கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஜனவரி 1 முதல், ATM பரிவர்த்தனை கட்டணம் உயருகிறது...

 ஜனவரி 1 முதல், ATM பரிவர்த்தனை கட்டணம் உயருகிறது...


அடுத்த ஆண்டு ஜன.,1 முதல், ஏ.டி.எம்., மையங்களில் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனை கட்டணத்தை, ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.


தற்போது ஒரு வங்கியின் வாடிக்கையாளர், அதே வங்கியின் ஏ.டி.எம்., வாயிலாக, மாதம், ஐந்து முறையும், பிற வங்கி ஏ.டி.எம்.,களில் மூன்று முறையும் பணப் பரிவர்த்தனைகளை கட்டணமின்றி மேற்கொள்ளலாம்.


இதற்கு மேற்பட்ட ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும், 20 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.


ஜன.,1 முதல், தற்போதுள்ள இலவச பரிவர்த்தனைகளுக்கு மேல் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பணப் பரிவர்த்தனைக்கான கட்டணம், 20 ரூபாயில் இருந்து, 21 ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது.


வங்கிகள் இடையிலான, ஏ.டி.எம்., நிதிப் பரிவர்த்தனை கட்டணம், 15 ரூபாயில் இருந்து, 17 ரூபாய்; நிதி சாராத பரிவர்த்தனைகளுக்கான கட்டணம், 5 ரூபாயில் இருந்து 6 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.





ஜூலை இறுதிக்குள் ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங்...


ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங்கை, ஒரு மாதத்தில் நடத்த, பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக காலியிட விபரங்களை அனுப்ப உத்தரவிடப்பட்டு உள்ளது.


தமிழக பள்ளி கல்வித்துறையில், அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் இடமாறுதல் கவுன்சிலிங், 'ஆன்லைன்' முறையில் நடத்தப்படும்.கடந்த ஆண்டு கொரோனா தொற்று பிரச்னையால், பள்ளிகளை திறக்க தாமதமானதால், விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படவில்லை. இந்நிலையில், புதிதாக அமைந்துள்ள தி.மு.க., அரசு, ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங்கை நடத்த, பள்ளி கல்வித்துறைக்கு அனுமதி வழங்கி உள்ளது.


இந்த ஆண்டு பள்ளிகளை திறக்கும் முன், கவுன்சிலிங்கை முடித்து விடவும் திட்டமிடப்பட்டு உள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகள் துவங்கி உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும், ஆசிரியர்களின் காலியிட பட்டியலை சேகரிக்க, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.


அரசு பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி, முதுநிலை பட்டதாரி, சிறப்பு பாட பிரிவுகள், உடற்கல்வி, கணினி உள்ளிட்ட அனைத்து வகை ஆசிரியர் பதவிகளையும் பட்டியலிட்டு, உடனே இயக்குனரகத்துக்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று குறையும் நிலையில், ஒரு மாதத்துக்குள் அதாவது, ஜூலைக்குள் ஆன்லைன் வழி கவுன்சிலிங்கை நடத்த, பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. விண்ணப்பங்கள் ஜூலை முதல் வாரத்தில் அளிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.



தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான 9 பேர் கொண்ட குழுவை அமைத்து அரசாணை வெளியீடு...



 தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான 9 பேர் கொண்ட குழுவை அமைத்து அரசாணை (G.O.Ms.No.283, Dated: 10-06-2021) வெளியீடு...





ஐந்து வயது வரை குழந்தைகள் முகக்கவசம் (Mask) அணிய தேவையில்லை - சுகாதார சேவைகள் இயக்குநரகம் தகவல்...

