கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்ஸ்பைர் விருதுகள் - மானக் (அளவில்லாத அறிவுப்பூர்வமான எண்ணங்களை உருவாக்குவதற்கான தேசத்தின் தேடல்) - விண்ணப்பிக்கும் முறை - தேர்ந்தெடுக்கப்படும் முறை - குறித்த அனைத்து தகவல்கள் - தமிழில் (INSPIRE AWARDS - MANAK (Nation's Quest to Create Immense Intellectual Thoughts) - How to Apply - How to be Selected - All Information - in Tamil)...



>>> இன்ஸ்பைர் விருதுகள் - மானக் (அளவில்லாத அறிவுப்பூர்வமான எண்ணங்களை உருவாக்குவதற்கான தேசத்தின் தேடல்) - விண்ணப்பிக்கும் முறை - தேர்ந்தெடுக்கப்படும் முறை - குறித்த அனைத்து தகவல்கள் - தமிழில் (INSPIRE AWARDS - MANAK (Nation's Quest to Create Immense Intellectual Thoughts) - How to Apply - How to be Selected - All Information - in Tamil)...



INSPIRE Award -2022 - பதிவு செய்வதற்கான  கடைசி நாள்: 30-09-2022...


🔰Students nomination முதல் acknowledgement printout எடுப்பது வரை முழுமையான விளக்கம்..


*🟡மாணவர் எண்ணிக்கை*


*🔊Hsc & Hr.Sec school.*

▪️ஒரு வகுப்பிற்கு ஒரு மாணவர் வீதம் 5 மாணவர்களை register செய்யவும்.


*🔊Middle Schools*

▪️ஒரு வகுப்பிற்கு ஒரு மாணவர் வீதம் 3 மாணவர்களை register செய்யவும்.


*🧭தேவையான விவரங்கள்*


*📢மாணவர்கள்*


▪️பிறந்த தேதி

▪️புகைப்படம்

▪️category

▪️பெற்றோர் பெயர்

▪️ஆதார் எண்

▪️கைபேசி எண்

▪️வங்கி விவரம்

▪️project details


*📢ஆசிரியர்*


▪️guide teacher name

▪️phone number

▪️HM name

▪️HM phone number

▪️Reason for selection of students


🔒inspire award-க்கான

▪️User id 

▪️password


TNSED செயலியில் ஆசிரியர்கள் விடுப்பு அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்கான படிகள் (Steps for applying Leave Application in TNSED App - Teaching Staff)...



>>> TNSED செயலியில் ஆசிரியர்கள் விடுப்பு அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்கான படிகள் (Steps for applying Leave Application in TNSED App - Teaching Staff)...



இன்ஸ்பைர் விருதுகள் - மனக் - 2022-23 ஆம் ஆண்டு - செப்டம்பர் 30, 2022 வரை விண்ணப்பிக்கலாம் (INSPIRE Awards - MANAK - Online nominations for the year 2022-23 are open until Sept 30, 2022)...

 


இன்ஸ்பைர் விருதுகள் - மனக் - 2022-23 ஆம் ஆண்டு - செப்டம்பர் 30, 2022 வரை விண்ணப்பிக்கலாம் (INSPIRE Awards - MANAK - Online nominations for the year 2022-23 are open until Sept 30, 2022)...


இன்ஸ்பைர் விருதுகள் - மனக் - 2022-23 ஆம் ஆண்டிற்கான ஆன்லைன் பரிந்துரைகள் செப்டம்பர் 30, 2022 வரை திறந்திருக்கும்...


>>> விண்ணப்பிக்க வலைதள முகவரி...



>>> இன்ஸ்பைர் விருதுகள் - மானக் - விண்ணப்பிக்கும் முறை - தேர்ந்தெடுக்கப்படும் முறை - குறித்த அனைத்து தகவல்கள் (தமிழில்)...



INSPIRE Award -2022 - பதிவு செய்வதற்கான  கடைசி நாள்: 30-09-2022...


🔰Students nomination முதல் acknowledgement printout எடுப்பது வரை முழுமையான விளக்கம்..


*🟡மாணவர் எண்ணிக்கை*


*🔊Hsc & Hr.Sec school.*

▪️ஒரு வகுப்பிற்கு ஒரு மாணவர் வீதம் 5 மாணவர்களை register செய்யவும்.


