கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் 2022 ஜூலை 19 வரை விண்ணப்பிக்கலாம் (You can apply online for Engineering Courses in Tamil Nadu till July 19, 2022)...



 தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்...


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவும், அசல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யவும் ஜூலை 19 கடைசி நாள்.


பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 16ம் தேதி தொடங்கும்.


>>> தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2022 -  தகவல் கையேடு (TNEA 2022 - Information Brochure)...


விண்ணப்பிக்க வலைதள முகவரி...👇


https://www.tneaonline.org/



>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...



>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...



தமிழ்நாட்டில் பணியாற்றி ஓய்வு பெற்ற அகில இந்திய பணியாளர் தொகுதி ஓய்வூதியர் / குடும்ப ஓய்வூதியர்களுக்கு 01-01-2022 முதல் 31%லிருந்து 34%ஆக 3 சதவீத அகவிலைப்படி உயர்வு - தலைமைச் செயலாளர் கடிதம் (3% Dearness Allowance increased from 31% to 34% from 01-01-2022 to All India Services Pensioners in Tamil Nadu / Family Pensioners - Letter from the Chief Secretary_Lr.No.813,Dt.17.06.2022)...


>>> தமிழ்நாட்டில் பணியாற்றி ஓய்வு பெற்ற அகில இந்திய பணியாளர் தொகுதி ஓய்வூதியர் / குடும்ப ஓய்வூதியர்களுக்கு 01-01-2022 முதல் 31%லிருந்து 34%ஆக 3 சதவீத அகவிலைப்படி உயர்வு - தலைமைச் செயலாளர் கடிதம் (3% Dearness Allowance increased from 31% to 34% from 01-01-2022 to All India Services Pensioners in Tamil Nadu / Family Pensioners - Letter from the Chief Secretary_Lr.No.813,Dt.17.06.2022)...





>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...



>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...



பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.06.2022 - School Morning Prayer Activities...

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.06.2022 - School Morning Prayer Activities...


 திருக்குறள் :


பால்:பொருட்பால்


இயல்:குடியியல்


அதிகாரம்: குடிமை


குறள் : 952


ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம்மூன்றும்

இழுக்கார் குடிப்பிறந் தார்.


பொருள்:

ஒழுக்கம், வாய்மை, மானம் ஆகிய இந்த மூன்றிலும் நிலைதவறி நடக்காதவர்களே உயர்ந்த குடியில் பிறந்தவர்களாகக் கருதப்படுவார்கள்


பழமொழி :

Pluck not where you never planted

பிறர் உடைமைக்கு ஆசைப்படாதே.


இரண்டொழுக்க பண்புகள் :


1. பெற்றோர் ஆசிரியர்கள் நான் நலம் பெறவே ஆலோசனை கூறுவர். கண்டிப்பாக அந்த அறிவுரைகள் படி நடக்க முயற்சி செய்வேன். 


2. நல்ல பண்புகள் கடை பிடித்து நல்ல செயல்கள் நாள் தோறும் செய்வேன்


பொன்மொழி :


உன்னிடம் மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக்கொணரும் வழி விடா முயற்சியும் தொடர்ந்த உழைப்புமே ஆகும். வலிமையோ, புத்திசாலித்தனமோ அல்ல.


பொது அறிவு :


1. மனித உடலில் மிகவும் கெட்டியான தோல் எங்குள்ளது?


 கால் பாதத்தில் உள்ளது.


 2.மனிதனின் முதுகுத்தண்டில் எத்தனை எலும்புகள் உள்ளன?


33 எலும்புகள்.


English words & meanings :


Gabble - talk rapidly and unintelligibly. Verb. அர்த்தமற்ற பேச்சு. வினைச்சொல்


ஆரோக்ய வாழ்வு :


வாழைப்பூவை வேகவைத்தோ அல்லது பொரியல் செய்தோ அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும். அஜீரணக் கோளாறுகள் சரியாகும்.


NMMS Q - 7


BDF, CFI, DHL, ? 


