கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளியில் சேரும் மாணவருக்கு ரூ.1000 , பெற்றோருக்கு ரூ.10,000 - அரசுப் பள்ளி வித்தியாச முயற்சி...

 பட்டுக்கோட்டை அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் சேரும் மாணவர்களின் பெயர்களில் ஆயிரம் ரூபாய் வைப்புத் தொகையும், குலுக்கலில் பெற்றோருக்கு 10 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையும் வழங்கி, மாணவர்களின் சேர்க்கையை ஆசிரியர்கள் அதிகப்படுத்தி வருகின்றனர்.



தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே ஆலடிக்குமுளையில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளியின் வளர்ச்சிக்கும், மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கவும், முன்னாள் மாணவர்கள், தலைமை ஆசிரியருடன் இணைந்து பல்வேறு முயற்சிகளைச் செய்து வருகின்றனர். அந்த வகையில், 2021–2022 புதிய கல்வியாண்டு மாணவர்கள் சேர்க்கை தொடங்கிய நிலையில், முன்னாள் மாணவர்கள் 10 பேர் தலைமையாசிரியர் சரவணனுடன் இணைந்து, புதிதாகச் சேரும் மாணவர்களுக்குப் பரிசுகளும், சலுகைகளும் வழங்கி அரசுப் பள்ளியில் தங்களின் பிள்ளைகளைச் சேர்க்கும் பெற்றோர்களையும் ஊக்கப்படுத்த வேண்டும் என முடிவு செய்தனர்.


அதற்காக இந்தக் கல்வி ஆண்டில் சேரும் மாணவர்களின் பெயரில், அஞ்சலகத்தில் ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்தும், பெற்றோர்களை ஊக்கப்படுத்தும் விதமாக குலுக்கல் முறையில் 10 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்குவதாக அறிவித்தனர்.


அதன்படி சேர்க்கை தொடங்கிய சில தினங்களில் 14 மாணவர்கள் பள்ளியில் சேர்ந்துள்ளனர். அவர்களின் பெயர்களில், அஞ்சலகத்தில் தொடங்கிய கணக்குப் புத்தகத்தைப் பட்டுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் ஜான்பாக்கியம் செல்வம், தலைமையாசிரியர் சரவணன் மற்றும் கிராம மக்கள் வழங்கி ஊக்கப்படுத்தினர்.


இதுகுறித்துத் தலைமையாசிரியர் சரவணன் கூறுகையில், ''பள்ளி வளாகத்தில் மாணவர்களின் மன அமைதிக்காகவும் சுற்றுச்சூழலுக்காகவும் மரங்கள் வளர்க்கப்படுகின்றன. தேச பக்தியையும், பொது அறிவையும் வளர்த்துக்கொள்ளும் விதமாகத் தலைவர்கள், அறிஞர்கள் படங்கள், அவர்கள் கூறிய கருத்துகள் சுவர் முழுவதும் எழுதப்பட்டுள்ளன.


தற்போது பலரும் தனியார் பள்ளிகளை நோக்கிச் செல்கின்றனர். அவர்களின் கவனத்தை அரசுப் பள்ளியின் பக்கம் திரும்ப வேண்டும் என, பள்ளியின் முன்னாள் மாணவர் வை.கோவிந்தராசு 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளித்தார். நானும் எனது பங்குக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளேன். மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில், பள்ளியில் புதிதாகச் சேரும் அனைத்து மாணவர்களுக்கும் அவர்களின் பெயரில் தலா 1,000 ரூபாய் வீதம் அஞ்சலகத்தில் வைப்பு வைக்கப்படும்.


மேலும், கற்றலுக்குத் தேவையான உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. அத்துடன் புதிதாகச் சேர்ந்த மாணவர்களின் பெற்றோர்களைக் குலுக்கல் முறையில் தேர்வு செய்து முதலிடம் பெறும் நபருக்கு ரூ.10 ஆயிரம், இரண்டாம் இடம் பெறும் நபருக்கு ரூ.5 ஆயிரம், மூன்றாமிடம் பெறும் நபருக்கு ரூ.2,500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.


