List of Private Hospitals registered as Covid Vaccination Centers
>>> கோவிட் தடுப்பூசி மையங்களாக பதிவு செய்துள்ள தனியார் மருத்துவமனைகள் பட்டியல் (மாவட்டம் வாரியாக)...
List of Private Hospitals registered as Covid Vaccination Centers
>>> கோவிட் தடுப்பூசி மையங்களாக பதிவு செய்துள்ள தனியார் மருத்துவமனைகள் பட்டியல் (மாவட்டம் வாரியாக)...
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 12ம் வகுப்பை பொறுத்தவரை நடப்பு கல்வி ஆண்டை பூஜ்யம் ஆண்டாக அறிவிக்க வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார். தனியார் பள்ளிகளில் ஓடாத பேருந்து, போடாத சீருடைக்கு கட்டணம் வசூலிப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
🌹வாழ்க்கையில் பிடித்தது எல்லாமே கிடைப்பதும் இல்லை.
கிடைத்த எல்லாவற்றையும் பிடித்தது போல் மாற்றவும் முடிவதில்லை.
ஆனாலும் வாழ்கிறோம் ஆயுள் முடியும் வரை வாழவேண்டும் என்பதற்காக.!
🌹🌹எப்போதும் உண்மையை பேசுபவர்களை விட.
அடுத்தவர்கள் நம்பும்படி
பொய் பேசுபவர்களே இந்த உலகத்தில் வாழத்
தகுதியானவர்கள்.!!
🌹🌹🌹திடீரெனக் கிடைக்கும் அன்பை நம்பி வாழ்க்கையில் வெகுதூரம் பயணம் செய்யக்கூடாது.
ஏனெனில் பொய்யான அன்பு காரியம் முடிந்த பின் உங்களை விட்டு விலகிவிடும்.!!!
அனைவருக்கும் இனிய ரம்ஜான் நல் வாழ்த்துக்கள்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🌄🌄ஆசிரியர் இனக்காவலர், பாவலர், கவிமாமணி, க.மீனாட்சி சுந்தரம், முன்னாள் சட்ட மேலவை உறுப்பினர் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று.
🌄🌄ஜூன் 27-ம் தேதி நடைபெற இருந்த சிவில் சர்வீசஸ் தேர்வுகள் ஒத்திவைப்பு.: யுபிஎஸ்சி அறிவிப்பு.
🌄🌄கூட்டுறவு பணியாளர்களது ஒய்வு வயதை 59-லிருந்து 60-ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு.
🌄🌄புதிய கல்விக்கொள்கை தமிழ்நாட்டில் நுழையவே முடியாது: அமைச்சர் பொன்முடி உறுதி.
🌄🌄அரசாணை எண் 2014 - உங்கள் துறையில் முதலமைச்சர் துறை - -துறை கட்டமைப்பு மற்றும் பணியாளர்கள் தொடர்பான நிர்வாக ஒப்புதல் வழங்குதல் ஆணை வெளியிடப்படுகிறது.
🌄🌄2021-22-ம் கல்வியாண்டுக்கான. இளங்கலை, டிப்ளமோ படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு
🌄🌄+2 பொதுத்தேர்வு நடத்துவது குறித்து நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடத்திய ஆலோசனையில் PTA நிர்வாகிகள், அரசு பள்ளி மாணவி, அரசு பள்ளி தலைமையாசிரியர் மற்றும் கல்வியாளர் கஜேந்திர பிரபு , பேராசிரியர்கள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் , தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணியும் பங்கேற்றனர். இவர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார்.
🌄🌄தமிழக சட்ட பல்கலையில் பி.எச்.டி., மாணவர் சேர்க்கைக்கு, நுழைவு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
🌄🌄10ம் வகுப்பை பள்ளிகளில் படிக்காத தனி தேர்வர்கள் மற்றும் பிளஸ் 1 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனி தேர்வர்கள், தங்களுக்கு, ஆல் பாஸ் உண்டா என்ற, குழப்பத்தில் உள்ளனர்.இதுகுறித்து, பள்ளி கல்வி அதிகாரிகள் கூறுகையில், 'தனி தேர்வர்களுக்கு ஆல் பாஸ் வழங்க அரசு உத்தரவு பிறப்பிக்கவில்லை. எனவே, அவர்களுக்கு கட்டாயம் தேர்வு நடத்தப்படும்' என்றனர்.
