கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இரண்டாம் பருவம் - 5ஆம் வகுப்பு - அனைத்துப் பாடங்கள் - ஆங்கில வழி - பாடத்திட்டக் கையேடு ( Term 2 - V Standard - Lesson Plan Guide - All Subjects - English Medium - Ganga Guide)...

 


>>> இரண்டாம் பருவம் - 5ஆம் வகுப்பு - அனைத்துப் பாடங்கள் - ஆங்கில வழி - பாடத்திட்டக் கையேடு ( Term 2 - V Standard - Lesson Plan Guide - All Subjects - English Medium - Ganga Guide)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


இன்றைய (04-10-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

அக்டோபர் 04, 2022



ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். உத்தியோக பணிகளில் திருப்தியற்ற சூழ்நிலைகள் ஏற்படும். உற்பத்தி தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். அரசு தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உலகியல் நிகழ்வுகளின் மூலம் மனதளவில் மாற்றம் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




அஸ்வினி : ஈடுபாடு உண்டாகும். 


பரணி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


கிருத்திகை : மாற்றம் ஏற்படும்.

---------------------------------------




ரிஷபம்

அக்டோபர் 04, 2022



திருத்தலம் தொடர்பான பயணங்கள் கைகூடும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். விவசாய பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயணங்களை மேற்கொள்வதற்கான சிந்தனைகள் மேம்படும்.  மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் அதிகரிக்கும். தனித்திறமையை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். அன்பு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்




கிருத்திகை : பயணங்கள் கைகூடும். 


ரோகிணி : சிந்தனைகள் மேம்படும்.


மிருகசீரிஷம் : ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------




மிதுனம்

அக்டோபர் 04, 2022



உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். உறவினர்களிடத்தில் பொறுமையுடன் செயல்படவும். திறமைக்கு உண்டான மதிப்பு காலதாமதமாக கிடைக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். வாகன பழுதுகளை சரி செய்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். எண்ணிய பணிகள் நிறைவேறுவதில் சில அலைச்சல்கள் உண்டாகும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3 


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்




மிருகசீரிஷம் : பொறுப்புகள் அதிகரிக்கும். 


திருவாதிரை : கவனம் வேண்டும்.


புனர்பூசம் : அலைச்சல்கள் உண்டாகும்.

---------------------------------------




கடகம்

அக்டோபர் 04, 2022



குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மேம்படும். தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்பாலின மக்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும்.  மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உயர்வு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




புனர்பூசம் : ஒத்துழைப்பு மேம்படும். 


பூசம் : வாய்ப்புகள் அமையும். 


ஆயில்யம் : அனுகூலமான நாள்.

---------------------------------------




சிம்மம்

அக்டோபர் 04, 2022



எதிர்பார்த்த தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகளை அறிந்து கொள்வீர்கள். பேச்சுக்களில் நிதானம் வேண்டும். கால்நடைகளின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். நட்பு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை




மகம் : பிரச்சனைகள் குறையும்.


பூரம் : தடைகளை அறிவீர்கள்.


உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------




கன்னி

அக்டோபர் 04, 2022



வியாபாரத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் ஏற்பட்டு மறையும். மற்றவர்கள் கூறும் கருத்துக்களை பொறுமையுடன் கேட்கவும். தோற்றப்பொலிவை பற்றிய எண்ணங்கள் மேம்படும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். மாணவர்களுக்கு உயர்கல்வி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். அமைதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு




உத்திரம் : அனுசரித்து செல்லவும்.


அஸ்தம் : எண்ணங்கள் மேம்படும்.


சித்திரை : புரிதல் ஏற்படும்.

---------------------------------------




துலாம்

அக்டோபர் 04, 2022



மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சிலருக்கு சாதகமாக அமையும். மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவும், புரிதலும் ஏற்படும். மனை மற்றும் வீடு வாங்குவது தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் மேம்படும். உலகியல் வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். செல்வாக்கு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்




சித்திரை : சிந்தனைகள் உண்டாகும்.


சுவாதி : ஆர்வம் மேம்படும்.


விசாகம் : ஏற்ற, இறக்கமான நாள்.

---------------------------------------




விருச்சிகம்

அக்டோபர் 04, 2022



வியாபாரம் நிமிர்த்தமாக எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்களும், அதை சார்ந்த முயற்சிகளும் அதிகரிக்கும். பொருளாதாரம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். ஆதரவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்




விசாகம் : எதிர்ப்புகளை அறிவீர்கள்.


