கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர மதிப்பூதியம் இரு மடங்காக உயர்வு (Doubling the Monthly Honorarium for Panchayat Presidents) - அரசாணை (நிலை) எண்: 132, நாள்: 15-11-2021 வெளியீடு...



>>> ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர மதிப்பூதியம் இரு மடங்காக உயர்வு (Doubling the Monthly Honorarium for Panchayat Presidents) - அரசாணை (நிலை) எண்: 132, நாள்: 15-11-2021 வெளியீடு...

இன்றைய (25-11-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

நவம்பர் 25, 2021




குடும்ப உறுப்பினர்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள். புத்துணர்ச்சியான சிந்தனைகள் பிறக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோக பணிகளில் எதிர்பார்த்த சில வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். உயர் பொறுப்புகளில் இருப்பவர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். சந்தோஷம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



அஸ்வினி : புத்துணர்ச்சியான நாள். 


பரணி : லாபம் கிடைக்கும்.


கிருத்திகை : நம்பிக்கை பிறக்கும்.

---------------------------------------





ரிஷபம்

நவம்பர் 25, 2021




சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். அரசு சார்ந்த செயல்பாடுகளில் ஆதாயமான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். செய்யும் முயற்சிக்கு உண்டான பலன் மற்றும் மதிப்பு கிடைக்கும். பெருமை நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம் 



கிருத்திகை : மந்தத்தன்மை குறையும். 


ரோகிணி : ஆதாயமான நாள். 


மிருகசீரிஷம் : மதிப்பு கிடைக்கும்.

---------------------------------------





மிதுனம்

நவம்பர் 25, 2021




கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபார பணிகளில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். தலைமை அதிகாரிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சுபகாரிய முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின்பு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். மதிப்பு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு


 

மிருகசீரிஷம் : வரவுகள் மேம்படும்.


திருவாதிரை : அறிமுகம் கிடைக்கும்.


புனர்பூசம் : அனுகூலமான நாள்.

---------------------------------------





கடகம்

நவம்பர் 25, 2021




நண்பர்களின் வழியில் எதிர்பார்த்திருந்த ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான வேலை வாய்ப்புகள் சாதகமாக அமையும். வர்த்தக பணிகளில் நிதானத்துடன் செயல்படுவது மேன்மையை ஏற்படுத்தும். மனதில் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வருமானத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் அதிகரிக்கும். அமைதி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



புனர்பூசம் : சாதகமான நாள். 


பூசம் :  நிதானம் வேண்டும். 


ஆயில்யம் : முயற்சிகள் அதிகரிக்கும்.

---------------------------------------





சிம்மம்

நவம்பர் 25, 2021




உத்தியோகம் சார்ந்த பணிகளில் பொறுப்புகள் குறையும். நெருக்கமானவர்களிடம் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களுடன் அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும். தந்தை வழி தொழிலில் மேன்மையான சூழல் நிலவும். சஞ்சலமான சிந்தனைகளின் மூலம் குழப்பங்களும், விரயங்களும் நேரிடும். பெருந்தன்மை நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



மகம் : பொறுப்புகள் குறையும். 


பூரம் : நெருக்கம் அதிகரிக்கும். 


உத்திரம் : மேன்மை உண்டாகும்.

---------------------------------------





கன்னி

நவம்பர் 25, 2021




கலை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். செயல்பாடுகளின் தன்மைகளை புரிந்து கொள்வீர்கள். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் நட்பு வட்டம் விரிவடையும். இழுபறியான சில விஷயங்களுக்கு தீர்க்கமான முடிவு காண்பீர்கள். ஆன்மிக பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். உயர்நிலைக் கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். துரிதம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் 



உத்திரம் : புரிதல் உண்டாகும்.


அஸ்தம் : முடிவு கிடைக்கும்.


சித்திரை : வாய்ப்புகள் சாதகமாகும். 

---------------------------------------





துலாம்

நவம்பர் 25, 2021




உடன்பிறந்தவர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் காணப்படும். கொடுக்கல்-வாங்கலில் வெற்றிகரமான வாய்ப்புகள் கிடைக்கும். இறை வழிபாட்டில் மனம் ஈடுபடும். உறவினர்களின் உதவிகளால் பிரச்சனைகள் குறையும். வாழ்க்கைத்துணைவருடன் சில பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். விருத்தி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்



சித்திரை : ஆதரவான நாள். 


