கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசு அலுவலகங்களில் பயன்பாட்டில் உள்ள சில சுருக்கக் குறியீடுகளும், அதற்கான விரிதரவுகளும் (Some abbreviated codes in use in government offices and their details)...



அரசு அலுவலகங்களில் பயன்பாட்டில் உள்ள சில சுருக்கக் குறியீடுகளும், அதற்கான விரிதரவுகளும் (Some abbreviated codes in use in government offices and their details):


✓ *அரசு அலுவலகங்களில் இருந்து வருகின்ற கடிதங்களில் ந.க. எண்; மூ.மு.எண்

என்று எழுதி சில எண்களைக் குறிப்பிட்டு, நாளையும் அதில் குறிப்பிட்டு இருப்பார்கள்.

அதனை நீங்களும் பார்த்திருக்கலாம். 

*இந்த எண்கள் மிகவும் முக்கியமானவை என்பது நமக்குத் தெரியும்.


*ஆனால், அதன் அருகில் எழுதப்பட்டுள்ள எழுத்துக்கள் எதைக் குறிக்கின்றன? என்பது பல பேருக்குத் தெரியாது. அதற்காகத்தான் இந்தப் பதிவு :*


1. *ந.க எண் என்றால், நடப்புக் கடித எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்*


2. *ஓ.மு. எண் என்றால், ஓராண்டு முடிவு எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்*


3. *மூ.மு எண் என்றால்  மூன்றாண்டு முடிவு எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்*


4. *நி.மு. எண் என்றால் நிரந்தர முடிவு எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்*


5. *ப.மு. எண் என்றால், பத்தாண்டு முடிவு எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்.*


6. *தொ.மு எண் என்றால், தொகுப்பு முடிவு எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்*


7. *ப.வெ எண் என்றால்  பருவ வெளியீடு எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்*


8. *நே.மு.க எண் என்றால்,  நேர்முகக் கடித எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்*


*மேற்கண்ட வார்த்தைகளில் ந.க.எண்  (நடப்புக் கணக்கு எண்) மட்டுமே அதிகப் பயன்பாட்டில் இருக்கும்.* 


நேர்முகக் கடிதம் என்பது, கீழ்மட்ட அலுவலருக்கு, மேல்மட்ட அதிகாரி எழுதும் கடிதம் ஆகும். இது நேரடியாகப் பேசியதற்குச் சமம் என்பதால், அதற்கான பதிலை கீழ்மட்ட அலுவலர் விரைந்து  அளிக்க  வேண்டும். 


மேற்கண்ட எண்கள் இல்லாமல் இருந்தால்...?

மேற்கண்ட குறிப்பு எண்கள் ஏதும் இல்லாமல் அரசு அலுவலகங்களில் இருந்து கடிதம் உங்களுக்கு வந்தால்,  அந்தக் கடிதம் சட்டத்துக்குப் புறம்பாகத் தங்களின் அலுவலகப்பதிவேட்டில் பதியாமல் அரசு அலுவலர்கள் அனுப்பிய கடிதம் என்று நீங்கள் முடிவுசெய்து கொள்ளலாம். *கடிதம் அனுப்புகின்ற ஊழியர்  தனது  கடமை தவறியுள்ளார் என்பதை இதுபோன்ற கடிதத்தை வைத்து நிரூபிக்கலாம்.*✓

கனமழை காரணமாக இன்று (09-11-2021) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்...

 



இன்று (09.11.2021) கனமழை  காரணமாக 17 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை...



*1. கடலூர்* (பள்ளி)

*2. மயிலாடுதுறை*

*3.தென்காசி*

*4.நெல்லை*

*5.சென்னை*

*6.செங்கல்பட்டு*

*7. காஞ்சிபுரம்*

*8.திருவள்ளூர்*

*9.விழுப்புரம்*

*10.விருதுநகர் , (பள்ளி)*

*11.நாகை (பள்ளி)*

*12. இராமநாதபுரம் .(பள்ளி)*

*13. திருவாரூர்(பள்ளி)*

*14. மதுரை*

*15. தஞ்சை (பள்ளி)*

*16. புதுக்கோட்டை (பள்ளி)*

*17. சிவகங்கை*




தமிழ்நாடு அரசு - 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான NTSE 2021-22க்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் (Government of Tamilnadu - Notification and Application for NTSE 2021-22 for 10th Standard Students)...