அனுஷம் : முயற்சிகள் அதிகரிக்கும்.


கேட்டை : ஆதரவான நாள்.

---------------------------------------




தனுசு

அக்டோபர் 04, 2022



உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் ஏற்படும். உத்தியோக பணிகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகளும், அலைச்சல்களும் மேம்படும். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். இணையம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். பெருமை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்




மூலம் : புரிதல் ஏற்படும்.


பூராடம் : ஈடுபாடு அதிகரிக்கும்.


உத்திராடம் : மாற்றம் உண்டாகும்.

---------------------------------------




மகரம்

அக்டோபர் 04, 2022



வித்தியாசமான சிந்தனைகளின் மூலம் தடைபட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். அரசு தொடர்பான பணிகளின் மூலம் ஆதாயம் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களால் புதிய அனுபவம் உண்டாகும். மனதில் எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். புதிய முயற்சிகளில் முன்னேற்றமான சூழல் ஏற்படும். நிறைவான நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




உத்திராடம் : தடைகள் குறையும்.


திருவோணம் : அனுபவம் உண்டாகும். 


அவிட்டம் : முன்னேற்றமான நாள்.

---------------------------------------




கும்பம்

அக்டோபர் 04, 2022



சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சமூகம் தொடர்பு துறைகளில் இருப்பவர்கள் அனுசரித்து நடந்து கொள்ளவும். வெளியூர் பயணங்களில் கவனம் வேண்டும்.  நுண்கலைகளின் மீது ஆர்வம் உண்டாகும். உடன்படிக்கை தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். விரயம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்




அவிட்டம் : நெருக்கம் அதிகரிக்கும். 


சதயம் : கவனம் வேண்டும்.


பூரட்டாதி : சிந்தித்து செயல்படவும். 

---------------------------------------




மீனம்

அக்டோபர் 04, 2022



பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். கூட்டு வியாபாரத்தில் லாபம் மேம்படும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். திறமைக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். உத்தியோக பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். செல்வாக்கு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




பூரட்டாதி : அறிமுகம் கிடைக்கும். 


உத்திரட்டாதி : லாபம் மேம்படும். 


ரேவதி : சுறுசுறுப்பான நாள்.

---------------------------------------






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


Today's (04-10-2022) Wordle Answer...

                                                                                        

Wordle விளையாடும் முறை: 

ஒவ்வொரு நாளும், ஒரு ஐந்தெழுத்து சொல் தேர்ந்தெடுக்கப்படுகிறது, அதை விளையாடுவோர் ஆறு முயற்சிகளுக்குள் யூகிக்க வேண்டும். ஒவ்வொரு யூகத்திற்கும் பிறகு, ஒவ்வொரு எழுத்தும் பச்சை, மஞ்சள் அல்லது சாம்பல் என குறிக்கப்படும்.

பச்சை என்பது எழுத்து சரியானது மற்றும் சரியான இடத்தில் உள்ளது என்றும்,
 
மஞ்சள் என்பது பதிலில் உள்ளது ஆனால் சரியான நிலையில் இல்லை என்றும், 

சாம்பல் என்பது அது விடையில் இல்லை என்பதைக் குறிக்கிறது.  

 விளையாட்டில் "ஹார்ட் மோட்" விருப்பம் உள்ளது, இதற்கு வீரர்கள் பச்சை மற்றும் மஞ்சள் என குறிக்கப்பட்ட எழுத்துக்களை அடுத்தடுத்த யூகங்களில் சேர்க்க வேண்டும்.

தினசரி சொல் அனைவருக்கும் ஒன்றுதான்.

 கருத்தியல் மற்றும் ஸ்டைலிஸ்டிக் ரீதியாக, இந்த விளையாட்டு 1955 பேனா மற்றும் பேப்பர் கேம் ஜோட்டோ மற்றும் கேம் ஷோ ஃபிரான்சைஸ் லிங்கோ போன்றது.

