கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கல்வித் தொலைக்காட்சியில்(Kalvi TV) 08-09-2021 அன்று ஒளிபரப்பான ஆறாம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பு(VI & VII Standard) கணக்கு பாடக் காணொளிகள்(Mathematics Videos)...



கல்வித் தொலைக்காட்சியில் 08-09-2021 அன்று ஒளிபரப்பான ஆறாம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பு கணக்கு பாடக் காணொளிகள்...



💥 ஆறாம் வகுப்பு - அலகு 4 - வடிவியல் - கோணமானியைப் பயன்படுத்துதல் - குறுங்கோணம், செங்கோணம், விரிகோணம் வரைதல் -  https://youtu.be/hqFtsJbk3bc



💥 ஏழாம் வகுப்பு - அலகு 2 - அளவைகள் - https://youtu.be/MX193kD0AiM


கல்வி தொலைக்காட்சியில்(Kalvi TV) 08-09-2021 அன்று ஒளிபரப்பான எட்டாம் வகுப்பு காணொளிகள்(VIII Standard Videos)...



 கல்வி தொலைக்காட்சியில்  08-09-2021 அன்று ஒளிபரப்பான எட்டாம் வகுப்பு காணொளிகள்...



💥  தமிழ் - இயல் 1 - உரைநடை - தமிழ் வரிவடிவ வளர்ச்சி - https://youtu.be/M_kFKRNa4uo



 💥 ஆங்கிலம் - Unit 4 – My Reminiscence - https://youtu.be/nEMfVtO7Y-Y



 💥 கணக்கு - அலகு 4 - வாழ்வியல் கணிதம் - கூட்டுவட்டி வாய்ப்பாடு பயன்படுத்தி வட்டி கணக்கிடுதல் -  https://youtu.be/SOkPtFkYmkM



💥 அறிவியல் - அலகு 16 - நுண்ணுயிரிகள் - வைரஸ் மற்றும் பாக்டீரியா - https://youtu.be/1q-e8YIq5Aw



💥 சமூக அறிவியல் - அலகு 3 - கிராம சமூகமும் வாழ்க்கை முறையும் - விவசாயிகளின் புரட்சி -

https://youtu.be/vQYKZrsi1CQ


12-09-2021 அன்று கோவிட் தடுப்பூசி மெகா சிறப்பு முகாம்(Mega COVID Vaccination Camp) - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்...



செப்டம்பர் 12ஆம் தேதி கோவிட் தடுப்பூசி மெகா சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ளுங்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்...


*கோவிட் தடுப்பூசி மெகா சிறப்பு முகாம் 12.09.2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 40,000 மையங்களில் நடைபெற உள்ளது. இம்மையங்களில் 18 வயதிற்கு மேற்பட்ட 20 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி அளிக்க இலக்கு நிர்ணயித்து அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளது. ICDS, NGOs, வருவாய், உள்ளாட்சி அமைப்புகள், (கிராம மற்றும் நகர), கல்வித்துறை, யுனிசெப், WHO மற்றும் பன்னாட்டு ரோட்டரி சங்கங்கள் கோவிட் தடுப்பூசி முகாம் பணிகளுக்கு உறுதுணையாக உள்ளன.*


*முக்கிய அம்சங்கள்:*


1️⃣ *கோவிட் தடுப்பூசி வழங்கும் மையங்கள் காலை 7.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்படும்.*


2️⃣ *ஒவ்வொரு மையத்திலும் போதிய பணியாளர்கள் பணியில் இருப்பார்கள்.*


3️⃣ *18 வயதிற்கு மேற்பட்ட 20 இலட்சம் நபர்களுக்கு 12.09.2021 ஞாயிற்றுக்கிழமை கோவிட் தடுப்பூசி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.*


4️⃣ *தடுப்பூசி செலுத்திய பிறகு ஏதாவது பின்விளைவுகள் ஏற்பட்டால் அதை எதிர்கொள்ள அனைத்து மையங்களிலும் AEFI Kit தயார் நிலையில் வைக்கப்படும்.*


