கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அடுத்த மாதம் முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு 15% DA உயர்வு வழங்க முடிவு...

 அகவிலைப்படி உயர்வால் அடுத்த மாதத்தில் இருந்து மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்க உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை சரிகட்ட  மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 2020 முதல் அகவிலைப்படி (DA) உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. 2019ம் ஆண்டு இறுதியில் அடிப்படை சம்பளத்தில் அகவிலைப்படி 17 சதவீதமாக இருந்தது. இதில், 2020 ஜனவரியில் 4 சதவீதமும், ஜூனில் 3 சதவீதமும், 2021 ஜனவரியில் 4 சதவீதமும் என மொத்தம் 11 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதனால், இப்போது 17 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 28 சதவீதமாக உயரும். மேலும், இந்த ஆண்டின் பிற்பகுதியில் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், சுமார் 15 சதவீதம் உயர்ந்து 32 சதவீத கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் கணிசமாக உயர உள்ளது. உதாரணமாக, அடிப்படை பணியில் உள்ளவர்களை எடுத்துக் கொண்டால், அவர்களின் அடிப்படை ஊதியமாக 18,000 இருக்கும். 15 சதவீத அகவிலைப்படி உயர்வு என்றால் மாதத்திற்கு 2,700ம், ஆண்டிற்கு 32,400ம் சம்பளத்தில் உயரும். இதன் மூலம், 50 லட்சம் மத்திய பணியாளர்களும், 61 லட்சம் பென்சன்தாரர்களும் பலன் அடைவார்கள். இதுதவிர, இரவு நேர பணிப்படி முறையிலும் மத்திய அரசு மாற்றம் செய்ய உள்ளது.




புதுமை முயற்சிகளுடன் பாட வீடியோக்கள்; 'ஆன்லைன்' வகுப்பு, இனி 'போர்' அடிக்காது...



 புதுமை முயற்சிகளுடன் பாட வீடியோக்கள்; 'ஆன்லைன்' வகுப்பு, இனி 'போர்' அடிக்காது...


ஒரே புத்தகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை தனித்தனி ஆசிரியர்கள் வகுப்பெடுப்பதால் மாணவர்கள் சோர்வின்றி ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 


பெருந்தொற்று காலத்திலும் கற்பித்தல் பணிக்கு பெரிதும் உதவுவது அரசின் கல்வி தொலைக்காட்சிதான். பள்ளிகள் திறக்கும் வரையில் இணைப்பு பாட பயிற்சிகளும், படித்ததை நினைவுகூறுவதை பரிசோதிக்கும் வகுப்புகளும் ஒளிபரப்பாகி வருகின்றன.


ஒவ்வொரு பாடத்திற்கும் அரைமணி நேரம். ஒரே புத்தகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை தனித்தனி ஆசிரியர்கள் வகுப்பெடுப்பதால் மாணவர்களும், வகுப்பறை இல்லாத குறையை போக்குவதால் ஆசிரியர்களும் அதிகளவு கல்வி சேனலில் பங்கெடுத்து வருகின்றனர். 


இதுகுறித்து திருப்பூர் மாவட்ட ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன துணை முதல்வர் விமலா கூறியதாவது: கல்வித் தொலைக்காட்சியையும் தனியார் தொலைக்காட்சிகளையும் மாணவர்கள் பார்க்க தவறிவிட்டால், யூடியூப்பில் (kalvitvofficial) அடுத்தநாள் காலையில் பார்த்து கொள்ளலாம். 


அதில் வகுப்பு வாரியாக வீடியோக்கள் இருக்கும். இதனால் எந்த இடத்தில் இருந்தாலும் மாணவர்களால் வகுப்புகளை கவனிக்க முடியும். தமிழ்நாடு ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் உதவியோடு, 32 மாவட்டங்களில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் (DIET) பாடம் எடுக்கப்படுகிறது.


இதற்காக மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் ஒத்துழைப்புடன் முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், தொடக்க பள்ளி ஆசிரியர்களை டயட்டுக்கு வர சொல்வோம். 


அங்கு வகுப்பெடுப்பது படம் பிடிக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் நேற்றுடன், 70 எபிசோடுகள் எடிட்டிங் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 


ஒவ்வொரு டயட்டிலும் கேமராமேன், எடிட்டிங் என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் இருப்பார்கள். விரைவில் புதுமையான முறையில் நிகழ்ச்சிகளை முன்னெடுக்கவும் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.


IFHRMS - ஜூன் 2021 ஊதியப் பட்டியல் - ஊதியம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான அறிவுறுத்தல்கள் - தொடர்பான கருவூலக் கணக்குத் துறை அலுவலரின் கடிதம்...

 IFHRMS- PAY ROLL FOR JUNE 2021- REQUESTED TO GIVE INSTRUCTIONS TO THE PAY DRAWING AND DISBURSING OFFICER'S- INSTRUCTIONS-REGARDING...





ஜனவரி 1 முதல், ATM பரிவர்த்தனை கட்டணம் உயருகிறது...