🌄🌄பொன்னேரியில் புதிய பள்ளிக் கட்டிடம் அமைக்கக் கோரி முதல்வருக்கு 7 வயது மாணவி கடிதம் எழுதியதன் விளைவாக, சம்பந்தப்பட்ட பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார்
🌄🌄2020 டிசம்பரில் நடைபெற்ற 14 தேர்வுகளின் முடிவுகள் வரும் ஜூன் மாதம் 8 ஆம் தேதி வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தரப்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
🌄🌄கொரோனா தடுப்பு பணி மேற்கொள்ள ஒப்பந்த அடிப்படையில் பயிற்சி டாக்டர்களுக்கு அழைப்பு - மாநகராட்சி அறிவிப்பு.
🌄🌄இன்று முதல் ஊரடங்கு விதிகளை மீறி வெளியே வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை.
தமிழக காவல்துறை எச்சரிக்கை.
அரசின் வழிமுறைகளை முறையாக பின்பற்ற காவல்துறை வேண்டுகோள்.
🌄🌄ஆசிரியராக இருந்து சபாநாயகராக உயர்ந்தவர்: திரு அப்பாவு அவர்களுக்கு அனைத்து கட்சி உறுப்பினர்கள் பாராட்டு
🌄🌄108 ஆம்புலன்சிற்காக நோயாளிகள் காத்திருக்க வேண்டியதில்லை. காரிலேயே கொரோனா சிகிச்சை அளிக்க ஏற்பாடு: இந்தியாவிலேயே சென்னையில் புதிய நடைமுறை
🌄🌄எந்தவிதமான அறிகுறியும் இல்லாத லேசான தொற்றை குணப்படுத்தும் 'கபசுரக் குடிநீர்' - ஆராய்ச்சியில் உறுதியானதால் ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரை
🌄🌄அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு போக்குவரத்து தொழிலாளர்கள் ஒருநாள் ஊதியம் வழங்க முடிவு.
🌄🌄விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொருளாளரும் திருமாவளவன் அவர்களின் நம்பிக்கைக்கு உரியவருமான முகமது யூசுப் கொரோனா பாதிப்பால் நேற்று மாலை காலமானார்.
🌄🌄இன்று முதல் சென்னையில் அரசின் ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்
லாக்டவுன் விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை.
லாக்டவுன் விதிகளை மீறுவோரை கண்காணிக்க 30 குழுக்கள் சென்னையில் அமைப்பு
சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி
🌄🌄இந்தியாவில் கேரளாவுக்கு அடுத்ததாக தமிழகத்தில் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது
நடுவண் சுகாதாரத்துறை
🌄🌄குடிசைப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் இன்று முதல் துவங்கும்
ஊரகத் தொழில் துறை மற்றும் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்.
🌄🌄தடுப்பூசி கொள்முதல் செய்ய உலகளாவிய டெண்டர் கோரப்பட்டுள்ளது:
குறுகிய காலத்தில் 18 முதல் 45 வயது வரை உள்ள அனைவருக்கும் தடுப்பூசி
முதலமைச்சர் ஸ்டாலின்
🌄🌄ஸ்டெர்லைட்டில் தயாரிக்கப்படும் ஆக்சிஜனை தமிழகத்திற்கு முதலில் வழங்க வேண்டும்
தமிழகத்தின் தேவைக்கு போக மீதி உள்ள ஆக்சிஜனை எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லட்டும்
கனிமொழி எம்பி
🌄🌄கொரோனா தடுப்பு பணிகளுக்காக தமிழ்நாடு முட்டை கோழிப்பண்ணை விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ₹1 கோடி நிதி மற்றும் 10 லட்சம் முட்டைகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
🌄🌄உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற புதிய துறை முதலமைச்சர் தனிப்பிரிவில் இயங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தனிப்பிரிவில் ஒரு பிரிவு உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற துறையில் இணைந்து பணியாற்றும் என கூறப்பட்டுள்ளது.
🌄🌄அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்படும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்துள்ளார்.
