G.O.Ms.No:55, பல்வேறு துறைகளின் பெயர் மாற்றம் - அரசாணை வெளியீடு...
>>> Click here to Download G.O.Ms.No:55, Dated: 07-06-2021...
G.O.Ms.No:55, பல்வேறு துறைகளின் பெயர் மாற்றம் - அரசாணை வெளியீடு...
>>> Click here to Download G.O.Ms.No:55, Dated: 07-06-2021...
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலை படிப்புகளில் சேர www.bdu.ac.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு...
இளங்கலை படிப்புக்கு பிளஸ் 2 மதிப்பெண் வெளியான 15 நாட்களிலும், முதுநிலை மற்றும் டிப்ளமோ படிப்புகளில் சேர ஜூன் 28ம் தேதிக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும்.
மாற்று திறனாளிகள் தேசிய அளவில் வழங்கப்பட்ட அடையாள அட்டையை தடுப்பூசி செலுத்துவதற்கான அடையாள அட்டையாக பயன்படுத்தி கொள்ளலாம்...
நியாய விலைக்கடைகள் நேரம் மாற்றம்.
இன்று(08-06-2021) முதல் முற்பகல், பிற்பகல் என இரண்டு நேரங்களில் நியாய விலைக்கடைகள் செயல்படும்.
காலை 9 மணி முதல் 12.30 மணி வரையிலும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் நியாய விலைக்கடைகள் செயல்படும் - தமிழ்நாடு அரசு...
அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தவும், பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் நிபுணர் குழு அமைக்க வேண்டும். தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் தமிழ்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வு முன், தமிழகக் கல்வித்துறையின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நீலகண்டன், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் அடிப்படைக் கல்வித் தரத்தினை உயர்த்தவும், அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் தமிழக அரசு அனைத்து ஆக்கபூர்வ நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.
இதனையடுத்து, அரசு பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்துவதற்கும், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் நிபுணர் குழு அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், அரசுப் பள்ளிகளை அருகிலுள்ள தொழில் நிறுவனங்கள் தத்தெடுத்து, பள்ளிகளின் உள்கட்டமைப்பினை மேம்படுத்துவது குறித்தும் பள்ளிக்கல்வித்துறை கவனத்தில் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி, இந்த வழக்கின் விசாரணையை நீதிபதிகள் எட்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
நாட்டு மக்கள் அனைவரும் மிக எளிதாக தங்களது வருமான வரி கணக்கினை தாக்கல் செய்வதற்காக வருமான வரித்துறையின் புதிய வலைத்தளம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
வணிகம் தொடர்பான வருமான வரி கணக்குகள், தனி நபர் வருமான வரி கணக்கு தாக்கல், வருமான வரி கணக்கு தொடர்பான மேல்முறையீடு முதலியவற்றை இதற்கு முன்பு வரை www.incometaxindiaefiling.gov.in என்ற இணையத்தில் பதிவு செய்து வந்தனர். இந்நிலையில் பயனர்கள் மிக எளிய முறையில் இதனை மேற்கொள்ள வருமான வரித்துறை புதிய வலைத்தளம் ஒன்றை அறிமுகப்படுத்தியது.
மேலும் புதிய வலைத்தளம் நடைமுறைக்கு வரும் காரணத்தினால் பழைய வலைத்தளம் கடந்த ஜூன் 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை செயல்படாது என்று வருமான வரித்துறை தெரிவித்தது. இந்நிலையில் (ஜூன் 7) முதல் வருமான வரியினை தாக்கல் செய்வதற்கான புதிய வலைத்தளம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. புதிய வலைத்தளமான www.incometax.gov.in தளத்தில் வருமான வரி தாக்கல் செய்வதற்கான படிவங்கள் 1, 2 ஆகியவற்றினை தாக்கல் செய்வதற்கான மென்பொருள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
அந்த மென்பொருளில் படிவங்களை பூர்த்தி செய்வதறகான வழிமுறைகள் இடம்பெற்றிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் வருமான வரி செலுத்தும் மக்கள் மிகுந்த பயனடைவர் என்றும் வருவமான வரி கணக்கு தாக்கல் படிவங்கள் 3, 4, 5, 6, 7 ஆகியவற்றினை பூர்த்தி செய்வதற்கான மென்பொருள் உருவாக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றும் புதிய வலைத்தளம் மூலம் கணக்கு தாக்கல் செய்யப்படும் வருமான வரி கணக்கு மீது உடனடியாக ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி கணக்குகளின் விவரங்களை புதிய வலைதளத்தின் வாயிலாக பயனர்கள் அறிந்து கொள்ள முடியும் என்றும் வருமான வரி கணக்கு படிவத்தில் பூர்த்தி செய்யப்பட வேண்டிய விவரங்கள் அனைத்தையும் வலைத்தளம் முன்கூட்டிய சேமித்து வைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நீட் தேர்வு உட்பட எந்த நுழைவு தேர்வும் கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடையே பேசிய அவர், மருத்துவ கல்விக்கான நுழைவு தேர்வான நீட் தேர்வு உட்பட எந்த நுழைவு தேர்வும் கூடாது என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்றார். திமுக தேர்தல் அறிக்கையிலும் இது குறிப்பிடப்பட்டு இருப்பதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
ஆன்லைன் வகுப்பு தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க அமைக்கப்பட்டுள்ள குழு, வரைவறிக்கை தயார் செய்து வைத்திருப்பதாக அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அனுமதிக்கு பின்னர், வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்திருக்கிறார். பள்ளி, கல்விக்கட்டணம் குறித்தும் அந்த குழு தாக்கல் செய்த வரைவறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். 12ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு மதிப்பெண்களை மதிப்பிட குழு அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அந்த குழு தரும் பரிந்துரை அடிப்படையில், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்திருக்கிறார். மாணவர்களின் 10ம் வகுப்புத் தேர்வு மதிப்பெண்களை எடுக்கப் போகிறோமோ, 9ம் வகுப்பு மதிப்பெண்கள் அல்லது அவற்றில் அவர்கள் வாங்கிய அதிகபட்ச மதிப்பெண்களை மட்டும் எடுக்கப் போகிறோமோ என்பது குறித்த ஆலோசனைகளையும் பெற்று வருகிறோம். விரைவில் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
234 தொகுதிகளிலும் உள்ள பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மேற்கொண்ட நேரடி ஆய்வு நிறைவு The completion of direct inspection...