கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
இன்றைய (19-05-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...
மேஷம்
மே 19, 2021
தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். கற்ற கலைகளின் மூலம் லாபம் மேம்படும். இழுபறியாக இருந்துவந்த செயல்களை செய்து முடிப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். உடனிருப்பவர்களிடம் மரியாதைகள் மேம்படும். சுபகாரியங்களை முன்னின்று செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். கல்வி தொடர்பான பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அஸ்வினி : சேமிப்புகள் அதிகரிக்கும்.
பரணி : இழுபறிகள் அகலும்.
கிருத்திகை : மேன்மையான நாள்.
---------------------------------------
ரிஷபம்
மே 19, 2021
சங்கீதம் தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மற்றவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யும்போது கவனத்துடன் இருக்க வேண்டும். பத்திரிக்கை தொடர்பான பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் முயற்சிக்கேற்ப முன்னேற்றம் ஏற்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும்.
ரோகிணி : முன்னேற்றமான நாள்.
மிருகசீரிஷம் : சிந்தனைகள் மேம்படும்.
---------------------------------------
மிதுனம்
மே 19, 2021
மனை தொடர்பான செயல்பாடுகளின் மூலம் லாபம் மேம்படும். கிடைக்கும் தனவரவுகளை பாதுகாப்பான முறையில் முதலீடுகளை செய்வதன் மூலம் ஆதாயம் உண்டாகும். கூட்டு வியாபாரத்தில் லாபம் மேம்படும். குடும்பத்தாரின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். கலை சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு கற்பனைத்திறன் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மிருகசீரிஷம் : லாபம் மேம்படும்.
திருவாதிரை : ஆதாயம் உண்டாகும்.
புனர்பூசம் : கற்பனைத்திறன் மேம்படும்.
---------------------------------------
கடகம்
மே 19, 2021
மனதில் இருந்துவந்த கவலைகள் படிப்படியாக குறையும். உடல் தோற்றப்பொலிவில் மாற்றங்கள் உண்டாகும். உடனிருப்பவர்களிடம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் உண்டாகும். கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும். மற்றவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். கோபம் கொள்ளாமல் விவேகத்துடன் செயல்படுவது உங்களின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
புனர்பூசம் : கவலைகள் குறையும்.
பூசம் : வாய்ப்புகள் உண்டாகும்.
ஆயில்யம் : நம்பிக்கை மேம்படும்.
---------------------------------------
சிம்மம்
மே 19, 2021
நெருக்கடியான சூழ்நிலைகள் மறையும். வாழ்க்கைத்துணைவரின் ஆரோக்கியத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். வித்தியாசமான இடத்திற்கு சென்று வருவது தொடர்பான சிந்தனைகள் மனதில் ஏற்பட்டு மறையும். ரகசிய செயல்பாடுகள் அதிகரிக்கும். சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். பொதுக்காரியங்கள் தொடர்பான பணிகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
மகம் : இன்னல்கள் குறையும்.
பூரம் : செயல்பாடுகள் அதிகரிக்கும்.
உத்திரம் : எண்ணங்கள் ஈடேறும்.
---------------------------------------
கன்னி
மே 19, 2021
நுணுக்கமான செயல்பாடுகளின் மீது ஆர்வம் அதிகரிக்கும். மனதில் இருக்கும் கவலைகள் படிப்படியாக குறையும். சபை தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். நண்பர்களின் வருகையின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். மின்சாரம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். வாகன வசதிகள் சிலருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திரம் : ஆர்வம் அதிகரிக்கும்.
அஸ்தம் : மேன்மையான நாள்.
சித்திரை : மகிழ்ச்சி உண்டாகும்.
---------------------------------------
துலாம்
மே 19, 2021
பணிபுரியும் இடத்தில் செயல்பாடுகளுக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். உலக நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றங்கள் ஏற்படும். வாகனம் தொடர்பான விஷயங்களில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் சற்று காலதாமதமாக கிடைக்கும். உடற்பயிற்சி மற்றும் தந்தையின் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
சித்திரை : அங்கீகாரம் கிடைக்கும்.
