கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

CCE - கல்வி சார் மற்றும் கல்வி இணை செயல்பாடுகளுக்கான பருவ இறுதி தரநிலை அட்டவணை (CCE - Term End Grade for Curricular and Co-curricular Activities)...



>>> CCE - கல்வி சார் மற்றும் கல்வி இணை செயல்பாடுகளுக்கான பருவ இறுதி தரநிலை அட்டவணை (CCE - Term End Grade for Curricular and Co-curricular Activities)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


15-10-2022 CRC Training Videos Links...

 

Dept. of School Education

Teacher Professional Development





>>> Video No:1 Roles and Responsibilities of Facilitator.


>>> Video No:2. Introduction to BRC Discussion Meeting.


>>> Video No:3. Marking Attendance on Oct 15th.


>>> Video No:4. Stage Setting


>>> Video No:5. Last Month Lesson Review.


>>> Video No:6. Exemplar Content for Previous Month.


>>> Video No:7. Mediawiki.


>>> Video No:8. Next Month Lesson Review.


>>> Video No:9. TNSED App flow till Conclusion.


>>> Video No:10-a. 123 e Psychometric. (To be played at 03.00 PM onwards on 15th Oct)


>>> Video No:10-b. 123 e Game Result. (Will be available from 03.20 onwards on 15th Oct 2022)



Please share this link with all the facilitators for the upcoming CRC on Oct 15.


 https://linktr.ee/tncrc4


All facilitators need to complete all these videos and attend the YouTube live training session conducted by SCERT tomorrow without fail.


Thank you.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு (Announcement of Diwali bonus for government employees in Puducherry)...

 புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு (Announcement of Diwali bonus for government employees in Puducherry)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



அக்டோபர் 15, 2022 அன்று நடைபெறவுள்ள பி.ஆர்.சி. கூட்டத்திற்கான ஏதுவாளர்களுக்கான நேரலை காணொளி (Facilitator Orientation for the upcoming BRC meet happening on 15th October 2022)...



>>> அக்டோபர் 15, 2022 அன்று நடைபெறவுள்ள பி.ஆர்.சி. கூட்டத்திற்கான ஏதுவாளர்களுக்கான நேரலை காணொளி (Facilitator Orientation for the upcoming BRC meet happening on 15th October 2022)...


❌Date: 11th October 2022, Time: 11 am❌


Link to join:  👉🏼https://youtu.be/reOf2XCnhTc


Nominated Facilitators and BRTEs are requested to attend the meet without fail


*Note*

Prior to this meet, please watch all the videos available in this link:_ 

👉🏼https://linktr.ee/tncrc4






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.10.2022 - School Morning Prayer Activities...



 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.10.2022 - School Morning Prayer Activities...


 திருக்குறள் :


பால் : அறத்துப்பால்


இயல்: பாயிரவியல்


அதிகாரம்: வான் சிறப்பு


குறள் : 11

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்

தானமிழ்தம் என்றுணரற் பாற்று


பொருள்:

உரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது; அதனால் மழையே அமிழ்தம் எனலாம்.


பழமொழி :

Whatever you do, do it properly.

செய்வன திருந்தச் செய்.



இரண்டொழுக்க பண்புகள் :


1. நீரின்று அமையாது உலகு எனவே நீரை வீணாக்க மாட்டேன். 


2. உழவு தொழில் இல்லை என்றால் இவ்வுலகு இல்லை. எனவே உழவரையும் உழவுத் தொழிலையும் மதிப்பேன்


பொன்மொழி :


எவன் ஒருவன் தன் அறிவின் அகந்தையால் பிறரை அவமதிக்கிறானோ, அவன் மந்த புத்தியுடையவன்!



பொது அறிவு :


1. உலகிலேயே அதிகமாக வெயில் அடிக்கும் இடம் எது? 


கிழக்கு சகாரா பாலைவனம். 


2. உலகில் அணுகுண்டை தயாரித்த முதல் நாடு எது? 


ஜெர்மனி.