தொலைதூரத்தில் இருந்து வரும் மாணவர்களுக்கு வாகன வசதி, 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் மாணவர்களுக்கு சிறப்புப் பரிசு, 450-க்கு மேல் மதிப்பெண் பெறும் அனைத்து மாணவர்களுக்கும் 11-ம் வகுப்பில் சேர்வதற்கான கல்விச் செலவு ஆகியவையும் வழங்கப்பட உள்ளன'' என்று தலைமையாசிரியர் சரவணன் தெரிவித்தார்.


8 அல்லது 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் அரசு, தனியார் ITI-களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர விண்ணப்பிக்கலாம்...

 


2021-22ஆம் கல்வி ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரவும் அரசு உதவி பெறும் தொழிற்பயிற்சி நிலையங்கள் (ஐடிஐ) மற்றும் தனியார் ஐடிஐ-களில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரவும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.


இதற்கு 8ஆம் வகுப்பு அல்லது 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தகுதியானவர்கள். அவர்கள் http://skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் ஜூலை 28ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.



இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மாணவர்களுக்கு உதவும் வகையில் மாநிலம் முழுவதும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள்  மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் சேர்க்கை உதவி மையங்கள்  அமைக்கப்பட்டுள்ளன.


இம்மையங்களின் பட்டியல் http://skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


2021-ம் ஆண்டில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர், 9-ம் வகுப்பு மதிப்பெண்களைப் பதிவு செய்ய வேண்டும். அதற்கு முந்தைய ஆண்டில் தேர்ச்சி பெற்றோர், 10-ம் வகுப்பு மதிப்பெண்களைப் பதிவிடவும்.


விண்ணப்பக் கட்டணமாக ரூ.50 தொகையை இணையம் மூலம் செலுத்த வேண்டும்.


மின்னஞ்சல் முகவரி : onlineitiadmission@gmail.com


கூடுதல் விவரங்களுக்கு: 9499055612 / வாட்ஸ்அப் எண் 9499055618


ஆபத்தான 'ஆன்லைன்' வகுப்பு - மரம் ஏறி படிக்கும் மாணவர்கள்...


 மொபைல் போன் சிக்னல் கிடைக்காததால், மரத்தில் ஏறி மாணவர்கள், 'ஆன்லைன்' வகுப்பை கவனிக்கின்றனர்.


நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை ஒன்றியம் முள்ளுக்குறிச்சி அருகே பெரப்பஞ்சோலை, பெரியகோம்பை ஊராட்சிகள் உள்ளன. இங்கு, 20க்கும் மேற்பட்ட மாணவர்கள், கல்லுாரி, பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர். தற்போது ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால், ஆன்லைன் வாயிலாக பாடம் நடத்தப்படுகிறது. பெரப்பஞ்சோலை, பெரியகோம்பையில் மொபைல்போன் டவர்கள் இல்லை. பேசுவதற்கே சரியாக சிக்னல் கிடைக்காது. பாடம் சம்பந்தப்பட்ட வீடியோ, ஆன்லைன் வகுப்புகளை கவனிக்க வேண்டும் என்றால், 5 கி.மீ., துாரம் உள்ள பகுதிக்கு செல்ல வேண்டும்.


இதனால், மாணவர்கள், அந்த கிராமத்தில் உயரமாக உள்ள ஆலமரத்தின் கிளைகள் மீது அமர்ந்து, ஆன்லைன் வகுப்புகளை கவனித்து வருகின்றனர். தினமும் காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை உயிரை பணயம் வைத்து, ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பது, மாணவர்களின் பெற்றோரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஓராண்டாகவே இப்பகுதி மாணவர்கள், ஆலமரத்தில் அமர்ந்து தான் வகுப்புகளை கவனித்து வருகின்றனர். மாணவர்களின் நலன்கருதி, அப்பகுதியில் மொபைல்போன் டவர் அமைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



இன்று வரை KALVI TV YOUTUBE OFFICIAL சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள 2ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலான காணொளிகள் வகுப்பு வாரியாகவும், பாட வாரியாகவும் பிரித்து மாணவர்கள் எளிதில் படிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள PDF Files...

