கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கல்வி தொலைக்காட்சியில் செப்டம்பர் மாதம் ஒளிபரப்பாகும் வகுப்பு மற்றும் பாடவாரியான கால அட்டவணை (Kalvi TV - September Month Telecast Details - September-2021 Cue Sheet)...



>>> கல்வி தொலைக்காட்சியில் செப்டம்பர் மாதம் ஒளிபரப்பாகும் வகுப்பு மற்றும் பாடவாரியான கால அட்டவணை (Kalvi TV - September Month Telecast Details - September-2021 Cue Sheet)...

இன்றைய (05-09-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

செப்டம்பர் 05, 2021



நெருக்கமானவர்களிடம் பேசும் பொழுது கருத்துக்களில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். உறவினர்களின் வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். கூட்டு வியாபாரத்தில் அனுசரித்து செல்வதன் மூலம் முன்னேற்றம் உண்டாகும். மறைமுகமாக இருக்கக்கூடிய திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



அஸ்வினி : கவனம் வேண்டும்.


பரணி : உதவிகள் கிடைக்கும்.


கிருத்திகை : திறமைகள் வெளிப்படும்.

---------------------------------------




ரிஷபம்

செப்டம்பர் 05, 2021



தனவரவுகளில் இருந்துவந்த நெருக்கடியான சூழ்நிலைகள் மறையும். உறவினர்களின் வருகையின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் மற்றும் எண்ணங்கள் மேம்படும். மனதிற்கு பிடித்த விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



கிருத்திகை : நெருக்கடிகள் மறையும்.


ரோகிணி : எண்ணங்கள் மேம்படும்.


மிருகசீரிஷம் : ஆர்வம் உண்டாகும்.

---------------------------------------




மிதுனம்

செப்டம்பர் 05, 2021



எண்ணிய செயல்பாடுகள் சிறு காலதாமதத்திற்கு பின் நிறைவேறும். குழந்தைகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். பயணங்கள் தொடர்பான விஷயங்களில் மாற்றங்கள் ஏற்படும். உறவினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பதன் மூலம் ஒற்றுமை உண்டாகும். கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



மிருகசீரிஷம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.


திருவாதிரை : மாற்றங்கள் ஏற்படும்.


புனர்பூசம் : லாபம் மேம்படும்.

---------------------------------------




கடகம்

செப்டம்பர் 05, 2021



எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். குழந்தைகளின் படிப்பில் முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் லாபங்கள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் சோர்வு ஏற்பட்டு நீங்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



புனர்பூசம் : முன்னேற்றமான நாள்.


பூசம் : லாபங்கள் அதிகரிக்கும்.


ஆயில்யம் : சோர்வு நீங்கும்.

---------------------------------------




சிம்மம்

செப்டம்பர் 05, 2021



தனவரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும். உடல் ஆரோக்கிய பாதிப்புகளால் செயல்பாடுகளில் ஈடுபாடு குறையும். தேவையற்ற செலவுகளை குறைப்பதன் மூலம் பிரச்சனைகள் குறையும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது அவசியமாகும். உடனிருப்பவர்கள் பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் மனதில் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



மகம் : ஏற்ற, இறக்கமான நாள்.


பூரம் : பிரச்சனைகள் குறையும்.


உத்திரம் : புதுவிதமான நாள்.

---------------------------------------




கன்னி

செப்டம்பர் 05, 2021



வியாபாரம் தொடர்பான உதவிகள் கிடைக்கும். சகோதர, சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவீர்கள். குடும்ப நபர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



உத்திரம் : உதவிகள் கிடைக்கும்.


அஸ்தம் : மனப்பக்குவம் அதிகரிக்கும்.


சித்திரை : ஒற்றுமை உண்டாகும்.

---------------------------------------




துலாம்

செப்டம்பர் 05, 2021



பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவும்போது சிந்தித்து செயல்படவும். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதில் ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதலும், கண்ணோட்டங்களும் மாறும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்



சித்திரை : லாபம் கிடைக்கும்.


