கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (15-07-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஜூலை 15, 2021



தைரியத்துடன் புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். முக்கிய முடிவுகளில் பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். மனை சம்பந்தமான விவகாரங்களில் சுமூகமான முடிவுகள் கிடைக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகளால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். வழக்கு விவகாரங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்



அஸ்வினி : ஆசிகள் கிடைக்கும்.


பரணி : நுணுக்கங்களை அறிவீர்கள்.


கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------




ரிஷபம்

ஜூலை 15, 2021



திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடும். உறவினர்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். நீண்ட நாள் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். வியாபாரத்தில் உள்ள போட்டிகளை சமாளிப்பீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



கிருத்திகை : அனுகூலமான நாள்.


ரோகிணி : ஒத்துழைப்பு கிடைக்கும்.


மிருகசீரிஷம் : வாய்ப்புகள் உண்டாகும்.

---------------------------------------




மிதுனம்

ஜூலை 15, 2021



கால்நடைகளின் மூலம் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பொருளாதாரத்தில் இருந்துவந்த சிக்கல்கள் நீங்கும். எதிர்பார்த்த தனவரவுகளால் திருப்தியான சூழல் உண்டாகும். புதிய அணிகலன்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். மனை விருத்திக்கான செயல்திட்டங்களை வகுப்பீர்கள். செயல்பாடுகளில் மாற்றங்கள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்



மிருகசீரிஷம் : லாபகரமான நாள்.


திருவாதிரை : சிக்கல்கள் நீங்கும்.


புனர்பூசம் : மாற்றங்கள் உண்டாகும்.

---------------------------------------




கடகம்

ஜூலை 15, 2021



உத்தியோகத்தில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். பிள்ளைகள் சாதகமாக செயல்படுவார்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். மனை சம்பந்தமான விவகாரங்களில் சுமூகமான முடிவுகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் அகலும். குடும்ப உறுப்பினர்களினால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



புனர்பூசம் : நம்பிக்கை அதிகரிக்கும்.


பூசம் : அறிமுகம் உண்டாகும்.


ஆயில்யம் : தடைகள் அகலும்.

---------------------------------------




சிம்மம்

ஜூலை 15, 2021



நீண்ட நாள் நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். செலவுகளை குறைத்து சேமிப்புகளை அதிகப்படுத்த முயல்வீர்கள். குடும்ப பொருளாதாரம் மேம்படும். சாதுர்யமான பேச்சுக்களால் பாராட்டப்படுவீர்கள். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



மகம் : அனுகூலமான நாள்.


பூரம் : பொருளாதாரம் மேம்படும்.


உத்திரம் : கவலைகள் குறையும்.

---------------------------------------




கன்னி

ஜூலை 15, 2021



உத்தியோகத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். நீண்ட நாட்களாக சந்திக்க விரும்பிய நபர்களை சந்திப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படும். பயணங்களால் லாபம் அதிகரிக்கும். எண்ணிய செயல்கள் சில தடைகளுக்கு பின் முடிவடையும். பொதுப்பணியில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை



உத்திரம் : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.


அஸ்தம் : மாற்றங்கள் ஏற்படும்.


சித்திரை : சாதகமான நாள்.

---------------------------------------




துலாம்

ஜூலை 15, 2021



கல்வி பயிலும் மாணவர்களுக்கு அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். வாதத்திறமையால் கீர்த்தி உண்டாகும். புதிய நபர்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கெளரவ பதவிகளால் மகிழ்ச்சி ஏற்படும். ஆராய்ச்சி சம்பந்தமான தேடல் உண்டாகும். வெளிநாட்டு பயணங்களால் தனலாபம் ஏற்படும். அறச்செயல்களில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



சித்திரை : கீர்த்தி உண்டாகும்.


சுவாதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


விசாகம் : தேடல் உண்டாகும்.

