கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழக சுகாதார துறையில் 300 வேலைவாய்ப்பு அறிவிப்பு - 13 ம் தேதி நேர்காணல்-14ம் தேதி முதல் பணியில் சேர வேண்டும்...

 


தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேட்டி...

 தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேட்டி...



>>> காணொளியைக் காண இங்கே சொடுக்கவும்...


ரயில் மூலம் 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தமிழகம் வருகிறது...

 


மேற்கு வங்கம் துர்காபூரில் இருந்து ரயில் மூலம் 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தமிழகம் வருகிறது; நேற்றிரவு  புறப்பட்ட ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னையை வந்தடையும் என தகவல்...




ரயில் மூலம் தமிழகத்துக்கு ஆக்சிஜன் கொண்டு வரப்படுவது இதுவே முதல் முறை என தெற்கு ரயில்வே ட்விட்டரில் பதிவு...

இன்றைய (13-05-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

மே 13, 2021



தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான வாய்ப்புகளில் இருந்துவந்த காலதாமதம் அகலும். சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையினால் மகிழ்ச்சி உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



அஸ்வினி : சேமிப்புகள் அதிகரிக்கும்.


பரணி : காலதாமதம் அகலும்.


கிருத்திகை : எண்ணங்கள் ஈடேறும்.

---------------------------------------




ரிஷபம்

மே 13, 2021




மனதில் புதுவிதமான உத்வேகத்துடன் செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் இருக்கும் எண்ணங்களை பொறுமையுடன் வெளிப்படுத்தினால் வெற்றி அடைவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு



கிருத்திகை : வேகம் அதிகரிக்கும்.


ரோகிணி : அனுகூலமான நாள்.


மிருகசீரிஷம் : வெற்றி கிடைக்கும்.

---------------------------------------




மிதுனம்

மே 13, 2021




கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். தொழில் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கனவுகளின் மூலம் மனதில் குழப்பமான சூழ்நிலைகள் ஏற்பட்டு மறையும். மறுமணம் வேண்டி எதிர்பார்ப்பவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். தனவரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



மிருகசீரிஷம் : அனுசரித்து செல்லவும்.


திருவாதிரை : சிந்தனைகள் மேம்படும்.


புனர்பூசம் : ஏற்ற, இறக்கமான நாள்.

---------------------------------------




கடகம்

மே 13, 2021




இணைய வர்த்தகம் சார்ந்த முதலீடுகளில் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும். சேவை தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு நண்பர்கள் மற்றும் புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் முன்னேற்றம் உண்டாகும். மனதில் தோன்றும் பலதரப்பட்ட சிந்தனைகளால் எதிர்காலம் பற்றிய குழப்பமான சூழ்நிலைகள் ஏற்பட்டு மறையும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



புனர்பூசம் : கவனம் வேண்டும்.


பூசம் : முன்னேற்றம் உண்டாகும்.


ஆயில்யம் : குழப்பங்கள் மறையும்.

---------------------------------------




சிம்மம்

மே 13, 2021




உலகியல் நடவடிக்கைகள் பற்றிய புதுவிதமான கண்ணோட்டத்துடன் செயல்படுவீர்கள். வெளியூர் வேலைவாய்ப்புகள் சாதகமாக அமையும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். மனதிற்கு பிடித்த தெய்வங்களை வழிபடுவீர்கள். எதிர்பாராத பயணங்களின் மூலம் அலைச்சல்கள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மகம் : புதுவிதமான நாள்.


பூரம் : ஈடுபாடு உண்டாகும்.


உத்திரம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

---------------------------------------




கன்னி

மே 13, 2021




ஆசைகளை நிறைவேற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மனதில் எதை பற்றியாவது சிந்தித்து கொண்டே இருப்பீர்கள். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் மனமகிழ்ச்சி அடைவீர்கள். நிர்வாகம் தொடர்பான புதிய முடிவுகளை எடுப்பீர்கள். விசேஷ நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்ள நேரிடும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



உத்திரம் : ஆசைகள் நிறைவேறும்.


அஸ்தம் : மனமகிழ்ச்சி அடைவீர்கள்.


சித்திரை : புதிய முடிவுகளை எடுப்பீர்கள்.