குடிசை மாற்று வாரியம் மூலம் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வீடுகள் சேதமடைந்திருந்தால் புனரமைக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்
🌄🌄ரெம்டெசிவிர் மருந்தின் தேவை கருதி சென்னை மட்டுமின்றி மற்ற நகரங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இரவு பகல் பாராமல் கொரோனா தடுப்புப் பணிகளுக்கென கட்டளை மையம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் ஒடிஷா, மே.வங்கத்தில் இருந்து ஆக்சிஜன் கொண்டுவர மத்திய அரசுக்கு அழுத்தம் தரப்பட்டு பலன் கிடைத்துள்ளது என் அவர் தெரிவித்துள்ளார்.
🌄🌄ரம்ஜான் திருநாளை ஒட்டி இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி வீட்டிலேயே பாதுகாப்பாக ரம்ஜான் கொண்டாட ஆளுநர் அறிவுறுத்தி உள்ளார்.
🌄🌄நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சீமான் அவர்களின் தந்தையார் செந்தமிழன் அவர்களின் மறைவுச் செய்தி வேதனை தருகிறது. அவரை இழந்து துயரத்தில் இருக்கும் சீமானுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
🌄🌄“சிறுபான்மை சமுதாய மக்களுக்கும், தி.மு.க.விற்கும் என்றும் தொப்புள் கொடி உறவு உள்ளது. தி.மு.க அரசு இஸ்லாமியர்களுக்கு எந்நாளும் பாதுகாப்பு அரணாக விளங்கும்” :
முதல்வர் மு.க.ஸ்டாலின் ரமலான் வாழ்த்து.
🌄🌄ரெம்டெசிவர் மருந்து விற்பனை நேரு ஸ்டேடியத்திற்கு மாற்றம்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தகவல்
கீழ்பாக்கம் அரசு மருத்துவனையில் கூட்டம் அதிகரிப்பதால் ரெம்டெசிவர் விற்பனை செய்யும் இடம் மாற்றம்.
🌄🌄கோவிஷீல்ட் தடுப்பூசி போடுவதற்கான இடைவெளி அதிகரிப்பு
6 முதல் 8 வாரங்களாக இருந்த இடைவெளி 12 முதல் 16 வாரங்களாக அதிகரிப்பு
வல்லுநர் குழுவின் பரிந்துரைக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல்.
🌄🌄கொரோனா நோயாளிகளை ஆம்புலன்சிலேயே காத்திருக்க வைக்க கூடாது.
நோயாளிகளை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும்
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தல்
இக்கட்டான சூழ்நிலையில் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் திருப்தி.
🌄🌄நிர்பயா திட்டத்தின் கீழ் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பேருந்துகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த உத்தரவு -
போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி
🌄🌄படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் ஆக்சிஜன் வசதியுடன் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். - போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்.
🌄🌄தினந்தோறும் 2000 ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு தலா 50 லிட்டர் வீதம் எரிபொருள் வழங்க ரிலையன்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளது -
அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
🌄🌄கொரோனா தடுப்பு பணிகளுக்கு நிதி வழங்குங்கள் - வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்.
🌄🌄கொரோனா நிவாரண பொருட்களாக 13 மளிகை பொருட்களை வழங்கவுள்ளது தமிழ்நாடு அரசு
2,11,12,798 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் மளிகை பொருட்கள் தர முடிவு.
வரும் ஜூன் மாதம் 3 ஆம் தேதி கருணாநிதி பிறந்த நாளன்று வழங்க திட்டம்
(கோதுமை, ரவை, பருப்பு, புளி அடங்கிய தொகுப்பினை வழங்குகிறது
தமிழக அரசு)
🌄🌄பெருநகர சென்னை மாநகராட்சியில் கொரோனா நோய் தடுப்பு பணியில் பயிற்சி மருத்துவர்களாக 3 மாத காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய வேலைவாய்ப்பு.
🌄🌄இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த 2 மாதங்களுக்கு முழு ஊரடங்கு அவசியம்
- மத்திய அரசுக்கு ஐசிஎம்ஆர் பரிந்துரை
🌄🌄முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை கொடுத்தவர்கள் பட்டியல் அரசின் இணையதளத்தில் பார்த்துக்கொள்ளலாம்.
🌄🌄ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் விநியோகம் தொடக்கம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியான 5 டன் ஆக்சிஜன் திருநெல்வேலி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
புதன்கிழமை இரவில் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கிய நிலையில் உற்பத்தியான ஆக்சிஜனை விநியோகிக்கும் பணி நேற்று காலை தொடங்கியது.
