கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
டாக்டர்.இராதாகிருஷ்ணன் விருது வழங்கிட ஆசிரியர்களை தேர்வு செய்து கருத்துருக்கள் அனுப்ப வழிகாட்டு நெறிமுறைகள் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Guidelines for Selection of Teachers for Dr. Radhakrishnan Award and Submission of Proposals - Proceedings of Commissioner of School Education) ந.க.எண்: 46500/ ஐ/ இ1/ 2022, நாள்: 05-08-2022...
2021-2022ஆம் ஆண்டு - டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது - ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் மற்றும் நெறிமுறைகள் - பள்ளிக்கல்வித் துறை அரசாணை (1டி) எண்: 220, நாள்: 05-08-2022, விண்ணப்பப் படிவம் மற்றும் சான்று வெளியீடு (2021-2022 - Dr. Radhakrishnan Award - Procedures and Ethicals for Selection of Teachers - School Education Department G.O. (1D) No: 220, Dated: 05-08-2022, Application Form and Certificate)...
பள்ளி ஆசிரியர்கள் / அலுவலக பணியாளர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்ட சந்தா - விடுபட்ட வரவுகளை சரிசெய்யும் வழிமுறைகள் (CPS Missing Credits Updating Methods)...
பணம் பெற்று வழங்கும் (DDO) தலைமை ஆசிரிய நண்பர்களே வணக்கம் 🙏
நமது பள்ளி/ அலுவலக பணியாளர்களுக்கு CPS missing credit (இருந்தால்) சரி செய்யலாம்....
Website
முதலில் யாருக்கெல்லாம் Missing credit இருக்கிறது என பார்க்க வேண்டும்...
எந்தெந்த மாதங்களில் உள்ளது என்பதை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்...
Missing credit சரி செய்ய தேவையான தகவல்கள்
1) அந்த காலகட்டத்தில் நம்ம கருவூலமா அல்லது வேறு கருவூலமா?
( முந்தைய பணியிடத்தில் இருந்திருக்கலாம் அல்லது தற்போது வேறு பள்ளிக்கு மாறுதலாகி சென்றிருக்கலாம்)
2) தனியர் cps amount,
( arrear amount - சம்பளத்தில் cps arrear பிடித்திருந்தால் மட்டும்)
3) Total CPS schedule amount of the Bill
4) Bill Gross Amount
5) Bill Net Amount
6) Token number
7) Token date
8) Voucher number
9) Voucher date
10) Date of encashment
11) Treasury (STO)
12) Head of Account (220202....)
13) Booked Head (8342) cps credit DP code head
14) Remarks...
ஒரு பணியாளருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட missing credit இருப்பின்..
எல்லா data edit entry செய்த பிறகு...
"Finalize " செய்ய வேண்டும்..
அனைத்து பணியாளருக்கும் finalize செய்த பிறகு..
"Forward to treasury "
எளிமையான பணி தான்...
Item 5 to 10.. தகவல்கள்
MTC 70 reports ( IFHRMS ) இல் எளிதாக பெறலாம்...
இப்படி நாம் missing credit சரி செய்தால்...
இந்த விடுபட்ட தொகை அவர்களின்
அடுத்த ஆண்டு கணக்குத்தாளில் (2022-23 Account statement) வரவு செய்யப்பட்டிருக்கும்...
புரிதலுக்காக
Cps missing credit rectification last year pdf இணைத்துள்ளேன்....
இது கருவூலத்தில் இருந்து நேரடியாக பணம் பெறும் ஆசிரியர்கள் அலுவலர்களுக்கு மட்டுமே பொருந்தும்..
( SSA/RMSA/ SS போன்ற scheme post employees.. (eg. BRTE/CRTE) ஆசிரியர்களுக்கு பள்ளி அளவில் சரி செய்ய இயலாது... அவர்களின் மாவட்ட மையத்தில் (DPC) சரி செய்ய இயலும்...
கடந்த செப்டம்பரில் பள்ளிக்கு மாறுதல் பெற்ற BRTE ஆசிரியர்களுக்கு செப்டம்பர் மாதத்திற்கு முந்தைய cps missing credit அங்கும்... அதற்கு பிந்தைய missing credit நமது பள்ளியிலும் சரி செய்யலாம்)
தகவலுக்காக..
க.செல்வக்குமார்🙏
எண்ணும் எழுத்தும் - 1ஆம் வகுப்பு முதல் 3 ஆம் வகுப்பு வரை - FA(b) Module குறித்த TN EE Teamன் தகவல் (TN EE Team Information on Ennum Ezhuthum - Class 1 to Class 3 - FA(b) Module)...
எண்ணும் எழுத்தும் 1ஆம் வகுப்பு முதல் 3 ஆம் வகுப்பு முடிய FA(b) Module 1 க்கு மட்டும் வெள்ளிக்கிழமை வருகை தராத மாணவர்களுக்கு இன்று முடிக்க வேண்டும். Module 2 வரும் வெள்ளிக்கிழமை அன்று செய்திட வேண்டும் என்பதை அறியவும். வெள்ளிக்கிழமை அந்த வகுப்பு ஆசிரியர் வருகை தரவில்லை எனில் பொறுப்பு ஆசிரியர் அந்த பணிகளை முடிக்க வேண்டும். FA (b) பணி முடிக்கும் போது மாணவர்கள் வருகை தரவில்லை எனில் மட்டும் அடுத்த பள்ளி வேலை நாளில் அந்த மாணவனுக்கு FA (b)பணிகளை முடிக்க வேண்டும்.
🔴FA(B) Module 1 வெள்ளியன்று முடிக்காதவர்கள், இன்று மதிப்பீடு செய்வதில் தற்பொழுது சிறு பிரச்சனை உள்ளது...
🔴அது விரைவில் சரி செய்யப்படும்.. இன்று சரி செய்யப்பட்ட உடன் தகவல் அனுப்பப்படும் இன்று மாலைக்குள் முடித்து விடலாம்...
🔴Module 2 தற்பொழுது திறக்கப்பட்டு இருந்தாலும், வெள்ளி அன்று மதிப்பீடு செய்யப்பட வேண்டும்...
-TN EE Team...
FA(B) Assessment News
The technical issue regarding FA(b) Assessment is rectified. Assessment can be continued today.
Though module- 2 is enabled, the questions will be displayed only on Friday. You can do it only on Friday (12.08.22)..
Today's (08-08-2022) Wordle Answer...
Today's (08-08-2022) Wordle Answer: UNFIT
இன்றைய (08-08-2022) ராசி பலன்கள் (Rasi Palan), நட்சத்திர பலன்கள் (Today's (08-08-2022) Zodiac Predictions, Nakshatra Predictions)...
மேஷம்
ஆகஸ்ட் 08, 2022
ஆன்மிகம் சார்ந்த பணிகளில் ஈடுபாடு உண்டாகும். எதிர்காலம் தொடர்பான இலக்குகள் பிறக்கும். நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். கல்வி சார்ந்த பணிகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். மனதில் புதுவிதமான கற்பனைகள் உண்டாகும். உத்தியோக பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். சாந்தம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
அஸ்வினி : ஈடுபாடு உண்டாகும்.
பரணி : முன்னேற்றமான நாள்.
கிருத்திகை : மதிப்பு அதிகரிக்கும்.
---------------------------------------
ரிஷபம்
ஆகஸ்ட் 08, 2022
எதிர்பாராத சில பயணங்களின் மூலம் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. பயனற்ற விவாதங்களை தவிர்ப்பதன் மூலம் உங்களின் மீதான மதிப்பு அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். கால்நடை சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
கிருத்திகை : சோர்வு நீங்கும்.
ரோகிணி : விவாதங்களை தவிர்க்கவும்.
மிருகசீரிஷம் : சிந்தித்து செயல்படவும்.
---------------------------------------
மிதுனம்
ஆகஸ்ட் 08, 2022
செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் விலகும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். இனம்புரியாத கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். விருத்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு
மிருகசீரிஷம் : தடைகள் விலகும்.
திருவாதிரை : நெருக்கம் அதிகரிக்கும்.
புனர்பூசம் : திருப்திகரமான நாள்.
---------------------------------------
கடகம்
ஆகஸ்ட் 08, 2022
போட்டிகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மற்றவர்கள் கூறும் கருத்துக்களை கொண்டு முடிவு எடுப்பதை தவிர்க்கவும். தடையாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். வியாபார பணிகளில் ஒத்துழைப்பு கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
புனர்பூசம் : சாதகமான நாள்.
பூசம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
ஆயில்யம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
---------------------------------------
சிம்மம்
ஆகஸ்ட் 08, 2022
திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். வேகத்தை விட விவேகமான முடிவு நல்ல மாற்றத்தை உருவாக்கும். பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். புதிய நுணுக்கங்களின் மூலம் சில மாற்றத்தை செய்வீர்கள். எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த உதவி சாதகமாக அமையும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மகம் : பாராட்டுகள் கிடைக்கும்.
பூரம் : குழப்பம் நீங்கும்.
உத்திரம் : உதவி சாதகமாகும்.
---------------------------------------
கன்னி
ஆகஸ்ட் 08, 2022
கட்டிடம் சார்ந்த விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். தனவரவை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். இணையம் சார்ந்த விளையாட்டுகளை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். முயற்சிகள் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு
உத்திரம் : பொறுமையுடன் செயல்படவும்.
அஸ்தம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
சித்திரை : கவனம் வேண்டும்.
---------------------------------------
துலாம்
ஆகஸ்ட் 08, 2022
உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். புதிய தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். மனதில் எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்படும். தந்தைவழி உறவினர்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். முயற்சிக்கு ஏற்ப பாராட்டுகள் கிடைக்கும். யோகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
சித்திரை : ஆதரவு கிடைக்கும்.
சுவாதி : தன்னம்பிக்கை மேம்படும்.
விசாகம் : பாராட்டுகள் கிடைக்கும்.
---------------------------------------
விருச்சிகம்
ஆகஸ்ட் 08, 2022
வியாபார பணிகளில் புதிய மாற்றத்தை ஏற்படுத்துவீர்கள். பொன், பொருள் சேர்க்கை தொடர்பான முயற்சிகள் கைகூடும். நீண்ட நேரம் கண் விழிப்பதை குறைத்து கொள்ளவும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். அரசு தொடர்பான பணிகளில் ஆதாயம் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பரிவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
விசாகம் : மாற்றமான நாள்.
அனுஷம் : விருப்பம் நிறைவேறும்.
கேட்டை : ஆதாயம் ஏற்படும்.
---------------------------------------
தனுசு
ஆகஸ்ட் 08, 2022
உயர் அதிகாரிகளிடம் பொறுமையுடன் செயல்படவும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். எதிர்பாராத சில உதவியின் மூலம் திருப்பங்கள் உண்டாகும். பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் அமையும். சமூக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். பிரீதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மூலம் : பொறுமையுடன் செயல்படவும்.
பூராடம் : இன்னல்கள் குறையும்.
உத்திராடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
---------------------------------------
மகரம்
ஆகஸ்ட் 08, 2022
எதிர்பார்த்த சில விஷயங்கள் நிறைவேறுவதில் காலதாமதம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும். எதிர்பாராத தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். மனதளவில் இருந்துவந்த இறுக்கம் குறைந்து புதிய கண்ணோட்டம் உண்டாகும். வீண் விவாதங்களில் ஈடுபடுவதை குறைத்து கொள்ளவும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திராடம் : காலதாமதம் ஏற்படும்.
திருவோணம் : தெளிவு பிறக்கும்.
அவிட்டம் : விவாதங்களை தவிர்க்கவும்.
---------------------------------------
கும்பம்
ஆகஸ்ட் 08, 2022
கொடுக்கல், வாங்கலில் லாபகரமான சூழ்நிலைகள் ஏற்படும். இணையம் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். தடைபட்ட சுபகாரியம் தொடர்பான நிகழ்ச்சிகள் கைகூடும். தந்தையிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் படிப்படியாக குறையும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபகரமான வாய்ப்புகள் அமையும். நட்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
அவிட்டம் : முன்னேற்றம் ஏற்படும்.
சதயம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
பூரட்டாதி : வாய்ப்புகள் அமையும்.
---------------------------------------
மீனம்
ஆகஸ்ட் 08, 2022
அரசு சார்ந்த பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். கனிவான பேச்சுக்களால் சாதகமான வாய்ப்புகளை உருவாக்குவீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்ட தனவரவு கிடைக்கும். உத்தியோக பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
பூரட்டாதி : இழுபறிகள் குறையும்.
உத்திரட்டாதி : சாதகமான நாள்.
ரேவதி : மாற்றம் ஏற்படும்.
---------------------------------------
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.08.2022 - School Morning Prayer Activities...
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.08.2022 - School Morning Prayer Activities...
திருக்குறள் :
பால்:பொருட்பால்
இயல்:குடியியல்
அதிகாரம்: குடி செயல் வகை
குறள் : 1021
கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுடையது இல்.
பொருள்:
உரிய கடமையைச் செய்வதில் சோர்வு காணாமல் எவனொருவன் முயற்சிகளை விடாமல் மேற்கொள்கிறானோ அந்தப் பெருமைக்கு மேலாக வேறொரு பெருமை கிடையாது
பழமொழி :
Too much rest is rust.
துலக்காத ஆயுதம் துருப்பிடிக்கும்
இரண்டொழுக்க பண்புகள் :
1. எந்த பலனும் எதிர்பார்க்காமல் காரியங்கள் செய்ய முயல்வேன்.
2. வள்ளுவர் வாக்கு படி மற்றவர்கள் எனக்கு செய்த உதவிக்கு எப்போதும் நன்றி மறவாமல் இருப்பேன்.
பொன்மொழி :
பலவீனமானவர்கள் வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கின்றனர்; பலமானவர்கள் வாய்ப்புகளை உருவாக்குகின்றனர்.....ஒரிசன் ஸ்வெட் மார்டென்
பொது அறிவு :
1. தீப்பெட்டியில் இரு பக்கமும் தடவப்படும் திரவம் எது?
சிவப்பு பாஸ்பரஸ் .
2.ஒரு சிங்கம் சாதாரணமாக எத்தனை அடி தூரம் பாயும்?
20 அடி.
English words & meanings :
neu·ro·ma·ta - a tumor formed of nerve tissue., noun. நரம்பு கட்டி. பெயர்ச் சொல்
ஆரோக்ய வாழ்வு :
இந்திய சமையலைப் பொருத்த வரை கறிவேப்பிலை என்பது மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. கறிவேப்பிலையில் ஆல்கலாய்டுகள், கிளைகோசைடுகள் மற்றும் பீனாலிக் கலவைகள் உள்ளன. கறிவேப்பிலையில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்கள் காணப்படுகிறது. இது உடலை ஆரோக்கியமாக வைக்கவும், நோய்களிலிருந்து விடுபடவும் உதவுகிறது.
NMMS Q 37:
கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு வார்த்தைகளின் முறையான வரிசை: Learn, Exam, Result, Book.
விடை: Book, Learn, Exam, Result
நீதிக்கதை
சிட்டுக்குருவியின் ஆசை
இரண்டு தூக்கணாங்குருவிகள் ஒரு கூடு கட்டி, அதில் வசித்து வந்தன. ஒருநாள், இரை தேட அவை இரண்டும் வெளியே போயிருந்த சமயத்தில், ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்து தூக்கணாங்குருவியின் கூட்டுக்குள் நுழைந்து கொண்டது. சிறிது நேரத்தில் ஒரு தூக்கணாங்குருவி பறந்து வந்தது. தன் கூட்டுக்குள் சிட்டுக்குருவி இருப்பதைப் பார்த்து, குருவி அக்கா எங்கள் வீட்டிற்குள் எதற்கு நுழைந்தாய் வெளியே போ என்றது. நான் போகமாட்டேன். உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள். இனிமேல் இது என் வீடு என்றது குருவி.