சுவாதி : அனுகூலமான நாள்.


விசாகம் : புரிதல் ஏற்படும்.

---------------------------------------




விருச்சிகம்

செப்டம்பர் 05, 2021



மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். ஆடம்பரப் பொருட்களின் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் விழிப்புணர்வுடன் செயல்படவும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



விசாகம் : புத்துணர்ச்சியான நாள்.


அனுஷம் : ஈர்ப்பு அதிகரிக்கும்.


கேட்டை : முன்னேற்றமான நாள்.

---------------------------------------




தனுசு

செப்டம்பர் 05, 2021



நண்பர்களுக்கிடையே பொறுமையுடன் செயல்பட வேண்டும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் மற்றவர்களின் பணிகளையும் சேர்த்து பார்க்க வேண்டிய சூழ்நிலைகள் அமையும். புதிய நண்பர்களிடம் தேவையற்ற கருத்துக்கள் பகிர்வதை தவிர்க்கவும். மறைமுகமான சில விமர்சனங்கள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



மூலம் : பொறுமை வேண்டும்.


பூராடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.


உத்திராடம் : விமர்சனங்கள் உண்டாகும்.

---------------------------------------




மகரம்

செப்டம்பர் 05, 2021



வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். உயர் பொறுப்புகளில் இருப்பவர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தநிலை குறையும். சுபகாரியங்கள் தொடர்பான அலைச்சல்கள் அதிகரிக்கும். நிர்வாகம் தொடர்பான பணிகளில் சிறு சிறு மாற்றங்களின் மூலம் மேன்மை உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



உத்திராடம் : சாதகமான முடிவுகள் கிடைக்கும்.


திருவோணம் : மந்தநிலை குறையும்.


அவிட்டம் : மேன்மையான நாள்.

---------------------------------------




கும்பம்

செப்டம்பர் 05, 2021



மனதில் வித்தியாசமான சிந்தனைகள் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். வியாபார பணிகளில் சில மாற்றங்களின் மூலம் தனவரவுகள் மேம்படும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் குறையும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



அவிட்டம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.


சதயம் : கவனம் வேண்டும்.


பூரட்டாதி : வாய்ப்புகள் உண்டாகும்.

---------------------------------------




மீனம்

செப்டம்பர் 05, 2021



குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் ஏற்படும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை 



பூரட்டாதி : ஒற்றுமை உண்டாகும்.


உத்திரட்டாதி : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.


ரேவதி : இழுபறிகள் குறையும்.

---------------------------------------


ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியப் பயன்கள் குறித்த தகவல் கையேடு(Pension & Pension Benefits - Guide)...



>>> ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியப் பயன்கள் குறித்த தகவல் கையேடு(Pension & Pension Benefits - Guide)...

கட்டணமில்லா பேருந்து பயணம் – அரசு / உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் – மாணவ / மாணவியர்களுக்கு – 2021-2022 ஆம் கல்வியாண்டில் – கட்டணமில்லா – பேருந்து பயணம் தொடர நெறிமுறைகள் – வழங்குதல்...



 கட்டணமில்லா பேருந்து பயணம் – அரசு / உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் – மாணவ / மாணவியர்களுக்கு – 2021-2022 ஆம் கல்வியாண்டில் – கட்டணமில்லா – பேருந்து பயணம் தொடர நெறிமுறைகள் – வழங்குதல்...


அரசு / நகரவை / ஆதிதிராவிட நல / நிதியுதவி பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்,


கோவிட் – 19, தடையின்மையை தளர்த்தி, 01.09.2021 முதல், பள்ளிகள் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளதை முன்னிட்டு, அரசு உயர் / மேல்நிலை / நகரவை / ஆதிதிராவிட நல / நிதியுதவி / மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியர்கள் சீருடை அல்லது சென்ற ஆண்டு பள்ளிகளில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை நடத்துனர்களிடம் காண்பித்து தம் இருப்பிடங்களில் இருந்து பயிலும் பள்ளிவரை கட்டணமின்றி பயணிக்காலம்.


