கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (28-09-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



இன்றைய (28-09-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

செப்டம்பர் 28, 2022



மனதில் நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். செய்கின்ற செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். நண்பர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபாரம் தொடர்பான பணிகளில் புதிய யுக்திகளை கையாளுவீர்கள். வெளிவட்டாரங்களில் புதிய நபர்களின் அறிமுகமும், புதிய வாய்ப்பும் கிடைக்கும். கூட்டு வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




அஸ்வினி : காரியசித்தி உண்டாகும்.


பரணி : ஆதரவான நாள்.


கிருத்திகை : லாபம் அதிகரிக்கும். 

---------------------------------------




ரிஷபம்

செப்டம்பர் 28, 2022



உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனத்துடன் செயல்படவும். உலகியல் வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் உண்டாகும். வழக்கு சார்ந்த பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். நெருக்கமானவர்களின் மூலம் புதுவிதமான வாய்ப்புகள் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




கிருத்திகை : முன்னேற்றம் உண்டாகும்.


ரோகிணி : கவனத்துடன் செயல்படவும்.


மிருகசீரிஷம் : இழுபறிகள் குறையும். 

---------------------------------------




மிதுனம்

செப்டம்பர் 28, 2022



மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். சகோதரர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். வாழ்க்கை துணைவரின் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். வெளிவட்டாரங்களில் மதிப்பு மேம்படும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். வெற்றி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




மிருகசீரிஷம் : ஆதரவு கிடைக்கும். 


திருவாதிரை : மகிழ்ச்சியான நாள். 


புனர்பூசம் : நினைவாற்றல் மேம்படும். 

---------------------------------------




கடகம்

செப்டம்பர் 28, 2022



புத்திக்கூர்மையான செயல்பாடுகளால் பாராட்டுகளை பெறுவீர்கள். புதிய வாகனம் மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். உறவினர்களின் வழியில் ஆதரவான சூழல் அமையும். மாணவர்களுக்கு கல்வி சார்ந்த பணிகளில் திடீர் திருப்பம் உண்டாகும். சுபகாரியம் சார்ந்த எண்ணங்கள் ஈடேறும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுகம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்




புனர்பூசம் : பாராட்டுகளை பெறுவீர்கள்.


பூசம் : ஆதரவான நாள்.


ஆயில்யம் : எண்ணங்கள் ஈடேறும். 

---------------------------------------




சிம்மம்

செப்டம்பர் 28, 2022



இளைய சகோதரர்களின் வழியில் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். புதிய முயற்சிகளுக்கு ஏற்ப உயர்வு உண்டாகும். சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு ஆதரவு கிடைக்கும். கலை நுட்பமான செயல்பாடுகளில் ஈடுபாடு அதிகரிக்கும். மேன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்




மகம் : அனுகூலமான நாள்.


பூரம் : மாற்றம் ஏற்படும்.


உத்திரம் : ஈடுபாடு அதிகரிக்கும்.

---------------------------------------




கன்னி

செப்டம்பர் 28, 2022



வியாபாரம் சார்ந்த பணிகளில் மாற்றமான சூழல் அமையும். குடும்ப விவகாரங்களை மற்றவர்களிடம் பகிர்வதை குறைத்து கொள்ளவும். தனவரவு தொடர்பான விஷயங்களில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். இயந்திரம் சார்ந்த பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். எதிர்காலம் சார்ந்த முதலீடுகள் மேம்படும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் நட்பு வட்டம் விரிவடையும். நேர்மையான நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் 




உத்திரம் : மாற்றமான நாள்.


அஸ்தம் : முதலீடுகள் மேம்படும்.


சித்திரை : அறிமுகம் கிடைக்கும்.

---------------------------------------




துலாம்

செப்டம்பர் 28, 2022



மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். உடல் தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் மேம்படும். வழக்கு சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் நிதானத்துடன் செயல்படவும். எதிர்பாராத சிலரின் சந்திப்பு மனதளவில் மாற்றத்தை ஏற்படுத்தும். விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்க முடியும். முயற்சிகள் மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம் 




சித்திரை : விருப்பம் நிறைவேறும்.


சுவாதி : நிதானத்துடன் செயல்படவும்.


விசாகம் : மாற்றம் ஏற்படும்.

