கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் & பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள் பெயர் பட்டியல் (Leadership Training for Head Masters – Proceedings of Commissioner of School Education & Name List of Teachers Participating in Training)...



தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் & பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள் பெயர் பட்டியல் (Leadership Training for Head Masters – Proceedings of Commissioner of School Education & Name List of Teachers Participating in Training)...

 


 

2022-2023 ஆம் ஆண்டிற்கான பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கையின் போது , மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் , பள்ளிக்கல்வி அலுவலர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல் சார்ந்து வெளியிட்ட அறிவிப்பில் , பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரியும் இணை இயக்குநர்கள் , முதன்மைக் கல்வி அலுவலர்கள் , மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் , மாவட்டக் கல்வி அலுவலர்கள் , வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் என சுமார் 12,000 பேருக்கு நாட்டின் தலை சிறந்த கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்கள் உதவியுடன் பணித்திறன் மேம்பாடு , தலைமை திறன் , மேலாண்மை ஆகிய பொருண்மைகளில் ஆண்டுதோறும் உள்ளுறை பயிற்சி ( Residential Training ) அளிக்கப்படும் “ என்று தெரிவித்ததன் அடிப்படையில் , 2022-2023ஆம் கல்வி ஆண்டின் இறுதிக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தலைமைப்பண்பு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது.



 முதற்கட்டமாக , தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப்பண்பு பயிற்சி அளிப்பதற்கான முதன்மை கருத்தாளர் பயிற்சி 22.08.2022 முதல் 27.08.2022 வரை விருதுநகர் மாவட்டம் , இராஜபாளையம் வேங்கநல்லூரில் உள்ள ராம்கோ தொழில்நுட்ப கல்லூரியில் ( Ramco Institute of Technology ) நடைபெறவுள்ளது.




இதன்பொருட்டு , இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ள தலைமை ஆசிரியர்களை வளாகத்திலேயே தங்கி பயிற்சியில் கலந்து கொள்ள ஏதுவாக , அவர்களை பணியிலிருந்து விடுவித்தும் , பயிற்சிக்கு வரும் ஆசிரியர்களை தங்களது மடிக்கணினியுடன் 21.08.2022 அன்று மாலை 7.00 மணிக்குள் பயிற்சி வளாகத்திற்கு வந்து பதிவு தலைமை செய்யுமாறும் , மாவட்ட அறிவுறுத்த முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . மேலும் , பயிற்சி சார்ந்த விவரங்களுக்கு திரு.பி.சிவசக்தி கணேஷ்குமார் ( கைப்பேசி எண் .9442570306 , 9345570306 ) உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் ( ADPC ) முதன்மைக் கல்வி அலுவலகம் , விருதுநகர் என்பவர் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார் என்ற விவரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.



>>> பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்  (Leadership Training for Head Masters – Proceedings of Commissioner of School Education)...



>>> பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள் பெயர் பட்டியல் (Leadership Training for Head Masters – Name List of Teachers Participating in Training)...





முதன்மை / மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு 12.08.2022 மற்றும் 13.08.2022 ஆகிய நாட்களில் சென்னையில் ஆய்வுக்கூட்டம் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் மற்றும் கூட்டப்பொருள் (Review Meeting for CEOs / DEOs on 12.08.2022 and 13.08.2022 at Chennai - Proceedings of the Commissioner of School Education and Agenda)...



>>> முதன்மை / மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு 12.08.2022 மற்றும் 13.08.2022 ஆகிய நாட்களில் சென்னையில் ஆய்வுக்கூட்டம் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் மற்றும் கூட்டப்பொருள் (Review Meeting for CEOs / DEOs on 12.08.2022 and 13.08.2022 at Chennai - Proceedings of the Commissioner of School Education and Agenda)...






EMIS குறித்தான தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் கோரிக்கையும் பள்ளிக் கல்வி ஆணையர் அவர்களின் பதிலும் (TamilNadu Teacher's Federation's demand on EMIS and Commissioner of School Education's response)...



EMIS குறித்தான தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் கோரிக்கையும் பள்ளிக் கல்வி ஆணையர் அவர்களின் பதிலும் (TamilNadu Teacher's Federation's demand on EMIS and Commissioner of School Education's response)...


EMIS மற்றும் TNSED App குறித்து ஆசிரியர்களிடையே நிலவும் அதிருப்தியை தெரிவித்தோம் . அதற்கு அவர் EMIS என்பது தவிர்க்க இயலாதது . நாம் e-governance முறைக்கு மாற வேண்டும் என்பதால் அறிமுகப்படுத்தப்பட்ட நிர்வாக முறை இது என்றும், இது காலத்தின் கட்டாயம் என்றும் கூறினார். மேலும் EMIS App  வாயிலாக ஆசிரியர்களின் வேலைப்பளு குறைக்கப்படும். மாதாந்திர அறிக்கை, Pay Bill, Aquittance , மதிப்பெண் பட்டியல்கள், இலவச சீருடை, புத்தகம், நோட்டு வழங்கிய பட்டியல் போன்றவைகள் இனி எமிஸ் இணையதளம் வாயிலாகவே தயாரித்துக் கொள்ளலாம் என்றும், அதற்காக தனி பதிவேடுகள் பராமரிக்க வேண்டி வராது என்றும் தெரிவித்தார். மேலும் ஒவ்வொரு ஆசிரியர்களும் TNSED App  மூலம் தனக்கு தேவையான விடுமுறையை விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என்றும், விடுமுறை கடிதங்களை கொடுத்துவிட்டு அது ஒப்புதல் பெறப்படுமா அல்லது பெறப்படாதா என்று வட்டாரக்கல்வி அலுவலர் அல்லது தலைமை ஆசிரியர்களிடம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறி ஆசிரியர்களுக்கான பணிப்பளுவை குறைப்பதற்காக இந்த ஆப் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.


அப்பொழுது ஆசிரியர்களுக்கு பல இடங்களில் அவர்கள் வைத்திருக்கும் செல்போன் Configuration  குறைவாக இருப்பதால் Attendance போடுவதிலும் இன்டர்நெட் கிடைப்பதிலும் சிரமமாக இருக்கிறது. எனவே கல்வித் துறையே உயர்தர Configuration (6gb ram ,128 gb inbuilt memory) கொண்ட செல்போன் வழங்கி அதற்கு சிம் வழங்கி அந்த சிம்மில் இன்டர்நெட் கனெக்சன்  மற்றும்  டேட்டா ஆகியவற்றை துறைசார்பாக  வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டோம் . மேலும் அவ்வாறு வழங்கும்பொழுது அதை கல்வித்துறைப்பணிக்கு தவிர வேறு எதற்கும் பயன்படுத்தாத வகையில் Lock செய்து (தனியார் IT நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு லேப்டாப் வழங்கும் பொழுது அவர்கள் பணியைத் தவிர வேறு எந்த பணியும் செய்ய இயலாததை போன்று) வழங்குங்கள் அல்லது இன்டர்நெட் மற்றும் டேட்டா இணைப்புடன் கூடிய சிம்கார்டு ஒவ்வொரு ஆசிரியருக்கும் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டோம்.


 இது சார்பாக நிதித்துறை அலுவலர்களுடன் பேசி வருவதாகவும் Device வழங்குவதா அல்லது டேட்டா வித் இன்டர்நெட் வசதியுடன் கூடிய சிம் கார்டு வழங்குவதா என்பதை விரைவில் முடிவு செய்து அறிவிப்பதாக ஆணையாளர் அவர்கள் நம்மிடம் தெரிவித்தார் 


தகவல் கே.பி.ரக்ஷித்,

மாநிலத்தலைவர்,

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி...






தொடக்க / நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் பதவி உயர்வு கலந்தாய்வு எப்பொழுது - தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் விளக்கம் (Promotion Counselling for Primary/Middle School Headmaster and B.T.Assistant (Graduate Teacher) Posts - Director of Elementary Education's Explanation)...



காலியாக உள்ள தொடக்க நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் எப்பொழுது நிரப்பப்படும் என்பது குறித்தான நமது கேள்வியும் தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் விளக்கமும்...


தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பில் பொதுச்செயலாளர் அய்யா செ.மு அவர்கள் தலைமையில் மாநிலத் தலைவர் ரக்‌ஷித் துணைப்பொதுச் செயலாளர் சாந்தகுமார், ஆசிரியர் பேரணி நிர்வாக ஆசிரியர் வடிவேலு ஆகியோர் தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களை வியாழன் மாலை 3 மணி அளவில் சந்தித்தனர். 

அப்பொழுது

கடந்த பதவி உயர்வு கலந்தாய்வின் பொழுது கூடுதல் முன்னுரிமை பட்டியல் தயாரிக்காத காரணத்தினால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பதவி உயர்வு பணியிடங்களும் தற்பொழுது 1.6.2022க்கு பிறகு ஓய்வு பெற்றவர்களால் ஏற்பட்டுள்ள தொடக்க நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு விரைந்து நடத்திட வேண்டும் எனக் கேட்டோம் .


காரணம் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர் நியமிக்க உள்ளனர் .


அதே நேரத்தில் காலியாக உள்ள தொடக்க நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்கினால் மட்டுமே அப் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது எனவே பதவி உயர்வு கலந்தாய்வு மற்றும் மாறுதல் கலந்தாய்வினை உடனடியாக நடத்திட வேண்டும் என தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.


தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் பதில்

இன்றைய தினம் (4.8.22) முன்னுரிமை பட்டியலை தயார் செய்து உடனடியாக ஒப்புதல் பெற சுற்றறிக்கையை அனுப்பியுள்ளேன் .

அதன் அடிப்படையில் இம்மாதம் 20ஆம் தேதிக்குள் முன்னுரிமை பட்டியல் தயாராகிவிடும்.

 உடன் அட்டவணை வெளியிடப்பட்டு செப்டம்பர் மாதம் பத்தாம் தேதிக்குள் பதவி உயர்வு மற்றும் மாறுதல் கலந்தாய்வு முடிக்கப்படும் என தொடக்கக் கல்வி இயக்குனர் உறுதியளித்துள்ளார்.


தகவல் 

கே.பி.ரக்‌ஷித்.

மாநிலத் தலைவர்

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி






கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...


  கல்வி அஞ்சல் - யூடியூப் & வாட்ஸ் அப் - டெலிகிராம் குழுக்களில் இணைய இணைப்புகள் (KalviAnjal - Youtube & Whatsapp, Telegram Groups Links)...


கல்வி சார்ந்த தகவல்கள், அரசாணைகள் மற்றும் செயல்முறைகள்...


🍁 கல்வி அஞ்சல் டெலிகிராம் (Telegram) குழு இணைப்பு...



🍁 கல்வி அஞ்சல் யூடியூப் (Youtube)  இணைப்பு...



கல்வி அஞ்சல் - வாட்ஸ்அப் (Whatsapp) குழுக்களில் இணைய இணைப்புகள்...


>>> கல்வி அஞ்சல் 1...


>>> கல்வி அஞ்சல் 2...


>>> கல்வி அஞ்சல் 3...


>>> கல்வி அஞ்சல் 4...


>>> கல்வி அஞ்சல் 5...


>>> கல்வி அஞ்சல் 6...


>>> கல்வி அஞ்சல் 7...


>>> கல்வி அஞ்சல் 8...


>>> கல்வி அஞ்சல் 9...


>>> கல்வி அஞ்சல் 10...


>>> கல்வி அஞ்சல் 11...


>>> கல்வி அஞ்சல் 12...


>>> கல்வி அஞ்சல் 13...



அரசாணை எண் 101 மற்றும் 108 ஆகியவை ரத்தால் நடைபெறப்போகும் மாற்றங்கள் என்னென்ன - ஒரு பார்வை (G.O.Ms.No. 101 and 108 Repealed - What changes will be enacted - A Glimpse)...



அரசாணை எண் 101 மற்றும் 108 ஆகியவை ரத்தால் நடைபெறப்போகும் மாற்றங்கள் என்னென்ன - ஒரு பார்வை (G.O.Ms.No. 101 and 108 Repealed - What changes will be enacted - A Glimpse)...


🌸ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சுயநிதி பள்ளிகளுக்கு என தனியார் பள்ளி மாவட்ட கல்வி அலுவலர் நியமிக்கப்பட உள்ளனர்


🌸 ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திலும் உள்ள பள்ளிகளுக்கு ஏற்ப ஒன்று அல்லது இரண்டு மாவட்ட கல்வி அலுவலர்கள் (செகண்டரி எஜுகேஷன்) நியமிக்கப்பட உள்ளனர்கள் .


🌸சேலம் திருவண்ணாமலை போன்ற மிகப் பெரிய மாவட்டங்களுக்கு இரண்டு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களும் பிற மாவட்டங்களுக்கு ஒரு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களும் நியமிக்கப்பட உள்ளார்கள் 


🌸தற்பொழுது 125 என எண்ணிக்கையில் உள்ள மாவட்ட கல்வி அலுவலர்கள்  பணியிடம் கூடுதலாக 28 மாவட்ட கல்வி அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளார்கள் 


🌸500 பள்ளிகளுக்கு ஒரு மாவட்ட கல்வி அலுவலர் என்ற வரையறையில் மாவட்ட கல்வி அலுவலர் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது


🌸 அதேபோன்று 50 பள்ளிகளுக்கு ஒரு வட்டார கல்வி அலுவலர் என்ற நிலையில் வட்டார கல்வி அலுவலர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன


🌸 இதன் காரணமாக தற்பொழுது உள்ளதை விட கூடுதலாக 40 வட்டார கல்வி அலுவலர் பணியிடங்கள் உருவாக்கப்பட உள்ளன


🌸 மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் நேரடியாக தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட உள்ளார்கள்


🌸 தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி மாவட்ட கல்வி அலுவலர்கள் நேரடியாக மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனர் அவர்கள் கட்டுப்பாட்டில் செயல்படுவார்கள்


🌸 இடைநிலை கல்வி மாவட்ட கல்வி அலுவலர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களின் கீழ் செயல்படுவதோடு நேரடியானபள்ளிக்கல்வி இயக்குனர் அல்லது தற்போது  உள்ள பள்ளிக்கல்வி ஆணையர் கண்ட்ரோலில் செயல்படுவார்கள்


🌸தற்பொழுது உள்ள முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் பல பணி அதிகார்ங்கள் குறைக்கப்படுகின்றன.


🌸 கூடுதலாக மூன்று இணை இயக்குனர் பணியிடங்கள் உருவாக்கப்பட உள்ளன


🌸 அரசாணை 145 வளாகப் பள்ளிகள் அரசாணை 202 குறுவள மைய தலைமை ஆசிரியர்கள் என வரையறுக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் முற்றிலுமாக ரத்து செய்யப்படுகின்றன


🌸 குறுவள மையம் பயிற்சி அளிப்பதற்கும் பிற ஆலோசனைக்கு மட்டுமே பயன்படுத்தப்பட உள்ளன 


🌸உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தற்போது நடைமுறையில் உள்ள தொடக்க நடுநிலை உயர்நிலை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் மீதான கண்காணிப்பு அறவே நீக்கப்படுகிறது


🌸 ஒவ்வொரு மாவட்ட கல்வி அலுவலருக்கும் இரண்டு கண்காணிப்பாளர் மற்றும் ஒவ்வொரு கண்காணிப்பாளருக்கும் இரண்டு உதவியாளர்கள் என நியமிக்கப்பட உள்ளார்கள் 


🌸அனைத்து வட்டார கல்வி அலுவலகங்களுக்கு கண்காணிப்பாளர் ஒரு உதவியாளர் ஒரு டைப்பிஸ்ட் ஒரு ஜூனியர் அசிஸ்டன்ட் என பணியிடம் உருவாக்கப்பட உள்ளது