 இந்த விளையாட்டானது இரண்டு-வீரர் பலகை விளையாட்டான மாஸ்டர்மைண்ட்-இதில் வார்த்தை யூகிக்கும் மாறுபாடு கொண்ட வேர்ட் மாஸ்டர்மைன்ட்  மற்றும் புல்ஸ் அண்ட் கவ்ஸ் விளையாட்டு, குறிப்பிட்ட எழுத்துக்களை வேர்ட்லே (Wordle) உறுதிசெய்கிறது. ஒவ்வொரு தினசரி விளையாட்டும் தோராயமாக வரிசைப்படுத்தப்பட்ட 2,315 சொற்களின் பட்டியலிலிருந்து ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறது (ஆங்கில மொழியில் உள்ள தோராயமான 12,000 ஐந்தெழுத்து வார்த்தைகளில்). 


Wordle Game Website Link: 



Today's (04-10-2022) Wordle Answer: BOUGH












 

எரிபொருள் மற்றும் பேட்டரி தீர்ந்ததால் செயலிழந்தது 'மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன்' (Mars Orbiter Mission - MOM) என்று அலுவல்பூர்வமாகவும், 'மங்கள்யான்' (Mangalyaan) என்று பரவலாகவும் அழைக்கப்பட்ட செயற்கைக்கோள் (The satellite officially called 'Mars Orbiter Mission (MOM) and popularly called 'Mangalyaan' crashed due to running out of fuel and batteries)...



எரிபொருள் மற்றும் பேட்டரி தீர்ந்ததால் செயலிழந்தது 'மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன்' (Mars Orbiter Mission - MOM) என்று அலுவல்பூர்வமாகவும், 'மங்கள்யான்' (Mangalyaan) என்று பரவலாகவும் அழைக்கப்பட்ட செயற்கைக்கோள் (The satellite officially called 'Mars Orbiter Mission (MOM) and popularly called 'Mangalyaan' crashed due to running out of fuel and batteries)...


 இந்திய விண்வெளித்துறையில் மைல் கல்லாக கடந்த 8 ஆண்டுகளாக செவ்வாய்கிரக சுற்றுப் பாதையில் வலம் வந்து கொண்டிருந்த மங்கள்யான் விண்கலம் தமது பயணத்தை நிறைவுசெய்துவிட்டது.


இஸ்ரோ எனப்படுகிற இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமானது கடந்த 2013-ல் விண்வெளித்துறையின் உச்சத்தை தொட்டது. ரூ450 கோடி செலவில் மங்கள்யான் விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது இஸ்ரோ. மங்கள்யான் விண்கலத்தை பிஎஸ்எல்வி-25 ராக்கெட் விண்ணுக்கு சுமந்து சென்றது. இதில் 15 கிலோ எடை கொண்ட கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன.


செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு, அதன் மீது படிந்துள்ள தாதுக்கள் மற்றும் மீத்தேன் குறித்து ஆய்வு மேற்கொள்ள மங்கள்யான் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளைத் தொடர்ந்து செவ்வாய் கிரகத்தை அடைந்த 4-வது விண்கலம் என்ற பெருமைக்குரியது நமது மங்கள்யான்.


மங்கள்யான் விண்கலமானது 2014-ம் ஆண்டு செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. மங்கள்யான் விண்கலம் பல்வேறு தகவல்களையும் தொடர்ந்து அனுப்பி வந்தது. இதனால் மங்கள்யானுக்கு அடுத்தடுத்த விண்கலத்தை அனுப்புகிற முயற்சிகளையும் இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது.


கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாய் கிரகத்தின் மிகப் பெரிய நிலவான போபோஸை மங்கள்யான் படம் எடுத்து அனுப்பி இருந்தது. செவ்வாய் கோளில் இருந்து 7,200 கி. மீட்டர் தொலைவிலும், சந்திரனிடமிருந்து 4,200 கி. மீட்டர் தொலைவிலும் இருப்பது போபோஸ். இந்த போபோஸ், விண்கற்களால் உருவானது; இதில் தண்ணீர் இருக்கிறது; விண்கற்கள் மோதலில் இருந்து இது உருவாகி இருக்கலாம் எனவும் கருதப்பட்டது.


இதனிடையே மங்கள்யான் விண்கலத்துடனான தொடர்புகள் தற்போது துண்டிக்கப்பட்டுள்ளன. விண்வெளியில் அண்மையில் உருவான மிக நீண்ட கிரகணம் ஒன்றால் மங்கள்யான் விண்கலத்தின் எரிபொருள் தீர்ந்து போயிருக்கலாம் என கருதப்படுகிறது. தற்போதைய நிலையில் மங்கள்யான் விண்கலத்துடனான அனைத்து தொடர்புகளும் இல்லாமல் போய்விட்டது.