---------------------------------------




விருச்சிகம்

செப்டம்பர் 28, 2022



செயல்பாடுகளில் சுதந்திரத்தன்மை வெளிப்படும். உலகியல் நிகழ்வுகளின் மூலம் மனதில் மாற்றமும், பேச்சுக்களில் அனுபவமும் வெளிப்படும். மாமன் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் அமையும். முதலீடுகள் தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வும், சுறுசுறுப்பின்மையும் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்




விசாகம் : சுதந்திரத்தன்மை வெளிப்படும்.


அனுஷம் : ஆதரவான நாள்.


கேட்டை : சோர்வு உண்டாகும்.

---------------------------------------




தனுசு

செப்டம்பர் 28, 2022



எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். வியாபார பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு நீங்கும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு மேம்படும். மனதில் மனை விருத்தி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மறைமுகமாக இருந்துவந்த தடைகளை அறிந்து கொள்வீர்கள். அசதிகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




மூலம் : மாற்றம் உண்டாகும்.


பூராடம் : செல்வாக்கு மேம்படும். 


உத்திராடம் : தடைகளை அறிவீர்கள்.

---------------------------------------




மகரம்

செப்டம்பர் 28, 2022



குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோக பணிகளில் இருப்பவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த காலதாமதம் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். விவசாய பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். துணிவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் 




உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.


திருவோணம் : காலதாமதம் நீங்கும்.


அவிட்டம் : மேன்மையான நாள்.

---------------------------------------




கும்பம்

செப்டம்பர் 28, 2022



நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். கண் சார்ந்த பிரச்சனைகள் குறையும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்களின் மூலம் நன்மை ஏற்படும். நண்பர்களுடன் கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். குழப்பம் நீங்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




அவிட்டம் : பிரச்சனைகள் குறையும்.


சதயம் : நன்மை ஏற்படும்.


பூரட்டாதி : ஒத்துழைப்பு கிடைக்கும். 

---------------------------------------




மீனம்

செப்டம்பர் 28, 2022



பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் அமையும். உணவு சார்ந்த விஷயங்களில் சற்று கவனத்துடன் செயல்படவும். பயனற்ற விவாதங்களை குறைத்து கொள்ளவும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு மாற்றம் ஏற்படும். விவசாயம் தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்படவும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை




பூரட்டாதி : ஏற்ற, இறக்கமான நாள்.


உத்திரட்டாதி : விவாதங்களை தவிர்க்கவும்.


ரேவதி : மாற்றம் ஏற்படும்.

---------------------------------------


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.09.2022 - School Morning Prayer Activities...



 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.09.2022 - School Morning Prayer Activities...


 திருக்குறள் :


பால்: அறத்துப்பால்


அதிகாரம்/Chapter: கடவுள் வாழ்த்து / The Praise of God 


குறள் 5:

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.


 விளக்கம்:

கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.


பழமொழி :

Many hands make light work. 


பல கரங்கள் பணியை இலகுவாக்கும். 


இரண்டொழுக்க பண்புகள் :


1. நான் வலது கையால் செய்யும் உதவி என் இடது கைக்கு கூட தெரிய கூடாது. 


2. பிறருக்கு தெரியும் படி செய்தால் அது உதவி அல்ல விளம்பரம். கடவுளுக்கு பிரியம் இருக்காது . 


பொன்மொழி :


நல்ல வாழ்க்கை நடத்துவதற்கு நல்ல பண்புகளை முறையாகப் பெற்றிருக்க வேண்டும்.


பொது அறிவு :


1. விமானப்படை நாள் எது? 


அக்டோபர் 8. 


 2. உலகில் கடற்கரையே இல்லாத நாடுகள் எத்தனை? 


 26.


English words & meanings :


wind·shield - . A shield placed to protect an object from the wind. Noun. காற்றுத்தடுப்பான். பெயர்ச் சொல் 

ஆரோக்ய வாழ்வு :


வறுத்த கொண்டைக்கடலையில் அதிக அளவிலான நார்ச்சத்துக்கள் இருக்கின்றன. நார்ச்சத்துக்களை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்வதன் மூலமாக ஜீரண சக்தி அதிகரிப்பதுடன் மெட்டபாலிசமும் அதிகரிக்கும்.

NMMS Q 69:


கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி என்னும் பகுதியில் உலகின் மிகப்பெரிய ___________ உள்ளது. 


விடை : காற்றாலை நிலையம்


செப்டம்பர் 28


பகத் சிங் அவர்களின் பிறந்தநாள்






பகத் சிங் (Bhagat Singh, செப்டம்பர் 28, 1907[1] – மார்ச் 23, 1931[2][3]) இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரரும் இந்திய விடுதலை இயக்கத்தில் ஒரு முக்கிய புரட்சியாளரும் ஆவார். இக்காரணத்துக்காக இவர் சாஹீது பகத் சிங் என அழைக்கப்பட்டார் (சாஹீது என்பது மாவீரர் எனப் பொருள்படும்). இவர் இந்தியாவின் முதலாவது மார்க்சியவாதி எனவும் சில வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படுவதுண்டு. இந்தியாவின் பிரித்தானிய ஆட்சிக்கெதிராகப் போராடிய குடும்பமொன்றில் பிறந்த பகத் சிங் இளம் வயதிலேயே ஐரோப்பிய புரட்சி இயக்கங்களைப் படிக்க ஆரம்பித்து பொதுவுடமைக் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டார்.[5] பல புரட்சி இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். விரைவிலேயே இந்துஸ்தான் குடியரசு அமைப்பு என்ற புரட்சி அமைப்பின் தலைவர்களில் ஒருவரானார். 63 நாட்கள் சிறைவாசத்தில் இருந்தபோது இந்தியக் கைதிகளுக்கு ஏனைய பிரித்தானியக் கைதிகளுடன் சம உரிமை பெறுவதற்காக உண்ணாநோன்பு இருந்ததில் இவரது செல்வாக்கு மக்களிடையே அதிகரித்தது. முதுபெரும் காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதி ராய் என்பவரின் இறப்புக்குக் காரணமாயிருந்த காவலதிகாரியைச் சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக பகத் சிங் 24வது அகவையில் தூக்கிலிடப்பட்டார்.

நீதிக்கதை


மனிதநேயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு


1893-ஆம் ஆண்டு அமெரிக்காவில், சிகாகோ நகரத்தில் சர்வ சமயப் பேரவை நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு சுவாமி விவேகானந்தர் இந்துமதம் பற்றிச் சொற்பொழிவுகள் செய்தார். அவர் அமெரிக்கா செல்வதற்கு முன்பு, இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்றார். அப்போது அவர் பிரபலமாகவில்லை. அந்த நிலையில் ஒரு சமயம் விவேகானந்தர் ஓர் ஊரில் தங்கினார். அவரைப் பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தார்கள். அவர் அவர்களிடம் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார். 


இந்த நிகழ்ச்சியைப் பற்றிப் பிற்காலத்தில் சுவாமி விவேகானந்தர் இவ்விதம் கூறியிருக்கிறார் நம்புவதற்கே உங்களுக்குக் கடினமாகத்தான் இருக்கும். ஆனால் மூன்று நாள்கள் இரவும், பகலும் எனக்கு ஒரு விநாடிகூட ஓய்வே கிடைக்கவில்லை. தூக்கம், உணவு எவையும் அறவே எனக்கு இல்லாமல் போய்விட்டன. யாரும் அதைப் பற்றிக் கவலைப்படவும் இல்லை. மக்கள் வந்துகொண்டே இருந்தார்கள். நானும் அவர்களுடன் பேசிக்கொண்டே இருந்தேன். மூன்றாம் நாள் இரவு வந்தது. அநேகமாக எல்லோரும் அங்கிருந்து சென்றுவிட்டார்கள். நான் மட்டும் தனியாக இருந்தேன். அப்போது தாழ்ந்த சாதியைச் சேர்ந்த, செருப்புத் தைக்கும் தொழிலாளி ஒருவன் என்னிடம் வந்தான்.


அவன் என்னிடம், சுவாமிஜி! நீங்கள் மூன்று நாள்களாக உணவு, தூக்கம் எதுவுமே இல்லாமல் பேசிக்கொண்டிருந்ததை நான் கவனித்தேன். அதனால் என் மனம் வேதனையில் துடிக்கிறது. பசியும், களைப்பும் உங்களுக்கும் இருக்கத்தானே செய்யும்! மூன்று நாள்களாக ஒரு டம்ளர் தண்ணீர்கூட நீங்கள் குடிக்கவில்லையே! என்று பரிவுடன் கூறினான். அவனது அன்பு என் மனத்தை நெகிழச் செய்தது. 