5️⃣ *அனைத்து மாவட்டங்களிலும் Task Force, Micro Planning, Supervisor Training, Vaccinator Training நடத்தப்பட்டுள்ளது*


6️⃣ *தேவையான IEC (Poster, Banner, Miking) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.*


7️⃣ *கோவிட் சிறப்பு முகாமில் பாதுகாப்பான முறையில் நடைபெற கோவிட் -19 நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும்.*


8️⃣ *சமூக இடைவெளி கடைபிடித்தல், முகக்கவசம் அணிதல் மற்றும் கைகழுவுதல் கட்டாயமாகும்.*


9️⃣ *தடுப்பூசி கொடுக்கும் முன் சோப்பைக் கொண்டு கைகழுவுவது / Sanitizer உபயோகப்படுத்துவது கட்டாயமாகும்.*


 🔟 *பெரியவர்களுக்கு காய்ச்சல் / இருமல் அல்லது மற்ற கோவிட் தொற்று தொடர்பாக இருந்தால் மையங்களில் அனுமதிக்கக் கூடாது.*


⏸️ *மையங்களில் கூட்டமாக இருப்பதை தவிர்க்க வேண்டும். தடுப்பூசி பெறுபவர்களுடன் ஒரு நபர் மட்டுமே அனுமதிக்க வேண்டும்.*


1️⃣2️⃣ *பயனாளிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆதாரங்களை எடுத்து வரவேண்டும்.*


1️⃣3️⃣ *சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.*


1️⃣4️⃣ *அனைத்து மையங்களிலும் போதுமான காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்படும்.*


1️⃣5️⃣ *தமிழ்நாடு அரசின் பெரும் முயற்சியின் விளைவாக, ஒன்றிய அரசிடமிருந்து போதுமான தடுப்பூசி பெறப்பட்டுள்ளது.*


அனைத்து மக்களும் இந்த மெகா தடுப்பூசி முகாமினை சிறந்த முறையில் பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுகொள்ளப்படுகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு புதிய ஆளுநராக திரு.ஆர்.என்.ரவி அவர்கள் நியமனம்(Mr.R.N.Ravi appointed as Tamilnadu Governor by President of India)...






 தமிழ்நாடு புதிய ஆளுநராக திரு.ஆர்.என்.ரவி அவர்கள் நியமனம்...


ஆர்.என்.ரவி தற்போது நாகலாந்து ஆளுநராக உள்ளார்.


பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்...


தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம் - குடியரசுத்தலைவர்.


நாகாலாந்தின் ஆளுநர் ஆர்.என். ரவியை தமிழ்நாட்டின் ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டிருக்கிறார். 


தமிழ்நாட்டின் தற்போதைய ஆளுநரான பன்வாரிலால் புரோஹித், பஞ்சாபின் ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பை வகித்துவரும் நிலையில், அவர் இனிமேல் பஞ்சாபின் ஆளுநராக நீடிப்பார் என அறிவிப்பு. 


அசாமின் ஆளுநரான பேராசிரியர் ஜகதீஷ் முகி, நாகாலாந்தின் பொறுப்புகளையும் கூடுதலாக கவனிப்பார். ஓய்வுபெற்ற லெப்டினென்ட் ஜெனரல் குர்மித் சிங் உத்தராகண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். 


தமிழ்நாட்டின் புதிய ஆளுநரான ஆர்.என். ரவி, பிஹாரைச் சேர்ந்தவர். கேரள மாநிலத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். 


2019ஆம் ஆண்டிலிருந்து இவர் நாகாலாந்தின் ஆளுநராக இருந்து வருகிறார்.


இன்றைய (10-09-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

செப்டம்பர் 10, 2021



கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவதற்கான சூழ்நிலைகள் அமையும். தனவரவுகளில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். மனதில் பழைய சிந்தனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



அஸ்வினி : பிரச்சனைகள் குறையும்.


பரணி : கவனம் வேண்டும்.


கிருத்திகை : மாற்றமான நாள்.

