மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி பார்த்த விவரம், ஆசிரியர்கள் Assignment கொடுத்த விவரம் அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு...
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
தமிழகத்தில் தற்போதுள்ள பாடத்திட்டம் CBSE பாடத்திட்டத்திற்கு இணையாக உள்ளது; அமைச்சர் அன்பில் மகேஷ்...
தொகுப்பூதிய ஆசிரியர்களின் பணி நிரந்தரம் குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய தீர்வு காணப்படும் என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் தற்போதுள்ள பாடத்திட்டம் சிபிஎஸ்சி பாடத்திட்டத்திற்கு இணையாக உள்ளது என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம், மருங்காபுரி தாலுகா, கோவில்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார்.
பள்ளியில் உள்ள அடிப்படை வசதிகள், கட்டிடங்கள், ஆய்வகம் உள்ளிட்டவைகளையும், பள்ளியில் பராமரிக்கப்படும் ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில் கூறியதாவது, தொகுப்பூதிய ஆசிரியர்களின் பணி நிரந்தரம் குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய தீர்வு காணப்படும்.
கடந்த காலங்களில் பாடத்திட்டத்தை பொறுத்த வரை 10, 12 ஆண்டுகளுக்கு ஒரே பாடத்திட்டம் என்ற அளவில் தான் இருந்துள்ளது. இப்போதும் கூட கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பாடத்திட்டம் தான் இருந்து வந்துள்ளது.
ஆனால் இன்றைய காலகட்டத்தை பொறுத்த வரை இன்றைய காலத்திற்கு எற்றார் போல் பாடதிட்டம் இருக்க வேண்டும். அதன்படி தான் தற்போது சிபிஎஸ்சி பாடத்திட்டத்திற்கு இணையாக நம் பாடத்திட்டம் உள்ளது. இதே போல் ஆசியர்களுக்கு இன்னும் அதிகமாக பயிற்சி கொடுக்க வேண்டும்.
அது தொடர்பாகவும் ஆலோசித்து வருகிறோம். வரும் காலங்களில் தமிழக பாடத்திட்டம் சிறப்பிற்குரிய வகையில் இருக்கும். இதே போல் மதிய உணவு திட்டத்தில் வாழைப்பழம் சேர்ப்பது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.
இதே போல் தனியார் பள்ளி மீதான புகாரில் அரசு விசாரித்து கண்டிப்பான நடவடிக்கை எடுக்கும். அச்சமின்றி புகார் அளிக்கலாம் என்றும் கூறினார்.
தமிழகம் 100 சதவீதம் கல்வியறிவு பெற்ற மாநிலமாக திகழ வேண்டும் என்ற நோக்கத்தில் எழுத்தறிவித்தல் இயக்கம் தொடக்கம் - அமைச்சர் அன்பில் மகேஷ்...
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் ட்வீட்டர் பதிவு:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் அறிவுறுத்தலின்படி, திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தொகுதி மணிகண்டம் ஒன்றியம், கே. கள்ளிக்குடியில் 100% கல்வி என்ற இலக்கை நோக்கி எழுத்தறிவு இயக்கத்தின் தொடக்க விழாவைத் தொடங்கி வைத்தேன்.
ஒவ்வொரு இடத்திலும் கற்பிக்கும் பணியினை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், ஊராட்சிமன்ற தலைவர்கள், தன்னார்வ அமைப்பினர் ஒருங்கிணைந்து நடத்த உள்ளனர்.
மணிகண்டம் ஒன்றியத்தில் 2021-யின் மக்கள் தொகையின் கணக்கின்படி 14,89,977 நபர்கள் உள்ளனர்.
அவர்கள் கையெழுத்துப் போடுவதற்கே எழுத்தறிவு இல்லாதவர்கள் 4599 நபர்கள் பெண்கள் 3576, ஆண்கள் 913 பேர் உள்ளனர். முதலில் அவர்கள் கையெழுத்துப் போடுவதற்கும் பின்னர் படிக்கவும் 69 நாட்களில் இலக்காகக் கொண்டு செயல்படுத்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சுமார் 1 கோடி நபர்கள் இவ்வியக்கத்தினால் பயன்பெற இருக்கிறார்கள். இதனைக் குறிப்பிட்ட காலத்திற்குள் செய்து முடிக்க ஆவண செய்துள்ளோம்.
இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர், பள்ளிக் கல்வி அரசு அதிகாரிகள், மற்றும் உள்ளாட்சிமன்ற பிரதிநிதிகள், ஊர் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
செய்தி:
திருச்சி சோமரசம்பேட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கட்டப்பட்ட 2 கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி நேற்று திறந்து வைத்தார். இதையடுத்து பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்தார்.
