கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
பணிவரன்முறை செய்யப்படாத பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு பணிவரன்முறை செய்ய கருத்துருக்கள் அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 9829/ டபிள்யு2/ இ1/ 2023, நாள்: 23-02-2023 (Proceedings of the Joint Director of School Education for Seeking Proposals for Regularisation of Non-Regulariseded Promoted Post Graduate Teachers)...
பள்ளி மேலாண்மை குழுக் (SMC) கூட்டத்தில் அனைத்து அரசு பள்ளி (தொடக்க /நடுநிலை /உயர்நிலைப் பள்ளி) தலைமை ஆசிரியர்களும் பின்பற்ற வேண்டியவை (All Government School (Primary/Middle/High School) Headmasters to follow in School Management Committee Meeting)...
பள்ளி மேலாண்மை குழுக் (SMC) கூட்டத்தில் அனைத்து அரசு பள்ளி (தொடக்க /நடுநிலை /உயர்நிலைப் பள்ளி) தலைமை ஆசிரியர்களும் பின்பற்ற வேண்டியவை (All Government School (Primary/Middle/High School) Headmasters to follow in School Management Committee Meeting)...
அனைத்து அரசு பள்ளி( தொடக்க /நடுநிலை /உயர் நிலை பள்ளி )தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு :
1. 3.3.2023 அன்று நடைபெறும் மாதாந்திரபள்ளி மேலாண்மை குழு கூட்டத்திற்க்கு, அனைத்து SMC உறுப்பினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்க வேண்டும்.
2. தங்கள் பள்ளி சார்ந்த இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலர்கள் அனைவரும் கூட்டத்தில் பங்கு பெரும் வகையில் தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்க வேண்டும்.
3. மாநிலத் திட்ட இயக்கத்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ள கூட்டத்தினுடைய கருப்பொருட்கள் முழுமையாக பள்ளி மேலாண்மை குழுவில் பின்பற்றப்பட வேண்டும்.
4. அனைத்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களும் நம்ம ஊர் நம்ம பள்ளி என்ற திட்டத்தின் முழு விவரங்களையும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
5. அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் பள்ளி மேம்பாட்டு திட்டத்தினை TNSED parent app இல் SMC கூட்டம் நடைபெறும் நாளில் பதிவு செய்தல் வேண்டும்.
6. CSR மூலம் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் தனியார் பங்களிப்பின் வாயிலாக நிதி உதவி பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது. எனவே மாதாந்திர மேம்பாட்டு திட்டத்தில் உட்புற கட்டமைப்பு வசதிகளை CSR இல் பதிவு செய்யப்பட வேண்டும்.
7. பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் கலந்து கொள்ளக்கூடிய உறுப்பினர்கள் வருகை பதிவினை மாலை 5:30 மணிக்குள் அப்டேட் செய்ய வேண்டும்.
8. பள்ளி மேம்பாட்டு திட்டத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை அன்று மாலை 6:00 மணிக்குள் அப்டேட் செய்திட வேண்டும்.
9. செயல்முறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள கூட்டக் கருப்பொருட்களை முறையாக பின்பற்ற வேண்டும்.
10. பள்ளி மேலாண்மை குழுக்களை பலப்படுத்தி நம் பள்ளிகளை வலுப்படுத்துவோம்.
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.03.2023 - School Morning Prayer Activities...
>>> பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.03.2023 - School Morning Prayer Activities...
திருக்குறள் :
பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: ஒழுக்கம் உடைமை
குறள் :137
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.
பொருள்:
ஒழுக்கத்தினால் எவரும் உயர்வை அடைவர்; ஒழுக்கம் இல்லாதவர் வேண்டாத பழியை அடைவர்.
பழமொழி :
Aspiring people are inspiring people.
ஆர்வம் உடையோரே ஆர்வத்தைத் தூண்ட முடியும்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. மழை காலத்திற்கு என்று உணவை சேமிக்கும் எறும்பை போல மாணவ பருவத்திலேயே சேமிக்க பழகுவேன்.
2. கனி தரும் மரங்கள் போல மற்றவர்க்கு எப்போதும் பயன் தர முயற்சிப்பேன்.
பொன்மொழி :
உலகில் உள்ள எல்லா இதயங்களும் நல்ல இதயங்களே.. ஆனால் சந்தர்ப்பம் சூழ்நிலைகள் அதை மாற்றியமைக்கின்றன.
பொது அறிவு :
1. கல்பாக்கம் அணு உலையின் பெயர் என்ன?
பூர்ணிமா .
2.வெள்ளைப் பூண்டில் உள்ள அமிலம் எது?
பாலிக்
English words & meanings :
commendation - formal or official praise. noun. The girl who rescued the sinking students received commendation. புகழ்ச்சி, மெச்சுதல். பெயர்ச் சொல்
ஆரோக்ய வாழ்வு :
பிற்பகல் தூக்கம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை ஒழுங்குபடுத்துகிறது. அதேவேளையில் பிற்பகல் தூக்கம் 2 மணி நேரத்துக்குள் இருக்க வேண்டும். அதனை தாண்டி செல்லக்கூடாது. தூக்கம் மட்டுமின்றி, சரியான வாழ்க்கை முறையும் ஆரோக்கியமான உணவும் மூளையின் சிறந்த செயல்பாட்டுக்கு மிகவும் முக்கியம் ஆகும். அதற்கு நீங்கள் சில உணவுப் பொருட்களை தினமும் சாப்பாட்டில் செய்துக் கொள்வது அவசியமாகும்.
மார்ச் 02
சரோஜினி நாயுடு அவர்களின் நினைவு நாள்
சரோஜினி நாயுடு அல்லது சரோஜினி சட்டோபத்யாயா (பிப்ரவரி 13,1879, ஹைதராபாத் - மார்ச் 2,1949, லக்னோ) அவர் இந்தியாவின் நைட்டிங்கேல் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் ஒரு பிரபலமான சிறுமுது அறிஞர், கவிஞர், எழுத்தாளர் ,சுதந்திரப் போராளி மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது பெண் தலைவரும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல் பெண் ஆளுனரும் ஆவார்.அவரது பிறந்த நாள் இந்தியாவில் மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது.
1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 15 ஆம் நாள் இந்தியா சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு அவர் யுனைட்டட் ப்ரொவின்சஸ் (தற்போது உத்தரப்பிரதேசம் என்று அழைக்கப்படுகிறது) ன் ஆளுநராக பதவியேற்றார். இதன் வழியாக இந்தியாவின் முதல் பெண் ஆளுநரானார். மார்ச் 2, 1949 அன்று மாரடைப்பால் அவர் மரணமடைந்தார்.
நீதிக்கதை
ராஜகுருவின் நட்பு
விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர் அரண்மனையில் தாத்தாச்சாரியார் என்பவர் ராஜகுருவாக இருந்தார். தெனாலி கிராமத்துக்கு அருகில் உள்ள மங்களகிரி என்னும் ஊருக்கு ராஜகுரு தாத்தாச்சாரியார் வந்திருந்தார்.
இதையறிந்த தெனாலிராமன் ராஜகுருவை சந்தித்தான். தன்னுடைய விகடத் திறமையாலும் பேச்சாற்றலாலும் ராஜகுருவின் சிஷ்யன் ஆனார். ராஜகுருவின் நட்பு கிடைத்த பின் தன் குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பதாகவும் அதனால் மன்னர் கிருஷ்ணதேவராயரிடம் சிபாரிசு செய்து அரண்மனையில் வேலை கிடைக்க ஏற்பாடு செய்யுமாறும் வேண்டிக் கொண்டார்.
அவன் வேண்டுகொண்டபடியே ராஜகுருவும் அரண்மனையில் வேலைக்கு சேர்த்து விடுவதாக வாக்களித்தார். பிறகு ராஜகுருவிடமிருந்து எந்தத் தகவலும் வரவில்லை. அதனால் விஜயநகரம் சென்று ராஜகுருவை நேரில் பார்த்து அரண்மனையில் சேர்ந்து விட வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டார்.
அதன் பிறகு தெனாலி பல நாட்கள் நடந்து விஜய நகரம் வந்து சேர்ந்தார். தெனாலிராமன் ராஜகுருவை அவரது இல்லத்தில் சந்தித்தார். தெனாலிராமனைப் பார்த்ததும் ராஜகுரு அதிர்ச்சி அடைந்தார். யாரப்பா நீ? உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார்.
ராஜகுருவே நான்தான் தெனாலிராமன். தாங்கள் மங்களகிரிக்கு வந்த போது நண்பர்கள் ஆனோம். தாங்கள் அரசவையில் என்னைச் சேர்த்து விடுவதாகச் சொன்னீர்கள். பல மாதங்களாக தங்களிடமிருந்து எந்த பதிலும் வராததால் தான், நான் நேரில் வந்துள்ளேன். தயவு செய்து என்னை பற்றி மன்னரிடம் எடுத்துச் சொல்லி அரசவையில் சேர்த்து விடுங்கள் என்று வேண்டினான்.
உன்னை யாரென்றே எனக்குத் தெரியாதப்பா... மரியாதையாக வெளியே போ, இல்லையேல் அவமானப்படுவாய் என்று விரட்டினார். வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட தெனாலிராமன் பழிக்குப்பழி வாங்கத் துடித்தார். இதற்காக காளிதேவியைத் துதித்தார்.
நீதி :
நாம் யாரையும் எதற்காகவும் நம்பக் கூடாது.
இன்றைய செய்திகள்
02.03.2023
* சென்னை எல்ஐசி கட்டிட பகுதியில் வருகிறது அடுக்குமாடி கட்டிடங்கள்: சிஎம்டிஏ புதிய திட்டம்.
* ஆசிரியர்களின் நலன் காக்க ரூ.225 கோடியில் புதிய திட்டங்கள்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.
* பிப்ரவரியில் இந்தியாவின் மின் நுகர்வு 9% அதிகரிப்பு - 11.78 ஆயிரம் கோடி மின்சார யூனிட் பயன்பாடு.
* எல்லையோர கிராமங்களின் வளர்ச்சியை கண்காணிக்க மத்திய அமைச்சர்களுக்கு உத்தரவு.
* கரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகத்திலிருந்துதான் பரவியது என்று அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ தெரிவித்துள்ளது.
* ஈரானின் அணுசக்தி தளத்தில் 83.7% யுரேனியம் செறிவூட்டப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.
* ஐசிசி டெஸ்ட் தரவரிசை : இந்திய வீரர் அஸ்வின் முதல் இடத்திற்கு முன்னேற்றம்.
* பெண்களுக்கான உலகக் கோப்பை ஸ்னூக்கர் போட்டி - இந்திய அணி தங்கம் வென்றது.
* 'பிபா'வின் சிறந்த வீராங்கனை விருதை பெற்றார் அலெக்சியா புடெல்லாஸ்.
Today's Headlines
* Apartment buildings coming up in Chennai LIC building area: CMDA new project.
* New schemes worth Rs 225 crore to protect teacher' welfare: CM Stalin's announcement
* India's electricity consumption up 9% in February - 11.78 thousand crore electricity units were used.
* Union Ministers directed to monitor development of border villages.
* According to the FBI, the United States intelligence agency, the Corona virus was spread from a Chinese laboratory.
* Iran's nuclear power plant has 83.7% enriched uranium, according to a United Nations Monitoring committee.
* ICC Test Rankings: Indian batsman Ashwin moves up to No.1
* Women's World Cup Snooker Tournament - India team bags the gold.
* Alexia Butellas won the FIFA Player of the Year Award.
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வி மையங்கள் மற்றும் மருத்துவ முகாம் சார்ந்த மார்ச் மாதத்திற்கான பள்ளி மேலாண்மை குழு (SMC) கலந்துரையாடல் கூட்டம் - சிந்தனையில் மாற்றம்; சமூகத்தின் ஏற்றம் (School Management Committee Discussion Meeting for March on Inclusive Education Centers and Medical Camps for Children with Disabilities - Change in Thinking; The rise of society)...
03-03-2023 அன்று பள்ளி மேலாண்மைக் குழு (SMC) கூட்டம் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நடத்த வழிகாட்டுதல் - ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குனரின் செயல்முறைகள் - இணைப்பு: பள்ளி மேலாண்மை கூட்ட நிகழ்வுகள் (School Management Committee - December Month Meeting to be held on (03-03-2023) - Guidelines - Proceedings of the State Project Director of Samagra Shiksha - Attachment: School Management Committee Meeting Events) ந.க.எண்: 2223/ A11/ பமேகு/ ஒபக/ 2023, நாள்: 01-03-2023...
>>> பள்ளி மேலாண்மைக் குழு செயலி - அனைத்து காணொளிகள் இணைப்புகள் - ஒரே பக்கத்தில்...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் , மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமை கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி நடைபெற்று வருகிறது . மேல்நிலைப்பள்ளிகளில் செய்முறைத் தேர்வுகள் மார்ச் 1 முதல் 9 ஆம் தேதி வரை நடைபெறுவதால் மேல்நிலைப் பள்ளிகள் நீங்கலாக தொடக்க / நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் மார்ச் 2023 மாதத்திய பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தினை 03.03.2023 ( வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணி முதல் 4.30 மணி வரை நடத்திட அறிவுறுத்தப்படுகிறது.
⚡⚡ *பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்* ⚡⚡
நாள் - *வெள்ளிக்கிழமை*
தேதி - *03/03/2023*
நேரம் - *பிற்பகல் 3.00 மணி முதல் 4:30*
*பின்பற்ற வேண்டிய செயல்பாடுகள் மற்றும் வழிமுறைகள்*
காணொலிகள்* - சிறப்பாக செயல்ப்பட்ட பள்ளி மேலாண்மைக் குழு காணொலிகளை திரையிடுதல்
*1.Attendance: https://kalvianjal.blogspot.com/2022/09/smc-school-management-committee-app_95.html*
*2. Planning Part1: https://kalvianjal.blogspot.com/2022/09/smc-1-school-management-committee-app.html*
*3. Planning Part 2: https://kalvianjal.blogspot.com/2022/09/smc-2-school-management-committee-app.html*
*4. Planning Part3: https://kalvianjal.blogspot.com/2022/09/smc-3-school-management-committee-app.html*
*5. Playlist link: https://kalvianjal.blogspot.com/2022/09/school-management-committee-app-all.html*
* பள்ளி வளாகத்தை பார்வையிடுதல் **
*வருகைப் பதிவு* -
*தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பெற்றோர் செயலியில் (TNSED Parent App) பதிவு செய்தல்*
*வரவேற்பு*- தலைவர் அனைவரையும் வரவேற்று கூட்டத்தை தொடங்கி வைத்தல்
*இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களின் பங்கேற்பு*- (மாணவர்களின் எண்ணிக்கை , வருகைப் பதிவு,கற்றல் அடைவு, செயல்திட்டம் குறித்து கலந்தாலோசித்தல்)
*திட்டமிடுதலுக்கான கருப்பொருட்கள்*
*கூட்டப் பொருள் மீதான விவாதம்*
-முன்பே தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்ட, கூட்டப்பொருட்களை கலந்தாலோசித்து உரிய தீர்மானங்களை மேற்கொள்ளுதல்
- பொறுப்பாளர்கள், தொடர்புடையத் துறைகளின் ஒத்துழைப்பு கால அளவு ஆகியவற்றை நன்கு திட்டமிட்டு தீர்மானங்கள் நிறைவேற்றுதல்.
-தீர்மானங்களை பதிவேட்டில் பதிவுசெய்தல் (ம) கையொப்பம் பெறுதல்.
*கூட்ட நிறைவு*
பங்கேற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி கூறுதல்.
*அனைத்துவகை அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கனிவான கவனத்திற்கு :*
(03-03-2023) இன்று நடைபெறும் *பள்ளி மேலாண்மை குழு(SMC)* கூட்டத்தில் தங்கள் பள்ளிகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பிற வசதிகளை *TNSED parents app ல் login* செய்து பள்ளி மாதாந்திர மேம்பாட்டு திட்ட பதிவேற்றம் குறித்த தகவல்:
1. அதற்கு முன் திட்டமிடல் மிக அவசியம், தங்கள் பள்ளிக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை குறித்து வைத்துக் கொள்ளுதல் வேண்டும்.
2. சக ஆசிரியர்களுடன் கலந்துரையாடி தகவல் பெறுதல் வேண்டும்.
3. இன்று நடைபெறும் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினருடன் விவாதித்து தங்கள் பள்ளிகளின் தேவைகளை குறிப்பு எடுத்துக்கொள்ள வேண்டும்.
4.TNSED parents app ஐ login செய்து பள்ளி மாதாந்திர மேம்பாட்டு திட்ட பகுதிக்குச் சென்று , தங்கள் பள்ளிக்குத் தேவையான நான்கு உட்கூறுகளில் அல்லது நான்கு உட்கூறுகளையும் தேர்வு செய்ய வேண்டும்.
5. உட்கூறுகளில் கேட்கப்பட்டிருக்கக்கூடிய விபரங்களுக்கு அத்தியாவசிய தேவைகளை அதில் பதிவேற்றம் செய்திட வேண்டும்.
6. 1372 அரசு பள்ளிகளும் இன்று நடைபெறும் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் பள்ளி மேம்பாட்டு திட்டத்தை(School Development Plan) பதிவேற்றம் செய்ய வேண்டும்.
7. நீங்கள் பதிவேற்றம் செய்யும் பள்ளி மேம்பாட்டு திட்டத்தை பொறுத்து தான் வரும் கல்வியாண்டில் (2022-23) தங்கள் பள்ளிக்கு தங்கள் பள்ளிக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படும்.
8. பேராசிரியர் அன்பழகன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பள்ளிக்கல்வித்துறைக்கு உட்கட்டமைப்பு வசதிகளுக்கு ஒதுக்கப்பட்ட ரூபாய் 7000 கோடி, பள்ளி மேம்பாட்டு திட்டத்தில் பதிவிட்ட பள்ளிகளுக்கு பதிவின் அடிப்படையில் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
9. பள்ளி மேம்பாட்டு திட்டத்தில் அரசின் நிதி உதவி கோரப்படாத( சைக்கிள் செட், விளையாட்டு மைதானம் பராமரித்தல், உணவு கூடம் அமைத்தல், சோலார் இயந்திரம் அமைத்தல், பிற வகையான உட்கட்டமைப்பு வசதிகள் ) பட்சத்தில் தனியார் பங்களிப்புகள் மூலம் *( CSR,நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் )* தாங்கள் நிதி உதவி கோரலாம். அதற்கான பகுதியும் பள்ளியும் மேம்பாட்டு திட்டத்தில் நான்கு உட்கூறுகளில் கொடுக்கப்பட்டுள்ளது.
10.நம்ம பள்ளி திட்டத்தின் கீழ் CSR மூலம் பள்ளி வளர்ச்சிக்கு நிதி உதவி பெற TNSED parent app ல் SDP பதிவேற்றம் செய்வது நமது கடமை.
11.CSR fund நம்ம பள்ளி திட்டத்தின் கீழ் வரும் கனரா வங்கியில் SNA அக்கௌன்ட்( HM+SMC தலைவர் கொண்டு ) தொடங்கிட வேண்டும்.
11. அனைத்து வகை அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் இன்று நடைபெறும் பள்ளி மேலாண்மை குழு கூட்ட நிகழ்வுகளை கால அட்டவணையை பின்பற்றி சிறப்பாக நடத்திடவும், வருகை பதிவு மற்றும் பள்ளி மேம்பாட்டு திட்டத்தை TNSED parent app ல் பதிவேற்றம் செய்திடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பள்ளிக் கல்வித் துறை தொடர்பாக முதலமைச்சரின் இன்றைய அறிவிப்புகள் குறித்து பள்ளிக் கல்வி ஆணையரின் செய்திக் குறிப்பு எண்: 001/032023, நாள்: 01-03-2023 (Today's announcements of the Chief Minister regarding the School Education Department, Commissioner of School Education's Press Note No: 001/032023, Dated: 01-03-2023)...
ஆசிரியர்கள் நலன் காக்கும் புதிய திட்டங்கள் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புகள் (New Schemes for the Welfare of Teachers - Honorable Chief Minister's Announcements)...
ஆசிரியர்கள் நலன் காக்கும் புதிய திட்டங்கள் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புகள் (New Schemes for the Welfare of Teachers - Honorable Chief Minister's Announcements)...
🛑🎤 *மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் பிறந்த நாள் அறிவிப்புகள்*
📌 *மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அனைத்து ஆசிரியர்களுக்கும் முழு உடல் பரிசோதனை செய்யப்படும்.*
📌 *இடைநிலை & பட்டதாரி ஆசிரியர்களுக்கு கைகணினி வழங்கப்படும்.*
📌 *ஆசிரியர்களின் பிள்ளைகள் உயர்கல்விக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.*
📌 *அரசின் நலத்திட்டங்களையும் மாணவர்களிடம் சிறப்பாக கொண்டு சேர்க்கும் ஆசிரியர்களுக்கு வெளிநாட்டு கல்வி சுற்றுலா ஏற்பாடு செய்யப்படும்.*
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
முதல்வர் அறிவிப்பு
மாணவர்களின் நலனுக்காக அயராது பாடுபட்டு வரும் ஆசிரியர் சமூகத்தை சிறப்பிக்கும் விதமாகவும் ஆசிரியர்களின் நலனைக் காக்கவும் புதிய திட்டங்களை செயல்படுத்த நமது அரசு முடிவு செய்துள்ளது.
மாறிவரும் கற்றல், கற்பித்தல் முறைகளுக்கு ஏற்ப தங்களை சிறப்பாக மெருகேற்றிக் கொள்வதற்கென அனைத்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் கைக்கணினி (Tablet) வழங்கப்படும்.
மாணவர் வாழ்க்கை ஏற்றம்காண அயராது உழைக்கும் ஆசிரியர் பெருமக்களின் உடல்நலம் காக்க அனைத்து ஆசிரியர்களுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும்.
உயர்கல்வி பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்காக தற்போது ஆசிரியர் நல நிதியிலிருந்து வழங்கபட்டு வரும் கல்விச் செலவு (tuition fee) ரூ.50,000/- வரை உயர்த்தி வழங்கப்படும்.
அரசின் நலத்திட்ட உதவிகளை மாணவர்களிடையே சிறப்பாக கொண்டு சேர்க்கும் ஆசிரியர்கள், வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர்.
இத்தகு திட்டங்கள் சுமார் 225 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்ற செய்தியை இந்தத் தருணத்தில் உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Conversion to No Commodity Card - Tamil Nadu Government Press Release
பண்டகமில்லா குடும்ப அட்டையாக (No Commodity Card) மாற்றுதல் - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு பொதுவிநியோகத் திட்டத்தில் குடும்ப அட்டைதாரர்க...