கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கல்வித் தொலைக்காட்சி வாயிலாகவே பாடங்கள் கற்பிக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்...

 ''ஐ.சி.எம்.ஆர்., வழிக்காட்டல், மருத்துவ வல்லுனர்களின் ஆலோசனைகள் மற்றும் பெற்றோர்களின் கருத்துக்கள் ஆகியவற்றை பெற்று, முதல்வருடன் ஆலோசனை செய்த பின்பு தான், பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும்,'' என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.


திருச்சியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக, வழிகாட்டல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, எஸ்.எஸ்.எல்.சி. பிளஸ் 1 மதிப்பெண்கள் பள்ளிக்கல்வித்துறையிடம் உள்ளது. அதன் அடிப்படையில், விரைவாக பிளஸ் 2 மதிப்பெண் வெளியிடப்படும்.கொரோனா தாக்கம் முழுமையாக கட்டுக்குள் வந்த பின், மாணவர்களுக்கு கேடு ஏற்படாத நாட்களில்தான் பள்ளிகள் திறக்கப்படும். அது வரை கல்வித் தொலைக்காட்சி வாயிலாகவே பாடங்கள் கற்பிக்கப்படும்.


தற்போது, கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது.இருப்பினும், உளவியல் ரீதியாக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் தயக்கம் காட்டுகின்றனர். மூன்றாவது அலை வரும், எனக் கூறுகின்றனர். எனவே,


  ஐ.சி.எம்.ஆர் வழிக்காட்டல், மருத்துவ வல்லுனர்களின் ஆலோசனைகள் மற்றும் பெற்றோர்களின் கருத்துக்கள் ஆகியவற்றை பெற்று, முதல்வருடன் ஆலோசனை செய்த பின், பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.




மின்னணு நூல்களை வாசிக்க உதவும் கருவி - பார்வை திறன் குறைபாடு உடைய மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்...

 மின்னணு நூல்களை வாசிக்க உதவும் கருவி - பார்வை திறன் குறைபாடு உடைய மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்...


மின்னணு வடிவில் உள்ள புத்தகங்கள் மற்றும் பிரெய்லி எழுத்துக்கள் வடிவில் தொடு உணர்வுடன் அறிய உதவும் வாசிக்கும் கருவி பெறுவதற்கு, தகுதிகளுடைய பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


 திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பார்வைத் திறன் குறைபாடு உடைய மாற்றுத் திறனாளிகள் எளிதில் கற்பதற்கு ஏதுவாக மின்னணு வடிவில் உள்ள புத்தகங்களை (இ-புக்) பிரெய்லி எழுத்துக்கள் வடிவில் தொடு உணர்வுடன் அறிய உதவும் வாசிக்கும் கருவி வழங்கும் திட்டத்தின் கீழ், தகுதிகள் உள்ள மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். பார்வைத் திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும். 


இளநிலை கல்விமுடித்தவராக இருக்க வேண்டும். முதுநிலை படிப்பு படிப்பவராகவோ அல்லது டெட், டிஎன்பிஎஸ்சி போன்ற போட்டித் தேர்வுக்கு பயிற்சி பெறுபவராக இருத்தல் வேண்டும். பிரெய்லி எழுத்துக்களை வாசிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். 


ஜூலை 5-ம் தேதிக்குள்.. 

மேற்கண்ட தகுதிகளை உடையபார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் வரும் ஜூலை 5-ம் தேதிக்குள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ளமாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்குமாறு, மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.



பத்தாம் வகுப்பு மதிப்பெண்ணுக்கு முக்கியத்துவம் ஏன்? கல்வித்துறை அமைச்சர் அவர்கள்...


பிளஸ் 2 மதிப்பெண் கணக்கீட்டு முறையில் பத்தாம் வகுப்பு மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்தது ஏன் என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கமளித்துள்ளார். 


சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வி இயக்கக வளாகத்தில் அதிகாரிகளுடன்  சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்ட பின்பு செய்தி யாளர்களிடம் கூறியது: பிளஸ் 2 மதிப்பெண்ணுக்கு மொத்தம் 12 கணக்கீட்டு முறைகள் பரிந்துரைக்கப்பட்டன. அது குறித்து விவாதித்து, இரண்டு முறைகளை முதல்வர், தலைமைச் செயலாளர், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் ஆகியோருக்குச் சமர்ப்பித்தோம். 


அதிலிருந்து ஒரு முறையை இறுதி செய்து, அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பிளஸ் 2 மாணவர்கள் பெருந்தொற்று இல்லாத காலத்தில் நேரடியாக பள்ளிக்குச் சென்று பாடங்களைப் பயின்று, நேரடியாகத் தேர்வை எழுதிப் பெற்ற மதிப்பெண்கள் அவை. அதனால் மட்டுமே பத்தாம் வகுப்பிலிருந்து 50 சதவீத மதிப்பெண்கள் பிளஸ் 2 வகுப்பு மதிப்பெண்ணுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன. 


தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை:

 அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா கையடக்க மடிக்கணினி (டேப்லெட்) வழங்குவது குறித்தும், கல்வி தொலைக்காட்சியை 4 சேனல்களாக விரிவுபடுத்துவது குறித்தும் ஆலோசனை நடை பெற்று வருகிறது என்றார் அவர்.