*🔊Middle Schools*

▪️ஒரு வகுப்பிற்கு ஒரு மாணவர் வீதம் 3 மாணவர்களை register செய்யவும்.


*🧭தேவையான விவரங்கள்*


*📢மாணவர்கள்*


▪️பிறந்த தேதி

▪️புகைப்படம்

▪️category

▪️பெற்றோர் பெயர்

▪️ஆதார் எண்

▪️கைபேசி எண்

▪️வங்கி விவரம்

▪️project details


*📢ஆசிரியர்*


▪️guide teacher name

▪️phone number

▪️HM name

▪️HM phone number

▪️Reason for selection of students


🔒inspire award-க்கான

▪️User id 

▪️password

இல்லம் தேடிக் கல்வி திட்டத்தால் கற்றல் இடைவெளி பெரிதும் குறைக்கப்பட்டுள்ளதாக கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வு முடிவு தகவல் (University of California study results show that Illam Thedi Kalvi (ITK) program has greatly reduced the learning gap)...











பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.09.2022 - School Morning Prayer Activities...



பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.09.2022 - School Morning Prayer Activities...


   திருக்குறள் :


பால்: பொருட்பால்


இயல்:குடியியல்


அதிகாரம்: கயமை


குறள் எண் : 1079

உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்

வடுக்காண வற்றாகும் கீழ்.


விளக்கம்


பிறர் நன்கு உடுத்த, உண்ணக் கண்டால், அவர்மீத குற்றம் காணும் ஆற்றலை உடையவர் கயவர்.



பழமொழி :

Everything is good in it's reason.


சிறு துரும்பும் பல் குத்த உதவும்.


இரண்டொழுக்க பண்புகள் :


1. மகிழ்ச்சி என்பது வேண்டும் வேண்டும் என்று கேட்பதில் இல்லை போதும் என்கிற மனதில் எனவே போதும் என்கிற நிறைவோடு வாழ முயற்சிப்பேன்.


 2. பெற்றோர், ஆசிரியர் மற்றும் பிறரை சரியான முறையில் மகிழ்விப்பதும் மகிழ்ச்சியே. மகிழ்விப்பேன்.


பொன்மொழி :


துன்பத்தில் விழுந்து எழுபவன் வாழ்க்கையின் எல்லை வரை இன்பம் காண்பான்.


பொது அறிவு :


1.மனித உடலில் பிராண வாயு எடுத்துச் செல்வது எது? 


 ஹீமோகுளோபின் .


 2.குழல்கள் அற்ற சுரப்பியின் சுரப்பிற்கு என்ன பெயர்? 


 ஹார்மோன்.


English words & meanings :


re·mu·ner·a·tion - money paid for extra work or a service. Noun. She did the extra work without any remuneration. பணிக்கு வழங்கப்படும் பணபலன்


ஆரோக்ய வாழ்வு :


வல்லாரையில் மன அழுத்தத்தை கொடுக்கும் கார்டிசோல் ஹார்மோன் உற்பத்தியை குறைக்கும் ஆற்றல் உள்ளது. எனவே வல்லாரைக் கீரையை மன அழுத்தம் உள்ளவர்கள் உணவில் சேர்த்து வந்தால் மன அழுத்தம் மற்றும் அனிஸிட்டி பிரச்சனைகளை தீர்க்கிறது


NMMS Q 65:


Lid : Box :: Cork : ? 

a) Seal. b) Bottle. c) Drug. d)Carton.


 Answer : Bottle


செப்டம்பர் 21


சம இரவு நாள்


சம இரவு நாள்(Equinox) என்பது சூரியன் நிலநடுக்கோட்டினை கடந்து செல்லும் நாளாகும். ஆண்டுக்கு இருமுறை சூரியன் இவ்வாறு நிலநடுக்கோட்டினைக் கடப்பது நிகழும். சம இரவு நாள் இவற்றில் எந்தவொரு நாளையும் குறிக்கும். இந்நாட்களில் இரவும் பகலும் ஒரே அளவாக (ஏறத்தாழ 12 மணி நேரம்) இருக்கும். இலத்தீனில் ஈக்வீநாக்சு என வழங்கப்படுகிறது. ஈக்வீ(equi) எனபது சமம் என்றும் நாக்சு(nox) என்பது இரவு என்றும் பொருள்படும். சம இரவு நாட்கள் என்று நிகழும் என்பது நிலநடுக்கோட்டிலிருந்து எத்தனை தொலைவு தள்ளி அளக்கப்படுகிறது என்பதைப் பொறுத்தது. சாதாரணமாக மார்ச் 20 அன்றும் செப்டம்பர் 22 அன்றும் இவை நிகழும்.


