கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்களும் 02.08.2021 முதல் பள்ளிக்கு வரவேண்டும் - பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் இணை செயல்முறைகள் ந.க.எண்: 004010/ஜெ1/2020, நாள்: 26-07-2021...



தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்களும் 02.08.2021 முதல் பள்ளிக்கு வரவேண்டும் - பள்ளிக் கல்வி  ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு (All Teachers Come to School from 02.08.2021 School Education Commissioner & Elementary Director Proceedings)...


>>> பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் இணை செயல்முறைகள் ந.க.எண்: 004010/ஜெ1/2020, நாள்: 26-07-2021...



தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் 02.08.2021 முதல் 100% பள்ளிகளுக்கு வருகை புரிந்து பணிபுரிய அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து - தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள்


பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகளில் 2021-22ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி மாணாக்கர் சேர்க்கைப் பணிகளை அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள பொதுவான நெறிமுறைகள் மற்றும் நிலையான செயல்பாட்டு வழிமுறைகளைப் ( SOP ) பின்பற்றி அனைத்து தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் மாணாக்கர் சேர்க்கை தொடர்பான ஆயத்தப் பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக தலைமை ஆசிரியர்களுக்கு உதவியாக , ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிகளுக்கு வருகை புரிந்து பணிபுரிய தெரிவிக்கப்பட்டு இருந்தது. 


பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகளில் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பை மாணவர்கள் பயன்படுத்துவதற்கான அறிவுரைகள் , ஒப்படைப்புகள் வழங்குதல் மற்றும் ஒப்படைப்புகளை மதிப்பீடு செய்து பதிவேடுகளில் பதிவு செய்து பராமரிப்பது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டன.


 இதனிடையே பல்வேறு மாவட்டங்களில் , பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு நிகழ்ச்சிகளுடன் , தாமே தன்னார்வத்துடன் தமது பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் செயல்பாட்டினை மேம்படுத்திடும் வகையில் Google Meet , Zoom , Teams , Whatsapp , Telegram போன்ற இணைய வழி கற்பித்தல் முறையினை கையாண்டு வருவது மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடியதாகும் . இத்தகைய பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து ஆசிரியர்களும் பாராட்டுக்குரியவர்கள் ஆவர்.


தற்போது மாணவர்கள் சேர்க்கைப் பணி , பள்ளிக் கால அட்டவணை தயாரித்தல் , விலையில்லா பாடப் புத்தகங்கள் மற்றும் கற்றல் கற்பித்தலுக்கு தேவையான நலத்திட்டங்கள் வழங்குதல் , பள்ளி வகுப்பறை மற்றும் பள்ளி வளாகங்களை தூய்மை செய்தல் , மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி வாயிலாக கற்ற பாட விவரங்களுக்கு ஏற்ப ஒப்படைப்புகள் ( Assignments ) வழங்கி அவற்றை மதிப்பீடு செய்தல் மற்றும் மதிப்பீடு செய்த விவரங்களை பதிவேடுகளில் பதிவு செய்து பராமரித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 02.08.2021 முதல் நாள்தோறும் பள்ளிக்கு வருகை புரிந்து பணிபுரிவதற்கு தேவையான அறிவுரைகளை அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் மூலமாக வழங்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


மேலும் மாற்றுத்திறனாளிகள் , புற்றுநோய் மற்றும் சிறுநீரகம் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் , இருதய நோய் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளவர்கள் , மற்றும் Covid-19ஆல் பாதிக்கப்பட்டு சிகிச்சையிலிருப்பவர்கள் முதலான ஆசிரியர்கள் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு உரிய ஆவணங்களை அளிக்கும் பட்சத்தில் , சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களே சார்ந்த ஆசிரியர் பள்ளிக்கு தினமும் வருகை புரிவதிலிருந்து விலக்கு அளித்து உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


 >>> பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் இணை செயல்முறைகள் ந.க.எண்: 004010/ஜெ1/2020, நாள்: 26-07-2021...



பள்ளியில் சேர்க்கப்படும் மாணவர்களின் பெற்றோருக்கு "சேர்க்கை ஒப்புகைச் சீட்டு (Admission Acknowledgement)" வழங்கும் வசதி - EMIS Websiteல் சேர்ப்பு...

 பள்ளியில் சேர்க்கப்படும் மாணவர்களின் பெற்றோருக்கு "சேர்க்கை ஒப்புகைச் சீட்டு (Admission Acknowledgement)" வழங்கும் வசதி - EMIS Websiteல் சேர்ப்பு...


