கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பிப்ரவரி மாத சிறார் திரைப்படம் ("மல்லி") - பள்ளிகளில் திரையிடும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Juvenile film of February ("Malli") - Proceedings of Commissioner of School Education regarding procedures to be followed while screening in Schools) ந.க.எண்: 019528/ எம்/ இ1/ 2022, நாள்: 02-02-2023...

 


>>> பிப்ரவரி மாத சிறார் திரைப்படம் ("மல்லி") - பள்ளிகளில் திரையிடும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Juvenile film of February ("Malli") - Proceedings of Commissioner of School Education regarding procedures to be followed while screening in Schools) ந.க.எண்: 019528/ எம்/ இ1/ 2022, நாள்: 02-02-2023...

12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு மாதிரி வினாத்தாள் வெளியீடு (தமிழ் & ஆங்கில வழி) - 12th Standard Practical Exams - Model Question Papers Released (Tamil & English Medium)…


>>> 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு மாதிரி வினாத்தாள் வெளியீடு (தமிழ் & ஆங்கில வழி) - 12th Standard Practical Exams - Model Question Papers Released (Tamil & English Medium)…

ஆசிரியர்களின் விடுப்பு விவரங்கள் சரிபார்த்தல் படிவம் (Teachers Leave Details Verification Form)...


>>> ஆசிரியர்களின் விடுப்பு விவரங்கள் சரிபார்த்தல் படிவம் (Teachers Leave Details Verification Form)...




>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



EMIS Website & TNSED App பதிவுகள் Checklist...

 


EMIS Website & TNSED App பதிவுகள் Checklist:



1. Student, staff & local body *attendance* தினமும் பதிவுசெய்தல். ( Govt & Aided) 


2. *Library books* அனைத்து வகுப்பு  மாணவர்களுக்கு assign செய்யப்பட்டிருத்தல்  ( Govt only) - Class tr. Login. 


🖊️ *Library Shelf Creation* - அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களும் மீண்டும் shelf creation செய்யும் பணியை மேற்கொள்ள வேண்டும். *குறிப்பு: ஏற்கனவே shelf create செய்த தகவல் அனைவருக்கும் reset செய்யபட்டுள்ளது*


🖊️ *வாரந்தோறும் sufffle option ஐ பயன்படுத்தி மாணவர்களுக்கு புத்தகங்களை மாற்றி வாசிக்க கொடுக்க வேண்டும்*. 

- TNSED app in class teacher login



3. *Health check up* - அனைத்து மாணவர்களுக்கும் பதிவு செய்து முடித்தல் - ( govt only) - class tr. Login in TNSED app


4.*Quarterly மற்றும் *Half yearly தேர்வு:  *Academic score* - 6-9 மாணவர்களுக்கு , 

*Students marks - menu வழியாக 10,11,12 வகுப்புகளுக்கும் ( Quarterley, Half Yearly, Mid Term I, Mid Term II, Mid Term III) தேர்வு மதிப்பெண்களை பதிவு செய்து முடித்திருத்தல்  வேண்டும் - class tr. Login (EMIS website) - govt & aided. ( *Need attention* ) *குறிப்பு :முடிந்த தேர்வுகளுக்கு மட்டும்*



5. அனைத்து மாணவர்களுக்கும் *ஆதார் எண்* பதிவேற்றம். 



6. *Teacher IFHRMS Number* :  அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களும் school login-ல் staff profile-ல் IRHRMS எண்ணை பதிவு மேற்கொள்ளுதல்.



7.*EMAIL ID Updation:* - அரசு மேல்நிலை பள்ளியில்  12 ஆம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களின்  Profile- ல் update செய்தல்.



8.*Career and Guidance Survey Form:*  அரசு பள்ளியில் பயிலும் அனைத்து 12 ஆம் வகுப்பு மாணவர்களும் naanmuthalvan இணையதளத்தில் career guidance தகவல்களை பூர்த்தி செய்தல்.



9. *Leave Balance Updation*:  அனைத்து ஆசிரியர்களும் TNSED app ல் ஆசிரியர் login ல் E- profile icon ல் leave  management icon ➡️My leave ➡️yearly leave and service leave ஆகிய பகுதியில் balance leave விபரத்தினை பதிவு செய்தல் வேண்டும்.



10. *Textbook Distribution Details* - அனைத்து வகுப்பு ஆசிரியர்களும் TNSED app ல் ஆசிரியர் login ல் Schemes icon ➡️Books ➡️ Term I, Term II, Term III ல் வழங்கப்பட்ட விபரத்தினை update செய்தல் வேண்டும்.



11. *Spoken English Module (Only for Trained teachers 4 and 5 std)* - Spoken English பயிற்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களும் TNSED app ல் தாங்களது login இல் MY courses ➡️ Spoken English module ➡️ Term I and Term II complete செய்ய வேண்டும்.



12. *PSTM Application Verification* - அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்களது login வரும் PSTM application - களுக்கு  verification செய்யும் பணியை உடனுக்குடன் முடித்திடல் வேண்டும்.



13. *Schools and Medium Verification* - அனைத்து வகை தொடக்க,நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் தங்களது login ல் Verify student school ➡️ School and Medium Verification செய்யும் பணியை முடித்திடல் வேண்டும்.



🖊️மேற்கண்ட பதிவுகள் எமிஸில் *09.02.23க்குள்* 100% முடித்திட அறிவுறுத்தப்படுகிறார்கள். 



🖊️இதில் எந்த தவறுகளும் , நிலுவையும் இன்றி முடிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 



🖊️மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( தொடக்க ), வட்டார கல்வி அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள் இப்பணிகள் முடிவடைந்ததை உறுதி செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.




>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



இன்றைய (07-02-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 

 

 

இன்றைய (07-02-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

பிப்ரவரி 07, 2023



எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். மனதை உறுத்திய சில கவலைகள் குறையும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். உத்தியோக ரீதியான பணிகளில் பொறுப்புகள் குறையும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். லாபம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்




அஸ்வினி : உதவிகள் கிடைக்கும்.


பரணி : ஆதாயம் உண்டாகும்.


கிருத்திகை : எண்ணங்கள் கைகூடும்.

---------------------------------------




ரிஷபம்

பிப்ரவரி 07, 2023



உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். பணி நிமிர்த்தமான பிரச்சனைகள் குறையும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்கள் கைகூடும். உயர்கல்வியில் கவனம் வேண்டும். சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்




கிருத்திகை : ஒத்துழைப்பு கிடைக்கும். 


ரோகிணி : எண்ணங்கள் ஈடேறும்.


மிருகசீரிஷம் : புரிதல் உண்டாகும்.

---------------------------------------




மிதுனம்

பிப்ரவரி 07, 2023



திட்டமிட்ட பணிகளில் எண்ணங்கள் ஈடேறும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சிறு தூரப் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும். செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பணிபுரியும் இடத்தில் இருந்துவந்த வேறுபாடுகள் நீங்கும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




மிருகசீரிஷம் : ஆதாயம் உண்டாகும். 


திருவாதிரை : மந்தத்தன்மை குறையும். 


புனர்பூசம் : திறமைகள் வெளிப்படும்.

---------------------------------------



கடகம்

பிப்ரவரி 07, 2023



தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். பார்வை சார்ந்த பிரச்சனைகள் குறையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். வாகன பயணங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். விவசாய பணிகளில் மேன்மை உண்டாகும். நிறைவான நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




புனர்பூசம் : நெருக்கடிகள் குறையும். 


பூசம் : ஆரோக்கியம் மேம்படும். 


ஆயில்யம் : மேன்மை உண்டாகும்.

---------------------------------------



சிம்மம்

பிப்ரவரி 07, 2023



மறைமுக எதிர்ப்புகளை புரிந்து கொள்வீர்கள். புதிய தொழில்நுட்ப கருவிகளில் கவனம் வேண்டும். உடன்பிறந்தவர்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். வேலையாட்களைப் பற்றிய புரிதல் உண்டாகும். உங்கள் மீது சிறு சிறு அவப்பெயர்கள் ஏற்பட்டு நீங்கும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். எண்ணிய சில பணிகள் நிறைவேறுவதில் அலைச்சலும், அனுபவமும் ஏற்படும். உயர்வு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்




மகம் : கவனம் வேண்டும்.


பூரம் : புரிதல் உண்டாகும்.


உத்திரம் : அனுபவம் ஏற்படும். 

---------------------------------------




கன்னி

பிப்ரவரி 07, 2023



இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். திடீர் பயணங்களால் புதிய அனுபவம் உண்டாகும். பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் கிடைக்கும். உணவு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். செயல்பாடுகளில் ஒருவிதமான மந்தத்தன்மை ஏற்படும். வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். அமைதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்




உத்திரம் : அனுபவம் கிடைக்கும். 


அஸ்தம் : கவனம் வேண்டும்.


சித்திரை : சிந்தித்து செயல்படவும். 

---------------------------------------



துலாம்

பிப்ரவரி 07, 2023



மனதை உறுத்திய பிரச்சனைகளுக்கு தெளிவான தீர்வு கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். தோற்றப்பொலிவில் மாற்றங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உயர்கல்வியில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். சமூகம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். தற்பெருமை சார்ந்த சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும்.  செல்வாக்கு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




சித்திரை : தீர்வு கிடைக்கும்.


சுவாதி : ஆரோக்கியம் மேம்படும்.


விசாகம் : ஈடுபாடு ஏற்படும். 

---------------------------------------




விருச்சிகம்

பிப்ரவரி 07, 2023



உயர் அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும். விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். வழக்குகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். உடனிருப்பவர்களைப் பற்றிய புதிய கண்ணோட்டங்கள் உண்டாகும். செயல்பாடுகளில் சுதந்திரத்தன்மை அதிகரிக்கும். சுகம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை




விசாகம் : ஆதாயம் உண்டாகும். 


அனுஷம் : இழுபறிகள் குறையும். 


கேட்டை : சுதந்திரம் அதிகரிக்கும்.

---------------------------------------



தனுசு

பிப்ரவரி 07, 2023



வியாபாரம் சார்ந்த பணிகளில் பொறுமை வேண்டும். ஆன்மிகம் சார்ந்த காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களிடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். தந்தைவழி உறவுகளால் அலைச்சலும், அனுகூலமும் ஏற்படும். சேமிப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் அதிகரிக்கும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். ஆதாயம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




மூலம் : ஈடுபாடு உண்டாகும்.


பூராடம் : அனுகூலம் ஏற்படும். 


உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------



மகரம்

பிப்ரவரி 07, 2023



தொழில் சார்ந்த முதலீடுகளில் கவனம் வேண்டும். மற்றவர்களின் கருத்துக்களில் உள்ள உண்மை நிலையை அறிந்து முடிவெடுக்கவும். காப்பீடு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். அரசு சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் விழிப்புணர்வுடன் செயல்படவும். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் விட்டுக் கொடுத்து செல்லவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் சோர்வு உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




உத்திராடம் : கவனம் வேண்டும்.


திருவோணம் : விழிப்புணர்வுடன் செயல்படவும். 


அவிட்டம் : விட்டுக் கொடுத்து செல்லவும். 

---------------------------------------




கும்பம்

பிப்ரவரி 07, 2023



மனதிற்கு நெருக்கமானவர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். நண்பர்களிடத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள். வரவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்




அவிட்டம் : ஒற்றுமை அதிகரிக்கும். 


சதயம் : அறிமுகம் கிடைக்கும். 


பூரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------



மீனம்

பிப்ரவரி 07, 2023



தடைபட்ட வேலைகளை செய்து முடிப்பீர்கள். கால்நடைகளின் மூலம் மேன்மை உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். சிந்தனைகளில் கவனம் வேண்டும். வித்தியாசமான அணுகுமுறையால் எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். போட்டிகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். மனதளவில் இருந்துவந்த சஞ்சலங்கள் குறையும்.  உத்தியோகப் பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். தடைகள் விலகும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு




பூரட்டாதி : மேன்மை உண்டாகும். 


உத்திரட்டாதி : எதிர்ப்புகள் குறையும்.


ரேவதி : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------



பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.02.2023 - School Morning Prayer Activities...

 

 

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.02.2023 - School Morning Prayer Activities...