---------------------------------------




துலாம்

மே 13, 2021




சிலருக்கு எதிர்பாராத உத்தியோக மாற்றம் உண்டாகும். பொருட்களை கையாளுவதில் எச்சரிக்கையுடன் செயல்படவும். பதற்றமான மனநிலை ஏற்பட்டு மறையும். தூக்கமின்மையால் உடல் சோர்வு ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத செலவுகளும், நெருக்கடியான சூழலும் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்



சித்திரை : உத்தியோக மாற்றம் உண்டாகும்.


சுவாதி : எச்சரிக்கையுடன் செயல்படவும்.


விசாகம் : நெருக்கடியான நாள்.

---------------------------------------




விருச்சகம்

மே 13, 2021




உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். தன்னம்பிக்கையுடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உயர்கல்விக்கான முயற்சிகள் நல்ல பலன்களை தரும். வாதத்திறமையால் பாராட்டப்படுவீர்கள். எதிர்பாலின மக்களால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய நபர்களின் நம்பிக்கையை பெறுவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



விசாகம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.


அனுஷம் : அனுகூலம் உண்டாகும்.


கேட்டை : நம்பிக்கை அதிகரிக்கும்.

---------------------------------------




தனுசு

மே 13, 2021




மற்றவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து மனம் மகிழ்வீர்கள். கடன் பிரச்சனைகள் குறையும். பிள்ளைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். வழக்குகள் தொடர்பான பிரச்சனைகள் குறையும். குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் சாதகமாக அமையும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



மூலம் : பிரச்சனைகள் குறையும்.


பூராடம் : எண்ணங்களை அறிவீர்கள்.


உத்திராடம் : சாதகமான நாள்.

---------------------------------------




மகரம்

மே 13, 2021




வர்த்தகம் தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். கற்ற கலைகளின் மூலம் லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களிடம் மதிப்புகள் அதிகரிக்கும். கல்வி தொடர்பான பணிகளில் மேன்மை அடைவீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் முன்னேற்றம் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



உத்திராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


திருவோணம் : மதிப்புகள் அதிகரிக்கும்.


அவிட்டம் : முன்னேற்றமான நாள்.

---------------------------------------




கும்பம்

மே 13, 2021




தாய்மாமன் வழி உறவினர்களுடன் அனுசரித்து செல்வதன் மூலம் நன்மைகள் உண்டாகும். மனதில் கற்பனைத்திறன் மேம்படும். மனதிற்கு பிடித்த புதிய ஆடைகளை வாங்கி மகிழ்வீர்கள். வாரிசுகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். எதிர்பார்த்த கடன் உதவிகள் சாதகமாக அமையும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



அவிட்டம் : அனுசரித்து செல்லவும்.


சதயம் : கற்பனைத்திறன் மேம்படும்.


பூரட்டாதி : சாதகமான நாள்.

---------------------------------------




மீனம்

மே 13, 2021




முத்திரை தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும். வீர தீரமான செயல்களை செய்து அனைவரிடத்திலும் பாராட்டுகளை பெறுவீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



பூரட்டாதி : வேகம் அதிகரிக்கும்.


உத்திரட்டாதி : பாராட்டுகள் கிடைக்கும்.


ரேவதி : ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------


தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று - இன்று (12-05-2021) ஒரே நாளில் 30,355 பேருக்கு உறுதி - MEDIA BULLETIN...

 



>>> Click here to Download Media Bulletin 12.05.2021, 52 Pages...

18 - 45 வயதுள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி - உலகளாவிய டெண்டர் மூலம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய தமிழக அரசு முடிவு...

 18 - 45 வயதுள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி - உலகளாவிய டெண்டர் மூலம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய தமிழக அரசு முடிவு...


💥18 - 45 வயதுள்ள அனைவருக்கும் கொரோனா வெருவித் தடுப்பூசி வழங்க தமிழக அரசு நடவடிக்கை.  உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் கோரி  தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய தமிழக அரசு முடிவு.


தடுப்பூசி இறக்குமதி செய்ய சர்வதேச டெண்டர் கோர தமிழக அரசு முடிவு:


18 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட அரசு நடவடிக்கை.


கூடுதல் ஆக்சிஜனை பிற மாநிலங்களில் இருந்து ரயில்கள் மூலம் தமிழகம் கொண்டு வர நடவடிக்கை.