 



🎥 KALVI TV VIDEOS 🎥

  

   அன்பான ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு, இன்றுவரை KALVI TV YOUTUBE OFFICIAL சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்ட 2ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலான காணொளிகள் வகுப்பு வாரியாகவும் பாட வாரியாகவும் பிரித்து மாணவர்கள் எளிதில் படிக்கும் வகையில் PDF file தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள நீல நிற YOUTUBE LINK ஐ தொட்டால் அந்த வகுப்பிற்கான 3 பருவத்திற்குண்டான வீடியோ பாட தொகுப்பு வரும். அதில் தேவையான பாடத் தலைப்பை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும்.


தங்கள் வகுப்பு மாணவர்களுக்கும் தேவையான பிற ஆசிரியர்களுக்கும் பகிருங்கள்...


தொகுப்பு:

G.கார்த்திகேயன், இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அழிஞ்சிவாக்கம், கடம்பத்தூர் ஒன்றியம், திருவள்ளூர் மாவட்டம். 9841049322.


>>> இரண்டாம் வகுப்பு காணொளிகள்...


>>> மூன்றாம் வகுப்பு காணொளிகள்...


>>> நான்காம் வகுப்பு காணொளிகள்...


>>> ஐந்தாம் வகுப்பு காணொளிகள்...


>>> ஆறாம் வகுப்பு காணொளிகள்...


>>> ஏழாம் வகுப்பு காணொளிகள்...


>>> எட்டாம் வகுப்பு காணொளிகள்...


>>> ஒன்பதாம் வகுப்பு காணொளிகள்...


>>> பத்தாம் வகுப்பு காணொளிகள்...



2021-22 ஆம் கல்வியாண்டு - 10 & 12 ஆம் வகுப்புகளுக்கு ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்திற்கான உத்தேச பாடத்திட்டம் (Syllabus) வெளியீடு - தஞ்சாவூர் வருவாய் மாவட்டப் பள்ளிகளுக்கு...

 


2021-22 ஆம் கல்வியாண்டு - 10 & 12 ஆம் வகுப்புகளுக்கு ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்திற்கான உத்தேச பாடத்திட்டம் வெளியீடு - தஞ்சாவூர் வருவாய் மாவட்டப் பள்ளிகளுக்கு...


>>> 10 & 12 ஆம் வகுப்புகளுக்கு ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்திற்கான உத்தேச பாடத்திட்டம்...


முதுகலை ஆசிரியர் - கணினி பயிற்றுநர் நிலை-1 பணியிடங்களை வருகைப் பதிவேட்டில் எந்த முன்னுரிமை அடிப்படையில் எழுதுவது என்பது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட பதில் - பள்ளிக்கல்வி ஆணையரகம், பொதுத் தகவல் வழங்கும் அலுவலர் மற்றும் துணை இயக்குநர் (மின் ஆளுமை) தகவல் அறியும் உரிமைச் சட்டம் கடிதம் ஓ.மு.எண்: 21033, 28011/வி1/இ2/2021, நாள்: 29-06-2021......



 முதுகலை ஆசிரியர் - கணினி பயிற்றுநர் நிலை-1 பணியிடங்களை வருகைப் பதிவேட்டில் எந்த முன்னுரிமை அடிப்படையில் எழுதுவது என்பது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட பதில்...

Thanks to Mr.N.Kannan Sir, PGT, Thanjavur.


