கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 16.02.2023 - School Morning Prayer Activities...

 

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 16.02.2023 - School Morning Prayer Activities...

  

திருக்குறள் :


பால் :அறத்துப்பால் 


இயல்:இல்லறவியல்


 அதிகாரம்: அடக்கம் உடைமை..


குறள் : 126

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்

எழுமையும் ஏமாப் புடைத்து.


பொருள்:

உறுப்புகளை ஓர் ஓட்டுக்குள் அடக்கிக் கொள்ளும் ஆமையைப் போல் ஐம்பொறிகளையும் அடக்கியாளும் உறுதி, காலமெல்லாம் வாழ்க்கைக்குக் காவல் அரணாக அமையும்


பழமொழி :

A brave man may fall, but he cannot yield

வீழ்ந்தாலும் வீரன் அடிபணிய மாட்டான்.


இரண்டொழுக்க பண்புகள் :


1. தோற்றாலும் தொடர்வேன் என்று துணிந்து செயல் பட வேண்டும்.


 2. ஏனென்றால் தோல்வி வெற்றியின் முதல் படி 


பொன்மொழி :


வாழ்க்கையின் இன்ப துன்பங்களை சமமாய் ஏற்றுப் பாவிக்கிற மனிதன் முறையான கல்வியைப் பெற்றிருப்பான். 


பொது அறிவு :


1. மேட்டூர் அணை எந்த ஆண்டு கட்டப்பட்டது ?


 1934 ஆம் ஆண்டு .


 2. ஆதி காவியம் என்றழைக்கப்படுவது எது?


 சிலப்பதிகாரம்.


English words & meanings :


the best ant - excellant (excellent)

ஆரோக்ய வாழ்வு :


வாழைப்பழம்: வைட்டமின் ஏ உள்ள வாழைப்பழம் சருமத்தின் நீளும் தன்மையை மற்றும் ஈரப்பதத்தை பாதுகாக்க உதவும். வாழைப்பழத்தை மசித்து பாதங்களில் தடவி 20 நிமிடங்கள் விட்டு கழுவலாம்.

தேன்: இயற்கையான கிருமிநாசினியாக தேன் செயல்படுகிறது. பாதவெடிப்பை குணமாக்க உதவுவதோடு, சருமத்திற்கு புத்துணர்ச்சி ஊட்டுகிறது. தேன் கலந்த வெதுவெதுப்பான நீரில் பாதங்களை ஊறவைத்து 20 நிமிடங்கள் கழித்து அலம்பவும்.

NMMS Q


வலை பின்னல் நரம்பமைவு கொண்ட தாவர இலைகள்


விடை: இரு விதையிலை தாவரங்கள்


பிப்ரவரி 16







தாதாசாகெப் பால்கே (Dadasaheb Phalke) என்று அழைக்கப்படும் துண்டிராஜ் கோவிந்த் பால்கே (Dhundiraj Govind Phalke, ஏப்ரல் 30, 1870 - பிப்ரவரி 16, 1944) இந்திய திரைப்படத்துறையின் தந்தையாக கருதப்படுகிறார். இந்தியாவிற்கு சினிமாவை முதலில் அறிமுகப்படுத்தியவர் இவர்தான். தொடக்கத்தில் வெளிவந்த படங்கள் எதுவும் வண்ணப்படங்கள் அல்ல. ஒலியும் இல்லாமல் ஊமைப்படங்களாகத்தான் இருந்தன. பால்கே தனது தீவிர முயற்சியினால் ஒரு சினிமாவை எழுதி இயக்கினார். படத்தின் பெயர் அரிச்சந்திரா. நடிகர்களை எப்படித் தேர்வு செய்வது என்று அவர் யோசிக்கவே இல்லை. தனது குடும்பத்திலிருந்த மொத்தம் 18 பேர்களையும் நடிகர்களாக ஆக்கி நடிக்க வைத்து விட்டார் பால்கே. எனவே முதல் இந்திய சினிமா ஒரு குடும்பப் படமே ஆகும்.