சுவாதி : பிரச்சனைகள் குறையும்.


விசாகம் : பயணங்கள் கைகூடும்.

---------------------------------------





விருச்சிகம்

நவம்பர் 25, 2021




மருத்துவ பொருட்கள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும். வழக்கு சார்ந்த பணிகளில் சில நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். அரசு தொடர்பான செயல்பாடுகளில் இழுபறியான சூழ்நிலைகள் காணப்படும். மனதிற்கு பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். ஆரோக்கியம் சம்பந்தமான இன்னல்கள் குறையும். அலைச்சல்கள் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



விசாகம் : லாபம் மேம்படும்.


அனுஷம் : இழுபறியான நாள். 


கேட்டை : இன்னல்கள் குறையும்.

---------------------------------------





தனுசு

நவம்பர் 25, 2021




குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனம் வேண்டும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவு காலதாமதமாக கிடைக்கும். உடன்பிறந்தவர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். காப்பீடு தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகள் உண்டாகும். கவனம் வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



மூலம் : விவாதங்களை தவிர்க்கவும். 


பூராடம் : கவனம் வேண்டும். 


உத்திராடம் : அனுசரித்து செல்லவும். 

---------------------------------------





மகரம்

நவம்பர் 25, 2021




நண்பர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வேலை சம்பந்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். குழந்தைகளுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு நம்பிக்கையை ஏற்படுத்தும். முயற்சிகள் வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



உத்திராடம் : மகிழ்ச்சியான நாள். 


திருவோணம் : கருத்து வேறுபாடுகள் மறையும்.


அவிட்டம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

---------------------------------------





கும்பம்

நவம்பர் 25, 2021




மனதில் புதுவிதமான நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் பிறக்கும். தனவருவாயில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். சந்தேக உணர்வுகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பாலின மக்களின் செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். அன்பு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல்



அவிட்டம் : தன்னம்பிக்கையான நாள். 


சதயம் : முயற்சிகள் ஈடேறும். 


பூரட்டாதி : பொறுப்புகள் அதிகரிக்கும். 

---------------------------------------





மீனம்

நவம்பர் 25, 2021




குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். சிக்கனமாக செயல்பட்டு சேமிப்பை மேம்படுத்துவீர்கள். ஆன்மிக பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் சிலருக்கு ஏற்படும். பழைய கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். புதிய ஒப்பந்தங்களின் மூலம் வியாபார பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். நிதானமான பேச்சுக்களின் மூலம் காரியசித்தி ஏற்படும். முன்னேற்றம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



பூரட்டாதி : சேமிப்பு மேம்படும்.


உத்திரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.


ரேவதி : முன்னேற்றம் உண்டாகும்.

---------------------------------------


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-11-2021 - வியாழன் - (School Morning Prayer Activities)...



பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 25.11.21

திருக்குறள் :


கெடுவல்யான் என்ப தறிகதன் நெஞ்சம்

நடுவொரீஇ அல்ல செயின். 


பொருள் 


தன் நெஞ்சம் நடுவுநிலை நீங்கித் தவறு செய்ய நினைக்குமாயின், நான் கெடப்போகின்றேன் என்று ஒருவன் அறிய வேண்டும்


பழமொழி :

Hard work can accomplish any task.

 எறும்பு ஊற கல்லும் தேயும்.




இரண்டொழுக்க பண்புகள் :


1. சினம் எப்படி பட்ட உறவுகளையும் அழித்து விடும். 


2. ஆனால் பொறுமை பாறை போன்ற மனதை கூட இளக செய்து விடும். எனவே பொறுமை நம் வாழ்வில் முன்னேற மிகவும் அவசியம்


பொன்மொழி :

ஒரு முட்டாள் தன்னை முட்டாள் என்று உணரும் தருணத்தில் புத்திசாலியாகின்றான். ஆனால் ஒரு புத்திசாலி தன்னை புத்திசாலி என்று பெருமிதம் கொள்ளும் தருணத்தில் முட்டாளாகின்றான்.


பொது அறிவு :


1. உலகின் மிகப் பெரிய மலர் இனம் எது? 


