4ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தேர்வு - கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செயல்முறைகள் ந.க.எண்: 11/2021, நாள்: 04-08-2021, தேர்வு நடைபெறும் நாள் மற்றும் பாடப் பகுதிகள்...
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் தினமும் பள்ளிக்கு வருவதில் இருந்து விலக்கு பெற Mail அனுப்பினால் போதும் - CEO...
மாற்றுத்திறன் ஆசிரியர்கள் தினசரி பள்ளிக்கு வருவதில் இருந்து, விலக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், முதன்மை கல்வி அலுவலகத்திற்கு நேரில் சென்று ஒப்புதல் ஆணை பெற வேண்டுமென, சில அரசுப்பள்ளி தலைமையாசிரியர்கள், கறாராக தெரிவிப்பதாக, புகார் எழுந்துள்ளது. அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கடந்த 2ஆம் தேதியில் இருந்து, தினசரி பள்ளிக்கு வருகைப்புரிய வேண்டுமென, கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். மாற்றுத்திறனாளிகள், கொரோனா தொற்று சிகிச்சையில் இருப்பவர்கள், இதய நோயாளிகள், புற்றுநோய் மற்றும் சிறுநீரகம் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் மட்டும், பள்ளிக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கும் பட்சத்தில், அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களே(CEO), விலக்கு அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நடைமுறையில், சில தலைமையாசிரியர்கள் கடுமையாக நடந்து கொள்வதால், மாற்றுத்திறன் ஆசிரியர்கள் அலைக்கழிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
மாவட்ட உடல் ஊனமுற்றோர் நலவாரிய ஆலோசனை குழு உறுப்பினர் சீனிவாசன் கூறுகையில்,
''கோவை மாவட்டத்தில், 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் ஆசிரியர்கள், அரசுப்பள்ளிகளில் பணிபுரிகின்றனர். பள்ளிக்கு தினசரி வருவதில் இருந்து விலக்கு பெற, முதன்மை கல்வி அலுவலர் ஒப்புதல் பெற வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. நேரடியாக சென்று, சி.இ.ஓ., விடம் விலக்கு ஆணை பெற வேண்டும். அதே வேளையில், பள்ளி நேரத்தில், கல்வி அலுவலகத்திற்கு செல்ல, அனுமதிக்க முடியாது என சில தலைமை ஆசிரியர்கள் கடுமையாக நடந்து கொள்கின்றனர். விடுப்பு எடுத்து சென்றாலும், முதன்மை கல்வி அலுவலரை நேரடியாக பார்க்க முடியாமல், தகவல் பெட்டியில் தான், அனுமதி கடிதத்தை போட வேண்டிய நிலை உள்ளது. அந்தந்த பள்ளியிலே ஆவணங்கள் சமர்ப்பித்தால் போதுமென, முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டால், வீண் அலைச்சலை தவிர்க்கலாம்,'' என்றார்.
முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணனிடம் கேட்டபோது, '' பள்ளிக்கு தினசரி வருவதில் இருந்து, விலக்கு பெற தகுதி உள்ளவர்களின் ஆவணங்களை, அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள், இ-மெயில் மூலம் அனுப்பினால் போதும். யாரையும் கல்வி அலுவலகங்களுக்கு, அலைக்கழிக்க கூடாதென, தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்துள்ளேன்,'' என்றார்.
பள்ளியில் என்ன வேலை?
தற்போது பள்ளிகளுக்கு வருகை தரும் ஆசிரியர்கள், கல்வி தொலைக்காட்சிக்கு வீடியோ தயாரிப்பது, இதில் ஒளிபரப்பாகும் பாடங்களுக்கு ஏற்ப, அசைன்மென்ட் வழங்கி, மதிப்பீடு செய்வது, அதை அறிக்கை வடிவில் தயாரிப்பது, நலத்திட்ட பொருட்கள் வினியோகம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தொலைக்காட்சியில்(Kalvi TV) 04-08-2021 அன்று ஒளிபரப்பான முதலாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரையிலான கணக்கு பாடக் காணொளிகள்(I -VII Standard Maths Videos)...
கல்வித் தொலைக்காட்சியில் 04-08-2021 அன்று ஒளிபரப்பான முதலாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரையிலான கணக்கு பாடக் காணொளிகள்...
முதலாம் வகுப்பு - அலகு 1 – வடிவியல், ஒப்பீடுகள் - https://youtu.be/68y-4HybGyE
இரண்டாம் வகுப்பு - அலகு 2 – கழித்தல் - https://youtu.be/fnGfv7Ugao0
மூன்றாம் வகுப்பு - அலகு 2 – எண்கள் - கழித்தல் மற்றும் தோராய மதிப்பிடுதல் - https://youtu.be/As9WsqesboU
நான்காம் வகுப்பு - அலகு 4 – அளவைகள் - மீட்டர், சென்டி மீட்டர் - https://youtu.be/IFpwepX5TcI
ஐந்தாம் வகுப்பு - அலகு 2 – எண்கள் - எண்களை ஒப்பிடுதல் - https://youtu.be/Jw_0ryedOBg
ஆறாம் வகுப்பு - அலகு 2 – இயற்கணிதம் - ஓர் அறிமுகம் - எடுத்துக்காட்டுகளில் இடம்பெறும் தெரியாத எண்களை கண்டுபிடித்தல் - https://youtu.be/cDoTDHt2-Nw?t=1656
ஏழாம் வகுப்பு - அலகு 1 – எண்ணியல் - இரு முழுக்களின் பெருக்கல், வகுத்தல் - https://youtu.be/Vxd_oICsffM?t=1934
கல்வித் தொலைக்காட்சியில்(Kalvi TV) 04-08-2021 அன்று ஒளிபரப்பான எட்டாம் வகுப்பு காணொளிகள்(VIII Standard Videos)...
கல்வித் தொலைக்காட்சியில் 04-08-2021 அன்று ஒளிபரப்பான எட்டாம் வகுப்பு காணொளிகள்:
💥 தமிழ் - இயல் 2 - ஓடை - பகுதி 1 - https://youtu.be/H_fb2lOzr7k
💥 ஆங்கிலம் - Unit 2 – Hobby – Degrees of Comparison - https://youtu.be/OuFq46PP8Uk
💥 கணக்கு - அலகு 5- வடிவியல் - சரிவகம் மற்றும் இரு சமபக்க சரிவகம் வரைதல் - பகுதி 2 - https://youtu.be/2GHky5ap79s
💥 அறிவியல் - அலகு 2 - இயற்பியல் - விசையும் அழுத்தமும் - https://youtu.be/QCgsRm3zLT0
💥 சமூக அறிவியல் - அலகு 2 - வரலாறு - வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை - பாகம் 2 - https://youtu.be/1sbj7xh0Zzg
மருத்துவர், செவிலியர் & மருத்துவ உதவியாளருடன் மக்களின் வீடுகளுக்கே சென்று, அவர்கள் பிரச்சனைகளை கேட்டு, சிகிச்சை அளிக்கப்படும் திட்டமான "மக்களைத் தேடி மருத்துவம்(Makkalai Thedi Maruthuvam)" எனும் மகத்தான திட்டத்திற்கு அரசாணை வெளியீடு...
மருத்துவர், செவிலியர் & மருத்துவ உதவியாளருடன் மக்களின் வீடுகளுக்கே சென்று, அவர்கள் பிரச்சனைகளை கேட்டு, சிகிச்சை அளிக்கப்படும் திட்டமான "மக்களைத் தேடி மருத்துவம்(Makkalai Thedi Maruthuvam)" எனும் மகத்தான திட்டத்திற்கு அரசாணை (G.O.Ms.No.340, Dated: 03-08-2021) வெளியீடு...
>>> Click here to Download G.O.Ms.No.340, Dated: 03-08-2021...
>>> "மக்களைத் தேடி மருத்துவம்" எனும் மகத்தான திட்டம் குறித்த காணொளி...
இன்றைய (05-08-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...
மேஷம்
ஆகஸ்ட் 05, 2021
பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் சுபச்செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து அமைதி உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். செய்யும் தொழிலில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
அஸ்வினி : சிறப்பான நாள்.
பரணி : அமைதி உண்டாகும்.
கிருத்திகை : எதிர்ப்புகள் குறையும்.
---------------------------------------
ரிஷபம்
ஆகஸ்ட் 05, 2021
குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். மனதை உறுத்தி வந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். புதுவிதமான சிந்தனைகள் ஏற்படும். தனவரவுகளை மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். கலகலப்பான பேச்சுக்களின் மூலம் பலரின் அறிமுகம் உண்டாகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
கிருத்திகை : தீர்வு கிடைக்கும்.
ரோகிணி : எண்ணங்கள் அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : நட்பு கிடைக்கும்.
---------------------------------------
மிதுனம்
ஆகஸ்ட் 05, 2021
வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்துவந்த இன்னல்களுக்கு தன்னிச்சையாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். உறவினர்களில் உண்மையானவர்கள் பற்றிய புரிதல் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
மிருகசீரிஷம் : முதலீடுகள் அதிகரிக்கும்.
திருவாதிரை : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
புனர்பூசம் : புரிதல் மேம்படும்.
---------------------------------------
கடகம்
ஆகஸ்ட் 05, 2021
கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பழைய பிரச்சனைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து சுபச்செய்திகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் மதிப்புகள் அதிகரிக்கும். பாதியில் நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
புனர்பூசம் : அன்பு அதிகரிக்கும்.
பூசம் : லாபம் உண்டாகும்.
ஆயில்யம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
---------------------------------------
சிம்மம்
ஆகஸ்ட் 05, 2021
குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பிள்ளைகளால் ஆதரவான சூழல் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி தெளிவு உண்டாகும். ஆடம்பர பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். சிலருக்கு வியாபாரம் தொடர்பான பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
மகம் : ஆதரவான நாள்.
பூரம் : முன்னேற்றம் ஏற்படும்.
உத்திரம் : மனம் மகிழ்வீர்கள்.
---------------------------------------
கன்னி
ஆகஸ்ட் 05, 2021
வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். புதிய பொறுப்புகள் கிடைக்கும். கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வெளியூர் பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திரம் : செல்வாக்கு உயரும்.
அஸ்தம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
சித்திரை : உதவிகள் கிடைக்கும்.
---------------------------------------
துலாம்
ஆகஸ்ட் 05, 2021
எதிர்பாராத பணவரவுகள் உண்டாகும். வரவுக்கேற்ப செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் பெரியோர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். கூட்டாளிகளின் ஆலோசனைகளால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். வழக்கு விஷயங்களில் வெற்றி கிடைக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
சித்திரை : பணவரவுகள் உண்டாகும்.
சுவாதி : முன்னேற்றமான நாள்.
விசாகம் : அனுசரித்து செல்லவும்.
---------------------------------------
விருச்சிகம்
ஆகஸ்ட் 05, 2021
எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நண்பர்களின் செயல்பாடுகளில் கருத்துக்கள் கூறுவதில் கவனம் வேண்டும். எளிதில் முடிய கூடிய செயல்கள் கூட காலதாமதமாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் மனவருத்தங்கள் ஏற்பட்டு நீங்கும். தொழில் தொடர்பான வங்கி கடன்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
விசாகம் : மாற்றங்கள் உண்டாகும்.
அனுஷம் : கவனம் வேண்டும்.
கேட்டை : மனவருத்தங்கள் ஏற்படும்.
---------------------------------------
தனுசு
ஆகஸ்ட் 05, 2021
வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் புதிய அனுபவம் கிடைக்கும். சொத்துக்கள் சம்பந்தமான வழக்குகளில் அனுகூலமான முடிவுகள் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் குறையும். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் நிதானம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மூலம் : அனுபவம் கிடைக்கும்.
பூராடம் : தேவைகள் பூர்த்தியாகும்.
உத்திராடம் : நிதானம் வேண்டும்.
---------------------------------------
மகரம்
ஆகஸ்ட் 05, 2021
நெருக்கமானவர்களின் உதவிகளால் பிரச்சனைகள் நீங்கும். பிள்ளைகளால் சுபவிரயங்கள் ஏற்படும். உணவு சார்ந்த செயல்பாடுகளில் கவனத்துடன் இருந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும். ஆடம்பர பொருட்சேர்க்கை உண்டாகும். மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். புதிய வேலை தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
உத்திராடம் : பிரச்சனைகள் நீங்கும்.
திருவோணம் : ஆரோக்கியம் மேம்படும்.
அவிட்டம் : காரியங்கள் ஈடேறும்.
---------------------------------------
கும்பம்
ஆகஸ்ட் 05, 2021
உறவினர்களின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஆன்மிக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பயணங்களால் நன்மை உண்டாகும். திறமைக்கேற்ற பலன்கள் கிடைக்கும். பிள்ளைகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அவிட்டம் : ஆதரவு கிடைக்கும்.
சதயம் : ஈடுபாடு அதிகரிக்கும்.
பூரட்டாதி : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
---------------------------------------
மீனம்
ஆகஸ்ட் 05, 2021
முயற்சிக்கேற்ப முன்னேற்றம் உண்டாகும். உறவினர்களின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். உடன்பிறப்புகள் ஆதரவாக செயல்படுவார்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் நீங்கும். வங்கி சேமிப்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் திறமையுடன் எந்தவொரு செயலையும் செய்து முடிப்பீர்கள். நண்பர்களின் வழியில் அனுகூலம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
பூரட்டாதி : சுபச்செய்திகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : சேமிப்புகள் அதிகரிக்கும்.
ரேவதி : அனுகூலம் உண்டாகும்.
---------------------------------------
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
23-12-2024 - School Morning Prayer Activities
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2024 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம் : மருந்து க...