கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (09-01-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஜனவரி 09, 2022



வியாபாரம் நிமிர்த்தமான பணிகளில் முயற்சிகள் அதிகரிக்கும். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். வழக்கு சார்ந்த பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். நெருக்கமானவர்களின் மூலம் புதுவிதமான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். புரிதல் மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




அஸ்வினி : முயற்சிகள் அதிகரிக்கும்.


பரணி : இழுபறிகள் குறையும்.


கிருத்திகை : புதுமையான நாள்.

---------------------------------------





ரிஷபம்

ஜனவரி 09, 2022



வெளிவட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை ஏற்படும். புதுவிதமான சிந்தனைகள் மனதில் மேம்படும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு ஆதரவு அதிகரிக்கும். கலை நுட்பமான செயல்பாடுகளில் ஈடுபாடு உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்




கிருத்திகை : மதிப்பு அதிகரிக்கும். 


ரோகிணி : பொருட்சேர்க்கை உண்டாகும். 


மிருகசீரிஷம் : ஈடுபாடு அதிகரிக்கும்.

---------------------------------------





மிதுனம்

ஜனவரி 09, 2022



பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் தடுமாற்றம் உண்டாகும். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் பலரின் ஆதரவை பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்




மிருகசீரிஷம் : ஆதரவு கிடைக்கும். 


திருவாதிரை : ஈடுபாடு அதிகரிக்கும்.


புனர்பூசம் : நம்பிக்கை ஏற்படும்.

---------------------------------------





கடகம்

ஜனவரி 09, 2022



வியாபார பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் காணப்படும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். இளைய உடன்பிறப்புகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். நிர்வாகம் சார்ந்த பணிகளில் ஆலோசனைகளை பெற்று முடிவெடுக்கவும். கணவன், மனைவிக்கிடையே புரிதலும், நெருக்கமும் அதிகரிக்கும். அதிர்ஷ்டகரமான நாள்.





அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்





புனர்பூசம் : வாய்ப்புகள் கைகூடும்.


பூசம் : அனுசரித்து செல்லவும். 


ஆயில்யம் : நெருக்கம் அதிகரிக்கும்.

---------------------------------------





சிம்மம்

ஜனவரி 09, 2022



சந்தேக உணர்வுகளை குறைத்துக் கொள்வது நல்லது. நெருக்கமானவர்களிடம் வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சூழ்நிலையை அறிந்து செயல்படவும். தனவரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் காணப்படும். பேச்சுக்களில் நிதானம் வேண்டும். வெளியாட்களிடம் குடும்ப விவகாரங்களை பகிர்வதை குறைத்துக் கொள்ளவும். நிதானம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்




மகம் : சிந்தித்து செயல்படவும். 


பூரம் : ஏற்ற, இறக்கமான நாள்.


உத்திரம் : நிதானம் வேண்டும்.

---------------------------------------





கன்னி

ஜனவரி 09, 2022



இயந்திரம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். சூழ்நிலைகளை அறிந்து முடிவு எடுப்பீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். வியாபார பணிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு கற்கும் திறனில் மாற்றங்கள் ஏற்படும். தெளிவு வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்




உத்திரம் : ஈடுபாடு அதிகரிக்கும். 


அஸ்தம் : வாய்ப்புகள் கைகூடும். 


சித்திரை : மாற்றங்கள் ஏற்படும்.

---------------------------------------




துலாம்

ஜனவரி 09, 2022



உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். உத்தியோக பணிகளில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். உறவினர்களை பற்றிய புரிதல் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். வழக்கு சார்ந்த பணிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். சுகமான நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்




சித்திரை : இன்னல்கள் குறையும். 


சுவாதி : புரிதல் ஏற்படும்.


விசாகம் : அனுபவம் உண்டாகும்.

---------------------------------------




விருச்சிகம்

ஜனவரி 09, 2022



இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். வழக்கு சார்ந்த பணிகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். எதையும் சமாளிக்கக்கூடிய மன தைரியம் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். மனதிற்கு விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். செலவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை




விசாகம் : இழுபறிகள் அகலும். 


அனுஷம் : தைரியம் அதிகரிக்கும்.


கேட்டை : விருப்பம் நிறைவேறும்.

---------------------------------------





தனுசு

ஜனவரி 09, 2022



மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். சுயதொழில் நிமிர்த்தமான முயற்சிகள் மேலோங்கும். உத்தியோகத்தில் தனித்திறமை வெளிப்படும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான செய்திகள் கிடைக்கும். புதிய ஆராய்ச்சி தொடர்பான தேடல் உண்டாகும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு




மூலம் : முயற்சிகள் மேலோங்கும்.


பூராடம் : தனித்திறமை வெளிப்படும். 


உத்திராடம் : தேடல் உண்டாகும்.

---------------------------------------




மகரம்

ஜனவரி 09, 2022



சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாலின மக்களின் மூலம் சாதகமான பலன்கள் உண்டாகும். பிள்ளைகளின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்த முயற்சி செய்வீர்கள். உயர் அதிகாரிகளால் அனுகூலமான சூழல் உண்டாகும். அமைதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்




உத்திராடம் : ஆதரவு கிடைக்கும். 


திருவோணம் : சுபமான நாள்.


அவிட்டம் : அனுகூலம் உண்டாகும்.

---------------------------------------




கும்பம்

ஜனவரி 09, 2022



புதிய தொழில் முயற்சியில் எண்ணிய லாபம் கிடைக்கும். செய்கின்ற தொழிலில் மேன்மையான சூழல் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். விவாதங்களின் மூலம் சாதகமான சூழல் அமையும். புதிய நபர்களின் மூலம் தொழில் சார்ந்த வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். ஆதாயம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




அவிட்டம் : லாபம் கிடைக்கும்.


சதயம் : மகிழ்ச்சியான நாள்.


பூரட்டாதி : அன்யோன்யம் அதிகரிக்கும்.

---------------------------------------




மீனம்

ஜனவரி 09, 2022



மனதில் தோன்றும் எண்ணங்களால் சோர்வு உண்டாகும். நண்பர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்படும். மனை சார்ந்த விஷயங்களில் லாபம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான வேலைவாய்ப்புகளில் ஈடுபடுவோர்க்கு சாதகமான சூழல் ஏற்படும். இடமாற்றத்தால் புதிய அனுபவம் கிடைக்கும். இழந்த பொருட்களை மீட்பதற்கான சூழல் உண்டாகும். நிம்மதியான நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




பூரட்டாதி : சோர்வு உண்டாகும். 


உத்திரட்டாதி : சாதகமான நாள். 


ரேவதி : அனுபவம் கிடைக்கும்.

---------------------------------------


ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு விண்ணப்பம் - பணிவரன்முறை தேதி தொடர்பான சிக்கல் தீர்க்கப்பட்டது - State EMIS Team தகவல் (Teacher Transfer Counselling Application - Regularisation Date Issue Resolved - State EMIS Team)...

 


அன்புள்ள அனைவருக்கும், 

பணிவரன்முறை தேதி தொடர்பான சிக்கல் தீர்க்கப்பட்டது. உங்கள் இடமாற்ற விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டவுடன், உங்கள் தனிப்பட்ட உள்நுழைவிலிருந்து  இடமாறுதல் விண்ணப்பங்களை அச்சிடலாம். 

- மாநில EMIS குழு.


DEAR ALL, 


ISSUE REGARDING DATE OF REGULARISATION RESOLVED. YOU CAN PRINT TRANSFER APPLICATIONS FROM YOUR INDIVIDUAL LOGIN ONCE YOUR TRANSFER APPLICATIONS ARE APPROVED. 


STATE EMIS TEAM.

ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு - விண்ணப்பங்களை EMIS Websiteல் பதிவு செய்ய 10-01-2022 மாலை 5 மணி வரை கால அவகாசம் நீட்டிப்பு - ஆணையரின் செயல்முறைகள் (சுற்றறிக்கை 3) வெளியீடு (Teacher Transfer Counselling - Extension of Deadline to register applications on EMIS Website till 5 pm on 10-01-2022 - Publication of Commissioner's Proceedings) ந.க.எண்: 25154/ அ1/ இ2/ 2021, நாள்: 08-01-2022...



>>> ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு - விண்ணப்பங்களை EMIS Websiteல் பதிவு செய்ய 10-01-2022 மாலை 5 மணி வரை கால அவகாசம் நீட்டிப்பு - ஆணையரின் செயல்முறைகள் (சுற்றறிக்கை 3) வெளியீடு (Teacher Transfer Counselling - Extension of Deadline to register applications on EMIS Website till 5 pm on 10-01-2022 - Publication of Commissioner's Proceedings) ந.க.எண்: 25154/ அ1/ இ2/ 2021, நாள்: 08-01-2022...

10-01-2022 முதல் பூஸ்டர் தடுப்பூசி - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் (Booster Vaccine from 10-01-2022 - Minister M.Subramanian)...

 10-01-2022 முதல் பூஸ்டர் தடுப்பூசி - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் (Booster Vaccine from 10-01-2022 - Minister M.Subramanian)...


10ம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் 

வருகிற 10ம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட இருக்கிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 35,46,000 பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட தகுதியானவர்கள்.

EMIS மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ( District Coordinators Mobile Number and Mail ID)...



>>> EMIS மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி (EMIS District Coordinators Mobile Number and Mail ID)...


தொடக்க, நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கான கற்றல் அடைவுகள் கையேடு (Learning Outcomes Guide for Elementary and Middle School Students)...



>>> தொடக்க, நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கான கற்றல் அடைவுகள் கையேடு (Learning Outcomes Guide for Elementary and Middle School Students)...


ஆசிரியர் பொது மாறுதல் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்தல் - ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்துகொண்டதால் மாறுதல் பெற்ற ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிப்பது பற்றிய பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (சுற்றறிக்கை-2) (Uploading Teacher General Transfer Applications - School Education Commissioner's Circular on Giving Priority to Teachers Who Have Changed for Participating in the Jacto Geo Struggle) ந.க.எண்: 25154/ அ1/ இ2/ 2021, நாள்: 07-01-2022...



>>> ஆசிரியர் பொது மாறுதல் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்தல் - ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்துகொண்டதால் மாறுதல் பெற்ற ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிப்பது பற்றிய பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (சுற்றறிக்கை-2)  (Uploading Teacher General Transfer Applications - School Education Commissioner's Circular on Giving Priority to Teachers Who Have Changed for Participating in the Jacto Geo Struggle) ந.க.எண்: 25154/ அ1/ இ2/ 2021, நாள்: 07-01-2022...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

23-12-2024 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2024 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம் : மருந்து க...