ஸ்டெர்லைட் ஆலையில் நாள் ஒன்றுக்கு 35 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
முதல் மூன்று நாட்கள் 10 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும் என்றும், அதன்பின்னர் தினசரி 35 டன் ஆக்சிஜன் முடிவு என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
🌄🌄புதிய சாலைகள் அமைக்கும் போது கவனிக்க வேண்டியவை குறித்து தலைமைச்செயலாளர் நெடுஞ்சாலை துறைக்கு கடிதம்.
🌄🌄யார் வெளிநாடு சென்றாலும் தமிழகம் சார்பாக பதிவேடு இருக்க வேண்டியது அவசியம் என விரும்புகிறோம்
அப்போதுதான் அவர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பது தெரியும்
- வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மஸ்தான்
🌄🌄பொதுமக்களுக்கு 3 வேளையும் இலவசமாக உணவு அளிக்கும் 'தளபதி கிச்சன்' எனும் திட்டத்தை கரூர் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நேற்று துவக்கி வைத்தார் மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி.
🌄🌄2 முதல் 18 வயதுடையவர்களிடம் கோவேக்சின் தடுப்பு மருந்தின் 2, 3ஆம் கட்ட பரிசோதனையை மேற்கொள்ள இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல்.
🌄🌄திமுக அறக்கட்டளை சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி நிதி உதவி
🌄🌄கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக அமைச்சர்கள் ராமச்சந்திரன், சக்கரபாணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட கோவை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
🌄🌄பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தனது ஒரு மாத ஊதியத்தினை கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரணநிதிக்கு வழங்குவார்கள்
-பாமக நிறுவனர் ராமதாஸ்
🌄🌄கோவையில் கொரோனா நோய்த்தொற்றில் இருந்து மக்களை காப்பாற்ற தமிழக அரசு எடுக்கும் அனைத்து விதமான நடவடிக்கைக்கும் முழு ஒத்துழைப்பு வழங்குவோம் என தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வேலுமணி வாக்குறுதி.
கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்களிடம் மனு அளிப்பு.
🌄🌄ரமலான் பண்டிகையை இல்லங்களிலேயே கொண்டாடுங்கள்
-இஸ்லாமியர்களுக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் வேண்டுகோள்.
🌄🌄சுகாதார துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் - சித்த மருத்துவர் வீரபாபு ஆலோசனையில் 300 படுக்கைகளை சித்த மருத்துவத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை வர்த்தக மையத்தில் 100 ஆக்சிஜன் படுக்கைகளும், 200 சாதாரண படுக்கைகளும் சித்த மருத்துவம் மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது.
🌄🌄கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதை 59ல் இருந்து 60 ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு.
🌄🌄கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் நடிகர் ரஜினிகாந்த்.
🌄🌄முதல்வர் நிவாரண நிதிக்கு 25 லட்சம் வழங்கினார் உதயநிதி ஸ்டாலின்.
🌄🌄முதல்வரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு விடுதலை சிறுத்தைகள் ரூ.10 லட்சம் அளிப்பு
🌄🌄கொரோனா தடுப்பூசி மற்றும் மருந்துகள் மீதான ஜிஎஸ்டி வரியை பூஜ்ஜிய சதவீதமாக நிர்ணயிக்க வேண்டும்
பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி தொகை மற்றும் அரிசி மானியத்தொகைகளையும் விடுவிக்க வேண்டும்.
மாநில அரசின் கடன் வாங்கும் அளவை உற்பத்தி மதிப்பில் இருந்து மேலும் ஒரு சதவீதம் உயர்த்த வேண்டும் - முதலமைச்சர்.
🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄
🌹🌹கொரோனா தடுப்புப் பணிகள் தொடர்பாக அனைத்து சட்டமன்றக் கட்சி தலைவர்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது.
திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, விசிக, மதிமுக, பாஜக, சிபிஎம், சிபிஐ, மமக,
கொமதேக, தவாக, புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றனர்.
🌹👉முழு ஊரடங்கின் தளர்வுகளை பயன்படுத்திக்கொண்டு சிலர் ஊரடங்கு விதிகளை மீறுகின்றனர்
எனவே இந்த தளர்வுகள் நீட்டிக்கப்படலாமா அல்லது மாறுதல் செய்யலாமா ?
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து கட்சி தலைவர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் கேள்வி
🌹👉முழு ஊரடங்கை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் தற்போது உள்ள முழு ஊரடங்கில் பெரிதாக பலன் இல்லை.
ரயில் போக்குவரத்து மற்றும் அத்தியாவசிய தேவையின்றி மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் மக்களை தடுக்க வேண்டும்
அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு
🌹👉கொரோனாவை தடுக்க அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அனைத்து கட்சிகளும் ஆதரவு
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்
அனைத்து கட்சி கூட்ட தீர்மானங்கள்
1.கொரோனா தடுப்பு பணியில் முழு ஒத்துழைப்பு!
2.அரசியல் சார்ந்த நிகழ்வுகள் ரத்து!
3.மக்களுக்கான நிவாரண பணிகளில் முழு மனதோடு ஈடுபடவோம்!
4.ஆலோசனை குழு!
5.ஊரடங்கு நடைமுறையை மேலும் தீவிரப்படுத்துதல்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என்றும் அன்புடன்
சு.வேலுமணி M.A.,B.Ed.,
தலைமையாசிரியர் & மாவட்டச் செயலாளர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
கரூர் மாவட்டம்.
அலைபேசி:9003599926
மேஷம்
மே 14, 2021
கூட்டுத்தொழிலில் முயற்சிக்கேற்ப முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகளும், முக்கியத்துவமும் அதிகரிக்கும். உங்களின் மீதான நம்பிக்கை மேலோங்கும். பலவிதமான எண்ணங்களினால் மனதில் குழப்பமான சிந்தனைகள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அஸ்வினி : முன்னேற்றம் உண்டாகும்.
பரணி : நம்பிக்கை மேலோங்கும்.
கிருத்திகை : அனுகூலமான நாள்.
---------------------------------------
ரிஷபம்
மே 14, 2021
கணவன், மனைவிக்கிடையே நெருக்கமும், அன்பும் அதிகரிக்கும். விளையாட்டாக பேசும் சில வார்த்தைகள் கூட விபரீதத்தை ஏற்படுத்தும். சுயதொழில் தொடர்பான முதலீடுகள் அதிகரிக்கும். வெளியூர் பயணங்கள் மற்றும் வர்த்தகம் தொடர்பான முயற்சிகள் ஈடேறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
கிருத்திகை : அன்பு அதிகரிக்கும்.
ரோகிணி : பேச்சுக்களில் கவனம் வேண்டும்.
மிருகசீரிஷம் : வாய்ப்புகள் உண்டாகும்.
---------------------------------------
மிதுனம்
மே 14, 2021
மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பயணங்களின்போது உடைமைகளில் சற்று கவனம் வேண்டும். பொருள் வரவுகளை மேம்படுத்துவதற்கான செயல்பாடுகள் அதிகரிக்கும். பொழுதுபோக்கு தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். தற்பெருமை சார்ந்த சிந்தனைகளை குறைத்து கொள்வது நன்மையளிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மிருகசீரிஷம் : விருப்பங்கள் நிறைவேறும்.
திருவாதிரை : பொருள் வரவுகள் மேம்படும்.
புனர்பூசம் : எண்ணங்கள் அதிகரிக்கும்.
---------------------------------------
கடகம்
மே 14, 2021
கலை நுணுக்கமான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். சொகுசு வாகனங்கள் வாங்குவது பற்றிய சிந்தனைகள் மேம்படும். பணிபுரியும் இடங்களில் எதிர்பாராத இடமாற்றங்கள் நேரிடும். மருமகனிடம் சில வாக்குவாதங்கள் ஏற்பட்டு மறையும். புத்திரர்களின் வாயிலாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : ஆர்வம் அதிகரிக்கும்.
பூசம் : இடமாற்றங்கள் நேரிடும்.
ஆயில்யம் : மகிழ்ச்சியான நாள்.
---------------------------------------
சிம்மம்
மே 14, 2021
தந்தைவழி உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் எண்ணிய விதத்தில் நடைபெறும். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். புதுவிதமான ஆடைகள் மற்றும் விஷயங்களில் ஈடுபாடு ஏற்படும். கால்நடைகளின் மூலம் ஆதாயம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மகம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.
பூரம் : மேன்மையான நாள்.
உத்திரம் : ஆதாயம் உண்டாகும்.