ஆக்சிஜனை தேவைப்படும் மருத்துவமனைகளுக்கு சீராக விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவு.


மத்திய அரசு ஒதுக்கியுள்ள தடுப்பூசி போதிய அளவில் இல்லாததால் தடுப்பூசி இறக்குமதிக்கு சர்வதேச டெண்டர் விட அரசு முடிவு.










இன்று (மே 12) உலகம் முழுவதும் சர்வதேச செவிலியர் தினமாக அனுசரிக்கப்படுகிறது...

சர்வதேச செவிலியர் தினம்...





இன்று (மே 12) உலகம் முழுவதும் சர்வதேச செவிலியர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.




நவீன நர்சிங்கின் நிறுவனர் புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த நாளை கொண்டாட ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச செவிலியர் தினம் ஏற்பாடு செய்யப்படுகிறது.




சர்வதேச செவிலியர் தினமான 2021 இன் தீம் "நர்சிங் தி வேர்ல்ட் டு ஹெல்த்".




WHO இன் கூற்றுப்படி, சர்வதேச செவிலியர் தினம் மற்றும் புளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த 200 வது ஆண்டு விழாவையொட்டி, உலக சுகாதார அமைப்பு உலகெங்கிலும் உள்ள நூற்றுக்கணக்கான கூட்டாளர்களுடன் இணைந்து சுகாதாரத் துறையில் செவிலியர்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.




புளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த 200 வது ஆண்டு நிறைவைக் கொண்டுவருவதற்காக WHO 2021 ஐ செவிலியர் மற்றும் மருத்துவச்சி ஆண்டு என நியமித்துள்ளது.




WHO தனது இணையதளத்தில் கொரோனா வைரஸ் COVID-19 தொற்றுநோய் செவிலியர்கள் ஆற்றிய முக்கிய பங்கை எடுத்துக்காட்டுகிறது என்று கூறியுள்ளது. செவிலியர்கள் மற்றும் பிற சுகாதார ஊழியர்கள் இல்லாமல் கொரோனா வெடிப்பிற்கு எதிரான போரில் வெற்றி பெற முடியாது.




குறிப்பிடத்தக்க வகையில், அமெரிக்க சுகாதாரம், கல்வி மற்றும் நலத்துறையின் அதிகாரியான டோரதி சதர்லேண்ட் 1953 ஆம் ஆண்டில் ஜனாதிபதி டுவைட் டி ஐசனோவருக்கு "செவிலியர் தினத்தை" அறிவிக்க முன்மொழிந்தார்; ஆனால் ஜனாதிபதி ஐசனோவர் அவரது கோரிக்கையை நிராகரித்தார். ஆனால் சர்வதேச செவிலியர் கவுன்சில் (ஐ.சி.என்) 1965 முதல் இந்த நாளைக் கொண்டாடுகிறது.




ஜனவரி 1974 இல், புளோரன்ஸ் நைட்டிங்கேலின் நினைவாக சர்வதேச செவிலியர் தினமாக கொண்டாட மே 12 தேர்வு செய்யப்பட்டது.




செவிலியர்கள் - அன்பின் இருப்பிடம், தியாகச் சுடர், பொறுமையின் சிகரம், சேவையின்மறு உருவம் என்று சொல்லிக் கொண்டே போகலாம். இவை அனைத்தும் ஒரு தாய்க்கு இருக்கும் குணங்கள். செவிலியர்களை மறுபிறவி எடுத்த அன்னையராகக் கருதலாம். உறவாகவோ, நட்பாகவோ இல்லாத ஓர் மூன்றாம் நபர், நம் மீது பரிவு காட்டுவது பலருக்கு சாத்தியமில்லை. ஆனால், செவிலியர்கள் பரிவுடன் சேவை புரிகிறார்கள்.




செவிலியரின் பணி என்பது மனித வாழ்க்கையின் தொடக்க காலத்தில் இருந்தே உள்ளது. தாய் என்பவள், குழந்தைப் பராமரிப்பில் ஆரம்பித்து, அவர்களைக் காப்பாற்றி, நோய்களிலிருந்து குடும்பத்தினரைப் பாதுகாத்து, வீட்டில் உள்ள முதியோரைக் கவனிப்பது வரை தொடர்கிறது. எங்கெல்லாம் அன்பு நிறைந்த சேவை தேவையோ,அங்கெல்லாம் பெண்களே முதலிடம் பெறுகின்றனர். அதனால்தான் செவிலியர் பணியில் பெண்களே அதிகம் இருக்கிறார்கள்.