சுவாதி : மாற்றங்கள் ஏற்படும்.
விசாகம் : கவனம் வேண்டும்.
---------------------------------------
விருச்சகம்
மே 19, 2021
மருத்துவம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகள் ஏற்படும். நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொண்டு அதனால் ஆதாயம் அடைவீர்கள். உணவுப் பொருட்கள் தொடர்பான விஷயங்களில் லாபம் மேம்படும். வாழ்க்கைத்துணைவருடன் சிறு தூரப் பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். மற்றவர்களிடம் எதிர்பார்த்த பொருளாதாரம் தொடர்பான உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
விசாகம் : மேன்மையான நாள்.
அனுஷம் : லாபம் மேம்படும்.
கேட்டை : உதவிகள் கிடைக்கும்.
---------------------------------------
தனுசு
மே 19, 2021
மனதில் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகளின் மூலம் குழப்பங்கள் ஏற்படும். வியாபாரம் தொடர்பான கடன் உதவிகளில் சிந்தித்து செயல்படுவது அவசியமாகும். வாழ்க்கைத்துணைவருடன் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்லவும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களிடம் ஏற்படும் கருத்து வேறுபாடுகளின் மூலம் வருத்தங்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மூலம் : குழப்பமான நாள்.
பூராடம் : சிந்தித்து செயல்படவும்.
உத்திராடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
---------------------------------------
மகரம்
மே 19, 2021
குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். பொது அறிவு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். தவறிப்போன சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை பெறுவீர்கள். வாக்குவாதங்களின் மூலம் மனதில் இருக்கும் விருப்பங்களை நிறைவேற்றி கொள்வதற்கான தருணங்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
உத்திராடம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
திருவோணம் : பரிசுகளை பெறுவீர்கள்.
அவிட்டம் : விருப்பங்கள் நிறைவேறும்.
---------------------------------------
கும்பம்
மே 19, 2021
மாணவர்களுக்கு மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும். மூத்த சகோதரர்களிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்ல வேண்டும். எதிர்பாராத பயணங்கள் மற்றும் புதுவிதமான அனுபவம் உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதில் இருந்துவந்த குழப்பங்களை குறைக்கும். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். பங்காளி வகையில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு
அவிட்டம் : அனுசரித்து செல்லவும்.
சதயம் : அனுபவம் உண்டாகும்.
பூரட்டாதி : கருத்து வேறுபாடுகள் குறையும்.
---------------------------------------
மீனம்
மே 19, 2021
சாதுர்யமான செயல்பாடுகளின் மூலம் அனைவரிடத்திலும் பாராட்டுகளை பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். பயணங்களில் இருந்துவந்த காலதாமதங்கள் குறையும். வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் மற்றும் முயற்சிகள் மேம்படும். இஷ்ட தெய்வ வழிபாடுகளை நிறைவேற்றி கொள்வதற்கான தருணங்கள் உண்டாகும். பொருள் ஈட்டுவதற்கான முயற்சிகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் கருப்பு
பூரட்டாதி : பாராட்டுகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : காலதாமதங்கள் குறையும்.
ரேவதி : முயற்சிகள் அதிகரிக்கும்.
---------------------------------------
பள்ளிக் கல்வி இயக்குநர் பணியிடம் அவசியம். மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும் -பிரின்ஸ் கஜேந்திர பாபு...
பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அறிக்கை : நாள் 17.05.2021
மாநில உரிமை காக்க!
கல்வி உரிமை மீட்க!
தமிழ் நாடு அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை வாழ்த்தி, வரவேற்கிறோம்.
