கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கலைத் திருவிழாப் போட்டிகள் - 2022-2023ஆம் ஆண்டு - மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழக முதல்வர் அவர்களால் 12-01-2023 அன்று பரிசுகள் / விருதுகள் வழங்கும் விழா - மாநிலத் திட்ட இயக்குநரின் கடிதம் (Kalai Thiruvizha Competitions - 2022-2023 - Prizes / Awards Ceremony by Chief Minister of Tamil Nadu on 12-01-2023 to the winning students at State Level - Letter from State Project Director) ந.க.எண்: 3195/ ஆ3/ ஒபக/ 2022, நாள்: 04-01-2023...

 

 

>>> கலைத் திருவிழாப் போட்டிகள் - 2022-2023ஆம் ஆண்டு - மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழக முதல்வர் அவர்களால் 12-01-2023 அன்று பரிசுகள் / விருதுகள் வழங்கும் விழா - மாநிலத் திட்ட இயக்குநரின் கடிதம் (Kalai Thiruvizha Competitions - 2022-2023 - Prizes / Awards Ceremony by Chief Minister of Tamil Nadu on 12-01-2023 to the winning students at State Level - Letter from State Project Director) ந.க.எண்: 3195/ ஆ3/ ஒபக/ 2022, நாள்: 04-01-2023...



>>> கலைத் திருவிழாப் போட்டிகள் - 2022-2023ஆம் ஆண்டு - மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் பட்டியல்...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.01.2023 - School Morning Prayer Activities...

 

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.01.2023 - School Morning Prayer Activities...


திருக்குறள் :


பால் :அறத்துப்பால் 


இயல்:இல்லறவியல் 


அதிகாரம்: இனியவை கூறல்


குறள் : 99

இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ

வன்சொல் வழங்கு வது


பொருள்:

பிறர் சொல்லும் இனிய சொற்கள், இன்பம் தருவதை உணர்ந்தவன், பிறர்க்கும் தனக்கும் துன்பம் தரும் கடும் சொற்களைப் பேசுவது என்ன பயன் கருதியோ?


பழமொழி :

Action speaks louder than words.

சொற்களை விட செயல்கள் வலிமை வாய்ந்தவை.


இரண்டொழுக்க பண்புகள் :


1.நான் செல்பேசியை தேவைக்கு மட்டுமே பயன்படுத்துவேன்.


2. செல்பேசியில் விளையாட்டு விளையாடி ,நேரத்தை வீணடிக்க மாட்டேன்.


பொன்மொழி :


உண்மையான மதிப்புமிக்க விடயம் உள்ளுணர்வு மட்டுமே. --ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்



பொது அறிவு :


1. திருக்குறள் எவ்வகை நூல்களுள் ஒன்று ? 


பதினென் கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்று


 2. வில்லியம் மார்கன் கண்டுபிடித்த விளையாட்டு எது? 


வாலிபால்.


English words & meanings :


forth - going forward, adverb. முன்னோக்கி செல்லுதல். வினையுரிச் சொல். fourth - number four. noun. எண் நான்கு. பெயர்ச் சொல் 


ஆரோக்ய வாழ்வு :


அரை ஸ்பூன் இஞ்சிச்சாறு, ஒரு ஸ்பூன் எலுமிச்சம்சாறு, ஒரு ஸ்பூன் புதினாச்சாறு, ஒரு ஸ்பூன் தேன் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து தினமும் மூன்று வேளை சாப்பிட்டால் இருமல், தொண்டைவலி குணமாகும்.


NMMS Q


நெகிழிப் பணம் என்பது_______. 


விடை: பற்று அட்டை. விளக்கம்: பற்று அட்டை என்பது, வாடிக்கையாளர் தனது வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை தானியங்கி இயந்திரத்தின் மூலம் பணம் எடுப்பது, பொருள்கள் மற்றும் சேவைகளுக்கான கட்டணங்களை வழங்குவது போன்ற பணப்பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தப்படும் அட்டையாகும்.


நீதிக்கதை


நேரம் தவறாமை


சுனில், ஒரு பள்ளி பருவ மாணவன் ஒரு நாள் கா... கா.... என்று கத்திக்கொண்டு ஒரு காகம் பறந்து வந்து, அவன் வீட்டின் அருகிலுள்ள மரக்கிளையில் அமர்ந்தது.


சுனில், அந்தக் காகத்தைப் பிடிக்க ஆசை, பிடிக்க ஓடினான். உடனே அது பறந்து சென்றது. சுனில் திரும்பி வந்து காத்திருந்தான். அந்தக் காகம் மீண்டும் அங்கு வந்து அங்கும் இங்கும் நடந்தது. சுனில் தான் சாப்பிட்டு கொண்டிருந்த வடையைப் பிய்த்துக் காகத்துகுப் போட்டான். காகம் வேகமாக ஓடி வந்தது.