EMIS Students Admission Reg :  

Students --> Students admission வாயிலாக  மாணவர்களுக்கு New entry Create செய்தபின் (அல்லது) மாணவர்களது விபரத்தை எமிஸ் தளத்தில் Common Pool பகுதியில் இருந்து Admit செய்தபின், மேற்கண்டவாறு தோன்றும் Admission Acknowledgement படிவத்தை பதிவிறக்கம் செய்து பெற்றோர் மற்றும் தலைமையாசிரியர் கையொப்பமிட்டு, பெற்றோருக்கு அளிக்க வசதி தரப்பட்டுள்ளது.  - TNEMIS






பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் , கற்பித்தல் - கற்றல் விளைவுகள் - மேம்படுத்துதல் - தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (CEO) அவர்களின் செயல்முறைகள் ந.க.எண் : 3917/ஆ4/2021, நாள்: -07-2021...



 கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண் : 3917/ஆ4/2021, நாள்:   -07-2021...


கோவிட் -19 பெருந்தொற்று காரணத்தினால் அனைத்து அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2021-22 - ம் கல்வி ஆண்டில் ஜூன் மற்றும் ஜூலை இரு மாதங்களாக கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில் நேரடி வகுப்பு நடைபெறாத நிலையில் கல்வி தொலைக்காட்சி வழியாகவும் , இணையவழி மற்றும் இதர சமூக வலைதளங்கள் வழியாகவும் கற்றல் கற்பித்தல் செயலப்பாடுகள் மாவட்ட அளவில் செம்மையாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே குறுவளமைய அளவில் அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை குறு வள மைய அளவில் ( CRC Level) ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டு வருகிறது. 


இக்கூட்டத்தில் கொரானா பெருந்தொற்று காலக்கட்டத்தில் இணையவழி சமூக வலைதளம் , கல்வி தொலைக்காட்சி , Home visit போன்றவை பயன்படுத்தி கற்றல் கற்பித்தலில் சிறப்பாக செயல்பட்டு மாணவர்களின் கற்றல் விளைவுகள் அடைந்ததை உறுதி செய்து , பங்கு பெற்ற மாணவர்களின் ஈடுபாடு அதிகமாக உள்ள பள்ளிகளை தேர்வு செய்து மாவட்டத் திட்ட அலுவலகத்திற்கு ஒவ்வொரு குறு வள மையத்திலிருந்தும் சிறந்த பள்ளிகளின் செயல்பாட்டு அறிக்கை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது . இவ்வலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட சிறப்பாக செயல்படும் பள்ளிகளில் புதுமையாக கையாளப்பட்ட TNTP , DIKSHA , Teachmint App , Zoom App , Whattsapp , Google Meet , MS Teams , Youtube மற்றும் இதர கல்வி சார்பான Apps மூலமாக LIVE Class செயல்படுத்தி வருவதை அறிய முடிகிறது.


இப்பள்ளிகளை போல மற்ற பள்ளிகளும் கற்றல் , கற்பித்தல் , சிறப்பாக செயல்படும் பள்ளிகளை பின்பற்றி கல்வி தரத்தை மேம்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. அனைத்து பள்ளிகளிலும் பாடவாரியாக பாடத்திட்டங்கள் எளிமையாக்கப்பட்டு உரிய கால இடைவெளிக்குள் முடிக்கப்பட வேண்டும்.


இவ்வகையான கற்றல் கற்பித்தலை வலுப்படுத்த , சென்ற ஆண்டு குறுவளமைய அளவில் Learning outcomes சார்ந்த Worksheet அனைத்து வகுப்புகளுக்கும் தயார் செய்யப்பட்டுள்ளது. இக்கல்வி ஆண்டின் ஜூன் / ஜூலை மாதங்களில் அந்தந்த பள்ளிகளில் முடிக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு பாடத்திட்டத்தின்படி , Content Based Learning Outcomes அடைந்ததை உறுதி செய்யும் வகையில் மாணவர்களுக்கு Worksheets / Book Back Exercises , ஒப்படைவு வழங்குதல் மற்றும் சிறுத்தேர்வுகள் நடத்தப்பட்டு , மதிப்பீடு செய்யப்பட்டு மதிப்பீட்டு பட்டியலை தயார் செய்து தலைமை ஆசிரியர் பார்வைக்கு வாரந்தோறும் உட்படுத்தி பள்ளிக்கு வரும் ஆய்வு அலுவலர்களுக்கு முன்னிலைப்படுத்த வேண்டும்.