ஒன்றிய அரசின் கல்வி அமைச்சர் நேரடியாக ஒரு கொள்கை முடிவை நடைமுறைப்படுத்த மாநில அரசின் பள்ளிக் கல்வித் துறை செயலாளர்களிடம் ஆலோசனை நடத்துவது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான நடவடிக்கையாகும். தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் உரிமையை ஒன்றிய அரசு தட்டிப் பறிக்கப் பார்க்கிறது என்பதையும் தாண்டி, மாநில அரசைத் தேர்ந்தெடுத்த மக்களின் சுயமரியாதைக்கு விடப்பட்ட சவாலாகும். அத்தகைய கூட்டத்தில் பங்கேற்பதில்லை என்ற தமிழ் நாடு அரசின் முடிவு மாநில உரிமை காக்கும் போராட்டத்தின் முதல் படி. தமிழ் நாடு அரசின் இந்த முடிவை வாழ்த்தி வரவேற்பதுடன், தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கையைப் பிற மாநில அரசுகளும் பின்பற்றி இந்திய அரசமைப்புச் சட்டம் வகுத்தளித்துள்ள மக்களாட்சி மாண்புகளையும், கூட்டாட்சித் தத்துவத்தையும் உயர்த்திப் பிடிக்க தமிழ்நாடு அரசுடன் பிற மாநில அரசுகளும் கைகோர்க்க வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மக்களின் துயர் துடைக்கும் நல்லாட்சியை வழங்கிட
"இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்" எனும் குறள் வழியில் அமைச்சர் முதல் அரசு அலுவலர்கள் வரை ஆய்ந்தாய்ந்து மிகப் பொருத்தமான நேர்மையானவர்களை உரிய துறைகளுக்கு அமர்த்தியுள்ளதைப் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பாராட்டி வரவேற்கின்றது. பொறுப்பேற்றுள்ள அனைவர் தம் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.
பள்ளிக் கல்வி ஆணையர் பணியிடம் 2019ல் உருவாக்கப்பட்ட போதே பள்ளிக் கல்வித் துறையில் அத்தகைய பணியிடம் தேவையற்றது என்ற கருத்தைப் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை தெரிவித்தது.
புதிய அரசு பொறுப்பேற்றவுடன் தேவையற்ற பணியிடங்களை நீக்கி விட்டு, பள்ளிகளில் கூடுதலாகத் தேவைப்படும் ஆசிரியர் உள்ளிட்ட பணியிடங்களை உருவாக்கி, சமமான கற்றல் வாய்ப்பை அனைவருக்கும் வழங்கிடுவார்கள் என்று பெரிதும் எதிர்பார்த்தோம்.
எதிர்பார்ப்பிற்கு மாறாக, பள்ளிக் கல்வி இயக்குநர் பணி வகித்தவரை இடம் மாற்றி, அந்தப் பணியிடத்தை இந்திய ஆட்சிப் பணி அலுவலர் (IAS cadre post) வகிக்கும் பணியிடமாக மாற்றிடும் வகையில் பள்ளிக் கல்வி ஆணையர், பள்ளிக் கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று வரை, கல்வியியல் செயல்பாடு கொண்டவரையே தமிழ் நாடு அரசு, பள்ளிக் கல்வி இயக்குநர் பணியில் நியமித்துள்ளது. தற்போது ஒன்றிய அரசு ஒட்டுமொத்தக் கல்வித் துறையையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயலும் சூழலில், ஆட்சிப் பணி அலுவலர் (IAS) ஒருவரைப் பள்ளிக் கல்வி இயக்குநர் பொறுப்பில் நியமிப்பது, தமிழ் நாட்டின் தனித்தன்மையை இழக்கச் செய்யும். எந்த மாநிலத்தைச் சார்ந்தவரும் எதிர்காலத்தில் இப்பணியில் அமர்த்தப்படலாம். அத்தகைய நிலை உருவாக வழி செய்வது நியாயமான அணுகுமுறை அல்ல.