உலக அமைதி நாள்


உலக அமைதி நாள் (International Day of Peace) ஐக்கிய நாடுகளின் பொது அவையின் பிரகடனத்தின் மூலம் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 21-ஆம் நாளில் அனைத்து ஐநா உறுப்பு நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாள் முன்னர் 1981-இல் இருந்து ஓவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் வரும் மூன்றாம் செவ்வாய்க்கிழமையிலேயே கொண்டாடப்பட்டு வந்தது. ஆனாலும் 2002-இல் இருந்து ஆண்டுதோறும் செப்டம்பர் 21-இல் கொண்டாடப்படுகிறது


இன்றைய செய்திகள்


21.09.22


* தமிழகத்தில் ஃப்ளூ காய்ச்சல் பாதிப்பைத் தொடர்ந்து டெங்கு காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்துள்ளது.


* தமிழகத்தில் இன்று 1000 இடங்களில் காய்ச்சல் பரிசோதனை சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


* மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி அருகே தி.குன்னத்தூரில் 500 ஆண்டு பழமையான வளரி வீரன் சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது.


* அங்கீகரிக்கப்படாத மனைகளை பத்திரப் பதிவு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


* சியாச்சின் பனிமலையில் இணைய சேவை - செயல்பாட்டுக்கு கொண்டு வந்தது ராணுவம்.


* மறைந்த இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல், விண்ட்சர் கேஸ்டில் பகுதியில் உள்ள தேவாலய வளாகத்தில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உட்பட 2,000 வெளிநாட்டு தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்றனர்.


* உலக மல்யுத்த போட்டியில் பஜ்ரங் பூனியா 4-வது முறையாக பதக்கம் வென்று சாதனை.


* ஐசிசி கொண்டு வந்த அதிரடி மாற்றம் - மன்கட் ரன் அவுட் முறைக்கு அனுமதி.


Today's Headlines


* In Tamil Nadu, the impact of dengue fever is increasing after the impact of flu. In the last one month alone, the number of cases has doubled.


 * Medical Department Minister M. Subramanian has said that special fever test camps will be conducted at 1000 places in Tamil Nadu today.


 * A 500-year-old Valari Veeran sculpture has been found at T.Kunnathur near T.Kallupatti in Madurai district.


 * The High Court has ordered that action should be taken against the officials who registered the deeds of unauthorized plots.


 * Army launches internet service in Siachen glacier


 * The body of the late Queen Elizabeth II of England was laid to rest with full state honors in the grounds of Windsor Castle. 2,000 foreign leaders and representatives including US President Joe Biden and Indian President Draupadi Murmu participated in the funeral.


 * Bajrang Punia won a medal for the 4th time in the World Wrestling Championship.


 * A drastic change brought by the ICC - Mancut run out system is allowed.




இன்றைய (21-09-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 



மேஷம்

செப்டம்பர் 21, 2022



வாகனம் தொடர்பான பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். மனதில் புதுவிதமான மாற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான விஷயங்களில் ஆலோசனைகள் கிடைக்கும். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




அஸ்வினி : ஆதாயம் உண்டாகும். 


பரணி : எண்ணங்கள் அதிகரிக்கும்.


கிருத்திகை : முடிவு கிடைக்கும். 

---------------------------------------




ரிஷபம்

செப்டம்பர் 21, 2022



திறமைக்கு ஏற்ப பாராட்டுகளும், அங்கீகாரங்களும் கிடைக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். எழுத்து சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோக பணிகளில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் 




கிருத்திகை : அங்கீகாரங்கள் கிடைக்கும்.


ரோகிணி : தீர்வு காண்பீர்கள். 


மிருகசீரிஷம் : வாய்ப்புகள் உண்டாகும்.

---------------------------------------




மிதுனம்

செப்டம்பர் 21, 2022



தனவரவை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். சமூகம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்களும், சாதகமான வாய்ப்புகளும் உண்டாகும். காப்பீடு தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்பாராத உதவி கிடைக்கப் பெறுவீர்கள். நிர்வாகம் சார்ந்த பணிகளில் அனுசரித்து செல்வதன் மூலம் ஒத்துழைப்பு மேம்படும். அறிமுகம் கிடைக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




மிருகசீரிஷம் : சிந்தனைகள் அதிகரிக்கும். 


திருவாதிரை : சாதகமான நாள்.


புனர்பூசம் : உதவி கிடைக்கும்.

---------------------------------------




கடகம்

செப்டம்பர் 21, 2022



எதிர்காலம் சார்ந்த முதலீடுகள் பற்றிய சிந்தனைகள் ஏற்படும். உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். நண்பர்களின் உதவி கிடைக்கப் பெறுவீர்கள். உயர் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் சிலருக்கு சாதகமாக அமையும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். நலம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்




புனர்பூசம் : அனுகூலமான நாள்.


பூசம் : உதவி கிடைக்கும்.


ஆயில்யம் : குழப்பம் நீங்கும்.

---------------------------------------




சிம்மம்

செப்டம்பர் 21, 2022



எதிர்பார்த்த கடன் சார்ந்த உதவி சிலருக்கு சாதகமாக அமையும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு புதுமையான வாய்ப்புகள் கிடைக்கும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். அரசு சார்ந்த பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். உடல் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் சற்று விழிப்புணர்வுடன் செயல்படவும். வெற்றி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்




மகம் : உதவி கிடைக்கும்.


பூரம் : புரிதல் உண்டாகும். 


உத்திரம் : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------




கன்னி

செப்டம்பர் 21, 2022



சொத்துக்களை விற்பது மற்றும் வாங்குவது தொடர்பான விஷயங்களில் ஆதாயம் மேம்படும். குடும்ப பெரியோர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக நிறைவுபெறும். பணிகளில் உள்ள சில நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். ஆதாயம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்




உத்திரம் : ஆதாயம் மேம்படும். 


அஸ்தம் : வாய்ப்புகள் உண்டாகும். 


சித்திரை : நுணுக்கங்களை அறிவீர்கள்.

---------------------------------------




துலாம்

செப்டம்பர் 21, 2022



சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். உறவினர்களை பற்றிய புரிதல் மேம்படும். மனை சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வாகன பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். பக்தி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்




சித்திரை : வாய்ப்புகள் உண்டாகும். 


சுவாதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


விசாகம் : அனுபவம் ஏற்படும்.

---------------------------------------




விருச்சிகம்

செப்டம்பர் 21, 2022



உறவினர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு மேம்படும். வெளியூர் பயணங்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்




விசாகம் : அனுசரித்து செல்லவும்.


அனுஷம் : ஆதாயம் அடைவீர்கள். 


கேட்டை : எதிர்ப்புகளை அறிவீர்கள்.

---------------------------------------




தனுசு

செப்டம்பர் 21, 2022



உங்களின் மீது மறைமுகமான விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடுவதை குறைத்து கொள்ளவும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனத்துடன் செயல்படவும். உடனிருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். எண்ணிய சில பணிகளின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். உரையாடும் பொழுது பேச்சுக்களில் கவனம் வேண்டும். உடல் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் விழிப்புணர்வுடன் செயல்படவும். கனிவு வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சாம்பல்




மூலம் : விமர்சனங்கள் நீங்கும். 


பூராடம் : கவனத்துடன் செயல்படவும்.


உத்திராடம் : அனுபவம் உண்டாகும்.

---------------------------------------




மகரம்

செப்டம்பர் 21, 2022



வாழ்க்கை துணைவருடன் சிறு தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் சந்திப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். பேச்சு வன்மையின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். மகிழ்ச்சியான சிந்தனைகளின் மூலம் மனதில் புத்துணர்ச்சி பெறுவீர்கள். தனவரவின் மூலம் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களால் கலகலப்பான சூழல் அமையும். தடைகள் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்




உத்திராடம் : நம்பிக்கை ஏற்படும்.