---------------------------------------




விருச்சிகம்

ஜூலை 15, 2021



சபை தலைவராக இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் நிதானத்துடன் செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். கூட்டாளிகளின் உதவிகளால் நற்செய்திகள் கிடைக்கும். கால்நடைகளால் லாபம் உண்டாகும். அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்த்த அனுகூலமான செய்திகள் கிடைக்கும். வியாபாரம் சம்பந்தமான கடன் உதவிகள் சாதகமாக அமையும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



விசாகம் : முன்னேற்றமான நாள்


அனுஷம் : லாபம் உண்டாகும்.


கேட்டை : உதவிகள் கிடைக்கும்.

---------------------------------------





தனுசு

ஜூலை 15, 2021



அரசு சம்பந்தமான செயல்பாடுகளில் உள்ள தடைகள் அகலும். கூட்டாளிகளால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தொழில் தொடர்பான புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். மூத்த உடன்பிறப்புகளால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். தொழிலில் சக பணியாளர்களிடம் நன்மதிப்புகள் உண்டாகும். தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



மூலம் : தடைகள் அகலும்.


பூராடம் : அறிமுகம் கிடைக்கும்.


உத்திராடம் : நன்மதிப்புகள் உண்டாகும்.

---------------------------------------




மகரம்

ஜூலை 15, 2021



வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே உறவுகள் மேம்படும். தொழிலை  அபிவிருத்தி செய்வதற்கு தேவையான நிதி உதவிகள் கிடைக்கும். நிர்வாகம் சம்பந்தமான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பாலின மக்களிடம் கவனமாக இருக்கவும். நிர்வாகத்தில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் சாதகமான சூழல் அமையும். போட்டிகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



உத்திராடம் : சாதகமான நாள்.


திருவோணம் : உதவிகள் கிடைக்கும்.


அவிட்டம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

---------------------------------------




கும்பம்

ஜூலை 15, 2021



பெரியோர்களிடம் நிதானத்துடன் செயல்படவும். முக்கிய கோப்புகளை கையாளும் போது கவனம் வேண்டும். மாணவர்கள் பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை படிப்பது நல்லது. செய்யும் செயல்களின் தன்மை அறிந்து செயல்படவும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் உண்டாகும். தம்பதிகளுக்கிடையே மனக்கசப்புகள் ஏற்பட்டு நீங்கும். உயர் அதிகாரிகளிடம் பேசும்போது நிதானம் வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



அவிட்டம் : நிதானத்துடன் செயல்படவும்.


சதயம் : கவனம் வேண்டும்.


பூரட்டாதி : மனக்கசப்புகள் ஏற்படும்.

---------------------------------------




மீனம்

ஜூலை 15, 2021



குடும்ப நபர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மனை விருத்திக்கான செயல்திட்டங்களில் சாதகமான சூழல் உண்டாகும். எதிர்பாராத சுபச்செய்திகளால் சுபவிரயங்கள் ஏற்படும். முயற்சிக்கேற்ற பாராட்டுகள் கிடைக்கும். புதிய நபர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பாராத தனவரவுகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். பங்காளிகளால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்



பூரட்டாதி : சாதகமான நாள்.


உத்திரட்டாதி : சுபவிரயங்கள் ஏற்படும்.


ரேவதி : இன்னல்கள் குறையும்.

---------------------------------------


மத்திய அரசால் 11% உயர்த்தப்பட்டுள்ள அகவிலைப்படி, மாநில அரசு ஊழியர்களுக்கும் உயரும்பொழுது அகவிலைப்படியில் எவ்வளவு உயர்வு ஏற்படும் என்ற உத்தேச கணக்கீடு அட்டவணை...



According to the 11% increase in the Dearness Allowance of the Central Government, the estimated calculation of the increase in the Dearness Allowance of increase for state government employees ...


>>> மத்திய அரசால் 11%  உயர்த்தப்பட்டுள்ள அகவிலைப்படி, மாநில அரசு ஊழியர்களுக்கும் உயரும்பொழுது அகவிலைப்படியில் எவ்வளவு உயர்வு ஏற்படும் என்ற உத்தேச கணக்கீடு அட்டவணை...


ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET ) எழுதியவர்கள்,சான்றிதழ் சரிபார்த்து முடித்து பணி கிடைக்காமல் உள்ளவர்களுக்கு விரைவாகப் பணி வழங்க நடவடிக்கை - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்...

 


ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) எழுதியவர்கள்,சான்றிதழ் சரிபார்த்து முடித்து பணி கிடைக்காமல் உள்ளவர்களுக்கு விரைவாகப் பணி வழங்க நடவடிக்கை - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்...


ஜூலை 31-ம் தேதிக்குள் பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார்.


தமிழக முதல்வர் தலைமை ஆசிரியர் போல எங்களிடம் வேலை வாங்குகிறார். நாங்களும் ஆசிரியர்களாகச் சுழன்று வேலை செய்து வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.


திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி மற்றும் திருப்பத்தூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி சார்பில் கரோனா தொற்றால் வாழ்வாதாரத்தை இழந்த ஏழை, எளிய மக்களுக்கு கரோனா நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்ட  முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் வரவேற்றார்.


பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு ரூ.890 மதிப்புள்ள மளிகைப்பொருட்கள் மற்றும் மருந்து உள்ளிட்ட தொகுப்பினை சுமார் 200 பேருக்கு வழங்கினார்.


இதைத் தொடர்ந்து, செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:


“கரோனா பெருந்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்குப் பல்வேறு தனியார் நிறுவனங்கள் சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டு வருவது மகிழ்ச்சியளிக்கிறது. இதுபோன்ற உதவிகளை சேவையாகச் செய்து வருபவர்கள் பாராட்டுக்குரியவர்கள்.


மாணவர்களுக்குக் கல்வி மிக முக்கியம். தற்போது கரோனாவால் மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருவதால், கல்விக் கட்டணத்தைச் செலுத்த முடியாமல் தவிக்கின்றனர். இதனால்தான் தனியார் பள்ளிகளில் 75 சதவீதம் மட்டும் கட்டணம் வசூலிக்க அரசு அறிவுறுத்தியது. அதிலும், 40 சதவீதம் கட்டணத்தை மட்டுமே தற்போது வசூலிக்க வேண்டும். பாக்கியுள்ள தொகையைப் பள்ளிகள் திறந்தபிறகு 2 மாதங்கள் கழித்து வசூலிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.


ஆனால், அரசு உத்தரவை மீறி ஒருசில தனியார் பள்ளிகள் 100 சதவீதக் கட்டணமும், சில பள்ளிகள் 75 சதவீதத்தை ஒரே நேரத்தில் கட்ட வேண்டும் எனவும் பெற்றோரை வற்புறுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சில இடங்களில் இருந்து புகார்களும் வந்துள்ளன. எனவே, அரசு உத்தரவை மீறி கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் தனியார் பள்ளிகள் குறித்து பொதுமக்கள் ஆதாரத்துடன் புகார் அளித்தால், சம்மந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.


2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்கள், அதன் பிறகு 2017-18ஆம் ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று, சான்றிதழ் சரிபார்த்து பணி கிடைக்காமல் உள்ளவர்களுக்கு விரைவாகப் பணி வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும். அதற்கான அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார்.


நீட் தேர்வைப் பொறுத்தவரை அரசு ஒரே நிலைப்பாட்டில்தான் உள்ளது. 


நீட் மட்டும் அல்ல, எந்த ஒரு நுழைவுத்தேர்வும் தமிழகத்துக்குள் வராமல் இருக்க தி.மு.க. தொடர்ந்து குரல் கொடுக்கும். அரசுப் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் விரைவில் மேம்படுத்தப்படும். கழிவறை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் விரைவில் சரிசெய்யப்படும். 


தமிழகத்தில் 5 மாவட்டங்களில் அரசுப் பள்ளிகளில் ஆய்வு நடத்தியுள்ளேன்.  மற்ற மாவட்டங்களிலும் ஆய்வு நடத்தி அரசுப் பள்ளிகள் மேம்பட  நடவடிக்கை எடுக்கப்படும்.