வடையைக் கொத்திக் கொண்டு பறந்தோடியது. சுனில்க்கு அந்தக் காகத்தைப் பிடிக்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது. வெகுநேரம் காத்திருந்தான். அந்தக் காகம் மீண்டும் வரவேயில்லை.


இரண்டாம் நாள் அந்த இடத்திற்கு, அதே நேரத்திற்கு அந்தக் காகம் வந்தது. அங்கும் இங்கும் நடந்தது. இன்று அந்தக் காகம் கைக்கு எட்டும் தொலைவிற்குள் நடந்து வந்தது. சுனில் தன்னிடம் இருந்த நிலக்கடலையை காகத்தின் முன் வீசினான்.


காகம் தலையைச் சாய்த்துச் சாய்த்துப் பார்த்துக் கொண்டே ஒவ்வொரு கடலையாகக் கொத்தித் தின்றது. சுனில் அருகில் சென்றதும் உடனே பறந்தோடியது. மூன்றாம் நாளும் அந்தக் காகம் அந்த இடத்துக்கு, அதே நேரத்துக்கு வந்தது. இன்று அச்சப்படாமல் காகம் சுனிலின் அருகில் வந்தது. சுனிலின் கையை ஆவலோடு பார்த்தது.


சுனில் வீட்டிற்குள் சென்று அரிசியை எடுத்து வந்து போட்டான். காகம் பொறுமையாக ஒவ்வொரு அரிசியாகப் பொறுக்கித் தின்றது. சுனில் காகத்தைப் பிடிக்க எழுந்தான். காகம் பறந்தோடியது. ஒவ்வொரு நாளும் காகம் சரியான நேரத்துக்கு வந்தது.


சுனிலும் காகமும் நண்பர்களானார்கள். சுனில் சொல்வதைக் கேட்டுக் காகம் புரிந்து கொண்டது போலத் தலையை ஆட்டும். சரியான நேரத்துக்கு வரும் காகத்தைக் கண்டு சுனில் வியந்தான். காகத்தால் எப்படி முடிகிறது? மணிக்கூடு இல்லை, பேசத் தெரியாத, எழுதத் தெரியாத, ஆனால் சரியான நேரத்துக்கு அந்தக் காகம் எப்படி வந்து போகிறது.


சுனில் வியந்தான். தனது நண்பனான காகத்தைப் போல, தானும் சரியான நேரத்துக்குப் பள்ளிக்குச் செல்வது, அனைத்து வேலைகளையும் சரியான நேரத்தில் தொடங்குவது என முடிவு எடுத்துக் கொண்டான். சரியான நேரத்துக்குப் பள்ளிக்கு வந்து அனைத்தையும் முறையாகச் செய்யும் சுனிலை அனைவரும் பாராட்டினார்கள்.


இன்றைய செய்திகள்


05.01.2023


* மதுரை ஆவின் நிறுவனத்தில் முறைகேடாக பணியில் சேர்ந்ததாக 47 பேரின் பணி நியமனத்தை ரத்து செய்து ஆவின் நிர்வாக ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.


* தமிழகத்தில் புதிதாக 92,721 பேர் காசநோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது முந்தைய ஆண்டை விட 11.5 சதவீதம் அதிகமாகும்.


* ஆசிரியர்கள் போட்டித் தேர்வில் பங்கேற்க அனுமதி: வழிமுறைகள் வெளியீடு.


* தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகத்தில் ரூ.16 கோடியில் ஜிம்னாசியம், ஓடுதளம்: முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.


* தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்திற்கு ரூ.19,744 கோடி நிதி அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.


* அக்னி பாதை திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட வீரர்களுக்கு 6 மாத பயிற்சி தொடக்கம்.


* ஐ.நா. பாதுகாப்பு அவையின் தற்காலிக உறுப்பு நாடுகளாக 5 நாடுகள் பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில், அவற்றில் 2 நாடுகள் முதன்முறையாக இந்த வாய்ப்பைப் பெற்றுள்ளன.


* மெகிவ்வா நகரில் ரஷ்யாவின் ராணுவ தளத்தில் உக்ரைன் நடத்திய தாக்குதலில் ரஷ்ய ராணுவ வீரர்கள் 89 பேர் பலியாகினர்.


* இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.


* அடிலெய்டு சர்வதேச டென்னிஸ்: ஜோகோவிச், மெட்விடேவ் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்.


Today's Headlines


* In Madurai Aavin 47 people's appointment was cancelled by Aavin MD due to the malpractice in their appointments.


* In TN 92,721 people were affected by tuberculosis. This is 11.5% more than the previous year. 


* Teachers can participate in competitive exams. A guide line was released


* In TN sports University a gymnasium and a running ground was built worth of 16 crores. CM inaugurate it through conference call. 


* The Union Cabinet has approved the allocation of Rs. 19,744 crore for the National Green Hydrogen Initiative. 


* 6 months training for soldiers who got selected under the scheme Agni Bath. 


