கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
30.09.2022 அன்று நடைபெறும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்திலும், அதனைத் தொடர்ந்து 02.10.2022 கிராம சபா கூட்டத்திலும் பங்கேற்கும் முதன்மைக் கருத்தாளர்களுக்கான பங்கும் பொறுப்பும் - ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்குனரின் செயல்முறைகள் (Role and Responsibilities for Key Resource Persons to participate in School Management Committee Meeting on 30.09.2022 followed by Gram Sabha Meeting on 02.10.2022 – Proceedings of Samagra Shiksha State Project Director) ந.க.எண்: 2223/ C7/ பமேகு/ ஒபக/ 2022, நாள்: 22-06-2022...
எண்ணும் எழுத்தும் பயிற்சி தேதிகள் மாற்றம் (EEM-2 - Block level Date under EEM Phase-2 is postponed to 10.10.2022 to 12.10.2022 from 06.10.2022 to 08.10.2022)...
Kind Attn : All Faculty pertaining to EEM-2 - Block level Date under EEM Phase-2 is postponed to 10.10.2022 to 12.10.2022 from 06.10.2022 to 08.10.2022. It should be informed to concerned Block Level venue without fail. Proceedings of Director for change is expected.
(கனிவான கவனத்திற்கு: எண்ணும் எழுத்தும்-2 தொடர்பான அனைத்து ஆசிரியர்களுக்கும் - EEM கட்டம்-2 இன் 06.10.2022 முதல் 08.10.2022 வரை வழங்கப்பட இருந்த வட்டார அளவிலான பயிற்சி தேதி 10.10.2022 முதல் 12.10.2022 வரை ஒத்திவைக்கப்பட்டது. இது சம்மந்தப்பட்ட தகவலை வட்டார அளவிலான அனைவருக்கும் தவறாமல் தெரிவிக்க வேண்டும். மாற்றத்திற்கான இயக்குநரின் செயல்முறைகள் எதிர்பார்க்கப்படுகின்றது)
உடற்கல்வி ஆசிரியர்கள் / இயக்குநர்களுக்கு ஜூடோ, வாள் விளையாட்டு, குத்துச்சண்டை, டேக்வாண்டோ, ஸ்குவாஷ், ஜிம்னாஸ்டிக்ஸ், கடற்கரை கையுந்துபந்து, வளையபந்து, சுண்டாட்டம், சிலம்பம் போன்ற 10 வகையான புதிய விளையாட்டுப் போட்டிகளில் உண்டு உறைவிட புத்தாக்கப் பயிற்சி (Physical Education Teachers/ Directors have Residential Training in 10 new sports competitions like Judo, Fencing, Boxing, Taekwondo, Squash, Gymnastics, Beach Volleyball, Tennikoit, Carrom, Silambam)...
சிகரெட் பிடித்து மாணவி முகத்தில் புகைவிட்ட மாணவனைக் கண்டித்த 4 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதைக் கண்டித்து காலாண்டுத் தேர்வைப் புறக்கணித்து மாணவர்கள், பெற்றோர் மறியல் (Students and Parents boycotted the quarterly exam protesting the action taken against the 4 teachers who reprimanded the student for holding a cigarette and smoking it in the face of the girl student)...
ஆரணி அருகே ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டத்தை கண்டித்து மாணவர்கள் மறியல்...
ஆரணி அருகே சேவூர் மேல்நிலைப்பள்ளியில் 4 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டத்தை கண்டித்து மாணவர்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர். காலாண்டு தேர்வை புறக்கணித்துவிட்டு 300 மாணவர்கள், பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிகரெட் பிடித்து மாணவி முகத்தில் புகை விட்டதாக 12ம் வகுப்பு மாணவனை ஆசிரியர் கண்டித்ததாக கூறப்படுகிறது. மாணவனை கண்டித்த ஆசிரியர் உள்பட 2 பேரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்தார்.
சேவூர் அரசு பள்ளியை சேர்ந்த மேலும் 2 ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். 4 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
EMIS வலைதளத்தில் School Login-ல் Health & Wellbeing - பதிவு செய்வதற்காக மாணவிகளுக்கு பெண் ஆசிரியர்களையும் , மாணவர்களுக்கு ஆண் ஆசிரியர்களையும் Assign செய்யும் முறை...
அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர், மேற்பார்வையாளர்கள்(பொ) மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் கவனத்திற்கு...
EMIS வலைதளத்தில் School Login-ல் Health & Wellbeing -பதிவு செய்வதற்காக ஆசிரியர்கள் விவரங்களை பதிவேற்றம் செய்யும் வசதி உள்ளது. இதனை பயன்படுத்தி மாணவிகளுக்கு பெண் ஆசிரியர்களையும் , மாணவர்களுக்கு ஆண் ஆசிரியர்களையும் Assign செய்ய வேண்டும்.
Assign செய்யப்படும் ஆசிரியர்கள் மூலம் மட்டுமே TNSED Mobile App -மூலம் Health & Wellbeing -பதிவு செய்ய முடியும். எனவே இப்பணியினை விரைவில் முடிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
Assign செய்யும் முறை
EMIS School Login -> Select Student option
• Student Details
• Select Health & Wellbeing
• Select Class & Section
• Select Assign Student
• Click Assign Button
--முதன்மைக் கல்வி அலுவலர்...
நிருவாக சீரமைப்பு காரணமாக புதிய மாவட்டக் கல்வி அலுவலகம் (இடைநிலைக் கல்வி, தொடக்கக் கல்வி மற்றும் தனியார் பள்ளிகள்) செயல்பட அனுமதிக்கப்பட்டது தொடர்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் (Proceedings of the Joint Director of School Education regarding the new District Education Office (Secondary Education, Primary Education and Private Schools) being allowed to function due to administrative restructuring) ந.க.எண். 49138/அ3/இ1/2022, நாள்.26.09.2022...
தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரக இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள், சென்னை -6
ந.க.எண். 49138/அ3/இ1/2022, நாள்.26.09.2022
பொருள்: பள்ளிக்கல்வி - நிருவாக சீரமைப்பு - புதிய மாவட்டக் கல்வி அலுவலகம் (இடைநிலைக் கல்வி, தொடக்கக் கல்வி மற்றும் தனியார் பள்ளிகள்) செயல்பட அனுமதிக்கப்பட்டது – தொடர் நடவடிக்கை மேற்கொள்ளல் - சார்பு.
பார்வை: அரசாணை எண்.101, ப.க.(வ.செ.) பள்ளிக் கல்வித்துறை, நாள்.18.05.2018
அரசாணை எண்.151, பள்ளிக்கல்வி (SE1(1), துறை, நாள்.09.09.2022
----
பள்ளிக்கல்வித்துறையின்கீழ் செயல்படும் அனைத்துப் பள்ளிகளையும் ஆய்வு செய்யவும் அரசின் நலத்திட்டங்களைச் சரியான முறையில் சென்றடைகிறதா என்பதை முறையாகக் கண்காணிக்க ஏதுவாக மாவட்டக் கல்வி அலுவலகங்களை (இடைநிலைக் கல்வி, தொடக்கக் கல்வி மற்றும் தனியார் பள்ளிகள்) எனப் பிரிக்கப்பட்டும் பணிப்பகிர்மானம் செய்தும் பார்வை (2) இல் கண்டவாறு ஆணை வெளியிடப்பட்டது.
அவ்வரசாணையில், புதியதாக 32 மாவட்டக் கல்வி அலுவலகப் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு ஆணை வெளியிடப்பட்டது.
மேலும் 16 மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பணியிடங்கள் மற்றும் 86 பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் பணியிடங்களை முறையான கண்காணிப்பாளர் பணியிட மாற்றம் செய்தும் அப்பணியிடங்களை பணிநிரவல் மூலம் பூர்த்தி செய்யவும் அனுமதித்து ஆணை பிறப்பிக்கப்பட்டது.
மேற்கண்ட அடிப்படையில் பட்டியலில் கண்டுள்ளவாறு அனைத்து அலுவலகங்களுக்கும் சீரான எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர்களை நிர்ணயம் செய்து ஆணை பிறப்பிக்கப்படுவதுடன் அவற்றின் அடிப்படையில் தொடர் நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு:- பணியாளர் நிர்ணய அறிக்கைப் பட்டியல்
ஒம்/- முனைவர். பூ.ஆ. நரேஷ்,
இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி)
பெறுநர்
அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் (மின்னஞ்சல் வழியாக)
அனைத்து மாவட்டக்கல்விஅலுவலர்கள் (மின்னஞ்சல் வழியாக)
நகல்:-
மாநில திட்ட இயக்குநர் , ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, சென்னை - 6. (தங்கள் அலுவலகப் பணியாளர்கள் சார்பான விவரம் அளிக்கும் பொட்டு பணிந்தனுப்படுகிறது)
உறுப்பினர் செயலர், ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை 6.
இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்ககம், சென்னை 6.
இயக்குநர், மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம், சென்னை 6.
இயக்குநர், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், சென்னை -6
இயக்குநர், பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம், சென்னை -6.
முதன்மை உடற்கல்வி ஆய்வாளர், முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் அலுவலகம், சென்னை -6
இவ்வியக்கக அ2 பிரிவிற்கு
தகவல் பலகைக்கு
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 20-11-2024
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 20-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம் :தீ ந...