---------------------------------------
கன்னி
மே 14, 2021
அரசு தொடர்பான செயல்பாடுகளில் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். சாமர்த்தியமும், திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகளும் உண்டாகும். சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும். மனதில் ரகசியமான செயல்பாடுகள் அதிகரிக்கும். மனை தொடர்பான செயல்பாடுகளில் சற்று நிதானம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திரம் : எண்ணங்கள் நிறைவேறும்.
அஸ்தம் : மாற்றங்கள் உண்டாகும்.
சித்திரை : நிதானம் வேண்டும்.
---------------------------------------
துலாம்
மே 14, 2021
புதிய தொழில் தொடர்பான எண்ணங்களும், ஆலோசனைகளும் கிடைக்கும். மனதிற்கு பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். எதிர்பாராத சில சந்திப்புகளின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு அடைவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
சித்திரை : ஆலோசனைகள் கிடைக்கும்.
சுவாதி : அனுபவம் உண்டாகும்.
விசாகம் : தெளிவு கிடைக்கும்.
---------------------------------------
விருச்சகம்
மே 14, 2021
உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் காலதாமதமாக கிடைக்கும். வாழ்க்கையை பற்றி பகிர்வதை தவிர்த்து கொள்ள வேண்டும். கடன் தொடர்பான செயல்பாடுகளால் சில மனக்கசப்புகள் நேரிடும். வாழ்க்கைத்துணைவரின் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
விசாகம் : காலதாமதம் ஏற்படும்.
அனுஷம் : மனக்கசப்புகள் நேரிடும்.
கேட்டை : விழிப்புணர்வு வேண்டும்.
---------------------------------------
தனுசு
மே 14, 2021
உடனிருப்பவர்களின் தன்மைகளை உணர்ந்து கொள்வீர்கள். பொழுதுபோக்கு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அவ்வப்போது சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டு மறையும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
மூலம் : ஆர்வம் அதிகரிக்கும்.
பூராடம் : முன்னேற்றம் உண்டாகும்.
உத்திராடம் : வாக்குவாதங்கள் மறையும்.
---------------------------------------
மகரம்
மே 14, 2021
சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் பெரியோர்களின் ஆலோசனைகளும், வழிகாட்டுதல்களும் மனத்தெளிவை ஏற்படுத்தும். உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் விவேகத்துடன் செயல்படுவது நன்மையளிக்கும். நினைவாற்றலில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். இளைய சகோதரர்கள் ஆதரவாக செயல்படுபவார்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திராடம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
திருவோணம் : விவேகம் வேண்டும்.
அவிட்டம் : பிரச்சனைகள் குறையும்.
---------------------------------------
கும்பம்
மே 14, 2021
வித்தியாசமான சிந்தனைகளின் மூலம் வேறுபட்டு காணப்படுவீர்கள். தொலைபேசி வாயிலாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தந்திரமாக செயல்பட்டு சில காரியங்களை செய்து முடிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சொத்துப்பிரிவினைகள் தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
அவிட்டம் : சிந்தனைகள் மேம்படும்.
சதயம் : வாய்ப்புகள் உண்டாகும்.
பூரட்டாதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
---------------------------------------
மீனம்
மே 14, 2021
மனம்விட்டு பேசுவதால் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் தெளிவு கிடைக்கும். நண்பர்களின் ஆதரவால் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். ஆராய்ச்சி தொடர்பான பணிகளில் இருக்கும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உறவினர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
பூரட்டாதி : தெளிவு கிடைக்கும்.
உத்திரட்டாதி : மேன்மையான நாள்.
ரேவதி : ஆதரவு கிடைக்கும்.
---------------------------------------
இன்று (13-05-2021) நடைபெற்ற சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 5 தீர்மானங்கள்...
ஜூன் 27ம் தேதி நடைபெற இருந்த சிவில் சர்வீசஸ் தேர்வுகள் ஒத்திவைப்பு; கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வு அக்.10ம் தேதி நடைபெறும் என்று யு.பி.எஸ்.சி அறிவிப்பு...
"Due to the prevailing conditions caused by the Novel Corona Virus (COVID-19), the Union Public Service Commission has deferred the Civil Services (Preliminary) Examination, 2021, which was scheduled to be held on 27th June, 2021. Now, this Examination will be held on 10th October, 2021," the UPSC has notified.
அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...