கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆசிரியர் தேர்வு வாரியம் - திருத்தி அமைக்கப்பட்ட தற்காலிக வருடாந்திர ஆட்சேர்ப்பு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள பதவிகளுக்கான காலியிட விவரங்கள் - 2022 (Vacancy Details for the Post Included in Revised Tentative Annual Recruitment Planner - 2022)...



TRB - Revised Tentative Annual Planner - 2022


திருத்தி அமைக்கப்பட்ட ஆண்டு கால அட்டவணையினை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது...


>>> ஆசிரியர் தேர்வு வாரியம் - திருத்தி அமைக்கப்பட்ட தற்காலிக வருடாந்திர ஆட்சேர்ப்பு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள பதவிகளுக்கான காலியிட விவரங்கள் - 2022 (Vacancy Details for the Post Included in Revised Tentative Annual Recruitment Planner - 2022)...







குறுவள மைய பள்ளிகள் இணைப்பிற்கான அறிவுரைகள் வழங்குதல் - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – மாநிலத் திட்ட இயக்குநரின் கடிதம் ந.க.எண்.2772/B7/BRC/ஒபக/2022, நாள்: 06-07-2022 மற்றும் குறுவள மையங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட பள்ளிகள் விவரம் (Formation of CRC Schools - Giving instructions - Letter from the Samagra Shiksha State Project Director & CRC wise Schools allotment details & CLUSTER - SCHOOL MAPPING - User Manual)...



>>> குறுவள மைய பள்ளிகள் இணைப்பிற்கான அறிவுரைகள் வழங்குதல் - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – மாநிலத் திட்ட இயக்குநரின் கடிதம் ந.க.எண்: 2772/B7/BRC/ஒபக/2022, நாள்: 06-07-2022 மற்றும் குறுவள மையங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட பள்ளிகள் விவரம் (Formation of CRC Schools - Giving instructions - Letter from the Samagra Shiksha State Project Director & CRC wise Schools allotment details & CLUSTER - SCHOOL MAPPING - User Manual)...





ஒன்பதாம் வகுப்பு - அறிவியல் - ஜூன் மாத பாடங்கள் - வினா விடைகள் (IX Standard - Science - June Month Lessons - Questions & Answers)...



அலகு 1 - அளவீடு

அலகு 10 - நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள்

அலகு 17 - விலங்குலகம்


>>> ஒன்பதாம் வகுப்பு - அறிவியல் - ஜூன் மாத பாடங்கள் - வினா விடைகள் (IX Standard - Science - June Month Lessons - Questions & Answers)...



பத்தாம் வகுப்பு - அறிவியல் - அலகு 1 - இயக்க விதிகள் - வினா விடைகள் (X Standard - Science - Unit 1 - Motion Law's - Questions & Answers)...

 


>>> பத்தாம் வகுப்பு - அறிவியல் - அலகு 1 - இயக்க விதிகள் - வினா விடைகள் (X Standard - Science - Unit 1 - Motion Law's - Questions & Answers)...



அறிவியல் மன்றம் - செயல்பாடுகள் பதிவேடு - மாதிரி (Science Club - Activities Register - Model)...



>>> அறிவியல் மன்றம் - செயல்பாடுகள் பதிவேடு - மாதிரி (Science Club - Activities Register - Model)...




பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.07.2022 - School Morning Prayer Activities...

 



பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.07.2022 - School Morning Prayer Activities...

 

 திருக்குறள் :

பால்:பொருட்பால் 

இயல்:குடியியல் 

அதிகாரம்: பெருமை 

குறள் : 979 
பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்.

பொருள்:

பெருமைப்பட்டுக் கொள்ளக் காரணங்கள் இருந்தும் செருக்கு இல்லாமல் இருப்பது பெருமை; காரணம் இல்லா‌மலேயே பெருமைப்பட்டுக் கொள்வது சிறுமை

பழமொழி :

Young Men think old men fools,old men know young men to be so
பழுத்த ஓலையைப் பார்த்துக் குருத்து ஓலை சிரித்ததாம்

இரண்டொழுக்க பண்புகள் :

1. தோல்வி என்பது வெற்றியின் முதல் படி எனவே தோல்வி கண்டு துவள மாட்டேன்.

 2. கோபம் என் அறிவை மயக்கும் எனவே கோபம் பட மாட்டேன்.

பொன்மொழி :

இந்த உலகில் எப்போதும்
நிலைத்திருக்கும் சக்தி
உண்மைக்கு தான் உண்டு.
- புத்தர்

பொது அறிவு :

1. எவரெஸ்ட் மலையில் ஏறி சாதனை புரிந்த முதல் இந்திய பெண்மணி யார்? 

பச்சேந்திரி பால். 

2. தமிழ்நாட்டில் சதுப்பு நில காடுகள் காணப்படும் இடம் எது? 

பிச்சாவரம்.



English words & meanings :

paused - to stop talking for a short time before continuing. Verb. Past tense. பேச்சில் அல்லது செயலில் இடையே சிறிது நிறுத்து. வினைச் சொல். கடந்த காலம்

ஆரோக்ய வாழ்வு :

கல்லீரலில் அதிகப்படியான பாதிப்பை ஏற்படுத்தும் முக்கிய காரணியாக இருப்பது ஆக்சிடேட்டிவ் அழுத்தம் என்பது தான். மஞ்சளில் இருக்கும் குர்குமின் இந்த ஆக்சிடேட்டிவ் அழுத்தத்துடன் போராடும் தன்மை கொண்டது; இது கல்லீரலில் எவ்வித குறைபாடும் ஏற்படாமல் பாதுகாத்து, கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

NMMS Q : 17

Z = 52 மற்றும் ACT = 48 எனில் BAT என்பதை குறிக்கும் எண்? 

விடை : 46

நீதிக்கதை

கவனம்

தன் சீடர்களில் ஒருவன் தோட்டத்தை சுத்தம் செய்து கொண்டிருப்பதை ஒரு ஜென் துறவி பார்த்து கொண்டிருந்தார். ஒரே வேலையை அவன் அதிக நேரமாக செய்தும் சுத்தம் ஆகாமல் இருந்தது. 

ஜென் துறவி அவனை அருகில் அழைத்து ஒரு கதையை கூறலானார். அது, ஒரு முறை ஓர் சிறந்த ஓவியர் அவருடைய திறமையால் ஒரு ஓவியத்தை வரைந்து, பின் அவருடைய சக தோழனிடம் எப்படி இருக்கிறது என்று கேட்டார். 

தோழனும் இது நன்றாக இல்லை என்று கூறினார். மீண்டும் மீண்டும் அந்த ஓவியர் வரைந்தவற்றை சரிசெய்ய, தோழனோ நன்றாக இல்லை என்று சொல்லி கொண்டு இருந்தார். அதனால் அந்த ஓவியர் தன் தோழனிடம், நீ போய் எனக்கு கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா! என்று தோழனை அனுப்பி விட்டு, பின்பு அவர் ஓவியத்தில் முழு கவனம் செலுத்தி ஓவியத்தை வரைய ஆரம்பித்தார். தண்ணீர் கொண்டு திரும்பிய தோழன், அந்த ஓவியத்தை கண்டு ஆச்சரியத்துடன் ஓவியம் அழகாக இருக்கிறது என்று சொல்லிப் பாராட்டினான். 

ஆகவே எந்த ஒரு செயலையும் நாம் நம் முழு கவனத்துடன் செய்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். அதைவிட்டு விட்டு செய்கின்ற செயலை பிறர் பார்கின்றனரே என்று ஒரு பயத்துடன் செய்தால், அந்தச் செயல் ஒரு முழுமையை தராது என்று ஜென் துறவி அந்த சீடனுக்கு கதையின் மூலம் உணர்த்தினார்.

இன்றைய செய்திகள்

05.07.22

★மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி நடத்தி வரும் விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

★வேலைவாய்ப்பு, உயர் கல்விக்கு உத்தரவாதம் தரும் டி.காம். படிப்பு: பாலிடெக்னிக் கல்லூரிகளில் குறைந்த கட்டணத்தில் பயில அழைப்பு.

★ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் நடைபெறும் அகழாய்வுப் பணியில் சுண்ணாம்பு மற்றும் செங்கலால் கட்டப்பட்ட சுவர் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

★சென்ற நிதி ஆண்டில் வங்கி மோசடிகள் பாதியாகக் குறைந்துள்ளன. 2020-21 நிதி ஆண்டில் வங்கிகளில் பதிவான மோசடித் தொகை ரூ.1.05 லட்சம் கோடி யாக இருந்தது. 2021-22 நிதி ஆண்டில் பதிவான மோசடித் தொகை ரூ.41,000 கோடி ஆகும்.

★இலங்கையில் நேற்று பள்ளிகள் தொடங்கவிருந்த நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மேலும் ஒரு வாரத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

★மகளிா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தை இங்கிலாந்துடன் 1-1 என்ற கோல் கணக்கில்  டிரா செய்தது.

★விம்பிள்டன் டென்னிஸ் - ஜோகோவிச், சின்னர் காலிறுதிக்கு முன்னேற்றம்.

★2-வது இன்னிங்சில் அரைசதம்- 69 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் ரிஷப் பண்ட்.

Today's Headlines

★ Madras High Court has refused to stay the investigation conducted by CBCIT regarding the malpractice in the admission of medical students.

 ★ D. Com guarantees jobs and higher education. There is a call to study D. Com in Polytechnic colleges with low fees.
 ★ A wall made of lime and brick has been discovered in the excavation work being done by the Central Archeology Department at Adhichanallur.

 ★Bank frauds have halved in the last financial year.  In the financial year 2020-21, the amount of fraud reported in banks was Rs.1.05 lakh crore.  The amount of fraud reported in the financial year 2021-22 is Rs 41,000 crore.

 ★Sri Lanka has announced another week of holiday due to fuel shortage while schools were about to start yesterday.

 ★ India drew 1-1 with England in their first Women's Hockey World Cup match.

 ★Wimbledon Tennis - Djokovic advances to Sinner quarterfinals.

 ★Rishabh Pant broke the 69-year-old record of fifty in the 2nd innings.


இன்றைய (05-07-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...




மேஷம்

ஜூலை 05, 2022



உத்தியோகம் தொடர்பான பணிகளை திறமையுடன் செய்து முடிப்பீர்கள். எந்தவொரு காரியத்தையும் புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் செய்து முடிப்பீர்கள். திறமைக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் மூலம் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். மனதில் வித்தியாசமான சிந்தனைகள் மற்றும் கற்பனைகள் அதிகரிக்கும். பொறுமை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்




அஸ்வினி : திறமைகள் வெளிப்படும்.


பரணி : வாய்ப்புகள் கிடைக்கும். 


கிருத்திகை : கற்பனைகள் அதிகரிக்கும்.

---------------------------------------





ரிஷபம்

ஜூலை 05, 2022



குடும்ப உறுப்பினர்களிடத்தில் அனுசரித்து செல்வதன் மூலம் ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். ஆசிரியர்களுக்கு பொறுப்புகள் அதிகரித்தாலும் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புகள் ஏற்படும். விவேகம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




கிருத்திகை : ஒற்றுமை அதிகரிக்கும்.


ரோகிணி : அனுகூலமான நாள்.


மிருகசீரிஷம் : பயணங்கள் சாதகமாகும்.

---------------------------------------





மிதுனம்

ஜூலை 05, 2022



விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் அலைச்சலுக்கு பின்பு நிறைவேறும். சிறு தொழில் புரிபவர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். கடந்த கால நினைவுகளின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். ஆக்கப்பூர்வமான நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




மிருகசீரிஷம் : மேன்மை ஏற்படும். 


திருவாதிரை : அலைச்சல்கள் உண்டாகும்.


புனர்பூசம் : மாற்றம் ஏற்படும்.

---------------------------------------





கடகம்

ஜூலை 05, 2022



தொழில் வளர்ச்சிக்கான முயற்சிகள் மேம்படும். புதிய பொருட்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மனதில் குழப்பங்களும், தனம் சார்ந்த நெருக்கடிகளும் உண்டாகும். மனதில் உள்ள எண்ணங்களை எண்ணியபடி செய்து முடிப்பீர்கள். ஆதரவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




புனர்பூசம் : முயற்சிகள் மேம்படும். 


பூசம் : சிந்தனைகள் அதிகரிக்கும் 


ஆயில்யம் : காரியசித்தி உண்டாகும்.

