கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

EMIS - HOW TO RECTIFY STUDENTS PROMOTE ISSUES...



 EMIS - HOW TO RECTIFY STUDENTS PROMOTE ISSUES...


1. மாணவர்களை emis தளத்தில் ஒரு வகுப்பிலிருந்து அடுத்த வகுப்பிற்கு promote செய்தபின்  ctrl+shift+R யை click செய்து refresh செய்துகொள்ளவும்.


2.பிறகு அடுத்த வகுப்பு மாணவர்களை promote செய்ய வேண்டும்.


3.இவ்வாறாக ஒவ்வொரு வகுப்பு மாணவர்களை promote செய்தால் மட்டுமே உடனே update ஆகும்.


4. இல்லையெனில் students list யில் no record found என வரும்.


5.  No record found என வந்தாலும் நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம் logout செய்து வெளியே வந்துவிடவும்.


ஒரு மணி நேரம் கழித்து students list யில் மாணவர்கள் பெயர் வந்துவிடும்.


பெற்றோர்-ஆசிரியர் கழக நிதியாக 50 ரூபாய்க்கு மேல் வசூலிக்கக் கூடாது - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு...



 தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பள்ளிகளில் 2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை ஜூன் 14-ந்தேதி முதல் நடத்தலாம் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி தற்போது பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது



இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தலின்படி, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மாணவர் சேர்க்கையின் போது பெற்றோர்-ஆசிரியர் கழக நிதியாக 50 ரூபாய்க்கு மேல் வசூலிக்கக் கூடாது எனவும் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கும்போது எந்தவித கட்டணமும் வசூலிக்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




மேலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ள பள்ளிக்கல்வித்துறை, 5 வயது குழந்தைகள் அனைவரும் பள்ளிகளில் சேர்ந்திருப்பதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. அதே போல, தங்களது பள்ளியில் 8-ம் வகுப்பு படித்த மாணவர்கள் அனைவரும் 9-ம் வகுப்பை தொடர்கிறார்களா என்பதை தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


தனித் தேர்வர்களுக்கும் தேர்வு கூடாது’ 1,152 சிபிஎஸ்இ மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு...



 தனித் தேர்வர்களுக்கும் சிபிஎஸ்இ தேர்வுகளை நடத்தக் கூடாது என 1,152 மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.   கொரோனா 2வது அலையை கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. ஆனால், தனித்தேர்வர்களும், கடந்த ஆண்டு குறைந்த மதிப்பெண் பெற்ற கம்பார்ட்மென்ட் பிரிவில் உள்ள மாணவர்களும் கட்டாயம் நேரில் தேர்வு எழுத வேண்டுமென சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இதற்கு இந்த மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.   இந்நிலையில், எந்த பள்ளியிலும் பதிவு செய்யாமல் தனியாக சிபிஎஸ்இ தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் மற்றும் கம்பார்ட்மென்ட் மாணவர்கள் 1,152 பேர் சார்பில் வக்கீல் அபிஷேக் சவுத்ரி உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.



அதில், ‘தற்போதைய கொரோனா சூழலில் எப்போது நேரடி தேர்வு நடத்தப்படும் என்பதை தீர்மானமாக கூற முடியாது. நாங்கள் தேர்வு எழுதாமல் எந்த பல்கலைக் கழகத்திலும், கல்லூரியிலும் சேர முடியாது. இது அரசியலமைப்பு சட்டப்பிரிவு 21ன் கீழ் எங்களின் படிக்கும் அடிப்படை உரிமையை பறிக்கும் செயலாகும். எனவே, எங்களையும் பள்ளி மாணவர்களாக கணக்கில் கொண்டு, நேரடி தேர்வை ரத்து செய்ய வேண்டும். மதிப்பெண் வழங்க குறிப்பிட்ட நடைமுறையை கொண்டு வர அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரப்பட்டுள்ளது.  இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது...

தமிழ்நாடு 16-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரில் பல்வேறு புதிய அறிவிப்புகள் -ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உரையின் முழு விவரம்...

 


தமிழகத்தில் 16-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடா் திங்கள்கிழமை காலை 10 மணியளவில் தொடங்கியது.


