கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.06.2022 - School Morning Prayer Activities...



 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.06.2022 - School Morning Prayer Activities...


 திருக்குறள் :


பால்:பொருட்பால்


இயல்:குடியியல்


அதிகாரம்: மானம்

குறள் : 968


மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை

பீடழிய வந்த இடத்து.


பொருள்:

சாகாமலே இருக்க மருந்து கிடையாது அப்படி இருக்கும்போது உயிரைவிட நிலையான மானத்தைப் போற்றாமல், வாழ்க்கை மேம்பாட்டுக்காக ஒருவர், தமது பெருமையைக் குறைத்துக் கொள்வது இழிவான செயலாகும்


பழமொழி :

Clouds that the sun builds up darken him.



வேலிக்குப் போட்ட முள் காலுக்கு வினை ஆனது.



இரண்டொழுக்க பண்புகள் :


1. பிறகு என்று தள்ளிப் போடப்படும் செயல்கள் சில சமயங்களில் இயலாமலேயே போய்விடும். எனவே அன்றைய வேலை அன்றே செய்து விடுவேன்.


 2. என் நண்பர்கள் என் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். எனவே நல்ல நண்பர்களோடு சேருவேன்.


பொன்மொழி :


கண்ணுக்குத் தெரிந்த மனிதனை மதிக்காவிட்டால்... கண்ணுக்குத் தெரியாத கடவுளை மதித்தும் பயன் இல்லை!


பொது அறிவு :


1.கங்காரு ஒரே குதிப்பில் எத்தனை தூரம் செல்லும்?


 9மீட்டர்.


 2. மிக நீண்ட ஆயுள் உடைய விலங்கு எது? 


 ஆமை.


English words & meanings :


Junky - useless or of little value. Adjective. எதற்கும் உதவாத குப்பை. பெயரளபடை. Junkie - one who is addicted to alcohol. Noun. குடிப்பழக்கம் அடிமை பட்டவர். பெயர்ச்சொல்


ஆரோக்ய வாழ்வு :

வெள்ளரிக்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் அதிலுள்ள சுண்ணாம்புச்சத்து ரத்தக்குழாய்களைத் தளர்த்தி,உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது


NMMS Q 11


nescod' என்ற மாற்றியமைக்கப்பட்ட எழுத்துக்கள் மூலம் உருவாக்கப்படும் அர்த்தமுள்ள வார்த்தை என்ன? 


 விடை : second 


ஜூன் 27


பங்கிம் சந்திர சட்டர்ஜி அவர்களின் பிறந்த நாள்


பங்கிம் சந்திர சட்டர்ஜி என அழைக்கப்படும் பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா (Bankim Chandra Chattopadhyay ( ஜூன் 27, 1838[1] – ஏப்ரல் 8, 1894)[2] ஒரு வங்காள எழுத்தாளரும் கவிஞரும் இதழியலாளருமாவார்.[3] இவர் எழுதிய ஆனந்த மடம் என்ற நூலில் இடம்பெற்ற வந்தே மாதரம் என்ற பாடல் இந்தியாவின் தேசியப் பாடலாக உள்ளது. இந்திய தேசிய இயக்கத்தில் பங்கு கொண்ட இவர் 13 புதினங்கள் உட்பட்ட பல நூல்களை வங்காள மொழியில் எழுதியுள்ளார். இந்தியாவின் பிற மொழிகள் மற்றும் ஆங்கில மொழி நூல்களையும் இவர் மொழிபெயர்த்துள்ளார்.


ஹெலன் கெல்லர் அவர்களின் பிறந்தநாள்

ஹெலன் கெல்லர் (Helen Adams Keller) (ஜூன் 27, 1880 - ஜூன் 1, 1968) புகழ்பெற்ற எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் விளங்கிய ஓர் அமெரிக்கப் பெண்மணி ஆவார். பிறக்கும் பொழுது ஆரோக்கியமாகவே இருந்தார். அவர் பிறந்து 19 மாதங்களில் ஏற்பட்ட கடும் காய்ச்சல் காரணமாகக் கண் பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் ஆகியவற்றை இழந்தார். ஆன் சல்லிவன், கெல்லரின் ஆசிரியராக நியமிக்கப்பட்டார்


ஆன் சல்லிவனை துணைக்கு வைத்துகொண்டு தொய்வின்றி உழைத்த கெல்லர் 1904 ஆம் ஆண்டு தன்து 24 ஆவது வயதில் இளங்கலை பட்டம் பெற்றார். கண்பார்வையின்றி காதும் கேளாமல் பல்கலைக் கழகத்தில் படித்து இளங்கலைப் பட்டம் பெற்ற முதற்பெண்மணி என்ற சிறப்பும் பெற்றார். 1903 இல் 'தி ஸ்டோரி ஆஃப் மை லைப்’ என்ற தலைப்பில் தனது சுயசரிதையை எழுதினார் கெல்லர். தன் வாழ்நாளில் மொத்தம் 12 நூல்களை எழுதியுள்ளார்.  


பி. டி. உஷா அவர்களின் பிறந்தநாள்

பி. டி. உஷா கேரளாவைச் சேர்ந்த ஓர் இந்திய தடகள விளையாட்டாளர் ஆவார். 1979ஆம் ஆண்டிலிருந்து இந்திய தடகள விளையாட்டுத் துறையில் பங்கெடுத்து வருகிறார். இந்தியத் தடகள விளையாட்டுக்களில் மாபெரும் சாதனையாளர்களில் ஒருவராகக் கருதப்படும் உஷா பலநேரங்களில் "இந்தியத் தட களங்களின் அரசி"எனக் குறிப்பிடப்படுகிறார்.[2] இவர் பய்யோலி எக்சுபிரசு என்றும் அழைக்கப்படுகிறார். 1985இலும் 1986இலும் உலகத் தடகள விளையாட்டுக்களில் முதல் பத்து பெண் விளையாட்டாளர்களில் ஒருவராக விளங்கினார். இவருக்கு முன்பும் பின்பும் இந்தப் பட்டியலில் வேறெந்த இந்தியரும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


நீதிக்கதை


பிச்சைக்காரனின் தன்னம்பிக்கை


ஒரு புகைவண்டி நிலையத்தில் பிச்சைக்காரன் ஒருவன் தனது கைப்பை நிறைய பென்சில்களை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான். ஒரு கணவான் அந்தவழியாகச் சென்றபோது 5 ரூபாய் நாணயத்தை பிச்சைக்காரனின் திருவோட்டில் போட்டார். பிறகு புகைவண்டியில் ஏறி அமர்ந்தார். 


அவரது மனதில் ஒரு கருத்து உதித்தது. எழுந்து வேகவேகமாக அதே பிச்சைக்காரனிடம் சென்று, அவனது பையிலிருந்த பென்சில்களை எடுத்துக்கொண்டு 5 ரூபாய்க்குச் சமமான பென்சில்களை எடுத்துக்கொள்கிறேன். என்ன இருந்தாலும் நீயும் தொழில் செய்கிறாய் அல்லவா? என்று கூறிவிட்டு புகைவண்டியில் தனது இருக்கைக்குத் திரும்பினார். 


ஆறு மாதங்களுக்குப் பிறகு அந்த கணவான் ஒரு விருந்தில் கலந்துகொள்ளச் சென்றார். அந்த விருந்தில் 6 மாதங்களுக்கு முன்னாலே இரயில்நிலையத்தில் பிச்சையெடுத்துக்கொண்டு இருந்தவனும் அமர்க்களமான கோட் மற்றும் டை சகிதமான உடையில் கனகச்சிதமான கணவானாக விருந்தில் பங்குகொள்ள வந்து இருந்தான். அவன் இந்தக் கணவானை அடையாளம் கண்டுகொண்டு இப்படிக்கூறினான். 


அன்பரே... நீங்கள் என்னை மறந்து போகியிருக்கலாம். ஆனால் நான் உங்களால்தான் இப்படி நல்ல நிலைமைக்கு வந்து இருக்கிறேன். நான் நல்ல நிலைமைக்கு வருவதற்கு நீங்கதான் காரணம். அந்த கோட் சூட் வாலிபன் கணவானிடம் பழைய நிகழ்வுகளை நினைவூட்டினான். 


கணவான், எனக்கு நினைவுவந்துவிட்டது. இப்போது என்ன செய்கிறாய். உடைகளிலும் நல்ல மாற்றம் தென்படுகிறது, என்னப்பா? என்று கேட்டார். 


கோட் சூட் வாலிபன் சொன்னான், நீங்கள்தான் என்னுடைய மாற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் காரணம். என்னுடைய வாழ்நாளிலே உங்களை மறக்கமுடியாது. என் வாழ்க்கையில் என்னை ஒரு மனிதனாக மதித்த முதல் மனிதர் நீங்கள்தான். 5 ரூபாயை எனது திருவோட்டில் இட்டபின் சிறிது நேரத்திற்குப் பிறகு வந்து அந்த ரூபாய்க்குச் சமமான பென்சில்களை என்னிடமிருந்து பெற்றுச் சென்றீர்கள். 


எனக்குள் ஒளிந்திருந்த வியாபாரி அப்போதுதான் எனக்கே தெரியவந்தான். அதுவரையில் பிச்சையெடுத்துத் திரிந்த நான் அந்த ஒரு நிமிடத்தின் தாக்குதலில் ஒரு வியாபாரியாக உருவெடுத்து உழைக்க ஆரம்பித்தேன். 


அந்த ஒரு நிமிடத்துக்கு முன்னர்வரையில் சோம்பேறியாக அழுக்காக புகைவண்டி நிலையத்தில் பிச்சைக்காரர்களின் வரிசையில் ஒருவனாக யாராலும் மதிக்கப்படாத, உருப்படாதவனாக இருந்த நான் உங்கள் நடவடிக்கையால் திருந்தினேன். 


என்னுள்ளே சாக்ரடீஸின் கொள்கைகளைத் தூண்டிவிட்டவர் நீங்கள்தான். பிறகுதான் சிந்திக்க ஆரம்பித்தேன். நான் யார்? எனது கொள்கை என்ன? எதற்காகவோ பிறந்துவிட்டேன். ஆனால் சாகும்போதாவது எதையாவது சாதித்துவிட்டு சாகலாமே என முடிவெடுத்தேன். பிச்சையெடுப்பதை நிறுத்தி எனது புதிய வாழ்க்கையை ஆரம்பித்தேன். நான் உங்களுக்கு நன்றி கூறுவதற்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன். நன்றிகள் பலகோடி அய்யா, என்றான்.


இன்றைய செய்திகள்


27 .06.22


★சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை கண்காணிக்க 15 ஐஏஎஸ் அதிகாரிகளை கண்காணிப்பு அலுவலர்களாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


★தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்.


★அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை - இணையவழி விண்ணப்ப பதிவு தொடங்கியது.


★பூச்சிகளை பிடித்து உண்ணும் அரிய வகை தாவர இனம் மேற்கு இமயமலைப் பகுதியில் கண்டுபிடிப்பு.


★ரஷிய பொருட்களின் போக்குவரத்துக்கு தடை; எந்த சலுகையும் வழங்க முடியாது – லிதுவேனியா அறிவிப்பு.


 ★அரசுப்பள்ளிகளில் செஸ் போட்டிகள் ஜூலை 11 முதல் ஆகஸ்ட் 5ம் தேதி வரை நடத்த வேண்டும்; வெற்றிபெறும் மாணவர்கள், மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை பார்ப்பதற்கும், செஸ் வீரர்களுடன் கலந்துரையாடுவதற்கும் அனுமதிக்கப்படுவர்; பள்ளிக்கல்வித்துறை.


★உலக கோப்பை வில்வித்தை: இந்திய ஜோடி தங்கம் வென்று சாதனை.


★காமன்வெல்த் விளையாட்டுக்கான இந்திய நீச்சல் அணி அறிவிப்பு.


★ரஞ்சி கோப்பையை முதல் முறையாக கைப்பற்றியது மத்திய பிரதேச அணி.


★பெண்கள் கிரிக்கெட்; இலங்கைக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றி.


Today's Headlines


🌸In Chennai to supervise and manage the monsoon rain and its impacts 15 IAS officers were appointed.


🌸 There is a chance for rain for 4 days on the coming days - prediction by Metrology Department


🌸Students who studied in government school till 12th then going for the Higher studies will get the stipend of 1000 rs. The registration process through website is started.


🌸 The special and rare carnivorous plants which eat insects are discovered in West Himalayas. 


🌸The country Lithuania declared that the transport of Russian goods will be stopped. There won't be any privileges.


🌸In government school the chess competition among students should be conducted between July 11th and August 5. The winners will be awarded with a tour to Mamallapuram where the Olympiatic chess tournaments are going on and will be allowed to play with the chess players there - Education Department . 


🌸In World level Archery competition Indian Pair won the gold medal. 


🌸Women's cricket against Sri Lanka Indian team won again for the 2nd time.




>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...



>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...




இன்றைய (27-06-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஜூன் 27, 2022



எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல்களும், விரயங்களும் உண்டாகும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். மதிப்பு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு




அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.


பரணி : அறிமுகம் கிடைக்கும். 


கிருத்திகை : சாதகமான நாள்.

---------------------------------------





ரிஷபம்

ஜூன் 27, 2022



மனதில் புதுவிதமான நம்பிக்கை பிறக்கும். மாணவர்களுக்கு பாடங்களில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். தற்பெருமை சார்ந்த சிந்தனைகளை குறைத்துக் கொள்வது நல்லது. உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். அமைதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை




கிருத்திகை : நம்பிக்கை பிறக்கும்.


ரோகிணி : ஆர்வம் உண்டாகும். 


மிருகசீரிஷம் : புரிதல் ஏற்படும்.

---------------------------------------





மிதுனம்

ஜூன் 27, 2022



எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். உணவு சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். இணையம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வுடன் செயல்படவும். அரசு தொடர்பான செயல்பாடுகளால் அலைச்சல்கள் உண்டாகும். அறிமுகம் கிடைக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்




மிருகசீரிஷம் : சேமிப்பு குறையும்.


திருவாதிரை : திறமைகள் வெளிப்படும்.


புனர்பூசம் : அலைச்சல்கள் உண்டாகும்.

---------------------------------------






கடகம்

ஜூன் 27, 2022



கல்வி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். தனவரவில் இருந்துவந்த நெருக்கடியான சூழ்நிலைகள் நீங்கும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சிப் பெறுவீர்கள். குத்தகை தொடர்பான செயல்பாடுகளின் மூலம் ஆதாயம் உண்டாகும். குழுக்கள் சார்ந்த விஷயங்களில் புதுவிதமான சிந்தனைகள் ஏற்படும். செல்வாக்கு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




புனர்பூசம் : நெருக்கடிகள் குறையும்.


பூசம் : ஆதாயம் உண்டாகும்.


ஆயில்யம் : புதுமையான நாள்.

---------------------------------------





சிம்மம்

ஜூன் 27, 2022



அரசு தொடர்பான வெளியூர் பயணங்கள் செல்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் தோன்றும் ஆசைகளை குறைத்துக் கொள்வது நல்லது. வேளாண்மை சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். மருத்துவத்துறைகளில் திறமைக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கப் பெறுவீர்கள். கௌரவ பொறுப்புகளின் மூலம் பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். தடைகள் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்




மகம் : பயணங்கள் கைகூடும்.


பூரம் : மேன்மையான நாள்.


உத்திரம் : ஆதரவு கிடைக்கும்.

---------------------------------------





கன்னி

ஜூன் 27, 2022



நம்பிக்கையானவர்களை பற்றிய புரிதல் மேம்படும். மனதில் எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை உண்டாகும். முன்யோசனையுடன் செயல்பட்டு சாதகமான வாய்ப்புகளை உருவாக்குவீர்கள். செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். சட்ட ரீதியான நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். அறிவியல் சார்ந்த துறைகளில் ஈடுபாட்டுடன் செயல்படுவீர்கள். பொறுமை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




உத்திரம் : புரிதல் மேம்படும். 


அஸ்தம் : சாதகமான நாள்.


சித்திரை : அனுபவம் வெளிப்படும்.

---------------------------------------






துலாம்

ஜூன் 27, 2022



வியாபார மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். அதிகார பணிகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. திருப்தியற்ற மனநிலையினால் குழப்பம் உண்டாகும். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதளவில் மாற்றம் பிறக்கும். தந்தைவழி உறவினர்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். மருந்து சார்ந்த விஷயங்களில் ஆலோசனைகளை பெறவும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்




சித்திரை : சிந்தனைகள் அதிகரிக்கும். 


சுவாதி : திருப்தியற்ற நாள்.


விசாகம் : அலைச்சல்கள் ஏற்படும்.

---------------------------------------





விருச்சிகம்

ஜூன் 27, 2022



வாழ்க்கை துணைவரின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்பாலின மக்களின் ஆதரவு கிடைக்கும். வியாபார பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். தவறிப்போன பொருட்கள் பற்றிய விவரங்களை அறிந்து கொள்வீர்கள். அரசு தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வெளிப்படையான குணத்தின் மூலம் பலருடைய அறிமுகத்தை பெறுவீர்கள். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




விசாகம் : மகிழ்ச்சியான நாள்.


அனுஷம் : முன்னேற்றம் உண்டாகும்.


கேட்டை : அறிமுகம் கிடைக்கும்.