தூக்கணாங்குருவி அங்கிருந்து வருத்தத்துடனும், யோசனையுடனும் பறந்து போனது. சிட்டுக்குருவி, கூட்டில் உட்கார்ந்துக் கொண்டிருந்தது. திடீரென்று தூக்கணாங்குருவிகளின் கூட்டம் பறந்து வந்து ஒவ்வொன்றும் ஈரமண்னை அலகில் கொத்தி வந்து, கூட்டின் வாசலைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து பின், சிட்டுக்குருவியை கூட்டுக்குள் வைத்து ஒரேடியாக அடைத்துப் பூசிவிட்டுப் பறந்து போனது. அடுத்தவர்களின் வீட்டிற்குள் நுழைந்தது தவறு என தாமதமாக உணர்ந்த சிட்டுக்குருவி, அந்தக் கூட்டுக்குள்ளேயே மூச்சடைத்து இறந்து போனது.
நீதி :
அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டால் இதுதான் கதி.
இன்றைய செய்திகள்
08.08.22
* கொடைக்கானல் அருகே தாண்டிக்குடி மலைப்பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தவும், பயணிகளை கவரவும் பட்டாம்பூச்சி பூங்கா அமைக்க வனத்துறையினர் திட்டமிட்டு உள்ளனர்.
* நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி அஞ்சல் நிலையங்களில் தேசியக்கொடி ரூ.25-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
* தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
* மீண்டும் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தடுப்பூசி போடும் நடவடிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்றும் தமிழகம் உட்பட 7 மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
* பிஹாரில் பத்து மாவட்டங்களில் நிலத்தடி நீரில் யுரேனியம் வரையறுக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் இம்மாவட்டங்களில் இருந்து நிலத்தடி நீர் ஆய்வுக்கு அனுப்பப் பட்டுள்ளது.
* தென் அமெரிக்க நாடான கியூபாவில் உள்ள எண்ணெய்க் கிடங்கில் மின்னல் தாக்கியதில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 121 பேர் காயமடைந்தனர். பலர் மாயமாகியுள்ளனர்.
* சர்வதேச செஸ் கூட்டமைப்பான (FIDE)வின் துணைத்தலைவராக தமிழ்நாட்டை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
* உலக ஜூனியர் தடகளம்: தமிழக வீரர் செல்வபிரபு வெள்ளி வென்றுள்ளார்.
* காமன்வெல்த்: குத்துச்சண்டை, மல்யுத்தம், பாரா டேபிள் டென்னிஸ், லான் பவுல்ஸ் உள்ளிட்ட போட்டிகளில் இந்தியா பதக்கம் வென்றுள்ளது.
Today's Headlines
* The forest department is planning to set up a butterfly park near Kodaikanal to promote tourism and attract tourists in Thandikudi hills.
* On the occasion of the country's 75th Independence Day, the national flag is being sold at post offices for Rs.25.
* According to the Chennai Meteorological Department, 6 districts of Tamil Nadu namely Nilgiris, Coimbatore, Tirupur, Theni, Dindigul and Tenkasi are likely to receive heavy rain.
* The central government has written a letter to 7 state governments including Tamil Nadu asking them to take measures to control the spread of corona virus and to increase vaccination activities.
* Ten districts in Bihar have been found to have uranium above the limit in groundwater. In this case, groundwater from these districts has been sent for testing.
* At least 121 people have been injured in a massive fire caused by lightning at an oil depot in the South American country of Cuba. Many have disappeared.
* Viswanathan Anand from Tamil Nadu has been elected as the Vice President of International Chess Federation (FIDE).
* World Junior Athletics: Tamil Nadu's Selvaprabu won silver.
* Commonwealth: India has won medals in boxing, wrestling, para table tennis and lawn bowls.
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 14-11-2024
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 14-11-2024 - School Morning Prayer Activities... அனைத்து குழந்தைகளுக்கும் இனிய குழந்தைகள் தின வாழ்த்...