* In UN's Security Council 5 nations today take oath as temporary members out of the 5 for 2 countries it is a first time. 


* 89 Russian Soldiers were killed in an attack by Ukraine on a Russianilitary base in the city of Megivva. 


* India won the first T20I against Sri Lanka by 2 runs. 


* Adelaide International Tennis : Fjokovic, Medvedev advanced to 2nd round.



இன்றைய (05-01-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 



இன்றைய  (05-01-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

ஜனவரி 05, 2023




பயணங்கள் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும். பாதியில் நின்ற வேலைகளை செய்து முடிப்பீர்கள். எண்ணங்களின் போக்கில் மாற்றம் உண்டாகும். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். விளையாட்டு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். உற்சாகம் நிறைந்த நாள்.


  


அதிர்ஷ்ட திசை : கிழக்கு 

 

அதிர்ஷ்ட எண் :  9

 

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்


 

அஸ்வினி :  மாற்றம் உண்டாகும்.

 

பரணி :  அனுபவம் வெளிப்படும்.

 

கிருத்திகை :  ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------

 


ரிஷபம்

ஜனவரி 05, 2023



குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். எதிராக செயல்பட்டவர்கள் விலகிச்செல்வார்கள். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். உணவு சார்ந்த செயல்பாடுகளில் கட்டுப்பாடு வேண்டும். தள்ளிப்போன சில காரியங்கள் திடீரென முடியும். பொருளாதார உயர்வை பற்றிய சிந்தனைகள் மேம்படும். போட்டிகள் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு

  

அதிர்ஷ்ட எண் :  6

 

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்


  

கிருத்திகை :  மகிழ்ச்சியான நாள்.

 

ரோகிணி :  சிந்தித்து செயல்படவும்.

  

மிருகசீரிஷம் : சிந்தனைகள் மேம்படும்.

---------------------------------------

 


மிதுனம்

ஜனவரி 05, 2023



மனதில் ஒருவிதமான குழப்பமும், அமைதியின்மைக்கான சூழ்நிலையும் உண்டாகும். பேச்சுக்களில் சற்று கவனம் வேண்டும். மற்றவர்களுக்கு உதவும் போது சிந்தித்து செயல்படவும். உடல் தோற்றத்தில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழல் உண்டாகும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் காலதாமதம் ஏற்படும். சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். வெற்றி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு

 

அதிர்ஷ்ட எண் :  3

 

அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு


 

மிருகசீரிஷம் : குழப்பம் உண்டாகும்.

  

திருவாதிரை : மாற்றங்கள் ஏற்படும்.

  

புனர்பூசம் : தாமதம் உண்டாகும்.

---------------------------------------

 


கடகம்

ஜனவரி 05, 2023



சுபகாரிய முயற்சிகளில் அலைச்சலுக்கு பின்பு சாதகமான முடிவுகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் சிறு சிறு வாக்குவாதங்கள் தோன்றி மறையும். கலை சார்ந்த பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். பிள்ளைகளின் திறமைகளை அறிவீர்கள். அரசு சார்ந்த பணிகளில் அனுகூலம் உண்டாகும். ஆடம்பரமான பொருட்கள் மீது ஆர்வம் அதிகரிக்கும். உயர்வு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் :  3


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




புனர்பூசம் : முடிவுகள் சாதகமாகும்.

  

பூசம் : விவேகமான நாள்.


ஆயில்யம் :  அனுகூலம் உண்டாகும்.

---------------------------------------

    



சிம்மம்

ஜனவரி 05, 2023



அரசு வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில் அபிவிருத்திக்கான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் மாற்றங்கள் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம்  உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சுபமுயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். முயற்சிகள் ஈடேறும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் :  5


அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்



மகம் : உதவி கிடைக்கும். 


பூரம் : ஒற்றுமை அதிகரிக்கும். 


உத்திரம் : சாதகமான நாள்.

---------------------------------------



கன்னி

ஜனவரி 05, 2023



மனதளவில் எதையும் செய்ய முடியும் என்ற தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தகவல் தொடர்புத் துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். சுபகாரியங்களை பேசி முடிப்பதற்கான தருணங்கள் சாதகமாக அமையும். வெளிவட்டாரத்தில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். பணிவு வேண்டிய நாள்.



 

அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் :  3


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



உத்திரம் :  தைரியம் ஏற்படும். 


அஸ்தம் : ஆதரவு கிடைக்கும். 


சித்திரை : அனுபவம் உண்டாகும்.

---------------------------------------




துலாம்

ஜனவரி 05, 2023



நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வர்த்தகம் சார்ந்த துறையில் புதுவிதமான நுட்பங்களுடன் தனலாபத்தை மேம்படுத்துவீர்கள். செய்கின்ற முயற்சிகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். கணவன்-மனைவிக்கிடையே நெருக்கமும், புரிதலும்  மேம்படும். வெளியூர் தொடர்பான புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். தவறிய சில பொருட்கள் கிடைக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் :  7


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



சித்திரை : தீர்வு கிடைக்கும்.


