கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (06-01-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஜனவரி 06, 2022




சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். வாழ்க்கைத்துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். வியாபார பணிகளில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். திறமைக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கப் பெறுவீர்கள். நன்மைகள் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்



அஸ்வினி : மகிழ்ச்சியான நாள். 


பரணி : எண்ணங்கள் ஈடேறும். 


கிருத்திகை : பாராட்டுகள் கிடைக்கும்.

---------------------------------------





ரிஷபம்

ஜனவரி 06, 2022




நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் பாராட்டுகளை பெறுவீர்கள். நீண்ட நாட்களாக மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். எதிர்மறை சிந்தனைகள் விலகும். வியாபார பணிகளில் சில வியூகங்களை அமைத்து வாடிக்கையாளர்களை கவருவீர்கள். அன்பு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



கிருத்திகை : நம்பிக்கையான நாள். 


ரோகிணி : முடிவு கிடைக்கும். 


மிருகசீரிஷம் : வியூகங்களை அமைப்பீர்கள்.

---------------------------------------





மிதுனம்

ஜனவரி 06, 2022




உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். இழுபறியான தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். சோர்வு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்



மிருகசீரிஷம் : பொறுப்புகள் குறையும்.


திருவாதிரை : சாதகமான நாள்.


புனர்பூசம் : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------





கடகம்

ஜனவரி 06, 2022




எதிலும் உணர்ச்சிவசப்படாமல் பொறுமையுடன் செயல்பட வேண்டும். முக்கியமான முடிவுகளுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். வியாபாரம் நிமிர்த்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். கற்றல் திறனில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். தடைகள் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



புனர்பூசம் : பொறுமை வேண்டும்.


பூசம் : சேமிப்புகள் குறையும்.


ஆயில்யம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

---------------------------------------





சிம்மம்

ஜனவரி 06, 2022




கால்நடை சார்ந்த வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புகளும், அதிகாரங்களும் மேம்படும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். வர்த்தகப் பணிகளில் லாபகரமான சூழ்நிலைகள் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



மகம் : மேன்மையான நாள்.


பூரம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.


உத்திரம் : லாபகரமான நாள்.

---------------------------------------





கன்னி

ஜனவரி 06, 2022




சிறு தூரப் பயணங்களின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் மறைமுக ஆதரவை பெறுவீர்கள். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



உத்திரம் : மாற்றங்கள் ஏற்படும். 


அஸ்தம் : பிரச்சனைகள் குறையும்.


சித்திரை : முன்னேற்றமான நாள்.

---------------------------------------





துலாம்

ஜனவரி 06, 2022




வருமானத்தை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். நண்பர்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். பயணங்களால் புதுவிதமான அனுபவங்கள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். புரிதல் உண்டாகும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்



சித்திரை : புரிதல் ஏற்படும். 


சுவாதி : அனுபவம் பிறக்கும்.


விசாகம் : பொறுப்புகள் குறையும்.

---------------------------------------





விருச்சிகம்

ஜனவரி 06, 2022




உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உறவினர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் காணப்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த மறைமுக தடைகள் குறையும். வரவுகள் மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



விசாகம் : ஒத்துழைப்பு கிடைக்கும். 


அனுஷம் : நெருக்கம் அதிகரிக்கும். 


கேட்டை : தடைகள் குறையும்.

---------------------------------------





தனுசு

ஜனவரி 06, 2022




உத்தியோக பணிகளில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். பிறமொழி பேசும் மக்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் தெளிவு ஏற்படும். வீடு, வாகனத்தை சீர் செய்வதற்கான வாய்ப்புகள் அமையும். வியாபார பணிகளில் எதிர்பாராத சில ஒப்பந்தங்கள் கைகூடும். அறிமுகம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



மூலம் : முன்னேற்றம் உண்டாகும். 


பூராடம் : தெளிவு ஏற்படும்.


உத்திராடம் : ஒப்பந்தங்கள் கைகூடும்.

---------------------------------------





மகரம்

ஜனவரி 06, 2022




மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு கிடைக்கும். சபை தொடர்பான செயல்பாடுகளில் ஆதரவு மேம்படும். புதிய பயணங்களின் மூலம் புத்துணர்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். பணவரவில் இருந்துவந்த நெருக்கடியான சூழ்நிலைகள் குறையும். மதிப்பு மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



உத்திராடம் : காரியம் சித்தமாகும். 


திருவோணம் : ஆதரவு மேம்படும். 


அவிட்டம் : நெருக்கடிகள் மறையும்.

---------------------------------------





கும்பம்

ஜனவரி 06, 2022




எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில விஷயங்கள் காலதாமதமாக நிறைவுபெறும். மாணவர்களுக்கு அவ்வப்போது ஞாபக மறதி ஏற்பட்டு நீங்கும். வியாபார பணிகளில் உள்ள மறைமுக போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதுவிதமான சிந்தனைகளின் மூலம் சஞ்சலங்கள் ஏற்பட்டு நீங்கும். மகிழ்ச்சியான நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு 



அவிட்டம் : தாமதம் ஏற்படும்.