அதேபோல, தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்குக் கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம், கலை ஆகியவற்றைக் கற்றுத்தர அரசுப்பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர்கள் நியமிப்பது குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கான அரசாணை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. முதல்வருடன் கலந்து பேசி அதற்கான அறிவிப்பு வெளியாகும். 


தமிழக அமைச்சரவையில் உள்ள ஒவ்வொரு அமைச்சரும் தங்கள் துறையில் தினந்தோறும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த அறிக்கையை முதல்வர் அலுவலகத்துக்கு தினமும் சமர்ப்பித்து வருகிறோம்.


தமிழக முதல்வர் தலைமை ஆசிரியர் போல எங்களிடம் வேலை வாங்குகிறார்.  நாங்களும் ஆசிரியர்களாகச் சுழன்று வேலை செய்து வருகிறோம்.  தமிழகத்தில் பள்ளிகளைத் திறப்பது குறித்து எந்த முடிவும் இதுவரை  எடுக்கவில்லை. கரோனா 3-வது அலை பரவல் குறித்து சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர். 3-வது அலையில் குழந்தைகள் பாதிக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளதால், பள்ளிகள்  திறப்பு குறித்து சுகாதாரத்துறையினரின் கருத்துகளுக்கு மதிப்பளித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.


தற்போது பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களுக்கான  மதிப்பெண்கள் ஜூலை 31-ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல, தமிழகத்திலும் இம்மாதம் இறுதிக்குள் பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண்கள்  வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்”.


இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

அரசுப்பள்ளிகளில் மாற்றுச்சான்றிதழ் இல்லாவிட்டாலும் 9ம் வகுப்பில் மாணவர் சேர்க்கை - அதிகாரிகளுக்கு CEO உத்தரவு...

 அரசுப்பள்ளிகளில் மாற்றுச்சான்றிதழ் இல்லாவிட்டாலும் 9ம் வகுப்பில் மாணவர் சேர்க்கை - அதிகாரிகளுக்கு CEO உத்தரவு...



கணினி வாங்க ஆசிரியர்களுக்கு கடன்...


ஆன்லைன் கல்விக்கு கம்ப்யூட்டர் வாங்குவது, திருமணம் உள்ளிட்ட செலவுகளுக்காக, ஆசிரியர்களுக்கு 14 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, அவர்களது சம்பளத்தில் பிடித்துக் கொள்ளும் வகையில், அரசின் சார்பில் கடன் உதவி வழங்கப்படும். இதன்படி, நடப்பு நிதியாண்டில் கடன் வழங்குவது குறித்து, பள்ளி கல்வியின் தொழிற்கல்வி பிரிவு இணை இயக்குனர் நரேஷ், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.


அதன் விபரம்: அரசின் நிதித்துறை அனுமதியின்படி, அரசு பணியில் உள்ள ஆசிரியர்கள், தங்களின் திருமண செலவு, கார், 'டூ - வீலர்' போன்ற வாகனங்கள் வாங்குவதற்கு, அரசின் விதிமுறைப்படி கடன்களை பெறலாம்.மேலும், ஆசிரியர்கள் தங்களின் கல்வி பயன்பாட்டுக்காக கணினி வாங்குவதற்கும், கடன் வழங்கப்படும்.



அவரவர் சம்பள விகிதத்துக்கு ஏற்ப, அதிகபட்சம் 14 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும். இதற்கான அரசாணையை ஆசிரியர்கள் பார்த்து கொள்ளவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மத்தியப் பிரதேசத்தில் ஜூலை 25ஆம் முதல் பள்ளிகள் திறப்பு - முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்...

 மத்தியப் பிரதேசத்தில் ஜூலை 25ஆம் முதல் பள்ளிகள் திறப்பு - முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்...



12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஓரிரு நாட்களில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது...

 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஓரிரு நாட்களில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது...





இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...