எல்கேஜி முதல் 8ஆம் வகுப்பு வரை 14 வயதுக்கு உட்பட்ட 1.89 லட்சம் மாணவர்களின் விவரம் சேகரிப்பு...

 எல்கேஜி முதல் 8 ம் வகுப்பு வரை 14 வயதுக்கு உட்பட்ட 1.89 லட்சம் மாணவர்களின் விவரம் சேகரிப்பு. 3வது அலையை தடுக்க பெற்றோர்களுக்கு தடுப்பூசி...



விடுபட்ட மாணவர்களுக்கு விரைவில் லேப்டாப் வழங்கப்படும்...

 விடுபட்ட மாணவர்களுக்கு விரைவில் லேப்டாப் வழங்கப்படும்...



சேவை மனப்பான்மையில் செயல்படும் தனியார் பள்ளிகளுக்கு அரசு துணை நிற்கும்: அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி...



 சேவை மனப்பான்மையில் செயல்படும் தனியார் பள்ளிகளுக்கு அரசு எப்போதும் துணை நிற்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  தெரிவித்தார்.


சென்னையில்  செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, ''கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் நலிவடைந்த பிரிவினருக்கு 25 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகப் பள்ளிகளிடம் இருந்து அறிக்கை கோரியிருக்கிறோம். அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கல்வி சென்று சேரவேண்டும் என்ற அடிப்படையில், தேவைப்படும் மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும் வகையில் அரசின் செயல்பாடுகள் இருக்கும்.


கல்விக் கட்டணத்தைச் செலுத்தாவிட்டாலும் தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்களை அனுமதிக்க வேண்டும். இதுகுறித்த அறிக்கையையும் கேட்டுள்ளோம். அரசின் விதிமுறைகளைப் பள்ளிகள் நடைமுறைப்படுத்த வேண்டுமென்று தெரிவித்துள்ளோம். மாணவர்களுக்காகப் பள்ளி நிர்வாகத்தையும், பள்ளி நிர்வாகங்களுக்காக மாணவர்களையும் நாங்கள் விட்டுக் கொடுப்பதாக இல்லை.


சேவை மனப்பான்மையில் செயல்படும் தனியார் பள்ளிகளுக்கு அரசு எப்போதும் துணை நிற்கும். அதே நேரத்தில் வணிக நோக்கில் செயல்படும் கல்வி நிறுவனங்கள், உதாரணத்திற்குக் கட்டணம் செலுத்தாத மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் அனுமதிக்கப்படாத நிலையை ஏற்படுத்தும் கல்வி நிறுவனங்களுக்கு அரசு எச்சரிக்கை விடுக்கும் தொனியில்தான் செயல்படும்.


கல்விக் கட்டணம் தொடர்பாக 14417 என்ற உதவி எண் மூலம் பள்ளிக் கல்வித்துறைக்கு வரும் புகார்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் முதல் கட்டமாக எச்சரிக்கை விடுக்கப்படும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ’டேப்’ வழங்குவது குறித்த ஆரம்பக்கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன'' என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்

தமிழ்நாட்டில் நீட் நுழைவுத் தேர்வு 100% ரத்து செய்யப்படும் - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்...



தமிழ்நாட்டில் நீட் நுழைவுத் தேர்வு 100% ரத்து செய்யப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார். அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கொரோனா உச்சத்தில் இருந்த காலத்தில் செய்யப்பட்ட அளவிற்கு பரிசோதனைகள் தற்போது செய்யப்படுகின்றன. தினமும் 1.30 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 36வது நாளாக ஒருநாள் கொரோனா மொத்த பாதிப்பு குறைந்து வருகிறது. மேற்கு மண்டலத்தை சேர்ந்த 9 மாவட்ட மருத்துவர்கள் உடன் காணொலியில் ஆலோசிக்கப்பட்டது.



மகப்பேறு பரிசோதனைக்கு வரும் தாய்மார்களுக்கு யோகா, மூச்சுப்பயிற்சி வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார். மேலும், விரும்பிய தேதியில் குழந்தை பிறக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சிசேரியன் செய்வது அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளுக்கு வரும் கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஏற்படுவதற்காக பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



அவசியம் இருந்தால் மட்டுமே சிசேரியன் செய்யப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், விருப்பத்தின் பேரில் சிசேரியன் செய்வது ஏற்கத்தக்கது அல்ல. இதனால் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கும் என்றும், மேலும், சுகப்பிரசவத்தில் குழந்தை பெறுவதற்கு ஊக்குவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் நீட் நுழைவுத் தேர்வு 100% ரத்து செய்யப்படும். மாணவர்கள் பயிற்சிக்கு செல்வதை தடுத்து ஒருவேளை காலதாமதம் ஏற்பட்டால் எதிர்காலம் பாதிக்கப்படும். நீட் எதிர்ப்பு தீர்மானம் குடியரசுத் தலைவருக்கு சென்றால் அது ஒப்புதலோடுதான் திரும்ப வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. (D) No. 278, Dated : 17-12-2024 - TN Govt nominated TRB as the nodal agency for conducting SET

TRB மூலம் பேராசிரியர் தகுதித் தேர்வு (TNSET) - மூன்றாண்டுகள் நடத்துவதற்கான அரசாணை G.O. (D) No. 278, Dated : 17-12-2024 வெளியீடு TAMILNADU St...