 தமிழ்நாடு அரசு - 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான NTSE 2021-22க்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் (Government of Tamilnadu - Notification and Application for NTSE 2021-22 for 10th Standard Students)...


>>> NTSE 2021-22க்கான செய்தி வெளியீடு....


>>> NTSE 2021-22க்கான அறிவிப்பு...


>>> NTSE 2021-22க்கான  விண்ணப்பம்...

இன்றைய (09-11-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

நவம்பர் 09, 2021



குடும்பத்தில் பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புத்துணர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். வெற்றிகரமான நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



அஸ்வினி : ஆதரவு கிடைக்கும். 


பரணி : ஒத்துழைப்பான நாள். 


கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------






ரிஷபம்

நவம்பர் 09, 2021



மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் தோன்றும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. எதிர்பாராத செலவுகளின் மூலம் அவ்வப்போது நெருக்கடிகள் ஏற்படும். வரவுக்கு மீறிய செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் அலைச்சல்கள் மேம்படும். நிதானம் வேண்டிய நாள்.


 

அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு



கிருத்திகை : சிந்தனைகள் மேம்படும். 


ரோகிணி : நெருக்கடிகள் உண்டாகும்.


மிருகசீரிஷம் : அலைச்சல்கள் மேம்படும்.

---------------------------------------





மிதுனம்

நவம்பர் 09, 2021



புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். வியாபாரம் தொடர்பான பணிகளில் கூட்டாளிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பாராத திடீர் தனவரவுகள் உண்டாகும். ஆலய வழிபாடுகள் மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். வருமானத்தை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். வரவுகள் மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



மிருகசீரிஷம் : அறிமுகம் ஏற்படும்.


திருவாதிரை : ஒற்றுமை அதிகரிக்கும்.


புனர்பூசம் : வரவுகள் உண்டாகும். 

---------------------------------------





கடகம்

நவம்பர் 09, 2021



உத்தியோகம் தொடர்பான பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவதற்கான சூழ்நிலைகள் சாதகமாக அமையும். ஒற்றுமை மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்



புனர்பூசம் : மாற்றமான நாள். 


பூசம் : இன்னல்கள் குறையும். 


ஆயில்யம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

---------------------------------------






சிம்மம்

நவம்பர் 09, 2021



குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய முயற்சிகளுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாழ்க்கைத்துணைவருடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். புதிய வேலை மற்றும் உத்தியோகம் தொடர்பான முயற்சிகளில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சுபிட்சமான நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



மகம் : மகிழ்ச்சியான நாள். 


பூரம் : தேவைகள் பூர்த்தியாகும்.


உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும். 

---------------------------------------





கன்னி

நவம்பர் 09, 2021



உத்தியோகத்தில் திறமைக்கு உண்டான அங்கீகாரங்களும், திருப்தியான சூழ்நிலைகளும் காணப்படும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார ரீதியான பிரச்சனைகளுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும். வாக்குறுதிகளை கொடுக்கும் பொழுது சிந்தித்து செயல்படுதல் அவசியமாகும். உறவினர்களிடத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்வது நல்லது. மேன்மையான நாள்.


 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



உத்திரம் : திருப்தியான நாள். 


அஸ்தம் : முடிவுகள் சாதகமாகும். 


சித்திரை : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------





துலாம்

நவம்பர் 09, 2021



மனதில் நினைத்த எண்ணங்களை செயல் வடிவில் மாற்றுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். மனை அபிவிருத்திக்கான சிந்தனைகள் மேம்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். கவனம் வேண்டிய நாள். 



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை



சித்திரை : புரிதல் மேம்படும்.


சுவாதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.


விசாகம் : நிதானம் வேண்டும்.

---------------------------------------





விருச்சிகம்

நவம்பர் 09, 2021



குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டி பொறாமைகள் குறையும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். செய்யும் வேலைகளை அவ்வப்போது முடிப்பது உங்கள் மீதான நன்மதிப்பை மேம்படுத்தும். வெளிவட்டாரங்களில் தேவையற்ற வாக்குறுதிகளை அளிப்பதை குறைத்துக் கொள்வது நல்லது. புரிதல் உண்டாகும் நாள்.


 

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



விசாகம் : போட்டிகள் குறையும்.


அனுஷம் : மாற்றம் உண்டாகும்.


கேட்டை : வாக்குறுதிகளை தவிர்க்கவும். 