🌸 மெட்ரிக் பள்ளி மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு மட்டும் ஒரு கண்காணிப்பாளர் ஒரு உதவியாளர் ஒரு ஜூனியர் அஸிஸ்டெண்ட் ஒரு டைப்பிஸ்ட் என்ற நிலை உருவாக வாய்ப்பு உள்ளது 


🌸மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மாவட்டத்தில் உள்ள தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் பிரச்சினைகளை வட்டார கல்வி அலுவலர்களின் துணையோடு தீர்த்து வைப்பார் அவருக்கு உயர் அலுவலராக நேரடியாக தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்படுவார்


🌸 முதன்மை கல்வி அலுவலர் 2017 ஆம் ஆண்டுக்கு  முன் இருந்ததைப் போல பார்வை அலுவலராக மட்டுமே செயல்பட உள்ளார்கள் 


🌸மேற்கண்ட அனைத்து முன்மொழிவுகளுக்கும்  உண்டான நிதி துறை அனுமதி பெறப்பட்டு கோப்பு முதல்வரின் முதன்மைச் செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது.


🌸 ஏறக்குறைய இன்னும் பத்து நாட்களுக்குள் புதிய நிர்வாகக் கட்டமைப்பு நடைமுறைக்கு வரும் வகையில் அரசாணை பிறப்பிக்கப்பட உள்ளதாக அறிகிறோம்.





Today's (06-08-2022) Wordle Answer...

                              

Wordle விளையாடும் முறை: 

ஒவ்வொரு நாளும், ஒரு ஐந்தெழுத்து சொல் தேர்ந்தெடுக்கப்படுகிறது, அதை விளையாடுவோர் ஆறு முயற்சிகளுக்குள் யூகிக்க வேண்டும். ஒவ்வொரு யூகத்திற்கும் பிறகு, ஒவ்வொரு எழுத்தும் பச்சை, மஞ்சள் அல்லது சாம்பல் என குறிக்கப்படும்.

பச்சை என்பது எழுத்து சரியானது மற்றும் சரியான இடத்தில் உள்ளது என்றும்,
 
மஞ்சள் என்பது பதிலில் உள்ளது ஆனால் சரியான நிலையில் இல்லை என்றும், 

சாம்பல் என்பது அது விடையில் இல்லை என்பதைக் குறிக்கிறது.  

 விளையாட்டில் "ஹார்ட் மோட்" விருப்பம் உள்ளது, இதற்கு வீரர்கள் பச்சை மற்றும் மஞ்சள் என குறிக்கப்பட்ட எழுத்துக்களை அடுத்தடுத்த யூகங்களில் சேர்க்க வேண்டும்.

தினசரி சொல் அனைவருக்கும் ஒன்றுதான்.

 கருத்தியல் மற்றும் ஸ்டைலிஸ்டிக் ரீதியாக, இந்த விளையாட்டு 1955 பேனா மற்றும் பேப்பர் கேம் ஜோட்டோ மற்றும் கேம் ஷோ ஃபிரான்சைஸ் லிங்கோ போன்றது.

 இந்த விளையாட்டானது இரண்டு-வீரர் பலகை விளையாட்டான மாஸ்டர்மைண்ட்-இதில் வார்த்தை யூகிக்கும் மாறுபாடு கொண்ட வேர்ட் மாஸ்டர்மைன்ட்  மற்றும் புல்ஸ் அண்ட் கவ்ஸ் விளையாட்டு, குறிப்பிட்ட எழுத்துக்களை வேர்ட்லே (Wordle) உறுதிசெய்கிறது. ஒவ்வொரு தினசரி விளையாட்டும் தோராயமாக வரிசைப்படுத்தப்பட்ட 2,315 சொற்களின் பட்டியலிலிருந்து ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறது (ஆங்கில மொழியில் உள்ள தோராயமான 12,000 ஐந்தெழுத்து வார்த்தைகளில்). 


Wordle Game Website Link: 



Today's (06-08-2022) Wordle Answer: ALIEN










இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Conducting Practical Exams for Half Yearly Examination - DSE Proceedings

அரையாண்டுத் தேர்வுக்கான செய்முறைத் தேர்வுகள் நடத்த பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் Proceedings of the Director of School Education fo...