ரப்லேசியா அர்னால்டி. 


2. இந்திய அறிவியற் கழகம் அமைந்துள்ள நகரம் எது? 


பெங்களூர்.


English words & meanings :


Give it a shot - try it, முயற்சி செய்து பாருங்கள், 


in rain or shine - no matter what - என்ன நடந்தாலும்


ஆரோக்ய வாழ்வு :


விட்டமின் B - வலுவான நரம்புகள், ஆரோக்கிய இரத்த ஓட்டம். காணப்படும் உணவுப் பொருட்கள் - ஈரல், வாழைப்பழம், முருங்கை கீரை, உலர் பருப்பு, பேரீச்சம் பழம், தானியங்கள் ஆகியவற்றில் காணப்படும்


கணினி யுகம் :


Windows Logo+D (Display the desktop)


Windows Logo+M (Minimize all of the windows)


நவம்பர் 25


பிடல் காஸ்ட்ரோ அவர்களின் நினைவுநாள்  


பிடல் காஸ்ட்ரோ (Fidel Alejandro Castro Ruz,  ஆகஸ்ட் 13, 1926 - நவம்பர் 25, 2016) கியூபாவை சேர்ந்த பொதுவுடைமைப் புரட்சியாளரும் பொதுவுடைமை அரசியல்வாதியும் ஆவார். கியூபாவில் 1959 இல் புரட்சியை வழிநடத்தி புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவின் அரசை வீழ்த்தி தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்ற காஸ்ட்ரோ ,1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராகவும், 1976 முதல் 2008 வரை ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார்.கியூபாவின் பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலாளராக 1965 இல் பதவியேற்ற இவர் கியூபாவை ஒற்றைக் கட்சி சமூகவுடைமைக் குடியரசாக்கினார். 49 ஆண்டுகள் கியூபாவை ஆண்ட காஸ்ட்ரோ பிப்ரவரி 24 2008 அன்று பதவியிலிருந்து விலகினார். உலகத்தில் நீண்ட காலத்துக்கு தலைமைப் பொறுப்பில் இருந்த தலைவர் காஸ்ட்ரோ மட்டுமே. பன்னாட்டளவில், காஸ்ட்ரோ 1979-ல் இருந்து 1983 வரை மற்றும் 2006 முதல் 2008 வரை, அணி சேரா இயக்கத்தின் பொதுச் செயலாளராக இருந்துள்ளார்.[2]


அமெரிக்காவில் இருந்து 93 மைல் தொலைவில் இருந்தாலும் கியூபாவை ஒரு சோசலிச நாடாகப் பேணிய பெருமை இவரைச் சாரும். இதைவிட ருசியா-அமெரிக்க பனிப்போர் நடந்த வேளையில் இவர் ருசியாவிற்குச் சாதகமாகப் பல பணிகளைச் செய்தார்.




பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள்


பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள் (International Day for the Elimination of Violence against Women) ஆண்டுதோறும் நவம்பர் 25 ஆம் நாள் அன்று உலகெங்கணும் கொண்டாடப்பட்டு வரும் ஒரு சிறப்பு நாள் ஆகும்.


உலகளாவிய ரீதியில் பெண்கள் இன்று பல விதமான வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை வெளி உலகிற்கு காட்டி அதற்கான நியாயமான தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்காக சர்வதேச மகளிர் தினம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினம் ஆகியன முன்வைக்கப்படுகின்றன.


ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 1999 டிசம்பர் 17 ஆம் நாள் கூடிய போது ஆண்டு தோறும் நவம்பர் 25 ஆம் நாளை பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினமாகப் பிரகடனம் செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றியது. இத்தீர்மானம் ஐக்கிய நாடுகள் அவையின் 54/ 134. இலக்க பிரேரணையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.


நீதிக்கதை


கடவுளின் சிறப்பு:


கதை :

ராகவன் ஒரு பட்டதாரி. பள்ளியிலும், கல்லூரியிலும் சிறப்பான மதிப்பெண்கள் பெற்ற அறிவாளி. ஒருநாள் தன் சொந்த ஊருக்குச் செல்கையில், அவன் பயணம் செய்த பேருந்து பழுதாகி ஒரு கிராமத்துக்கு அருகே நின்று விட்டது. இரவு நேரமாகி விட்டதால் மாற்று பேருந்துகள் மறுநாள் காலையில் தான் வரும் என்றும், அதுவரை பேருந்திலேயே ஓய்வெடுத்துக் கொள்ளுமாறும் பயணிகளிடம் நடத்துனர் கூறினார். 