English words & meanings :


bio-ly-sis - the death and disintegration of living organisms. Noun. Banana peels take more time for biolysis. உயிரியல் சிதைவு. பெயர்ச் சொல்


ஆரோக்ய வாழ்வு :


துளசி இலைகளை எலுமிச்சை சாறு சேர்த்து விழுதாக அரைத்து தோல் நோய்களுக்கு பற்றுப் போடலாம் .இதனால் சொறி சிரங்கு போன்றவை முற்றிலும் குணமாகும்.


NMMS Q 72 :


விடுபட்ட எண்ணைக் கண்டுபிடிக்கவும்: 9, 30, 51, 72, _________ 


விடை : 93. விளக்கம்: 9+21 = 30; 30+21 = 51; 51*21 = 72; 72+21= 93;


அக்டோபர் 11


பன்னாட்டுப் பெண் குழந்தைகள் நாள்


பன்னாட்டுப் பெண் குழந்தைகள் நாள் (International Day of the Girl Child, Day of the Girl, International Day of the Girl) என்பது ஐக்கிய நாடுகள் சபை அறிவித்த ஒரு பன்னாட்டு நினைவு நாள் ஆகும். பெண் குழந்தைகளுக்கான உரிமைகளையும் சுதந்திரத்தையும் பாதுகாக்கப்பட வேண்டிய அவசியத்தை உணர்த்த அக்டோபர் 11 ஆம் நாளை பன்னாட்டு பெண் குழந்தைகள் தினமாக ஐநா 2011 ஆம் ஆண்டில் அறிவித்தது. இந்த நாள் கனடாவினால் தீர்மானிக்கப்பட்டு பிற நாடுகளால் முன்மொழியப்பட்டு உலகமே ஏற்றுக்கொண்டது. இந்நாளில் உலகமெங்கும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வு பரப்புரைகள் மேற்கொள்ளப்படுகிறது.


பாலின சமத்துவம், சகல துறைகளிலும் சமத்துவமான வாய்ப்பு, கல்வி உரிமை, பாதுகாப்பு, அங்கீகாரம், வளர்ச்சியை அதிகரித்தல், வன்முறைகளை களைதல் போன்றனவற்றிற்கு சமூகம் ஒத்துழைப்புக் கொடுத்து இந்தப்பெண் குழந்தைகள் நினைத்ததை சாதிக்க உறுதுணையாக நின்று, இவர்கள் பின்னாளில் சாதனைப்பெண்களாக மிளிர வைக்கும் அவசியத்தை நினைவுகூரும் நாள்.



நீதிக்கதை


உண்மைக்குக் கிடைத்தப் பரிசு


ராமன் வசித்து வந்த ஊரில் சோமன் என்ற ஒரு பணக்காரன் இருந்தார். அவர் பணத்தாசைப் பிடித்தவர். 


ஒருமுறை சோமன் தன் தோட்டத்தில் விளைந்த தேங்காய்களை சந்தையில் விற்று விட்டு, கிடைத்த பத்தாயிரம் ரூபாயுடன் தன்னுடைய மாட்டு வண்டியில் காட்டு வழியாக வீட்டுக்கு வரும் போது தனது பணப்பையைத் தொலைத்துவிட்டார். 


வீட்டுக்கு வந்ததும் வண்டியில் பணப் பையை தேடி பார்த்து கிடைக்காமல் புலம்பினார். அப்போது அவரது மனைவி, உங்க பணப்பையை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் கொடுக்கிறேன் என்று சொன்னால் கண்டிப்பாக யாராவது கொண்டு வந்து கொடுப்பாங்க என்றாள். 


அதேப் போல் சோமன் அடுத்த நாளே ஊர் முழுவதும் தண்டோரா போட்டு சொல்லிவிட்டார். 


இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு பின்பு அருகில் இருந்த ஊரிலிருந்து அந்த ஊருக்கு ஒரு வழிப்போக்கர் வந்தார். அவர் பெயர் பூபாலன். மிகவும் நல்ல குணமுடையவர். ஏழையாக இந்தாலும் கவுரவமாக வாழ பிரியப்படுபவர். தன்னால் முடிந்தவரை அடுத்தவர்களுக்கு உதவுபவர். 