நான் அவனிடம், சாப்பிடுவதற்கு நீ எனக்கு ஏதாவது தருகிறாயா? என்று கேட்டேன். அதற்கு அவன், நீங்கள் சாப்பிடுவதற்கு ஏதாவது தர வேண்டும் என்றுதான் என் மனம் ஏங்குகிறது. ஆனால் என்ன செய்வேன்? நான் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவன். நான் சப்பாத்தி செய்து உங்களுக்குத் தர முடியாது. கோதுமை மாவும், மற்ற பொருள்களும் நான் உங்களுக்குக் கொண்டுவந்து தருகிறேன். நீங்களே சமைத்துச் சாப்பிடுங்கள் என்று கேட்டுக்கொண்டான். நான் அவனிடம், பரவாயில்லை. நீயே சமையல் செய்துகொண்டு வா. நான் சாப்பிடுகிறேன் என்றேன். இவ்விதம் நான் கூறியதைக் கேட்டு அவன் நடுங்கிவிட்டான்.


காரணம், அவன் ஒரு துறவிக்கு உணவளித்தது மற்றவர்களுக்குத் தெரிந்தால் தண்டிக்கப்படுவான். ஏன், நாடு கடத்தவும் செய்வார்கள். ஆனால் நான் அவனைச் சமாதானப்படுத்தி, உனக்குத் தண்டனை கிடைக்காமல் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று உறுதியளித்தேன். அவன் எனது உறுதியை அவ்வளவாக நம்பவில்லை. இருந்தாலும் அவனுக்கு என்மீதிருந்த அன்பு காரணமாகச் சப்பாத்தி செய்து கொண்டு வந்தான். அதை நானும் சாப்பிட்டேன். தேவர்களுக்குத் தலைவனான தேவேந்திரன் ஒரு தங்கக்குவளையில் தேவாமிர்தத்தை எனக்குத் தந்திருந்தால் அதுகூட அப்போது அவ்வளவு ருசியாக இருந்திருக்காது என்றே எனக்குத் தோன்றியது. 


என் இதயம் அன்பாலும், நன்றியாலும் நிறைந்தது. என் கண்கள் கண்ணீரைப் பொழிந்தன. இதற்கிடையில், விவேகானந்தர் தாழ்ந்த சாதியைச் சேர்ந்த ஒருவன் கொடுத்த உணவைச் சாப்பிடுவதைப் பார்த்த உயர் சாதியினர் சிலர் கோபம் கொண்டார்கள். அதை அவர்கள் விவேகானந்தரிடமே தெரிவித்தார்கள். அவர்கள் கூறியதைப் பொறுமையாகக் கேட்டார் விவேகானந்தர். பிறகு அவர்களைப் பார்த்துக் கூறினார் நீங்கள் என்னை மூன்று நாள்கள் தொடர்ந்து பேச வைத்தீர்கள்!


இடையில் நான் ஏதாவது சாப்பிட்டேனா, ஓய்வெடுத்தேனா என்று ஒருமுறைகூட நீங்கள் யாரும் கவலைப்படவில்லை. நீங்கள் பெரிய மனிதர்கள், உயர்ந்த சாதியினர்! ஆனால் இங்கே பாருங்கள், தனக்குத் தண்டனை கிடைக்கும்! என்று தெரிந்திருந்தும், மனிதநேயம் என்ற ஒரே காரணத்தால் அவன் எனக்கு உணவு தந்தான். அவனைத் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவன் என்று நீங்கள் ஒதுக்குகிறீர்களே! இது உங்களுக்கு வெட்கமாக இல்லையா? சில நாட்களில் விவேகானந்தருக்கு கேத்ரி மன்னருடன் நல்ல பழக்கம் ஏற்பட்டது. 


அப்போது விவேகானந்தர், செருப்புத்தைக்கும் தொழிலாளி தனக்கு உதவியதைப் பற்றி மன்னரிடம் தெரிவித்தார். எனவே மன்னர், உடனடியாகச் செருப்புத்தைக்கும் தொழிலாளியைத் தன் அரண்மனைக்கு வரவழைத்தார். தொழிலாளி, என்னை மன்னர் அழைத்திருக்கிறாரே! என் தவறுக்கு என்ன தண்டனை கிடைக்கப் போகிறதோ! என்று பயந்துகொண்டே வந்தான். ஆனால் கேத்ரி மன்னர் அவனுடைய பயத்தைப் போக்கியதுடன், அவனுடைய செயலைப் புகழ்ந்து பாராட்டினார். மேலும் அரசர் அவனுக்குப் பொன்னும் பொருளும் தாராளமாகக் கொடுத்தனுப்பினார்.


இன்றைய செய்திகள்


28.09.22


* ஃப்ரீ ஃபயரின் ரத்தம் தெறிக்கும் காட்சிகள், குழந்தைகளிடம் வன்முறையைத் தூண்டுகிறது: உயர் நீதிமன்றம் கருத்து.


* இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் வழித்தடங்களை நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு: மேலாண் இயக்குநர் தகவல்.


* பொறியியல் படிப்புக்கான 2-ம் சுற்று கலந்தாய்வு: விருப்பப் பதிவுக்கான அவகாசம் நேற்றுடன் நிறைவு.


* தமிழகத்தில் டெல்டா உள்ளிட்ட 23 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.


* இந்திய நீதித்துறையில் ஒரு மைல்கல்: சுப்ரீம் கோர்ட்டு வழக்கு விசாரணை நேற்று முதல் நேரடி ஒளிபரப்பு.


* உள்நாட்டு தேவைக்கும், ஏற்றுமதிக்கும் தேஜாஸ் போர் விமானங்களின் உற்பத்தி அதிகரிப்பு - பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தகவல்.


* 36-வது தேசிய விளையாட்டு போட்டிகள் குஜராத்தில்  நேற்று தொடங்கியது.


* டெல் அவிவ் ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரில் ஆஸ்திரிய வீரர் டொமினிக் தீம் 2-ம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.


* 20 ஓவர் கிரிக்கெட் தரவரிசை: இந்திய அணி முதலிடத்தில் நீடிப்பு.


Today's Headlines


* Free Fire's gory scenes incite violence in children: High Court opined


 * 2nd Round Counseling for Engineering Courses: Deadline for Optional Registration ends yesterday.


 * Chennai: Heavy rains are likely to continue in 23 districts including Delta today and tomorrow in Tamil Nadu, Meteorological Department said.


*  Increase in production of Tejas fighter jets for domestic demand and export - Defence officials inform.


* The 36th National Games started yesterday in Gujarat.


 * Austrian player Dominic Thiem has advanced to the 2nd round of the Tel Aviv Open ATP Tennis Series.


 * 20-over cricket rankings: Indian team continues at the top.



முதல் பருவத் தேர்வு - ஐந்தாம் வகுப்பு - தமிழ் தேர்வுக்கான விடைகள் (Term 1 - 5th Standard - Tamil Exam Answer Key)...

   



>>>  முதல் பருவத் தேர்வு - ஐந்தாம் வகுப்பு - தமிழ் தேர்வுக்கான விடைகள் (Term 1 - 5th Standard - Tamil Exam Answer Key)...





>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




முதல் பருவத் தேர்வு - ஐந்தாம் வகுப்பு - ஆங்கிலம் தேர்வுக்கான விடைகள் (Term 1 - 5th Standard - English Exam Answer Key)...

  



>>>  முதல் பருவத் தேர்வு - ஐந்தாம் வகுப்பு - ஆங்கிலம் தேர்வுக்கான விடைகள் (Term 1 - 5th Standard - English Exam Answer Key)...





>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




முதல் பருவத் தேர்வு - நான்காம் வகுப்பு - ஆங்கிலம் தேர்வுக்கான விடைகள் (Term 1 - 4th Standard - English Exam Answer Key)...

 



>>>  முதல் பருவத் தேர்வு - நான்காம் வகுப்பு - ஆங்கிலம் தேர்வுக்கான விடைகள் (Term 1 - 4th Standard - English Exam Answer Key)...





>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




முதல் பருவத் தேர்வு - நான்காம் வகுப்பு - தமிழ் தேர்வுக்கான விடைகள் (Term 1 - 4th Standard - Tamil Exam Answer Key)...



>>>  முதல் பருவத் தேர்வு - நான்காம் வகுப்பு - தமிழ் தேர்வுக்கான விடைகள் (Term 1 - 4th Standard - Tamil Exam Answer Key)...





>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




முதல் பருவ விடுமுறை மற்றும் எண்ணும் எழுத்தும் பயிற்சி தொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குநர் மற்றும் பள்ளிக்கல்வி ஆணையர் - செய்திக் குறிப்பு (Press Release - Director of Elementary Education and Commissioner of School Education regarding First Term Vacation and Ennum Ezhuthum Training)...



>>> முதல் பருவ விடுமுறை மற்றும் எண்ணும் எழுத்தும் பயிற்சி தொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குநர் மற்றும் பள்ளிக்கல்வி ஆணையர் - செய்திக் குறிப்பு (Press Release - Director of Elementary Education and Commissioner of School Education regarding First Term Vacation and Ennum Ezhuthum Training)...



 செய்திக்குறிப்பு


காலாண்டுத்‌ தேர்வு முடிவுற்று அளிக்கப்படவேண்டிய விடுமுறை குறித்து கீழ்கண்டவாறு அறிவுரைகள்‌ முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌, மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌ மற்றும்‌ வட்டாரக்‌ கல்வி அலுவலர்களுக்கு, வழங்கப்படுகிறது. 30.09.2022 அன்று காலாண்டுத்‌ தேர்வு முடிந்தவுடன்‌ 01.10.2022 முதல்‌ 05.10.2022 வரை முதல்‌ பருவ விடுமுறை ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.


எண்ணும்‌ எழுத்தும்‌ முதற்கட்ட பயிற்சி தொடக்கக்‌ கல்வி ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறையில்‌ அளிக்கப்பட்டதால்‌, அதற்கு பதிலாக ஈடுசெய்யும்‌ விடுப்பு அளிக்குமாறு தொடந்து ஆசிரியர்‌ சங்கங்களும்‌, ஆசிரியர்களும்‌ கேட்டுக்கொண்டதன்‌ அடிப்படையில்‌ 06/10/2022, 07/10/2022 மற்றும்‌ 08/10/2022 ஆகிய மூன்று நாட்களும்‌ ஈடுசெய்யும்‌ விடுப்பாக கருதப்படும்‌. (மீதமுள்ள 2 நாட்கள்‌ பின்பு ஈடு செய்யப்படும்‌.)


பள்ளிக்‌ கல்வி மற்றும்‌ தொடக்கக்‌ கல்வி கட்டுப்பாட்டின்‌ கீழ்‌ உள்ள 6ம்‌ வகுப்பு முதல்‌ 12ம்‌ வகுப்புகளுக்கு அக்டோபர்‌ மாதம்‌ 10ம்‌ தேதி அன்று பள்ளிகள்‌ திறக்கப்படும்‌, தொடக்கப்‌ பள்ளிகளில்‌ 1ம்‌ வகுப்பு முதல்‌ 5ம்‌ வகுப்புகளை கையாளும்‌ ஆசிரியர்களுக்கு அக்டோபர் 10, 11, 12 தேதிகளில்‌ எண்ணும்‌ எழுத்தும்‌ இரண்டாம்‌ கட்ட பயிற்சி மாநிலக்‌ ௧ல்வி ஆராய்ச்சி மற்றும்‌ பயிற்சி நிறுவன இயக்குநரின்‌ கடிதத்தில்‌ (ந.எண்‌.2411/ஈ2/ 2021, நாள்‌.26.09.2022) தெரிவித்துள்ளவாறு நடத்த இருப்பதால்‌, 1ம்‌ வகுப்பு முதல்‌ 5ம்‌ வகுப்பு வரை படிக்கும்‌ மாணவர்களுக்கு மட்டும்‌ அக்டோபர்‌ 13ம்‌ தேதி பள்ளிகள்‌ திறக்கும்‌ என அறிவுறுத்தப்படுகின்றது.


தொடக்கக்கல்வி இயக்குநர் பள்ளிக்கல்வி ஆணையர்


------------

காலாண்டு விடுமுறை:


1 - 5 வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் 12 முடிய விடுமுறை.


6 - 12 வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் 9 முடிய விடுமுறை.


மீண்டும் பள்ளி திறக்கப்படும் நாள்:


1 - 5 வகுப்புகளுக்கு - 13.10.2022 (வியாழன்)


6 - 12 வகுப்புகளுக்கு - 10.10.2022 (திங்கள்)


எண்ணும் எழுத்தும் பயிற்சி:


10.10.2022 - 12.10.2022

(திங்கள் - புதன்)





இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கனமழை விடுமுறை அறிவிப்பு - 20.11.2024

  கனமழை காரணமாக 20-11-2024 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools on 20-11-2024 d...