>>> பள்ளிக்கல்வி ஆணையரகம், பொதுத் தகவல் வழங்கும் அலுவலர் மற்றும் துணை இயக்குநர் (மின் ஆளுமை) தகவல் அறியும் உரிமைச் சட்டம் கடிதம் ஓ.மு.எண்: 21033, 28011/வி1/இ2/2021, நாள்: 29-06-2021...





இன்றைய (06-07-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்....

மேஷம்

ஜூலை 06, 2021



கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வேலையாட்களின் தன்மைகளையும், அவர்களை பற்றிய புரிதலும் மேம்படும். புதிய ஆபரணங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை வாங்குவது பற்றிய சிந்தனைகள் ஏற்படும். சிறு வியாபாரம் தொடர்பான விஷயங்களில் காரிய வெற்றி உண்டாகும். விவசாயம் தொடர்பான பணிகளில் பாசன வசதிகளின் தன்மையை அறிந்து புதிய முயற்சிகளை மேற்கொள்வது நல்லது.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் 



அஸ்வினி : நெருக்கம் அதிகரிக்கும்.


பரணி : புரிதல் மேம்படும்.


கிருத்திகை : காரிய வெற்றி உண்டாகும்.

---------------------------------------




ரிஷபம்

ஜூலை 06, 2021



தோற்றப்பொலிவு தொடர்பான விஷயங்களில் சிறு சிறு மாற்றங்களை செய்வீர்கள். வாக்கு சாதுர்யத்தின் மூலம் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் கைகூடும். மனை விருத்திக்கான சிந்தனைகள் மனதில் மேம்படும். வாகனம் தொடர்பான விஷயங்களில் விரயங்கள் உண்டாகும். உங்களின் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



கிருத்திகை : மாற்றமான நாள். 


ரோகிணி : முயற்சிகள் கைகூடும்.


மிருகசீரிஷம் : மதிப்புகள் அதிகரிக்கும்.

---------------------------------------




மிதுனம்

ஜூலை 06, 2021



உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றங்களும், சிறு சஞ்சலங்களும் உண்டாகும். மற்றவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வதன் மூலம் தேவையற்ற மனக்கசப்புகளை தவிர்க்க இயலும். எதிர்பாராத செலவுகளின் மூலம் விரயங்கள் ஏற்படும். நினைத்த காரியங்களை செய்து முடிப்பதற்கு அலைச்சல்கள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



மிருகசீரிஷம் : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். 


திருவாதிரை : விரயங்கள் ஏற்படும். 


புனர்பூசம் : அலைச்சல்கள் உண்டாகும்.

---------------------------------------




கடகம்

ஜூலை 06, 2021



உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். செயல்பாடுகளில் ஏற்பட்ட தடைகள் நீங்கி புதிய மாற்றங்கள் பிறக்கும். நெருக்கமானவர்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். இழுபறியாக இருந்துவந்த நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வும், வெற்றியும் கிடைக்கும். மற்றவர்களிடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் அலைச்சல்களுக்கு பின்பு கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



புனர்பூசம் : இன்னல்கள் குறையும்.


பூசம் : மகிழ்ச்சியான நாள்.


ஆயில்யம் : வெற்றி கிடைக்கும்.

---------------------------------------




சிம்மம்

ஜூலை 06, 2021



எந்தவொரு செயலிலும் சோர்வின்றி புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். வெளியூர் தொடர்பான வேலைவாய்ப்புகள் சிலருக்கு சாதகமாக அமையும். பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறைவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். இணையம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். 



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



மகம் : புத்துணர்ச்சியான நாள்.


பூரம் : புரிதல் உண்டாகும்.


உத்திரம் : கவனம் வேண்டும்.

---------------------------------------




கன்னி

ஜூலை 06, 2021



வெளிவட்டாரங்களில் புதிய நபர்களின் அறிமுகமும், வாய்ப்புகளும் உண்டாகும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். அதிகாரம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் சூழ்நிலைக்கேற்ப செயல்படுவது அவசியமாகும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



உத்திரம் : வாய்ப்புகள் உண்டாகும்.