  

திருக்குறள் :


அதிகாரம்:ஊழ்


திருக்குறள்:374


இருவேறு உலகத்து இயற்கை திருவேறு

தெள்ளிய ராதலும் வேறு.


விளக்கம்:


உலகின் இயற்கை நிலை இரு வேறுபட்டதாகும். ஒருவர் செல்வமுடையவராகவும், ஒருவர் அறிவுடையவராகவும் இருப்பதே அந்த வேறுபாடாகும்.


பழமொழி :

Beauty comes not by forcing. 


அரிதாரம் பூசினால் அழகு வந்துவிடாது.


இரண்டொழுக்க பண்புகள் :


1. நிறைகுடம் போல ஆர்ப்பாட்டம் செய்யாமல் அமைதியாக உறுதியாக பேசுவேன். 


2. என் பேச்சு வெள்ளி தட்டில் வைக்கப் பட்ட பொன் பழம் போல மதிப்பிற்குரியதாக இருக்கும் படி பார்த்துக் கொள்வேன் 


பொன்மொழி :


மின்மினிப்பூச்சி பறக்கும்போதுதான் பளபளக்கிறது. மனிதன் சுறுசுறுப்போடு இயங்கும்போது தான் பிரகாசிக்கிறான்.


பொது அறிவு :


1. முதல் உலகப்போர் எத்தனை ஆண்டுகள் நடைபெற்றது? 


 மூன்று ஆண்டுகள் . 


 2.பாரதியார் தனக்குத்தானே சூட்டிக்கொண்ட பெயர் என்ன?


 ஷெல்லிதாசன்.


English words & meanings :


A very little ant - infant (குழந்தை)

ஆரோக்ய வாழ்வு :


இளம் சூடான வெந்நீருடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து, தேனை  அருந்தினால், வாந்தி, குமட்டல்,  ஜலதோஷம், தலைவலி போன்ற நோய்கள் குணமாகும்.


          தேனில் உள்ள குளுக்கோஸ் சத்து சிறிய இரத்த நாளங்களை சீராக விரிவடையச் செய்து, ரத்த ஓட்டத்தை சீராக்கும். இதனால் இதயத்திற்கு ஏற்படும் பாதிப்பு தடுக்கப்படும்.


NMMS Q


சீமா சச்சினின் சகோதரி. சச்சினும் ராகுலும் சகோதரர்கள் மற்றும் ராகுல் கமலாவின் மகன் ஆவார். கமலாவிற்கு சீமாவிடம் உள்ள தொடர்பு என்ன? 


 விடை: மகள் 


பிப்ரவரி 07


தேவநேயப் பாவாணர் அவர்களின் பிறந்தநாள்


தேவநேயப் பாவாணர் (Devaneya Pavanar; 7 பிப்பிரவரி 1902 – 15 சனவரி 1981) மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமாவார். இவர் 40க்கும் மேலான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று மிக அரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார். மறைமலை அடிகளார் வழியில் நின்று தனித்தமிழ் இயக்கத்திற்கு அடிமரமாய் ஆழ்வேராய் இருந்து சிறப்பாக உழைத்தார். இவரது ஒப்பரிய தமிழறிவும் பன்மொழியியல் அறிவும் கருதி, சிறப்பாக, பெருஞ்சித்திரனாரால் "மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்" என்று அழைக்கப்பட்டார்.


நீதிக்கதை


குட்டி குரங்கின் செயல்


மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு பள்ளிக்கூடம். அந்த ஊர் மட்டுமன்றி அருகில் உள்ள ஊர்களிலிருந்தும் பலரும் அங்கு கல்வி பயின்று வந்தனர். குட்டிக் குரங்கு புஜ்ஜி. மலைமீது பல குரங்குகள் கூட்டங்கூட்டமாக வசித்து வந்தன. அந்தக் கூட்டத்தில் புஜ்ஜி என்ற சிறிய குரங்கும் இருந்தது. அது மிகவும் புத்திசாலி. சரியாக பள்ளிக்கூட உணவு நேரத்தில் மலையை விட்டுக் கீழே இறங்கி வரும். 


மாணவர்கள் தருகின்ற உணவைச் சாப்பிட்டுவிட்டுச் செல்லும். தாகம் தீர்த்துக் கொள்ள மாணவர்கள் குடிக்கும் குடிநீர்க் குழாயில், மாணவர்களைப் போலவே குழாயைத் திறந்து குடித்துவிட்டு, மீண்டும் குழாயைச் சரியாக மூடிவிட்டுச் செல்லும். இது அன்றாடம் நடக்கின்ற நிகழ்வு. ஞாயிற்றுக் கிழமைகளில் வழக்கம் போல புஜ்ஜி, மாணவர்கள் இல்லாததைக் கண்டு ஏமாந்து போகும். வெறும் நீரை மட்டும் குடித்துவிட்டு மலையேறும்.


முதலில் குரங்குக் குட்டியைக் கண்டு மாணவர்கள் அச்சம் கொண்டனர். நாளடைவில் அதன்மீது அன்பு செலுத்த ஆரம்பித்துவிட்டனர். பின்னர், அதற்குத் தாங்கள் உண்ணும் உணவிலிருந்து கொஞ்சம் கொடுத்து மகிழ்ந்தனர். ஒருநாள் வழக்கம்போல, உணவு இடைவேளைக்குச் சரியாக வந்த புஜ்ஜி, உணவுக்காகக் காத்திருந்தது. சில மாணவர்கள் மரத்தடியில் உண்டு கொண்டிருந்தனர். அவர்களின் அருகே குரங்குக் குட்டி வந்ததும் தங்களின் உணவில் கொஞ்சம் கொடுத்தனர்.


அதனை உண்டு முடித்தது. சிந்திய பருக்கைகளை, குரங்குக் குட்டியோடு, அணில் பிள்ளையும் உண்டு மகிழ்ந்தது. புஜ்ஜிக்குத் தாகம் எடுத்தது. அது குழாய் இருக்கும் இடத்தை நோக்கி நகர்ந்தது. அங்கே பல மாணவர்கள் கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். கூட்டத்தின் உள்ளே புகுந்த புஜ்ஜி திடுக்கிட்டது. குடிநீர்க் குழாய் உடைந்து, ஆறுபோல பெருக்கெடுத்து சீறிப் பாய்ந்தது. மாணவர்கள் செய்வதறியாது திகைத்தபடி நின்றிருந்தனர்.


புஜ்ஜி அங்கும் இங்கும் சென்று எதையோ தேடிக் கொண்டிருந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் கையில் அகப்பட்ட துணி, கயிறு போன்றவற்றைக் கொண்டு வந்தது. கூட்டமாக நின்றிருந்த மாணவர்களை விலக்கிவிட்டு, குழாயிலிருந்து பாய்ந்து கொண்டிருந்த நீரை ஒரு கையால் அடைத்து மறுகையால் துணியைச் சுற்ற ஆரம்பித்தது. பலமுறை தோல்வியே கிடைத்தது. மீண்டும் மீண்டும் முயற்சி செய்தது புஜ்ஜி. இதனைக் கண்ட சில மாணவர்கள் தங்கள் தவற்றை உணர்ந்தனர். குட்டிக் குரங்கோடு சேர்ந்து குழாயைத் துணியால் அடைத்து, கயிற்றால் கட்டினர். தண்ணீர் வீணாவது தடுக்கப்பட்டது. மன நிறைவோடு அங்கிருந்து புறப்பட்டது குட்டிக் குரங்கு புஜ்ஜி.

இன்றைய செய்திகள்


07.02.2023


* சென்னை உயர் நீதிமன்றத்திற்கு ஐந்து பேரை கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.


* ஹெக்டேருக்கு ரூ.20,000: பருவம் தவறிய கனமழையால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணத் தொகுப்பு - முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.


* புதிய ஆரம்பப் பள்ளிகள் தொடக்கம் மற்றும் தரம் உயர்த்துதல் தொடர்பான பரிந்துரைகளை அனுப்புவதற்கு தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


* எஸ்எஸ்எல்வி-டி2 சிறியரக ராக்கெட்டை பிப்ரவரி 10-ல் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்.


* சீனா உள்ளிட்ட வெளிநாடுகளின் 138 சூதாட்ட செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை.


* துருக்கி, சிரியாவில் பயங்கர நிலநடுக்கம்: தோண்டத் தோண்ட சடலங்கள்; உயிரிழப்பு 1500-ஐ தாண்டியது.


* சர்வதேச மல்யுத்த போட்டி: இந்திய வீரருக்கு வெண்கலப்பதக்கம்.


* பெண்கள் தெற்காசிய கால்பந்து: இந்தியா-வங்காளதேசம் ஆட்டம் 'டிரா'.


Today's Headlines


* The President has ordered the appointment of five additional judges to the Madras High Court.


 * Rs 20,000 per hectare: Relief package for farmers affected by unseasonal heavy rains - Chief Minister Stalin orders.


*  The Department of Primary Education has directed to send recommendations regarding opening and upgradation of new primary schools.


 * ISRO plans to launch SSLV-T2 small rocket on February 10.


*  Ban on 138 gambling apps of foreign countries including China: Central government action.


 * Earthquake hits Turkey, Syria: Bodies unearthed;  The death toll exceeded 1,500.


* International Wrestling Championships: Bronze medal for Indian athlete.


 * Women's South Asian Football: India-Bangladesh made Draw.

இன்றைய (06-02-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 

 

இன்றைய (06-02-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

பிப்ரவரி 06, 2023



புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். வெளியூர் தொடர்பான பணி வாய்ப்புகள் சிலருக்கு சாதகமாக அமையும். புதிய தொழில் நிமிர்த்தமான முயற்சிகளும், சிந்தனைகளும் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். கல்வி சார்ந்த பணிகளில் ஆர்வம் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்




அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.


பரணி : சிந்தனைகள் மேம்படும்.


கிருத்திகை : ஆர்வம் உண்டாகும். 

---------------------------------------




ரிஷபம்

பிப்ரவரி 06, 2023



மனை சார்ந்த செயல்பாடுகளில் சற்று கவனம் வேண்டும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். அரசு சார்ந்த பணிகளில் சற்று பொறுமையுடன் செயல்படவும். இணையம் சார்ந்த துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். தாயாரை பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதளவில் புதுவிதமான எண்ணங்கள் உண்டாகும். வியாபாரம் சார்ந்த பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். தனம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




கிருத்திகை : கவனம் வேண்டும்.


ரோகிணி : முன்னேற்றமான நாள்.


மிருகசீரிஷம் : மந்தத்தன்மை குறையும். 

---------------------------------------




மிதுனம்

பிப்ரவரி 06, 2023



விடாப்பிடியாக செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றி கொள்வீர்கள். செயல்பாடுகளில் துரிதம் மேம்படும். அரசு சார்ந்த செயல்பாடுகளின் மூலம் ஆதாயம் கிடைக்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புதிய வாகனம் வாங்குவது சார்ந்த சிந்தனைகள் மேம்படும். தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் மாற்றமான சூழல் ஏற்படும். உடன்பிறந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மேன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்




மிருகசீரிஷம் : துரிதம் மேம்படும்.


திருவாதிரை : ஆதரவு கிடைக்கும்.


புனர்பூசம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள். 

---------------------------------------




கடகம்

பிப்ரவரி 06, 2023



குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். கால்நடை சார்ந்த பணிகளில் ஆதாயம் உண்டாகும். உத்தியோகத்தில் உங்களின் கருத்துக்களுக்கு ஆதரவு கிடைக்கும்.  மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். ஆரோக்கியம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்




புனர்பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும். 


பூசம் : ஆதாயம் உண்டாகும். 


ஆயில்யம் : புத்துணர்ச்சியான நாள். 

---------------------------------------




சிம்மம்

பிப்ரவரி 06, 2023



மனதளவில் ஒருவிதமான சோர்வு வந்து நீங்கும். உடனிருப்பவர்களிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உங்கள் மீதான நம்பிக்கையில் சில மாற்றம் ஏற்பட்டு நீங்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவுடன் இருக்கவும். கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் தெளிவு ஏற்படும். தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். புதுமைகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




மகம் : சோர்வு நீங்கும். 


பூரம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.


உத்திரம் : அலைச்சல்கள் அதிகரிக்கும். 

---------------------------------------




கன்னி

பிப்ரவரி 06, 2023



குடும்ப உறுப்பினர்களை பற்றிய சிந்தனைகள் மேம்படும். சக ஊழியர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். மற்றவர்களுக்கு வாக்குறுதிகளை அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். கற்றல் திறனில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். பூர்வீக சொத்துக்களின் வழியில் சில விரயங்கள் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட  திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




உத்திரம் : விட்டுக்கொடுத்து செல்லவும். 


அஸ்தம் : குழப்பம் நீங்கும்.


சித்திரை : விரயங்கள் உண்டாகும்.

---------------------------------------




துலாம்

பிப்ரவரி 06, 2023



கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். சாதுரியமான செயல்பாடுகளின் மூலம் அனைவரிடத்திலும் பாராட்டுகளை பெறுவீர்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். மாணவர்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மதிப்பு மேம்படும். பழைய பிரச்சனைகளுக்கு கலந்து ஆலோசித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். சலனம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



 

சித்திரை : அனுபவம் கிடைக்கும். 


சுவாதி : எண்ணங்கள் ஈடேறும். 


விசாகம் : மதிப்பு மேம்படும். 

---------------------------------------




விருச்சிகம்

பிப்ரவரி 06, 2023



கடந்த கால நிகழ்வுகளை எண்ணி மகிழ்ச்சி அடைவீர்கள். நண்பர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். முக்கியமான சிலருடைய மறைமுக ஆதரவு கிடைக்கும். திறமைக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கப் பெறுவீர்கள். புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். வாகன வசதிகள் மேம்படும். மறதிகள் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




விசாகம் : ஆதரவான நாள்.


அனுஷம் : பாராட்டுகள் கிடைக்கும்.


கேட்டை : வசதிகள் மேம்படும்.

---------------------------------------




தனுசு

பிப்ரவரி 06, 2023



கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை மேம்படும். எதிர்பார்த்த சில தனம் சார்ந்த உதவிகள் கிடைக்கும். புதிய நண்பர்களின் மூலம்  உற்சாகமடைவீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். நீண்ட நாட்களாக மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவான முடிவுகள் ஏற்படும். உடன்பிறந்தவர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்




மூலம் : ஒற்றுமை மேம்படும்.


பூராடம் : வாய்ப்புகள் கைகூடும். 


உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------




மகரம்

பிப்ரவரி 06, 2023



கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் பொறுமை வேண்டும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பம் உண்டாகும். வியாபாரம் சார்ந்த பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். உயர் அதிகாரிகளிடத்தில் அனுசரித்து செல்லவும். உடன்பிறந்தவர்களின் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். இன்பம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



உத்திராடம் : பொறுமை வேண்டும். 


திருவோணம் : சேமிப்பு குறையும். 


அவிட்டம் : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------




கும்பம்

பிப்ரவரி 06, 2023



மனதளவில் புதுவிதமான உத்வேகத்துடன் காணப்படுவீர்கள். கௌரவப் பொறுப்புகளின் மூலம் மதிப்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு கிடைக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நிறைவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




அவிட்டம் : உத்வேகமான நாள்.


சதயம் : இன்னல்கள் குறையும். 


பூரட்டாதி : முன்னேற்றம் ஏற்படும். 

---------------------------------------




மீனம்

பிப்ரவரி 06, 2023



உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். வியாபாரம் சார்ந்த பணிகளில் கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். வழக்கு சார்ந்த செயல்பாடுகளில் திருப்பங்கள் ஏற்படும். மற்றவரிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். புதுவிதமான பயணங்கள் மேற்கொள்வதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். அமைதி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




பூரட்டாதி : ஒத்துழைப்பான நாள்.


உத்திரட்டாதி : திருப்பங்கள் ஏற்படும்.


ரேவதி : விழிப்புணர்வு வேண்டும். 

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

For Rs 40,000 OLA Scooter - Rs 499 can be booked

 40,000 ரூபாய்க்கு OLA ஸ்கூட்டர் - ரூ.499 முன்பதிவு செய்யலாம் என அறிவிப்பு For Rs 40,000 OLA Scooter - Rs 499 can be booked ரூ.40,000த்துக்க...