கான பயிற்சி மற்றும் உயர்கல்விக்கான ஆயத்த பணிகளுக்கு செல்ல வசதியாக இருக்கும் என, அதிகாரிகள் யோசனை தெரிவித்தனர். மாணவர்களுக்கு, இன்று செய்முறை தேர்வுகள் துவங்குவதையும், அதிகாரிகள் எடுத்து கூறினர். இதையடுத்து, செய்முறை தேர்வுகளை நடத்தி விட்டு, சூழ்நிலைக்கு ஏற்ப ஆலோசித்து கொள்ளலாம் என, முடிவு செய்யப்பட்டதாக, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Source : Dinamalar

வாக்கு எண்ணிக்கை தொடர்பான பயிற்சி கையேடு...

 


>>> CLICK HERE TO DOWNLOAD - EVM - COUNTING - TRAINING - PPT (PDF)- TAMIL...


பாதுகாப்பான முறையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு நடத்தப்படுகிறது - பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன்...

 


+2 பொதுத் தேர்வு - மே - 2021 - விடுபட்ட / பார்கோடு இல்லாத / சேதமடைந்த முகப்புத் தாட்களை (Top Sheets) இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்தல் சார்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்...



>>> அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்...


இனி பள்ளி வேலை நாட்கள் வாரத்திற்கு ஐந்து நாட்கள் மட்டுமே - CEO Proceedings...

 












இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...