கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஊக்க ஊதியம் - அரசு / ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி / நடுநிலைப்பள்ளி, நகராட்சி மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் 10.03.2020-க்கு முன் துறையின் முன் அனுமதி பெற்று / துறையின் முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்ற ஆசிரியர்கள் சார்பான விவரங்கள் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க. எண்: 5150/ இ1/ 2023 , நாள்: 02.03.2023 (Incentive - Details of Teachers working in Government / Panchayat Union Primary School / Middle School, Municipal and Government Aided Schools with prior pre-permission of the Department / Teachers pursuing higher education without prior pre-permission of the Department before 10.03.2020 - Proceedings of Director of Elementary Education R.C. No: 5150/ E1/ 2023 , Dated: 02.03.2023)...


>>> ஊக்க ஊதியம் - அரசு / ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி / நடுநிலைப்பள்ளி, நகராட்சி மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் 10.03.2020-க்கு முன் துறையின் முன் அனுமதி பெற்று / துறையின் முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்ற ஆசிரியர்கள் சார்பான விவரங்கள் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க. எண்: 5150/ இ1/ 2023 , நாள்: 02.03.2023 (Incentive - Details of Teachers working in Government / Panchayat Union Primary School / Middle School, Municipal and Government Aided Schools with prior pre-permission of the Department / Teachers pursuing higher education without prior pre-permission of the Department before 10.03.2020 - Proceedings of Director of Elementary Education R.C. No: 5150/ E1/ 2023 , Dated: 02.03.2023)...



>>>  ஊக்க ஊதியம் - அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் 10.03.2020-க்கு முன் துறையின் முன் அனுமதி பெற்று / துறையின் முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்ற ஆசிரியர்கள் சார்பான விவரங்கள் - படிவங்கள் 1, 2, 3 & 4...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


 

இன்றைய (02-03-2023) ராசி பலன்கள் நட்சத்திர பலன்கள்...


 


இன்றைய (02-03-2023) ராசி பலன்கள் நட்சத்திர பலன்கள்... 


மேஷம்

மார்ச் 02, 2023



குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசு தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த இழுபறிகள் விலகும். உறவினர்களை பற்றிய புரிதல் உண்டாகும். சிறு தூர பயணங்களால் மனதில் மாற்றங்கள் ஏற்படும். அதிரடியான சில செயல்பாடுகளின் மூலம் எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். பணி நிமிர்த்தமான சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். போட்டிகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




அஸ்வினி : சுபமான நாள்.


பரணி : இழுபறிகள் விலகும். 


கிருத்திகை : முடிவுகள் உண்டாகும்.

---------------------------------------



ரிஷபம்

மார்ச் 02, 2023



கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். சுபகாரியங்களை முன் நின்று செய்வீர்கள். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வேலையாட்களால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். உத்தியோகத்தில் இருந்துவந்த நெருக்கடியான சூழ்நிலைகள் மறையும். புதிய நபர்களின் மூலம் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். பக்தி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை




கிருத்திகை : ஒற்றுமை அதிகரிக்கும்.


ரோகிணி : இன்னல்கள் குறையும். 


மிருகசீரிஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------




மிதுனம்

மார்ச் 02, 2023



நினைத்த பணிகள் அலைச்சலுக்கு பின்பு நிறைவேறும். எதிர்பாராத சில நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உணர்ச்சிவசமின்றி பொறுமையுடன் செயல்படவும். வாடிக்கையாளர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். உயர் அதிகாரிகளிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




மிருகசீரிஷம் : நெருக்கடிகள் நீங்கும்.


திருவாதிரை : பொறுமையுடன் செயல்படவும்.


புனர்பூசம் : கருத்து வேறுபாடுகள் மறையும்.

---------------------------------------



கடகம்

மார்ச் 02, 2023



அரசு சார்ந்த பணிகளில் கவனம் வேண்டும். உடனிருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும். உடலில் ஒருவிதமான அசதிகள் ஏற்பட்டு நீங்கும். செயல்பாடுகளில் ஆர்வமின்மை உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்ளவும். வியாபார பணிகளில் உள்ள போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோக பணிகளில் அலைச்சல்கள் ஏற்பட்டு நீங்கும். ஆதரவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




புனர்பூசம் : கவனம் வேண்டும்.


