கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் (NHIS) - செலவழிக்கப்பட்ட தொகையை மீளக் கோரும் விண்ணப்பங்களுடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் பட்டியல் & காப்பீட்டு நிறுவன முகவரி(List of documents to be attached with applications claiming reimbursement of amount spent & Insurance Company Address)...
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.01.2023 - School Morning Prayer Activities...
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.01.2023 - School Morning Prayer Activities...
திருக்குறள் :
பால் :அறத்துப்பால்
இயல்:இல்லறவியல்
அதிகாரம்: செய்நன்றி அறிதல்
குறள் : 104
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.
பொருள்:
தினை அளவாக மிகச் சிறிய உதவியே செய்யப்பெற்றிருந்தாலும் உதவியின் பயனை நன்கு அறிந்தவர் அதைப் பனை அளவு மிகப் பெரிய உதவியாய்க் கருதுவார்.
பழமொழி :
Don't judge a book by its cover.
புறத்தோற்றம் கண்டு மயங்காதே
இரண்டொழுக்க பண்புகள் :
1.மின்னணு சாதனங்கள் விட மனிதர்கள் முக்கியம். எனவே உற்றாரோடு நல்ல உறவில் இருக்க முயல்வேன்.
2. அனைவரோடும் சிரித்தும் சிந்தித்தும் பேசுவேன்
பொன்மொழி :
ஒரு மனிதனுடைய குணத்தைப் பற்றி அறிவதற்கு அவனுடைய எண்ணங்களையும் செயல்களையும் ஆராய்ந்தால் போதுமானது
பொது அறிவு :
1. நண்டு தன் ஆயுட்காலத்தில் எத்தனை முறை சட்டையை உரிக்கிறது ?
18 முறை.
2. கண்ணால் பார்க்கக்கூடிய கிரகம் எது ?
செவ்வாய்.
English words & meanings :
hear - to listen, verb. கேட்டல். வினைச் சொல். here - at this place. adverb.இங்கே. வினையுரிச் சொல்
ஆரோக்ய வாழ்வு :
ஆளி விதைகள் மற்றும் பால் கலவையானது நீரிழிவு நோயாளிகளுக்கும் நன்மை பயக்கும். உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால் ஆளி விதையை பாலில் கலந்து சாப்பிடலாம். இது இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கும். இதனுடன், நீரிழிவு நோயால் ஏற்படும் பல சிக்கல்களைத் தடுக்க உதவும்.
NMMS Q
IUPAC ன் விரிவாக்கம்_______________
விடை: International Union Of Pure And Applied Chemistry
ஜனவரி 12
தேசிய இளைஞர் நாள்
சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான சனவரி 12 ஆம் தியதி தேசிய இளைஞர் நாள் (National Youth Day) என இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.
1984 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் இந்நாளினை "தேசிய இளைஞர் நாளாக" அறிவித்தது, அதைத்தொடர்ந்து 1985-ல் சனவரி 12-ம் திகதி முதன்முதலாக கொண்டாடப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது.
நீதிக்கதை
ஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்
ஒரு நாள், ஏழை விவசாயி ஒருவர் அருகில் உள்ள கிராமத்திற்கு நடந்து சென்றார். அது ஒரு கோடை காலம். வெயில் சுட்டெரித்து விவசாயிக்கு பசி வயிற்றைக்கிள்ளியது. வெயில் காரணமாக தண்ணீர் தாகமும் எடுத்தது. சோர்வடைந்த அவர், சாலை ஓரத்தில் இருந்த மரத்தடியில் நிழலில் ஒதுங்கினார்.
அப்போது அங்கு ஒரு இளைஞன் வந்தான். அவன் தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்ற எண்ணம் கொண்டவன். தான் சந்திக்கும் நபர்களிடம் தனது புத்திசாலித் தனத்தையும் சொல்லி பெருமை பேசிக் கொள்வான்.
மேலும் தனக்கு தெரியாதது எதுவும் இல்லை. அப்படி தெரிந்தால் அதை தனக்கு கூறுமாறு பிறரிடம் கேட்பான். அவனது இந்த ஆணவப்பெருக்கை அறிந்த பலரும் அவனைக் கண்டால் ஒதுங்கிச் செல்லத் தொடங்கினார்கள். இதை தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்ட அந்த இளைஞன், தன்னைப்போல சிறந்த கல்வியாளர் யாரும் இல்லை என்ற அகந்தையுடன் இருந்தான்.