---------------------------------------




சிம்மம்

ஜூலை 05, 2022



புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தனவரவு எதிர்பார்த்தபடி இருந்தாலும் அதற்கேற்ப செலவுகள் உண்டாகும். மனதிலிருக்கும் குழப்பங்களுக்கு தெளிவு கிடைக்கும்.  பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும். குழந்தைகளின் கல்வி தொடர்பான விஷயங்களில் மாற்றம் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




மகம் : செலவுகள் உண்டாகும்.


பூரம் : அனுகூலமான நாள்.


உத்திரம் : மாற்றம் உண்டாகும். 

---------------------------------------





கன்னி

ஜூலை 05, 2022



உடல்நிலையில் சோர்வும், சுறுசுறுப்பின்மையும் உண்டாகும். வியாபாரம் நிமிர்த்தமான பணிகளில் சிறு சிறு மாற்றத்தை செய்வதன் மூலம் லாபம் மேம்படும். பத்திரிக்கை தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு புதுவிதமான சிந்தனைகள் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான செலவுகள் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




உத்திரம் : சுறுசுறுப்பின்மையான நாள்.


அஸ்தம் : லாபம் மேம்படும்.


சித்திரை : செலவுகள் ஏற்படும்.

---------------------------------------





துலாம்

ஜூலை 05, 2022



எதிர்பாராத செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். உடன்பிறந்தவர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வழக்கு தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் சற்று விழிப்புணர்வுடன் செயல்படவும். நெருக்கமானவர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். அமைதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு




சித்திரை : சேமிப்பு குறையும். 


சுவாதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 


விசாகம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.

---------------------------------------





விருச்சிகம்

ஜூலை 05, 2022



அரசு தொடர்பாக எதிர்பார்த்த உதவி சாதகமாக அமையும். மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு பெரியோர்களின் ஆலோசனைகள் தெளிவினை ஏற்படுத்தும். பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் அமையும். தந்தைவழி தொழிலின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். உற்சாகம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை




விசாகம் : சாதகமான நாள்.


அனுஷம் : தெளிவு பிறக்கும். 


கேட்டை : அனுகூலம் உண்டாகும்.

---------------------------------------





தனுசு

ஜூலை 05, 2022



நண்பர்களின் உதவியால் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். வித்தியாசமான அணுகுமுறையின் மூலம் அனைவராலும் விரும்பப்படுவீர்கள். எதிர்பாராத சில சந்திப்புகள் மனதில் புதுவிதமான மாற்றத்தை ஏற்படுத்தும். ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகள் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். கவனம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்




மூலம் : இழுபறிகள் அகலும்.


பூராடம் : மாற்றம் ஏற்படும்.


உத்திராடம் : ஒற்றுமை அதிகரிக்கும். 

---------------------------------------





மகரம்

ஜூலை 05, 2022



வாழ்க்கை துணைவருடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். வியாபாரம் நிமிர்த்தமான உதவி கிடைக்கும். நிலுவையில் இருந்துவந்த உத்தியோகம் தொடர்பான பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத திடீர் தனவரவு சிலருக்கு கிடைக்கும். ஆராய்ச்சி சார்ந்த விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். உயர்வு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்




உத்திராடம் : வாய்ப்புகள் ஏற்படும் 


திருவோணம் : உதவி கிடைக்கும். 


அவிட்டம் : ஆர்வம் மேம்படும்.

---------------------------------------





கும்பம்

ஜூலை 05, 2022



குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். மனதிலிருக்கும் கருத்துக்களை வெளிப்படுத்தும் பொழுது பேச்சுக்களில் கவனம் வேண்டும். உடனிருப்பவர்களின் தன்மையை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்படவும். விவேகம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்




அவிட்டம் : விவாதங்களை தவிர்க்கவும்.


சதயம் : கவனம் வேண்டும்.


பூரட்டாதி : சிந்தித்து செயல்படவும். 

---------------------------------------





மீனம்

ஜூலை 05, 2022



உத்தியோகத்தில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். உறவினர்களிடத்தில் பொறுமையுடன் செயல்படவும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் ஒற்றுமை ஏற்படும். வாகன மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். ஊக்கம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்




பூரட்டாதி : முன்னேற்றமான நாள்.


உத்திரட்டாதி : ஒற்றுமை உண்டாகும்.


ரேவதி : பிரச்சனைகள் குறையும். 

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...