சதயம் : வெற்றிகரமான நாள்.


பூரட்டாதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.

---------------------------------------





மீனம்

ஜனவரி 06, 2022




குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது நல்லது. தந்தைவழி உறவினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். முயற்சிக்கு உண்டான அங்கீகாரங்கள் காலதாமதமாக கிடைக்கும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். நிதானம் வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



பூரட்டாதி : தேவைகளை நிறைவேற்றுவீர்கள். 


உத்திரட்டாதி : அனுசரித்து செல்லவும். 


ரேவதி : அனுபவம் வெளிப்படும்.

---------------------------------------


1 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் ஜனவரி - 2022 மாதத்திற்கான நிகழ்ச்சி நிரல் Kalvi TV - January 2022 (03.01.2022 - 31 01.2022) CUE Sheet (Full Programme Schedule) for 1st to 10th Standard...

 


>>> 1 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் ஜனவரி - 2022 மாதத்திற்கான நிகழ்ச்சி நிரல் Kalvi TV - January 2022 (03.01.2022 - 31 01.2022) CUE Sheet (Full Programme Schedule) for 1st to 10th Standard...


1 முதல் 9 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்தத் தடை & 10 , 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும் - அரசுப் பணியாளர்கள் 9ஆம் தேதிக்குள் தடுப்பூசி சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் - 6ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்:026, நாள்: 05-01-2022 (Ban on live classes from 1st to 9th Standard & Direct classes for 10th, 11th and 12th Standard students - Government servants must submit vaccination certificate by 9th - Night curfew from 06-01-2022 - Tamil Nadu Government Press Release)...

>>> தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்:026, நாள்: 05-01-2022...






⭕தமிழகத்தில் நாளை  (06.01.2021) முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது.


⭕அரசு சார்பாக நடைபெறும் பொங்கல் விழாக்கள் ஒத்திவைக்கப்படுகிறது.


⭕இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமல் படுத்தப்படும்.


⭕ஜனவரி 9ஆம் தேதியன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும்.


⭕பேருந்துகள் மற்றும் புறநகர் ரயில்களில் 50 சதவீத பயணிகளுக்கு மட்டுமே அனுமதி.


⭕1 முதல் 9 வரை பயிலும் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பு. ஆன்லைன் வகுப்புகளுக்கு மட்டுமே அனுமதி


⭕கல்லூரிகளுக்கு ஜனவரி 20ஆம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு.


⭕வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் கோவில்களில் வழிபாடு நடத்த தடை.


⭕திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி.


⭕திருமண நிகழ்வுகளில் 100 பேரும் துக்க நிகழ்வுகளிலும் 50 பேருக்கும் அனுமதி.


இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு என அறிவிப்பு.


அத்தியாவசிய பணிகளான பால் விநியோகம், பத்திரிகை விநியோகம், பெட்ரோல் பங்குகள் இயங்க அனுமதி.


ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவிப்பு.


1 முதல் 9ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. 


பொதுத்தேர்வு எழுதுவோரின் எதிர்கால நலன் கருதி, 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள்.


கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 20ம் தேதி வரை விடுப்பு (Study Leave).


பொழுதுபோக்கு, கேளிக்கை பூங்காக்கள் செயல்பட தடை.


அரசு, தனியார் நிறுவனத்தால் நடத்தப்படும் பொங்கல், கலை நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படும்.


பேருந்து, மெட்ரோ, புறநகர் ரயில்களில் 50% பயணிகளுக்கு மட்டுமே அனுமதி.


வழிபாட்டுதலங்களில் வெள்ளி, சனி, ஞாயிறுகளில் அனுமதி இல்லை.


அனைத்து கடற்கரைகளிலும் நடைபயிற்சிக்கு மட்டுமே அனுமதி.

ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வுக்கான விண்ணப்பம் EMIS மூலம் பதிவு செய்யும் முறை (Application Registration for Teachers Transfer Counselling through EMIS Website)...

ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வுக்கான விண்ணப்பம் EMIS மூலம் தற்போது பதிவு செய்யலாம்.

வலைதள முகவரி:

www.emis.tnschools.gov.in


Teacher individual login மூலம் சென்று மாறுதல் படிவத்தை ஆன்லைன் மூலம் நிரப்பலாம்.


Teacher ID : 8 digit Numbers


Password : First 4 numbers of your mobile number@your Year of Birth.





நிரப்ப வேண்டிய விவரங்கள்...




>>> EMIS மூலம் ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பது குறித்து முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்...


EMIS மூலம் ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பது குறித்து அரியலூர் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Proceedings of Ariyalur Chief Educational Officer regarding applying for Teacher Transfer Counselling through EMIS) ந.க.எண்: 018/அ3/2022, நாள்: 05-01-2022...



>>> EMIS மூலம் ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பது குறித்து அரியலூர் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Proceedings of Ariyalur Chief Educational Officer regarding applying for Teacher Transfer Counselling through EMIS) ந.க.எண்: 018/அ3/2022, நாள்: 05-01-2022...



>>> ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வுக்கான விண்ணப்பம் EMIS மூலம் பதிவு செய்யும் முறை...



EMIS-ல்  தற்போது ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வுக்கான Option கொடுக்கப்பட்டுள்ளது.


பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு உயர்நிலை / மேல்நிலை மற்றும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் சார்ந்து 2021-2022க்கான பொது மாறுதல் கலந்தாய்விற்கான மாறுதல் விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய கீழ்க்கண்டுள்ளவாறு வழிமுறைகள் தெரிவிக்கப்படுகிறது . 


1. அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தத்தம் மாறுதல் விண்ணப்பங்களை தமது பள்ளியில் உள்ள EMIS இணையதளத்தில் ( Teacher Transfer பதிவேற்றம் செய்து , பள்ளியின் தலைமை ஆசிரியரின் ஒப்பம் பெற்று , அதன் நகல் 02 பிரதிகளை அந்தந்த மாவட்டக் கல்விக் கல்வி அலுவலகத்தில் 08.01.2022- அன்று காலை 10.00 மணிக்குள் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் ஒப்படைப்பு செய்ய வேண்டும்.


2. அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தத்தம் மாறுதல் விண்ணப்பங்களை தமது பள்ளியில் உள்ள EMIS இணையதளத்தில் ( Teacher Transfer ) பதிவேற்றம் செய்து , பள்ளியின் தலைமை ஆசிரியரின் ஒப்பம் பெற்று . அதன் நகல் 02 பிரதிகளை அந்தந்த வட்டாரக் கல்வி அலுவலகத்தில் 08.01.2022 அன்று காலை 10.00 மணிக்குள் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் ஒப்படைப்பு செய்ய வேண்டும் 


3. மேற்காணும் அரசு உயர்நிலை / மேல்நிலை மற்றும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளின் ஆசிரியர்களின் பொது மாறுதல் விண்ணப்பங்களின் நகல் 1 - னை தத்தம் மாவட்டக் கல்வி அலுவலகம் வாயிலாக தொகுத்து , அரியலூர் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் 08.01.2022 அன்று மதியம் 3.00 மணிக்குள் மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஒப்படைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர்
அரியலூர்

உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி மற்றும் பாடவாரியாக காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் பணியிட விவரம் மற்றும் காலிப் பணியிட விவரச் சுருக்கம் (School & Subject wise vacancy list of Graduate Teachers (B.T.Assistants) in High and Higher Secondary Schools & Abstract)...

 


>>> உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி மற்றும் பாடவாரியாக காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் பணியிட விவரம் (School & Subject wise vacancy list of Graduate Teachers (B.T.Assistants) in High and Higher Secondary Schools)...



>>> காலிப் பணியிட விவரச் சுருக்கம் (Abstract)...

இன்றைய (05-01-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஜனவரி 05, 2022




புதிய மனை மற்றும் வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். குடும்ப பெரியோர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை உருவாக்கும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்வது நல்லது. அமைதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்




அஸ்வினி : எண்ணங்கள் மேம்படும். 


பரணி : மாற்றம் ஏற்படும்.


கிருத்திகை : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------

 




ரிஷபம்

ஜனவரி 05, 2022




புதிய வியாபார நிமிர்த்தமான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். திறமைக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடனிருப்பவர்களின் தன்மைகளை அறிந்து கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். மாணவர்களுக்கு கல்வி பயிலும் விதத்தில் மாற்றங்கள் ஏற்படும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். மேன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு




கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும். 


ரோகிணி : புரிதல் ஏற்படும்.


மிருகசீரிஷம் : அறிமுகம் கிடைக்கும்.

---------------------------------------

 



மிதுனம்

ஜனவரி 05, 2022




உடல்நிலையில் சோர்வும், சுறுசுறுப்பின்மையும் உண்டாகும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பதன் மூலம் உங்கள் மீதான நம்பிக்கைகள் அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத சிலரது சந்திப்புகள் மனதளவில் மாற்றங்களை ஏற்படுத்தும். விவேகம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண்: 9 


அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு




மிருகசீரிஷம் : சோர்வான நாள். 


திருவாதிரை : சேமிப்புகள் குறையும். 


புனர்பூசம் : பொறுப்புகள் அதிகரிக்கும். 

---------------------------------------

 




கடகம்

ஜனவரி 05, 2022




மனதில் நினைத்த எண்ணங்கள் நிறைவேறும். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபார பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த இழுபறியான சூழல் மறையும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். போட்டிகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு




புனர்பூசம் : எண்ணங்கள் நிறைவேறும். 


பூசம் : முதலீடுகள் அதிகரிக்கும். 


ஆயில்யம் : இழுபறிகள் மறையும்.

---------------------------------------

 



சிம்மம்

ஜனவரி 05, 2022




வியாபார பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சிறு தூரப் பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். பத்திரம் சார்ந்த பணிகளில் மேன்மை உண்டாகும். மாணவர்களுக்கு விளையாட்டுகளில் ஆர்வம் ஏற்படும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். திறமைகள் வெளிப்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 1 


அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்




மகம் : முன்னேற்றம் உண்டாகும். 


பூரம் : மேன்மையான நாள்.


உத்திரம் : அனுபவம் வெளிப்படும்.

---------------------------------------

 




கன்னி

ஜனவரி 05, 2022




குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகளும், கலகலப்பான செய்திகளும் கிடைக்கும். இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோக மாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். இலக்கியம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகள் உருவாகும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். பாராட்டுகள் கிடைக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




உத்திரம் : கலகலப்பான நாள். 


அஸ்தம் : திறமைகள் வெளிப்படும்.


சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------

 




துலாம்

ஜனவரி 05, 2022




கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமை ஏற்படும். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல் புதுவிதமான உத்வேகத்தை ஏற்படுத்தும். சுபகாரியம் தொடர்பான பேச்சு வார்த்தைகள் சாதகமாக நிறைவடையும். செய்கின்ற பணிகளில் லாபகரமான கண்ணோட்டங்கள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் மனதிற்கு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தும். தன்னம்பிக்கை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



 

சித்திரை : ஒற்றுமை ஏற்படும்.


சுவாதி : சாதகமான நாள். 


விசாகம் : உற்சாகம் உண்டாகும்.

---------------------------------------

 




விருச்சிகம்

ஜனவரி 05, 2022




புதிய முயற்சிகளின் மூலம் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் அகலும்.  நிதானம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்




விசாகம் : முடிவு கிடைக்கும்.


அனுஷம் : ஆதரவான நாள். 


கேட்டை : இழுபறிகள் அகலும்.

---------------------------------------

 




தனுசு

ஜனவரி 05, 2022




மனதை உறுத்திக் கொண்டிருந்த சில விஷயங்களில் தெளிவான முடிவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். கூட்டு வியாபாரத்தில் லாபம் மேம்படும். விவேகமான செயல்பாடுகளின் மூலம் பலரின் ஆதரவைப் பெறுவீர்கள். மகிழ்ச்சி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை 




மூலம் : முடிவு கிடைக்கும்.


பூராடம் : சிந்தனைகள் மேம்படும். 


உத்திராடம் : ஆதரவு அதிகரிக்கும்.

---------------------------------------

 




மகரம்

ஜனவரி 05, 2022




வியாபார பணிகளில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். பயணம் சார்ந்த விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சேமிப்பது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த தடைகள் குறையும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. ஆர்வம் அதிகரிக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்




உத்திராடம் : அறிமுகம் ஏற்படும். 


திருவோணம் : சிந்தனைகள் அதிகரிக்கும். 


அவிட்டம் : தடைகள் குறையும்.

---------------------------------------

 




கும்பம்

ஜனவரி 05, 2022




திட்டமிட்ட பணிகளை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். மற்றவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உத்தியோகத்தில் தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். வியாபாரம் நிமிர்த்தமாக வெளியூர் பயணங்கள் செல்வதற்கான சூழ்நிலைகள் அமையும். வழக்கு சார்ந்த பணிகளில் நிதானம் வேண்டும். ஆதரவு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்




அவிட்டம் : எண்ணங்கள் ஈடேறும். 


சதயம் : வாய்ப்புகள் கிடைக்கும். 


பூரட்டாதி : நிதானம் வேண்டும்.

---------------------------------------

 




மீனம்

ஜனவரி 05, 2022




தனவரவுகளில் மேன்மையான சூழ்நிலைகள் காணப்படும். உத்தியோக பணிகளில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். மதிப்பு உயரும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்




பூரட்டாதி : மேன்மையான நாள். 


உத்திரட்டாதி : ஒத்துழைப்பு கிடைக்கும். 


ரேவதி : புத்துணர்ச்சியான நாள்.

---------------------------------------

 


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. (D) No. 278, Dated : 17-12-2024 - TN Govt nominated TRB as the nodal agency for conducting SET

TRB மூலம் பேராசிரியர் தகுதித் தேர்வு (TNSET) - மூன்றாண்டுகள் நடத்துவதற்கான அரசாணை G.O. (D) No. 278, Dated : 17-12-2024 வெளியீடு TAMILNADU St...