சுவாதி :முன்னேற்றம் உண்டாகும்.


விசாகம் : ஆதரவான நாள்.

---------------------------------------



விருச்சிகம்

ஜனவரி 05, 2023



காப்பீடு சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் நிதானமாக செயல்பட வேண்டும். புதிய நபர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். கடன் தொடர்பான நெருக்கடிகள் அதிகரிக்கும். மற்றவர்களின் மூலம் மனதளவில் புதிய மாற்றங்கள் உண்டாகும். தற்பெருமை இன்றி அனைவரையும் அனுசரித்து செல்லவும். செல்லப்பிராணிகள் வழியில் விரயங்கள் ஏற்படும். உணர்ச்சிவசப்படாமல் பொறுமையுடன் செயல்படவும். விவேகம் வேண்டிய நாள். 




 

அதிர்ஷ்ட திசை : தெற்கு

 

அதிர்ஷ்ட எண் :  9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



விசாகம் : நெருக்கடிகள் அதிகரிக்கும்.


அனுஷம் : மாற்றங்கள் பிறக்கும்.


கேட்டை : பொறுமை வேண்டும்.

---------------------------------------




தனுசு

ஜனவரி 05, 2023



சுபகாரியம் தொடர்பான விஷயங்களில் ஏற்பட்ட தடைகள் விலகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் புது உற்சாகத்தைக் கொடுக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரம் தொடர்பான நெருக்கடிகள் குறைவதன் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் விற்பனையில் லாபம் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் ஆதரவான சூழல் ஏற்படும். இன்பம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் :  3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




மூலம் : தடைகள் விலகும்.


பூராடம் : நெருக்கடி குறையும்.

 

உத்திராடம் : லாபகரமான நாள்.

---------------------------------------




மகரம்

ஜனவரி 05, 2023



குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய வேலை நிமிர்த்தமான செயல்பாடுகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் ஏற்படும். அரசியல் சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வாகனம் தொடர்பான வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். யோகம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் :  2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.


திருவோணம் : புரிதல் ஏற்படும்.

 

அவிட்டம் : மேன்மை உண்டாகும்.

---------------------------------------



கும்பம்

ஜனவரி 05, 2023



வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். குழப்பம் நீங்கி தெளிவான மனநிலையில் இருப்பீர்கள். பாகப்பிரிவினை தொடர்பான முயற்சிகள் ஈடேறும். குலதெய்வ வழிபாட்டிற்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். மாணவர்களுக்கு விளையாட்டுகளில் ஆர்வம் அதிகரிக்கும். பங்குதாரர்களிடம் ஏற்பட்ட சில பிரச்சனைகள் தீரும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும்.  பொறுமை வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் :  9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



அவிட்டம் : சிந்தனைகள் அதிகரிக்கும். 


சதயம் : பயணங்கள் கைகூடும்.


பூரட்டாதி : பொறுப்புகள் குறையும்.

---------------------------------------

  



மீனம்

ஜனவரி 05, 2023



வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும். சாமர்த்தியமான பேச்சுக்களின் மூலம் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். புதிய வீடு மற்றும் மனை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உறவினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். பணியில் உள்ளவர்களுக்கு மேலான பொறுப்புகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் சம்பந்தமான சுபவிரயங்கள் ஏற்படும். தொலைபேசி தொடர்பான செய்திகளின் மூலம் பயணங்களை மேற்கொள்வீர்கள். இன்னல்கள் விலகும் நாள்.


  

அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் :  1


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



பூரட்டாதி : நன்மை உண்டாகும். 


உத்திரட்டாதி : சிந்தனை அதிகரிக்கும்.


ரேவதி : சுபவிரயங்கள் ஏற்படும்.

---------------------------------------


எண்ணும் எழுத்தும்‌ - பருவம் 3 - மதிப்பீடுகள் கால அட்டவணை - வளரறி மதிப்பீடுகள் (ஆ) - FA (b) & தொகுத்தறி மதிப்பீடுகள் - SA - மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (ENNUM EZHUTHUM - TERM 3 - ASSESSMENTS SCHEDULE - FORMATIVE ASSESSMENTS (b) - FA (b) & SUMMATIVE ASSESSMENTS - SA - STATE COUNCIL OF EDUCATIONAL RESEARCH AND TRAINING)...

           

>>> எண்ணும் எழுத்தும்‌ - பருவம் 3 - மதிப்பீடுகள் கால அட்டவணை - வளரறி மதிப்பீடுகள் (ஆ) - FA (b) & தொகுத்தறி மதிப்பீடுகள் - SA - மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (ENNUM EZHUTHUM - TERM 3 -  ASSESSMENTS SCHEDULE - FORMATIVE ASSESSMENTS (b) - FA (b) & SUMMATIVE ASSESSMENTS - SA - STATE COUNCIL OF EDUCATIONAL RESEARCH AND TRAINING)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




இன்றைய (04-01-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 



இன்றைய (04-01-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

ஜனவரி 04, 2023




குடும்ப உறுப்பினர்களுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். புதிய வாகனங்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். பெரிய மனிதர்களின் அறிமுகம் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

 

அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்




அஸ்வினி : ஒற்றுமை அதிகரிக்கும்.


பரணி : மகிழ்ச்சியான நாள்.


கிருத்திகை : அறிமுகம் ஏற்படும்.

---------------------------------------



ரிஷபம்

ஜனவரி 04, 2023




உத்தியோக பணிகளில் எதிர்பாராத சில மாற்றங்கள் ஏற்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். எதிலும் அவசரமின்றி நிதானத்துடன் செயல்படவும். உடன் பிறந்தவர்களை பற்றிய சிந்தனைகள் மேம்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்களுடன் அனுசரித்து நடந்து கொள்ளவும். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். அலைச்சல் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




கிருத்திகை : மாற்றங்கள் ஏற்படும்.


ரோகிணி : நிதானத்துடன் செயல்படவும்.

 

மிருகசீரிஷம் : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------



மிதுனம்

ஜனவரி 04, 2023




குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் நிதானத்துடன் செயல்படவும். விலை உயர்ந்த பொருட்களை கையாள்வதில் கவனம் வேண்டும். பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்வது நல்லது. வியாபார பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த அலைச்சலுக்கு ஏற்ப தனலாபம் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மேம்படும். அசதிகள் விலகும் நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




மிருகசீரிஷம் : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.


திருவாதிரை : விவாதங்களை தவிர்க்கவும்.


புனர்பூசம் : ஒத்துழைப்பு மேம்படும்.

---------------------------------------



கடகம்

ஜனவரி 04, 2023




மனதில் எண்ணிய காரியங்கள் கைகூடும். புதிய பொருட்சேர்க்கை ஏற்படும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் சிலருக்கு அமையும். சிந்தனையில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். கூட்டாளிகளின் ஒற்றுமை மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். சேமிப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். சமூக பணிகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்




புனர்பூசம் : காரியங்கள் கைகூடும்.

 

பூசம் : தெளிவு பிறக்கும்.

 

ஆயில்யம் : வாய்ப்புகள் அமையும்.

---------------------------------------



சிம்மம்

ஜனவரி 04, 2023




விரும்பிய பொருட்களை வாங்குவதால் மகிழ்ச்சி உண்டாகும். கனிவான பேச்சுக்களின் மூலம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பொது காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வெளியூர் பயணம் தொடர்பான வாய்ப்புகள் கைகூடும்.  குடும்பத்தில் அமைதியான சூழ்நிலைகள் உண்டாகும். சுயதொழிலில் லாபகரமான வாய்ப்புகள் ஏற்படும். வருத்தம் விலகும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



மகம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


பூரம் : வாய்ப்புகள் கைகூடும்.

 

உத்திரம் : லாபகரமான நாள்.

---------------------------------------



கன்னி

ஜனவரி 04, 2023




மனதை உறுத்திக் கொண்டிருந்த சில விஷயங்களில் தெளிவான முடிவு கிடைக்கும். வியாபாரம் தொடர்பான பணிகளில் மந்தமான சூழ்நிலைகள் ஏற்படும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். பெரிய மனிதர்களின் ஆதரவு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். அமைதி வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

 

அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்




உத்திரம் : முடிவு கிடைக்கும்.


அஸ்தம் : மந்தமான நாள்.


சித்திரை :  நம்பிக்கை உண்டாகும்.

---------------------------------------



துலாம்

ஜனவரி 04, 2023




பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மற்றவர்களை நம்பி முடிவு எடுப்பதில் கவனம் வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். முன் கோபத்தினை குறைத்துக் கொள்வது தேவையற்ற பகைமையை தவிர்க்கும். வியாபாரம் தொடர்பான பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். தேவையற்ற வாக்குறுதிகளை தவிர்க்கவும். செலவுகள் குறையும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




சித்திரை : பொறுப்புகள் அதிகரிக்கும். 


சுவாதி : ஏற்ற, இறக்கமான நாள்.


விசாகம் : வாக்குறுதிகளை தவிர்க்கவும்.

---------------------------------------



விருச்சிகம்

ஜனவரி 04, 2023




நண்பர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரம் தொடர்பான பணிகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். மற்றவர்களுடன் பழகும் தன்மையில் மாற்றம் ஏற்படும். புதிய முயற்சிகள் கைகூடும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். வெளியூர் பயணங்களின் மூலம் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். செயல்பாடுகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு

 

அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




விசாகம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

 

அனுஷம் : முயற்சிகள் கைகூடும்.

 

கேட்டை : எதிர்ப்புகள் குறையும்.

---------------------------------------



தனுசு

ஜனவரி 04, 2023




இழுபறியாக இருந்துவந்த தனவரவு கிடைக்கும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் கைகூடும். மற்றவர்களுக்கு தேவையான பணிகளை செய்து முடிப்பீர்கள். உணர்வுப்பூர்வமாக பேசுவதை குறைத்துக் கொண்டு சூழ்நிலையை அறிந்து செயல்படவும். சவாலான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். சக ஊழியர்களிடம் தேவையற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். கவலைகள் குறையும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




மூலம் : முயற்சிகள் கைகூடும்.

 

பூராடம் : சூழ்நிலை அறிந்து செயல்படவும்.


உத்திராடம் : கவனம் வேண்டும்.

---------------------------------------



மகரம்

ஜனவரி 04, 2023




கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பாராத சிலரின் சந்திப்புகள் மனதளவில் மாற்றத்தை ஏற்படுத்தும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் மேம்படும். உத்தியோக பணிகளில் திறமைக்கு ஏற்ப வாய்ப்புகள் அமையும். தொலைந்து போன சில பொருட்கள் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். வரவுகள் மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




உத்திராடம் : ஒற்றுமை அதிகரிக்கும்.

 

திருவோணம் : திறமைகள் வெளிப்படும்.


அவிட்டம் : பிரச்சனைகள் குறையும்.

---------------------------------------



கும்பம்

ஜனவரி 04, 2023




வங்கி தொடர்பான உதவி கிடைக்கும். உறவினர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். வியாபாரப் பணிகளில் வெளியூர் நபர்களின் மூலம் நன்மை உண்டாகும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். வழக்கு சார்ந்த விஷயங்களில் புதிய முடிவுகளை எடுப்பீர்கள். தாமதம் குறையும் நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




அவிட்டம் : உதவிகள் கிடைக்கும்.


சதயம் : நன்மை உண்டாகும்.

 

பூரட்டாதி : முடிவு கிடைக்கும்.

---------------------------------------



மீனம்

ஜனவரி 04, 2023




குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். புதிய செயல் திட்டங்களை அமைப்பீர்கள். எதிர்ப்புகளை  அறிந்து வெற்றி கொள்வீர்கள். கடன் சார்ந்த பிரச்சினைகள் குறையும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். அனுபவம் மிக்க வேலை ஆட்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். சோர்வுகள் நீங்கி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தெளிவு பிறக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்




பூரட்டாதி : வெற்றி கொள்வீர்கள்.


உத்திரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.

 

ரேவதி : சுறுசுறுப்பான நாள்.

---------------------------------------


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.01.2023 - School Morning Prayer Activities...

 

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.01.2023 - School Morning Prayer Activities...


திருக்குறள் :


பால் :அறத்துப்பால் 


இயல்:இல்லறவியல் 


அதிகாரம்: இனியவை கூறல்


குறள் : 98

சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்

இம்மையும் இன்பம் தரும்.


பொருள்:

பிறர்க்கு துன்பம் தராத

இனியசொல் ஒருவனுக்கு அவன் வாழும் போதும், வாழ்ந்து மறைந்த பிறகும் புகழைத் தரக்கூடியதாகும்.


பழமொழி :

Constant change is a sign of progress.


தொடர்ந்த மாற்றம், முன்னேற்றத்திற்கான அறிகுறி.


இரண்டொழுக்க பண்புகள் :


1.நான் செல்பேசியை தேவைக்கு மட்டுமே பயன்படுத்துவேன்.


2. செல்பேசியில் விளையாட்டு விளையாடி ,நேரத்தை வீணடிக்க மாட்டேன்.


பொன்மொழி :


என் உள்ளுணர்வு என்னை ஒருபோதும் தோல்வியடையச் செய்யாது, அதற்குச் செவிசாய்க்காத போது தோல்வியடைவது நான்தான். --ஹஸ்ரத் இனாயத் கான்



பொது அறிவு :


1. நாலடியார் என்ற நூலைத் தொகுத்தவர்கள் யார்? 


 சமண முனிவர்கள். 


 2. தமிழ் இலக்கியத்தின் பொற்காலம் எனப்படுவது? 


 சங்க காலம்.


English words & meanings :


flour - powdered grain.noun. மாவு. பெயர்ச் சொல். flower - reproductive part of the plant.noun. மலர்

. பெயர்ச் சொல் 


ஆரோக்ய வாழ்வு :


ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி நசுக்கி, ஒரு டம்ளர் பாலில் கலந்து காய்ச்சி வடிகட்டி, அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து குடித்துவர, இருமல், சளி தொல்லைகள் நீங்கும்.


NMMS Q


ஒரு நாட்டில் எந்தவித தடையும் இன்றி நிரந்தரமாக வசிப்பதற்கும் பணி புரிவதற்கும் உரிமை பெறும் அந்நியர்_________ எனப்படுகிறார்.


 விடை: இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்


ஜனவரி 04 


லூயிஸ் பிரெய்ல் அவர்களின் பிறந்தநாள்


லூயிஸ் பிரெய்ல் (ஜனவரி-4, 1809. ஜனவரி-6, 1852, பிரான்ஸ்) பார்வையற்றவர்களுக்கான பிரெய்ல் எழுத்தினை உருவாக்கியவர். பிரெஞ்சுக்காரரான இவர் பார்வையற்றவர். பார்வையற்றவர்கள் தடவிப் பார்த்துப் படிக்க ஏற்ற பிரெய்லி எழுத்தினைக் கண்டுபிடித்தார். பிரெயில் முறையில் ஒன்று முதல் ஆறு புடைப்புப்புள்ளிகளையும் ஓட்டைகளையும் கொண்டு எழுதிய எழுத்துகளை விரல்களை வைத்துத் தடவுதலின் மூலம் இனங்கண்டு கொள்வர்.




உலக பிரெயில் நாள்


புற்றெழுத்து அல்லது பிரெயில் (Braille) என்கிற எழுத்து முறை 1821-இல் பார்வையற்றோர்க்குப் படிக்க உதவ லூயி பிரெயில் என்கிற பிரான்சியரால் உருவாக்கப்பட்ட எழுத்து முறை ஆகும். ஒவ்வொரு பிரெயில் எழுத்தும் ஆறு புள்ளிகள் கொண்டுள்ள செவ்வகக் கலம் ஆகும். புள்ளிகள் 6 இடநிலைகளில் எங்கேயும் உயர்த்தப்பட்டு (26), அதாவது 64 எழுத்துச் சேர்ப்புகள் உருவாக்கப்படலாம். சில இடங்களில் புள்ளிகள் உயர்த்தப்படாமல் அமையலாம். இலக்கணக் குறிகளுக்கு தனி எழுத்துகள் உண்டு.


பிரெயில் எழுத்து முறையின் கருத்தமைவு நெப்போலியன் கோரிக்கைக்கு ஏற்ப சார்லஸ் பாபேஜ் உருவாக்கிய இரகசிய தொடர்பு முறையில் தோற்றுவிக்கப்பட்டது. பாபேஜ் பார்வையற்றோர் கல்வி நிலையத்தில் லூயி பிரேயிலை சந்தித்து, லூயி பிரெயிலின் ஆலோசனைகளுக்கு ஏற்ப குறிமுறையை மாற்றி அமைத்தார்.



நீதிக்கதை


ரூபாய் நோட்டு


ஒரு கிராமத்தில் ஒரு பள்ளி இருந்தது. அந்த பள்ளியில் குமார் எனும் சிறுவன் படித்து வந்தான். ஒருநாள் குமார் சோகமாக இருப்பதை கண்ட ஆசிரியர் அவனிடம் காரணம் கேட்டார். அதற்கு பதிலளித்த குமார் தான் ஒரு தவறு செய்துவிட்டதாகவும், அந்த தவறை காரணமாக காட்டி அவனுடைய நண்பர்கள் அவனை வெறுத்து ஒதுக்குவதாகவும் கூறினான்.


செய்த தவறை உணர்ந்த குமார் தன் நண்பர்களை எண்ணி ஏங்குவதை அறிந்துகொண்ட ஆசிரியர் குமாருக்கு உதவி செய்ய நினைத்தார். அடுத்த நாள் வகுப்பிற்கு சென்ற ஆசிரியர், ஒரு 50 ரூபாய் நோட்டை கையில் வைத்து இது யாருக்கு வேண்டும் என்று மாணவர்களிடம் கேட்டார். துள்ளி எழுந்த மாணவர்கள் அனைவரும் கைகளை உயர்த்தினர்.


மாணவர்களின் செய்கையை பார்த்த ஆசிரியர், அந்த நோட்டை கைகளால் கசக்கி இப்போது அந்த ரூபாய் நோட்டு யாருக்கு வேண்டும் என கேட்டார். அப்போதும் மாணவர்கள் கைகளை தூக்கியவாறே நின்றுகொண்டிருந்தனர்.


இம்முறை ரூபாய் நோட்டினை காலில் மிதித்த ஆசிரியர் மாணவர்களிடம் அதே கேள்வியை கேட்டார். மாணவர்களிடம் எந்த ஒரு மாற்றமும் இல்லை. வகுப்பிலிருந்த அனைவருக்கும் அந்த 50 ரூபாய் வேண்டும் என்பது போல் கையை இறக்காமல் நின்றனர்.


கையில் ரூபாய் நோட்டை எடுத்த ஆசிரியர், இந்த 50 ரூபாய் நோட்டு அழுக்காக இருந்தாலும், சரி கசங்கி இருந்தாலும் சரி அதன் மதிப்பு குறைவதில்லை. அதே போல் சில நேரங்களில் நாம் தெரியாமல் செய்யும் தவறுகள் நம் மதிப்பை குறைத்துவிடாது. ஒரு மனிதன் தவறு செய்வது இயல்பு, அவன் தான் செய்த தவறை உணர்ந்துவிட்டாலே அவன் மன்னிக்கப்பட வேண்டும்.


அந்த வகையில் இந்த வகுப்பில் படிக்கும் குமார் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ஒரு தவறை செய்துவிட்டான். அந்த தவறு ரூபாய் நோட்டின்மேல் பட்டிருக்கும் அழுக்கை போன்றது. அதனால் குமாரின் மதிப்பு எப்போதும் குறையாது. எனவே, தெரியாமல் செய்த தவறுக்காக குமாரை ஒதுக்காமல் அவனுடன் சேர்ந்து பழகுங்கள் என ஆசிரியர் கூறினார். ஆசிரியர் கூறிய கதையில் இருந்த உண்மையை உணர்ந்த சக மாணவர்கள் குமாரிடம் மன்னிப்பு கேட்டு அவனை தங்களுடன் சேர்த்து கொண்டனர்.


இன்றைய செய்திகள்


04.01.2023


* தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,895 கவுரவ விரிவுரையாளர்கள் பணியிடங்களை நிரப்ப இன்று முதல் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி நடைபெறும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.


* போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை: மருந்துக் கடைகளில் தீவிர சோதனை நடத்திட முதல்வர் ஸ்டாலின் அறிவுரை.


* பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வழங்கும் பணி தொடக்கம்: ஜனவரி 9 முதல் பொருட்கள் விநியோகம்.


* தமிழக வணிக வரித்துறையில் உதவியாளர்களாக பணியாற்றும் 1,000 பேருக்கு துணை மாநில வரி அலுவலர்களாக பதவி உயர்வு அளிக்க அரசு ஒப்புதல் தந்துள்ளது.


* கரோனா ஆபத்து அதிகமுள்ள சீனா, தென் கொரியா, ஜப்பான், தாய்லாந்து, ஹாங்காங், சிங்கப்பூர் ஆகிய 6 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.


* சிபிஐ உட்பட விசாரணை ஏஜென்சிகளின் தகவல்களை எளிதில் அணுகுவதற்கான புதிய மென்பொருளை அமலாக்கத் துறை உருவாக்கி வருகிறது. அந்த மென்பொருளுக்கு "சீடோஸ்" என பெயரிடப்பட்டுள்ளது.


* அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகள் எங்கள் நாட்டுப் பயணிகளை மட்டும் குறிவைக்கிறது - கரோனா கட்டுப்பாடுகளுக்கு சீனா கொந்தளிப்பு.


* அகிலேஷ் தாஸ் குப்தா மெமோரியல் அகில இந்திய சீனியர் தரவரிசை பாட்மிண்டன் போட்டியில் ஆடவர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த ரித்விக் சஞ்சீவி தங்கப் பதக்கம் வென்றார்.


* இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா சேர்க்கப்பட்டுள்ளதாகஇந்திய கிரிக்கெட் வாரியத்தின் சீனியர் தேர்வு கமிட்டிக் குழு அறிவித்துள்ளது.



Today's Headlines


Higher Education Minister Ponmudi has said that the certificate verification process will be held from today to fill the vacant 1,895 honorary lecturer posts in government arts and science colleges in Tamil Nadu.


 Anti-narcotics drive: Chief Minister Stalin advises intensive raids on drug shops.


 Pongal Gift Package Token Issue started: Distribution of goods from 9th January.


 The government has approved the promotion of 1,000 assistants in the Tamil Nadu Commercial Tax Department as Deputy State Tax Officers.


 RT-PCR test is mandatory for passengers coming to India from 6 countries where the risk of corona is high - China, South Korea, Japan, Thailand, Hong Kong and Singapore.


 The enforcement department is developing a new software for easy access to the informations of investigating agencies, including the CBI.  The software is named "Seedos".


 Countries like USA, France are targeting only our domestic travelers - China is in turmoil over Corona restrictions.


 Rithvik Sanjeevi of Tamil Nadu won the gold medal in men's category at the Akhilesh Das Gupta Memorial All India Senior Ranking Badminton Tournament.


 The Senior Selection Committee of the Indian Cricket Board has announced that fast bowler Bumrah has been included in the Indian cricket team for the ODI series against Sri Lanka.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. (Ms) No: 98, Dated : 30-12-2024, Raising the Additional Incharge Allowance Amount to ₹1000/- for Noon Meal Organisers

  சத்துணவு அமைப்பாளர்களுக்கான கூடுதல் பொறுப்புப் படியை ₹1000/- ஆக உயர்த்தி அரசாணை (நிலை) எண்: 98, நாள் : 30-12-2024 வெளியீடு சத்துணவு அமைப்ப...