 மாணவர்களின் கற்றல் திறன் மேம்பட பெற்றோர்களுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கி , மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளுக்கு எவ்வித இடையூறுகள் ஏற்படா வண்ணம் மாணவர்களையும் , பெற்றோர்களையும் ஆசிரியர்கள் ஊக்கப்படுத்த வேண்டும் தெரிவிக்கப்படுகிறது. ஆசிரியர்களின் பாடக் குறிப்பேட்டில் , பாடத்திட்டம் ஒட்டப்பட்டிருக்க வேண்டும். அந்தந்த வாரத்திற்கான வகுப்புகளின் பாடப் பொருள் சார்ந்த பாடக்குறிப்புகள் எழுதப்பட்டிருப்பதையும் , என Whattsapp குழுவில் மாணவர்களுக்கு வழங்கும் செயல்பாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதையும் கவனித்து ஒவ்வொரு திங்கட்கிழமையும் தலைமை ஆசிரியர் பார்வைக்கு உட்படுத்த வேண்டும். அனைத்து வகுப்புகளின் Workdone பதிவேட்டிலும் கால அட்டவணை பின்பற்றி அம்மாத்திற்கான பாடப்பொருள் உரிய ஆசிரியரால் உரிய நேரத்தில் நடத்தப்பட்டுள்ளதை வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் தலைமை ஆசிரியர்கள் சரி பார்த்து , மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள Assignments எத்தனை மாணணவர்களால் முடிக்கப்பட்டுள்ளது.


Assessment ல் மாணவர்களின் அடைவுநிலை ஒவ்வொரு மாணவருக்கும் பதிவேட்டில் பதியப்பட்டு தலைமை ஆசிரியர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.



>>> கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண் : 3917/ஆ4/2021, நாள்:   -07-2021...


முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான (CEO) ஆய்வுக் கூட்டத்தில் பள்ளிக்கல்வி ஆணையர் (Commissioner of School Education) அவர்களால் வழங்கப்பட்ட தகவல்கள்....

 கல்வித் தொலைக்காட்சியில் சிறந்த முறையில் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு விருது. 


அரசுப்பள்ளிகளில் SC/ST மாணவர்களை அதிகளவில் சேர்க்கும் தலைமை ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை.


- பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் அறிவிப்பு...


காணொலிக் காட்சி மூலம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் சார்ந்த விவரம் :



1. மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் 


அரசு பள்ளிகளில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கவேண்டும்




2. தொடக்கக் கல்வி இயக்குநர் 


2021-22ம் கல்வி ஆண்டில் 1 ம் வகுப்பு முதல் சேர்க்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை EMIS- ல் பதிவேற்றம் செய்யவேண்டும்.


2021-22ம் கல்வியாண்டில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்திருக்கிறார்கள். அதில் உதவிப் பெறும் பள்ளிகளில் 1,00,000 பேர் சேர்ந்திருக்கிறார்கள் , 1 கிலோ மீட்டர் தொலைவில் தொடக்க பள்ளிகளும் , 3 கிலோமீட்டர் தொலைவில் நடுநிலைப் பள்ளிகளும் உள்ளது. இந்த ஆண்டு மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்கவேண்டும்.


கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 1125 மாணவர்கள் புதியதாக சேர்ந்து இருக்கிறார்கள். அரசு உதவிபெறும் பள்ளிகளில் இந்த வருடம் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


கரூர் மாவட்டத்தில் உள்ள நரிக்கட்டி பள்ளியில் ஒரு ஆசிரியர் மட்டும் 450 போர் மாணவர்களை சேர்த்துள்ளார். பெற்றோர்களை அணுகி மாணவர்களின் எண்ணிகையினை அதிகரித்துள்ளார். 


அதுபோன்று மற்ற மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்கள் பெற்றோர்களை அணுகி மாணவர்களை ஊக்குவித்தும் சேர்க்கையை அதிகரிக்கவேண்டும். தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்தமுடியாத சூழ்நிலையில் அவர்கள் அரசு பள்ளியை நாடுகிறார்கள் , அவ்வாறு வரும் மாணவர்களை அரசு பள்ளியில் சேர்த்துக்கொள்ளவேண்டும். 


புதிய - 2021-22ம் கல்வி ஆண்டில் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு கால அட்டவணை தயார் செய்து தலைமையாசிரியர்கள் ஆசிரியர்களுக்கு வழங்கவேண்டும்.


கல்வித் தொலைக்காட்சியில் பாடத்திட்டங்கள் நடைபெறுகிறது என்ற தகவல்களை மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்கள் தகவல்களை தெரிவிக்கவேண்டும்.



 3.Samagra Siksha 


அனைத்து மாவட்டப் பள்ளிகளிலும் Hi - Tech Lab செயல்பாட்டில் இருக்கவேண்டும்.


 இனி வருங்காலங்களில் PFMS மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.


 பள்ளிக் கட்டடங்கள் கட்டி முடிக்கப்படாத நிலையில் இருந்தால் விரைவில் கட்டி முடிக்கவேண்டும்.


பள்ளிகளுக்கு தேவையான கழிவறைகள் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளதா என்று பார்க்கவேண்டும்.




4.ஆணையர் - பள்ளிக் கல்வி 

2020-2021ம் கல்வி ஆண்டில் SC / ST மாணவர்களை அதிகம் சேர்த்த தலைமையாசிரியர்களுக்கான ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது.