அவர் காட்டு வழியில் வந்து கொண்டிருக்கும் போது அங்கே ஒரு புறா அடிப்பட்டு கீழே கடந்தது. அதை பார்த்து இரக்கப்பட்ட பூபாலன் அந்த புறாவை தூக்கிக் கொண்டு அருகில் இருந்த குளத்திற்கு கொண்டு சென்று, தண்ணீர்ரை எடுத்து அந்த புறாவின் வாயில் ஊற்றினார். பின்னர் அந்த புறாவை அருகில் இருந்த மரக்கிளையில் வைத்துவிட்டு வந்தார். 


அவர் அப்படி வரும் போது பாதையின் ஓரத்தில் காலில் தட்டுப்பட்டது. அது என்னவென்று பார்த்தார். ஒரு பையில் நிறைய பணம் இருந்தது. அதை எடுத்தவுடன் பூபாலன் மனதில் முதலில் பணத்தை தொலைத்தவரை கண்டுபிடித்து அவரிடம் கொடுத்துவிட வேண்டும் என்று நினைத்து ஊருக்கு விரைந்தார். 


ஊருக்குள் சென்று அங்கு இருந்த கடை வைத்திருந்த கடைக்காரரிடம் விசாரித்தார். அவர் உடனே சோமனைப் பற்றி சொல்லி, அவர் தான் தொலைத்தவர், நீங்கள் இதைக் கொண்டுப்போய்க் கொடுத்தால், கண்டிப்பாக சன்மானம் கொடுப்பார் என்றார். 


உடனே பூபாலனும் சோமன் வீட்டை தேடி பிடித்து சென்று பணப்பை கிடைத்த விபரத்தை சொல்லி சோமனிடம் கொடுத்தர். சோமனுக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை. 


ஆனால் கெட்ட மனம் கொண்ட சோமன் பூபாலனைப் பார்த்து, நான் என்னுடைய பையில் வைர மோதிரம் ஒன்றையும் வைத்திருந்தேன், அது காணவில்லை. மரியாதையாக கொடுத்து விடு, உன்னை சும்மா விடமாட்டேன் என்று கத்தினான். 


பூபாலனுக்கு ஒன்றுமே புரியவில்லை. அந்த வேளையில் அந்த ஊர் கடைக்கார், கஞ்சப்பயல் சோமன் அப்படி என்னத்தான் பரிசு கொடுக்கப் போறான் என்று பார்ப்போம் என்று ஊர் மக்கள் அனைவரையும் அழைத்து வந்தார். பூபாலன் ஒரு குற்றவாளி போல நிற்பதை கண்ட ஊரார் சோமனை சும்மா விடக்கூடாது, இந்த பிரச்சினையை மரியாதை ராமனிடம் தான் கொண்டு சென்று தீர்ப்பு கேட்க வேண்டும் என்று சொன்னார்கள். 


சிறிது நேரத்தில் சோமன், பூபாலன், ஊர்மக்கள் அனைவரும் மரியாதை ராமன் முன்னால் போய் நின்றார்கள். நடந்த அனைத்தையும் கூறினான் சோமன். 


ஏற்கனவே சோமன் அறிவித்த தண்டோரா பற்றி மரியாதை ராமனுக்கு தெரியும். அப்போ தண்டோரா போடும் போது வைரமோதிரம் பற்றி ஒன்றும் சொல்லாததும் தெரிந்ததுதான். அதனால் சோமன் தொலைத்த பையில் பணமும், வைர மோதிரமும் இருந்தது என்று சொல்கிறார். இப்போ பூபாலன் கொண்டு வந்த பையில் பணம் மட்டுமே உள்ளது. 


ஆக இது சோமனின் பையே இல்லை, வேறு யாரோ தொலைத்த பை. அப்படி தொலைத்தவர் இதுவரை யாரும் புகார் கொடுக்கவில்லை, அவ்வாறு யாரும் புகார் கொடுக்காதவரை நம்ம ஊரு வழக்குப்படி கிடைத்த பணத்தில் 10 பங்கு அம்மன்கோயிலுக்குக் கொடுத்துவிட்டு, மீதியை எடுத்தவரே வைத்துக்கொள்ளலாம். 