சட்டப் பேரவைத் தோ்தலுக்கு பிறகு நடைபெறும் புதிய பேரவையின் முதல் கூட்டத்தை ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றி தொடக்கி வைத்தார்.


முன்னதாக பேரவைக்கு வந்த ஆளுநரை பேரவைத் தலைவா் மு.அப்பாவு, சட்டப் பேரவைச் செயலாளா் கி.சீனிவாசன் உள்ளிட்டோா் வரவேற்றனர்.



இதன் பிறகு தமிழில் பேசி தமது உரையை ஆளுநர் புரோஹித் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து அவர் ஆங்கிலத்தில் உரையாற்றி வருகிறார்.


அப்போது அவர் பேசியதாவது, தமிழ் இனிமையான மொழி. எளிமையான வாழ்க்கை வாழுங்கள். தமிழை இந்திய அலுவல் மொழியாக்க வலியுறுத்தப்படும்.


தமிழகம் முழுவதும் உழவர் சந்தைகள் மீண்டும் அமைக்கப்படும். நீட் தேர்வை ரத்து செய்ய சட்ட முன் வடிவு கொண்டுவரப்படும். அதனைத்தொடர்ந்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்படும்.

சிங்காரச் சென்னை 2.0 திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்


தகுதி வாய்ந்தவர்களுக்கு 15 நாள்களுக்குள் ரேஷன் அட்டை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்


கரோனா மூன்றாவது அலையை சமாளிக்க போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். 


கர்நாடக அரசால் திட்டமிடப்பட்டுள்ள மேக்கேதாட்டு அணைத் திட்டத்தை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும். 



மாவட்டம் தோறும் பணிபுரியும் மகளிருக்காக விடுதிகள் அமைக்கப்படும்.


முன்னாள் முதல்வர் கருணாநிதியால் கொண்டு வரப்பட்ட உழவர் சந்தை திட்டம் மீண்டும் உருவாக்கப்படும். தமிழகம் முழுவதும் மீண்டும் உழவர் சந்தைகள் அமைக்கப்படும் என்று ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் கூறியுள்ளார்.


மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு அரசு முக்கியத்துவம் அளிக்கும்.



தமிழகத்தில் சமூக நீதியை பாதுகாக்கும் வகையில், 69 சதவீத இட ஒதுக்கீட்டை தொடர்ந்து அமல்படுத்துவோம்.


மக்கள் தொகைக்கு ஏற்ப சென்னை  மாநகராட்யின் எல்லை விரிவாக்கப்படும்.


தமிழக நிதிநிலை அறிக்கை குறித்து ஜூலை  மாதத்தில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.


முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட உழவர் சந்தைகளுக்கு புத்துயிர் அளிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் உழவர் சந்தைகள் அமைக்கப்படும்-ஆளுநர். 

100 ஆண்டுகளை கடந்து நிற்கும் தமிழ்நாட்டின் இடஒதுக்கீட்டுக் கொள்கை காலத்தை வென்று சமூகநீதியை உறுதி செய்துள்ளது.

தமிழ்நாட்டில் வழங்கப்படும் 69 சதவீத இட ஒதுக்கீடு தொடர்ந்து பாதுகாக்கப்படும்-ஆளுநர்.

மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்னைகளில் தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாத்திட அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும்.

விவசாயிகள் நலனை பாதுகாக்க,  வேளாண் உற்பத்தியை பெருக்க,   ஆண்டுதோறும் வேளாண் துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய சட்ட முன்வடிவு கொண்டு வரப்படும்- ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.

நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை ஜூலை மாதத்தில் வெளியிடப்படும்; மாநிலத்தின் நிதிநிலை குறித்த முழுமையான விவரம் பொதுமக்களுக்கு இதன் மூலம் தெரியவரும்.




ரூ2.10 லட்சம் ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ4,000 வழங்கப்பட்டுள்ளது.

கிங் ஆராய்ச்சி வளாகத்தில் ரூ250 கோடியில் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை.

மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மீதான புகாரை விசாரிக்கும் லோக் ஆயுக்தாவுக்கு உரிய அதிகாரம் வழங்குவோம்.

கவச உடை அணிந்து கொரோனா நோயாளிகளை பார்வையிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் பாராட்டு.

தமிழ்நாட்டுக்கான மத்திய அரசின் கொரோனா தடுப்பூசிகள் போதுமானதாக இல்லை- ஆளுநர்

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் மூலம் 63,500 மனுக்கள் மீது தீர்வு.

கர்நாடகாவின் மேகதாது அணை திட்டத்தை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்- ஆளுநர் பன்வாரிலால்.
சென்னை மாநகர கட்டமைப்பை உயர்த்த 'சிங்கார சென்னை 2.0' திட்டம் கொண்டுவரப்படும்-ஆளுநர் உரை.

தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை வகுக்க நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன் தலைமையில் குழு அமைக்கப்படும்.



தமிழ் வழியில் பயின்றவர்களுக்கும் அரசு பள்ளிகளில் பயின்றவர்களுக்கும் அரசு பதவிகளுக்கான வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படும்;  அதை இந்த அரசு உறுதி செய்யும்.

பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை-கன்னியாகுமரி தொழில் பெருவழியில் புதிய தொழில் நிறுவனங்கள் கொண்டுவர நடவடிக்கை.

காவிரி- குண்டாறு உள்ளிட்ட நதிநீர் இணைப்பு திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்துவோம்.

அரசின் மேற்ப்பார்வையில் கிராமப்புற சந்தைகள், வாகனங்களில் காய்கறி விற்பனை செய்தல் விரிவாக்கம் செய்யப்படும்.

ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்ற அண்ணாவின் பொன்மொழிக்கு ஏற்ப திமுக அரசு செயல்பட்டு வருகிறது.

தமிழை இந்திய அலுவல் மொழியாக ஆக்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து பாடுபடும்-ஆளுநர் பன்வாரிலால்புரோகித்.


கொரோனா தொற்று தீவிரம் குறைந்தவுடன் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்-ஆளுநர் உரை.

மதுரவாயல் - சென்னை துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் விரிவுபடுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசுப் பணிகளில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான நிரப்பப் படாத காலியிடங்கள் சிறப்பு நியமனங்கள் மூலம் நிரப்பப்படும்.

திருநங்கைகளின் வாழ்க்கையை வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், வேலைவாய்ப்பு பெறுவதற்கும், தொழில் தொடங்குவதற்கும்  ஏற்ற வகையில் திறன் பயிற்சி அளிக்கப்படும்.

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை மீட்டெடுக்க தொழிலதிபர்கள், நிதித்துறை வல்லுநர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும்.

கோயில்களின் நிதி, நிலங்கள் மற்றும் சொத்துக்கள் பாதுகாக்கப்படும்.






புதிய ரேசன் அட்டை விண்ணப்பித்தால் 15 நாட்களில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.

மதுரையில் ரூ70 கோடியில் கலைஞர் நூலகம் அமைக்கப்படும்.

தமிழகத்தில் தடையற்ற மின்சாரம் வழங்க அரசு உறுதியாக உள்ளது.

வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

பெரிய நகரங்களின் புறநகர் பகுதிகளில் துணை நகரங்கள் உருவாக்கப்படும்.

3 விவசாய சட்டங்களை ரத்து செய்ய சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும்- ஆளுநர் பன்வாரிலால்.



பேரவை கூட்டத் தொடரில் பங்கேற்க வந்த ஆளுநரை, பேரவைத் தலைவா் மு.அப்பாவு, சட்டப் பேரவைச் செயலாளா் கி.சீனிவாசன் உள்ளிட்டோா் வரவேற்றனர். ஆளுநா் தனது உரையை ஆங்கிலத்தில் வாசித்தது வருகிறார். அதன் பிறகு, அதனை தமிழில் பேரவைத் தலைவா் அப்பாவு வாசிப்பாா்.



கூட்டத் தொடா்: ஆளுநா் உரை நிறைவடைந்ததும், பேரவைக் கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து விவாதிக்க அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் பேரவைக் கூட்டத் தொடா் நடைபெறும் நாள்கள் இறுதி செய்யப்படும். செவ்வாய்க்கிழமை (ஜூன் 22) முதல் பேரவைக் கூட்டம் தொடா்ந்து நடைபெறும். வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 25) வரை கூட்டத் தொடா் நடக்க வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது.