---------------------------------------





தனுசு

நவம்பர் 09, 2021



செலவுகளை குறைத்துக் கொண்டு சேமிப்பது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். நெருக்கமானவர்களிடத்தில் எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். வெளியூர் பயணங்களின் போது புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். துரிதமான நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



மூலம் : சிந்தனைகள் மேம்படும். 


பூராடம் : உதவிகள் கிடைக்கும். 


உத்திராடம் : அனுகூலமான நாள். 

---------------------------------------





மகரம்

நவம்பர் 09, 2021



குழந்தைகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் படிப்படியாக குறையும். புத்திக்கூர்மையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய நபர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. மனதில் புதுவிதமான ஆசைகளும், இலக்குகளும் உண்டாகும். வழக்கு சார்ந்த செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அலைச்சல்கள் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



உத்திராடம் : கருத்து வேறுபாடுகள் குறையும் 


திருவோணம் : வாய்ப்புகள் உண்டாகும். 


அவிட்டம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

---------------------------------------





கும்பம்

நவம்பர் 09, 2021



தந்தையின் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் லாபம் மேம்படும். உறவினர்களின் உதவியினால் பொருளாதார நெருக்கடிகள் குறையும். நீண்ட நாட்களாக இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். வெளியூர் பயணம் செய்வதற்கான வாய்ப்புகள் சிலருக்கு சாதகமாக அமையும். புத்துணர்ச்சியான நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



அவிட்டம் : லாபம் மேம்படும்.


சதயம் : நெருக்கடிகள் குறையும். 


பூரட்டாதி : வாய்ப்புகள் சாதகமாகும். 

---------------------------------------






மீனம்

நவம்பர் 09, 2021



எந்தவொரு காரியத்தையும் செய்து முடிப்பதற்கான தன்னம்பிக்கை மேம்படும். சுபகாரியம் தொடர்பான சுப விரயங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கூட்டு வியாபாரத்தில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் குறையும். வியாபாரம் தொடர்பான உதவிகளின் மூலம் முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். சாதகமான நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்



பூரட்டாதி : தன்னம்பிக்கை மேம்படும். 


உத்திரட்டாதி : கவனம் வேண்டும்.


ரேவதி : முன்னேற்றமான நாள்.

---------------------------------------


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-11-2021 - செவ்வாய் - (School Morning Prayer Activities)...

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 09.11.21

  திருக்குறள் :


பால் :பொருட்பால். 


இயல்: அரசியல். 


அதிகாரம்: தெரிந்து செயல் வகை. 


குறள் எண்: 467 


குறள்:

எண்ணித் துணிக கருமந் துணிந்தபின்

எண்ணுவ மென்ப திழுக்கு. 


பொருள்:

நன்றாகச் சிந்தித்த பிறகே செயலில் இறங்க வேண்டும்; இறங்கிய பிறகு சிந்திக்கலாம் என்பது தவறு.


பழமொழி :

Ask and it shall be given



அழுத குழந்தை பசியாரும்



இரண்டொழுக்க பண்புகள் :


1. உங்களை அழகாக்குவது

உங்களின் புன்னகை. புன்னகையுடன் இந்நாளை எதிர் கொள்ளுங்கள்.



2. உங்கள் அன்பு உள்ளங்களை வெல்லும் அனைவரிடமும் நேசத்துடன் பழகுங்கள்.


பொன்மொழி :


ஒரு சிந்தனைக்காக ஒரு தனி மனிதன் இறக்கலாம், எனினும் அவனது சிந்தனைகள் அவன் மரணத்திற்கு பிறகும் ஆயிரம் உயிர்களிடம் விதைக்கப்பட்டிருக்கும் ----- நேதாஜி



பொது அறிவு :


1. உலகின் ஆழமான குழி எது? 


பசிபிக் பெருங்கடலில் உள்ள மரியானா ஆழ் குழி 


2. ஜப்பானின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் நகரம் எது? 