 Answer: EJO


ஜூன் 21

உலக இசை நாள் ( World music day)

உலக இசை நாள் (World Music Day) என்பது ஆண்டுதோறும் சூன் 21 அன்று நிகழ்த்தப்படும் இசைக் கொண்டாட்டங்கள் ஆகும். இந்நாளில் ஒரு நகரம் அல்லது நாட்டின் குடிமக்கள் தங்கள் சுற்றுப்புறங்களில் அல்லது பொது இடங்கள் அல்லது பூங்காக்களில் இசைக்கருவிகளை வாசிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இலவச இசை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அங்கு இசைக்கலைஞர்கள் வேடிக்கையாக கட்டணம் இன்றி பாடி அல்லது இசைக்கருவிகளை இசைத்து மகிழ்கிறார்கள்.


நீதிக்கதை


மாறுதல் முக்கியம்


ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதையாயிருந்தார். பல மன்னர்கள் தங்கள்நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்படுத்த அவர் ஆலோசனையை நாடினர். 


ஒருநாள் ஊர்த்தலைவர் அவர் முன் வந்து அவரைப் பார்த்துக் கிண்டலாகச் சொன்னார் ஐயா! அறிஞரே! நீங்கள் பெரிய அறிஞர் என்று உலகமே பாராட்டுகிறது. ஆனால் உங்கள் பையன் ஒரு அடி முட்டாளாக இருக்கிறானே! தங்கம், வெள்ளி இவற்றுள் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது என்று அவனைக் கேட்டால் அவன் வெள்ளி என்று சொல்கிறான். வெட்கக்கேடு!


அறிஞர் மிக வருத்தமடைந்தார். பையனை அழைத்து கேட்டார். தங்கம், வெள்ளி இவை இரண்டில் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது?


பையன் சொன்னான் தங்கம்


அவர் கேட்டார் பின் ஏன் ஊர்த்தலைவர் கேட்கும்போது வெள்ளி என்று சொன்னாய்?


பையன் சொன்னான் தினமும் நான் பள்ளி செல்லும்போது அவர் ஒரு கையில் தங்க நாணயமும், மறு கையில் வெள்ளி நாணயமும் வைத்துக் கொண்டு என்னை அறிஞரின் மகனே என அழைத்துச் சொல்வார் இவ்விரண்டில் மதிப்பு வாய்ந்ததை நீ எடுத்துக் கொள். 


நான் உடனே வெள்ளியை எடுத்துக் கொள்வேன் . உடனே அவரும் சுற்றி இருப்பவர்களும் சிரித்துக் கிண்டல் செய்வார்கள். நான் அந்த நாணயத்துடன் போய் விடுவேன். 


இது ஓராண்டாக நடக்கிறது. தினம் எனக்கு ஒரு வெள்ளி நாணயம் கிடைக்கிறது. நான் தங்கம் என்று சொல்லி எடுத்துக் கொண்டால் அன்றோடு இந்த விளையாட்டு நின்று விடும். எனக்கு நாணயம் கிடைப்பதும் நின்று போகும். உடனே அறிஞர் திகைத்தார்!


வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் முட்டாள்களாக வேடம் அணிகிறோம், மற்றவர்கள் அதைப் பார்த்து மகிழ்வதற்கு ஆனால் நாம் தோற்பதில்லை. அவர்கள் வெல்வதாக எண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனால் வேறு கோணத்தில் பார்க்கும்போது நாம் வென்றிருப்போம்! எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்!


இன்றைய செய்திகள்


21.06.22


★12-ம் வகுப்பு தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் அதிக தேர்ச்சி சதவீதத்தை பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது. வேலூர் மாவட்டம் கடைசி இடம் பிடித்துள்ளது.


★10-ம் வகுப்பு தேர்வில் கன்னியாகுமரி மாவட்டம் அதிக தேர்ச்சி சதவீதத்தை பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது. வேலூர் மாவட்டம் கடைசி இடம் பிடித்துள்ளது.


★ தமிழகத்தில், பி.இ., பி.டெக் படிப்புகளுக்கு கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு ஆன்லைனில்  தொடங்கியது.


★எஸ்.ஐ. பணியிடத்துக்கான எழுத்துத் தேர்வு வரும் 25-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மேற்கொண்டுள்ளது.



★அக்னிபாதை திட்டத்துக்கு எதிராக நாடு தழுவிய பாரத் முழு அடைப்பு போராட்டம் காரணமாக சில மாநிலங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 500 ரயில்கள்  நிறுத்தப்பட்டுள்ளன. வன்முறையை கட்டுப்படுத்த போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.


★போலி சீன நிறுவனங்களுக்கு உதவியதாக 400 கணக்கர்கள், செயலர்கள் மீது நடவடிக்கை.


★பிலிப்பைன்ஸ் நாட்டின் துணை அதிபராக ரோட்ரிகோ டுட்ரேட் மகள் சாரா டுட்ரேட் பதவி ஏற்றுக் கொண்டார்.


★உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான 100 மீட்டர் ஓட்ட பந்தய போட்டியில் தமிழகத்தின்  கல்லூரி மாணவி தங்கப்பதக்கம் வென்று சாதனை.


★23 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் ஹாக்கி: தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தி இந்தியா அபாரம்.


★ஹாலே ஓபன் டென்னிஸ் : டேனியல் மெட்வதேவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ஹர்காக்ஸ்.


★நெதர்லாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் பீட்டர் சீலர் ஓய்வு .


Today's Headlines


★ Perambalur district has secured the highest pass percentage in the Class 12 examination.  Vellore district ranks last.


 ★ Kanyakumari district has secured the highest pass percentage in the Class 10 examination.  Vellore district ranks last.


 ★ In Tamil Nadu, application registration for BE and B.Tech courses has started online.


 ★  Written test for SI posting  is scheduled to take place on  25th.  Arrangements for this have been made by the Tamil Nadu Uniformed Personnel Selection Board.


 ★ Some states have been affected due to the nationwide Bhanth against Agnipathai project.  About 500 trains have been stopped.  Police have been mobilized to control the violence.


 ★ Action has been taken on 400 accountants and secretaries who helped fake Chinese companies.


 ★ Sarah Tudret, daughter of Rodrigo Tudret, has been sworn in as Vice President of the Philippines.


 ★  Netherland Cricket Team Captain kn Peter Seeler retires.




>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...



>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...



இன்றைய (21-06-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...




மேஷம்

ஜூன் 21, 2022



செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படும். எதிர்பாராத தனவரவு உண்டாகும். வழக்கு தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். உடனிருப்பவர்களின் பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். வெற்றி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம் 




அஸ்வினி : மாற்றம் ஏற்படும். 


பரணி : நெருக்கம் அதிகரிக்கும்.


கிருத்திகை : புரிதல் உண்டாகும்.

---------------------------------------





ரிஷபம்

ஜூன் 21, 2022



குடும்ப உறுப்பினர்களுடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். நெருக்கமானவர்களின் எண்ணங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். திறமைக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். சுறுசுறுப்பாக செயல்பட்டு இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். சிறு தூர பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். அமைதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




கிருத்திகை : சுபமான நாள்.


ரோகிணி : பாராட்டுகள் கிடைக்கும்.


மிருகசீரிஷம் : ஆதாயகரமான நாள்.

---------------------------------------






மிதுனம்

ஜூன் 21, 2022



எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் பொறுமையை கையாளவும். வாழ்க்கை துணைவருடன் சிறு தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். எதையும் சமாளிக்கக்கூடிய மனப்பக்குவம் உண்டாகும். அதிகார பதவியில் இருப்பவர்களின் அறிமுகமும், ஒத்துழைப்பும் கிடைக்கப் பெறுவீர்கள். முயற்சி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




மிருகசீரிஷம் : பொறுமை வேண்டும்.


திருவாதிரை : இலக்குகள் பிறக்கும்.


புனர்பூசம் : அறிமுகம் கிடைக்கும்.

---------------------------------------





கடகம்

ஜூன் 21, 2022



சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். வெளிவட்டாரங்களில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். வியாபார பணிகளில் வேலையாட்களின் ஆதரவு மேம்படும். திருப்தி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




புனர்பூசம் : எண்ணங்கள் கைகூடும். 


பூசம் : அனுபவம் உண்டாகும். 


ஆயில்யம் : ஆதரவு மேம்படும்.

---------------------------------------





சிம்மம்

ஜூன் 21, 2022



உத்தியோக பணிகளில் கவனத்துடன் செயல்படவும். வியாபாரத்தில் பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் காலதாமதமாக நிறைவுபெறும். முன்கோபத்தால் நெருக்கமானவர்களிடம் மனக்கசப்புகள் நேரிடலாம். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். நிதானம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை :  கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்




மகம் : கவனத்துடன் செயல்படவும்.


பூரம் : காலதாமதமான நாள்.


உத்திரம் : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------





கன்னி

ஜூன் 21, 2022



கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். வர்த்தகம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். உத்தியோகத்தில் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல் 




உத்திரம் : விவாதங்கள் நீங்கும்.


அஸ்தம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.


சித்திரை : இழுபறிகள் அகலும்.

---------------------------------------





துலாம்

ஜூன் 21, 2022



குழந்தைகளை பற்றிய சிந்தனைகள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். தாயின் உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். வியாபார பணிகளில் மாற்றமான சிந்தனைகள் உண்டாகும். உத்தியோக மாற்றம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். உயர்வு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்




சித்திரை : ஆர்வம் அதிகரிக்கும்.


சுவாதி : பிரச்சனைகள் குறையும்.


விசாகம் : எண்ணங்கள் மேம்படும்.

---------------------------------------





விருச்சிகம்

ஜூன் 21, 2022



செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படும். குடும்ப வருமானத்தை மேம்படுத்துவது தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகள் சாதகமாக செயல்படுவார்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். திட்டமிட்ட காரியங்கள் எதிர்பார்த்த விதத்தில் நிறைவுபெறும். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் அமையும். இன்பம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




விசாகம் : மாற்றம் ஏற்படும்.


அனுஷம் : சாதகமான நாள்.


கேட்டை : காரியசித்தி உண்டாகும்.

---------------------------------------






தனுசு

ஜூன் 21, 2022



குடும்ப உறுப்பினர்கள் உங்களின் எண்ணங்களை புரிந்து கொள்வார்கள். புதிய வீடு, மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். பயணங்களில் இருந்துவந்த சோர்வு குறையும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்




மூலம் : புரிதல் உண்டாகும்.


பூராடம் : கவனம் வேண்டும்.


உத்திராடம் : சோர்வு குறையும்.

---------------------------------------





மகரம்

ஜூன் 21, 2022



கலகலப்பான பேச்சுக்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உங்களின் பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். பத்திரிக்கை தொடர்பான துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்குவீர்கள். செல்வாக்கு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.


திருவோணம் : புரிதல் உண்டாகும்.


அவிட்டம் : முன்னேற்றமான நாள்.

---------------------------------------





கும்பம்

ஜூன் 21, 2022



நீண்ட நேரம் கண்விழிப்பதை குறைத்துக் கொள்வது நல்லது. இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் சோர்வு வெளிப்படும். வெளியூர் தொடர்பான பயணங்களை பற்றிய சிந்தனைகள் ஏற்படும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். புதிய பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். அசதி குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




அவிட்டம் : சோர்வு வெளிப்படும்.


சதயம் : சேமிப்பு குறையும். 


பூரட்டாதி : ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------





மீனம்

ஜூன் 21, 2022



நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். பழைய பிரச்சனைகளை மாறுபட்ட முறையில் சிந்தித்து முடிவெடுப்பீர்கள். விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் பயனற்ற இன்னல்களை தவிர்க்க முடியும். வேலை நிமிர்த்தமான செயல்பாடுகளில் இருந்துவந்த காலதாமதங்கள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். தொல்லைகள் விலகும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்




பூரட்டாதி : ஆசைகள் நிறைவேறும்.


உத்திரட்டாதி : விட்டுக்கொடுத்து செல்லவும்.


ரேவதி : முன்னேற்றம் உண்டாகும்.

---------------------------------------




18-06-2022 CRC Training - Teacher's Feedback Details...



>>> 18-06-2022 CRC Training - Teacher's Feedback Details...



>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...



>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...





பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.06.2022 - School Morning Prayer Activities...

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.06.2022 - School Morning Prayer Activities...

 திருக்குறள் :


பால் : பொருட்பால். 


இயல் :நட்பியல். 


அதிகாரம் : மருந்து. 


உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று

அப்பால் நாற்கூற்றே மருந்து. 


பொருள் : நோயாளி, மருத்துவர், மருந்து, அதைத் தயாரிப்பவர் என மருந்து நான்கு வகைப்படும்.


பழமொழி :

Nothing is impossible to a willing heart


மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.


இரண்டொழுக்க பண்புகள் :


1. பெற்றோர் ஆசிரியர்கள் நான் நலம் பெறவே ஆலோசனை கூறுவர். கண்டிப்பாக அந்த அறிவுரைகள் படி நடக்க முயற்சி செய்வேன். 


2. நல்ல பண்புகள் கடை பிடித்து நல்ல செயல்கள் நாள் தோறும் செய்வேன்


பொன்மொழி :


என்ன நடந்தாலும், எதை இழந்தாலும் சோர்ந்து போகமாட்டேன்! காரணம் நான் 100 வெற்றிகளை பார்த்தவன் அல்ல! 1000 தோல்விகளை பார்த்தவன் - தாமஸ் ஆல்வா எடிசன்


பொது அறிவு :


1. உலகில் எத்தனை வகை அணில்கள் உள்ளன? 


280 அணில்கள். 


2. ஒரு அணிலின் சராசரி ஆயுள் காலம் எவ்வளவு?


 3 - 5 வருடங்கள் 


English words & meanings :


Fagged - extremely tired. Adjective word. மிகவும் களைப்பு, மயக்கம். பெயரடை சொல்


ஆரோக்ய வாழ்வு :


வாழைப்பூவை வாரத்திற்கு இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரையும். பச்சைத் தன்மை குறைந்து இரத்த ஓட்டம் சீராகும்


NMMS Q - 6


தமிழ்நாட்டில் பறத்தல் விளையாட்டிற்கு ஏற்ற மலைச் சரிவுகளை கொண்டுள்ள மாவட்டம் எது? 


 விடை : வேலூர்


ஜூன் 20


கவிஞர் சுரதா அவர்களின் நினைவுநாள்


சுரதா (Suratha; 23 நவம்பர் 1921 – 29 சூன் 2006) இயற்பெயர் இராசகோபாலன் தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால்‌ பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக் கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை உவமைக் கவிஞர் என்று சிறப்பித்துக் கூறுவர்.


நீதிக்கதை


பூவா தலையா


ஒரு முறை ராஜா எதிரிகளை தாக்க ஓர் இராணுவ படை ஒன்றை தயார் செய்து போருக்கு தயாரானார். அவர் எப்படியும் இந்த போரில் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால் அந்த படையினரோ பெரும் சந்தேகத்துடனேயே இருந்தனர். அனைவரும் சோர்ந்து போய் நம்பிக்கையின்றி இருந்தார்கள். 


இதனால் அந்த ராஜா தன் படை வீரர்களுக்கு தைரியத்தை வரவழைக்க என்ன செய்யலாம் என்று ஒரு ஜென் துறவியைப் பார்த்து, கேட்கச் சென்றார். 


அப்போது அந்த துறவி ராஜாவிடம், ஒரு யோசனையை சொன்னார். அதேப்போல் ராஜாவும் செய்தார். அது என்னவென்றால்,


அந்த ராஜா போர் செல்லும் வழியில், அவர்கள் குல தெய்வ கோவிலில் நிறுத்தி பிரார்த்தனை செய்து விட்டு ஒரு நாணயத்தை எடுத்து வீரர்களின் முன் காண்பித்து நான் இப்போது இந்த நாணயத்தை சுழற்றி விடுவேன், தலை விழுந்தால் நாம் வெற்றி பெறுவோம் இல்லையேல் போரில் தோற்போம் என்று துறவி சொன்னதைச் சொன்னார். 


வீரர்களிடம் நம் தலை விதியை இந்த நாணயம் நிர்ணயிக்கட்டும் என்று கூறி நாணயத்தை சுழற்றினார். அனைவரும் அதை கூர்ந்து கவனித்தனர். 


அப்போது தலை விழுந்தது. அதனால் அந்த வீரர்கள் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கையுடனும் சந்தோசத்துடனும் எதிரிகளை தாக்க தயாரானார்கள். 


யுத்தத்தில் வெற்றியும் பெற்றனர். யுத்தத்திற்கு பின்னர், துணை மந்திரி விதியை யாராலும் மாற்ற முடியாது என்று ராஜாவிடம் சொல்ல ஆம், என்று ராஜா சொல்லி அந்த நாணயத்தின் இரு பக்கத்திலும் தலை இருப்பதை காண்பித்தார். 


நம்பிக்கையுடன் செயல்பட்டால் எத்தகைய காரியத்தையும் எளிதில் வெல்லலாம், விதியையும் மாற்றி அமைக்கலாம்.


இன்றைய செய்திகள்


20.06.22


★சிறுவாணி அணையின் நீர் சேமிப்பை அணையின் முழு கொள்ளவுக்கு உயர்த்தி பராமரிக்க வேண்டும் என்று கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.


★தமிழகம் முழுவதும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பதவிக்கான தேர்வு 5 மாவட்டங்களில் நடைபெற்றது.


★ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மதுரை புதுமண்டபத்தில் நூலகம் இருந்ததற்கான கல்வெட்டு கண்டெடுப்பு.


★வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.


★அக்னிபாதை திட்டம் திரும்பப் பெறப்பட மாட்டாது என்று பாதுகாப்பு அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.


★ஒருமுறை மட்டுமே பயன்படும் நெகிழிப் பொருட்களுக்கு தடை: மத்திய அரசு தீவிரம்.


★அமெரிக்காவில் 6 மாத குழந்தைக்கு கரோனா தடுப்பூசி செலுத்த அந்நாட்டு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.


★இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பொதுப் போக்குவரத்து முடங்கியதால் பள்ளிகள் 2 வாரங்களுக்கு மூடப்படுகிறது. அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது.


★ஆசிய ஜிம்னாஸ்டிக்ஸ்: இந்திய வீராங்கனை பிரனதி நாயக் வெண்கலப்பதக்கம் வென்றார்.


★உலக அளவில் நேபாளத்தில் நடைபெறும் 100 மீட்டர் ஓட்டப் பந்தய போட்டியில் பங்கேற்க மதுரை மாணவர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.


★2026-ம் ஆண்டுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெறும் இடங்கள் அறிவிப்பு.


★ரஞ்சி கோப்பை : மும்பை-மத்தியபிரதேச அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்.


Today's Headlines


*Tamilnadu Chief Minister has written a letter to Kerala Chief Minister Binarayi Vijayan asking him to upgrade and maintain the water storage of the Siruvani Dam to its full capacity.


 * Chennai: The selection for the post of "Child Welfare Officer" was held in 5 districts across Tamil Nadu.


  * An inscription was discovered which states the existence of a library in the Madurai Puthu Mandabam during the British rule.


 * Weather forecast: Chance of heavy rain in 17 districts of Tamil Nadu.


 * The Ministry of Defense has made it clear that the fire project will not be withdrawn.


 * Prohibition of single-use plastic products: Federal Government is pressing on .


* In the United States, the government has approved the corona vaccination for 6-month-old baby 


* Schools in Sri Lanka are closed for two weeks due to fuel shortages.  The number of employees in government offices is being reduced


 * Asian Gymnastics: Indian Pranati Nayak won bronze


 * A Madurai student has been selected to compete in the 100m running race in World level Championships in Nepal.


 * Venues for the 2026  World Cup football match has been announced 

 

 * Ranji Trophy: Mumbai-Madhya Pradesh teams advanced to the final



>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...



>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...



இன்றைய (20-06-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...




மேஷம்

ஜூன் 20, 2022



அரசியல் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும். சில ரகசியமான செயல்பாடுகளின் மூலம் ஆதாயமான பலன்கள் உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். போட்டிகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




அஸ்வினி : ஆதரவு கிடைக்கும். 


பரணி : சாதகமான நாள்.


கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------





ரிஷபம்

ஜூன் 20, 2022



நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயகரமான சூழ்நிலைகள் ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வருமானத்தை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பொறுமை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




கிருத்திகை : இழுபறிகள் குறையும்.


ரோகிணி : ஆதாயகரமான நாள்.


மிருகசீரிஷம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.

---------------------------------------





மிதுனம்

ஜூன் 20, 2022



வியாபார பணிகளில் மந்தமான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கை துணைவரிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் நன்மை உண்டாகும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் குறையும். நன்மையான நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு




மிருகசீரிஷம் : மந்தமான நாள்.


திருவாதிரை : அனுசரித்து செல்லவும். 


புனர்பூசம் : பொறுப்புகள் குறையும்.

---------------------------------------





கடகம்

ஜூன் 20, 2022



கடன் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். தந்தைவழி உறவினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் புதிய அனுபவம் ஏற்படும். விலகி சென்றவர்களை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் ஒருவிதமான மந்தத்தன்மை உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்




புனர்பூசம் : கவனம் வேண்டும். 


பூசம் : அனுபவம் ஏற்படும்.


ஆயில்யம் : மந்தத்தன்மை உண்டாகும்.

---------------------------------------





சிம்மம்

ஜூன் 20, 2022



குடும்பத்தில் சுபகாரியம் தொடர்பான செலவுகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பணிபுரியும் இடத்தில் இருந்துவந்த நெருக்கடியான சூழ்நிலைகள் மறையும். ஆடம்பர பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். சுகமான நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்




மகம் : செலவுகள் உண்டாகும். 


பூரம் : தெளிவு பிறக்கும். 


உத்திரம் : ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------





கன்னி

ஜூன் 20, 2022



எதிர்பாராத தனவரவு உண்டாகும். மனதில் ஏற்பட்ட மகிழ்ச்சியான சிந்தனைகளின் மூலம் சோர்வு நீங்கும். உறவினர்களின் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உத்தியோகம் ரீதியான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். விரயம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்




உத்திரம் : மகிழ்ச்சியான நாள். 


அஸ்தம் : கருத்து வேறுபாடுகள் மறையும். 


சித்திரை : விழிப்புணர்வு வேண்டும்.

---------------------------------------






துலாம்

ஜூன் 20, 2022



பணிபுரியும் இடத்தில் நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் ஆதாயம் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு ஏற்படும். வரவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




சித்திரை : புரிதல் உண்டாகும்.


சுவாதி : அனுபவம் கிடைக்கும். 


விசாகம் : சோர்வு ஏற்படும்.

---------------------------------------






விருச்சிகம்

ஜூன் 20, 2022



பயணங்கள் தொடர்பான விஷயங்களில் விவேகம் வேண்டும். நெருக்கமானவர்களிடத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரம் நிமிர்த்தமான பணிகளில் ஆதாயம் மேம்படும். உத்தியோகம் தொடர்பான துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் பிறக்கும். முயற்சிகள் மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் 




விசாகம் : விவேகம் வேண்டும். 


அனுஷம் : ஆதாயகரமான நாள்.


கேட்டை : மாற்றம் பிறக்கும். 

---------------------------------------





தனுசு

ஜூன் 20, 2022



மனதளவில் எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய வேலை நிமிர்த்தமான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வரவுகளில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். வாழ்க்கை துணைவரின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறையின் மூலம் நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். பரிவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




மூலம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.


பூராடம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


உத்திராடம் : ஒத்துழைப்புபான நாள்.

---------------------------------------





மகரம்

ஜூன் 20, 2022



குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். எண்ணிய பணிகளை சில அலைச்சல்களுடன் செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் நிமிர்த்தமான விரயங்கள் உண்டாகும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்லவும். பிறமொழி பேசும் மக்களின் அறிமுகத்தின் மூலம் புதிய அனுபவமும், வாய்ப்புகளும் கிடைக்கப் பெறுவீர்கள். பாராட்டுகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்




உத்திராடம் : கலகலப்பான நாள்.


திருவோணம் : விரயங்கள் உண்டாகும். 


அவிட்டம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------





கும்பம்

ஜூன் 20, 2022



தனவரவை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் படிப்படியாக குறையும். வேலை நிமிர்த்தமான ஒப்பந்தங்கள் கைகூடும். பணிபுரியும் இடத்தில் அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். சிந்தனைகள் மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




அவிட்டம் : சிந்தனைகள் அதிகரிக்கும். 


சதயம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.


பூரட்டாதி : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------






மீனம்

ஜூன் 20, 2022



உலகியல் நடவடிக்கையின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். மருத்துவம் தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு லாபம் மேம்படும். எதிலும் அலட்சியமின்றி செயல்படுவது நன்மையை ஏற்படுத்தும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கப் பெறுவீர்கள். பழக்கவழக்கம் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்




பூரட்டாதி : மாற்றமான நாள்.


உத்திரட்டாதி : லாபம் மேம்படும்.


ரேவதி : அனுபவம் கிடைக்கும்.

---------------------------------------



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஓய்வூதிய இயக்குநரகம் மற்றும் அரசு தகவல் மையம் ( Directorate of Pension & Govt. Data Centre) ஆகியவற்றை கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையரகத்தின் கட்டுப்பாட்டில் இணைத்து அரசாணை G.O. Ms. No. 343, Dated : 12-11-2024 வெளியீடு

    ஓய்வூதிய இயக்குநரகம் மற்றும் அரசு தகவல் மையம் ( Directorate of Pension & Govt. Data Centre) ஆகியவற்றை கருவூலம் மற்றும் கணக்குத் துறை...