ராகவனுக்கு அதிகமாக பசியெடுத்ததால், உறக்கம் வரவில்லை. உணவு ஏதாவது கிடைக்குமா என அருகிலிருந்த கிராமத்தை நோக்கி நடந்த ராகவனை வழிமறித்த விவசாயி ஒருவர், விவரத்தைக் கேட்டறிந்து தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அவனுக்கு அன்புடன் உணவு படைத்த விவசாயி, சார், உணவருந்துவதற்கு முன் இறைவனுக்கு நன்றி சொல்வது எங்கள் வழக்கம். நீங்களும் நன்றி கூறி விட்டு சாப்பிடத் தொடங்குங்கள் என்றார். 


ஆனால் முற்போக்கு சிந்தனைகள் கொண்ட ராகவன், இறைவணக்கம் செய்ய மறுத்ததுடன் நிலத்தில் பாடுபட்டது நீ, நெல் விளைவித்தது நீ, என்னை உணவருந்த அழைத்தது நீ, அப்படியானால் நான் உனக்குத் தான் நன்றி கூற வேண்டும். இறைவனுக்கு நன்றி தேவையில்லை என்றான். 


விவசாயி வியப்புடன் ராகவனை பார்த்துக்கொண்டே, நெல் விளைந்த நிலம் இறைவன் படைத்தது. நெல் வளர மழை பெய்யச் செய்தது இறைவன் தான். மலர்ந்து, காய்த்து, கனிந்து, முற்றி தானியமானது அவன் செயலே. நான் ஒரு கருவியாக மட்டுமே செயல்பட்டுள்ளேன். நீங்கள் அருந்தும் குடிநீர் அவன் தந்தது. அத்தகைய இறைவனுக்கு நன்றி கூற மறுத்தால், உங்களுக்கு மனிதநேயமே இல்லை எனப் பொருள். இதை நீங்கள் சிந்திக்கவில்லை என்றால், படித்து என்ன பயன்? என்று கூறினார். 


இதைக் கேட்டு வெட்கித் தலைகுனிந்த ராகவனின் கைகள் தாமாகவே குவிந்து, இறைவனுக்கு நன்றி கூறின. 


நீதி :

அனைவரையும் மதித்து வாழ வேண்டும்.


இன்றைய செய்திகள்


25.11.21


◆மதுரை விமான நிலையம் அருகே பெருங்குடி கண்மாயில் கி.பி.13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நிலக்கொடை கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.


◆நடப்பாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையில் கிராமப்புற மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டில் கூடுதல் மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.


◆தொலைத்தொடர்பு கருவிகள், ஏவுகணைகளுடன் நவீன தொழில்நுட்பத்தில் ‘ஐஎன்எஸ் விசாகப்பட்டினம்’ போர்க் கப்பல்: சர்வதேச தரத்துக்கு இணையாக உள்நாட்டில் வடிவமைப்பு.


◆நாடு முழுவதும் ரேசன் கடைகளில் ஏழைகளுக்கு இலவச உணவு தானியம் வழங்கும் திட்டத்தை மேலும் 4 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அமைச்சரவை ஓப்புதல் வழங்கி உள்ளது.


◆ஜூனியர் உலக கோப்பை ஆக்கி போட்டி ஒடிசாவில் நேற்று தொடங்கியது.


◆சாம்பியன் லீக் கால்பந்து : மான்செஸ்டர் யுனைடெட் அணி வெற்றி.



Today's Headlines


🌸  A 13th century AD land donation inscription has been found near Perungudi near Madurai Airport.


 🌸  The Minister of Medicine and Public Welfare has said that additional students will be included in the 7.5% reservation for rural students in the current medical student admission.


 🌸  ‘INS Visakhapatnam warship in modern technology with telecommunications equipment and missiles: in-house design in line with international standards.


 🌸  The Union Cabinet has approved the extension of the scheme of providing free food grains to the poor in ration shops across the country for a further 4 months.

 

 🌸 The Junior World Cup kicked off in Odisha yesterday.


 🌸 Champions League Football: Manchester United win.

 Prepared by


Covai women ICT_போதிமரம்

இன்றைய (24-11-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

நவம்பர் 24, 2021




உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் உதவிகள் சாதகமாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உயர்கல்வி தொடர்பான குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். தொழில் ரீதியான பொருளாதாரம் மேம்படும். செயல்பாடுகளில் சுறுசுறுப்பு அதிகரிக்கும். சொத்துக்கள் தொடர்பான வழக்குகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



அஸ்வினி : வாய்ப்புகள் கிடைக்கும்.


பரணி : தெளிவு பிறக்கும்.


கிருத்திகை : சுறுசுறுப்பு அதிகரிக்கும்.

---------------------------------------





ரிஷபம்

நவம்பர் 24, 2021



நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும். தந்தையின் தேவையை அறிந்து நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் சாதகமான வாய்ப்புகளை உருவாக்குவீர்கள். அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். ஆதாயமான நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



கிருத்திகை : அனுகூலம் உண்டாகும். 


ரோகிணி : பொறுப்புகள் கிடைக்கும்.


மிருகசீரிஷம் : பிரச்சனைகள் நீங்கும். 

---------------------------------------





மிதுனம்

நவம்பர் 24, 2021



வெளிவட்டாரங்களில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் தடுமாற்றம் உண்டாகும். முன்கோபத்தை குறைத்து கொண்டு செயல்படுவது நல்லது. வேலையில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். இலக்குகள் மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை 



மிருகசீரிஷம் : மதிப்பு அதிகரிக்கும். 


திருவாதிரை : பிரச்சனைகள் நீங்கும்.


புனர்பூசம் : கவனம் வேண்டும்.

---------------------------------------





கடகம்

நவம்பர் 24, 2021



ஆடம்பரப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பாராத பயணங்களின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். புதுவிதமான அனுபவத்தின் மூலம் மாற்றமான சூழல் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். அமைதியான நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம் 



புனர்பூசம் : ஆர்வம் அதிகரிக்கும். 


பூசம் : தீர்வு கிடைக்கும்.


ஆயில்யம் :  முன்னேற்றமான நாள்.

---------------------------------------





சிம்மம்

நவம்பர் 24, 2021



புதிய நபர்களின் அறிமுகத்தால் சில உதவிகள் கிடைக்கும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி நிம்மதி பிறக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். வெளியூர் பயணத்தின் மூலம் அலைச்சல்கள் உண்டாகலாம். அரசு தொடர்பான பணிகளில் ஆதாயம் கிடைக்கும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். விருப்பம் நிறைவேறும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



மகம் : உதவிகள் கிடைக்கும்.


பூரம் : ஆதாயம் ஏற்படும்.


உத்திரம் : அனுபவம் உண்டாகும்.

---------------------------------------





கன்னி

நவம்பர் 24, 2021



நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் உங்களின் மீதான மதிப்பு மேம்படும். புத்திசாலித்தனமான செயல்பாடுகளின் மூலம் பாராட்டுகளை பெறுவீர்கள். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். வாழ்க்கைத்துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். ஆதரவு அதிகரிக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்



உத்திரம் : மதிப்பு மேம்படும். 


அஸ்தம் : தெளிவு பிறக்கும். 


சித்திரை : முன்னேற்றம் உண்டாகும். 

---------------------------------------





துலாம்

நவம்பர் 24, 2021



புதிய மனை வாங்குவது தொடர்பான முயற்சிகள் கைகூடும். தொழில் சார்ந்த செயல்பாடுகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். வேலையில் ஏற்பட்டிருந்த பிரச்சனைகள் நீங்கும். தாய்மாமன் வழியில் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். குடும்பத்தில் தேவையில்லாத சிறு சிறு பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். தன்னம்பிக்கையான நாள். 



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்



சித்திரை : முயற்சிகள் கைகூடும். 


சுவாதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.


விசாகம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.

---------------------------------------





விருச்சிகம்

நவம்பர் 24, 2021



மனதிற்கு நெருக்கமானவர்களிடம் அனுசரித்து செல்லவும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோக பணிகளில் உடனிருப்பவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். கலை சார்ந்த பணிகளில் சிந்தித்து செயல்படவும். உடன்பிறந்தவர்களின் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். கல்வி சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வமின்மை உண்டாகும். பொறுமை வேண்டிய நாள். 



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்



விசாகம் : அனுசரித்து செல்லவும்.


அனுஷம் : சிந்தித்து செயல்படவும். 


கேட்டை : ஆர்வமின்மை உண்டாகும். 

---------------------------------------





தனுசு

நவம்பர் 24, 2021



உயர் பொறுப்புகளில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகளால் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். திட்டமிட்ட செயல்பாடுகள் நிறைவேறும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கீர்த்திகள் மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்



மூலம் : அறிமுகம் கிடைக்கும்.


பூராடம் : முன்னேற்றம் உண்டாகும்.


உத்திராடம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

---------------------------------------





மகரம்

நவம்பர் 24, 2021



வியாபாரத்தில் இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும். வீட்டிற்கு தேவையான புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் வழியில் நன்மை உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல் அமையும். மனதில் இனம் புரியாத சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும். எடுத்த காரியங்கள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். கவனம் வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



உத்திராடம் : போட்டிகள் குறையும். 


திருவோணம் : திறமைகள் வெளிப்படும். 


அவிட்டம் : எண்ணங்கள் நிறைவேறும்.

---------------------------------------





கும்பம்

நவம்பர் 24, 2021



குடும்பத்தில் பிள்ளைகளின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய மாற்றங்கள் ஏற்படும். தொழில் ரீதியான பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. லாபகரமான நாள்.


 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



அவிட்டம் : மாற்றங்கள் ஏற்படும்.


சதயம் : அனுகூலம் உண்டாகும்.


பூரட்டாதி : விவேகத்துடன் செயல்படவும்.

---------------------------------------





மீனம்

நவம்பர் 24, 2021



மகிழ்ச்சியான சிந்தனைகளின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பிறக்கும். நீண்ட நாள் பிரச்சனைகள் பற்றிய எண்ணங்கள் மேம்படும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். காரியசித்தி உண்டாகும் நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



பூரட்டாதி : கலகலப்பான நாள்.


உத்திரட்டாதி : புரிதல் உண்டாகும்.


ரேவதி : புத்துணர்ச்சி ஏற்படும்.

---------------------------------------


தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் 01.08.2021இல் உள்ளவாறு ஆசிரியர் / மாணவர்கள் பணியிட நிர்ணயம் ஆய்வு செய்தல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Proceedings of the Director of Elementary Education Staff Fixation based on Teacher / Students Strength inspection as on 01.08.2021 in Primary / Middle Schools) ந.க.எண்: 009736/இ1/2021, நாள்: 18-11-2021...



>>> தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் 01.08.2021இல் உள்ளவாறு ஆசிரியர் / மாணவர்கள் பணியிட நிர்ணயம் ஆய்வு செய்தல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Proceedings of the Director of Elementary Education Staff Fixation based on Teacher / Students Strength inspection as on 01.08.2021 in Primary / Middle Schools) ந.க.எண்: 009736/இ1/2021, நாள்: 18-11-2021...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 24-11-2021 - புதன் - (School Morning Prayer Activities)...

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 24.11.21

திருக்குறள் :


கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்

கோடாமை சான்றோர்க் கணி. 



ஒருவர்க்கு வாழ்வும், தாழ்வும் உலக இயற்கை; அந்த இரு நிலைமையிலும் நடுவுநிலையாக இருந்து உறுதி காட்டுவதே பெரியோர்க்கு அழகாகும்


பழமொழி :

Both the child and God are there where they are praised.



 குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில்.



இரண்டொழுக்க பண்புகள் :


1. சினம் எப்படி பட்ட உறவுகளையும் அழித்து விடும். 


2. ஆனால் பொறுமை பாறை போன்ற மனதை கூட இளக செய்து விடும். எனவே பொறுமை நம் வாழ்வில் முன்னேற மிகவும் அவசியம்


பொன்மொழி :


அழகைப் பற்றி கனவு காணாதீர்கள், அது உங்கள் கடமையை பாழாக்கி விடும். கடமையை பற்றி கனவு காணுங்கள், அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்.------ அப்துல்கலாம்


பொது அறிவு :


1.இந்தியாவில் மிக அதிக நீளமான கடற்கரையைக் கொண்ட தென் மாநிலம் எது?


