கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பிரதமர் வாக்குறுதி அளித்தபடி ரூ.15 லட்சத்தில் முதல் தவணை 5.5 லட்சம் வங்கிக் கணக்கிற்கு வந்தது - அதிர்ச்சி கொடுத்த நபர்...

 


பீகாரில் வங்கி தவறுதலாக டெபாசிட் செய்த ரூ.5.5 லட்சம் பணத்தை திருப்பி வழங்க கிராமவாசி மறுப்பு. அந்தப் பணம் பிரதமர் மோடி வாக்குறுதி அளித்த ரூ.15 லட்சத்தின் முதல் தவணை என நினைத்து செலவழித்துவிட்டதாக கூறியதால் வங்கி ஊழியர்கள் அதிர்ச்சி...


பிரதமர் சொன்னபடி ரூ.15 லட்சத்தில் முதல் தவணை 5.5 லட்சம் வந்தது- அதிர்ச்சி கொடுத்த நபர்.


பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தில் உள்ள பக்தியார்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித் தாஸ். 


அவரது வங்கி கணக்கிற்கு தவறுதலாக வங்கி நிர்வாகம் 5.5 லட்ச ரூபாயை கிரெடிட் செய்துள்ளது. 


ஒரு கட்டத்தில் வங்கி நிர்வாகம் அந்த தவறை உணர்ந்து ரஞ்சித் தாஸை தொடர்பு கொண்டுள்ளது. 


அதோடு அவருக்கு பலமுறை நோட்டீசும் கொடுக்கப்பட்டுள்ளது. 


ஆனால் அதை அவர் கண்டும் காணாமல் இருந்துள்ளார். 


இறுதியில் வங்கி தரப்பு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளது. 


உடனடியாக காவல் அதிகாரிகள் ரஞ்சித் தாஸை கைது செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர். 


அதில் அவர் வியக்கும் அளவிற்கு வாக்குமூலம் கொடுத்துள்ளார். 


“கடந்த மார்ச் மாதம் எனது வங்கி கணக்கிற்கு 5.5 லட்சம் வந்தது. அது கிடைத்தவுடன் நான் மிகவும் உற்சாகம் அடைந்தேன். பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதியின் படி 15 லட்ச ரூபாயில் முதல் தவணையாக 5.5 லட்ச ரூபாயை எனது வங்கி கணக்கில் செலுத்தினார் என நினைத்தேன். நான் அந்த பணத்தை செலவு செய்து விட்டேன். இப்போது எனது வங்கி கணக்கில் பணம் ஏதும் இல்லை” என போலீசாரிடம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். 


அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 09.09.2021 அன்று வெளியான முதுகலை ஆசிரியர் நியமன அறிவிப்பிற்கு ஒரு வார கால தடை(Stay to PGTRB Announcement) - மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் குறித்து நீதிமன்றத்தின் 2019 உத்தரவுகள் பின்பற்றப்படவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்(The Chennai High Court has condemned the non-compliance of the court's 2019 orders regarding facilities for the disabled - a one-week stay on the announcement of appointment of postgraduate teachers by the Teachers' Recruitment Board on 09.09.2021)...



 ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 09.09.2021 அன்று வெளியான முதுகலை ஆசிரியர் நியமன அறிவிப்பிற்கு ஒரு வார கால தடை - மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் குறித்து நீதிமன்றத்தின் 2019 உத்தரவுகள் பின்பற்றப்படவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்(The Chennai High Court has condemned the non-compliance of the court's 2019 orders regarding facilities for the disabled - a one-week stay on the announcement of appointment of postgraduate teachers by the Teachers' Recruitment Board on 09.09.2021)...


>>> Click here to Download Court Order...


தமிழ்நாடு அரசின் அரசாணைப்படி நாளை (17.09.2021) வெள்ளிக்கிழமை அனைத்து பள்ளிகளிலும் தந்தை பெரியார் பிறந்த நாளில் "சமூக நீதி நாள்(Social Justice Day Oath)" உறுதிமொழி...

 தமிழ்நாடு அரசின்  அரசாணைப்படி நாளை (17.09.2021) வெள்ளிக்கிழமை  அனைத்து பள்ளிகளிலும் தந்தை பெரியார் பிறந்த நாளில் "சமூக நீதி நாள்" உறுதிமொழி...



மகப்பேறு விடுப்பு(Maternity Leave) வழங்குவதில் எந்த பாகுபாடும் காட்டுவதில்லை - தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் விளக்கம்...



 மகப்பேறு விடுப்பு வழங்குவதில் பணி வரன்முறை செய்யப்பட்ட ஊழியர்களுக்கும், வரன்முறைப்படுத்தப்படாத ஊழியர்களுக்கும் இடையில் எந்த பாகுபாடும் காட்டுவதில்லை - தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் விளக்கம்.


வரன்முறைப்படுத்தப்படாத ஊழியர்களும் பணியில் சேர்ந்து ஓராண்டு முடிந்திருந்தால் விடுப்பை பெற்றுக்கொள்ளலாம் - தமிழ்நாடு அரசு.


மகப்பேறு விடுப்பு 270 நாட்களில் இருந்து 365 நாட்களாக அதிகரித்து ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது.

6 முதல் 8 எட்டாம் வகுப்புக்கு அக்டோபர் முதல் வாரத்தில் பள்ளிகளை திறக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் - 2 வாரத்திற்குப் பிறகு 1 முதல் 5-ம் வகுப்புக்கு பள்ளிகள் திறப்பு...

1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தார் அமைச்சர் அன்பில் மகேஷ்.


 💥 6 முதல் 8 எட்டாம் வகுப்புக்கு அக்டோபர் முதல் வாரத்தில் பள்ளிகளை திறக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல்...


💥 2 வாரத்திற்குப் பிறகு 1 முதல் 5-ம் வகுப்புக்கு பள்ளிகள் திறப்பு...



ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாதோர்- அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் வயது முதிர்வு அடிப்படையில் 2022- 2023 ஆம் நிதி ஆண்டில் ஓய்வு பெறுதல் குறித்து(01.04.2022-முதல் 01.03.2023 வரை) விவரங்கள் கோருதல் சார்ந்து பெருநகர சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை...



 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாதோர்- அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் வயது முதிர்வு அடிப்படையில் 2022- 2023 ஆம் நிதி ஆண்டில் ஓய்வு பெறுதல் குறித்து(01.04.2022-முதல் 01.03.2023 வரை) விவரங்கள் கோருதல் சார்ந்து பெருநகர சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை...


>>> பெருநகர சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை, நாள்: 14-09-2021...




அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு Basic Quiz 18.09.2021 முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் நடத்துதல் சார்ந்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன(SCERT) இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 2073/ஈ1/2021, நாள்: 15-09-2021(Proceedings of the Director of the State Council of Educational Research and Training based on the conduct of Basic Quiz for 10th Standard students in Government High and Secondary Schools every Saturday from 18.09.2021)...



 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு Basic Quiz 18.09.2021 முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் நடத்துதல் சார்ந்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 2073/ஈ1/2021, நாள்: 15-09-2021(Proceedings of the Director of the State Council of Educational Research and Training based on the conduct of Basic Quiz for 10th Standard students in Government High and Secondary Schools every Saturday from 18.09.2021)...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Union Education Minister Mr. Dharmendra Pradhan launched The Teacher App - Press Release

   டீச்சர் ஆப் (The Teacher App) என்ற செயலியைத்  தொடங்கி வைத்தார் மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் - செய்தி வெளியீடு Union Educ...