கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்று(08-06-2021) முதல் நியாய விலைக்கடைகள் நேரம் மாற்றம்...

 நியாய விலைக்கடைகள் நேரம் மாற்றம்.


இன்று(08-06-2021)  முதல் முற்பகல், பிற்பகல் என இரண்டு நேரங்களில் நியாய விலைக்கடைகள் செயல்படும்.


காலை 9 மணி முதல் 12.30 மணி வரையிலும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் நியாய விலைக்கடைகள் செயல்படும் - தமிழ்நாடு அரசு...



“அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த நிபுணர் குழு” – உயர்நீதிமன்றம் உத்தரவு...

 


அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தவும், பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் நிபுணர் குழு அமைக்க வேண்டும். தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.



 சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் தமிழ்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வு முன், தமிழகக் கல்வித்துறையின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நீலகண்டன், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் அடிப்படைக் கல்வித் தரத்தினை உயர்த்தவும், அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் தமிழக அரசு அனைத்து ஆக்கபூர்வ நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.



இதனையடுத்து, அரசு பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்துவதற்கும், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் நிபுணர் குழு அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.



மேலும், அரசுப் பள்ளிகளை அருகிலுள்ள தொழில் நிறுவனங்கள் தத்தெடுத்து, பள்ளிகளின் உள்கட்டமைப்பினை மேம்படுத்துவது குறித்தும் பள்ளிக்கல்வித்துறை கவனத்தில் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி, இந்த வழக்கின் விசாரணையை நீதிபதிகள் எட்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.



வருமான வரித்துறையின் புதிய வலைத்தளம் தொடக்கம்...



 நாட்டு மக்கள் அனைவரும் மிக எளிதாக தங்களது வருமான வரி கணக்கினை தாக்கல் செய்வதற்காக  வருமான வரித்துறையின் புதிய வலைத்தளம்  பயன்பாட்டிற்கு வந்துள்ளது.




வணிகம் தொடர்பான வருமான வரி கணக்குகள், தனி நபர் வருமான வரி கணக்கு தாக்கல், வருமான வரி கணக்கு தொடர்பான மேல்முறையீடு முதலியவற்றை இதற்கு முன்பு வரை www.incometaxindiaefiling.gov.in என்ற இணையத்தில் பதிவு செய்து வந்தனர். இந்நிலையில் பயனர்கள் மிக எளிய முறையில் இதனை மேற்கொள்ள வருமான வரித்துறை புதிய வலைத்தளம் ஒன்றை அறிமுகப்படுத்தியது.



 

மேலும் புதிய வலைத்தளம் நடைமுறைக்கு வரும் காரணத்தினால் பழைய வலைத்தளம் கடந்த ஜூன் 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை செயல்படாது என்று வருமான வரித்துறை தெரிவித்தது. இந்நிலையில் (ஜூன் 7) முதல் வருமான வரியினை தாக்கல் செய்வதற்கான புதிய வலைத்தளம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. புதிய வலைத்தளமான www.incometax.gov.in தளத்தில் வருமான வரி தாக்கல் செய்வதற்கான படிவங்கள் 1, 2 ஆகியவற்றினை தாக்கல் செய்வதற்கான மென்பொருள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.




அந்த மென்பொருளில் படிவங்களை பூர்த்தி செய்வதறகான வழிமுறைகள் இடம்பெற்றிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் வருமான வரி செலுத்தும் மக்கள் மிகுந்த பயனடைவர் என்றும் வருவமான வரி கணக்கு தாக்கல் படிவங்கள் 3, 4, 5, 6, 7 ஆகியவற்றினை பூர்த்தி செய்வதற்கான மென்பொருள் உருவாக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றும் புதிய வலைத்தளம் மூலம் கணக்கு தாக்கல் செய்யப்படும் வருமான வரி கணக்கு மீது உடனடியாக ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி கணக்குகளின் விவரங்களை புதிய வலைதளத்தின் வாயிலாக பயனர்கள் அறிந்து கொள்ள முடியும் என்றும் வருமான வரி கணக்கு படிவத்தில் பூர்த்தி செய்யப்பட வேண்டிய விவரங்கள் அனைத்தையும் வலைத்தளம் முன்கூட்டிய சேமித்து வைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆன்லைன் வகுப்பு தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளுக்கான வரைவறிக்கை தயார் - அமைச்சர் அன்பில் மகேஷ்...

 


தமிழ்நாட்டில் நீட் தேர்வு உட்பட எந்த நுழைவு தேர்வும் கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடையே பேசிய அவர், மருத்துவ கல்விக்கான நுழைவு தேர்வான  நீட் தேர்வு உட்பட எந்த நுழைவு தேர்வும் கூடாது என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்றார். திமுக தேர்தல் அறிக்கையிலும் இது குறிப்பிடப்பட்டு இருப்பதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருப்பதாக தெரிவித்திருக்கிறார். 