பூசம் : ஆர்வமின்மையான நாள்.


ஆயில்யம் : அலைச்சல்கள் நீங்கும்.

---------------------------------------



சிம்மம்

மார்ச் 02, 2023



மனதில் தன்னம்பிக்கை மேம்படும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். மனதில் இருந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும். மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். உத்தியோக பணிகளில் மதிப்புகள் அதிகரிக்கும். நிம்மதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




மகம் : தன்னம்பிக்கை மேம்படும்.


பூரம் : ஆதரவு கிடைக்கும்.


உத்திரம் : மதிப்புகள் அதிகரிக்கும்.

---------------------------------------




கன்னி

மார்ச் 02, 2023



பொது காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். உறவினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். விவசாய பணிகளில் உள்ள சில நுட்பங்களை கற்று கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் புதுவிதமான அனுபவம் ஏற்படும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். உத்தியோக பணிகளில் திடீர் இடமாற்றங்கள் நேரிடும். வியாபாரத்தில் ஏற்பட்ட சில மாற்றங்களின் மூலம் மேன்மை உண்டாகும். வரவுகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




உத்திரம் : ஈடுபாடு உண்டாகும். 


அஸ்தம் : அனுபவம் ஏற்படும். 


சித்திரை : மாற்றங்கள் நேரிடும்.

---------------------------------------



துலாம்

மார்ச் 02, 2023



சகோதரர் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். புதிய நண்பர்களால் உற்சாகம் ஏற்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். வியாபார பணிகளில் புதிய தொடர்புகள் ஏற்படும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். சோதனைகள் விலகும்  நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




சித்திரை : மகிழ்ச்சி உண்டாகும். 


சுவாதி : செல்வாக்கு அதிகரிக்கும்.


விசாகம் : இழுபறிகள் விலகும்.

---------------------------------------




விருச்சிகம்

மார்ச் 02, 2023



எண்ணிய பணிகளை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். எதிர்மறை கருத்துக்களை குறைத்து கொள்ளவும். எடுத்து செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். நெருக்கமானவர்களிடம் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் இழுபறிகள் ஏற்படும். வியாபாரத்தில் மந்தமான சூழல் அமையும். உத்தியோக பணிகளில் விழிப்புணர்வுடன் இருக்கவும். சாந்தம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு  


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




விசாகம் : தாமதமான நாள்.


அனுஷம் : விவாதங்கள் மறையும்.


கேட்டை : மந்தமான நாள்.

---------------------------------------



தனுசு

மார்ச் 02, 2023



திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். குழந்தைகளின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். பயணங்களால் ஆதாயமும், புதிய நபர்களின் அறிமுகமும் கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். தடைகள் விலகும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




மூலம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


பூராடம் : எண்ணங்கள் கைகூடும். 


உத்திராடம் : முன்னேற்றம் உண்டாகும்.

---------------------------------------



மகரம்

மார்ச் 02, 2023



கல்வி பணிகளில் சாதகமான சூழல் ஏற்படும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்பாலின மக்களால் ஆதாயம் உண்டாகும். கால்நடை தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும். வியாபாரம் நிமிர்த்தமான உதவிகள் சாதகமாக அமையும். பணி நிமிர்த்தமான முயற்சிகள் கைகூடும். ஓய்வு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்




உத்திராடம் : சாதகமான நாள்.


திருவோணம் : ஆதாயம் உண்டாகும்.


அவிட்டம் : முயற்சிகள் கைகூடும்.

---------------------------------------



கும்பம்

மார்ச் 02, 2023



புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் குறையும். உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். ஒப்பந்தம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். மனதில் நினைத்த பணிகளை செயல் வடிவில் மாற்றுவீர்கள். உத்தியோக பணியில் திருப்தியான சூழல் ஏற்படும். முயற்சிகள் ஈடேறும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




அவிட்டம் : தடைகள் குறையும். 


சதயம் : எண்ணங்கள் கைகூடும்.


பூரட்டாதி : திருப்தியான நாள்.

---------------------------------------




மீனம்

மார்ச் 02, 2023



குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு ஆதரவு மேம்படும். பழைய கடனை அடைப்பீர்கள். வியாபாரத்தில் புதிய வாய்ப்பும், லாபமும் உண்டாகும். உத்தியோகத்தில் இருந்துவந்த எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். கவலைகள் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




பூரட்டாதி : கலகலப்பான நாள்.


உத்திரட்டாதி : ஆதரவு மேம்படும். 


ரேவதி : வெற்றிகரமான நாள்.

---------------------------------------


G.O.No. 39 & 40, Dated : 01-03-2023 - தமிழ்நாடு குடிமைப் பணிகள் - துணை ஆட்சியர் நிலையில் 33 பேருக்கு மாறுதல் மற்றும் பணி நியமனம் - அரசாணைகள் (2டி) எண்: 39 மற்றும் 40, நாள்: 01-03-2023 வெளியீடு (Tamil Nadu Civil Services - Transfer and appointment of 33 persons in the post of Deputy Collector)...

 

 

>>> G.O.No. 39, Dated : 01-03-2023 - தமிழ்நாடு குடிமைப் பணிகள் - துணை ஆட்சியர் நிலையில் 8 பேருக்கு மாறுதல் மற்றும் பணி நியமனம் - அரசாணைகள் (2டி) எண்: 39, நாள்: 01-03-2023 வெளியீடு (Tamil Nadu Civil Services - Transfer and appointment of 8 persons in the post of Deputy Collector)...



>>> G.O.No.40, Dated : 01-03-2023 - தமிழ்நாடு குடிமைப் பணிகள் - துணை ஆட்சியர் நிலையில் 25 பேருக்கு மாறுதல் மற்றும் பணி நியமனம் - அரசாணைகள் (2டி) எண்: 40, நாள்: 01-03-2023 வெளியீடு (Tamil Nadu Civil Services - Transfer and appointment of 25 persons in the post of Deputy Collector)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


 


ஒருநாள் மாவட்ட ஆட்சியரானார் அரசுப்பள்ளி மாணவி ஐஸ்வர்யா (Aishwarya, a Government School student, became One day District Collector)...

 


ஒருநாள் மாவட்ட ஆட்சியரானார் அரசுப்பள்ளி மாணவி ஐஸ்வர்யா (Aishwarya, a Government School student, became One day District Collector)...


புதுச்சேரியில் ஒருநாள் மாவட்ட ஆட்சியரான அரசுப்பள்ளி பிளஸ்-1 மாணவி, தொடர்ந்து மக்கள் பணி செய்ய விருப்புவதாக தெரிவித்தார்.


ஒருநாள் மாவட்ட ஆட்சியர் 


பள்ளி மாணவர்களிடையே ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஆகும் ஆர்வத்தை அதிகரிக்கவும், மக்கள் பணி செய்வது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அவர்களுக்கு கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு என பதவிகளை ஒருநாள் கொடுத்து செயல்பட செய்யும் நிகழ்ச்சி புதுவையில் அவ்வப்போது நடத்தப்படுகிறது.


கடந்த சில மாதங்களுக்கு முன்பு என்.சி.சி. மாணவி ஒருவருக்கு போலீஸ் சூப்பிரண்டாக ஒருநாள் பதவி வழங்கப்பட்டது. அதேபோல் தற்போது அரசுப்பள்ளி மாணவி ஒருவருக்கு ஒருநாள் கலெக்டர் பணி வழங்கப்பட்டது.


மாணவி ஐஸ்வர்யா


புதுவை கதிர்காமம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் பிளஸ்-1 மாணவி ஐஸ்வர்யா இன்று ஒருநாள் கலெக்டராக பணியமர்த்தப்பட்டார். காலையில் அலுவலகம் வந்த அவரை வரவேற்ற மாவட்ட ஆட்சியர் மணிகண்டன், கலெக்டரின் இருக்கையில் அமரவைத்து, பணி குறித்து விளக்கம் அளித்தார்.


குறிப்பாக கலெக்டருக்கு வரும் கோப்புகள், புகார்களை கையாளுவது, பொதுமக்களை அணுகுவது குறித்தும் விரிவாக எடுத்துக்கூறினார். அதன்பின் அவர் கலெக்டர் மணிகண்டனுடன் சென்று நகரப்பகுதியில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை ஆய்வு செய்தார்.


சட்டசபைக்கு வந்தார்



அதன்பின் புதுவை சட்ட சபைக்கு அவர் வந்தார். அவர் சபாநாயகர் செல்வத்தை சந்தித்து பேசினார். அப்போது அவருக்கு சபாநாயகர் செல்வம் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து சட்டசபை கூட்டம் நடக்கும் மைய மண்டபத்துக்கு அவரை அழைத்து சென்ற சபாநாயகர் செல்வம் சட்டசபையின் நடவடிக்கைகள் குறித்து எடுத்துக்கூறினார். அதன்பின் அவர் சட்டசபையில் இருந்து புறப்பட்டு சென்றார்.


மக்கள் பணி


கலெக்டர் பணி குறித்து மாணவி ஐஸ்வர்யா கூறியதாவது:-


புதுவையில் ஒருநாள் கலெக்டராக பொறுப்பேற்று பணிபுரிந்தது மறக்க முடியாதது. சாதாரண பொதுமக்களின் குறைகளை கேட்டு அவைகளை நிவர்த்தி செய்வது குறித்து அறிந்துகொண்டேன். கலெக்டர் என்றால் கையெழுத்திடுவது மட்டுமே வேலையல்ல. கலெக்டருக்கு நிறைய வேலைகள் உள்ளன. மக்களுக்கு நிறைய பணிகள் செய்யும் பதவி அது. இதை நான் புரிந்துகொண்டேன். கலெக்டரிடம் கூறினால் தனது குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்று மக்கள் உறுதியாக நம்புகின்றனர். உயர் பதவியில் இருப்பவர்கள் எப்படி பொதுமக்களிடம் கனிவோடு நடந்துகொள்ள வேண்டும் என்பதை கலெக்டர் மணிகண்டனை பார்த்து தெரிந்துகொண்டேன். நானும் நன்றாக படித்து கலெக்டராக தொடர்ந்து மக்களுக்கு பணி செய்யவேண்டும் என்பதுதான் எனது விருப்பம்.


இவ்வாறு அவர் கூறினார்.


விழிப்புணர்வு ஏற்படுத்த...


கலெக்டர் மணிகண்டன் கூறும்போது, 'அரசு செயல்படுத்தும் மக்கள் நலப்பணிகள் குறித்து அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலெக்டருடன் ஒருநாள் என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதன்படி இப்போது மாணவி ஐஸ்வர்யாவுக்கு கலெக்டர் பணி வழங்கப்பட்டது. இது தொடர்ந்து நடைபெறும்' என்றார்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


 

உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கு இன்று (02.03.2023) முதல் வழக்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது (The case of promotion of High School Headmaster is being heard as first case in Madras High Court today - 02.03.2023)...


>>>  உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கு இன்று (02.03.2023) முதல் வழக்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது (The case of promotion of High School Headmaster is being heard as first case in Madras High Court today - 02.03.2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


 

பணிவரன்முறை செய்யப்படாத பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு பணிவரன்முறை செய்ய கருத்துருக்கள் அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 9829/ டபிள்யு2/ இ1/ 2023, நாள்: 23-02-2023 (Proceedings of the Joint Director of School Education for Seeking Proposals for Regularisation of Non-Regulariseded Promoted Post Graduate Teachers)...



>>> பணிவரன்முறை செய்யப்படாத பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு பணிவரன்முறை செய்ய கருத்துருக்கள் அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 9829/ டபிள்யு2/ இ1/ 2023, நாள்: 23-02-2023 (Proceedings of the Joint Director of School Education for Seeking Proposals for Regularisation of Non-Regulariseded Promoted Post Graduate Teachers)...


பள்ளி மேலாண்மை குழுக் (SMC) கூட்டத்தில் அனைத்து அரசு பள்ளி (தொடக்க /நடுநிலை /உயர்நிலைப் பள்ளி) தலைமை ஆசிரியர்களும் பின்பற்ற வேண்டியவை (All Government School (Primary/Middle/High School) Headmasters to follow in School Management Committee Meeting)...

 

 

  

 பள்ளி மேலாண்மை குழுக் (SMC) கூட்டத்தில் அனைத்து அரசு பள்ளி (தொடக்க /நடுநிலை /உயர்நிலைப் பள்ளி) தலைமை ஆசிரியர்களும் பின்பற்ற வேண்டியவை (All Government School (Primary/Middle/High School) Headmasters to follow in School Management Committee Meeting)...


அனைத்து அரசு பள்ளி( தொடக்க /நடுநிலை /உயர் நிலை பள்ளி )தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு :


 1.   3.3.2023 அன்று நடைபெறும்  மாதாந்திரபள்ளி மேலாண்மை குழு கூட்டத்திற்க்கு, அனைத்து  SMC உறுப்பினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்க வேண்டும்.


2. தங்கள் பள்ளி சார்ந்த இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலர்கள் அனைவரும் கூட்டத்தில் பங்கு பெரும் வகையில் தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்க வேண்டும்.


 3. மாநிலத் திட்ட இயக்கத்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ள கூட்டத்தினுடைய கருப்பொருட்கள் முழுமையாக பள்ளி மேலாண்மை குழுவில் பின்பற்றப்பட வேண்டும்.


4. அனைத்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களும் நம்ம ஊர் நம்ம பள்ளி என்ற திட்டத்தின் முழு விவரங்களையும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.


5. அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும்  பள்ளி மேம்பாட்டு திட்டத்தினை TNSED parent app இல் SMC கூட்டம் நடைபெறும் நாளில் பதிவு செய்தல் வேண்டும்.


6. CSR மூலம் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் தனியார் பங்களிப்பின் வாயிலாக  நிதி உதவி பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது.  எனவே மாதாந்திர மேம்பாட்டு திட்டத்தில்   உட்புற கட்டமைப்பு வசதிகளை CSR இல் பதிவு செய்யப்பட வேண்டும்.


7. பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் கலந்து கொள்ளக்கூடிய உறுப்பினர்கள் வருகை பதிவினை மாலை 5:30  மணிக்குள் அப்டேட் செய்ய வேண்டும்.


8. பள்ளி மேம்பாட்டு திட்டத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை அன்று மாலை 6:00 மணிக்குள் அப்டேட் செய்திட வேண்டும்.


9.   செயல்முறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள கூட்டக் கருப்பொருட்களை  முறையாக பின்பற்ற வேண்டும்.


10. பள்ளி மேலாண்மை குழுக்களை பலப்படுத்தி நம் பள்ளிகளை வலுப்படுத்துவோம்.



>>> 03-03-2023 அன்று பள்ளி மேலாண்மைக் குழு (SMC) கூட்டம் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நடத்த வழிகாட்டுதல் - ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குனரின் செயல்முறைகள்  - இணைப்பு: பள்ளி மேலாண்மை கூட்ட நிகழ்வுகள்...



>>> மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வி மையங்கள் & மருத்துவ முகாம் சார்ந்த மார்ச் மாதத்திற்கான பள்ளி மேலாண்மை குழு கூட்டம்...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

From 01.01.2025 applications all types of leave through Kalanjiyam App only – DSE Proceedings

  01.01.2025 முதல் களஞ்சியம் செயலி மூலமாக மட்டுமே ஓய்வூதிய கருத்துருக்களும், அனைத்து வகை விடுப்புகளும் விண்ணப்பிக்க வேண்டும் - பள்ளிக்கல்வி ...