கடந்த சில ஆண்டுகளாக கல்வித்துறையில் பல்வேறு குழப்பமான முடிவுகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில், நிலைமையைச் சீர்படுத்திட மிகப் பொருத்தமான அலுவலராக திரு. க.நந்தகுமார் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார் என்றே கருதுகிறோம். மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றும் போது தனது மாவட்டத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பல வகையிலும் பல்வேறு உதவிகளைச் செய்துள்ளார். மாநிலக் கல்வி வளர்ச்சியில் அக்கறை கொண்ட ஒருவர் ஆட்சிப்பணி அலுவலராக இருப்பதால் அவரின் திறமையையும், அரசுப் பள்ளி மாணவர்கள் மீது அவரின் அக்கறை கொண்ட அணுகுமுறையையும் பள்ளிக் கல்வி வளர்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டும் என்று கருதி குறிப்பிட்ட நோக்கத்திற்காக, அந்த நோக்கம் நிறைவேறும் காலம் வரை இயக்குநர் பணியிடத்தில் ஒர் ஆட்சிப் பணி அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளதாகவே கருதுகிறோம். மீண்டும் பள்ளிக் கல்வி இயக்குநர் பணி பழைய நிலைக்கு திரும்ப வேண்டும்.
இயக்குநர் பணி நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் தேவையற்ற விவாதமாக மாறி கல்வியை மாநிலப் பட்டியலுக்குத் திரும்ப கொண்டு வர வேண்டும் என்ற நமது அடிப்படை கோரிக்கையில் இருந்து திசை மாற அனுமதிக்கக்கூடாது.
இந்தியாவிற்கே முன்னுதாரணமாகத் திகழும் வகையில் மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கிட உறுதியுடன் செயல்படும் மாண்புமிகு முதல் அமைச்சர் அவர்கள் மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்க மாநிலக் கல்வி ஆணையத்தை அமைத்திட விரைந்து செயல்பட வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது.
பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு
பொதுச் செயலாளர்
பொதுப் பள்ளிக்கான மாநில மேடை
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் மருத்துவமனைகளில் உடனே படுக்கை வசதி பெற வலைதளம் தொடக்கம்...
தமிழக அரசின் அடுத்த கோவிட் நடைமுறை திட்டம்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு படுக்கை கிடைக்காத நோயாளிகளை தமிழகம் முழுவதும் உடனே கண்டறிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
இதில் கேட்கப்பட்ட கீழ்கண்ட விவரங்களை பதிவு செய்தால் வார் ரூம்மிற்கு உடனே தகவல் சென்று ஒருங்கிணைக்கப்பட்டு உடனே படுக்கை வசதி கிடைக்க வழி செய்யப்படும்.
User Profile
Type Of Caller *: Patient / Attender
Name*:
Age (in completed years)*:
Gender*:
Caller's Mobile Number*
Where is the patient?*
Home / Hospital / Triage Facility / Hospital
District*:
Taluk*:
Address*:
Where the patient wants bed*:
Type of Bed*:
Counseling Required:
Symptoms:
Confusion
Breathlessness
Continuous Fever
Comorbidity:
Diabetes Mellitus (DM)
HyperTension (HT)
Ischemic Heart Disease (IHD / CHD / CCF)
Tuberculosis (TB)
Asthma/COPD
Chronic Kidney Disease
Vital Signs:
Saturation (SpO2 %):
Whether patient is on O2? (L/min):
Respiratory Rate (per min):
Pulse Rate (per min):
BP: Systolic / Diastolic
CT Scan Report Score: (0 to 25): /25
RT-PCR *:
Remarks
இணையதள முகவரி கீழே
https://ucc.uhcitp.in/publicbedrequest
கொரோனா தடுப்பூசியினால் ஏற்படும் பக்க விளைவுகள் – தேசிய ஆய்வுக்குழு விளக்கம்...
இதுவரை நமது நாட்டில் 18 கோடி பேருக்கு கொரோனா தொற்றுக்கான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்படுவதாகவும், இறக்கும் நிலையும் வருவதாகவும் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றது. பக்க விளைவுகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்ட ஆய்வு நிறுவனம் அது குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
மொத்தம் 753 மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் மொத்தம் 10 லட்சம் பேரில் 0.61 சதவீதத்தினருக்கு மட்டுமே பக்க விளைவு ஏற்பட்டுள்ளது. மற்ற நாடுகளுடன் ஓப்பிடுகையில் கோவிஷீல்டு ஊசியால் ஏற்பட்டுள்ள பக்க விளைவுகள் மிக குறைவாகத்தான் இங்கு உள்ளது. மேலும், கோவாக்சின் தடுப்பூசியால் ரத்தம் உறைதல், ரத்தக்கசிவு போன்ற பாதிப்புகள் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12ஆம் வகுப்புத் தேர்வு மதிப்பீட்டில் மாற்று முறையை நாடு முழுவதும் ஒரே மாதிரியாகக் கையாள வேண்டும்: பெற்றோர் சங்கம் கோரிக்கை...