தமிழக அரசு கல்வித் தொலைக்காட்சி வாயிலாக மாணவர்கள் பயனடையும் வகையில் பாடங்களை நடத்தி வருகிறது. அது மாணவர்களுக்கு முழுமையாக சென்றடைகிறதா என்று பார்க்கவேண்டும். 


தலைமையாசிரியர்களும் , ஆசிரியர்களும் பள்ளி மாணவர்களை வீட்டிற்கு சென்று கல்வித் தொலைக்காட்சியில் நடத்தப்படும் பாடங்கள் புரிகிறதா அவர்கள் ஆர்வமுடன் பார்க்கிறார்களா என்று பார்க்கவேண்டும்.


கல்வித் தொலைக்காட்சியில் எடுக்கப்படும் பாடங்களுக்கு சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்தும் , அவ்வாசிரியர்கள் நன்றாக பாடம் கற்பிக்கிறார்களா , அவர் கற்பித்த பாடத்தை அவருக்குநன்கு புரிந்து பாடம் நடத்துகிறா என்று பார்க்கவேண்டும்.


கல்வித் தொலைக்காட்சியில் சிறந்த முறையில் பாடம் நடத்தும் ஆசிரியர்களை தேர்வு செய்து விருதுகள் வழங்கப்படும்.


அரசின் அறிவிப்பின்படி மாவட்டத்திலுள்ள அனைத்து ஆசிரியர்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதை முதன்மைக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.





அரசு / உதவிபெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை - இயக்குனர் தகவல்...

 அரசு / உதவிபெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை - இயக்குனர் தகவல்...









கல்லூரி மாணவர்களுக்கான வகுப்புகள் ஆன்லைன் முறையிலேயே நடத்தப்படும் - உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு...



 தமிழகத்தில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் தற்பொழுது துவங்கியிருக்கும் புதிய கல்வியாண்டில் பயிலும் 2 மற்றும் 3வது ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.


ஆன்லைன் வகுப்புகள்

கொரோனா 2ஆம் பேரலை காரணமாக மூடப்பட்டுள்ள கல்வி நிறுவனங்கள் பல மாநிலங்களில் மீண்டுமாக திறக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகத்திலும் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்து வகையான கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் வழியாக தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.


இதனிடையே கல்லூரி மாணவர்களுக்கான 2021-22 புதிய கல்வியாண்டு துவங்கியுள்ள நிலையில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவுகளும் துவங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் துவங்குமா என்று எதிர்பார்ப்புகள் எழுந்து வந்தது.


இந்நிலையில் கல்லூரிகளில் 2ஆவது மற்றும் 3ஆம் ஆண்டு மாணவர்களுக்கான அடுத்த கல்வியாண்டு வகுப்புகள் ஆன்லைன் முறையிலேயே நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் கொரோனா 2ஆம் பரவல் குறைவதை பொறுத்து தான் உயர் கல்வி நிறுவனங்களில் நேரடி வகுப்புகளை துவங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.


திறந்தவெளி பல்கலைக்கழகங்களில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் பதவி உயர்வு கோர முடியாது - உயர்நீதிமன்றம் உத்தரவு...



 திறந்தவெளிப்பல்கலைக் கழக முதுகலைப் பட்டம் அடிப்படையில் , இரண்டாம் நிலை சார்பதிவாளராக பணி நியமனம் பெற்றவர் முதல் நிலை சார்பதிவாளராக பணி உயர்வு கோரிய மனுவை தமிழக அரசு நிராகரித்தது. 


இதை எதிர்த்து , அவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி , பணி உயர்வு வழங்குமாறு உத்தரவிட்டிருந்தது. தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா, சத்தியநாராயணா அமர்வில் , விசாரணைக்கு வந்தது.


 தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல் ஆர்.நீல கண்டன் இளங்கலை பட்டம் பெறாமல் நேரடியாக திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு பதவி உயர்வு வழங்கக் கூடாது என்று அண்ணாமலை பல்கலைக்கழக வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவுப்படுத்தியுள்ளது.


 எனவே , நேரடியாக திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் பணி நியமனமோ , பதவி உயர்வோ கோர முடியாது என்று வாதிட்டார். அரசுத் தரப்பின் இந்த வாதத்தை ஏற்ற நீதிபதிகள் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டதுடன் , இளங்கலை பட்டம் பெறாமல் நேரடியாக திறந்தவெளிப்பல்கலைக் கழகத்தில் முதுகலைப்பட்டம் பெற்றவர்கள் பணி உயர்வு கோர முடியாது என்று தீர்ப்பளித்தனர்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Payment of +2 Exam Fee & TML Fee – DGE Proceedings

+2 தேர்வுக் கட்டணம் & TML கட்டணம் செலுத்துதல் - DGE செயல்முறைகள் Payment of +2 Exam Fee & TML Fee – DGE Proceedings >>> தரவ...