பூபாலன் அந்த பணத்தை தன் சொந்த உபயோகத்துக்கு வைத்துக்கொள்ளலாம், சோமனின் பணம் மற்றும் வைர மோதிரம் கொண்ட பையை கண்டுபிடித்தவுடன் சோமனே சன்மானம் கொடுப்பார், சபை கலையலாம். மரியாதை ராமன் தீர்ப்பு சொன்னதும் சோமனுக்கு இதயமே நின்று போனது போல் ஆகிவிட்டது. 


பூபாலன் கிடைத்த பணத்தில் 10 சதவீதம் அம்மன் கோயிலுக்கு கொடுத்துவிட்டு, மீதியை தன் சொந்த ஊருக்கு கொண்டு சென்று தொழில் செய்து நலமாக வாழ்ந்து வந்தார். 


நீதி :

கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும். அப்படிக் காப்பாற்றாவிட்டால் இருப்பதும் தொலைந்துப் போகும் நிலை வரும்.


இன்றைய செய்திகள்


11.10.22


* சென்னை முதல் கூடூர் வரை 86 விரைவு ரயில்களின் வேகத்தை 110-ல் இருந்து 130 கி.மீ ஆக அதிகரித்து தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.


* வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை.


* மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணிகள் வரும் 2026-ம் ஆண்டுக்குள் நிறைவடையும் என மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்துள்ளார்.


* சட்டவிரோதமான முறையில் இளைஞர்களை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கும் முகவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையர் எச்சரித்துள்ளார்.


* 2023-24 நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தொடக்கம்.


* 2022-ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பென் பெர்னாகே, டக்ளஸ் டயமண்ட், ஃபிலிப் டிப்விக் ஆகிய மூன்று அறிஞர்கள் நோபல் பரிசைப் பகிர்ந்து கொள்கின்றனர்.


* ரஷ்யா - உக்ரைன் போர்: கீவ் உள்ளிட்ட நகரங்களில் மீண்டும் வெடிகுண்டு தாக்குதல்.


* பார்முலா1 கார்பந்தயம்: நெதர்லாந்து வீரர் வெர்ஸ்டப்பென் மீண்டும் 'சாம்பியன்'.


* தேசிய விளையாட்டுப் போட்டி: டிரையத்லானில் தமிழக வீராங்கனை ஆர்த்திக்கு வெண்கலம்.


* டி20 உலக கோப்பை பயிற்சி ஆட்டம்: மேற்கு ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி.



Today's Headlines


* Southern Railway has ordered to increase in the speed of 86 express trains from Chennai to Kudur from 110 to 130 mph.


 * Weather forecast: Hefty rain warning for 9 districts in Tamil Nadu today.


 * Union Minister of State for Health Bharati Praveen Pawar has said that AIIMS Hospital in Madurai will be completed by 2026.


 * The Tamil Nadu Welfare and Rehabilitation Department Commissioner have warned that strict action will be taken against agents who illegally send youth abroad.


 * Preparation of budget for the financial year 2023-24 begins.


 * The 2022 Nobel Prize in Economics has been announced.  The Nobel Prize is shared by three American scholars, Ben Bernaghe, Douglas Diamond, and Philip Dibwig.


* Russia-Ukraine war: Bombing hits cities including Kiev again


* Formula 1: Dutchman Verstappen is 'Champion' again.


 * National Games: Tamil Nadu's Aarti wins bronze in the triathlon.


 * T20 World Cup practice match: Team India beat Western Australia and won the match.


Today's (11-10-2022) Wordle Answer...

                                                                                               

Wordle விளையாடும் முறை: 

ஒவ்வொரு நாளும், ஒரு ஐந்தெழுத்து சொல் தேர்ந்தெடுக்கப்படுகிறது, அதை விளையாடுவோர் ஆறு முயற்சிகளுக்குள் யூகிக்க வேண்டும். ஒவ்வொரு யூகத்திற்கும் பிறகு, ஒவ்வொரு எழுத்தும் பச்சை, மஞ்சள் அல்லது சாம்பல் என குறிக்கப்படும்.

பச்சை என்பது எழுத்து சரியானது மற்றும் சரியான இடத்தில் உள்ளது என்றும்,
 
மஞ்சள் என்பது பதிலில் உள்ளது ஆனால் சரியான நிலையில் இல்லை என்றும், 

சாம்பல் என்பது அது விடையில் இல்லை என்பதைக் குறிக்கிறது.  