எனவே, வேலூர் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள், மாணவ / மாணவியருக்கு, இப்பொருள் சார்ந்து தக்க அறிவுரை வழங்குமாறு சார்ந்த தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


ஆசிரியர் பணியிட விவரங்களை EMIS இணையத்தில் DSE Staff fixation-ல் பதிவேற்றம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவு - தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின்(பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க.எண்:040678/சி3/இ1/2021, நாள்:02-09-2021......


தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின்(பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க.எண்:040678/சி3/இ1/2021, நாள்:02-09-2021...


 2021-22ம் கல்வியாண்டிற்கான பணியாளர் நிர்ணயம் சார்பாக கல்வி மேலாண்மைத் தகவல் முகமை இணையதளத்தில் மாணவர்களின் சேர்க்கை விவரம் மற்றும் பணிபுரியும் ஆசிரியர்களின் விவரம் ஆகியவை முதன்மைக் கல்வி அலுவலர்களால் பதிவேற்றம் செய்யப்பெற்று வருகின்றன.


 தற்போது கல்வி மேலாண்மைத் தகவல் முகமை இணையதளத்தில் ( EMIS ) அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் ( Sanctioned Posts ) சார்பான விவரங்களைப் பதிவேற்றம் செய்திட ஏதுவாக உள்ளீடு செய்ய DSE Staff fixation என்ற தலைப்பில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.


எனவே , சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை ( Sanctioned Posts )  ( Scale Register ) ஒப்பிட்டு சரிபார்த்து மேற்படி இணையத்தில் பதிவேற்றம் செய்திடல் வேண்டும்.


 அவ்வாறு பதிவேற்றம் செய்யப்படும்போது இப்பணியிடங்கள் கடந்த ஆண்டுகளில் ஆசிரியரின்றி உபரி எனக் கண்டறியப்பட்டு ( Surplus post without person ) இயக்குநரின் பொதுத்தொகுப்பிற்கு சரண் செய்யப்பட்டிருந்தால் அப்பணியிடங்களை எக்காரணம் கொண்டும் மீளவும் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களாகக் கருதி பதிவேற்றம் செய்தல் கூடாது.



காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில்(Karaikudi Alagappa University) SSP (Summer Sequential Programme) முறையில் நடத்தப்பெறும் M.Phil., உயர் கல்விக்கு ஊக்க ஊதிய உயர்வு(Incentive) வழங்க தகுதியில்லை என பள்ளிக் கல்வித் துறை மதுரை மண்டல கணக்கு அலுவலர் (தணிக்கை) RTI தகவல் கடிதம் ந.க.எண்:1642/அ1/2021, நாள்: 27-08-2021...



 காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில்(Karaikudi Alagappa University) SSP (Summer Sequential Programme) முறையில் நடத்தப்பெறும் M.Phil., உயர் கல்விக்கு ஊக்க ஊதிய உயர்வு(Incentive) வழங்க தகுதியில்லை என பள்ளிக் கல்வித் துறை மதுரை மண்டல கணக்கு அலுவலர் (தணிக்கை) RTI தகவல் கடிதம் ந.க.எண்:1642/அ1/2021, நாள்: 27-08-2021...


>>> பள்ளிக் கல்வித் துறை மதுரை மண்டல கணக்கு அலுவலர் (தணிக்கை) RTI தகவல் கடிதம் ந.க.எண்:1642/அ1/2021, நாள்: 27-08-2021...



டாக்டர்.ராதாகிருஷ்ணன் விருது(Dr.Radhakrishnan Award) வழங்கும் விழா தற்காலிகமாக ஒத்திவைப்பு - தேதி பின்னர் அறிவிக்கப்படும் - முதன்மைக் கல்வி அலுவலர் அறிவிப்பு...

 டாக்டர்.ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா தற்காலிகமாக ஒத்திவைப்பு - தேதி பின்னர் அறிவிக்கப்படும் - முதன்மைக் கல்வி அலுவலர் அறிவிப்பு...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-11-2024

       பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல...