கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
பள்ளிக் கல்வி - ( NMMSS ) - மத்திய அரசின் உதவித்தொகைத் திட்டம் தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவித்தொகை - National Scholarship Portal-ல் அனைத்து வகைப் பள்ளிகளும் பதிவு செய்தல் - Institute Nodal Officer ஆதார் விவரங்கள் பதிவு செய்தல் - ஆதார் விவரங்களை Validate செய்தல் - சார்பாக - தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (நாட்டுநலப்பணித் திட்டம்) செயல்முறைகள் ந.க.எண்: 059449/எம்/இ4/2021, நாள்: 26-11-2021...
மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை - பாடத்திட்டம் குறைப்பு இல்லை - அமைச்சர் அன்பில் மகேஷ்...
மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தாலும் பாடத்திட்டத்தை குறைக்க அவசியம் இல்லை; பள்ளிகள் திறக்கப்பட்ட பின் கூடுதல் வகுப்புகள் வைத்து பாடங்கள் நடத்தி முடிக்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்...
பள்ளிகளில் ஏற்கனவே பாடத்திட்டம் குறைக்கப்பட்ட நிலையில் மீண்டும் பாடங்கள் குறைக்கப்படாது என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
கனமழை காரணமாக நாளை (29.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்...
கனமழை காரணமாக நாளை (29.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்...
1. திருநெல்வேலி ( பள்ளி , கல்லூரி )
2. தூத்துக்குடி விடுமுறை ( பள்ளி , கல்லூரி )
3. செங்கல்பட்டு ( பள்ளி , கல்லூரி )
4. திருவாரூர் ( பள்ளி , கல்லூரி )
5. காஞ்சிபுரம் ( பள்ளி , கல்லூரி )
6. திருவள்ளூர் ( பள்ளி , கல்லூரி )
7. சென்னை ( பள்ளி , கல்லூரி )
8. நாகை ( பள்ளி மட்டும்)
9. திருவண்ணாமலை (பள்ளி மட்டும் )
10. கடலூர் ( பள்ளி மட்டும்)
11. தஞ்சாவூர் (பள்ளி, கல்லூரி)
12. மயிலாடுதுறை (பள்ளி மட்டும் )
13. பெரம்பலூர் ( 1 To 8th மட்டும்) ( உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு சூழ்நிலை தகுந்தவாறு பள்ளி தலைமையாசிரியர்கள் முடிவெடுத்துக் கொள்ளலாம்)
14. கன்னியாக்குமரி (பள்ளி, கல்லூரி)
15. ராணிப்பேட்டை (பள்ளி மட்டும் )
16. விழுப்புரம் (பள்ளி, கல்லூரி)
புதுச்சேரி - 2 நாட்கள் (29.11.21 & 30.11.21) - பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை...
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2774 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிகமாக நிரப்பிக்கொள்ள அனுமதி அளித்து பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகள் (Proceedings of the Commissioner of School Education for Granting temporary filling of 2774 Post Graduate Teacher posts in Government Higher Secondary Schools by the Parent Teachers Association) ந.க.எண்: 50373/டபிள்யு3/இ3/2021, நாள்: 26-11-2021 - இணைப்பு: மாவட்ட வாரியாக நிரப்பிக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்ட பாட வாரியான பணியிடங்கள் எண்ணிக்கை...
“செயற்கைக்கோள் வழி இணையம் - ஸ்டார்லிங்க் சேவைக்கு இந்தியர்கள் முன்பதிவு செய்ய வேண்டாம்” - மத்திய அரசு...
“செயற்கைக்கோள் வழி இணையம் - ஸ்டார்லிங்க் சேவைக்கு இந்தியர்கள் முன்பதிவு செய்ய வேண்டாம்” - .மத்திய அரசு...
உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம், ஸ்டார்லிங்க் என்ற திட்டத்தின் மூலம் செயற்கைக்கோள் வழியாக இணைய இணைப்பை வழங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்தநிலையில், இணைய இணைப்பின் பீட்டா வெர்ஷன் சேவையைப் பெற முன்பதிவு செய்யலாம் என ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தச்சூழலில் இந்தியர்கள் யாரும் ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கு முன்பதிவு செய்ய வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் செயற்கைக்கோள் மூலமாக இணையச் சேவை வழங்குவதற்கு ஸ்டார்லிங் உரிமம் வாங்கவில்லை எனவும், செயற்கைக்கோள் மூலமான தகவல் தொடர்பு சேவைகளை வழங்க, இந்திய ஒழுங்குமுறை கட்டமைப்பிற்கு இணங்குமாறும், அதுபோன்ற சேவைகளைத் தருவதையும் அதற்காக முன்பதிவு செய்வதையும் உடனடியாக நிறுத்துமாறும் அந்த நிறுவனத்தை அரசாங்கம் கேட்டுக்கொண்டிருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
எனவே இந்தியர்கள் யாரும் ஸ்டார்லிங் சேவைக்கு முன்பதிவு செய்யவேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிகமாக நியமிக்கப்பட உள்ள 2774 முதுகலை ஆசிரியர் காலிப் பணியிடங்கள் விவரம் (மாவட்டம் & பாடம் வாரியாக) - (Details of 2774 Post Graduate Teacher Vacancies to be filled temporarily by the Parent Teacher Association in Government Higher Secondary Schools - District & Subject wise Vacancies)...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
LIC Website Change to Hindi Language - “Should LIC give up business and impose Hindi..?” - Strengthening condemnations
LIC Website இந்தி மொழிக்கு மாற்றம் - “LIC வணிகத்தை காவு கொடுத்தாவது இந்தியை திணிக்க வேண்டுமா..?” - வலுக்கும் கண்டனங்கள்... LIC Website Chan...