 விளையாட்டில் "ஹார்ட் மோட்" விருப்பம் உள்ளது, இதற்கு வீரர்கள் பச்சை மற்றும் மஞ்சள் என குறிக்கப்பட்ட எழுத்துக்களை அடுத்தடுத்த யூகங்களில் சேர்க்க வேண்டும்.

தினசரி சொல் அனைவருக்கும் ஒன்றுதான்.

 கருத்தியல் மற்றும் ஸ்டைலிஸ்டிக் ரீதியாக, இந்த விளையாட்டு 1955 பேனா மற்றும் பேப்பர் கேம் ஜோட்டோ மற்றும் கேம் ஷோ ஃபிரான்சைஸ் லிங்கோ போன்றது.

 இந்த விளையாட்டானது இரண்டு-வீரர் பலகை விளையாட்டான மாஸ்டர்மைண்ட்-இதில் வார்த்தை யூகிக்கும் மாறுபாடு கொண்ட வேர்ட் மாஸ்டர்மைன்ட்  மற்றும் புல்ஸ் அண்ட் கவ்ஸ் விளையாட்டு, குறிப்பிட்ட எழுத்துக்களை வேர்ட்லே (Wordle) உறுதிசெய்கிறது. ஒவ்வொரு தினசரி விளையாட்டும் தோராயமாக வரிசைப்படுத்தப்பட்ட 2,315 சொற்களின் பட்டியலிலிருந்து ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறது (ஆங்கில மொழியில் உள்ள தோராயமான 12,000 ஐந்தெழுத்து வார்த்தைகளில்). 


Wordle Game Website Link: 



Today's (11-10-2022) Wordle Answer: VALID











 

இன்றைய (11-10-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 




மேஷம்

அக்டோபர் 11, 2022



வியாபார பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். கோபத்தை குறைத்து கொண்டு முன்னேறுவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். இணையம் சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் சிந்தித்து செயல்படவும். நண்பர்களுடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். தனவரவு தேவைக்கு ஏற்ப கிடைக்கும். மனதில் புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். போட்டி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




அஸ்வினி : முன்னேற்றம் உண்டாகும். 


பரணி : சிந்தித்து செயல்படவும். 


கிருத்திகை : இலக்குகள் பிறக்கும்.

---------------------------------------




ரிஷபம்

அக்டோபர் 11, 2022



மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். கடன் நிமிர்த்தமான பிரச்சனைகள் குறையும். வியாபார பணிகளில் சிறு சிறு மாற்றம் செய்வதன் மூலம் மேன்மையான வாய்ப்புகள் ஏற்படும். எந்தவொரு செயலையும் நிதானத்துடன் மேற்கொள்வது நல்லது. எதிர்பாலின மக்கள் சார்ந்த விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். செல்வாக்கு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




கிருத்திகை : நெருக்கம் அதிகரிக்கும்.


ரோகிணி : மேன்மையான நாள்.


மிருகசீரிஷம் : சிந்தித்து செயல்படவும். 

---------------------------------------




மிதுனம்

அக்டோபர் 11, 2022



பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபார பணிகளில் சிறு சிறு மாற்றம் செய்வதன் மூலம் மேன்மை உண்டாகும். கால்நடைகளின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். வெற்றி கிடைக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்




மிருகசீரிஷம் : நெருக்கடிகள் குறையும்.


திருவாதிரை : உதவி கிடைக்கும்.


புனர்பூசம் : இன்னல்கள் குறையும்.

---------------------------------------




கடகம்

அக்டோபர் 11, 2022



குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வெளியூர் பயணங்களால் நன்மை உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு முயற்சிக்கு ஏற்ப உயர்வு கிடைக்கும். வியாபார பணிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். இழுபறியான தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். அசதி குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை




புனர்பூசம் : உதவி கிடைக்கும். 


பூசம் : நன்மை உண்டாகும்.


ஆயில்யம் : தனவரவு கிடைக்கும்.