 ஐந்து வயது வரை குழந்தைகள் முகக்கவசம் (Mask) அணிய தேவையில்லை - சுகாதார சேவைகள் இயக்குநரகம் தகவல்... இந்தியாவில் கொரோனா வைரசின்  இரண்டாவது அலையின் பாதிப்பு குறையத் தொடங்கி உள்ளது . தினசரி பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்திற்கும் கீழ் குறைந்தது. குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது . இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்தாலும், மூன்றாவது அலை குறித்த பயம் அதிகரித்துள்ளது . மூன்றாவது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கலாம் என மருத்துவ வல்லுநர்கள் கூறி உள்ளனர் . இந்நிலையில், 18 வயதுக்கு  உட்பட்டோருக்கான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதார சேவைகள் இயக்குநரகம் (டிஜிஎச்எஸ்) வெளியிட்டுள்ளது. அதில் , 5 வயது மற்றும் அதற்கு கீழ் உள்ள குழந்தைகள் முக கவசம் அணிய வேண்டிய அவசியமில்லை என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது . 6 முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகள் பெற்றோர் மற்றும் டாக்டர்களின் கண்காணிப்பில் முக கவசம் அணியலாம் . 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்தை பயன்படுத்த பரிந்துரைக்கப்படவில்லை . தேவைப்பட்டால் எச்ஆர்சிடி ஸ்கேன் எடுத்து பார்க்கலாம் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது .





Tamilnadu Maritime Academy - Applications are invited for admission to Pre-Sea Training Course for General Purpose Ratings - Eligibility : 10th Std Pass...



Tamilnadu Maritime Academy - Applications are invited for admission to Pre-Sea Training Course for General Purpose Ratings - Eligibility : 10th Std Pass...


>>> Click here to Download Prospectus and Announcement...


இன்றைய (11-06-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஜூன் 11, 2021



தவறிப் போன சில பொருட்கள் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். நண்பர்களின் ஆதரவால் பொருளாதார பிரச்சனைகள் குறையும். காது தொடர்பான உபாதைகள் அகலும். வித்தியாசமான புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். புதிய நபர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



அஸ்வினி : பிரச்சனைகள் குறையும்.


பரணி : உபாதைகள் அகலும்.


கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------




ரிஷபம்

ஜூன் 11, 2021



வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் புதுவிதமான யுக்திகளின் மூலம் லாபம் பெறுவீர்கள். சிறு தொழில் புரிபவர்கள் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். தானியம் மற்றும் ஆபரணங்கள் தொடர்பான பணிகளில் லாபம் உண்டாகும். வாக்கு சாதுர்யத்தின் மூலம் தடைபட்ட சில காரியங்களை செய்து முடிப்பீர்கள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



கிருத்திகை : லாபம் உண்டாகும்.


ரோகிணி : கவனம் வேண்டும்.


மிருகசீரிஷம் : காரியசித்தி உண்டாகும்.

---------------------------------------




மிதுனம்

ஜூன் 11, 2021



நீண்ட நாட்களாக மனதை உறுத்தி வந்த சில விஷயங்களுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். பங்காளி தொடர்பான உறவுகளிடம் பொறுமையுடன் செயல்பட வேண்டும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் உடல் சோர்வு உண்டாகும். சமூகப்பணிகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்படுவதன் மூலம் நன்மைகள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



மிருகசீரிஷம் : தெளிவான நாள்.


திருவாதிரை : சோர்வு உண்டாகும்.


புனர்பூசம் : நன்மைகள் அதிகரிக்கும்.

---------------------------------------




கடகம்

ஜூன் 11, 2021



குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். கற்பனை தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். உடலில் சோர்வும், சுறுசுறுப்பின்மையும் உண்டாகும். விவசாயப் பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் ஏற்படும். உடன்பிறந்தவர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



புனர்பூசம் : எண்ணங்களை அறிவீர்கள்.


பூசம் : குழப்பங்கள் நீங்கும்.


ஆயில்யம் : ஆதரவான நாள்.

---------------------------------------




சிம்மம்

ஜூன் 11, 2021



தாய்வழி உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அரசு தொடர்பான காரியங்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். கூட்டு வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். இணையம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



மகம் : மகிழ்ச்சியான நாள்.


பூரம் : இழுபறிகள் குறையும்.


