கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பிளஸ் 2 தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு ஆகஸ்டில் தேர்வு - CBSE...



 பிளஸ் 2 மாணவர்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் வழங்கப்படும் மதிப்பெண் மதிப்பீட்டு முறையில் திருப்தி இல்லாதவர்களுக்கு, ஆக., 15 - செப்., 15க்குள், 'இம்ப்ரூவ்மென்ட்' எனப்படும், மதிப்பெண் அதிகரிப்பதற்கான தேர்வு நடத்தப்படும்' என, உச்ச நீதிமன்றத்தில் சி.பி.எஸ்.இ., தெரிவித்து உள்ளது.



கொரோனா இரண்டாம் அலை காரணமாக, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின், பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை மத்திய அரசு ரத்து செய்தது. 'வெயிட்டேஜ்'பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண்களை கணக்கிடும் முறை குறித்து ஆய்வு செய்ய, 13 பேர் அடங்கிய குழுவை, சி.பி.எஸ்.இ., அமைத்தது.இந்த குழு உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் அறிக்கை தாக்கல் செய்தது. அதில் கூறப்பட்டிருந்ததாவது: பிளஸ் 2 மாணவர்களுக்கு 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, பிளஸ் 1 இறுதி தேர்வு மற்றும் பிளஸ் 2வில் யூனிட் தேர்வு, பருவ தேர்வு, மாதிரி பொதுத் தேர்வுகளில், அவர்கள் பெற்ற மதிப்பெண்கள், 30:30:40 என்ற விகிதாச்சார அடிப்படையில் கணக்கிடப்பட்டு, 'வெயிட்டேஜ்' முறையில் மதிப்பெண்கள் வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.



இதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. இதையடுத்து, பள்ளி முதல்வர்கள் தலைமையில் ஐந்து உறுப்பினர்களை உடைய கமிட்டியை உருவாக்கி, மதிப்பெண் மதிப்பீட்டு பணிகளை துவக்கும்படி அனைத்து பள்ளிகளுக்கும் சி.பி.எஸ்.இ., உத்தரவிட்டு உள்ளது.பள்ளிகள் மதிப்பீடு செய்து வழங்கும் மதிப்பெண்களை பதிவேற்றம் செய்ய, சி.பி.எஸ்.இ., உருவாக்கியுள்ள இணையதளம் நேற்று முதல் செயல்பாட்டுக்கு வந்தது. இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் மதிப்பெண்களை, அடுத்த மாதம் 31ல் சி.பி.எஸ்.இ., வெளியிடும்.



இந்நிலையில், சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் மனு தாக்கல் செய்தனர்.இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, சி.பி.எஸ்.இ., தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் விபரம்: பிளஸ் 2 மாணவர்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் வழங்கப்படும் மதிப்பெண்களில் திருப்தி இல்லாத மாணவர்களுக்கு, இம்ப்ரூவ்மென்ட் எனப்படும், மதிப்பெண் அதிகரிப்பதற்கான தேர்வு நடத்தப்படும்.கொரோனா தொற்று பரவலின் நிலையை பொறுத்து இத்தேர்வு நடத்தப்படும். தற்ேபாதைய நிலவரப்படி, ஆக., 15 - செப்., 15க்குள் இத்தேர்வு நடத்தப்பட வாய்ப்புள்ளது.இந்த தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள், cbse.nic.in இணையதளம் வாயிலாக பதிவு செய்ய வேண்டும். இந்த தேர்வில் பெறும் மதிப்பெண்கள், இறுதி மதிப்பெண்களாக கருதப்படும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மாணவர்களுக்கு படிப்படியாக பாடப்புத்தகம் விநியோகம் - பெற்றோரை அழைத்து வழங்க ஏற்பாடு...

 கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முடிந்த கல்வியாண்டில் பொதுத்தேர்வுகள் நடத்தப்படவில்லை. 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களும் ஆல்பாஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்று தயாரித்து வழங்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனிடையே புதிய கல்வியாண்டில் பிளஸ்2 மாணவர்களுக்கும் பிற மாணவர்களுக்கும் கல்வி தொலைக்காட்சி மூலம் பாடம் கற்பிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக தினமும் காலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை அரைமணி நேரத்திற்கு ஒரு முறை என வகுப்பு வாரியாக பாடங்களுக்கு அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளன.


இந்த அட்டவணைப்படி சம்பந்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் தொலைக்காட்சி மூலமும் தங்கள் பாடங்களை கற்கலாம். ஆசிரியர்களும் அவர்களது வகுப்பு நேரத்தில் இந்த தொலைக்காட்சி கல்வியை பார்வையிட்டு தங்களது மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தொலைபேசி மூலம் விளக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


இதனிடையே மாணவர்களுக்கு தேவையான பாடப்புத்தகங்கள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பும் பணி கடந்த வாரம் தொடங்கியது. இந்த வாரம் முதல் மாணவர்களுக்கு தினமும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பெற்றோரை மட்டும் பள்ளிக்கு அழைத்து பாடப்புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு முன்னுரிமை அளித்து வழங்கப்படும். தொடர்ந்து பிற வகுப்பு மாணவர்களுக்கும் புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.



1200 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 200 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கு 01.06.2021 முதல் மூன்று மாதங்களுக்கான ஊதிய நீட்டிப்பு ஆணை...


 1200 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 200 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கு 01.06.2021 முதல் மூன்று மாதங்களுக்கான ஊதிய நீட்டிப்பு ஆணை...





675 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 01.06.2021 முதல் மூன்று மாதங்களுக்கான ஊதிய நீட்டிப்பு ஆணை...

 


675 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 01.06.2021 முதல் மூன்று மாதங்களுக்கான ஊதிய நீட்டிப்பு ஆணை (Proceedings of the Commissioner of School Education, R.c.No.021972/ L/ E3/ 2021, Dated: 17-06-2021)...


>>> Proceedings of the Commissioner of School Education, R.c.No.021972/ L/ E3/ 2021, Dated: 17-06-2021....



கல்வி முறையை மேம்படுத்துதல் மற்றும் KALVI TV ஒளிபரப்பு - பாடப்புத்தகங்கள் வழங்குதல் குறித்தும் அறிவுரைகள் - தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள் 21.06.2021...

 


கல்வி முறையை மேம்படுத்துதல் மற்றும் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு - பாடப்புத்தகங்கள் வழங்குதல் குறித்தும் அறிவுரைகள் - தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள் ந.க.எண்: 06681/ கே1/ 2020, நாள்: 21-06-2021, கல்வி தொலைக்காட்சி மற்றும் தனியார் தொலைக்காட்சிகளில் வகுப்பு மற்றும் பாடவாரியாக ஒளிபரப்பாகும் கால அட்டவணை...


>>> தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள் ந.க.எண்: 06681/ கே1/ 2020, நாள்: 21-06-2021 கல்வி தொலைக்காட்சி மற்றும் தனியார் தொலைக்காட்சிகளில் வகுப்பு மற்றும் பாடவாரியாக ஒளிபரப்பாகும் கால அட்டவணை...


>>> கல்வி தொலைக்காட்சி - தெளிவான கால அட்டவணை (2021-22) வகுப்புகள் 1-12 (PDF File)...



இன்றைய (22-06-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஜூன் 22, 2021



 

உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் சிறு சிறு உபாதைகள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான பணிகளில் நிதானம் வேண்டும். எதிர்பாராத பயணங்களின் மூலம் விரயங்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் பொறுமையுடன் செயல்படுவது நன்மையளிக்கும். ஆடம்பர செலவுகளை குறைப்பது சேமிப்பை மேம்படுத்தும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்



அஸ்வினி : உபாதைகள் உண்டாகும்.


பரணி : நிதானம் வேண்டும்.


கிருத்திகை : செலவுகளை குறைக்கவும்.

---------------------------------------




ரிஷபம்

ஜூன் 22, 2021



நண்பர்களின் அறிமுகம் மற்றும் உதவிகளின் மூலம் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். வெளிவட்டாரங்களில் உங்களின் மீதான மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். கல்வி சார்ந்த பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். புதிய தொழில் தொடங்குவதற்கான எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விவகாரங்களில் லாபம் மேம்படும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கைகூடி வரும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.


ரோகிணி : எண்ணங்கள் ஈடேறும்.


மிருகசீரிஷம் : லாபம் மேம்படும்.

---------------------------------------




மிதுனம்

ஜூன் 22, 2021



இழுபறியாக இருந்துவந்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். வாழ்க்கைத்துணை வழியில் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். திறமைக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் சிலருக்கு சாதகமாகும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும். அரசு தொடர்பான காரியங்களில் மேன்மை உண்டாகும். வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளின் மூலம் லாபம் மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



மிருகசீரிஷம் : இழுபறிகள் நீங்கும்.


திருவாதிரை : மேன்மை உண்டாகும்.


புனர்பூசம் : எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.

---------------------------------------




கடகம்

ஜூன் 22, 2021



மனதில் நினைத்த காரியங்கள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் படிப்படியாக குறையும். தனவரவுகளின் மூலம் மேன்மை உண்டாகும். வெளிவட்டாரங்களில் மதிப்புகள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு



புனர்பூசம் : எண்ணங்கள் நிறைவேறும்.


பூசம் : மாற்றமான நாள்.


ஆயில்யம் : மதிப்புகள் அதிகரிக்கும்.

---------------------------------------




சிம்மம்

ஜூன் 22, 2021



நெருக்கமானவர்களுடன் வீண் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். பிரபலமானவர்களின் அறிமுகத்தின் மூலம் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் இருக்க வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள் 



மகம் : கருத்து வேறுபாடுகள் மறையும்.


பூரம் : விழிப்புணர்வு வேண்டும்.


உத்திரம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.

---------------------------------------




கன்னி

ஜூன் 22, 2021



செய்யும் முயற்சிகளில் முன்னேற்றமான பலன்கள் உண்டாகும். மனதில் புதிய நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். நண்பர்களின் உதவிகள் மூலம் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு திருப்தியை ஏற்படுத்தும். உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



உத்திரம் : முன்னேற்றமான நாள்.


அஸ்தம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.


சித்திரை : அனுகூலம் உண்டாகும்.

---------------------------------------




துலாம்

ஜூன் 22, 2021



தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். குடும்ப உறுப்பினர்களிடம் ஆரோக்கியமான விவாதங்கள் ஏற்பட்டு மறையும். வாகனப் பயணங்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் அமையும். வேகத்தை விட விவேகத்தை கடைபிடிப்பது நன்மையளிக்கும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவமும், தைரியமும் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை 



சித்திரை : நெருக்கடிகள் குறையும். 


சுவாதி : விவேகம் வேண்டும்.


விசாகம் : வாய்ப்புகள் உண்டாகும்.

---------------------------------------




விருச்சிகம்

ஜூன் 22, 2021



வழக்குகள் தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். உறவினர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் அமையும். வீட்டிற்கு தேவையான புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதுவிதமான சிந்தனைகள் மனதில் மேம்படும். உத்தியோகத்தில் திறமைக்கேற்ற பாராட்டும், அங்கீகாரமும் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



விசாகம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


அனுஷம் : அனுகூலமான நாள்.


கேட்டை : அங்கீகாரம் கிடைக்கும்.

---------------------------------------




தனுசு

ஜூன் 22, 2021



குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வாக்கு சாதுர்யத்தின் மூலம் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். கல்வி தொடர்பான செயல்பாடுகளில் சிறு சிறு மாற்றங்களின் மூலம் முன்னேற்றம் ஏற்படும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



மூலம் : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.


பூராடம் : ஆர்வம் அதிகரிக்கும்.


உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------




மகரம்

ஜூன் 22, 2021



நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு புதுவிதமான மகிழ்ச்சியையும், புத்துணர்ச்சியும் ஏற்படுத்தும். மனதில் இருந்துவந்த குழப்பங்களுக்கு தெளிவும், புரிதலும் ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். தானியம் தொடர்பான வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பொருளாதாரம் தொடர்பான விஷயத்தில் குடும்ப நபர்களின் உதவிகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



உத்திராடம் : புத்துணர்ச்சியான நாள்.


திருவோணம் : புரிதல் ஏற்படும்.


அவிட்டம் : நம்பிக்கை அதிகரிக்கும்.

---------------------------------------




கும்பம்

ஜூன் 22, 2021



குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். எதிர்பாராத சில இடமாற்றங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். ஆடம்பரப் பொருட்களின் மீதான ஆசைகள் அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பான பணிகளில் முதலீடுகளை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். சபை தொடர்பான பணிகளில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : அடர்சிவப்பு 



அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.


சதயம் : அனுபவம் கிடைக்கும்.


பூரட்டாதி : ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

---------------------------------------




மீனம்

ஜூன் 22, 2021



தந்தையின் ஆரோக்கியம் சம்பந்தமான விஷயங்களில் கவனம் வேண்டும். சேமிப்புகளை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். தொழிலில் அபிவிருத்திக்கான முயற்சிகள் மற்றும் அதற்கான ஆலோசனைகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். தற்பெருமை சார்ந்த எண்ணங்களை குறைத்துக்கொள்வதன் மூலம் உங்களின் மீதான நம்பிக்கை மேம்படும். அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



பூரட்டாதி : கவனம் வேண்டும்.


உத்திரட்டாதி : கருத்து வேறுபாடுகள் குறையும்.


ரேவதி : நம்பிக்கை மேம்படும்.

---------------------------------------


தமிழ்நாட்டில் பள்ளி குழந்தைகளின் இணையவழி வகுப்புகளுக்கான நெறிமுறைகள் - மாணவர் மனசு பெட்டி - அரசாணை எண்: 83, நாள்: 17-06-2022 வெளியீடு (G.O. (1D) No.83, Dated: 17-06-2021)...

தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு:


ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர் பாதுகாப்பு குழு உருவாக்கப்படும்.  


குறைகளை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்படும். 


குறைகளை தீர்க்க ஹெல்ப் லைன் எண், மின்னஞ்சல் முகவரி உருவாக்கப்படும்.


ஆன்லைன் வகுப்பில் கண்ணியமான உடை அணிய வேண்டும்.


ஆன்லைன் வகுப்புகளை முழுவதுமாக வீடியோ பதிவு செய்ய வேண்டும்.


ஆசிரியர்களுக்கு போக்சோ சட்டம் பற்றிய புரிதலை ஏற்படுத்தும் வகையில் பயிற்சி வகுப்புகள்.


>>> Click here to Download G.O. (1D) No.83, Dated: 17-06-2021...


>>> தமிழ்நாட்டில் பள்ளி குழந்தைகளின் இணையவழி வகுப்புகளுக்கான நெறிமுறைகள் (தமிழில்)...


பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பள்ளி அளவில் குழு அமைக்கப்பட்ட வேண்டும். குழுவில் பள்ளி முதல்வர், 2 ஆசிரியர்கள், 2 பெற்றோர், 2 நிர்வாகிகள் இடம்பெற வேண்டும். 


பள்ளிகள் அமைக்கும் குழுவில் பள்ளிசாராத நபர் ஒருவர் இடம்பெற வேண்டும். அனைத்து ஆன்லைன் வகுப்புகளும் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும். அவ்வப்போது ஆன்லைன் வகுப்பு வீடியோக்கள் ஆய்வு செய்யப்பட வேண்டும். மாணவர்கள் புகார் அளிக்க வசதியாக பள்ளிகளில் பெட்டிகள் வைக்கப்பட்ட வேண்டும்.


பள்ளிக் குழந்தைகளைப்பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாப்பது குறித்த வழிகாட்டுதல் மற்றும் இணையவழிவகுப்புகளுக்கான நெறிமுறைகள் :


தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக்கல்வி வாரியங்களைச் சார்ந்த ( Education Boards ) அனைத்துப் பள்ளிகளுக்கும் இந்நெறிமுறைகள் பொருந்தும்.


மாணவர் பாதுகாப்பைத் தொடர்ச்சியாக மேற்பார்வை செய்யவும் , அது சார்ந்த நடவடிக்கைகள் குறித்து மதிப்பீடு செய்யவும் , ஒவ்வொரு பள்ளியிலும் , " மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழு " அமைக்கப்படும்.


இக்குழுவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் , ஆசிரியர் இருவர் , பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் இருவர் , பள்ளி நிருவாக உறுப்பினர் ஒருவர் , ஆசிரியரல்லாத பணியாளர் ஒருவர் மற்றும் தேவைக்கேற்பப் பள்ளி சாரா வெளிநபர் ஒருவர் உறுப்பினர்களாக இருப்பர் .


ஒரு மாத காலத்தில் மாநில அளவில் ஒரு கட்டுப்பாட்டு அறையைப் பள்ளிக்கல்வித்துறை உருவாக்கும். 


அனைத்துத் தரப்பினரும் தங்களது குறைகளை எளிதாகத் தெரிவிக்கும் வகையில் இம்மையத்தில் கட்டணமில்லா நேரடி தொலைபேசி ( Hot Line ) மற்றும் தனிப்பட்ட மின்னஞ்சல் வசதி உருவாக்கப்படும்.


மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழு தங்களுக்கு வரப்பெற்ற எந்த வகையான புகாரையும் உடனடியாக மாநிலக் கட்டுப்பாட்டு அறைக்குத் ( Central Complaint Centre - CCC ) தெரியப்படுத்தவேண்டும் . . இந்த மையம் புகார்களைப் பதிவுசெய்வது மட்டுமின்றி , அதுசார்ந்து பின்பற்ற வேண்டிய அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு வழங்கும்.


 இம்மையத்தில் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட பல்துறை வல்லுநர் இருப்பர் . இம்மையத்தின் தகவல் பரிமாற்றங்கள் அனைத்தும் மந்தணத்தன்மையுடன் பாதுகாக்கப்படும்.


. பள்ளிகளைச் சார்ந்த அனைத்து அங்கத்தினருக்கும் போக்சோ ( POCSO ) சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாலியல் ரீதியான குற்றங்கள் குறித்த முழு புரிதல் உண்டாகும் வகையில் வருடந்தோறும் பயிற்சிகள் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.


இது தொடர்பான விழிப்புணர்வு கட்டகம் ( orientation module ) பள்ளிக்கல்வித்துறையால் உருவாக்கி வழங்கப்படும்.


பள்ளிகளில் பாதுகாப்பை மேம்படுத்தவும் , சுயத் தணிக்கை ( Self - audit ) செய்வதை உறுதி செய்யவும் பள்ளிக்கல்வித்துறையால் கட்டகம் ( Module ) உருவாக்கப்பட்டு வழங்கப்படும் . . மற்றும் இணையவழிக் கற்றல் - கற்பித்தல் நிகழ்வில் ஆசிரியர்கள் மாணவர்கள் வகுப்பறைச் சூழலுக்கேற்றவாறு கண்ணியமாக உடை அணியவேண்டும்.


இணையவழிக் கற்றல் - கற்பித்தல் நிகழ்வுகளை முழுமையாகப் பதிவு செய்வதோடு , அப்பதிவுகளைக் குறிப்பிட்ட இடைவெளியில் மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழுவைச் சேர்ந்தவர்கள் தொடர் ஆய்வு செய்யவேண்டும்.


• புகார் மற்றும் மாணவர்களின் கருத்துக்களை எளிதே தெரிவிப்பதற்காகப் பள்ளிவளாகத்தில் பாதுகாப்புப் பெட்டிகள் ( Safety Boxes ) வைக்கப்படும் . மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழு மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களை ஆய்வுசெய்து தக்க நடவடிக்கை எடுக்கும்.


• மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழு , பள்ளியில் பெறப்பட்ட அனைத்துப் புகார்களையும் பதிவு செய்யத் தனியாக ஒரு பதிவேட்டைப் பராமரிக்கும்.


 புகாரானது எந்த முறையில் பெறப்பட்டிருந்தாலும் ( வாய்மொழி உட்பட ) இந்தப் பதிவேட்டில் பதியப்பட வேண்டும் . . அனைத்துப் பள்ளிகளிலும் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 15 முதல் நவம்பர் 22 வரை ' குழந்தைகள் துன்புறுத்தலைத் தடுக்கும் வாரம் ' என விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.






இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Attention Sabarimala Devotees - Devasam Board Notice

  சபரிமலை பக்தர்கள் கவனத்துக்கு - தேவசம் போர்டு அறிவிப்பு சபரிமலை செல்லும் பக்தர்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைக...