கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, காமராஜர் மற்றும் எம்.ஜி.ஆர். ஆகியோர் பிறந்தநாள்களில் சத்துணவில் இனிப்பு பொங்கல் வழங்க உத்தரவு (Ordered to give Sweet Pongal in Mid Day Meals Scheme on Former Chief Ministers Anna, Kamaraj and M.G.R. Birthdays) நாள்: 14-07-2017...



>>> முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, காமராஜர் மற்றும் எம்.ஜி.ஆர். ஆகியோர் பிறந்தநாள்களில் சத்துணவில் இனிப்பு பொங்கல் வழங்க உத்தரவு (Ordered to give Sweet Pongal in Mid Day Meals Scheme on Former Chief Ministers Anna, Kamaraj and M.G.R. Birthdays) நாள்: 14-07-2017...





பணியிலிருந்து ஓய்வு பெற அனுமதிக்கப்படாத, ஆனால் அடிப்படை விதிகளின் விதி 56(1)(c) இன் கீழ் பணியில் தக்கவைக்கப்பட்ட மற்றும் பணிநீக்கம் செய்யப்பட்ட / நீக்கப்பட்ட / ராஜினாமா செய்த அரசு ஊழியர்களுக்கு விடுப்புப் பலன்களை பணமாக்குதல் - அடிப்படை விதிகளில் திருத்தங்கள் செய்து அரசாணை (நிலை) எண்: 100, நாள்: 07-09-2022 - தமிழாக்கம் (Encashment of Leave Benefits to Government Servants who are not allowed to retire but are retained in service and dismissed / removed / resigned under Rule 56(1)(c) of the Basic Rules - Amendments to the Basic Rules - Tamil Translation of G.O. (Ms) No: 100, Dated: 07- 09-2022, by Google Lens)...

 



>>> பணியிலிருந்து ஓய்வு பெற அனுமதிக்கப்படாத, ஆனால் அடிப்படை விதிகளின் விதி 56(1)(c) இன் கீழ் பணியில் தக்கவைக்கப்பட்ட மற்றும் பணிநீக்கம் செய்யப்பட்ட / நீக்கப்பட்ட / ராஜினாமா செய்த அரசு ஊழியர்களுக்கு விடுப்புப் பலன்களை பணமாக்குதல் - அடிப்படை விதிகளில் திருத்தங்கள் செய்து அரசாணை (நிலை) எண்: 100, நாள்: 07-09-2022 - தமிழாக்கம் (Encashment of Leave Benefits to Government Servants who are not allowed to retire but are retained in service and dismissed / removed / resigned under Rule 56(1)(c) of the Basic Rules - Amendments to the Basic Rules - Tamil Translation of G.O. (Ms) No: 100, Dated: 07- 09-2022, by Google Lens)...





பணியிலிருந்து ஓய்வு பெற அனுமதிக்கப்படாத, ஆனால் அடிப்படை விதிகளின் விதி 56(1)(c) இன் கீழ் பணியில் தக்கவைக்கப்பட்ட மற்றும் பணிநீக்கம் செய்யப்பட்ட / நீக்கப்பட்ட / ராஜினாமா செய்த அரசு ஊழியர்களுக்கு விடுப்புப் பலன்களை பணமாக்குதல் - அடிப்படை விதிகளில் திருத்தங்கள் செய்து அரசாணை (நிலை) எண்: 100, நாள்: 07-09-2022 வெளியீடு (Encashment of Leave Benefits to Government Servants who are not allowed to retire but are retained in service and dismissed / removed / resigned under Rule 56(1)(c) of the Basic Rules - Amendments to the Basic Rules G.O. (Ms) No: 100, Dated: 07- 09-2022)...



>>> பணியிலிருந்து ஓய்வு பெற அனுமதிக்கப்படாத, ஆனால் அடிப்படை விதிகளின் விதி 56(1)(c) இன் கீழ் பணியில் தக்கவைக்கப்பட்ட மற்றும் பணிநீக்கம் செய்யப்பட்ட / நீக்கப்பட்ட / ராஜினாமா செய்த அரசு ஊழியர்களுக்கு விடுப்புப் பலன்களை பணமாக்குதல் - அடிப்படை விதிகளில் திருத்தங்கள் செய்து அரசாணை (நிலை) எண்: 100, நாள்: 07-09-2022 வெளியீடு (Encashment of Leave Benefits to Government Servants who are not allowed to retire but are retained in service and dismissed / removed / resigned under Rule 56(1)(c) of the Basic Rules - Amendments to the Basic Rules G.O. (Ms) No: 100, Dated: 07- 09-2022)...



>>>  அரசாணை (நிலை) எண்: 100, நாள்: 07-09-2022 - தமிழாக்கம்...





Today's (14-09-2022) Wordle Answer...

                                                                    

Wordle விளையாடும் முறை: 

ஒவ்வொரு நாளும், ஒரு ஐந்தெழுத்து சொல் தேர்ந்தெடுக்கப்படுகிறது, அதை விளையாடுவோர் ஆறு முயற்சிகளுக்குள் யூகிக்க வேண்டும். ஒவ்வொரு யூகத்திற்கும் பிறகு, ஒவ்வொரு எழுத்தும் பச்சை, மஞ்சள் அல்லது சாம்பல் என குறிக்கப்படும்.

பச்சை என்பது எழுத்து சரியானது மற்றும் சரியான இடத்தில் உள்ளது என்றும்,
 
மஞ்சள் என்பது பதிலில் உள்ளது ஆனால் சரியான நிலையில் இல்லை என்றும், 

சாம்பல் என்பது அது விடையில் இல்லை என்பதைக் குறிக்கிறது.  

 விளையாட்டில் "ஹார்ட் மோட்" விருப்பம் உள்ளது, இதற்கு வீரர்கள் பச்சை மற்றும் மஞ்சள் என குறிக்கப்பட்ட எழுத்துக்களை அடுத்தடுத்த யூகங்களில் சேர்க்க வேண்டும்.

தினசரி சொல் அனைவருக்கும் ஒன்றுதான்.

 கருத்தியல் மற்றும் ஸ்டைலிஸ்டிக் ரீதியாக, இந்த விளையாட்டு 1955 பேனா மற்றும் பேப்பர் கேம் ஜோட்டோ மற்றும் கேம் ஷோ ஃபிரான்சைஸ் லிங்கோ போன்றது.

 இந்த விளையாட்டானது இரண்டு-வீரர் பலகை விளையாட்டான மாஸ்டர்மைண்ட்-இதில் வார்த்தை யூகிக்கும் மாறுபாடு கொண்ட வேர்ட் மாஸ்டர்மைன்ட்  மற்றும் புல்ஸ் அண்ட் கவ்ஸ் விளையாட்டு, குறிப்பிட்ட எழுத்துக்களை வேர்ட்லே (Wordle) உறுதிசெய்கிறது. ஒவ்வொரு தினசரி விளையாட்டும் தோராயமாக வரிசைப்படுத்தப்பட்ட 2,315 சொற்களின் பட்டியலிலிருந்து ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறது (ஆங்கில மொழியில் உள்ள தோராயமான 12,000 ஐந்தெழுத்து வார்த்தைகளில்). 


Wordle Game Website Link: 



Today's (14-09-2022) Wordle Answer: THYME







 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 14.09.2022 - School Morning Prayer Activities...



 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 14.09.2022 - School Morning Prayer Activities...


  திருக்குறள் :


பால்: பொருட்பால்


இயல்:குடியியல்


அதிகாரம்: இரவச்சம்


குறள் : 1063

இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்

வன்மையின் வன்பாட்ட தில்.


பொருள்:

இல்லாமையால் வரும் துன்பத்தை பிச்சை எடுத்துப் போக்கிக் கொள்ளலாம் என்று எண்ணும் கொடுமையிலும் கொடுமை வேறு இல்லை.


பழமொழி :

Good deeds are never lost. 


இட்டுக் கெட்டார் யாருமே இல்லை.


இரண்டொழுக்க பண்புகள் :


1. "உன் திறமையோடு உன் வியர்வையும்(உழைப்பும்) சேரும் போது வெற்றி வேர்விடும். 


2. எனவே உழைத்திடு உறுதியாய். உயர்ந்திடு வானத்திற்கு.


பொன்மொழி :


வெற்றிக்கு எந்தக் குறுக்கு வழியும் கிடையாது! நாம்தான் நடந்து நடந்து பாதை போடவேண்டும் - டிஸ்ரேலி


பொது அறிவு :


1.வயிற்றில் பல் இருக்கும் உயிரினம் எது? 


நண்டு. 


 2. நீரை அருந்தாத நீர்வாழ் உயிரினம் எது? 


 டால்பின்.



English words & meanings :


lin·guis·tics - the scientific study about language. Noun. Linguisticians are experts in language. மொழியியலாளர். பெயர்ச் சொல் 


ஆரோக்ய வாழ்வு :


செலினியம் தேங்காய் பாலில் அதிகமுள்ளது. தினமும் தேங்காய் பாலை அருந்துபவர்களுக்கு கீல்வாத பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. மாதத்திற்கு ஒருமுறை அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை நாள் முழுவதும் திட உணவுகள் ஏதும் உண்ணாமல் தேங்காய் பால் மட்டும் அருந்தி வந்தால் உடலில் உள்ள நச்சுகள் அனைத்தும் நீக்கி, உடல் உறுப்புகள் சுத்தமாகும்


NMMS Q 59:


Daughter : Mother :: Son : ?

 a) Mother. b) Father. c) Sister. d) Brother.


 Answer : Father


நீதிக்கதை


பெண்ணுக்கு பெருமை கிடைத்தது எப்படி?


சுவாமி விவேகானந்தரிடம் தனது நீண்ட நாளைய சந்தேகத்திற்கு தீர்வு காணும் பொருட்டு வந்திருந்தான் அந்த இளைஞன். அவனது எதிர்பார்ப்பை புரிந்து கொண்ட விவேகானந்தர், என்னப்பா விஷயம்..? என்று கேட்டார். சுவாமி! ஒரு குழந்தையை பெற்றெடுப்பதில் கணவன் - மனைவி இருவருக்குமே சம பங்கு இருக்கிறது. ஆனாலும், பெண்தான் சிறந்தவள் என்கிறார்கள். அவளுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அது ஏன்? என்று கேட்டான் அந்த இளைஞன்.


இவனிடம் உபதேசம் சொன்னால் எதுவும் தலையில் ஏறாது என்று எண்ணிய விவேகானந்தர், அருகில் கிடந்த பெரிய கல்லை எடுத்து வருமாறு அவனிடம் கூறினார். அவனும் அதை எடுத்து வந்தான். எப்படியும் 2 கிலோ எடைக்கு மேல் இருக்கும் அந்த கல். சுவாமி! இந்த கல்லை நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டான் அந்த இளைஞன். அதற்கு விவேகானந்தர், அந்த கல்லை உன் மடியில் கட்டிக்கொண்டு 5 மணி நேரம் சும்மா இருந்து விட்டு வா. அது போதும் என்றார்.


அந்த இளைஞனும் தனது மடியில், ஒரு தாய் வயிற்றில் குழந்தையை சுமப்பதுபோல் அந்த கல்லை கட்டிக்கொண்டான். சிறிதுநேரம்தான் நின்றிருப்பான். அவனுக்கு என்னமோபோல் இருந்தது. உடனே அருகில் இருந்த இருக்கையில் போய் அமர்ந்து கொண்டான். ஆனாலும் அவனால் இருக்க முடியவில்லை. 2 மணி நேரம்தான் ஓடியிருந்தது. அவனுக்கு என்னவோ 2 நாளாக அவஸ்தை பட்டதுபோல் இருந்தது. வேறு வழியின்றி விவேகானந்தரிடம் ஓடினான். சுவாமி! இதற்குமேல் என்னால் கல்லை கட்டிக்கொண்டு இருக்க முடியாது என்று சொல்லி மேல் முச்சு கீழ் முச்சு வாங்கினான்.


அப்போது விவேகானந்தர் சொன்னார். உன்னால் 2 கிலோ எடை கொண்ட கல்லை 4 மணி நேரம்கூட சுமக்க முடியவில்லை. ஆனால், ஒரு தாய் பத்து மாதம் சுமந்து ஒரு குழந்தையை பெற்றெடுக்கிறாளே! அதற்காக அவள் உன்னைபோல் அலுத்துக்கொள்ளவில்லையே! அதுதான் தாய். அதனால்தான் அவளை நாம் பாராட்டுகிறோம், போற்றுகிறோம் என்று விளக்கம் கொடுத்தார் விவேகானந்தர்.


இன்றைய செய்திகள்


14.09.22


* சென்னை காலநிலை மாற்ற செயல் திட்ட வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


* 20,000 சதுர மீட்டர் பரப்பளவுக்கு மேல் உள்ள குடியிருப்புகளில் கழிவு மேலாண்மை தொடர்பாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.


* தமிழகத்தின் 17 வது பறவைகள் சரணாலயமாக திருப்பூரில் உள்ள நஞ்சராயன் குளம் அறிவிக்கப்பட்டுள்ளது.


* பொறியியல் பாடத்திட்டங்களை தொடர்ந்து தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளின் பாடத்திட்டங்களும் விரைவில் மாற்றப்பட உள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.


* அதிவிரைவு ரயில்கள் புறப்படுவதற்கு 2 மணி நேரத்துக்கு மேல் தாமதமானால், பயணிகளுக்கு இலவச உணவு வழங்கப்படும்.


* ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி நிகழ்வுக்கு ரஷ்யா, பெலாரஸ், மியான்மர் ஆகிய மூன்று நாடுகளுக்கு பிரிட்டன் அழைப்பு விடுக்கவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன.


* அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் இரட்டையர் பிரிவில் பார்போரா - கேத்ரினா இணை சாம்பியன் பட்டம் வென்றது.


* தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி - தொடரையும் கைப்பற்றியது.


Today's Headlines


* Chennai Climate Change Action Plan draft report released.  It has been informed that the public can express their views in this regard.


* The Tamil Nadu Pollution Control Board has issued action orders regarding waste management in residential areas above 20,000 square meters.


 * Nanjarayan Pond in Tirupur has been declared as the 17th bird sanctuary of Tamil Nadu.


 *Higher Education Minister Ponmudi has said that following the engineering curricula, the curricula of arts and science colleges in Tamil Nadu will be changed soon.


 *If the high speed trains are delayed by more than 2 hours, the passengers will be given free food.


 *It has been reported that Britain has not invited three countries - Russia, Belarus and Myanmar - to Queen Elizabeth II's funeral.


 * Barbora - Katrina Co-Champion in US Open Women's Doubles


 * England won the last Test against South Africa - also clinched the series.





இன்றைய (14-09-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...




மேஷம்

செப்டம்பர் 14, 2022



வாழ்க்கை துணைவரின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனதில் கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் ஏற்படும். கொடுக்கல், வாங்கல் சார்ந்த விஷயங்களில் கவனத்துடன் செயல்படவும். உற்சாகம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.


பரணி : குழப்பம் நீங்கும்.


கிருத்திகை : கவனத்துடன் செயல்படவும்.

---------------------------------------




ரிஷபம்

செப்டம்பர் 14, 2022



இனம்புரியாத சில சிந்தனைகளின் மூலம் குழப்பம் உண்டாகும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். வாகன பயணங்களின் போது தேவையான ஆவணங்களை எடுத்து செல்லவும். மாணவர்களுக்கு விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பாராத சில உதவியின் மூலம் மாற்றம் ஏற்படும். போட்டி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




கிருத்திகை : குழப்பம் உண்டாகும்.


ரோகிணி : வாய்ப்புகள் கைகூடும். 


மிருகசீரிஷம் : மாற்றம் ஏற்படும்.

---------------------------------------




மிதுனம்

செப்டம்பர் 14, 2022



நீண்ட நேரம் கண் விழிப்பதை குறைத்து கொள்ளவும். ஆடம்பர பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். தாய்மாமன் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய முயற்சியில் இருந்துவந்த தடைகள் குறைந்து எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நுட்பமான சிந்தனைகளின் மூலம் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்துவீர்கள். வெற்றி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்




மிருகசீரிஷம் : ஆர்வம் அதிகரிக்கும்.


திருவாதிரை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


புனர்பூசம் : வாய்ப்புகள் ஏற்படும்.

---------------------------------------




கடகம்

செப்டம்பர் 14, 2022



செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். குழந்தைகளின் ஆரம்ப கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். வியாபார பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். மனை சார்ந்த வியாபாரத்தில் லாபம் மேம்படும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். லாபம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை




புனர்பூசம் : முன்னேற்றம் ஏற்படும்.


பூசம் : ஆதாயம் அடைவீர்கள். 


ஆயில்யம் : லாபம் மேம்படும்.

---------------------------------------




சிம்மம்

செப்டம்பர் 14, 2022



உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு மேம்படும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். காசோலையால் ஏற்பட்ட சில பிரச்சனைகள் குறையும். மனதளவில் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். சாந்தம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




மகம் : செல்வாக்கு மேம்படும்.


பூரம் : தேடல் அதிகரிக்கும். 


உத்திரம் : புத்துணர்ச்சியான நாள்.

---------------------------------------




கன்னி

செப்டம்பர் 14, 2022



ஆன்மிகம் சார்ந்த விஷயங்களில் குழப்பம் உண்டாகும். எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகளால் தூக்கமின்மை உண்டாகும். கருத்துக்களை வெளிப்படுத்தும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். ஆடம்பரமான சிந்தனைகளின் மூலம் விரயங்கள் உண்டாகும். கணிதம் சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் விழிப்புணர்வுடன் செயல்படவும். தடைகள் விலகும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு




உத்திரம் : குழப்பம் உண்டாகும். 


அஸ்தம் : தூக்கமின்மை ஏற்படும்.


சித்திரை : விழிப்புணர்வுடன் செயல்படவும். 

---------------------------------------




துலாம்

செப்டம்பர் 14, 2022



வியாபார பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத தனவரவு உண்டாகும். அரசு சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். சமூகம் தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் மேன்மையான சூழ்நிலைகள் அமையும். காப்பீடு சார்ந்த துறைகளில் வருமானம் மேம்படும். நட்பு கிடைக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 8 


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்




சித்திரை : முன்னேற்றம் ஏற்படும்.


சுவாதி : ஆதரவு கிடைக்கும். 


விசாகம் : மேன்மையான நாள்.

---------------------------------------




விருச்சிகம்

செப்டம்பர் 14, 2022



எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். புதிய வேலை நிமிர்த்தமான முயற்சிகள் சாதகமாக அமையும். கால்நடை தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். தேவையற்ற விவாதங்களை குறைத்து கொள்வது நல்லது. மற்றவர்களின் பொருட்கள் மீது ஆர்வம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். களிப்பு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




விசாகம் : சாதகமான நாள்.


அனுஷம் : விவாதங்களை தவிர்க்கவும்.


கேட்டை : பிரச்சனைகள் குறையும்.

---------------------------------------




தனுசு

செப்டம்பர் 14, 2022



செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு முடிவு காண்பீர்கள். குறும்படம் தொடர்பான முயற்சிகளில் வித்தியாசமான அனுபவம் ஏற்படும். உடல் தோற்றப்பொலிவில் மாற்றம் உண்டாகும். இன்ப சுற்றுலா தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபம் அதிகரிக்கும். பக்தி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




மூலம் : அனுபவம் வெளிப்படும். 


பூராடம் : மாற்றம் உண்டாகும்.


உத்திராடம் : லாபகரமான நாள்.

---------------------------------------




மகரம்

செப்டம்பர் 14, 2022



வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வெளியூர் பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். விவசாய பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். மற்றவர்கள் கூறும் கருத்துக்களில் உள்ள உண்மை நிலையை அறிந்து முடிவு எடுக்கவும். சொத்துக்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். நம்பிக்கை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




உத்திராடம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.


திருவோணம் : பொறுமையுடன் செயல்படவும்.


அவிட்டம் : எண்ணங்கள் மேம்படும்.

---------------------------------------




கும்பம்

செப்டம்பர் 14, 2022



உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். எந்தவொரு செயலையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். புதிய பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். சுபகாரியம் சார்ந்த முயற்சிகள் ஈடேறும். சிறு மற்றும் குறுந்தொழிலில் சாதகமான வாய்ப்புகள் அமையும். வியாபார பணிகளில் இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும். கவனம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




அவிட்டம் : முன்னேற்றம் ஏற்படும். 


சதயம் : ஆர்வம் அதிகரிக்கும்.


பூரட்டாதி : போட்டி குறையும். 

---------------------------------------




மீனம்

செப்டம்பர் 14, 2022



புதிய அணுகுமுறையின் மூலம் எண்ணிய சில பணிகளை செய்து முடிப்பீர்கள். உத்தியோக பணிகளில் இருந்துவந்த காலதாமதம் குறையும். கடன் சார்ந்த உதவி சாதகமாக அமையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் உங்களின் மீதுதான நம்பிக்கை அதிகரிக்கும். நெருக்கமானவர்களிடம் ஒத்துழைப்பான சூழ்நிலைகள் ஏற்படும். தடைகள் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்




பூரட்டாதி : காலதாமதம் குறையும்.


உத்திரட்டாதி : நம்பிக்கை அதிகரிக்கும். 


ரேவதி : ஒத்துழைப்பான நாள்.

---------------------------------------



வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வு கலந்தாய்வு தேதி அறிவிப்பு - தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Block Educational Officer Promotion Counselling Dates Announced - Proceedings of Tamil Nadu Elementary Education Director) ந.க.எண்: 14884/ஐ1/2022, நாள்: 13-09-2022...

 


வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வு கலந்தாய்வு - 19.09.2022 & 20.09.2022 ஆகிய நாட்களில் சென்னையில் நடைபெறும் தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவிப்பு...





>>> வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்த நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களின் இறுதிப் பட்டியல் வெளியீடு - தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Publication of Final List of Middle School HeadMasters Eligible for Promotion to Block Educational Officer - Proceedings of Tamil Nadu Elementary Education Director) ந.க.எண்: 14884/ஐ1/2022, நாள்: 12-09-2022...






இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Joint Director Mr. Pon Kumar's speech was of very low quality - Teachers' Fedaration condemned

முறைசாராக் கல்வி இணை இயக்குநர் திரு.பொன்.குமார் அவர்களின் பேச்சு மிகவும் தரம் தாழ்ந்தது - ஆசிரியர் கூட்டணி கண்டனம்  Joint Director Mr. Pon K...