கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மனித உரிமைகள் தின (10-12-2021) உறுதிமொழி (Human Rights Day Pledge)...

மனித உரிமைகள் தின (10-12-2021) உறுதிமொழி (Human Rights Day Pledge)...



பள்ளி, கல்லூரி சான்றிதழ்களில் தமிழில் பெயர் எழுதும் போது முன் எழுத்துக்களையும் (Initials) தமிழிலேயே எழுத வேண்டும் - அரசாணை (நிலை) எண்: 140, நாள்: 02-11-2021 வெளியீடு (When writing the name in Tamil in school and college certificates, the initials should also be written in Tamil - G.O. (Ms) No: 140, Date: 02-11-2021 Issued)...



>>> பள்ளி, கல்லூரி சான்றிதழ்களில் தமிழில் பெயர் எழுதும் போது முன் எழுத்துக்களையும் (Initials) தமிழிலேயே எழுத வேண்டும் - அரசாணை (நிலை) எண்: 140, நாள்: 02-11-2021 வெளியீடு (When writing the name in Tamil in school and college certificates, the initials should also be written in Tamil - G.O. (Ms) No: 140, Date: 02-11-2021 Issued)...

கூடுதலாகப் பல்வேறு மொழிகளைக் கற்றுக் கொள்ள உதவும் வகையில், பாஷா சங்கம் என்ற மொபைல் செயலியை இந்தியக் கல்வி அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது (Indian Ministry of Education has introduced a mobile app called Bhasha Sangam to help people learn different languages In addition)...

 


கூடுதலாகப் பல்வேறு மொழிகளைக் கற்றுக் கொள்ள உதவும் வகையில், பாஷா சங்கம் என்ற மொபைல் செயலியை இந்தியக் கல்வி அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது (Indian Ministry of Education has introduced a mobile app called Bhasha Sangam to help people learn different languages In addition)...

பொது மாறுதல் கலந்தாய்வு - ஆதி திராவிடர் நலத் துறைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கு Online மூலம் கலந்தாய்வு - விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவு செய்வது தொடர்பான வழிமுறைகள் வெளியீடு - ஆணையரின் கடிதம் (General Transfer Counselling - Online Counselling for all types of teachers working in Adi Dravidar Welfare Department Schools - Instructions on Registration of Applications on the Website - Letter from the Commissioner) ந.க.எண்: எ1/17352/2021, நாள்: 08-12-2021...



>>> பொது மாறுதல் கலந்தாய்வு - ஆதி திராவிடர் நலத் துறைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கு Online மூலம் கலந்தாய்வு - விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவு செய்வது தொடர்பான வழிமுறைகள் வெளியீடு - ஆணையரின் கடிதம் (General Transfer Counselling - Online Counselling for all types of teachers working in Adi Dravidar Welfare Department Schools - Instructions on Registration of Applications on the Website - Letter from the Commissioner) ந.க.எண்: எ1/17352/2021, நாள்: 08-12-2021...

இன்றைய (10-12-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

டிசம்பர் 10, 2021




மூத்த சகோதரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தனவருவாயை மேம்படுத்துவது தொடர்பான முயற்சிகள் ஈடேறும். குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியான செய்திகளும் கிடைக்கப் பெறுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே புரிதலும், நெருக்கமும் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் உங்களின் மரியாதை மேம்படும். அனுகூலமான நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு  


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



அஸ்வினி : ஒத்துழைப்பு கிடைக்கும்.


பரணி : புரிதல் உண்டாகும்.


கிருத்திகை : மரியாதை மேம்படும்.

---------------------------------------




ரிஷபம்

டிசம்பர் 10, 2021




அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். மனதில் புத்துணர்ச்சியான சிந்தனைகளும், தெளிவும் உண்டாகும். எதிர்பார்த்திருந்த சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனைகள் மேம்படும். நன்மையான நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம் 



கிருத்திகை : இழுபறிகள் மறையும்.


ரோகிணி : உதவிகள் கிடைக்கும்.


மிருகசீரிஷம் : இன்னல்கள் குறையும். 

---------------------------------------




மிதுனம்

டிசம்பர் 10, 2021




இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். தந்தைவழி உறவுகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் கைகூடும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மாணவர்களுக்கு மேம்படும். பாராட்டுகள் கிடைக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு  


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம் 



மிருகசீரிஷம் : வரவுகள் மேம்படும்.


திருவாதிரை : கருத்து வேறுபாடுகள் குறையும். 


புனர்பூசம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.

---------------------------------------




கடகம்

டிசம்பர் 10, 2021




உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். நெருக்கமானவர்களிடத்தில் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வர்த்தகம் சார்ந்த பணிகளில் ஆலோசனைகளை பெற்று முடிவெடுக்கவும். கேளிக்கை தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். விவேகம் வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு  


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம் 



புனர்பூசம் : அனுசரித்து செல்லவும்.


பூசம் : ஆலோசனை வேண்டும்.


ஆயில்யம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

---------------------------------------




சிம்மம்

டிசம்பர் 10, 2021




கணவன், மனைவிக்கிடையே நெருக்கமும், புரிதலும் அதிகரிக்கும். மனதில் புத்துணர்ச்சியும், தெளிவும் காணப்படும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். உத்தியோக பணிகளில் திருப்தியான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபாரம் சம்பந்தமான பணிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு சாதகமான பலன்களை ஏற்படுத்தும். பொறுமை வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்


 

மகம் : புரிதல் ஏற்படும்.


பூரம் : திருப்தி உண்டாகும். 


உத்திரம் : சாதகமான நாள்.

---------------------------------------





கன்னி

டிசம்பர் 10, 2021




பேச்சு திறமைகளால் காரியசித்தி உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் பிறக்கும். வாழ்க்கைத்துணைவரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. போட்டிகள் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை



உத்திரம் : காரியசித்தி உண்டாகும். 


அஸ்தம் : அனுபவம் பிறக்கும். 


சித்திரை : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------




துலாம்

டிசம்பர் 10, 2021




குழந்தைகளின் செயல்பாடுகளில் சற்று கவனம் வேண்டும். வர்த்தகம் சார்ந்த செயல்பாடுகளில் லாபம் மேம்படும். பூர்வீக சொத்துக்களை மாற்றியமைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். உத்தியோக பணிகளில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் சாதகமான பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். மதிப்பு மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் 



சித்திரை : கவனம் வேண்டும். 


சுவாதி : வாய்ப்புகள் உண்டாகும். 


விசாகம் : நம்பிக்கை பிறக்கும்.

---------------------------------------




விருச்சிகம்

டிசம்பர் 10, 2021




வாக்கு சாதுரியத்தின் மூலம் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். உறவினர்களிடம் நிதானத்தை கையாளுவது நல்லது. பயணங்களில் புதிய அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வாகனம் மற்றும் வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். அன்பு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம் 



விசாகம் : இழுபறிகள் குறையும். 


அனுஷம் : அறிமுகம் கிடைக்கும்.


கேட்டை : எண்ணங்கள் மேம்படும்.

---------------------------------------




தனுசு

டிசம்பர் 10, 2021




எண்ணிய பணிகளில் இருந்துவந்த தடைகளை வெற்றி கொள்வீர்கள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். மனதில் எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். சொத்துக்கள் விற்பது தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் படிப்படியாக குறையும். திறமை வெளிப்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் 



மூலம் : தடைகள் நீங்கும்.


பூராடம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும். 


உத்திராடம் : லாபம் மேம்படும். 

---------------------------------------




மகரம்

டிசம்பர் 10, 2021




எதிர்பார்த்திருந்த தனம் சார்ந்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் முன்னேற்றம் ஏற்படும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். பேச்சில் நிதானமும், கவனமும் வேண்டும். வருவாய் மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு


 

உத்திராடம் : லாபம் மேம்படும்.


திருவோணம் : தேவைகள் நிறைவேறும்.


அவிட்டம் : நிதானம் வேண்டும்.

---------------------------------------





கும்பம்

டிசம்பர் 10, 2021




மனதில் தோன்றும் பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் மறைமுகமான ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். உறவினர்களை பற்றிய புரிதல் உண்டாகும். கற்பனை சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். கல்வி சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு உதவிகள் மேம்படும். தாமதம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம் 



அவிட்டம் : குழப்பங்கள் நீங்கும்.


சதயம் : புரிதல் உண்டாகும்.


பூரட்டாதி : உதவிகள் மேம்படும்.

---------------------------------------




மீனம்

டிசம்பர் 10, 2021




மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார பணிகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் காணப்படும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். புதிய முயற்சிகளுக்கேற்ப வெளியூர் பயணங்கள் செல்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோக பணிகளில் எதிர்பாராத சில மாற்றமான வாய்ப்புகள் காணப்படும். சுபமான நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்


 

பூரட்டாதி : முன்னேற்றமான நாள். 


உத்திரட்டாதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.


ரேவதி : மாற்றமான நாள். 

---------------------------------------


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 10-12-2021 - வெள்ளி - (School Morning Prayer Activities)...



பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 10.12.21

திருக்குறள் :


பால்: அறத்துப்பால்


இயல்: பாயிரம்


அதிகாரம்: கடவுள் வாழ்த்து


குறள் எண்: 2


கற்றதனா லாயபயனென் கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்.


பொருள்: கடவுளின் புனிதமான திருவடிகளை வணங்காதவன், கற்ற கல்வியினால் ஒரு பயனும் இல்லை.


பழமொழி :

Yourself first, others afterward.



 தனக்கு மிஞ்சித் தான் தானமும் தருமமும்.



இரண்டொழுக்க பண்புகள் :


1. ஓதாத கல்வி கெடும், ஒழுக்கமில்லா வாழ்வு கெடும். எனவே ஆசிரியர் கொடுக்கும் கல்வி பயின்று ஆசிரியரும் பெற்றோரும் கற்றுக் கொடுக்கும் ஒழுக்க வாழ்வினை வாழ்வேன். 


2. பணத்தால் அமைதி கெடும், கடன் பட்டால் வாழ்வு கெடும் எனவே பண ஆசை இல்லாமல் சரியான முறையில் செலவு செய்து வாழ்வேன்.


பொன்மொழி :


குறிக்கோளை மட்டும் கருதாமல், அதை அடையும் வழியையும் சிந்திக்கவேண்டும். இதில் தான் வெற்றியின் ரகசியமே அடங்கி கிடக்கிறது.____விவேகானந்தர்


பொது அறிவு :


1. உலகின் மிகவும் நீளமான நதி எது? 


நைல் நதி. 


2. பகவத் கீதையில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன? 


18 அதிகாரங்கள்.


English words & meanings :


You are jammy - you are lucky, அதிர்ஷ்டமான நபர்,


 she is loaded - she is having lots of money, அதிகம் பணம் வைத்து இருப்பவர்


ஆரோக்ய வாழ்வு :


இளம் சூடான நீரில் 3 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை கலந்து அதில் கால்களை 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும். பின்பு பாதங்களில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்கிவிட்டு மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். இதன் மூலம் பாதங்களில் ரத்த ஓட்டம் சீராகி வெடிப்பு மறையும்.



கணினி யுகம் :


Ctrl + ] - Increase selected font +1. 


Ctrl + [ - Decrease selected font -1



டிசம்பர் 10

மனித உரிமைகள் நாள்


ஐக்கிய நாடுகள் அவை 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் நாள் உலக மனித உரிமைப் பேரறிக்கை என உலக மக்கள் அனைவருக்குமான வாழ்வுரிமைகளை பிரகடனப்படுத்தியது. அந்த நாளைக் குறிக்கும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 10 ஆம் தேதி உலக நாடுகள் அனைத்தாலும் ”மனித உரிமை நாள்” கொண்டாடப்படுகிறது.


1948 டிசம்பர் 10ஆம் நாள் ஒன்றுக்கூடிய ஐக்கிய நாடுகளின் பொது அவையால் அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதை பெருமைப்படுத்தும் பொருட்டு இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஐ.நா.வின் பொது அவை நாடுகளுக்கும் தன்னார்வ நிறுவனங்களுக்கும் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க 1950 முதல், டிசம்பர் 10 ஆம் நாள் மனித உரிமைகள் நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.


ஐக்கிய நாடுகள் அவையின் நிகழ்வுகளில் முதன்மையான இந்நாளில், நியூயார்கில் அமைந்துள்ள அதன் தலைமைப்பீடத்தில் முக்கிய நிகழ்வுகள் இடம்பெறுவது வழக்கமாகும். இந்நாளில் ஐந்தாண்டுக்கு ஒரு முறை வழங்கப்படும் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் பரிசு வழங்கப்படும். மேலும் பல அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களும் இந்நாளில் பல முக்கிய நிகழ்வுகளை நடத்துவது வழக்கமாகும்.




நீதிக்கதை


முரசு சத்தம்


ஒரு நாள் நரி ஒன்று மிகுந்த பசியோடு இருந்தது. போர்க்களத்துப் பக்கமாக சென்ற போது திடீரென பயங்கர சத்தம் ஒன்று கேட்டது. ஏதோ ஒரு பெரிய விலங்கிற்கு நாம் இன்று இரையாகப் போகிறோம் என்று எண்ணி பயந்து கொண்டிருந்தது. ஆனால் சற்று நேரம் கழித்து அருகில் இருந்த ஒரு பாறையின் மேல் ஏறி சுற்றும் முற்றும் பார்த்தது. 


பிறகு தான் தெரிந்தது அது ஒரு போர் முரசு என்று. அதன் அருகில் மெல்ல சென்று சுற்றிப் பார்த்தது. பசியில் இருந்த நரி அந்த முரசினுள் இருந்து சத்தம் வருகிறது என்பதை அறிந்து கொண்டது. அந்த முரசினுள் ஏதோ ஒரு விலங்கு உள்ளே இருந்து கொண்டு தான் ஒலி எழுப்புகிறது என்று எண்ணி தன் கூரிய பற்கள் மற்றும் நகங்களை கொண்டு அம்முரசினை கிழித்து உள்ளே இருக்கும் மிருகத்தினை தின்ன எண்ணியது. உள்ளே சென்று பார்த்தால் முரசுக்குள் ஒன்றும் இல்லை. ஏமாற்றம் அடைந்த நரி உடல் சோர்வால் மயக்கமுற்று கீழே விழுந்தது. 


நீதி :

ஆசையே துன்பத்திற்குக் காரணம்.



இன்றைய செய்திகள்


10.12.21


★குன்னூரில் இருந்து சூலூர் விமானப்படைதளத்துக்கு ஆம்புலன்ஸ்களில் எடுத்துவரப்பட்ட முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 13 பேரின் உடல்களுக்கு வழிநெடுகிலும் திரளான மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.


★முப்படைத் தலைமைத் தளபதி விபத்தில் மரணமடைந்ததை அடுத்து ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதற்கான காரணங்களை ஆராய தடயவியல் குழு குன்னூர் வருகை தந்துள்ளது.


★தேசியக் கல்வி கொள்கையில் உள்ள திட்டங்களில் நல்லவைகள் மட்டும் எடுத்துக் கொள்ளப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.


★ஆசியா பசிபிக் பிராந்தியத்தில் அதிகாரம் மிக்க நாடுகளில் இந்தியாவுக்கு 4-ம் இடம்.


★குழந்தைகள் முன்னேற்றத்தில் கரோனா 75 ஆண்டுகளில் இல்லாத பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது: யுனிசெப்.


★சாம்பியன் லீக் கால்பந்து : மான்செஸ்டர் யுனைடெட் - யங் பாய்ஸ் அணிகள் மோதிய ஆட்டம் 'டிரா'.


★விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட்: தமிழக அணி வெற்றி.



Today's Headlines


 ★ A large number of people gathered along the way to pay their homage to the bodies of 13 people, including Commander-in-Chief of the 3rd Brigade Bipin Rawat,  brought in ambulances from Coonoor to Sulur Air Force Base.


 ★ A forensic team has visited Coonoor to investigate the cause of the crash of the military plane following the death of the Commander-in-Chief.


 ★ Minister Anbil Mages has said that only the good schemes will be taken from the National Education Policy.


 ★ India is the 4th powerful country in the Asia Pacific region.


 ★ Corona causes a setback in child development never seen in the period of 75 years.


 ★ Champions League Football: Manchester United - Young Boys clash clash 'Draw'.


 ★ Vijay Hazare Cup ODI Cricket: Tamil Nadu team wins.

 Prepared by


Covai women ICT_போதிமரம்

01.01.2021 நிலவரப்படி வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு - தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Seniority List of Middle School Headmasters Eligible for Promotion of Block Educational Officer as on 01.01.2021 Released - Proceedings of the Director of Elementary Education, Tamilnadu) ந.க.எண்: 2663/ஐ1/2021, நாள்: 08-12-2021...


 01.01.2021 நிலவரப்படி வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த 31-12-2005க்கு முன் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியில் சேர்ந்து 31-12-2020க்கு முன் அனைத்து துறைத் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றவர்களின் முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு...


>>> தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 2663/ஐ1/2021, நாள்: 08-12-2021 & வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியல்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Why does heel pain occur?

குதிகால் வலி ஏற்படுவது ஏன்? - கு.கணேசன், மருத்துவர் Why does heel pain occur? தரையில் கால் வைக்கவே பயப்படும் அளவுக்குக் குதிகால் வலியால் சி...