கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (08-08-2022) ராசி பலன்கள் (Rasi Palan), நட்சத்திர பலன்கள் (Today's (08-08-2022) Zodiac Predictions, Nakshatra Predictions)...




மேஷம்

ஆகஸ்ட் 08, 2022



ஆன்மிகம் சார்ந்த பணிகளில் ஈடுபாடு உண்டாகும். எதிர்காலம் தொடர்பான இலக்குகள் பிறக்கும். நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். கல்வி சார்ந்த பணிகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். மனதில் புதுவிதமான கற்பனைகள் உண்டாகும். உத்தியோக பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். சாந்தம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்




அஸ்வினி : ஈடுபாடு உண்டாகும். 


பரணி : முன்னேற்றமான நாள்.


கிருத்திகை : மதிப்பு அதிகரிக்கும்.

---------------------------------------





ரிஷபம்

ஆகஸ்ட் 08, 2022



எதிர்பாராத சில பயணங்களின் மூலம் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. பயனற்ற விவாதங்களை தவிர்ப்பதன் மூலம் உங்களின் மீதான மதிப்பு அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். கால்நடை சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




கிருத்திகை : சோர்வு நீங்கும்.


ரோகிணி : விவாதங்களை தவிர்க்கவும்.


மிருகசீரிஷம் : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------





மிதுனம்

ஆகஸ்ட் 08, 2022



செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் விலகும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். இனம்புரியாத கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். விருத்தி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு




மிருகசீரிஷம் : தடைகள் விலகும். 


திருவாதிரை : நெருக்கம் அதிகரிக்கும். 


புனர்பூசம் : திருப்திகரமான நாள்.

---------------------------------------





கடகம்

ஆகஸ்ட் 08, 2022



போட்டிகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மற்றவர்கள் கூறும் கருத்துக்களை கொண்டு முடிவு எடுப்பதை தவிர்க்கவும். தடையாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். வியாபார பணிகளில் ஒத்துழைப்பு கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை




புனர்பூசம் : சாதகமான நாள்.


பூசம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.


ஆயில்யம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

---------------------------------------





சிம்மம்

ஆகஸ்ட் 08, 2022



திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். வேகத்தை விட விவேகமான முடிவு நல்ல மாற்றத்தை உருவாக்கும். பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். புதிய நுணுக்கங்களின் மூலம் சில மாற்றத்தை செய்வீர்கள். எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த உதவி சாதகமாக அமையும். உயர்வு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




மகம் : பாராட்டுகள் கிடைக்கும்.


பூரம் : குழப்பம் நீங்கும். 


உத்திரம் : உதவி சாதகமாகும்.

---------------------------------------






கன்னி

ஆகஸ்ட் 08, 2022



கட்டிடம் சார்ந்த  விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். தனவரவை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். இணையம் சார்ந்த விளையாட்டுகளை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். முயற்சிகள் மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு




உத்திரம் : பொறுமையுடன் செயல்படவும்.


அஸ்தம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.


சித்திரை : கவனம் வேண்டும்.

---------------------------------------





துலாம்

ஆகஸ்ட் 08, 2022



உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். புதிய தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். மனதில் எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்படும். தந்தைவழி உறவினர்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். முயற்சிக்கு ஏற்ப பாராட்டுகள் கிடைக்கும். யோகம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




சித்திரை : ஆதரவு கிடைக்கும்.


சுவாதி : தன்னம்பிக்கை மேம்படும்.


விசாகம் : பாராட்டுகள் கிடைக்கும்.

---------------------------------------






விருச்சிகம்

ஆகஸ்ட் 08, 2022



வியாபார பணிகளில் புதிய மாற்றத்தை ஏற்படுத்துவீர்கள். பொன், பொருள் சேர்க்கை தொடர்பான முயற்சிகள் கைகூடும். நீண்ட நேரம் கண் விழிப்பதை குறைத்து கொள்ளவும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். அரசு தொடர்பான பணிகளில் ஆதாயம் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பரிவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




விசாகம் : மாற்றமான நாள்.


அனுஷம் : விருப்பம் நிறைவேறும்.


கேட்டை : ஆதாயம் ஏற்படும்.

---------------------------------------






தனுசு

ஆகஸ்ட் 08, 2022



உயர் அதிகாரிகளிடம் பொறுமையுடன் செயல்படவும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த விஷயங்களில்  சிந்தித்து செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். எதிர்பாராத சில உதவியின் மூலம் திருப்பங்கள் உண்டாகும். பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் அமையும். சமூக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். பிரீதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




மூலம் : பொறுமையுடன் செயல்படவும்.


பூராடம் : இன்னல்கள் குறையும்.


உத்திராடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

---------------------------------------





மகரம்

ஆகஸ்ட் 08, 2022



எதிர்பார்த்த சில விஷயங்கள் நிறைவேறுவதில் காலதாமதம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும். எதிர்பாராத தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். மனதளவில் இருந்துவந்த இறுக்கம் குறைந்து புதிய கண்ணோட்டம் உண்டாகும். வீண் விவாதங்களில் ஈடுபடுவதை குறைத்து கொள்ளவும். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




உத்திராடம் : காலதாமதம் ஏற்படும். 


திருவோணம் : தெளிவு பிறக்கும். 


அவிட்டம் : விவாதங்களை தவிர்க்கவும்.

---------------------------------------





கும்பம்

ஆகஸ்ட் 08, 2022



கொடுக்கல், வாங்கலில் லாபகரமான சூழ்நிலைகள் ஏற்படும். இணையம் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். தடைபட்ட சுபகாரியம் தொடர்பான நிகழ்ச்சிகள் கைகூடும். தந்தையிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் படிப்படியாக குறையும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபகரமான வாய்ப்புகள் அமையும். நட்பு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்




அவிட்டம் : முன்னேற்றம் ஏற்படும். 


சதயம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.


பூரட்டாதி : வாய்ப்புகள் அமையும்.

---------------------------------------





மீனம்

ஆகஸ்ட் 08, 2022



அரசு சார்ந்த பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். கனிவான பேச்சுக்களால் சாதகமான வாய்ப்புகளை உருவாக்குவீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்ட தனவரவு கிடைக்கும். உத்தியோக பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




பூரட்டாதி : இழுபறிகள் குறையும். 


உத்திரட்டாதி : சாதகமான நாள்.


ரேவதி : மாற்றம் ஏற்படும்.

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

What will be the tomorrow's important announcement?

 நாளை வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு என்னவாக இருக்கும்? What will be the major announcement tomorrow? தமிழ்நாட்டில் இரும்புக் காலம் முன்னதாக...