ஆன்லைன் வகுப்பு தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க அமைக்கப்பட்டுள்ள குழு, வரைவறிக்கை தயார் செய்து வைத்திருப்பதாக  அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அனுமதிக்கு பின்னர், வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்திருக்கிறார். பள்ளி, கல்விக்கட்டணம் குறித்தும் அந்த குழு தாக்கல் செய்த வரைவறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். 12ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு மதிப்பெண்களை மதிப்பிட குழு அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 


அந்த குழு தரும் பரிந்துரை அடிப்படையில், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்திருக்கிறார். மாணவர்களின் 10ம் வகுப்புத் தேர்வு மதிப்பெண்களை எடுக்கப் போகிறோமோ, 9ம் வகுப்பு மதிப்பெண்கள் அல்லது அவற்றில் அவர்கள் வாங்கிய அதிகபட்ச மதிப்பெண்களை மட்டும் எடுக்கப் போகிறோமோ என்பது குறித்த ஆலோசனைகளையும் பெற்று வருகிறோம். விரைவில் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.





ஊரடங்கு காலத்தில் பேராசிரியர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது - AICTE அறிவுறுத்தல்...



 கொரோனா காலகட்டம் மற்றும் அது தொடர்பான ஊரடங்கு இருக்கும் நிலையில், விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்களை பணிநீக்கம் செய்யக்கூடாது என தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் அறிவுறுத்தி உள்ளது.



தனியார் பொறியியில் கல்லூரிகளுக்கு கவுன்சிலின் தலைவர் அனில் சகஸ்ரபுத்தே அனுப்பிய சுற்றறிக்கையில், இந்த நெருக்கடியான காலகட்டத்தில் தாங்கள் வேலையில் இருந்து நீக்கப்படுவதாக பேராசிரியர்கள் பலர் கவுன்சிலுக்கு புகார் அனுப்பியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.



ஒழுங்கு நடவடிக்கைகளுக்காக அன்றியோ, பேராசிரியர்களின் விளக்கங்களை கேட்காமலோ, அவர்களை பணிநீக்கம் செய்யக்கூடாது என பொறியியல் கல்லூரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.



தேசிய நல்லாசிரியர் விருது - 2021 - 20.06.2021 க்குள் விண்ணப்பிக்க பள்ளிக்கல்வி ஆணையர் செயல்முறைகள்...

 


தேசிய நல்லாசிரியர் விருது (National Best Teacher Award)-2021- விண்ணப்பங்களை இணையதளம் மூலமாக -20.06.2021 க்குள் விண்ணப்பிக்க ஆசிரியர்களுக்கு தெரிவித்தல் சார்ந்து- பள்ளிக்கல்வி ஆணையர் செயல்முறைகள் ந.க.எண்: 27576/ஐ1/2021, நாள்: 07-06-2021...


>>> தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 27576/ஐ1/2021, நாள்: 07-06-2021...






இன்றைய (08-06-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஜூன் 08, 2021



 

குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். பேச்சுவார்த்தைகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் நீங்கும். உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறையும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



அஸ்வினி : ஆதாயம் உண்டாகும்.


பரணி : தாமதங்கள் நீங்கும்.


கிருத்திகை : பிரச்சனைகள் குறையும்.

---------------------------------------




ரிஷபம்

ஜூன் 08, 2021



 

புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். கல்வி தொடர்பான பணிகளில் சிறு சிறு மாற்றங்களை செய்வீர்கள். விவசாயம் தொடர்பான பணிகளில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். மற்றவர்களின் பணிகளையும் சேர்த்து பார்க்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



கிருத்திகை : மாற்றங்கள் உண்டாகும்.


ரோகிணி : ஆதரவு கிடைக்கும்.


மிருகசீரிஷம் : புரிதல் ஏற்படும்.

---------------------------------------




மிதுனம்

ஜூன் 08, 2021



 

இளைய உடன்பிறப்புகளிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்வது நல்லது. சிறு வியாபாரங்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மேன்மைக்கான வாய்ப்புகள் ஏற்படும். சங்கீதம் மற்றும் எழுத்து தொடர்பான பணிகளில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



மிருகசீரிஷம் : அனுசரித்து செல்லவும்.


திருவாதிரை : ஈடுபாடு உண்டாகும்.


புனர்பூசம் : வாய்ப்புகள் ஏற்படும்.

---------------------------------------




கடகம்

ஜூன் 08, 2021



 

தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சபை தொடர்பான பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மேம்படும். தொழில் தொடர்பான செயல்பாடுகளில் வாடிக்கையாளர்களின் எண்ணங்களை புரிந்து அதற்கு தகுந்தாற்போல் செயல்படுவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



புனர்பூசம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.


பூசம் : ஆதரவு கிடைக்கும்.


ஆயில்யம் : ஒத்துழைப்பு மேம்படும்.