---------------------------------------






தனுசு

ஜூன் 27, 2022



கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். எதிர்பாராத சில விஷயங்களின் மூலம் மனதளவில் தன்னம்பிக்கை உண்டாகும். உத்தியோக பணிகளில் உழைப்பு அதிகரிக்கும். தாய்மாமன் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். தனித்து செயல்படுவதில் ஆர்வமும், ஈடுபாடும் உண்டாகும். புரிதல் உண்டாகும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு




மூலம் : பிரச்சனைகள் குறையும். 


பூராடம் : தன்னம்பிக்கையான நாள்.


உத்திராடம் : ஆர்வம் உண்டாகும்.

---------------------------------------






மகரம்

ஜூன் 27, 2022



பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். இலக்கியம் சார்ந்த துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். பந்தய விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். எதிர்ப்புகள் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்




உத்திராடம் : மாற்றம் ஏற்படும்.


திருவோணம் : ஆர்வம் அதிகரிக்கும்.


அவிட்டம் : பொறுமையுடன் செயல்படவும்.

---------------------------------------





கும்பம்

ஜூன் 27, 2022



தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கல்வி சார்ந்த பணிகளில் மாற்றம் உண்டாகும். விவசாய பணிகளில் கடன் சார்ந்த உதவி சாதகமாக அமையும். மருத்துவம் சார்ந்த துறைகளில் ஈடுபாடு அதிகரிக்கும். சஞ்சலமான சிந்தனைகளின் மூலம் குழப்பங்களும், மன அமைதியின்மையும் உண்டாகும். ஆதரவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்




அவிட்டம் : கவனம் வேண்டும்.


சதயம் : ஈடுபாடு அதிகரிக்கும். 


பூரட்டாதி : அமைதியின்மை உண்டாகும்.

---------------------------------------





மீனம்

ஜூன் 27, 2022



வாகனத்தில் சிறு சிறு மாற்றத்தை செய்வீர்கள். குழந்தைகளின் வழியில் ஏற்பட்ட வருத்தங்கள் குறையும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். வியாபார பணிகளில் எதிர்பாராத அலைச்சல்களின் மூலம் அனுபவம் பிறக்கும். மறைமுகமான திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். திருப்திகரமான நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




பூரட்டாதி : வருத்தங்கள் குறையும். 


உத்திரட்டாதி : முயற்சிகள் ஈடேறும்.


ரேவதி : திறமைகள் வெளிப்படும்.

---------------------------------------


தமிழ்நாட்டிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் பட்டியல் (List of Government Arts and Science Colleges in Tamilnadu)...



>>> தமிழ்நாட்டிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் பட்டியல் (List of Government Arts and Science Colleges in Tamilnadu)...


நாளை முதல் தமிழ்நாடு முழுவதும் முகக்கவசம் கட்டாயம் - அணியாவிட்டால் அபராதம் - சுகாதாரத்துறை (Face Mask Compulsory - Fine to be imposed for violating COVID restrictions - Health and Family Welfare Department) செய்தி வெளியீடு எண் :1048, நாள்: 26-06-2022...



>>> நாளை முதல் தமிழ்நாடு முழுவதும் முகக்கவசம் கட்டாயம்  - அணியாவிட்டால் அபராதம் - சுகாதாரத்துறை (Face Mask Compulsory - Fine to be imposed for violating COVID restrictions - Health and Family Welfare Department) செய்தி வெளியீடு எண் :1048, நாள்: 26-06-2022... 


😷😷😷😷😷😷😷 தமிழ்நாட்டில் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் - கொரோனோ தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாடு அரசு உத்தரவு...


😷😷முகக்கவசம் அணியாவிடில் அபராதம் விதிக்கப்படும் - தமிழ்நாடு அரசு...


💥 சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரிப்பு...


💥 கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்காமல் கவனக்குறைவாக இருப்பதால் தொற்று அதிகரிப்பு - தமிழ்நாடு அரசு...




>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...



>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...



சதுரங்க ஒலிம்பியாட் - அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சதுரங்கப் போட்டிகள் - பள்ளி, வட்டார, மாவட்ட, மாநில அளவில் நடைபெறும் தேதிகள் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Chess Olympiad - Chess competitions for Government School Students - Proceedings of the Commissioner of School Education regarding the dates of the School, Block, District and State Level Competitions) ந.க.எண்: 019530/ எம்/ இ4/ 2022, 25-06-2022...



>>> சதுரங்க ஒலிம்பியாட் - அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சதுரங்கப் போட்டிகள் - பள்ளி, வட்டார, மாவட்ட, மாநில அளவில் நடைபெறும் தேதிகள்  சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Chess Olympiad - Chess competitions for Government School Students - Proceedings of the Commissioner of School Education regarding the dates of the School, Block, District and State Level Competitions) ந.க.எண்: 019530/ எம்/ இ4/ 2022, 25-06-2022...




>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...



>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...




சென்னை பல்கலைக்கழகத்தின் இலவசக் கல்வித் திட்டம் மூலம் கல்லூரியில் படிக்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் (You can apply online to study in college through the free education program of the Madras University)...

 


சென்னை பல்கலைக்கழகத்தின் இலவசக் கல்வித் திட்டம் மூலம் கல்லூரியில் படிக்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் (You can apply online to study in college through the free education program of the Madras University)...


விண்ணப்பிக்க மற்றும் கூடுதல் விவரங்களுக்கு👇👇👇

>>> Click here...



மெட்ராஸ் பல்கலைக்கழகம் 2010-2011 கல்வியாண்டிலிருந்து "மெட்ராஸ் யுனிவர்சிட்டி இலவச கல்வித் திட்டத்தை" அறிமுகப்படுத்தியுள்ளது. 2021-2022 ஆம் கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களிடமிருந்தும், உதவி பெறும் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் 2022-2023 ஆம் ஆண்டுக்கான கலை மற்றும் அறிவியலில் இளங்கலை (UG) பட்டப்படிப்பைப் படிப்பதற்காகவும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 




பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், அனாதைகள், விதவைகளின் குழந்தைகள் மற்றும் குடும்பத்தில் முதல் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இலவசக் கல்வித் திட்டத்தின் கீழ் சேர விரும்பும் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ஆண்டுக்கு ரூ.3,00,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.




இலவசக் கல்வித் திட்டத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய விவரங்கள் மற்றும் ஆவணங்கள் :


மெட்ராஸ் பல்கலைக்கழக இணையதளத்தில் தேவையான அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பத்தைப் பதிவேற்றம் செய்வதற்கான கடைசி தேதி +2 முடிவுகள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 15 நாட்கள் ஆகும். முறையாக பதிவேற்றம் செய்யப்பட்ட அனைத்து ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களையும் கொண்ட ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.


பதிவாளர்-பொறுப்பு





>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...



>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...



மாணவிகள் புத்தகம் சுமந்த விவகாரம் - கல்வித்துறை ஊழியர்கள் 4 பேர் பணியிடை நீக்கம் (Students' books Carried issue - 4 Staffs Suspended)...



 மாணவிகள் புத்தகம் சுமந்த விவகாரம் - கல்வித்துறை ஊழியர்கள் 4 பேர் பணியிடை நீக்கம் (Students' books Carried issue - 4 Staffs Suspended)...


ராமநாதபுரத்தில் இருந்து நடப்பு கல்வியாண்டுக்குரிய பாடப் புத்தகங்கள் ஜூன் 21ஆம் தேதி ராமேசுவரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு லாரியில் எடுத்துச் செல்லப்பட்டது.



பள்ளியில் புத்தகங்களை இறக்க சுமைத் தொழிலாளர்கள் ஏற்பாடு செய்யப்படவில்லை. அதனால் லாரியில் இருந்து புத்தகங்களை இறக்கி மாணவிகளை சுமக்கச் செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.




இதுகுறித்து நடவடிக்கை எடுக்க ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் கல்வித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து மண்டபம்  மாவட்டக் கல்வி அலுவலர் முருகம்மாள் விசாரணை நடத்தினார்.



விசாரணை அடிப்படையில் புத்தகங்களை பள்ளிகளுக்கு எடுத்துச் செல்லும் பணிக்கு நியமிக்கப்பட்ட பெருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளி ஆய்வக உதவியாளர் சண்முகசுந்தரம், வாலாந்தரவை அரசு உயர்நிலைப்பள்ளி ஆய்வக உதவியாளர் சே.கார்த்திகேயன், இருமேனி அரசு மேல்நிலைப் பள்ளி ஆய்வக உதவியாளர் ப.கார்த்திகேயன், திருப்புல்லாணி அரசு மேல்நிலைப் பள்ளி இரவு காவலர் பாலசுப்பிரமணியன் ஆகிய 4 பேரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ.பாலுமுத்து பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...