 ஆந்திரப்பிரதேசம். 


2. உலகின் மிகப்பெரிய நன்னீர் ஏரி எது? 


சுப்பீரியர் ஏரி.


English words & meanings :


No clue - no idea, ஒன்றும் தெரியவில்லை, 


I am in - count on me, என்னையும் சேர்த்து கொள்ளுங்கள்


ஆரோக்ய வாழ்வு :


விட்டமின் C - நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், ஆரோக்கியமான தோல், நகம், முடி இவற்றை தரும். உணவுப் பொருட்கள் - சிட்ரஸ் பழங்கள், கொய்யா, அன்னாசி பழம் ஆகியவற்றில் உள்ளது.


கணினி யுகம் :


Windows Logo+SHIFT+M (Restore the minimized windows)


Windows Logo+E (Open My Computer)



நவம்பர் 24

சுசானா அருந்ததி ராய் அவர்களின் பிறந்தநாள்...


சுசானா அருந்ததி ராய் (பி. நவம்பர் 24, 1961) ஓர் இந்திய எழுத்தாளர் ஆவார். தன் எழுத்து மக்களைச் சென்றடைவதை உணர்ந்த அருந்ததி ராய் நாவல்கள் , அரசியல் கட்டுரைகள் , விமர்சனங்களைப் என பல விதமான படைப்புகளை படைத்து வருகிறார். இவரது படைப்புகளின் தன்மை பல நேரம் எதனையும் கருப்பு வெள்ளையென்று பிரித்து அடையாளம் காட்டாது. மனிதர்கள், நாடுகள், கொள்கைகள் என்று அனைத்திலும் உள்ள தீமை மற்றும் நன்மையை உணர்ச்சி நிலையிலிருந்து விலகி படைப்பதால் இவரது படைப்புகள் உலகில் பல பத்திரிக்கைகளில் இடம் பெற்றுவருகின்றன.


நீதிக்கதை


ஒரு காலத்தில் இந்திரத்யுமனன் என்று ஒரு மாமன்னன் இருந்தான். அவன் ஆட்சி காலத்தில் மக்கள் போற்றும் வண்ணம் தான தர்மங்கள் செய்து, சிறப்பாக அரசாண்டு, நேரே சொர்க்கத்திற்குப் போனான். சொர்க்கபுரியின் இன்பத்தில் திளைத்துக் கொண்டிருந்த அவனை ஒரு நாள் சொர்க்கத்தின் ‘தலை’ கூப்பிடுவதாக தேவதூதன் வந்து சொன்னான். மன்னன் சென்று என்னவென்று கேட்ட போது ‘உனக்கு சொர்க்க வாசம் முடிந்து விட்டது. பூலோகத்திற்கு நாளை கிளம்பத் தயாரக இரு’ என்று கட்டளை போட்டது ‘தலை’. ஏனென்று மன்னன் கேட்டான். ‘நீ செய்த நல்ல காரியங்களை நினைவில் வைத்திருக்க யாருமே இனிமேல் பூலோகத்தில் உயிருடன் இல்லை. இன்றுடன் அந்த கணக்குத் தீர்ந்து விடும். ஆகவே கிளம்பும் வழியைப் பார்’ என்று பதில் வந்தது. ‘இதற்குத் தீர்வே இல்லையா?’ என்று மன்னன் முறையிட்டான். ‘தலை’ முகவாயைச் சொறிந்து கொண்டு யோசித்தது. பிறகு ‘மன்னா, நீ கீழே போய் உனது நற்காரியங்களால் இன்னும் பலன் பெறும் ஒரு ஜீவனையாவது கண்டு பிடித்தால் உனக்கு சொர்க்கம் நீடிக்கப் படும்’ என்று சொன்னது.