அவருடைய நினைவாக தாதாசாகெப் பால்கே விருது நிறுவப்பட்டது


நீதிக்கதை


மனித மனத்தின் ஆசை


இந்த உலகத்தையே ஆளுகின்ற அதிகாரம் என் ஒருவனுக்கு மட்டுமே கிடைக்கவேண்டும் என்று பேராசை கொண்டான் ஒரு மன்னன். தன் குருவிடம் சென்று அதற்கு வழியும் கூறுமாறு கேட்டான். குருஜி, மன்னனுக்கு புத்தி புகட்ட விரும்பினார். அவர் அரசனிடம், சொல்கிறேன். அதற்கு முன்பு எனக்கு ஒரு காரியம் ஆக வேண்டும் என்றார். அரசன் ஆவலுடன், சொல்லுங்கள்! சொல்லுங்கள்! என்றான். ஒன்றுமில்லை, இந்த செப்புக்குடுவையை உன்னால் முடிந்ததைக் கொண்டு நிரப்பித் தருவாயாக! என்றார்.


அட! இதென்ன பெரிய விஷயம் என்று எண்ணியபடியே, பணியாளரை அழைத்தான். அவரிடம், பொற்காசுகள் நிறைந்த பட்டுத்துணி மூட்டை ஒன்றைத் தந்து அந்தக் குடுவையை நிரப்பச் சொன்னான். அவரும் பொற்காசுகளை அந்தக் குடுவையில் கொட்டினர். குடுவை நிறையவேயில்லை! அது மிகவும் சிறியதுதான். போடப்போட பாதிக்குமேல் காலியாகவே இருந்தது. இன்னும் நிறையக் காசுகள் கொட்டப்பட்டன. அதுவோ நிறையாமலே இருந்தது.


குருஜி, என்ன அரசரே, இந்த சின்னக் குடுவையை நிறைக்க முடியவில்லையா? என்று கேலியாகக் கேட்டார். மன்னனுக்கு அவமானமாகிவிட்டது. கஜானாவிலிருக்கும் பொற்காசுகள், மற்றும் விலையுயர்ந்த மணிகள் எல்லாவற்றையும் கொண்டுவரச் சொன்னான். அனைத்தையும் போட்டாகிவிட்டது. அப்போதும் அந்த மாயப்பாத்திரம் நிறையவே இல்லை. கஜானாவும் காலியாகிவிட்டது. மன்னன் மனம் கலங்கினான். உடலும் உள்ளமும் ஓய்ந்து போனது.


ஐயா, இது என்ன மாயம்? என்ன பாத்திரம் இது? என் மொத்த கருவூலமும் காலியாகி விட்டதே! பாத்திரம் மட்டும் நிறையவே இல்லையே? என்று கலங்கிப்போய்க் கேட்டான். அரசே, இது மனித மனத்தின் ஆசை என்ற பொருளினால் செய்யப்பட்ட குடுவை! இதை நிரப்பவே முடியாது! ஆசைக்கு ஏது அளவு? என்றார். மன்னனுக்குப் புரிந்தது. அவன் குருவை வணங்கினான். மனம் தெளிவு பெற்றது.

இன்றைய செய்திகள்


16.02.2023


* தமிழகத்தில் சென்னை, நெல்லை உட்பட பல இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை.


* மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்க பிப்ரவரி 28 வரை கால அவகாசம் நீட்டிப்பு.


* சீனாவை ஒட்டிய எல்லை பாதுகாப்புக்கு கூடுதலாக 7 பட்டாலியன்களை பணியில் அமர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


* நாடு முழுவதும் 2 லட்சம் தொடக்க வேளாண்மை கடன் சங்கங்கள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.


* இந்தியாவிடம் இருந்து தேஜாஸ் போர் விமானங்களை வாங்க அர்ஜென்டினா, எகிப்து ஆர்வம்.


* நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியது. இதனை அரசு நிலநடுக்க ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது.


* 2026-ம் ஆண்டுக்குள் துபாயில் பறக்கும் டாக்ஸிகள் பயன்பாட்டுக்கு வரும் - ஐக்கிய அரபு அமீரக பிரதமர் அறிவிப்பு.


* ஐசிசி தரவரிசை: அனைத்து வகை கிரிக்கெட்டிலும் முதல் இடம் பிடித்த இந்திய அணி.


* ஆசிய பேட்மிண்டன் கலப்பு அணிகள் சாம்பியன்ஷிப் போட்டி - முதல் சுற்றில் கஜகஸ்தானை வீழ்த்தியது இந்தியா.


* சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ்: முதல் சுற்றில் இந்திய வீரர் சுமித் நாகல் வெற்றி.


Today's Headlines


* NIA officers raided many places in Tamil Nadu including Chennai and Nellai.


 * Extension of deadline till February 28 to link Aadhaar number with electricity connection number.