12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை மேலும் தாமதிப்பது மாணவர்களின் கவலை, மன அழுத்தத்தை அதிகரிப்பதுடன் ஏராளமான நேரத்தையும் வீணாக்கும் என்று இந்தியப் பெற்றோர் சங்கம் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளது.
நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. நாள்தோறும் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கில் உயிரிழக்கின்றனர். இதனால் பெரும்பாலான மாநிலங்களில் 10ஆம் வகுப்புத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே சிபிஎஸ்இ வாரியம், கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி நடைபெற இருந்த 10ஆம் வகுப்புத் தேர்வை ரத்து செய்தும், மே 4ஆம் தேதி தொடங்கி ஜூன் மாதம் வரை நடக்க இருந்த 12ஆம் வகுப்புத் தேர்வுகள் அனைத்தையும் ஒத்திவைத்தும் சிபிஎஸ்இ அறிவித்தது.
மேலும் ஜூன் 1ஆம் தேதி சிபிஎஸ்இ வாரியம் கூடி, அப்போது நிலவும் சூழல் குறித்து ஆய்வு செய்து முடிவு எடுக்கும் எனவும், தேர்வு நடத்த ஏதுவான சூழல் இருந்தால், 15 நாட்களுக்கு முன்பாகத் தேர்வு குறித்து மாணவர்களுக்குத் தெரிவிக்கப்படும் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்திருந்தது. ஐசிஎஸ்இ உள்ளிட்ட கல்வி வாரியங்களின் 12ஆம் வகுப்புத் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே நாட்டில் கரோனா வைரஸ் பரவல் குறையாத சூழலில் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை நடத்துவது சாத்தியமில்லை என்பதால் அந்தத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் இதுகுறித்து இந்திய அளவிலான பெற்றோர் சங்கம் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
’’கரோனா இரண்டாவது அலையில் கோவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கையும் மரணங்களும் எச்சரிக்கத் தகுந்த அளவில் அதிகரித்து வருவதால், ஆஃப்லைன் முறையில் 12ஆம் வகுப்புத் தேர்வுகளை நடத்துவது சரியாக இருக்காது. தற்போதைய சூழலில் இன்னும் சில மாதங்களுக்காவது தேர்வை நடத்த முடியாது.
தேர்வுகளை மேலும் தாமதிப்பது மாணவர்களின் கவலை, மன அழுத்தத்தை அதிகரிப்பதுடன் ஏராளமான நேரத்தையும் வீணாக்கும். அவர்களின் மனதில் எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தும். தேர்வுகளைத் தாமதிப்பதால் அவர்களின் ஓராண்டும் வீணாகக் கூடும். ஏற்கெனவே மாணவர்கள் 1.5 ஆண்டுகளுக்கும் மேலாக 12ஆம் வகுப்பைப் படித்து வருகின்றனர்.
இதனால் 12ஆம் வகுப்புத் தேர்வு மதிப்பீட்டில் மாற்று முறையை நாடு முழுவதும் ஒரே மாதிரியாகக் கையாள வேண்டும். மாணவர்களின் கடந்த காலச் செயல்பாட்டை அடிப்படையாகக் கொண்டு அவர்களை மதிப்பிடலாம். தேவைப்பட்டால் கல்லூரிகள் திறனறிவுத் தேர்வை நடத்திக் கொள்ளலாம்.
வெளிநாடுகளில் பல்வேறு பல்கலைக்கழகங்கள் அக மதிப்பீட்டு முறையை ஏற்றுக் கொள்கின்றன. அதை இந்தியாவிலும் கடைப்பிடிக்கலாம்’’.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore
அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...