திருவோணம் : புத்துணர்ச்சி பெறுவீர்கள்.


அவிட்டம் : கலகலப்பான நாள்.

---------------------------------------




கும்பம்

செப்டம்பர் 21, 2022



கோபத்தை குறைத்து கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது. போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களால் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். மனதில் விலகி சென்றவர்களை பற்றிய சிந்தனைகள் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும். ஓய்வு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




அவிட்டம் : முடிவு கிடைக்கும்.


சதயம் : சிந்தனைகள் மேம்படும்.


பூரட்டாதி : ஏற்ற, இறக்கமான நாள்.

---------------------------------------




மீனம்

செப்டம்பர் 21, 2022



வியாபாரம் சார்ந்த பணிகளில் நிதானத்துடன் செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் மந்தத்தன்மை ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறைவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. உலகியல் வாழ்க்கையை பற்றி புதுவிதமான கண்ணோட்டம் ஏற்படும். வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். மதிப்பு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல்




பூரட்டாதி : நிதானத்துடன் செயல்படவும்.


உத்திரட்டாதி : பிரச்சனைகள் குறையும்.


ரேவதி : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------




Today's (21-09-2022) Wordle Answer...

                                                                           

Wordle விளையாடும் முறை: 

ஒவ்வொரு நாளும், ஒரு ஐந்தெழுத்து சொல் தேர்ந்தெடுக்கப்படுகிறது, அதை விளையாடுவோர் ஆறு முயற்சிகளுக்குள் யூகிக்க வேண்டும். ஒவ்வொரு யூகத்திற்கும் பிறகு, ஒவ்வொரு எழுத்தும் பச்சை, மஞ்சள் அல்லது சாம்பல் என குறிக்கப்படும்.

பச்சை என்பது எழுத்து சரியானது மற்றும் சரியான இடத்தில் உள்ளது என்றும்,
 
மஞ்சள் என்பது பதிலில் உள்ளது ஆனால் சரியான நிலையில் இல்லை என்றும், 

சாம்பல் என்பது அது விடையில் இல்லை என்பதைக் குறிக்கிறது.  

 விளையாட்டில் "ஹார்ட் மோட்" விருப்பம் உள்ளது, இதற்கு வீரர்கள் பச்சை மற்றும் மஞ்சள் என குறிக்கப்பட்ட எழுத்துக்களை அடுத்தடுத்த யூகங்களில் சேர்க்க வேண்டும்.

தினசரி சொல் அனைவருக்கும் ஒன்றுதான்.

 கருத்தியல் மற்றும் ஸ்டைலிஸ்டிக் ரீதியாக, இந்த விளையாட்டு 1955 பேனா மற்றும் பேப்பர் கேம் ஜோட்டோ மற்றும் கேம் ஷோ ஃபிரான்சைஸ் லிங்கோ போன்றது.

 இந்த விளையாட்டானது இரண்டு-வீரர் பலகை விளையாட்டான மாஸ்டர்மைண்ட்-இதில் வார்த்தை யூகிக்கும் மாறுபாடு கொண்ட வேர்ட் மாஸ்டர்மைன்ட்  மற்றும் புல்ஸ் அண்ட் கவ்ஸ் விளையாட்டு, குறிப்பிட்ட எழுத்துக்களை வேர்ட்லே (Wordle) உறுதிசெய்கிறது. ஒவ்வொரு தினசரி விளையாட்டும் தோராயமாக வரிசைப்படுத்தப்பட்ட 2,315 சொற்களின் பட்டியலிலிருந்து ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறது (ஆங்கில மொழியில் உள்ள தோராயமான 12,000 ஐந்தெழுத்து வார்த்தைகளில்). 


Wordle Game Website Link: 



Today's (21-09-2022) Wordle Answer: RECAP










 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. Released to set up new fire stations at 7 places

 7 இடங்களில் புதிய தீயணைப்பு நிலையங்கள் அமைக்க அரசாணை வெளியீடு Promulgation of decree to set up new fire stations at 7 places ▪️ கருமத்தம்பட...