 ஜனவரி 1 முதல், ATM பரிவர்த்தனை கட்டணம் உயருகிறது...


அடுத்த ஆண்டு ஜன.,1 முதல், ஏ.டி.எம்., மையங்களில் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனை கட்டணத்தை, ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.


தற்போது ஒரு வங்கியின் வாடிக்கையாளர், அதே வங்கியின் ஏ.டி.எம்., வாயிலாக, மாதம், ஐந்து முறையும், பிற வங்கி ஏ.டி.எம்.,களில் மூன்று முறையும் பணப் பரிவர்த்தனைகளை கட்டணமின்றி மேற்கொள்ளலாம்.


இதற்கு மேற்பட்ட ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும், 20 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.


ஜன.,1 முதல், தற்போதுள்ள இலவச பரிவர்த்தனைகளுக்கு மேல் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பணப் பரிவர்த்தனைக்கான கட்டணம், 20 ரூபாயில் இருந்து, 21 ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது.


வங்கிகள் இடையிலான, ஏ.டி.எம்., நிதிப் பரிவர்த்தனை கட்டணம், 15 ரூபாயில் இருந்து, 17 ரூபாய்; நிதி சாராத பரிவர்த்தனைகளுக்கான கட்டணம், 5 ரூபாயில் இருந்து 6 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.





ஜூலை இறுதிக்குள் ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங்...


ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங்கை, ஒரு மாதத்தில் நடத்த, பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக காலியிட விபரங்களை அனுப்ப உத்தரவிடப்பட்டு உள்ளது.


தமிழக பள்ளி கல்வித்துறையில், அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் இடமாறுதல் கவுன்சிலிங், 'ஆன்லைன்' முறையில் நடத்தப்படும்.கடந்த ஆண்டு கொரோனா தொற்று பிரச்னையால், பள்ளிகளை திறக்க தாமதமானதால், விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படவில்லை. இந்நிலையில், புதிதாக அமைந்துள்ள தி.மு.க., அரசு, ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங்கை நடத்த, பள்ளி கல்வித்துறைக்கு அனுமதி வழங்கி உள்ளது.


இந்த ஆண்டு பள்ளிகளை திறக்கும் முன், கவுன்சிலிங்கை முடித்து விடவும் திட்டமிடப்பட்டு உள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகள் துவங்கி உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும், ஆசிரியர்களின் காலியிட பட்டியலை சேகரிக்க, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.


அரசு பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி, முதுநிலை பட்டதாரி, சிறப்பு பாட பிரிவுகள், உடற்கல்வி, கணினி உள்ளிட்ட அனைத்து வகை ஆசிரியர் பதவிகளையும் பட்டியலிட்டு, உடனே இயக்குனரகத்துக்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று குறையும் நிலையில், ஒரு மாதத்துக்குள் அதாவது, ஜூலைக்குள் ஆன்லைன் வழி கவுன்சிலிங்கை நடத்த, பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. விண்ணப்பங்கள் ஜூலை முதல் வாரத்தில் அளிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.



தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான 9 பேர் கொண்ட குழுவை அமைத்து அரசாணை வெளியீடு...



 தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான 9 பேர் கொண்ட குழுவை அமைத்து அரசாணை (G.O.Ms.No.283, Dated: 10-06-2021) வெளியீடு...





ஐந்து வயது வரை குழந்தைகள் முகக்கவசம் (Mask) அணிய தேவையில்லை - சுகாதார சேவைகள் இயக்குநரகம் தகவல்...

 ஐந்து வயது வரை குழந்தைகள் முகக்கவசம் (Mask) அணிய தேவையில்லை - சுகாதார சேவைகள் இயக்குநரகம் தகவல்... இந்தியாவில் கொரோனா வைரசின்  இரண்டாவது அலையின் பாதிப்பு குறையத் தொடங்கி உள்ளது . தினசரி பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்திற்கும் கீழ் குறைந்தது. குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது . இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்தாலும், மூன்றாவது அலை குறித்த பயம் அதிகரித்துள்ளது . மூன்றாவது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கலாம் என மருத்துவ வல்லுநர்கள் கூறி உள்ளனர் . இந்நிலையில், 18 வயதுக்கு  உட்பட்டோருக்கான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதார சேவைகள் இயக்குநரகம் (டிஜிஎச்எஸ்) வெளியிட்டுள்ளது. அதில் , 5 வயது மற்றும் அதற்கு கீழ் உள்ள குழந்தைகள் முக கவசம் அணிய வேண்டிய அவசியமில்லை என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது . 6 முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகள் பெற்றோர் மற்றும் டாக்டர்களின் கண்காணிப்பில் முக கவசம் அணியலாம் . 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்தை பயன்படுத்த பரிந்துரைக்கப்படவில்லை . தேவைப்பட்டால் எச்ஆர்சிடி ஸ்கேன் எடுத்து பார்க்கலாம் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது .





இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...