மன்னனும் கிளம்பிப் பூலோகம் வந்தான். பல நூறு ஆண்டுகள் கடந்து விட்டிருந்தன. அவன் வாழ்ந்த இடமே தலை கீழாக மாறிப் போயிருந்தது. மக்களில் யாரையும் அவனால் அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை. மனதைத் தேற்றி நம்பிக்கையை ஏற்றிக் கொண்டு விடாமுயற்சியாகத் தேடி, இருப்பதிலேயே வயதான ஒரு மனிதரை சந்தித்தான். அவரிடம் ‘ஐயா! உமக்கு இந்திரத்யும்னன் என்று இந்தப் பகுதியை அரசாண்ட மன்னனைப் பற்றித் தெரியுமா?’ என்று ஆர்வத்துடனும் மிகுந்த எதிர்பார்ப்புடனும் கேட்டான். வயோதிகர் இடுங்கிய கண்களால் அவனை மேலும் கீழும் பார்த்து விட்டு உதட்டைப் பிதுக்கி விட்டார். ‘வேண்டுமானால் என்னை விட வயதான ஆந்தை ஒன்று பக்கத்து மரப் பொந்தில் தூங்கிக் கொண்டிருக்கிறது. இரவில் அது விழித்த பின் அதனிடம் போய்க் கேள்’ என்று சொல்லி விட்டார்.

 


வேறு வழியில்லாமல் இரவு வரை கோவில் நிழலில் உட்கார்ந்திருந்து விட்டு இரவு ஆந்தையைப் பார்த்தான். தலையை முதுகுப் பக்கம் வைத்து ஒரு இரையைக் குறி வைத்துக் கொண்டிருந்த ஆந்தையிடம் இந்திரத்யும்னனைப் பற்றிக் கேட்டான். இரையைத் தப்ப விட்ட எரிச்சலில் ஆந்தை ‘எனக்குத் தெரியாது. ஆனால் பக்கத்து ஏரியில் ஒரு ஆமை கிடக்கிறது. அதற்கு நினைவிருக்க வாய்ப்பிருக்கிறது’ என்று நம்பிக்கையை வளர்த்தி விட்டது.

 


இன்றைய செய்திகள்


24.11.21


★தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் பற்றித் தகவல் கொடுப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் எனத் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது.


★பள்ளிகளுக்கான பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளதால் திட்டமிட்டபடி மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.


★தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு; 25, 26-ம் தேதிகளில் கடலோர மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.


★நவம்பர் 25-ம் தேதி முதல் அனைத்து ப்ரீபெய்ட் திட்டங்களுக்கும் கட்டணங்களை 25% வரை உயர்த்துவதாக வோடாபோன் ஐடியா அறிவித்துள்ளது.


★குழந்தைகளைத் தாக்கும் கரோனா அலை: 5 முதல் 11 வயதினருக்கு தடுப்பூசி செலுத்தும் இஸ்ரேல்.



★இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி: கோவாவை வீழ்த்தி மும்பை வெற்றி.



Today's Headlines


 * Those who inform about the production of banned plastics will be awarded declared by Tamilnadu Pollution Control Board.


* As the School Syllabus is reduced there definitely will be public exams for the students says Education Minister.


* There is a chance of heavy rain for 4 days. On 25th and 26th the coastal areas will get heavy rain warnings from Chennai Metrological Department.


* From November 25th onwards for all the prepaid schemes Vodafone Idea is going to hike the amount by 25%.


* As the Corona started to affect children Israel is taking measures to vaccinate the children of age 5 to 11.


* In the Indian Super League Bombay won by defeating Goa.

 Prepared by


Covai women ICT_போதிமரம்

பள்ளிகளில் சுகாதாரத்தை நிலை நிறுத்துவதற்கான நிலையான வழிகாட்டு முறைகள் (SOP) (WASH) பெறப்பட்ட அறிவுரைகள் - சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Standard Guidelines for the Maintenance of Hygiene in Schools (SOP) (WASH) - Suggestions received - Proceedings of the Director of Elementary Education) ந.க.எண்: 016354/ஜெ2/2021, நாள்: 20-11-2021...



>>> பள்ளிகளில் சுகாதாரத்தை நிலை நிறுத்துவதற்கான நிலையான வழிகாட்டு முறைகள் (SOP) (WASH) பெறப்பட்ட அறிவுரைகள் - சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Standard Guidelines for the Maintenance of Hygiene in Schools (SOP) (WASH) - Suggestions received -  Proceedings of the Director of Elementary Education) ந.க.எண்: 016354/ஜெ2/2021, நாள்: 20-11-2021...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...