---------------------------------------




சிம்மம்

அக்டோபர் 11, 2022



எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்படும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். தந்தைவழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் சோர்வு உண்டாகும். வியாபார பணிகளில் இருப்பவர்களுக்கு வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வரவு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்




மகம் : தன்னம்பிக்கை மேம்படும். 


பூரம் : சோர்வு உண்டாகும்.


உத்திரம் : ஒத்துழைப்பு கிடைக்கும். 

---------------------------------------




கன்னி

அக்டோபர் 11, 2022



எதிலும் அவசரமின்றி சிந்தித்து செயல்படவும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். எதிர்பாராத புதிய வாய்ப்புகளின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். வரவுக்கு ஏற்ப செலவுகள் ஏற்படும். புதிய நபர்கள் அறிமுகத்தின் மூலம் மாற்றம் உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்




உத்திரம் : சிந்தித்து செயல்படவும்.


அஸ்தம் : விவாதங்களை தவிர்க்கவும். 


சித்திரை : மாற்றம் உண்டாகும். 

---------------------------------------




துலாம்

அக்டோபர் 11, 2022



வியாபாரத்தில் உள்ள சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். சிந்தனையின் போக்கில் புதிய தெளிவும், உற்சாகமும் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் ஏற்படும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். அமைதி வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்




சித்திரை : சூட்சுமங்களை அறிவீர்கள்.


சுவாதி : நெருக்கம் அதிகரிக்கும். 


விசாகம் : வாய்ப்புகள் உண்டாகும்.

---------------------------------------




விருச்சிகம்

அக்டோபர் 11, 2022



நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சக ஊழியர்களின் ஆதரவால் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். வியாபார பணிகளில் இருப்பவர்கள் மறைமுகமான செயல்பாடுகளின் மூலம் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். அரசு சார்ந்த செயல்பாடுகளின் மூலம் ஆதாயம் உண்டாகும். விரயம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு




விசாகம் : இழுபறிகள் குறையும். 


அனுஷம் : போட்டிகளை சமாளிப்பீர்கள்.


கேட்டை : ஆதாயம் உண்டாகும்.

---------------------------------------




தனுசு

அக்டோபர் 11, 2022



பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். மனதில் சஞ்சலமான சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆன்மிகம் சார்ந்த பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் சிலருக்கு சாதகமாக அமையும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். மாற்றம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்




மூலம் : அனுகூலமான நாள்.


பூராடம் : தெளிவு பிறக்கும்.


உத்திராடம் : சாதகமான நாள்.

---------------------------------------




மகரம்

அக்டோபர் 11, 2022



தாய்வழி உறவினர்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். சேவை நிமிர்த்தமான செயல்பாடுகளில் இருப்பவர்களுக்கு புதிய அனுபவம் ஏற்படும். ஆடம்பர பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் ஈடேறும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். இணையம் சார்ந்த பணிகளில் சிந்தித்து செயல்படவும். கற்பிக்கும் திறனில் மாற்றம் ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை




உத்திராடம் : அனுகூலம் உண்டாகும்.


திருவோணம் : ஆர்வம் அதிகரிக்கும். 


அவிட்டம் : மாற்றம் ஏற்படும்.

---------------------------------------




கும்பம்

அக்டோபர் 11, 2022



விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் உயர் அதிகாரிகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளின் மூலம் சாதகமான சூழல் அமையும். எதிர்ப்புகள் விலகும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




அவிட்டம் : ஆர்வம் மேம்படும்.


சதயம் : உதவி கிடைக்கும். 


பூரட்டாதி : சாதகமான நாள்.

---------------------------------------




மீனம்

அக்டோபர் 11, 2022



மறைமுகமான தடைகளின் மூலம் எண்ணிய செயல்பாடுகள் காலதாமதமாக நிறைவுபெறும். செயல்பாடுகளில் சுதந்திரத்தன்மை அதிகரிக்கும். தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். சிலருக்கு ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். முக்கிய முடிவினை எடுக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். பெருமை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்




பூரட்டாதி : காலதாமதம் உண்டாகும்.


உத்திரட்டாதி : நெருக்கடிகள் குறையும். 


ரேவதி : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...