நோயின் வலியிலும், வேதனையிலும் நாம் துடித்த காலத்தில், மருத்துவமனைகளில் நம்மை அன்புடனும், பரிவுடனும் கவனித்துச் சேவை செய்யும் செவிலியர்களுக்கு மானசீகமாக நன்றி சொல்லும் நாளாக ‘உலக செவிலியர்’ தினம் கொண்டாடப்படுகிறது.




‘விளக்கேந்திய மங்கை’ என்று உலகம் முழுவதும் போற்றப்படும் ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரே, செவிலியர் சேவையின் முன்னோடி. இவர் இத்தாலி நாட்டின் ஃபிளாரன்ஸ் நகரில் செல்வச் செழிப்புமிக்க உயர்குடும்பத்தில் பிறந்தவர். ‘இறைவனால் தனக்கு விதிக்கப்பட்ட பணியாகவே’ எண்ணி செவிலியர் பணியை சேவைமனப்பான்மையுடன் செய்தார்.




ஐரோப்பாவில் நடைபெற்ற க்ரீமியன் போரில் இரவு வேளைகளிலும் கையில் விளக்கை ஏந்திதேடிச் சென்று சேவை புரிந்தார். அவரின் நினைவாக, அவர் பிறந்தநாளான மே 12-ம் நாள் ‘சர்வதேசசெவிலியர் தினமாக’ கொண்டாடப்படுகிறது. இது அவருடைய பணிக்குக் கிடைத்த சிறப்பாகும். இன்றும்நர்ஸிங் பட்டம் பெறும் செவிலியர்கள், கைவிளக்கில் ஒளியேற்றி, மனிதகுலத்துக்கு தன்னலமற்ற சேவை செய்ய உறுதி எடுக்கிறார்கள்.




மோசமான நோய்களுடன் உள்ள நோயாளிகளுக்கு நெருங்கிச் சேவை செய்யும் செவிலியர்கள், பல்வேறு வகையான நோய்த் தொற்றுகளுக்கு ஆளாகும் அபாயமும் உள்ளது. இரவு பகல் பாராதுகடுமையாக உழைக்கும் அவர்கள்,மன அழுத்தம் மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாகவும் நேரிடுகிறது. இதையெல்லாம் தாண்டி, பலரையும் நோயிலிருந்து மீட்கவும், தேவையில்லாமல் நிகழும் மரணங்களைத் தடுக்கவும், மருத்துவர்களுடன் இணைந்து மகத்தான சேவையில் செவிலியர்கள் ஈடுபடுகின்றனர்.




தற்போது உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டு இருக்கிறது கரோனா என்னும் வைரஸ் நோய். உலக மக்களின் நன்மைக்காக செவிலியர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து சிறப்பாக பணிசெய்து வருகிறார்கள். ஊண் உறக்கமின்றி இரவு பகல் பாராது பணியாற்றுகின்றனர். பாதுகாப்புக்கான கவச உடைகளை அணிந்தால், பலமணி நேரம் இயற்கை உபாதைக்காகக் கூட செல்ல முடியாது. தங்கள்குடும்பத்தினர், குழந்தைகளைப் பிரிந்து, ‘எந்த நேரத்திலும் கரோனா நோய் தங்களைத் தாக்கக் கூடும்’ என்ற ஒருவித பயத்திலேயே பணியைக் குறைவின்றி செய்து வருகிறார்கள்.




உலக மக்களின் நன்மைக்காக உழைக்கும் செவிலியர்களின் பணிக்கு நாம் ‘நன்றி’ என்று ஒற்றைவார்த்தையில் கூறி அவர்களின் பணியை குறைத்து எடைபோட்டு விடக்கூடாது. அவர்களும், அவர்களின் குடும்பத்தாரும் என்றும் நலமுடன் வாழ நாம் அனைவரும் ஒன்றுபட்டு மனதார வாழ்த்துவோம். சிரித்த முகத்துடனும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் சேவை செய்யும் செவிலியர்களைப் போற்றுவோம்!

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...