---------------------------------------




ரிஷபம்

செப்டம்பர் 10, 2021



உயர் பதவிகளில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த செயல்பாடுகளை செய்து முடிப்பீர்கள். மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். நண்பர்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். உத்தியோக பணிகளில் சில நுணுக்கங்களை அறிவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் 



கிருத்திகை : அறிமுகம் கிடைக்கும்.


ரோகிணி : எண்ணங்கள் நிறைவேறும்.


மிருகசீரிஷம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.

---------------------------------------




மிதுனம்

செப்டம்பர் 10, 2021



உறவினர்களின் வழியில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்துவந்த சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும். வர்த்தக பணிகளில் சில நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் சோர்வின்றி சுறுசுறுப்புடன் செயல்படுவது நல்லது.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை



மிருகசீரிஷம் : ஆதரவான நாள்.


திருவாதிரை : தீர்வு கிடைக்கும்.


புனர்பூசம் : சுறுசுறுப்புடன் செயல்படவும்.

---------------------------------------




கடகம்

செப்டம்பர் 10, 2021



புத்துணர்ச்சியான மனநிலையுடன் காணப்படுவீர்கள். மின்சாதனம் தொடர்பான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வியாபார பணிகளில் வேலையாட்களின் ஒத்துழைப்பும், ஒப்பந்தமும் சாதகமாக அமையும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



புனர்பூசம் : புத்துணர்ச்சியான நாள்.


பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.


ஆயில்யம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

---------------------------------------




சிம்மம்

செப்டம்பர் 10, 2021



சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வாகனப் பயணங்களின் மூலம் சாதகமான பலன்கள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்



மகம் : இழுபறிகள் அகலும்.


பூரம் : நம்பிக்கை அதிகரிக்கும்.


உத்திரம் : சாதகமான நாள்.

---------------------------------------




கன்னி

செப்டம்பர் 10, 2021



செய்யும் செயல்களில் பதற்றமின்றி செயல்படவும். உடனிருப்பவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். வியாபார பணிகளில் இருந்துவந்த மறைமுக தடைகளை அறிவீர்கள். உத்தியோக பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு காலதாமதமாக கிடைக்கும். மனதில் இருக்கும் கருத்துக்களை வெளிப்படுத்தும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம் 



உத்திரம் : விவாதங்களை தவிர்க்கவும்.


அஸ்தம் : தடைகளை அறிவீர்கள்.


சித்திரை : காலதாமதம் உண்டாகும்.

---------------------------------------




துலாம்

செப்டம்பர் 10, 2021



கணவன், மனைவிக்கிடையே புரிதலும், நெருக்கமும் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் ஆதாயம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். வியாபார பணிகளில் வேலையாட்களிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்வதன் மூலம் மேன்மை ஏற்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம் 



சித்திரை : ஆதாயம் ஏற்படும்.


சுவாதி : அனுபவம் கிடைக்கும்.


விசாகம் : மேன்மையான நாள்.

---------------------------------------




விருச்சிகம்

செப்டம்பர் 10, 2021



குழந்தைகளின் உயர் கல்வி பற்றிய சிந்தனைகள் ஏற்படும். தேவையற்ற செலவுகளை குறைத்து சேமிப்புகளை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். நண்பர்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். வியாபார பணிகளில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சாதகமான சூழ்நிலைகள் அமையும். புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்



விசாகம் : சேமிப்புகள் மேம்படும்.


அனுஷம் : உதவிகள் கிடைக்கும்.


கேட்டை : இலக்குகள் பிறக்கும்.

---------------------------------------




தனுசு

செப்டம்பர் 10, 2021



குழந்தைகளின் வழியில் மனமகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உறவினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வியாபார பணிகளில் கூட்டாளிகளிடம் சாதகமான முடிவுகள் கிடைக்கும். வர்த்தக பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் 



மூலம் : மகிழ்ச்சியான நாள்.


பூராடம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.


உத்திராடம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

---------------------------------------




மகரம்

செப்டம்பர் 10, 2021



உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். அரசு சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்பட வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



உத்திராடம் : கவலைகள் நீங்கும்.


திருவோணம் : மேன்மை உண்டாகும்.


அவிட்டம் : பொறுமை வேண்டும்.

---------------------------------------





கும்பம்

செப்டம்பர் 10, 2021



புதிய முயற்சிகளுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். சிறு, குறுந்தொழில் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். ஆராய்ச்சி தொடர்பான பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். புதுவிதமான தேடல்கள் மனதில் உண்டாகும். 



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம் 



அவிட்டம் : சாதகமான நாள்.


சதயம் : முன்னேற்றம் ஏற்படும்.


பூரட்டாதி : மந்தத்தன்மை குறையும்.

---------------------------------------




மீனம்

செப்டம்பர் 10, 2021



மற்றவர்களிடம் உரையாடும் பொழுது பேச்சுக்களில் கவனம் வேண்டும். நண்பர்களின் வழியில் எதிர்பாராத அலைச்சல்கள் உண்டாகும். தந்தைவழி உறவினர்களிடம் அனுசரித்து செல்லவும். நிர்வாகம் சார்ந்த பணிகளில் ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்கவும். வேகத்தை விட விவேகம் அவசியமாகும். 



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு



பூரட்டாதி : கவனம் வேண்டும்.


உத்திரட்டாதி : அலைச்சல்கள் உண்டாகும்.


ரேவதி : ஆலோசனைகள் வேண்டும்.

---------------------------------------


2020-21 நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு(31-12-2021) டிசம்பர் 31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது(Income tax return filing deadline for FY 2020-21 extended to December 31, 2021) - CBDT Circular No.17/2021 in F.No.225/49/2021/ITA-II, Dated: 09.09.2021...



2020-21 நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு டிசம்பர் 31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது(Income tax return filing deadline for FY 2020-21 extended to December 31, 2021)...


>>> Click here to Download CBDT Circular No.17/2021 in F.No.225/49/2021/ITA-II, Dated:  09.09.2021...


CBDT வருமான வரி அறிக்கைகள் மற்றும் மதிப்பீட்டு ஆண்டு 2021-22 க்கான பல்வேறு தணிக்கை அறிக்கைகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்கிறது. வெளியிட்ட நாள்: 09 SEP 2021 7:24 PM PIB டெல்லி வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில் வரி செலுத்துவோர் மற்றும் பிற பங்குதாரர்களால் அறிக்கையிடப்பட்ட சிரமங்களைக் கருத்தில் கொண்டு மற்றும் வருமான வரிச் சட்டம், 1961 ("சட்டம்"), மதிப்பீட்டு ஆண்டு 2021-22 க்கான பல்வேறு தணிக்கை அறிக்கைகள், மத்திய நேரடி வரிகள் வாரியம் ( CBDT) 2021-22 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி அறிக்கைகள் மற்றும் பல்வேறு தணிக்கை அறிக்கைகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மேலும் நீட்டிக்க முடிவு செய்துள்ளது. விவரங்கள் பின்வருமாறு: 2021-22 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமானத்தை திரும்பப் பெறுவதற்கான இறுதி தேதி, இது ஜூலை 31, 2021 சட்டத்தின் பிரிவு 139 ன் துணைப்பிரிவு (1) இன் கீழ், 2021 செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 20.05.2021 தேதியிட்ட 2021, டிசம்பர் 31, 2021 வரை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது; முந்தைய ஆண்டு 2020-21 ஆம் ஆண்டிற்கான சட்டத்தின் எந்தவொரு விதியின் கீழும் தணிக்கை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டிய தேதி, 2021 செப்டம்பர் 30, 2021 அக்டோபர் 31, 2021 இல் 20.05.2021 தேதியிட்ட சுற்றறிக்கை எண். 2022 ஜனவரி 15 வரை மேலும் நீட்டிக்கப்பட்டது; கணக்காளரிடமிருந்து சர்வதேச பரிவர்த்தனை அல்லது குறிப்பிட்ட உள்நாட்டு பரிவர்த்தனைக்கு உட்பட்ட நபர்கள் 2020-21 இன் முந்தைய ஆண்டிற்கான சட்டத்தின் பிரிவு 92E இன் கீழ் அறிக்கையை சமர்ப்பிக்கும் தேதி, 2021 நவம்பர் 30, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 20.05.2021 தேதியிட்ட .9/2021, இதன்மூலம் ஜனவரி 31, 2022 வரை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது;


2021-22 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருவாய் திரும்பப் பெறுவதற்கான இறுதி தேதி, இது அக்டோபர் 31, 2021 சட்டத்தின் பிரிவு 139 இன் துணைப் பிரிவு (1) இன் கீழ், 3021 நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 2021 தேதியிட்ட 20.05.2021, இதன்மூலம் 15 பிப்ரவரி, 2022 வரை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது; 2021-22 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருவாய் திரும்ப வழங்குவதற்கான இறுதி தேதி, இது நவம்பர் 30, 2021 சட்டத்தின் பிரிவு 139 இன் துணைப்பிரிவு (1) இன் கீழ், டிசம்பர் 31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 20.05.2021 தேதியிட்ட 2021, பிப்ரவரி 28, 2022 வரை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது; 2021-22 மதிப்பீட்டு ஆண்டிற்கான தாமதமான/திருத்தப்பட்ட வருமானத்தை வழங்குவதற்கான இறுதி தேதி, இது சட்டத்தின் பிரிவு 139 இன் துணைப்பிரிவு (4)/துணைப்பிரிவு (5) இன் கீழ் 31 டிசம்பர், 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 31 ஜனவரி, 2022, 20.05.2021 தேதியிட்ட சுற்றறிக்கை எண் 9/2021, இதன்மூலம் மேலும் 31 மார்ச், 2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது; 20.05.2021 தேதியிட்ட சுற்றறிக்கை எண் 9/2021 ன் உட்பிரிவுகள் (9), (12) மற்றும் (13) மற்றும் உட்பிரிவுகள் (1), (4) மற்றும் (5) இல் குறிப்பிடப்பட்டுள்ள தேதிகளின் நீட்டிப்பு மேலும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ) சட்டத்தின் பிரிவு 1 முதல் பிரிவு 234A க்கு மேலே உள்ள விளக்கத்திற்கு பொருந்தாது. அந்தப் பிரிவு ஒரு லட்ச ரூபாயைத் தாண்டியது. மேலும், சட்டத்தின் பிரிவு 207 இன் துணைப்பிரிவு (2) -ல் குறிப்பிடப்பட்டுள்ள இந்தியாவில் வசிக்கும் ஒரு தனிநபர், சட்டத்தின் பிரிவு 140A- ன் கீழ் அவர் செலுத்திய வரி உரிய தேதிக்குள் (சுற்றறிக்கை எண் 9/ கீழ் நீட்டிப்பு இல்லாமல்) 20.05.2021 தேதியிட்ட 2021 மற்றும் மேற்கண்டவாறு) அந்தச் சட்டத்தில் வழங்கப்பட்டவை முன்கூட்டியே வரி என்று கருதப்படும். CBDT சுற்றறிக்கை எண் .17/2021 F.No.225/49/2021/ITA-II தேதியிட்ட 09.09.2021.


>>> Click here to Download CBDT Circular No.17/2021 in F.No.225/49/2021/ITA-II, Dated:  09.09.2021...


CBDT extends due dates for filing of Income Tax Returns and various reports of audit for Assessment Year 2021-22

Posted On: 09 SEP 2021 7:24PM by PIB Delhi

On consideration of difficulties reported by the taxpayers and other stakeholders in filing of Income Tax Returns and various reports of audit for the Assessment Year 2021-22 under the Income-tax Act, 1961(the “Act”), Central Board of Direct Taxes (CBDT) has decided to further extend the due dates for filing of Income Tax Returns and various reports of audit for the Assessment Year 2021-22. The details are as under:


The due date of furnishing of Return of Income for the Assessment Year 2021-22, which was 31st July, 2021 under sub-section (1) of section 139 of the Act, as extended to 30th September, 2021 vide Circular No.9/2021 dated 20.05.2021, is hereby further extended to 31st December, 2021;

The due date of furnishing of Report of Audit under any provision of the Act for the Previous Year 2020-21, which is 30th September, 2021, as extended to 31st October, 2021 vide Circular No.9/2021 dated 20.05.2021, is hereby further extended to 15th January, 2022;

The due date of furnishing Report from an Accountant by persons entering into international transaction or specified domestic transaction under section 92E of the Act for the Previous Year 2020-21, which is 31st October, 2021, as extended to 30th November, 2021 vide Circular No.9/2021 dated 20.05.2021, is hereby further extended to 31st January, 2022;

The due date of furnishing of Return of Income for the Assessment Year 2021-22, which is 31st October, 2021 under sub-section (1) of section 139 of the Act, as extended to 30th November, 2021 vide Circular No.9/2021 dated 20.05.2021, is hereby further extended to 15th February, 2022;

The due date of furnishing of Return of Income for the Assessment Year 2021-22, which is 30th November, 2021 under sub-section (1) of section 139 of the Act, as extended to 31st December, 2021 vide Circular No.9/2021 dated 20.05.2021, is hereby further extended to 28th February, 2022;

The due date of furnishing of belated/revised Return of Income for the Assessment Year 2021-22, which is 31st December, 2021 under sub-section (4)/sub-section (5) of section 139 of the Act, as extended to 31st January, 2022, vide Circular No.9/2021 dated 20.05.2021, is hereby further extended to 31st March, 2022;

It is also clarified that the extension of the dates as referred to in clauses (9), (12) and (13) of Circular No.9/2021 dated 20.05.2021 and in clauses (1), (4) and (5) above shall not apply to Explanation 1 to section 234A of the Act, in cases where the amount of tax on the total income as reduced by the amount as specified in clauses (i) to (vi) of sub-section (1) of that section exceeds rupees one lakh. Further, in case of an individual resident in India referred to in sub-section (2) of section 207 of the Act, the tax paid by him under section 140A of the Act within the due date (without extension under Circular No.9/2021 dated 20.05.2021 and as above) provided in that Act, shall be deemed to be the advance tax.


CBDT Circular No.17/2021 in F.No.225/49/2021/ITA-II dated 09.09.2021 issued. The said Circular is available on www.incometaxindia.gov.in.








2207 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நேரடி நியமனத்துக்கான புதிய அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்(PGTRB - Post Graduate Teacher Posts Teacher Recruitment Board has issued a new Notification)...



 2207 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நேரடி நியமனத்துக்கான புதிய அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்(Post Graduate Teacher Posts Teacher Recruitment Board has issued a new (PGTRB)Notification)...


தேர்வர்களுக்கான வயதுத் தளர்வில் மாற்றமில்லை - பொதுப் பிரிவினருக்கு 40 வயது - இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 45 வயது உச்சவரம்பு நிர்ணயம்...


TRB - Direct Recruitment for the post of Post Graduate Assistants / Physical Education Directors Grade-I and Computer Instructor Grade I - 2020 - 2021 - Notification - Revised Date : 09.09.2021...


Advertisement No. : 01/2021

Revised Date : 09.09.2021


PGTRB Vacancies : Subject wise...

தமிழ் 271

English 192, 

Mathematics 114

Physics 97

Chemistry 191

Botany 92

Zoology 109

Commerce 313

Economics 289

History 115

Geography 12

Home science 3

Bio Chemistry 1

Indian Culture 3

Physical Grade 1 : 39

Computer Instructor : 44


>>> Click here to Download PGTRB Notification...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DEE Proceedings to select and send 40 teachers from each block who have made the best contribution to the learning progress of the students through TNSED Manarkeni App

  ஒவ்வொரு ஒன்றியத்தில் இருந்தும் சிறந்த 40 ஆசிரியர்கள் தேர்வு - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்... மணற்கேணி செயலி மூலம் மாணவர்களின் ...