அஸ்தம் : இழுபறிகள் அகலும்.


சித்திரை : அறிமுகம் கிடைக்கும்.

---------------------------------------




துலாம்

ஜூலை 06, 2021



எதிர்பார்த்த சில அங்கீகாரம் காலதாமதமாக கிடைக்கும். மனைவி வழி உறவினர்களிடம் பொறுமையை கையாளவும். அரசு தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் தேவையற்ற செயல்களை தவிர்ப்பது நல்லது. தொழில் தொடர்பான செயல்பாடுகளில் பொறுமையுடன் செயல்படவும். பங்கு வர்த்தகம் தொடர்பான முதலீடுகளில் விழிப்புணர்வு வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



சித்திரை : காலதாமதம் ஏற்படும்.


சுவாதி : பொறுமையுடன் செயல்படவும்.


விசாகம் : விழிப்புணர்வு வேண்டும்.

---------------------------------------




விருச்சிகம்

ஜூலை 06, 2021



சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். ஆராய்ச்சி சார்ந்த எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறைவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உடனிருப்பவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைத்து மனம் மகிழ்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்



விசாகம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


அனுஷம் : ஆதரவான நாள்.


கேட்டை : மனம் மகிழ்வீர்கள். 

---------------------------------------




தனுசு

ஜூலை 06, 2021



குழந்தைகளின் உடல் வளர்ச்சியில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். எதிர்காலம் தொடர்பான மனக்குழப்பங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் மனம்விட்டு பேசுவதன் மூலம் தெளிவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் மற்றும் தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் மேம்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். 



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மூலம் : பிரச்சனைகள் குறையும்.


பூராடம் : தெளிவு ஏற்படும். 


உத்திராடம் : சிந்தனைகள் உண்டாகும். 

---------------------------------------




மகரம்

ஜூலை 06, 2021



நிர்வாகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். உயர்கல்வி தொடர்பான விஷயங்களில் ஆலோசனைகள் கிடைக்கும். இயந்திரம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். தீர்க்கமான சிந்தனைகளின் மூலம் பாராட்டுகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



உத்திராடம் : முன்னேற்றம் ஏற்படும்.


திருவோணம் : ஆலோசனைகள் கிடைக்கும்.


அவிட்டம் : மேன்மையான நாள்.

---------------------------------------




கும்பம்

ஜூலை 06, 2021



சந்தேக உணர்வுகளை தவிர்த்து சரியான முடிவுகளை எடுப்பீர்கள். எதிர்பாலின மக்களின் மூலம் ஏற்பட்டிருந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். புதிய வீடு, மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வாசனை திரவியம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு லாபம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



அவிட்டம் : தீர்வு கிடைக்கும்.


சதயம் : லாபம் ஏற்படும்.


பூரட்டாதி : இன்னல்கள் குறையும்.

---------------------------------------





மீனம்

ஜூலை 06, 2021



செய்யும் முயற்சிகளுக்கேற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். புதுவிதமான இடங்களுக்கு பயணங்கள் மேற்கொள்வது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கலை நுட்பமான செயல்பாடுகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். குடும்ப பெரியோர்களின் ஆலோசனைகள் மற்றும் ஆதரவு கிடைக்கும். கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகமும், ஒப்பந்தங்களும் சாதகமாகும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



பூரட்டாதி : முன்னேற்றமான நாள். 


உத்திரட்டாதி : ஆர்வம் உண்டாகும்.


ரேவதி : ஒப்பந்தங்கள் சாதகமாகும்.

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Teacher stabbed to death in government school near Thanjavur - what is the reason..?

தஞ்சாவூர் : அரசுப் பள்ளியில் ஆசிரியை குத்திக் கொலை - காரணம் என்ன..? Teacher stabbed to death in government school near Thanjavur - what is t...