---------------------------------------




சிம்மம்

ஜூன் 08, 2021



 

தனவரவுகளை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் மனதில் உண்டாகும். அரசு தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு அவ்வப்போது குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த சில முயற்சிகள் காலதாமதமாக நிறைவேறும். கற்கும் திறன்களில் மாற்றங்கள் உண்டாகும். மருத்துவம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகள் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்



மகம் : சிந்தனைகள் உண்டாகும்.


பூரம் : குழப்பங்கள் நீங்கும்.


உத்திரம் : மேன்மையான நாள்.

---------------------------------------




கன்னி

ஜூன் 08, 2021



 

தந்தையிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். ரகசியமான சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். புதுவிதமான இடங்களுக்கு பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் அமைதியின்மையும், ஒருவிதமான போராட்டமும் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



உத்திரம் : விவாதங்களை தவிர்க்கவும்.


அஸ்தம் : புதுவிதமான நாள்.


சித்திரை : அமைதியின்மை ஏற்படும்.

---------------------------------------




துலாம்

ஜூன் 08, 2021



 

மின்சாரம் தொடர்பான பணிகளில் ஈடுபடுபவர்கள் கவனத்துடன் செயல்படவும். நெருங்கிய நண்பர்களின் மூலம் மனவருத்தங்கள் நேரிடும். வேளாண்மை தொடர்பான பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். எதிர்பார்த்த சில நிகழ்வுகள் காலதாமதமாக நிறைவேறும். பொறுமையுடன் செயல்படுவது நல்லது.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



சித்திரை : கவனத்துடன் செயல்படவும்.


சுவாதி : அலைச்சல்கள் உண்டாகும்.


விசாகம் : பொறுமை வேண்டும்.

---------------------------------------




விருச்சகம்

ஜூன் 08, 2021



 

வியாபாரம் தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். புதிய நபர்களின் அறிமுகம் மற்றும் உயர் பதவிகளில் இருப்பவர்களின் ஆதரவு திருப்தியை ஏற்படுத்தும். மந்திரம் உச்சரிப்பதன் மூலம் மனவலிமை மேம்படும். உடற்பயிற்சி தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்



விசாகம் : லாபம் மேம்படும்.


அனுஷம் : திருப்திகரமான நாள்.


கேட்டை : ஆர்வம் உண்டாகும்.

---------------------------------------




தனுசு

ஜூன் 08, 2021



 

வழக்கு தொடர்பான பணிகளில் நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். மருந்து பொருட்கள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் உண்டாகும். மனதில் சஞ்சலமான சிந்தனைகளின் மூலம் குழப்பங்கள் ஏற்படும். ஆராய்ச்சி சார்ந்த கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் அவசரமின்றி செயல்படுவதன் மூலம் நன்மதிப்பு ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



மூலம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.


பூராடம் : குழப்பங்கள் ஏற்படும்.


உத்திராடம் : முன்னேற்றமான நாள்.

---------------------------------------




மகரம்

ஜூன் 08, 2021



 

அஞ்ஞானம் தொடர்பான விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கைத்துணைவரின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக மனதை உறுத்தி வந்த சில விஷயங்களுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். உணவு சார்ந்த விஷயங்களில் விட்டுக்கொடுத்து செல்வது தேவையற்ற பகையை தவிர்க்க இயலும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



உத்திராடம் : அனுகூலமான நாள்.


திருவோணம் : ஆர்வம் அதிகரிக்கும்.


அவிட்டம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.

---------------------------------------




கும்பம்

ஜூன் 08, 2021



 

சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் குறைந்து நெருக்கம் அதிகரிக்கும். எதிர்பாலின மக்களிடம் பொறுமையுடன் செயல்பட வேண்டும். மலர்கள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் உண்டாகும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட மக்களின் அறிமுகமும், ஆதரவும் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



அவிட்டம் : முன்னேற்றம் உண்டாகும்.


சதயம் : நெருக்கம் அதிகரிக்கும்.


பூரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.

---------------------------------------




மீனம்

ஜூன் 08, 2021



 

செய்யும் முயற்சிகளில் இருந்துவந்த தடை, தாமதங்களை அறிவீர்கள். மனதில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். சந்தேக உணர்வுகள் எதுவும் இன்றி தீர விசாரித்து முடிவுகளை எடுப்பீர்கள். பங்காளிகளின் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வாகனப் பயணங்களில் விவேகம் அவசியமாகும். வேலையாட்களை திறமைக்கேற்ப அனுசரித்து செல்வதன் மூலம் லாபம் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



பூரட்டாதி : தாமதங்களை அறிவீர்கள்.


உத்திரட்டாதி : கருத்து வேறுபாடுகள் குறையும்.


ரேவதி : லாபம் உண்டாகும்.

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

No Work No Pay - One Day All India Strike

இன்று (09.07.2025) நடைபெற உள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டால் "No Work - No Pay" என்ற அடிப்படையில் ஊதியப் பிடித்தம் ச...