இதனை தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-
பணியிடமாறுதல் கலந்தாய்வு
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் கட்டமைப்பை ஆய்வு செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். அதன்படி அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்து வருகிறேன். அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருக்கிறது. ஆசிரியர் பணிநிரவல் செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. கொரோனா பரவல் காரணமாக மே மாதம் நடைபெற வேண்டிய பணியிட மாறுதல் கலந்தாய்வு இந்தாண்டு நடத்த முடியவில்லை.
முதல்-அமைச்சரின் ஆலோசனையை பெற்று விரைவில் பணியிடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும். அதன்பிறகு எந்தெந்த பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருக்கிறதோ, அது சரி செய்யப்படும்.
கல்வி தொலைக்காட்சியை மேம்படுத்தவும், விரிவுப்படுத்தவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் உயர்தர ஆய்வகங்கள் உள்ளன. கொரோனா பரவலால் பள்ளிகள் செயல்படாமல் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் பயன்பாடின்றி உள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் இருந்து அறிக்கை வந்த பின்பு இயங்காத கணினிகள் மாற்றப்படும்.
அக்டோபரில் தேர்வு
பிளஸ்-2 வில் கூடுதல் மதிப்பெண் தேவைப்படும் மாணவர்கள் அக்டோபரில் தேர்வு எழுதலாம். கொரோனா கட்டுக்குள் வந்தால் மட்டுமே அப்போதைய சூழலை கருத்தில் கொண்டு அந்த தேர்வும் நடத்தப்படும். அவ்வாறு தேர்வெழுத விரும்பும் மாணவர்கள் கல்லூரியில் சேருவதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி பள்ளி மாணவர்கள் இடைநிற்றலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியின்போது, பள்ளியில் சிலம்பம் சுற்றி அசத்திய 2 மாணவிகளை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி பாராட்டினார்.
எழுத்தறிவித்தல் இயக்கம்
இதையடுத்து திருச்சி மணிகண்டம் ஒன்றியம் கள்ளிக்குடி ஊராட்சியில் 100 சதவீதம் எழுத்தறிவித்தல் இயக்கத்தை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். பின்னர், அஞ்சலை என்ற பெண்ணுக்கு அவர் எழுத்து பயிற்சி அளித்தார். அப்போது அமைச்சர் நிருபர்களிடம் கூறுகையில், "கிராமப்புறங்களில் கைரேகை வைக்கும் சூழல் இன்றளவும் உள்ளது. கல்வியறிவு இல்லாத முதியவர்களுக்கு எழுத்தறிவித்தல் திட்டத்தின் கீழ் கையெழுத்திடும் பழக்கத்தை ஏற்படுத்தி வருகிறோம். தமிழ்நாடு கல்வியறிவில் 81 சதவீதம் உள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் கல்வியறிவில் தமிழகம் 100 சதவீதம் இருக்கும் வகையில் எங்களுடைய செயல்பாடு இருக்கும்.
100 சதவீதம் கல்வியறிவு
ஏற்கனவே உள்ள இந்த திட்டத்தை மெருகேற்றும் வகையில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். தமிழகத்தில் சுமார் 1 கோடி பேருக்கு கையெழுத்து போட தெரியவில்லை. தமிழகம் 100 சதவீதம் கல்வியறிவு பெற்ற மாநிலமாக திகழ வேண்டும் என்ற நோக்கத்தில் எழுத்தறிவித்தல் இயக்கத்தை தொடர்ந்து நடத்தி வருகிறோம். இந்த திட்டத்தின் கீழ் 69 நாட்களில் எழுத பழக்கி விடுவோம்" என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட கலெக்டர் சிவராசு, பழனியாண்டி எம்.எல்.ஏ., மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் சிந்துஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 3 தவணை அகவிலைப்படி உயர்வு நிலுவையை வழங்க வேண்டும் - தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை...
நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 3 தவணை அகவிலைப்படி உயர்வு நிலுவையை வழங்க வேண்டும் - தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை...
பத்திரப்பதிவுத்துறையின் ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து மக்கள் புகார் அளிக்கலாம் - ஓரிரு மாதங்களில் பத்திரப்பதிவுத்துறை முழுமையாக சீரமைக்கப்படும் என வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பேட்டி...
பத்திரப்பதிவுத்துறையின் ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து மக்கள் புகார் அளிக்கலாம் - ஓரிரு மாதங்களில் பத்திரப்பதிவுத்துறை முழுமையாக சீரமைக்கப்படும் என வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பேட்டி...
➤பத்திரப்பதிவுத்துறையில் வரும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை
➤பத்திரப்பதிவுத்துறையின் ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து மக்கள் புகார் அளிக்கலாம்
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore
அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...