அந்த இளைஞன் மரநிழலில் ஒதுங்கி இருந்த விவசாயியை பார்த்தான். உடனே அவரிடம் பேச ஆரம்பித்தான். ஐயா விவசாயி நான் நிறைய படித்திருக்கிறேன். எனக்கு எல்லாமே தெரியும். இருந்தாலும் எனக்கு தெரியாத எதுவும் உங்களுக்கு தெரிந்தால் அதை கூறுங்கள் பார்க்கலாம் என்று ஆணவத்துடன் பேசினான்.
அந்த இளைஞனின் ஆணவம் குறித்து அந்த விவசாயி ஏற்கனவே அறிந்திருந்தார். எனவே அவர் அமைதியாக இருந்தார். அது அந்த இளைஞனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவன் என்னதான் பேசினாலும் அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் விவசாயி மௌனம் காத்தார்.
இந்த நிலையில் அந்த இளைஞன் தன்னிடம் இருந்த உணவுப்பொட்டலத்தை பிரித்தான். சாப்பாட்டைப் பார்த்ததும் விவசாயிக்கு பசி அதிகரித்தது. அவர் கண்களில், கொஞ்சம் உணவு கிடைக்காதா? என்ற ஏக்கம் எட்டிப்பார்த்தது. இதை வைத்து அந்த விவசாயியை மடக்க அவன் நினைத்தான்.
இதையடுத்து அந்த விவசாயிடம், ஐயா என்னிடம் உள்ள உணவை நான் பங்கிட்டு கொடுக்க தயாராக இருக்கிறேன். ஆனால் எனக்கு தெரியாத , நான் அறியாத, நான் கற்றுக்கொள்ளாத விஷயம் ஒன்றை நீங்கள் சொல்ல வேண்டும். அப்போது தான் என்னிடம் உள்ள உணவை உங்களுக்கு கொடுக்க முடியும் என்றான்.
விவசாயி கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தார். பின்னர் அவர் அந்த இளைஞனுக்கு சரியான பதிலடி கொடுத்தால் தான் அடங்குவான் என்று கருதினார். பின்னர் அந்த இளைஞன் நோக்கி, படித்த முட்டாள் தான் பெருமை பேசித்திரிவான் என்றார். தொடர்ந்து அவர், இது தான் இது வரை நீ கற்றுக்கொள்ளாத விஷயம், நான் அறிந்த விஷயம் என்றார்.
விவசாயி கூறிய இந்த பதிலைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டான் அந்த இளைஞன். தற்பெருமை, அகங்காரம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை அந்த இளைஞன் உணர்ந்து கொண்டான். தன்னை மன்னிக்கும்படி அந்த விவசாயிடம் கேட்டுக்கொண்டு, தனது உணவை மகிழ்ச்சியுடன் அவரிடம் பங்கிட்டுக்கொண்டான்.
இன்றைய செய்திகள்
12.01.2023
* தமிழகத்தில் 21 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
* பெருநகரங்களின் அருகில் உள்ள நகரங்களிலும், பெருநகரங்களுக்கு இணையான அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்த அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
* பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து நாளை முதல் 340 கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்.
* இம்மாத இறுதிக்குள் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் தயாராகும் என்று மத்திய அரசு தகவல்.
* ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக இணையும் - சர்வதேச கருத்துக் கணிப்பில் தகவல்.
* ஆண்களுக்கான ஐசிசி கிரிக்கெட் தரவரிசை பட்டியல் வெளியீடு: கோலி, ரோகித் முன்னேற்றம்.
* சென்னை மண்டல பள்ளி அணிகளுக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பி.எஸ்.பி.பி. மில்லேனியம் அணி சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றது.
Today's Headlines
* The Tamil Nadu government has issued an order transferring 21 IPS officers in Tamil Nadu.
* Minister KN Nehru said that the government policy has decided to establish basic infrastructure in the cities near the metropolitan cities.
* 340 additional special buses will operate from Chennai from tomorrow on the occasion of Pongal festival.
* The central government informed that the new parliament building will be ready by the end of this month.
* In UNO India will join as a permanent member for the Security Council –Information on international poll.
* ICC Men's Cricket Rankings List Released: Goalie, Rohit Progress
* In Chennai Zone in between School teams, the 20 over cricket match was won by BSPP Millenium Team.
இன்றைய (12-01-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...
இன்றைய (12-01-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...
மேஷம்
ஜனவரி 12, 2023
வர்த்தக பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். வியாபார பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். வெளிப்படையான குணங்களின் மூலம் பலரின் அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்ப்புகள் விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
அஸ்வினி : வாய்ப்புகள் கிடைக்கும்.
பரணி : கலகலப்பான நாள்.
கிருத்திகை : அறிமுகம் கிடைக்கும்.
---------------------------------------
ரிஷபம்
ஜனவரி 12, 2023
கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வீடு மாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். எதிர்பாராத பயணங்களின் மூலம் அலைச்சலும், அனுபவமும் கிடைக்கப் பெறுவீர்கள். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்துகொள்ளவும். தனிப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்வதை குறைத்துக் கொள்வது நல்லது. உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த காலதாமதம் குறையும். போட்டிகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
கிருத்திகை : பிரச்சனைகள் குறையும்.
ரோகிணி : அனுசரித்து செல்லவும்.
மிருகசீரிஷம் : காலதாமதம் குறையும்.
---------------------------------------
மிதுனம்
ஜனவரி 12, 2023
எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். புதிய பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். புத்திக்கூர்மையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உற்பத்தி சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பாகப்பிரிவினை தொடர்பான முயற்சிகள் கைகூடும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மிருகசீரிஷம் : ஆர்வம் அதிகரிக்கும்.
திருவாதிரை : வாய்ப்புகள் கிடைக்கும்.
புனர்பூசம் : முயற்சிகள் கைகூடும்.
---------------------------------------
கடகம்
ஜனவரி 12, 2023
எதிர்பார்த்த தனம் சார்ந்த உதவிகள் சாதகமாக அமையும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். புதுவிதமான உணவு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். புதுவிதமான அனுபவமும், புரிதலும் உண்டாகும். கலகலப்பான பேச்சுகளின் மூலம் நட்பு வட்டம் மேம்படும். நண்பர்களின் வழியில் அனுசரித்து செல்லவும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : எண்ணங்கள் கைகூடும்.
பூசம் : புரிதல் உண்டாகும்.
ஆயில்யம் : அனுசரித்து செல்லவும்.
---------------------------------------
சிம்மம்
ஜனவரி 12, 2023
தற்பெருமை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். செய்கின்ற முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். நெருக்கமானவர்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படும். வேலையாட்களிடம் ஒத்துழைப்பு கிடைக்கும். அலைச்சல்கள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மகம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
பூரம் : அலைச்சல்கள் உண்டாகும்.
உத்திரம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
---------------------------------------
கன்னி
ஜனவரி 12, 2023
கலகலப்பான பேச்சுக்களின் மூலமாக சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறைந்து சுதந்திரத் தன்மை அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் ஆர்வமின்மையான சூழல் ஏற்படும். நிர்வாகம் சார்ந்த துறைகளில் மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திரம் : சாதகமான நாள்.
அஸ்தம் : சுதந்திரம் அதிகரிக்கும்.
சித்திரை : மதிப்பளித்து செயல்படவும்.
---------------------------------------
துலாம்
ஜனவரி 12, 2023
கலை சார்ந்த துறைகளில் ஈடுபாடு ஏற்படும். செல்வத்தை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விவசாய பணிகளில் மேன்மை ஏற்படும். இணையம் சார்ந்த துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். உறவினர்களின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். கனிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
சித்திரை : ஈடுபாடு ஏற்படும்.
சுவாதி : மேன்மை ஏற்படும்.
விசாகம் : சுபமான நாள்.
---------------------------------------
விருச்சிகம்
ஜனவரி 12, 2023
மறைமுக திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். எழுத்து சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். செய்கின்ற முயற்சிக்கு ஏற்ப தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
விசாகம் : திறமைகள் வெளிப்படும்.
அனுஷம் : பிரச்சனைகள் குறையும்.
கேட்டை : வரவுகள் மேம்படும்.
---------------------------------------
தனுசு
ஜனவரி 12, 2023
தந்தைவழி உறவுகளின் மூலம் ஆதாயம் ஏற்படும். வியாபார பணிகளில் மந்தமான சூழ்நிலைகள் உண்டாகும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வெளிநாடு தொடர்பான வேலை வாய்ப்புகளில் சாதகமான செய்திகள் கிடைக்கும். கல்வி சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். ஒப்பந்தம் தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சிறு தூரப் பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மூலம் : ஆதாயம் ஏற்படும்.
பூராடம் : சாதகமான நாள்.
உத்திராடம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
---------------------------------------
மகரம்
ஜனவரி 12, 2023
எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் காலதாமதமாகி நிறைவுபெறும். இனம்புரியாத சில சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் சோர்வு ஏற்படும். வாகன பயணங்களில் பொறுமை வேண்டும். வியாபார பணிகளில் போட்டி அதிகரிக்கும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் பொறுமை வேண்டும். ஆசைகள் நிறைவேறும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
உத்திராடம் : சோர்வு ஏற்படும்.
திருவோணம் : போட்டி அதிகரிக்கும்.
அவிட்டம் : பொறுமை வேண்டும்.
---------------------------------------
கும்பம்
ஜனவரி 12, 2023
வியாபார பணிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மேம்படும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். வாகனங்களில் உள்ள பழுதுகளை சீர் செய்வீர்கள். கணவன், மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த துறைகளில் சிந்தித்து செயல்படவும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றமான தருணங்கள் ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
அவிட்டம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
சதயம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
பூரட்டாதி : மாற்றமான நாள்.
---------------------------------------
மீனம்
ஜனவரி 12, 2023
மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த குழப்பங்கள் படிப்படியாக குறையும். நண்பர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். இழுபறியான தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோக பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். இன்சூரன்ஸ் சார்ந்த துறைகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
பூரட்டாதி : குழப்பங்கள் குறையும்.
உத்திரட்டாதி : மாற்றமான நாள்.
ரேவதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
---------------------------------------
TNSED Attendance Appன் புதிய Versionஐ Download செய்த பிறகு, அதை Open செய்தால், Mobileலின் Screen முழுவதும் வெள்ளை நிறத்தில் [Blank Display] தோன்றினால் அதனை சரிசெய்யும் முறை (After ᴅᴏᴡɴʟᴏᴀᴅ the new version of ᴛɴsᴇᴅ Attendance App, if ᴍᴏʙɪʟᴇ's sᴄʀᴇᴇɴ appears in white [ʙʟᴀɴᴋ ᴅɪsᴘʟᴀʏ], how to fix it)...
TNSED Attendance Appன் புதிய Versionஐ Download செய்த பிறகு, அதை Open செய்தால், Mobileலின் Screen முழுவதும் வெள்ளை நிறத்தில் [Blank Display] தோன்றினால் அதனை சரிசெய்யும் முறை (After ᴅᴏᴡɴʟᴏᴀᴅ the new version of ᴛɴsᴇᴅ Attendance App, if ᴍᴏʙɪʟᴇ's sᴄʀᴇᴇɴ appears in white [ʙʟᴀɴᴋ ᴅɪsᴘʟᴀʏ], how to fix it)...
ஒருசில ஆசிரியப்பெருமக்களுக்கு ᴛɴsᴇᴅ ᴀᴛᴛᴇɴᴅᴀɴᴄᴇ Appன் புதிய Versionஐ ᴅᴏᴡɴʟᴏᴀᴅ செய்த பிறகு, அதை ᴏᴘᴇɴ செய்தால், ᴍᴏʙɪʟᴇலின் sᴄʀᴇᴇɴ முழுவதும் வெள்ளை நிறத்தில்---[ʙʟᴀɴᴋ ᴅɪsᴘʟᴀʏ] காணப்படும்...
*👉இதை சரிசெய்ய கீழ்க்கண்ட sᴏғᴛᴡᴀʀᴇஐ, ᴜᴘᴅᴀᴛᴇ செய்வதன் மூலம் ᴛɴsᴇᴅ ᴀᴛᴛᴇɴᴅᴀɴᴄᴇ ᴀᴘᴘ முழு செயல்பாட்டிற்கு வரும்.
ᴛɴsᴇᴅ ᴀᴛᴛᴇɴᴅᴀɴᴄᴇ ᴀᴘᴘ சிறப்பாக செயல்பட....
ᴘʟᴀʏ sᴛᴏʀᴇ App
👇
ᴘʟᴀʏ sᴛᴏʀᴇ ʀɪɢʜᴛ sɪᴅᴇ ᴛᴏᴘ ᴄᴏʀɴᴇʀ செல்லவும்
👇
ᴏᴜʀ ᴏᴡɴ ɴᴀᴍᴇ ɪɴɪᴛɪᴀʟ [ᴏʀ] ᴘᴇʀsᴏɴs ᴘʜᴏᴛᴏ இருக்கும்
👇
ᴍᴀɴᴀɢᴇ ᴀᴘᴘs ᴀɴᴅ ᴅᴇᴠɪᴄᴇ தேர்ந்தெடுக்கவும்...
👇
ᴜᴘᴅᴀᴛᴇ ᴀᴠᴀɪʟᴀʙʟᴇ தேர்ந்தெடுக்கவும்...
(sᴇᴄᴏɴᴅ ᴏᴘᴛɪᴏɴ)
👇
👉 ᴀɴᴅʀᴏɪᴅ ᴀᴜᴛᴏ,
👉ᴀɴᴅʀᴏɪᴅ sʏsᴛᴇᴍ ɪɴᴛᴇʟʟɪɢᴇɴᴄᴇ,
👉ᴀɴᴅʀᴏɪᴅ ᴀᴄᴄᴇssɪʙɪʟɪᴛʏ,
👉ᴀɴᴅʀᴏɪᴅ ᴄᴀʀᴇ,
👉ᴄᴀʀʀɪᴇʀ sᴇʀᴠɪᴄᴇ,
👉ɢᴏᴏɢʟᴇ-ᴄʜʀᴏᴍᴇ,
👉ᴅᴇᴠɪᴄᴇ ʜᴇᴀʟᴛʜ sᴇʀᴠɪᴄᴇ,
👉ᴅᴇᴠɪᴄᴇ ᴄᴀʀᴇ,
👉ᴅᴇᴠɪᴄᴇ ᴀᴜᴛᴏ,
👉ᴅɪɢɪᴛᴀʟ ᴡᴇʟʟʙᴇɪɴɢ,
👉ᴅɪɢɪᴛᴀʟ ᴀᴜᴛᴏ,
👉ɢᴏᴏɢʟᴇ,
👉ɢᴏᴏɢʟᴇ ᴘʟᴀʏ sᴇʀᴠɪᴄᴇ ғᴏʀ-ᴀʀ,
☝️
மேற்காணும் அனைத்து sᴏғᴛᴡᴀʀᴇ ᴀᴘᴘʟɪᴄᴀᴛɪᴏɴஐயும், "உடனடியாக ᴜᴘᴅᴀᴛᴇ செய்தால் மட்டுமே," ᴛɴsᴇᴅ ᴀᴛᴛᴇɴᴅᴀɴᴄᴇ என்ற புதிய ᴀᴘᴘʟɪᴄᴀᴛɪᴏɴஆனது, 100% செயல்படுகிறது...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
2022-23 ஆம் ஆண்டிற்கான இன்ஸ்பயர் விருது (INSPIRE Award) திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 733 மாணவர்களின் பட்டியல் (List of 733 Selected Students under the INSPIRE Award Scheme for the Year 2022-23)...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
Inspire Award Selection List Published - PDF
Annexure 12011/32/2022 INSPIRE (Tamil Nadu), Date : 02 Jan 2023
👉Government of India Ministry of Science & Technology, Department of Science & Technology
👇List of Selected Students under the INSPIRE Award Scheme for the Year 2022-23
👉Name of the State: Tamil Nadu
👇No. of Sanctioned: 733
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Kalanjiam Mobile App New Version Update - Version 1.20.9 - Updated on 23-12-2024
* KALANJIYAM APP UPDATE NEW VERSION 1.20.9 * Kalanjiam Mobile App New App New Update * Version 1.20.9 * Updated on 23/12/2024 * Whats ...