ஒலஸ்கா


English words & meanings :


1. No room to swing a cat - not big enough, சிறிய இட‌ம் 




2. Rain cats and dogs - rain heavily. அதிகமான அளவில் மழை


ஆரோக்ய வாழ்வு :


வைட்டமின் “சி” நிறைந்த உணவுகள்

முதுகுத் தண்டிலும் இரத்த அணுக்களிலும் வைட்டமின் சி அதிகம் கலந்துள்ளது. நம் உடலில் எல்லாத் திசுக்களிலும் இது உள்ளது. உடல் துன்பத்தையும் மனத் துன்பத்தையும் ஒருவர் தாங்கிக் கொண்டு உழைத்தால் அவர் உடலில் வைட்டமின் “சி” சரியான அளவில் இருக்கிறது என்று அர்த்தம். நம் உடலை எப்பொழுதும் உற்சாகமாக வைத்துக் கொள்கிறது வைட்டமின் “சி”. இதனை நாம் ஆரஞ்சுசாறு, கொய்யா, நெல்லிக்காய் முதலியவற்றிலிருந்து எளிதாகப் பெறலாம். இதில் வைட்டமின் “சி” அதிகம் உள்ளது. இது தவிர தினமும் ஒரு கப் கொண்டைக் கடலை, அல்லது கடலை பருப்பு சுண்டல் சாப்பிடலாம். காலையில் இட்லி, தோசைக்கு சட்னியாக பச்ச மிளகாய் அல்லது காய்ந்த மிளகாய் சேர்த்த தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னி செய்து சாப்பிடலாம். இதிலும் வைட்டமின் “சி” இருக்கிறது.


நீரழிவு நோயாளிகள் ஊற வைத்த கொண்ட கடலையினை வேக வைத்து தினமும் சாப்பிட்டால் எளிதாக உடலுக்கு சக்தி கிடைக்கும். முட்டை கோஸ் சூப், பாசிப் பருப்பு பாயாசம், முளை விட்ட பச்சபயிறு சாலட் இதிலும் வைட்டமின் “சி” அதிகமாக இருக்கிறது. தினமும் காலைசூப், ஆரஞ்சுஜூஸ், சுண்டல் சாப்பிடுவதால் உடலுக்கு உடனடியாக சக்தி கிடைக்கிறது.


கணினி யுகம் :


Ctrl + ] - Increase selected font +1. 


Ctrl + shift + > - Increase selected font +1.

நவம்பர் 09


அப்துல் ரகுமான் அவர்களின் பிறந்தநாள்... 


அப்துல் ரகுமான்,(நவம்பர் 9, 1937 - சூன் 2, 2017), தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிஞரும், தமிழ்ப்பேராசிரியரும் ஆவார். கவிக்கோ என்று சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறார். 'வானம்பாடி' இயக்கக் கவிஞர்களோடு இணைந்தியங்கியவர். அவர் பால்வீதி என்ற கவிதைத் தொகுதி மூலம் தம்மை ஒரு சோதனைப் படைப்பாளியாக இனங்காட்டிக் கொண்டார். அத்தொகுதி வெளிவந்த போது கவிதையை நேரடியாகத் தராமல் உவமைகள், உருவகங்கள், படிமங்கள், குறியீடுகள் ஆகியவற்றின் வழி வெளியீட்டு முறையை அமைத்துக் கொண்டார். தமிழில் கவிதைக் குறியீடுகள் குறிந்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர்.  ஆலாபனை கவிதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர். 


கே. ஆர். நாராயணன் அவர்களின் நினைவுநாள்  

கே. ஆர். நாராயணன் என்று அறியப்படும் கொச்செரில் ராமன் நாராயணன் (பிறப்பு - கோட்டயத்தில் உள்ள உழவூர் (கேரளா), அக்டோபர் 27, 1920; இறப்பு - புது தில்லி, நவம்பர் 9, 2005) பத்தாவது இந்தியக் குடியரசுத் தலைவர் ஆவார். இவர் இப்பொறுப்பை வகித்த ஒரே மலையாளிஆவார். முன்னர் இவர் இந்திய வெளியுறவுத் துறையில் அதிகாரியாக பணியாற்றியவர்.




அர்கோபிந்த் குரானா அவர்களின் நினைவுநாள்  


அர்கோபிந்த் குரானா, அல்லது ஹர் கோவிந்த் குரானா (Har Gobind Khorana, இந்தி: हरगोविंद खुराना, சனவரி 9, 1922 - நவம்பர் 9, 2011) ஓர் இந்திய அமெரிக்க மூலக்கூற்று உயிரியல் அறிவியலாளர் ஆவார். மரபுக்குறியீடு (genetic code) பற்றியும் புரதத்தை செயற்கையாக உற்பத்தி செய்வதில் மரபு குறியீட்டின் பங்கு குறித்த ஆராய்விற்காக 1968ஆம் ஆண்டு மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபெல் பரிசினை மார்சல் நோரென்பர்க், இராபர்ட் ஹாலி ஆகியோருடன் பகிர்ந்து பெற்றவர். 1966ஆம் ஆண்டு அமெரிக்காவின் இயல்பான குடிமகனான இவருக்கு தேசிய அறிவியல் பதக்கம் கொடுக்கப்பட்டது.


