கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (05-07-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...




மேஷம்

ஜூலை 05, 2022



உத்தியோகம் தொடர்பான பணிகளை திறமையுடன் செய்து முடிப்பீர்கள். எந்தவொரு காரியத்தையும் புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் செய்து முடிப்பீர்கள். திறமைக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் மூலம் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். மனதில் வித்தியாசமான சிந்தனைகள் மற்றும் கற்பனைகள் அதிகரிக்கும். பொறுமை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்




அஸ்வினி : திறமைகள் வெளிப்படும்.


பரணி : வாய்ப்புகள் கிடைக்கும். 


கிருத்திகை : கற்பனைகள் அதிகரிக்கும்.

---------------------------------------





ரிஷபம்

ஜூலை 05, 2022



குடும்ப உறுப்பினர்களிடத்தில் அனுசரித்து செல்வதன் மூலம் ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். ஆசிரியர்களுக்கு பொறுப்புகள் அதிகரித்தாலும் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புகள் ஏற்படும். விவேகம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




கிருத்திகை : ஒற்றுமை அதிகரிக்கும்.


ரோகிணி : அனுகூலமான நாள்.


மிருகசீரிஷம் : பயணங்கள் சாதகமாகும்.

---------------------------------------





மிதுனம்

ஜூலை 05, 2022



விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் அலைச்சலுக்கு பின்பு நிறைவேறும். சிறு தொழில் புரிபவர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். கடந்த கால நினைவுகளின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். ஆக்கப்பூர்வமான நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




மிருகசீரிஷம் : மேன்மை ஏற்படும். 


திருவாதிரை : அலைச்சல்கள் உண்டாகும்.


புனர்பூசம் : மாற்றம் ஏற்படும்.

---------------------------------------





கடகம்

ஜூலை 05, 2022



தொழில் வளர்ச்சிக்கான முயற்சிகள் மேம்படும். புதிய பொருட்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மனதில் குழப்பங்களும், தனம் சார்ந்த நெருக்கடிகளும் உண்டாகும். மனதில் உள்ள எண்ணங்களை எண்ணியபடி செய்து முடிப்பீர்கள். ஆதரவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




புனர்பூசம் : முயற்சிகள் மேம்படும். 


பூசம் : சிந்தனைகள் அதிகரிக்கும் 


ஆயில்யம் : காரியசித்தி உண்டாகும்.

---------------------------------------




சிம்மம்

ஜூலை 05, 2022



புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தனவரவு எதிர்பார்த்தபடி இருந்தாலும் அதற்கேற்ப செலவுகள் உண்டாகும். மனதிலிருக்கும் குழப்பங்களுக்கு தெளிவு கிடைக்கும்.  பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும். குழந்தைகளின் கல்வி தொடர்பான விஷயங்களில் மாற்றம் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




மகம் : செலவுகள் உண்டாகும்.


பூரம் : அனுகூலமான நாள்.


உத்திரம் : மாற்றம் உண்டாகும். 

---------------------------------------





கன்னி

ஜூலை 05, 2022



உடல்நிலையில் சோர்வும், சுறுசுறுப்பின்மையும் உண்டாகும். வியாபாரம் நிமிர்த்தமான பணிகளில் சிறு சிறு மாற்றத்தை செய்வதன் மூலம் லாபம் மேம்படும். பத்திரிக்கை தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு புதுவிதமான சிந்தனைகள் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான செலவுகள் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




உத்திரம் : சுறுசுறுப்பின்மையான நாள்.


அஸ்தம் : லாபம் மேம்படும்.


சித்திரை : செலவுகள் ஏற்படும்.

---------------------------------------





துலாம்

ஜூலை 05, 2022



எதிர்பாராத செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். உடன்பிறந்தவர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வழக்கு தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் சற்று விழிப்புணர்வுடன் செயல்படவும். நெருக்கமானவர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். அமைதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு




சித்திரை : சேமிப்பு குறையும். 


சுவாதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 


விசாகம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.

---------------------------------------





விருச்சிகம்

ஜூலை 05, 2022



அரசு தொடர்பாக எதிர்பார்த்த உதவி சாதகமாக அமையும். மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு பெரியோர்களின் ஆலோசனைகள் தெளிவினை ஏற்படுத்தும். பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் அமையும். தந்தைவழி தொழிலின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். உற்சாகம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை




விசாகம் : சாதகமான நாள்.


அனுஷம் : தெளிவு பிறக்கும். 


கேட்டை : அனுகூலம் உண்டாகும்.

---------------------------------------





தனுசு

ஜூலை 05, 2022



நண்பர்களின் உதவியால் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். வித்தியாசமான அணுகுமுறையின் மூலம் அனைவராலும் விரும்பப்படுவீர்கள். எதிர்பாராத சில சந்திப்புகள் மனதில் புதுவிதமான மாற்றத்தை ஏற்படுத்தும். ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகள் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். கவனம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்




மூலம் : இழுபறிகள் அகலும்.


பூராடம் : மாற்றம் ஏற்படும்.


உத்திராடம் : ஒற்றுமை அதிகரிக்கும். 

---------------------------------------





மகரம்

ஜூலை 05, 2022



வாழ்க்கை துணைவருடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். வியாபாரம் நிமிர்த்தமான உதவி கிடைக்கும். நிலுவையில் இருந்துவந்த உத்தியோகம் தொடர்பான பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத திடீர் தனவரவு சிலருக்கு கிடைக்கும். ஆராய்ச்சி சார்ந்த விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். உயர்வு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்




உத்திராடம் : வாய்ப்புகள் ஏற்படும் 


திருவோணம் : உதவி கிடைக்கும். 


அவிட்டம் : ஆர்வம் மேம்படும்.

---------------------------------------





கும்பம்

ஜூலை 05, 2022



குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். மனதிலிருக்கும் கருத்துக்களை வெளிப்படுத்தும் பொழுது பேச்சுக்களில் கவனம் வேண்டும். உடனிருப்பவர்களின் தன்மையை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்படவும். விவேகம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்




அவிட்டம் : விவாதங்களை தவிர்க்கவும்.


சதயம் : கவனம் வேண்டும்.


பூரட்டாதி : சிந்தித்து செயல்படவும். 

---------------------------------------





மீனம்

ஜூலை 05, 2022



உத்தியோகத்தில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். உறவினர்களிடத்தில் பொறுமையுடன் செயல்படவும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் ஒற்றுமை ஏற்படும். வாகன மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். ஊக்கம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்




பூரட்டாதி : முன்னேற்றமான நாள்.


உத்திரட்டாதி : ஒற்றுமை உண்டாகும்.


ரேவதி : பிரச்சனைகள் குறையும். 

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...