உத்திரம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

---------------------------------------




கன்னி

ஜூன் 11, 2021



உத்தியோகம் தொடர்பான பணிகளில் மறைமுகமாக இருந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். தந்தை வழி வியாபாரம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். குடும்ப பெரியோர்களிடம் கலந்து ஆலோசிப்பது மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளின் மூலம் நன்மை உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



உத்திரம் : திறமைகள் வெளிப்படும்.


அஸ்தம் : முன்னேற்றம் உண்டாகும்.


சித்திரை : நன்மையான நாள்.

---------------------------------------




துலாம்

ஜூன் 11, 2021



சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் வாக்குறுதிகளை அளிக்கும்போது சிந்தித்து செயல்படவும். காப்பீடு தொடர்பான பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். நிலுவையில் இருந்துவந்த செயல்களை செய்து முடிப்பீர்கள். மனதில் ஒருவிதமான குழப்பங்களும், அமைதியின்மைக்கான சூழ்நிலைகளும் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



சித்திரை : மேன்மையான நாள்.


சுவாதி : இழுபறிகள் அகலும்.


விசாகம் : குழப்பங்கள் உண்டாகும்.

---------------------------------------




விருச்சகம்

ஜூன் 11, 2021



மனதில் வித்தியாசமான சிந்தனைகள் உண்டாகும். நண்பர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதை குறைத்துக்கொள்ளவும். புதிய நபர்களின் அறிமுகத்தின்போது சூழ்நிலைகளை அறிந்தும், நபரின் தன்மையை அறிந்தும் செயல்படவும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



விசாகம் : சிந்தனைகள் உண்டாகும்.


அனுஷம் : விவாதங்களை தவிர்க்கவும்.


கேட்டை : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------




தனுசு

ஜூன் 11, 2021



உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். உடலில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஆர்வம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கமும், புரிதலும் மேம்படும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் முதலீடுகளை மேம்படுத்துவதற்கான எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



மூலம் : பொறுப்புகள் குறையும்.


பூராடம் : புத்துணர்ச்சியான நாள்.


உத்திராடம் : புரிதல் மேம்படும்.

---------------------------------------




மகரம்

ஜூன் 11, 2021



வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபம் ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறைவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த தனவரவுகள் கிடைக்கும். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



உத்திராடம் : லாபம் ஏற்படும்.


திருவோணம் : தனவரவுகள் கிடைக்கும்.


அவிட்டம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.

---------------------------------------




கும்பம்

ஜூன் 11, 2021



வியாபாரம் தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். கவிதை மற்றும் இலக்கியம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். சகோதரர்களின் வழிகளில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



அவிட்டம் : ஆர்வம் ஏற்படும்.


சதயம் : ஈடுபாடு உண்டாகும்.


பூரட்டாதி : ஆதரவான நாள்.

---------------------------------------




மீனம்

ஜூன் 11, 2021



தந்தையின் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். பத்திரம் தொடர்பான பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் உண்டாகும். கால்நடைகள் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மாணவர்களுக்கு கல்வியில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்



பூரட்டாதி : பொறுமை வேண்டும்.


உத்திரட்டாதி : மேன்மையான நாள்.


ரேவதி : மாற்றங்கள் உண்டாகும்.

---------------------------------------


ஆகஸ்ட் 2 முதல் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் 2020-க்கான நேர்முகத் தேர்வு...



 UPSC சிவில் சர்வீஸ் 2020-க்கான நேர்முகத் தேர்வு ஆகஸ்ட் 2 முதல் மீண்டும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2020 ஏப்ரலில் தொடங்கப்பட்ட யுபிஎஸ்சி நேர்முகத் தேர்வு கொரோனா பரவலால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DEO Promotion to 34 Govt High/ Hr.Sec School HMs - DSE Proceedings

    34 அரசு உயர்நிலை / மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டக்கல்வி அலுவலர்களாகப் பதவி உயர்வு - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ...