கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (21-06-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...




மேஷம்

ஜூன் 21, 2022



செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படும். எதிர்பாராத தனவரவு உண்டாகும். வழக்கு தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். உடனிருப்பவர்களின் பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். வெற்றி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம் 




அஸ்வினி : மாற்றம் ஏற்படும். 


பரணி : நெருக்கம் அதிகரிக்கும்.


கிருத்திகை : புரிதல் உண்டாகும்.

---------------------------------------





ரிஷபம்

ஜூன் 21, 2022



குடும்ப உறுப்பினர்களுடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். நெருக்கமானவர்களின் எண்ணங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். திறமைக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். சுறுசுறுப்பாக செயல்பட்டு இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். சிறு தூர பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். அமைதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




கிருத்திகை : சுபமான நாள்.


ரோகிணி : பாராட்டுகள் கிடைக்கும்.


மிருகசீரிஷம் : ஆதாயகரமான நாள்.

---------------------------------------






மிதுனம்

ஜூன் 21, 2022



எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் பொறுமையை கையாளவும். வாழ்க்கை துணைவருடன் சிறு தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். எதையும் சமாளிக்கக்கூடிய மனப்பக்குவம் உண்டாகும். அதிகார பதவியில் இருப்பவர்களின் அறிமுகமும், ஒத்துழைப்பும் கிடைக்கப் பெறுவீர்கள். முயற்சி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




மிருகசீரிஷம் : பொறுமை வேண்டும்.


திருவாதிரை : இலக்குகள் பிறக்கும்.


புனர்பூசம் : அறிமுகம் கிடைக்கும்.

---------------------------------------





கடகம்

ஜூன் 21, 2022



சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். வெளிவட்டாரங்களில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். வியாபார பணிகளில் வேலையாட்களின் ஆதரவு மேம்படும். திருப்தி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




புனர்பூசம் : எண்ணங்கள் கைகூடும். 


பூசம் : அனுபவம் உண்டாகும். 


ஆயில்யம் : ஆதரவு மேம்படும்.

---------------------------------------





சிம்மம்

ஜூன் 21, 2022



உத்தியோக பணிகளில் கவனத்துடன் செயல்படவும். வியாபாரத்தில் பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் காலதாமதமாக நிறைவுபெறும். முன்கோபத்தால் நெருக்கமானவர்களிடம் மனக்கசப்புகள் நேரிடலாம். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். நிதானம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை :  கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்




மகம் : கவனத்துடன் செயல்படவும்.


பூரம் : காலதாமதமான நாள்.


உத்திரம் : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------





கன்னி

ஜூன் 21, 2022



கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். வர்த்தகம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். உத்தியோகத்தில் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல் 




உத்திரம் : விவாதங்கள் நீங்கும்.


அஸ்தம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.


சித்திரை : இழுபறிகள் அகலும்.

---------------------------------------





துலாம்

ஜூன் 21, 2022



குழந்தைகளை பற்றிய சிந்தனைகள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். தாயின் உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். வியாபார பணிகளில் மாற்றமான சிந்தனைகள் உண்டாகும். உத்தியோக மாற்றம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். உயர்வு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்




சித்திரை : ஆர்வம் அதிகரிக்கும்.


சுவாதி : பிரச்சனைகள் குறையும்.


விசாகம் : எண்ணங்கள் மேம்படும்.

---------------------------------------





விருச்சிகம்

ஜூன் 21, 2022



செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படும். குடும்ப வருமானத்தை மேம்படுத்துவது தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகள் சாதகமாக செயல்படுவார்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். திட்டமிட்ட காரியங்கள் எதிர்பார்த்த விதத்தில் நிறைவுபெறும். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் அமையும். இன்பம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




விசாகம் : மாற்றம் ஏற்படும்.


அனுஷம் : சாதகமான நாள்.


கேட்டை : காரியசித்தி உண்டாகும்.

---------------------------------------






தனுசு

ஜூன் 21, 2022



குடும்ப உறுப்பினர்கள் உங்களின் எண்ணங்களை புரிந்து கொள்வார்கள். புதிய வீடு, மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். பயணங்களில் இருந்துவந்த சோர்வு குறையும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்




மூலம் : புரிதல் உண்டாகும்.


பூராடம் : கவனம் வேண்டும்.


உத்திராடம் : சோர்வு குறையும்.

---------------------------------------





மகரம்

ஜூன் 21, 2022



கலகலப்பான பேச்சுக்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உங்களின் பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். பத்திரிக்கை தொடர்பான துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்குவீர்கள். செல்வாக்கு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.


திருவோணம் : புரிதல் உண்டாகும்.


அவிட்டம் : முன்னேற்றமான நாள்.

---------------------------------------





கும்பம்

ஜூன் 21, 2022



நீண்ட நேரம் கண்விழிப்பதை குறைத்துக் கொள்வது நல்லது. இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் சோர்வு வெளிப்படும். வெளியூர் தொடர்பான பயணங்களை பற்றிய சிந்தனைகள் ஏற்படும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். புதிய பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். அசதி குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




அவிட்டம் : சோர்வு வெளிப்படும்.


சதயம் : சேமிப்பு குறையும். 


பூரட்டாதி : ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------





மீனம்

ஜூன் 21, 2022



நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். பழைய பிரச்சனைகளை மாறுபட்ட முறையில் சிந்தித்து முடிவெடுப்பீர்கள். விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் பயனற்ற இன்னல்களை தவிர்க்க முடியும். வேலை நிமிர்த்தமான செயல்பாடுகளில் இருந்துவந்த காலதாமதங்கள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். தொல்லைகள் விலகும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்




பூரட்டாதி : ஆசைகள் நிறைவேறும்.


உத்திரட்டாதி : விட்டுக்கொடுத்து செல்லவும்.


ரேவதி : முன்னேற்றம் உண்டாகும்.

---------------------------------------




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Student Threatens to Kill Headmaster - Full Details

  தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த மாணவன் - முழு விவரம் Student Threatens to Kill Headmasters - Full Details கேரளாவில் பாலக்காடு அனக...