நீதிக்கதை


அதிசயக்குதிரை


கிருஷ்ண தேவராயரின் படைகளுள் குதிரைப் படையும் ஒன்று. குதிரைப்படையும் வலிமையுள்ளதாக இருந்தது சண்டை இல்லாத காலங்களில் குதிரைகளைப் பராமரிக்க மந்திரிகளில் ஒருவர் ஒரு யோசனை சொன்னர். 


அதாவது ஒரு வீட்டிற்கு ஒரு குதிரையையும் அதற்குத் தீனி போடுவதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையும் கொடுக்கப்பட்டு வந்தது. அத்தொகையைப் பெற்றுக்கொண்டு குதிரையை நன்கு ஊட்டமளித்து வளர்த்தனர். 


அதே போல் தெனாலிராமனுக்கும் ஒரு குதிரை கொடுக்கப்பட்டது. ஆனால் தெனாலிராமனோ ஒரு சிறிய கொட்டகையில் குதிரையை அடைத்து வைத்து புல் போடுவதற்கு மட்டுமே ஒரு சிறிய தூவாரம் வைத்திருந்தான். அந்த துவாரத்தின் வழியாக புல்லை. நீட்டியவுடன் குதிரை வெடுக்கென வாயால் கௌவிக் கொள்ளும் மிகவும் சிறிதளவு புல் மட்டுமே தினமும் போட்டு வந்தான். அதனால் அக்குதிரை எலும்பும் தோலுமாக நோஞ்சாணாக இருந்தது. 


குதிரைக்குத் தீனி வாங்கிப் போடும் பணத்தில் தெனாலிராமன் நன்கு உண்டு கொழுத்தான். 


ஒரு நாள் குதிரைகள் எப்படி இருக்கின்றன என்று காண அனைவருக்கும் செய்தி அனுப்பி குதிரைகளை அரண்மனைக்கு அழைத்து வர உத்தரவிட்டார் மன்னர். அதன்படி குதிரைகள் அனைத்தும் அரண்மனைக்குக் கொண்டு வரப்பட்டன மன்னர் குதிரைகளைப் பார்வையிட்டார். குதிரைகள் அனைத்தும் மிக திருப்திகரமாக இருந்ததால் மன்னர் மகிழ்ச்சியடைந்தார். 


அங்கிருந்த தெனாலிராமனை அழைத்து உன் குதிரையை ஏன் கொண்டு வரவில்லை என மன்னர் கேட்டார். அதற்கு தெனாலிராமனோ என் குதிரை மிகவும் முரட்டுத்தனமாக இருக்கிறது. அதை என்னால் அடக்க முடியவில்லை. அதனால் தான் இங்கே கொண்டு வர வில்லை என்றான். குதிரைப்படைத் தலைவரை என்னுடன் அனுப்புங்கள். அவரிடம் கொடுத்தனுப்புகிறேன் என்றான் இதை உண்மையென்று நம்பிய மன்னர் குதிரைப்படைத் தலைவனை தெனாலிராமனுடன் அனுப்பினார். 


குதிரைப்படைத் தலைவருக்கு நீண்ட தாடியுண்டு. குதிரைப் படைத்தலைவரும் அந்த துவாரத்தின் வழியாக குதிரையை எட்டிப் பார்த்தார். உடனே குதிரை அது புல்தான் என்று நினைத்து அவரது தாடியைக் கவ்விப் பிடித்துக் கொண்டது. வலி பொறுக்கமாட்டாத குதிரைப் படைத்தலைவர் எவ்வளவோ முயன்றும் தாடியை குதிரையிடமிருந்து விடுவிக்க முடியவில்லை. இச்செய்தி மன்னருக்கு எட்டியது. மன்னரும் உண்மையிலேயே இது முரட்டுக் குதிரையாகத்தான் இருக்கும் என்று எண்ணி தெனாலிராமன் வீட்டுக்கு விரைந்தார். 


அங்கு குதிரையின் வாயில் குதிரைப்படைத் தலைவரின் தாடி சிக்கி இருப்பதை அறிந்து அந்தக் கொட்டகையைப் பிரிக்கச் செய்தார். பின் குதிரையைப் பார்த்தால் குதிரை எலும்பும், தோலுமாக நிற்பதற்குக் கூட சக்தியற்று இருந்ததைக் கண்டு மன்னர் கோபங்கொண்டு அதன் காரணத்தைத் தெனாலிராமனிடம் கேட்டார். அதற்குத் தெனாலிராமன் இவ்வாறு சக்தியற்று இருக்கும் போதே குதிரைப் படைத்தலைவரின் தாடியை கவ்விக்கொண்டு விடமாட்டேன் என்கிறது. நன்கு உணவு ஊட்டி வளர்த்திருந்தால் குதிரைப்படைத் தலைவரின் கதி அதோகதிதான் ஆகி இருக்கும் என்றான். 


இதைக் கேட்ட மன்னன் கோபத்திலும் சிரித்து விட்டார். பின்னர் தெனாலிராமனை மன்னித்து விட்டார்.


இன்றைய செய்திகள்


09.11.21


★மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116 அடியாக உயர்ந்துள்ள நிலையில், நாளை முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.30 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் அணை நிலவரம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.


★ஓய்வுபெற்ற பிறகும் விடுப்பு ஊதியம் பெறமுடியாமல் தவித்த ஊழியருக்கு வட்டியோடு சேர்த்து வழங்க போக்குவரத்துக் கழகத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


★கர்காடக அணைகள் திறந்துவிடப்பட்டதன் காரணமாக காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு திருச்சி மாவட்ட ஆட்சியர்  அறிவுறுத்தியுள்ளார்.


★இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 33 லட்சம் குழந்தைகளுக்கும் அதிகமாக ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 18 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் தீவிரமான ஊட்டச்சத்துக் குறைவால் பாதி்க்கப்பட்டுள்ளனர் என்று மத்திய மகளிர் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


★13 ஆண்டு இடைவெளிக்கு பிறகு இந்திய நேயர்களுக்காக ஒலிபரப்பை மீண்டும் தொடங்கும் கொழும்பு வானொலி.


★பாரிஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ்: 6-வது முறையாக பட்டம் வென்றார் ஜோகோவிச்.


★பெண்கள் ஆசிய கோப்பை கால்பந்து: பிரேசிலுக்கு சுற்றுப்பயணம் செல்கிறது இந்திய அணி.



Today's Headlines


 ★ As the water level of the Mettur Dam rises to 116 feet, it is expected to reach full capacity tomorrow. A 30 members team is formed to observe the condition of Dam. 


 ★ The High Court has ordered the Transport Corporation to pay the leave salary along with interest to a retired employee, who did not get it. 


 ★ Trichy District Collector has advised people who live near River Bank to move to safer places as there is a possibility of flood in Cauvery due to the opening of Karnataka dams.


 ★ In total, more than 33 lakh children in India are suffering from malnutrition.  Of these, more than 18 lakh children are severely malnourished, according to the Federal Ministry of Child Development.


 ★ Colombo Radio is resuming its broadcasting for Indian viewers after a big gap of 13 years.


 ★ Paris Masters International Tennis: Djokovic wins the title for the 6th time.


 ★ Women's Asian Cup Football: The Indian team goes on tour to Brazil.

 Prepared by


Covai women ICT_போதிமரம்

குழந்தைகள் தின விழாப் போட்டிகள் நடத்த தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் (Proceedings of the Director of Elementary Education to Conduct Children's Day Festival Competitions) ந.க.எண்: 014842/ஜெ/2021, நாள்: 28-10-2021...



>>> குழந்தைகள் தின விழாப் போட்டிகள் நடத்த தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் (Proceedings of the Director of Elementary Education to Conduct Children's Day Festival Competitions) ந.க.எண்: 014842/ஜெ/2021, நாள்: 28-10-2021...

Basic Syllable Chart - Consonants and Vowels - Vowels and Consonants...



>>> Click here to Download - Basic Syllable Chart - Consonants and Vowels - Vowels and Consonants...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Payment of +2 Exam Fee & TML Fee – DGE Proceedings

+2 தேர்வுக் கட்டணம் & TML கட்டணம் செலுத்துதல் - DGE செயல்முறைகள் Payment of +2 Exam Fee & TML Fee – DGE Proceedings >>> தரவ...