இந்த கூட்டத் தொடரில் ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் முன்மொழியப்பட்டு அதன் மீது பேரவை உறுப்பினா்கள் உரையாற்றுவா். பேரவையில் உள்ள கட்சி உறுப்பினா்களின் எண்ணிக்கைக்கு ஏற்றாற்போன்று, அவையில் உறுப்பினா்களுக்கு பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படும்.



16-ஆவது சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடா் என்பதால், கேள்வி நேரம் நடைபெற வாய்ப்பில்லை என்று பேரவைத் தலைவா் மு.அப்பாவு ஏற்கெனவே தெரிவித்திருந்தாா். உறுப்பினா்களிடம் இருந்து கேள்விகளைப் பெற்று அதனை துறைகளுக்கு அனுப்பி பதில்களைப் பெற காலம் தேவைப்படுவதால், கேள்வி நேரம் நடைபெறுவது கேள்விக்குறியே என அவா் கூறியிருந்தாா். எனவே, தினமும் பேரவைக் கூட்டத் தொடா் தொடங்கியதுமே ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான விவாதங்களே நடைபெறும்.


முக்கிய பிரச்னைகளில் தீா்மானம்: 

தமிழகத்தின் முக்கிய பிரச்னைகள் தொடா்பாக, சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்டும் கா்நாடக அரசின் முயற்சி, நீட் தோ்வு, ஏழு போ் விடுதலை, செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி மையத்தை செயலாக்கத்துக்குக் கொண்டு வருவது போன்ற பிரச்னைகளில் மத்திய அரசை வலியுறுத்தி தமிழக அரசால் தீா்மானங்கள் கொண்டு வரப்பட உள்ளன. இந்தத் தீா்மானங்கள் குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்பட உள்ளன.





>>> தமிழ்நாடு 16-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரில் பல்வேறு புதிய அறிவிப்புகள் - ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உரையின் முழு விவரம்...


துணை மருத்துவப் பயிற்சிகளுக்கான சேர்க்கை அறிவிப்பு...

 துணை மருத்துவப் பயிற்சிகளுக்கான சேர்க்கை அறிவிப்பு...


📌Bsc Optometry


📌Bsc Nursing


📌B Pharm


📌B.sc Physician Assistant


📌B.sc Operation theatre and Anesthesia Technology


📌DGNM -Diploma in general Nursing and midwifery


விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்

15.08.2021







தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் -Admission Notification...



 Tamilnadu Central University -Admission Notification...

மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பாக மத்திய அரசால் மாநிலத்துக்கு ஒன்றென   "மத்திய பல்கலை கழகம்" என்ற பெயரிலேயே பதிமூன்று பல்கலை கழகங்கள் (சென்ட்ரல் யுனிவர்ஸிட்டிகள்) நடத்தப்பட்டு வருகின்றன.


இது போக, அஸ்ஸாம் பல்கலைகழகம், சில்சார் அஸ்ஸாம் மாநிலம்,  பாபா குலாம் ஷா பாதுஷா பல்கலை கழகம் ராஜோரி, ஜம்மு காஷ்மீர் மாநிலம், பெங்களூரு டாக்டர் அம்பேத்கார் ஸ்கூல் ஆஃப் எக்கானமிக்ஸ் யூனிவர்ஸிட்டி,  காலிக்கோட் பல்கலை கழகம் பேரம்பூர் ஒடிஸா மாநிலம் சர்தார் படேல் யூனிவர்ஸிட்டி ஆஃப் போலீஸ் செக்யூரிட்டி மற்றும் கிரிமினல் ஜஸ்டிஸ் ஜோத்பூர் என பிற ஐந்து யூனிவர்ஸிட்டிகளும் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் நடத்தப்படுகின்றன.