 * Union Cabinet has approved deployment of 7 additional battalions for border security along the China.


 * Union Cabinet approves setting up of 2 lakh Primary Agriculture Credit Unions across the country.


 * Argentina and Egypt are interested in buying Tejas fighter jets from India.


 * A powerful earthquake had hit New Zealand.  The earthquake measured 6.1 on the Richter scale.  This has been confirmed by the Government Earthquake Research Center.


 * Flying taxis to be in use in Dubai by 2026 - UAE PM announces.


 * ICC Rankings:  Indian team ranked top in all forms of cricket.


 * Asian Badminton Mixed Teams Championship - India beats Kazakhstan in first round


 * Chennai Open Challenger Tennis: Indian player Sumit Nagal won in the first round.


கரூர் மாவட்டம், மாயனூர் கதவணை அருகே நீரில் மூழ்கிய 4 பள்ளி மாணவிகள் சடலமாக மீட்கப்பட்டு கரூர் மருத்துவக்கல்லூரிக்கு உடல்கள் கொண்டு செல்லப்படுகின்றன (4 schoolgirls who drowned near Mayanur Check dam in Karur district are being recovered and the bodies are being taken to Karur Medical College)...

 கரூர் மாவட்டம், மாயனூர் கதவணை அருகே நீரில் மூழ்கிய 4 பள்ளி மாணவிகள் சடலமாக மீட்கப்பட்டு கரூர் மருத்துவக் கல்லூரிக்கு உடல்கள் கொண்டு செல்லப்படுகின்றன (4 schoolgirls who drowned near Mayanur Check dam in Karur district are being recovered and the bodies are being taken to Karur Medical College)... 






இன்றைய (15-02-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 

 


இன்றைய (15-02-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

பிப்ரவரி 15, 2023




திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறுவதில் அலைச்சல்கள் உண்டாகும். உடன்பிறந்தவர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். எழுத்து சார்ந்த பணிகளில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது மேன்மையை ஏற்படுத்தும். கடன் தொடர்பான பிரச்சனைகளின் மூலம் மனவருத்தங்கள் நேரிடலாம். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். விவேகம் வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்



அஸ்வினி : அலைச்சல்கள் உண்டாகும். 


பரணி : நிதானம் வேண்டும்.


கிருத்திகை : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.

---------------------------------------




ரிஷபம்

பிப்ரவரி 15, 2023




குழந்தைகளின் மூலம் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உத்தியோகப் பணிகளில் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டு மகிழ்வீர்கள். நண்பர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். நலம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



கிருத்திகை : மரியாதை அதிகரிக்கும். 


ரோகிணி : ஆதரவான நாள்.


மிருகசீரிஷம் : இன்னல்கள் குறையும். 

---------------------------------------




மிதுனம்

பிப்ரவரி 15, 2023




வியாபாரம் தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த தேக்க நிலைகள் குறையும். உத்தியோகம் சார்ந்த நுணுக்கமான விஷயங்களை தெரிந்து கொள்வீர்கள். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் சற்று குறையும். உறவினர்களுடன் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். சாந்தம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்



மிருகசீரிஷம் : தேக்க நிலைகள் குறையும். 


திருவாதிரை : வாய்ப்புகள் கிடைக்கும். 


புனர்பூசம் : வாதங்களை தவிர்க்கவும்.

---------------------------------------




கடகம்

பிப்ரவரி 15, 2023




கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். நண்பர்களின் வருகையால் புத்துணர்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் மேன்மை உண்டாகும். இலக்கியம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு புதுவிதமான சிந்தனைகள் மேம்படும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி தெளிவுடன் காணப்படுவீர்கள். முயற்சிகள் ஈடேறும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் 



புனர்பூசம் : நெருக்கம் உண்டாகும்.


பூசம் : மேன்மையான நாள்.


ஆயில்யம் : தெளிவு பிறக்கும்.

---------------------------------------




சிம்மம்

பிப்ரவரி 15, 2023




விவசாய பணிகளில் மேன்மை ஏற்படும். வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். பயணங்களில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். எதிர்பாராத தனவரவு கிடைக்கும். உறவினர்களின் வழியில் அனுசரித்து செல்லவும். வியாபார பணிகளில் சிந்தித்து செயல்படவும். உத்தியோக பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். அன்பு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



மகம் : மேன்மை ஏற்படும். 


பூரம் : முன்னேற்றமான நாள்.


உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------





கன்னி

பிப்ரவரி 15, 2023




புதிய வியாபாரம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். பொருளாதாரம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். மக்கள் தொடர்புத் துறைகளில் இருப்பவர்கள் விவேகத்துடன் செயல்படவும். எழுத்துக்களில் கற்பனை நயம் அதிகரிக்கும். சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



உத்திரம் : எண்ணங்கள் ஈடேறும். 


அஸ்தம் : கலகலப்பான நாள்.


சித்திரை : முன்னேற்றம் உண்டாகும். 

---------------------------------------




துலாம்

பிப்ரவரி 15, 2023




வியாபாரப் பணிகளில் ஏற்பட்ட நிதி நெருக்கடிகள் குறையும். புதிய நபர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். விவசாயம் சார்ந்த பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். வெளியூர் தொடர்புகளின் மூலம் ஆதாயம் மேம்படும். குடும்பத்தில் மூத்தவர்களுடன் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



சித்திரை : நெருக்கடிகள் குறையும். 


சுவாதி : முன்னேற்றமான நாள்.


விசாகம் : விவாதங்களை தவிர்க்கவும்.

---------------------------------------




விருச்சிகம்

பிப்ரவரி 15, 2023




அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வாழ்க்கை துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேலோங்கும். உறவினர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். புதிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படவும். நட்பு நிறைந்த நாள்.


  

அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



விசாகம் : ஒத்துழைப்பான நாள்.


அனுஷம் : பயணங்கள் சாதகமாகும்.


கேட்டை : சிந்தித்து செயல்படவும்.  

---------------------------------------




தனுசு

பிப்ரவரி 15, 2023




புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றமான வாய்ப்புகள் உண்டாகும். தடைபட்டு வந்த தனவரவு கிடைப்பதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். போட்டி தேர்வுகளை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். மனதில் தோன்றும் பலவிதமான சிந்தனைகளின் மூலம் அமைதியின்மை ஏற்படும். வியாபார ரீதியான பணிகளில் லாபம் உண்டாகும். போட்டிகள் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்



மூலம் : மாற்றம் உண்டாகும்.


பூராடம் : அமைதியின்மையான நாள்.


உத்திராடம் : லாபம் உண்டாகும். 

---------------------------------------




மகரம்

பிப்ரவரி 15, 2023




வியாபார அபிவிருத்திக்கான முயற்சிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். எதிலும் உற்சாகமாக செயல்படுவீர்கள். இழுபறியான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களிடத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் மாற்றம் ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.  



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



உத்திராடம் : சாதகமான நாள்.


திருவோணம் : இழுபறிகள் குறையும்.


அவிட்டம் : மாற்றம் ஏற்படும்.  

---------------------------------------




கும்பம்

பிப்ரவரி 15, 2023




பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோகத்தில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ரகசியமான செயல்பாடுகளின் மூலம் மேன்மையான வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்ள முடியும். நீண்ட நாள் நண்பர்களின் மூலம் பொருளாதாரம் மேம்படும். விருத்தி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : கிளி பச்சை



அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.


சதயம் : ஒற்றுமை அதிகரிக்கும். 


பூரட்டாதி : பொருளாதாரம் மேம்படும். 

---------------------------------------




மீனம்

பிப்ரவரி 15, 2023




கூட்டு வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நன்மையை ஏற்படுத்தும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். எதிர்பாராத அலைச்சல்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். இணையம் சார்ந்த பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். குழப்பம் விலகும் நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு


 

பூரட்டாதி : முன்னேற்றம் உண்டாகும். 


உத்திரட்டாதி : லாபம் மேம்படும். 


ரேவதி : அனுபவம் கிடைக்கும்.

---------------------------------------


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 15.02.2023 - School Morning Prayer Activities...

 

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 15.02.2023 - School Morning Prayer Activities...

  

திருக்குறள் :



பால் :அறத்துப்பால்


 இயல்:இல்லறவியல் 


அதிகாரம்: அடக்கம் உடைமை


குறள் : 125

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்

செல்வர்க்கே செல்வம் தகைத்து.


பொருள்:

பணிவு என்னும் பண்பு, எல்லார்க்கும் நலம் பயக்கும் ஏற்கனவே செல்வர்களாக இருப்பவர்களுக்கு அந்தப் பண்பு, மேலும் ஒரு செல்வமாகும்.


பழமொழி :

A good example is the best sermon.


உதாரணமாய் நடப்பதே சிறந்த போதனை. 


இரண்டொழுக்க பண்புகள் :


1. தோற்றாலும் தொடர்வேன் என்று துணிந்து செயல் பட வேண்டும்.


 2. ஏனென்றால் தோல்வி வெற்றியின் முதல் படி 


பொன்மொழி :


நம்பிக்கை குறையும் போது ஒவ்வொரு மனிதனும் நெறியற்ற கொள்கையை மேற்கொள்கிறான்.


பொது அறிவு :


1. படர்தாமரையை உருவாக்குவது எது?


 பூஞ்சைக் காளான். 


 2. இந்திய அரசியலமைப்பின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார் ? 


பி .ஆர் .அம்பேத்கர்.


English words & meanings :


ant that is very big - giant


ஆரோக்ய வாழ்வு :


மவுத்வாஷ்: ஆல்கஹால் இருப்பதால் கால்நகங்களை சுத்தப்படுத்த மவுத்வாஷ் உதவும். வறண்ட சருமத்தை மிருதுவாக்கவும் உதவும். நீரில் மவுத்வாஷை கலந்து, அக்கலவையில் 15-20 நிமிடங்கள் பாதங்களை ஊறவைக்கவும். பிறகு pumice stone எனப்படும் நுரைக்கல் கொண்டு இறந்த சரும அணுக்களை அகற்றலாம்.


NMMS Q


இயற்கை வகைப்பாட்டு முறையில் தாவரங்கள் எத்தனை வகுப்புகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.


விடை :மூன்று


பிப்ரவரி 15


 கலிலியோ கலிலி அவர்களின் பிறந்தநாள்


கலீலியோ கலிலி (Galileo Galilei; இத்தாலிய ஒலிப்பில்: கலிலேயோ கலிலே; 15, பிப்ரவரி 1564[3] – 8, சனவரி 1642), ஓர் இத்தாலிய இயற்பியலாளர், கணிதவியலாளர், வானியல் வல்லுநர், பொறியாளர், மற்றும் மெய்யியலாளர் ஆவார். இவர் பதினேழாம் நூற்றாண்டின் அறிவியல் புரட்சியில் மிக முதன்மையான பங்கை ஆற்றியுள்ளார். கலீலியோ "நோக்கு வானியலின் தந்தை",[4] "நவீன இயற்பியலின் தந்தை",[5][6] "நவீன அறிவியலின் தந்தை"[7] என்று பலவாறாகப் பெருமையுடன் அழைக்கப்படுகிறார். தொலைநோக்கி மூலம் வெள்ளியின் வெவ்வேறு முகங்களை உறுதி செய்தல், வியாழனின் நான்கு பெரிய நிலாக்களைக் (அவரது புகழைச் சொல்லும் வகையில் கலிலியின் நிலவுகள் என்று அழைக்கப்படுகின்றன) கண்டுபிடித்தல், சூரியப்புள்ளிகளை நோக்குதல் மற்றும் ஆராய்தல் ஆகியவை நோக்கு வானியலுக்கு இவர் அளித்த பெரிய பங்களிப்புகள் ஆகும். கலீலியோ பயனுறு அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் ஈடுபட்டு, மேம்படுத்தப்பட்ட இராணுவ திசைகாட்டி உட்பட பல்வேறு கருவிகளைக் கண்டுபிடித்துள்ளார்.


நீதிக்கதை


நான்கு பொம்மைகள்


நாட்டை ஆளும் அரசன் ஒருவனிடத்தில், அந்த நாட்டின் சிற்பி நான்கு பொம்மைகளை கொண்டு வந்து தருகிறார். அரசன் கோபமாக நான் என்ன சின்னக் குழந்தையா? இதை வைத்து விளையாடுவதற்கு என்றுக் கேட்கிறார். சிற்பி இல்லை அரசே, இது நம் வருங்கால ராஜாவுக்கு அதாவது நம் இளவரசருக்கு என்கிறார். இந்த பொம்மைகளில் சில விசேஷங்கள் உண்டு. நான்கு பொம்மைகளின் ஒரு பக்க காதிலும் ஓட்டை இருக்கிறது பாருங்கள் என்கிறார். அரசன், இதில் என்ன விஷயம் இருக்கிறது என்கிறார்.


முதல் பொம்மையை அரசனிடம் கொடுக்கிறார் சிற்பி. அதனுடன் ஒரு மெல்லிய சங்கிலியையும் கொடுத்து அதன் காதில் இருக்கும் ஓட்டையில் விடச் சொல்கிறார். சங்கிலி மறுப்பக்க காதின் வழியே வருகிறது. சிற்பி மனிதர்களில் சிலர் நாம் எதைச் சொன்னாலும் இப்படித்தான் இந்தக் காதில் வாங்கி அந்தக் காதின் வழியே அனுப்பி விடுவார்கள் என்கிறார்.


இரண்டாவது பொம்மையை கொடுத்து அதையே திருப்பிச் செய்யச் சொல்கிறார். இந்த பொம்மையில் சங்கிலி வாய் வழியே வருகிறது. இந்த மாறி மனிதர்கள் எதை சொன்னாலும் அதை அடுத்த நொடி வெளியே விட்டு பரப்பிவிடுவார்கள் என்கிறார். பிறகு, மூன்றாவது பொம்மையை கொடுத்து மீண்டும் அதையே செய்யச் சொல்கிறார். இதில், சங்கிலி வெளியே வரவே இல்லை.


சிற்பி, இவர்களிடம் எதைச் சொன்னாலும் உள்ளேயே தான் இருக்கும்.வெளியே வராது என்கிறார். அப்போது இதில் யார் தான் சிறந்த மனிதர் என்று அரசன் கேட்கிறார். என் கையில் இருக்கும் இந்த நான்காவது பொம்மை தான் சிறந்த மனிதன் என்று சிற்பி சொல்கிறார். அரசன் பொம்மையின் காதின் வழியே சங்கிலியை விடுகிறார். மறுபக்க காதின் வழியே வெளிவருகிறது. சிற்பி மீண்டும் செய்ய சொல்கிறார். இரண்டாம் முறை வாயின் வழியே சங்கிலி வருகிறது.


மூன்றாம் முறை வரவே இல்லை. சிற்பி நான்காவது பொம்மை போன்ற மனிதர்கள் தான் நம்பகமானவர்கள்". அவர்களை முழுமையாய் நம்பலாம். எங்கு பேச வேண்டுமோ அங்கு பேசி, எங்கு கேட்க வேண்டுமோ அங்கு கேட்டு, எங்கு அமைதி காக்க வேண்டுமோ அங்கு அமைதி காப்பார்கள் என்று விளக்கம் கூறினார். நீதி : நாம் நான்காவது பொம்மையைப் போல் இருக்கவேண்டும். மற்ற மூன்று பொம்மைகளை போல் இருப்பவர்களையும் ஏற்றுக் கொண்டு சகித்துப் போக வேண்டும்.


இன்றைய செய்திகள்


15.02.2023


* தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களை மின் வாகன நகரங்களாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி அடுத்த 10 ஆண்டுகளில் இந்த நகரங்களில் உள்ள அரசு பேருந்துகள் மற்றும் ஆட்டோ ரிக்‌ஷாக்கள் மின்சார வாகனங்களாக மாற்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


* மார்ச் மாதத்தில் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.


* தமிழகத்தில் 9 முதல் 14 வயது வரை உள்ள சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசிகளை பள்ளிகள், அங்கன்வாடி மையங்களிலேயே வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


* சென்னை வானிலை ஆய்வு மையத்தின் ரேடார் சேவை 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது: தமிழகம் நோக்கி வரும் புயல்களை கணிப்பதில் பேருதவி.


* வழக்கு காரணமாக 5 ஆண்டு களுக்கு மேல் முடங்கி இருந்த 118 திட்டங்களுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.


* சீனா, ஹாங்காங் உட்பட 6 நாடுகளில் இருந்து இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு ‘கோவிட்-19’ பரிசோதனை இனிமேல் கட்டாயமில்லை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.


* சவுதி அரேபியா முதல்முறையாக பெண் விண்வெளி வீராங்கனை ஒருவரை விண்வெளிக்கு அனுப்ப உள்ளது.


* ஆசிய பேட்மிண்டன் கலப்பு அணிகள் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நேற்று தொடங்கியது.


* பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி.


* ஐசிசியின் ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரராக இந்தியாவின் சுப்மன் கில் தேர்வு.


Today's Headlines


* The Tamil Nadu government has declared Chennai, Coimbatore, Trichy, Madurai, Salem and Tirunelveli as electric vehicle cities.  Accordingly, a target has been set to convert government buses and auto rickshaws in these cities to electric vehicles in the next 10 years.


* TNPSC has announced that the Group 4 exam results will be released in the month of March.


 * In Tamil Nadu, measures have been taken to provide cervical cancer vaccines to girls between the ages of 9 and 14 in schools and Anganwadi centers, health department officials said.


* Radar Service of Chennai Meteorological Center completes 50 years: Help in predicting storms approaching Tamil Nadu


 * The Supreme Court has given permission to 118 projects which were stalled for more than 5 years due to litigation.


* The Union Ministry of Health has announced that the 'Covid-19' test will no longer be mandatory for foreign travelers coming to India from 6 countries including China and Hong Kong.


* Saudi Arabia is set to send a female astronaut into space for the first time.


* The Asian Badminton Mixed Teams Championship started yesterday in Dubai.


 * Women's Cricket World Cup: South Africa beat New Zealand


 * India's Subman Gill named ICC Player of the Month for January


அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் - அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள் (Uploading of Marks for Internal Assessment on Website - Proceedings of Director of Government Examinations)...


>>> அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் - அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள் (Uploading of Marks for Internal Assessment on Website - Proceedings of Director of Government Examinations)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


பள்ளிக்கல்வி - சம வேலைக்கு சம ஊதியம் என்ற இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகள் அளிக்க குழு அமைத்தல்- அரசாணை (நிலை) எண்: 25, நாள்: 30-01-2023 வெளியீடு (School Education - Formation of a committee to examine and make recommendations on the demands of Secondary Grade Teachers for equal pay for equal work- G.O. (Ms) No: 25, Dated: 30-01-2023 Issued)...

 

>>> பள்ளிக்கல்வி - சம வேலைக்கு சம ஊதியம் என்ற இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகள் அளிக்க குழு அமைத்தல்- அரசாணை (நிலை) எண்: 25, நாள்: 30-01-2023 வெளியீடு (School Education - Formation of a committee to examine and make recommendations on the demands of Secondary Grade Teachers for equal pay for equal work- G.O. (Ms) No: 25, Dated: 30-01-2023 Issued)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


இன்றைய (14-02-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 


இன்றைய (14-02-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

பிப்ரவரி 14, 2023



குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். எண்ணிய செயல்களை செய்து முடிப்பதில் அலைச்சல்கள் அதிகரிக்கும். கால்நடை தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் ஏற்படும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் கவனத்துடன் செயல்பட வேண்டும். தாமதம் நிறைந்த நாள். 




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை




அஸ்வினி : விவாதங்களை தவிர்க்கவும். 


பரணி : கவனம் வேண்டும்.


கிருத்திகை : நெருக்கடிகள் அதிகரிக்கும்.

---------------------------------------





ரிஷபம்

பிப்ரவரி 14, 2023



புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதிற்குப் பிடித்த செயல்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். அரசு தொடர்பான பணிகளின் மூலம் ஆதாயம் ஏற்படும். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை உண்டாக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். கீர்த்தி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு




கிருத்திகை : சிந்தனைகள் அதிகரிக்கும்.


ரோகிணி : எண்ணங்கள் ஈடேறும்.


மிருகசீரிஷம் : அன்பு அதிகரிக்கும். 

---------------------------------------




மிதுனம்

பிப்ரவரி 14, 2023



உத்தியோகம் சார்ந்த பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றமான சூழல் ஏற்படும். உலக நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றங்களும், பழக்கவழக்கங்களில் புதுமையும் உண்டாகும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் இழுபறிகள் நீங்கும். புதுவிதமான சிந்தனைகளின் மூலம் குழப்பம் குறையும். சலனம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




மிருகசீரிஷம் : மாற்றமான நாள்.


திருவாதிரை : புதுமை உண்டாகும்.


புனர்பூசம் : குழப்பம் குறையும். 

---------------------------------------




கடகம்

பிப்ரவரி 14, 2023



மனதில் புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத பயணங்களால் புதிய அறிமுகம் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பினால் வெற்றி கிடைக்கும். தாமதம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




புனர்பூசம் : ஏற்ற, இறக்கமான நாள்.


பூசம் : அறிமுகம் உண்டாகும். 


ஆயில்யம் : வெற்றி கிடைக்கும்.

---------------------------------------




சிம்மம்

பிப்ரவரி 14, 2023



புதிய மனை மற்றும் வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதுவிதமான எண்ணங்களின் மூலம் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளின் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். கால்நடைகளின் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். லாபம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




மகம் : எண்ணங்கள் மேம்படும்.


பூரம் : இழுபறிகள் நீங்கும்.


உத்திரம் : ஈர்ப்பு அதிகரிக்கும். 

---------------------------------------





கன்னி

பிப்ரவரி 14, 2023



புதுவிதமான ஆபரணங்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். எழுத்து சார்ந்த துறைகளில் முன்னேற்றம் கிடைக்கும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளின் மீது ஈடுபாடு உண்டாகும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சகோதரர் வகையில் உதவி கிடைக்கும். மறைமுகமாக இருந்துவந்த தடைகளை அறிந்துகொள்வீர்கள். பாராட்டுக்கள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




உத்திரம் : அனுகூலமான நாள். 


அஸ்தம் : ஈடுபாடு உண்டாகும். 


சித்திரை : உதவி கிடைக்கும்.

---------------------------------------




துலாம்

பிப்ரவரி 14, 2023



வியாபாரத்தில் உறவினர்களின் வழியில் உதவிகள் கிடைக்கும். குழந்தைகளுக்கு கல்வி தொடர்பான செயல்பாடுகளில் மேன்மை உண்டாகும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பேச்சு திறமை மேம்படும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் வழியில் ஆதாயம் உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : கருப்பு நிறம்




சித்திரை : மேன்மை உண்டாகும்.  


சுவாதி : நுணுக்கங்களை அறிவீர்கள்.


விசாகம் :  ஆதாயம் உண்டாகும்.

---------------------------------------





விருச்சிகம்

பிப்ரவரி 14, 2023



வியாபாரம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் சற்று கவனம் வேண்டும். தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். அரசு தொடர்பான காரியங்களில் நிதானம் வேண்டும். முத்திரை தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை ஏற்படும். நிம்மதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




விசாகம் : கவனம் வேண்டும்.


அனுஷம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 


கேட்டை : மேன்மை ஏற்படும். 

---------------------------------------




தனுசு

பிப்ரவரி 14, 2023



உடன்பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றம் உண்டாகும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். மாணவர்களுக்கு அவ்வப்போது ஞாபக மறதி ஏற்பட்டு நீங்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். கடன் சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். அலைச்சல்கள் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



மூலம் : மாற்றம் உண்டாகும். 


பூராடம் : விவாதங்களை தவிர்க்கவும். 


உத்திராடம் : சிந்தித்து செயல்படவும். 

---------------------------------------





மகரம்

பிப்ரவரி 14, 2023



மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் உயர்வு ஏற்படும். தனவரவில் இருந்துவந்த நெருக்கடிகள் நீங்கும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். நுட்பமான செயல்பாடுகளின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். மனதில் இருக்கக்கூடிய கவலைகள் குறையும். வியாபார ரீதியான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வாகனம் தொடர்பான பயணங்களில் நிதானம் வேண்டும். வரவுகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்




உத்திராடம் : வாய்ப்புகள் கிடைக்கும். 


திருவோணம் : ஆர்வம் அதிகரிக்கும். 


அவிட்டம் : நிதானம் வேண்டும். 

---------------------------------------




கும்பம்

பிப்ரவரி 14, 2023



வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். மனதிற்கு விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மாணவர்களின் முயற்சிகளுக்கு ஏற்ப சாதகமான பலன் கிடைக்கும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். வெற்றி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




அவிட்டம் : ஒத்துழைப்பு கிடைக்கும். 


சதயம் : விருப்பம் நிறைவேறும்.


பூரட்டாதி : குழப்பம் நீங்கும். 

---------------------------------------




மீனம்

பிப்ரவரி 14, 2023



உடன்பிறந்தவர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான தேடல் உண்டாகும். செயல்பாடுகளில் சுதந்திர போக்கு அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். தொழிலில் கூட்டாளிகளிடையே ஒற்றுமையான சூழல் ஏற்படும். கனிவு வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்




பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.


உத்திரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.  


ரேவதி : பயணங்கள் கைகூடும். 

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

How to Update General Profile, Enrollment Profile & Facility Profile of Students on UDISE + Site

 மாணவர்களின் General Profile, Enrolment Profile & Facility Profile விவரங்களை UDISE + தளத்தில் Update செய்யும் வழிமுறை Procedure to Updat...