இதனால் கடந்த 8 ஆண்டுகளாக செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டு பல்வேறு தகவல்களை அனுப்பி வந்த மங்கள்யானின் விண்வெளிப் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.


மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன் : மங்கள்யான் செயற்கைக்கோளுடன் 8 ஆண்டுகளுக்கு பின் தொடர்பு துண்டிப்பு...


இந்தியா அனுப்பிய செவ்வாய் சுற்றுவட்ட கலனின் எரிபொருள் மற்றும் பேட்டரி தீர்ந்து விட்டிருப்பதால் அதன் பணிகளை மேலதிகமாகத் தொடர முடியாத நிலை உண்டாகி இருக்கும் என்று கணிக்கப்படுவதாக பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.


ஆறு மாதங்கள் மட்டுமே இயங்கக்கூடிய வகையில் திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள், சுமார் எட்டு ஆண்டு காலம் பூமிக்குத் தரவுகளை அனுப்பியுள்ளது.


'மங்கள்யான்' என்று பரவலாக அறியப்படும் இந்தியாவின் செவ்வாய் சுற்று வட்டக் கலன் 450 கோடி ரூபாய் செலவில் 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் தேதி பிஎஸ்எல்வி - சி 25 ராக்கெட் மூலம் ஏவப்பட்டது.


2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி செவ்வாய்க்கு மேலே இருக்கும் அதன் சுற்றுவட்டப் பாதையில் முதல் முயற்சியிலேயே நிலை நிறுத்தப்பட்டது.


''தற்போதைக்கு செவ்வாய் சுற்றுவட்டக் கலனில் எரிபொருள் இல்லை; அதன் பேட்டரியும் தீர்ந்துவிட்டது; செவ்வாய் சுற்றுவட்ட கலனுடனான தொடர்பும் துண்டிக்கப்பட்டு விட்டது,'' என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி முகமையான இஸ்ரோவின் வட்டாரங்கள் பிடிஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளன.


எனினும் இஸ்ரோ தலைமையகம் இது குறித்து அலுவல்பூர்வ அறிவிப்பு எதையும் இதுவரை வெளியிடவில்லை.


செவ்வாய் சுற்றுவட்டக் கலனின் பேட்டரி தீர்ந்துவிடக் கூடாது என்பதற்காக, கடந்த காலங்களில் சூரிய கிரகணம் உண்டான நேரங்களில், அதன் சுற்றுவட்டப் பாதை மாற்றப்பட்டது.


''ஆனால் கடைசியாக செவ்வாயில் உண்டான சூரிய கிரகணம் ஏழரை மணி நேரம் நீடித்தது. அதில் இருந்த எரிபொருள் அனைத்தும் அந்த செயற்கைக்கோளால் (மங்கள்யான்) பயன்படுத்தப்பட்டுவிட்டது,'' என்று ஓர் இஸ்ரோ அதிகாரி பிடிஐ முகமையிடம் கூறியுள்ளார்.


செவ்வாய் சுற்றுவட்டக் கலனின் பேட்டரிகள் ஒரு மணி நேரம் 40 நிமிடம் ஏற்படக் கூடிய சூரிய கிரகணத்தை கையாளும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளன. நீண்ட நேரம் உண்டாகும் கிரகணங்களால் பேட்டரியின் ஆற்றல் பாதுகாப்பான அளவைவிடக் கீழே சென்று விடும்,'' என்று இன்னொரு இஸ்ரோ அதிகாரி பிடிஐ செய்தி முகமையிடம் கூறியுள்ளார்.


மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன்

'மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன்' (Mars Orbiter Mission - MOM) என்று அலுவல்பூர்வமாகவும், 'மங்கள்யான்' என்று பரவலாகவும் அழைக்கப்பட்ட இந்தியாவின் செவ்வாய் சுற்றுவட்டக் கலன் ஐந்து முக்கியப் பாகங்களைக் கொண்டிருந்தது.


மார்ஸ் கலர் கேமரா, தெர்மல் இன்ஃப்ரா ரெட் இமேஜிங் ஸ்பேக்ரோமீட்டர், மீத்தேன் சென்சார், மார்ஸ் எக்சோஸ்பியரிக் நியூட்ரல் கம்போசிஷன் அனலைசர், லைமன் ஆல்ஃபா போட்டோமீட்டர் ஆகியவை அவை.


மார்ஸ் கலர் கேமரா மட்டுமே இதுவரை ஆயிரத்துக்கும் மேலான படங்களை அனுப்பியுள்ளது. செயற்கைக்கோளின் நீள்வட்ட வடிவிலான சுற்றுவட்டப் பாதை செவ்வாயை தூரத்தில் இருந்து விரிவாகவும், அருகில் இருந்து தெளிவாகவும் படம் எடுக்க உதவியாக இருந்தது.


இந்தியாவின் முதல் முயற்சி

சூரிய மண்டலத்தின் வேறு ஒரு கோளுக்கு சென்று ஆராயும் இந்தியாவின் முதல் முயற்சியாக மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன் அமைந்தது.


அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் மட்டுமே செவ்வாய் கோளுக்கு விண்கலனை வெற்றிகரமாக அனுப்பியிருந்த நிலையில், 2014-ல் நான்காவதாக இந்தியாவும் இணைந்தது. முதல் முயற்சியிலேயே செவ்வாய்க்கு விண்கலத்தை அனுப்பிய முதல் நாடு என்ற சாதனையை இந்தியா படைத்தது.


முன்னதாக நிலவுக்கு சந்திரயான் 1 & 2 ஆகிய விண்வெளி ஆராய்ச்சித் திட்டங்களை இந்தியா முன்னெடுத்தது.


2009இல் மேற்கொள்ளப்பட்ட சந்திரயான்- 1 திட்டம் வெற்றிகரமாக அமைந்தது. ஆனால் 2019இல் மேற்கொள்ளப்பட்ட சந்திரயான்- 2 திட்டம், அதன் லேண்டர் (தரையிறங்கு கலன்) விழுந்து நொறுங்கியதால் தோல்வியில் முடிந்தது.


இஸ்ரோவால் செவ்வாயில் அடுத்தகட்ட ஆராய்ச்சி எப்போது மேற்கொள்ளப்படும் என்பது குறித்து இந்திய அரசு இதுவரை எந்த உறுதியான தகவலையும் வெளியிடவில்லை.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



பைக் சாகசம் செய்த அதே இடத்தில் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை (Awareness campaign should be done at the same place where the bike adventure took place - Madras High Court condition)...



 பைக் சாகசம் செய்த அதே இடத்தில் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை (Awareness campaign should be done at the same place where the bike adventure took place - Madras High Court condition)...


சென்னை அண்ணா சாலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக பைக் சாகசத்தில் ஈடுபட்ட ஐதராபாத்தை சேர்ந்த அலெக்ஸ் பினோய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நூதன தண்டனை.


பைக் சாகசத்தில் ஈடுபட்ட இடமான தேனாம்பேட்டை சிக்னலில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரசுரங்களை வழங்க வேண்டும் என உத்தரவிட்டு பினோய்க்கு முன் ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்.


முன்ஜாமீன் பெற்ற பினோய், நீதிமன்ற நிபந்தனைபடி பைக் சாகசத்தில் ஈடுபட்ட அதே தேனாம்பேட்டை சிக்னலில் வாகன விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறார்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



மருத்துவ குணங்கள் நிறைந்த வேப்ப எண்ணெய்யின் பயன்கள் (Medicinal Benefits of Neem Seed Oil)...




மருத்துவ குணங்கள் நிறைந்த வேப்ப எண்ணெய்யின் பயன்கள் (Medicinal Benefits of Neem Seed Oil)...


வேப்ப எண்ணெய் அல்லது வேப்ப விதை தூளை  தினமும் முகத்தில் தடவி வர தோல் சுருக்கங்கள் மறைந்து இளமையான தோற்றத்தை பெறலாம்.


தோலில் ஏற்படும் அரிப்பு மற்றும் சிரங்குகளை வேப்ப எண்ணெய் போக்கும்.


குளிர்காலங்களில் ஏற்படும் தோல் வெடிப்பை வேப்ப எண்ணெய் சரிசெய்யும்.


காயம் ஏற்பட்ட இடத்தில் வேப்ப எண்ணெய் தடவினால் சீக்கரம் காயம் சரியாகும்.


வேப்ப எண்ணெய்யில் அதிக அளவு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதால் கிருமி தோற்று ஏற்படுவதை தடுக்கிறது.





 

வேப்ப எண்ணெய் தினமும் பயன்படுத்தினால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும்.


படர் தாமரை, கருவளையம் ஆகியவற்றை வேப்ப எண்ணெய் மருந்தாக பயன்படுகிறது.


தேங்காய் எண்ணெயில் கொஞ்சம் வேப்பெண்ணெய் கலந்து கூந்தலுக்கு தடவி வர பொடுகு தொல்லை நீங்கும்.


தினமும் வேப்ப எண்ணெய்யை தலையில் தடவினால் அடர்த்தியான கூந்தலைப் பெறலாம்.


வேப்ப எண்ணெய் அஜீரண கோளாறு மற்றும் வயிற்றுப் புண்ணுக்கு உகந்தது.


வேப்ப எண்ணெய் புற்று நோய் உள்ளவர்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.


வேப்ப எண்ணெய்யை உடலில் தடவி படுத்தால் கொசு தொல்லையில் இருந்து விடுபடலாம். வேப்ப எண்ணெய்யில் விளக்கு ஏற்றினால் கொசுகள் வீட்டை விட்டு ஓடிவிடும்.


சில சொட்டு வேப்ப எண்ணெய்யை நீர் சேமித்து வைக்கும் தொட்டியில் தெளித்தால் கொசு புழுக்கள் உருவாவதை தடுக்கலாம்.


சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைகளில் நம் நாட்டின் பாரம்பரியமான மரம், செடி, கொடிகளை கொண்டே பல மருத்துவ பொருட்களை உற்பத்தி செய்திருக்கின்றனர். “வேப்ப எண்ணெய்” வேப்ப மரத்திலிருந்து தயாரிக்கப்படும் மகத்துவங்கள் நிறைந்த எண்ணெய் ஆகும்.


வேப்ப எண்ணையில் ஆன்டி ஆக்சிடன்ட் மற்றும் கரட்டினாய்டு சத்துகள் அதிகம் இருக்கின்றன. வேப்ப எண்ணையை வாரத்திற்கு ஒரு முறை தோலில் நன்கு தடவிய பின்பு குளித்து வந்தால் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுத்து, இளமை தோற்றத்தை அதிகரிக்கும்.


காயங்கள், தழும்புகள் உடலில் அடிபடும் போது ரத்த காயங்கள் ஏற்படுகின்றன. இந்த ரத்த காயங்களை சீக்கிரத்தில் ஆற்றும் தன்மை வேப்ப எண்ணெய் கொண்டுள்ளது. காயங்களில் கிருமி தோற்று ஏற்படுவதையும் தடுத்து, காயங்களை சீக்கிரம் ஆற்றுகிறது.


 

பாத நோய்கள் மழைக்காலங்களில் சேற்றில் இருக்கும் கிருமிகளின் தொற்று சிலருக்கு ஏற்படுவதால் சேற்றுபுண்கள் ஏற்படுகின்றன. ஷூ காலணிகள் அதிகம் உபயோகிப்பவர்களுக்கு பாதங்களில் கிருமி தொற்று ஏற்பட்டு படர் தாமரை போன்றவை ஏற்படுகின்றன. இவற்றை சீக்கிரம் குணமாக்க தினமும் சிறிது வேப்ப எண்ணையை மேற்கூறிய இடங்களில் தடவி வந்தால் போதும். 

 


மிகவும் சக்தி வாய்ந்த வேதிப்பொருட்களை தன்னுள்ளே கொண்டுள்ளது. இதை உடலுக்கு மேல் தொடர்ந்து பயன்படுத்தி வருபவர்களுக்கு தோல் சம்பந்தமான புற்று நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் வெகுவாக குறைகிறது.


 

தோலில் இருக்கும் செல்களில் ஏற்படும் வேதியியல் மாற்றங்களாலும், பரம்பரை காரணத்தாலும் சிலருக்கு சோரியாசிஸ் எனப்படும் நோய் ஏற்படுகிறது. இக்குறைபாட்டை குறைப்பதில் வேப்ப எண்ணெய் சிறப்பாக செயல்படுகிறது. இரவில் படுக்கும் முன் வேப்ப எண்ணெயை தடவி, காலையில் எழுந்ததும் சுத்தமாக கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து பின்பற்றி வந்தால் சொரியாசிஸ் பிரச்சனையை குணப்படுத்தலாம்.

 

வேப்ப எண்ணெயுடன் தூய தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை 1:4 என்ற விகிதத்தில் கலந்து உடலில் தேய்த்த்து கொண்டு உறங்குவதால், கொசுக்கடி மற்றும் பூச்சி கடிகளிலிருந்து இருந்து தப்பிக்கலாம்.

 

சைனஸ் தொல்லை நீங்க தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் வேப்ப எண்ணெயின் 2 துளிகள் மூக்கில் இட்டு வர சைனஸ் தொல்லை விலகும்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


தென்னக ரயில்வே - திருச்சி, பொன்மலை பணிமனையில் தொழில்பழகுநர் பயிற்சி - மாதம் ரூ.7000 உதவித் தொகையுடன் - 537 பணியிடங்கள் - விண்ணப்பிக்க கடைசி நாள்: 31-10-2022 (Southern Railway - Apprentice Training Trichy, Ponmalai Workshop - With stipend of Rs.7000 per month - 537 Vacancies - Last date to apply: 31-10-2022)...



>>> தென்னக ரயில்வே - திருச்சி, பொன்மலை பணிமனையில் தொழில்பழகுநர் பயிற்சி - மாதம் ரூ.7000 உதவித் தொகையுடன் - 537 பணியிடங்கள் - விண்ணப்பிக்க கடைசி நாள்: 31-10-2022 (Southern Railway - Apprentice Training Trichy, Ponmalai Workshop - With stipend of Rs.7000 per month - 537 Vacancies - Last date to apply: 31-10-2022)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



No.GPB(A) 128-Act-Engg-31

SOUTHERN RAILWAY - Central Workshops - Personnel Branch, Ponmalai, Trichy-4,

Date: 29.09.2022.

ENGAGEMENT OF APPRENTICES UNDER THE APPRENTICES ACT, 1961

NOTIFICATION

ONLINE applications are invited from eligible candidates for engagement as Apprentices for imparting training under the Apprentices Act 1961 in the designated trades at various Divisions/ Workshops/ Units in the jurisdiction of Southern Railway. Candidates residing in the following locations/areas falling within the Geographical Jurisdiction of Southern Railway alone are eligible to apply.

1. Whole state of Tamil Nadu.

2. Whole union Territory of puducherry.

3. Whole state ofKerala.

4. Whole Union Territories of Andaman & Nicobar and Lakshadweep Islands.

5. ONLY the two districts of Andhra Pradesh, namely, SPSR Nellore and Chittoor.

6. ONLY one district of Karnataka, namely, Dakshina Kannada,

Visit Website www,sr.indianrailways.gov.in -->News & Updates --->Personnel

Branch Information to apply.

There is NO GUARANTEE 0F EMPLOYMENT and their contract of apprenticeship will be terminated on completion training. However, 20% of the vacancies in case of Direct recruitment to post in Level 1 shall be filled giving preference to Course completed act apprentices (CCAAs). 

All communication from the Administration will be sent by SMS or e-mail only and Candidates will be called for Cerdficate Verification Purpose / Selected / Stand-Bye List will be uploaded in Southern Railway Website. Candidates should maintain the same mobile number &  e-mail ID till the selection is completed and the Administration will not be responsible for non- receipt of communication due to change in mobile number or e-mail lD. Frequent monitoring of SMS / Email / Visiting Southern Railway website is the  sole responsibility of candidates.

Candidate's  Name, Date of Birth and Father's Name should be same as in the SSLC Marksheet, ITI Mark Sheet Community Certificate, Bank Pass Book, AADHAAR, PAN. If there  is any mismatch in the above, the same may be rectified.

1. Apprentices will be engaged in the following trades. The slots available in various trades with communal break-up in GOC wodshop, Tricky and Madurai Divisions are tabulated below for the information of candidates.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...






இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

LO / CBT – 3rd Standard - November 2024 – Answer Key

    3 ஆம் வகுப்பு - கற்றல் விளைவுகள் மற்றும் திறன் அடிப்படையிலான மதிப்பீட்டு தேர்வு - நவம்பர் 2024 - விடைகள் Class 3 - Learning Outcomes and...