பொதுவாக இந்த  பல்கலைகழகங்களைப் பற்றிய விவரங்கள் தமிழ்நாட்டில் நிறைய மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தெரியவே இல்லை.  தமிழ்நாட்டில் இந்த பல்கலைகழகம் திருவாரூர் அருகே இருக்கிறது. இந்த பல்கலைகழகம் ஒவ்வொரு வருடமும் இருநூறு மாணவர்களுக்கு இண்டக்ரேட்டட் கோர்ஸூகளுக்கான அட்மிஷன் தருகிறது. Integrated MSc (Chemistry, Physics, Maths , Life Sciences) , Integrated MA ECONOMICS.  இது போக மாஸ்டர்ஸ் டிகிரி கோர்ஸ்களும் எம்பிஏ கோர்ஸுகளும் பிஎச்டி கோர்ஸ்களும் தனித்தனியே நடத்தப்படுகின்றன.


இங்கே படிக்கும் மாணவர்களில் பேர் பாதி பேர் கேரளாவைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். மீதிப்பேரில் மற்ற மாநிலத்தவர்கள் இருக்கிறார்கள் தமிழ்நாடு உட்பட.


ஒரு செமஸ்டருக்கு பீஸ் என்று பார்த்தால் முவாயிரத்திலிருந்து எட்டாயிரத்துக்குள் வருகிறது. இது போக ஆண்கள் பெண்களுக்கு  தனித்தனி ஹாஸ்டல் வசதியும் இருக்கிறது. ஹாஸ்டல் கட்டணங்களும் மிக மிக குறைவே.


ஆனால் இப்படி ஒரு கல்வி நிறுவனம் இருப்பது தமிழ்நாட்டில் நிறைய பெற்றோர்களுக்கு மாணாக்கர்களுக்கு தெரியவே இல்லை என்பது வருத்தத்துக்குரிய விசயம்.


எப்படி இந்த பல்கலை கழகங்களில் சேர்ந்து படிப்பது...


18 மத்திய பல்கலை கழகங்ளில் எந்த பல்கலைகழகத்திலும் வேண்டுமானாலும் சேர்ந்து படிக்க ஒட்டு மொத்தமாக ஒரே ஒரு நுழைவுத் தேர்வு தான் நடத்தப்படுகின்றது.  cucetexam. Central University common entrance exam.


+2 முடித்து அறுபது  சதவீத மதிப்பெண் பெற்றிருந்தாலே போதுமானது. நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு  கவுன்ஸிலிங் மூலம் மாணாக்கர்களின் விருப்பத் தேர்வுகளுக்கு தக்க அட்மிஷன் வழங்கபடுகின்றன.


நேற்று முதல் இந்த தேர்வுக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

https://cutn.ac.in


மேலும் எல்லா விவரங்களும் இந்த தளத்தில் இருக்கின்றன. எந்தெந்த பல்கலை கழகங்களில் என்னென்ன கோர்ஸூகள் நடத்துகிறார்கள் என்பதை அறிய அந்தந்த பல்கலை கழகத்தின் இணைய தளத்தில் சென்று பார்க்கலாம்.  பல்கலை கழகங்களின் பெயர்களும் இணைய தள முகவரியுடன் மேற் சொன்ன தளத்திலேயே விவரங்கள் பெற்றுக் கொள்ளலாம்.


 https://cutn.ac.in/events/admissions-2021-2022/

தமிழ்நாட்டில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்யும் நீதிபதி A.K.ராஜன் தலைமையிலான குழுவிற்கு 2016 முதல் 2021 வரையில் பயின்று தேர்ச்சி பெற்ற +2 மாணவர்களின் முழு விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு...

 


தமிழ்நாட்டில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்யும் நீதிபதி A.K.ராஜன் தலைமையிலான குழுவிற்கு 2016 முதல் 2021 வரையில் பயின்று தேர்ச்சி பெற்ற +2 மாணவர்களின் முழு விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 404/ அ/ 2021, நாள்: 18-06-2021...


>>> பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 404/ அ/ 2021, நாள்: 18-06-2021...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Joint Director Mr. Pon Kumar's speech was of very low quality - Teachers' Fedaration condemned

முறைசாராக் கல்வி இணை இயக்குநர் திரு.பொன்.குமார் அவர்களின் பேச்சு மிகவும் தரம் தாழ்ந்தது - ஆசிரியர் கூட்டணி கண்டனம்  Joint Director Mr. Pon K...