கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

04-03-2023 அன்று நடைபெறும் 1 முதல் 3ஆம் வகுப்புகளைக் கையாளும் ஆசிரியர்களுக்கான குறுவளமைய பயிற்சி (CRC) கட்டகங்கள் - தமிழ், ஆங்கிலம் மற்றும் கணக்கு (Cluster Resource Centre Training Modules for Teachers handling Classes 1 to 3 - Tamil, English and Maths to be held on 04-03-2023)...


>>> 04-03-2023 அன்று நடைபெறும் 1 முதல் 3ஆம் வகுப்புகளைக் கையாளும் ஆசிரியர்களுக்கான குறுவளமைய பயிற்சி (CRC) கட்டகங்கள் - தமிழ், ஆங்கிலம் மற்றும் கணக்கு (Cluster Resource Centre Training Modules for Teachers handling Classes 1 to 3 - Tamil, English and Maths to be held on 04-03-2023)...



>>>  Ennum Ezhuthum CRC Training Schedule & Guidelines - Date : 4th March 2023...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


 


Ennum Ezhuthum CRC Training Schedule & Guidelines - Date : 4th March 2023...


>>> Ennum Ezhuthum CRC Training Schedule & Guidelines - Date : 4th March 2023...




Resource to be used: PPT Link: 1-3CRC_March2023_Sessions1-3_TamilEnglishMath.pptx


Attendance:

State and District Level Attendance: Click on this google form for attendance: 

1. State Level : https://forms.gle/rdsZzz7zpy1zw9Ej7 

2. District Level : https://forms.gle/ymvpjgXRphs8VjNN7


CRC Meeting Attendance: 

● Cluster Facilitator must watch this demo video: https://drive.google.com/file/d/19Ty87UfuN3GO65oHZRfuVp4Hq5Ki2hbV/view?usp= sharing

● Facilitator must guide every Teacher in the room to mark their attendance in the TNSED Application as shown in the demo video.


Session 1: 

Learning Outcomes in Tamil Duration: 

60 minutes 

PPT: 1-3CRC_March2023_Sessions1-3_TamilEnglishMath.pptx Slides 1-28


Session 2 - 

Learning Outcomes in English Duration: 60 minutes 

PPT: 1-3CRC_March2023_Sessions1-3_TamilEnglishMath.pptx Slides 29-53 

Time : 11:15 am - 12:15 pm

● Facilitator will use the ppt given, follow it step-by-step and facilitate the session for the participants.


Session 3 - 

Learning Outcomes in Mathematics 

Duration: 60 minutes 

PPT: 1-3CRC_March2023_Sessions1-3_TamilEnglishMath.pptx Slides 54-72


Session 4 - 

Subject-wise Discussion on Learning Outcomes Duration: 90 minutes Time: 02:00 pm to 03:30 pm

● Participants will be divided into different groups for subjects. 

● Participants will receive subject-wise learning outcomes from the facilitators. 

● They will then identify the activities for the outcomes. 

● Once the activities are identified, participants will discuss in their groups and create 2-3 activities for the same learning outcome.


Session 5 - 

Team Presentation of Learning Outcomes Duration: 45 minutes Time: 03:45 pm to 04:30 pm

● The teams will present the subject-wise learning outcomes discussed in Session 4. 

● Each team can take 5-7 minutes to present their learning outcomes. 

● Each presentation will be followed by feedback from the facilitator. Main points for feedback: Is it an output or outcome?

Is it aligned with the activity?


Feedback and Quiz Duration: 30 minutes Time: 04:30 pm to 05:00 pm

State-level training Feedback and Quiz: https://forms.gle/gTMcNpkHnhVqeh8P6 District-level training Feedback and Quiz: https://forms.gle/vJGyK8q9hvG4266Y6

Teacher Survey for Ennum Ezhuthum 2023-2024(to be used only for crc): https://forms.gle/Eu2j9D2uk9RRE8X86






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


 


ஊக்க ஊதியம் - அரசு / ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி / நடுநிலைப்பள்ளி, நகராட்சி மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் 10.03.2020-க்கு முன் துறையின் முன் அனுமதி பெற்று / துறையின் முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்ற ஆசிரியர்கள் சார்பான விவரங்கள் - படிவங்கள் 1, 2, 3 & 4 (Incentive - Teachers working in Government / Panchayat Union Primary School / Middle School, Municipal and Government Aided Schools with prior approval of the Department / Details in favor of teachers who pursued higher education before 10.03.2020 - Forms 1, 2, 3 & 4)...


>>> ஊக்க ஊதியம் - அரசு / ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி / நடுநிலைப்பள்ளி, நகராட்சி மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் 10.03.2020-க்கு முன் துறையின் முன் அனுமதி பெற்று / துறையின் முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்ற ஆசிரியர்கள் சார்பான விவரங்கள் - படிவங்கள் 1, 2, 3 & 4 (Incentive - Teachers working in Government / Panchayat Union Primary School / Middle School, Municipal and Government Aided Schools with prior approval of the Department / Details in favor of teachers who pursued higher education before 10.03.2020 - Forms 1, 2, 3 & 4)...



>>> அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் - 10.03.2020-க்கு முன் துறையின் முன் அனுமதி பெற்று / துறையின் முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்ற ஆசிரியர்கள் விவரங்கள் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள்: 02.03.2023...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


 


இன்றைய (03-03-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 


இன்றைய (03-03-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

மார்ச் 03, 2023



முக்கியமான முடிவினை எடுக்கும் பொழுது ஆலோசனைகளை பெறவும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்களால் மேன்மை ஏற்படும். அரசு தொடர்பான பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். திட்டமிட்ட பணிகள் நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும். சக ஊழியர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். லாபம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்




அஸ்வினி : ஆலோசனைகள் கிடைக்கும். 


பரணி : விவேகத்துடன் செயல்படவும்.


கிருத்திகை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

---------------------------------------



ரிஷபம்

மார்ச் 03, 2023



மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த பிரச்சனைகள் விலகும். வெளிப்படையான பேச்சுக்களால் புதிய நபர்களின் அறிமுகமும், ஒத்துழைப்பும் கிடைக்கும். சகோதரர்களால் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். கடன் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். நிதி தொடர்பான நெருக்கடிகள் குறையும். ஆக்கம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




கிருத்திகை : திறமைகள் வெளிப்படும்.


ரோகிணி : அறிமுகம் கிடைக்கும்.


மிருகசீரிஷம் : நெருக்கடிகள் குறையும். 

---------------------------------------



மிதுனம்

மார்ச் 03, 2023



வியாபாரத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வாழ்க்கை துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். பயனற்ற அலைச்சல்களை குறைத்து கொள்ளவும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். சமூக பணிகளில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தனவரவு சுமாராக இருக்கும். மற்றவர்களிடம் குடும்ப விவகாரங்கள் பகிர்வதை தவிர்க்கவும். நலம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்




மிருகசீரிஷம் : அனுசரித்து செல்லவும்.


திருவாதிரை : எண்ணங்கள் அதிகரிக்கும்.


புனர்பூசம் : அறிமுகம் கிடைக்கும்.

---------------------------------------



கடகம்

மார்ச் 03, 2023



பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். செய்கின்ற செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். தாய்மாமன் வழியில் ஆதாயம் ஏற்படும். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. வாழ்க்கை துணையுடன் விட்டுக்கொடுத்து செல்லவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். சுகம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்




புனர்பூசம் : பொறுப்புகள் அதிகரிக்கும். 


பூசம் : திட்டமிட்டு செயல்படவும்.


ஆயில்யம் : நெருக்கடியான நாள்.

---------------------------------------



சிம்மம்

மார்ச் 03, 2023



எதிலும் பதற்றமின்றி செயல்படவும். மற்றவர்களை பற்றி கருத்துக்கள் கூறுவதை தவிர்க்கவும். வாழ்க்கை துணையுடன் அன்பாக நடந்து கொள்ளவும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். விடாப்பிடியான சிந்தனைகளை குறைத்து கொள்ளவும். புதிய முதலீடுகளில் ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்கவும். எதிர்காலம் தொடர்பான விஷயங்களில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். அன்பு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




மகம் : பதற்றமின்றி செயல்படவும். 


பூரம் : பயணங்கள் கைகூடும். 


உத்திரம் : குழப்பம் நீங்கும்.

---------------------------------------



கன்னி

மார்ச் 03, 2023



திறமைக்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உறவினர்களிடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். நண்பர்களிடத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். சேமிப்பது தொடர்பான முயற்சிகள் கைகூடும். உடல் ஆரோக்கியம் மேம்படும். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




உத்திரம் : அங்கீகாரங்கள் கிடைக்கும்.


அஸ்தம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.


சித்திரை : ஆரோக்கியம் மேம்படும்.

---------------------------------------



துலாம்

மார்ச் 03, 2023



உத்தியோக பணிகளில் ஏற்ற, இறக்கமான சூழல் ஏற்படும். நெருக்கமானவர்களிடத்தில் ஒற்றுமை மேம்படும். பாகப்பிரிவினை தொடர்பான செயல்பாடுகளில் நிதானம் வேண்டும். நிதி தொடர்பான நெருக்கடிகள் குறையும். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். குழந்தைகளின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். புதிய முயற்சிகளில் வித்தியாசமான அனுபவம் கிடைக்கும். முயற்சிகள் ஈடேறும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




சித்திரை : ஏற்ற, இறக்கமான நாள்.


சுவாதி : நெருக்கடிகள் குறையும். 


விசாகம் : அனுபவம் கிடைக்கும்.

---------------------------------------



விருச்சிகம்

மார்ச் 03, 2023



மனதில் சிறு சிறு குழப்பம் ஏற்படும். எதிர்பார்த்த தனவரவு கிடைப்பதில் தாமதம் உண்டாகும். கடன் வாங்குவதை தவிர்க்கவும். உத்தியோக பணிகளில் திட்டமிட்டு செயல்படவும். வெளிப்படையான பேச்சுக்களால் நெருக்கடிகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். புரிதல் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்




விசாகம் : குழப்பமான நாள்.


அனுஷம் : திட்டமிட்டு செயல்படவும். 


கேட்டை : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------



தனுசு

மார்ச் 03, 2023



உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். வாழ்க்கை துணையுடன் மனம் விட்டு பேசுவது நல்லது. மனை சார்ந்த விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். வரவுக்கு ஏற்ப செலவுகள் உண்டாகும். செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். பொறுமை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்




மூலம் : பொறுப்புகள் மேம்படும். 


பூராடம் : சிந்தித்து செயல்படவும்.


உத்திராடம் : வாதங்களை தவிர்க்கவும்.

---------------------------------------



மகரம்

மார்ச் 03, 2023



திறமைக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். வாழ்க்கை துணைவருடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். தனம் சார்ந்த விஷயங்களில் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு எடுப்பீர்கள். வர்த்தக பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். தடங்கல் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம் 




உத்திராடம் : பாராட்டுகள் கிடைக்கும். 


திருவோணம் : எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். 


அவிட்டம் : முன்னேற்றமான நாள்.

---------------------------------------



கும்பம்

மார்ச் 03, 2023



தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். புதிய முயற்சிகளில் விவேகத்துடன் செயல்படவும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். அமைதியான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் ஏற்படும். வியாபாரம் நிமிர்த்தமான கடன் உதவிகள் கிடைக்கும். ஆதரவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




அவிட்டம் : ஆதாயம் உண்டாகும். 


சதயம் : இன்னல்கள் குறையும். 


பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.

---------------------------------------



மீனம்

மார்ச் 03, 2023



பலதரப்பட்ட சிந்தனைகளால் சோர்வு ஏற்படும். பணிபுரியும் இடத்தில் மாற்றமான சூழ்நிலைகள் அமையும். உறவினர்களுடன் வெளியூர் சென்று வருவீர்கள். குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். கால்நடைகளால் ஆதாயம் உண்டாகும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் திடீர் செலவுகள் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்




பூரட்டாதி : மாற்றமான நாள்.


உத்திரட்டாதி : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். 


ரேவதி : புரிதல் உண்டாகும்.

---------------------------------------


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.03.2023 - School Morning Prayer Activities...

 

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.03.2023 - School Morning Prayer Activities...

 

திருக்குறள் :



பால் :அறத்துப்பால் 


இயல்:இல்லறவியல்


அதிகாரம்: ஒழுக்கம் உடைமை


குறள் எண்: 138


நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்

என்றும் இடும்பை தரும்.


பொருள்:

நல்லொழுக்கம், அறமாகிய நன்மைக்கு வித்தாக அமைந்து இம்மை மறுமையிலும் இன்பம் தரும்; தீயொழுக்கமோ துன்பமே தரும். 


பழமொழி :

Little strokes fell great oaks.


சிற்றுளியால் மலையும் தகரும்.


இரண்டொழுக்க பண்புகள் :


1. மழை காலத்திற்கு என்று உணவை சேமிக்கும் எறும்பை போல மாணவ பருவத்திலேயே சேமிக்க பழகுவேன். 


2. கனி தரும் மரங்கள் போல மற்றவர்க்கு எப்போதும் பயன் தர முயற்சிப்பேன்.


பொன்மொழி :


பெரும் அறிவாளிகள் புத்தகங்களோடு வாழ்க்கையையும் சேர்ந்தே படிக்கிறார்கள்.


பொது அறிவு :1


. உடலில் ஓடு உள்ள ஒரே பாலூட்டி உயிரினம் எது ?


 ஆமை .


 2.கங்காரு அதிகமாக காணப்படும் நாடு எது?


 ஆஸ்திரேலியா.


English words & meanings :


domain - an area owned or controlled by a ruler. noun. Some animals have their own domain in the forests. அதிகார அல்லது ஆதிக்க வரம்பு. பெயர்ச் சொல் 

ஆரோக்ய வாழ்வு :


ஒமேகா 3 நிறைந்த கொழுப்பு மீன்கள், வெண்ணெய், நட்ஸ் வகைகள், பெர்ரி பழங்கள், அதிக அளவில் பச்சை காய்கறிகள், கீரைகள், அவித்த முட்டை போன்றவற்றை சாப்பிட வேண்டும். அதுமட்டுமின்றி சரியான உடற்பயிற்சியைப் பின்பற்றுவதோடு, மனதையும் மகிழ்ச்சியான சூழ்நிலையில் வைத்திருந்தால் உங்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.


  மார்ச் 03


உலகக் காட்டுயிர் நாள்




உலகக் காட்டுயிர் நாள் (World Wildlife Day) அருகிவரும் காட்டு விலங்குகள் மற்றும், தாவரயினங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கமாக, ஒவ்வொரு ஆண்டும், மார்ச் 3 இல் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. 2013, டிசம்பர் 20 அன்று, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் (UNGA) 68 ஆவது அமர்வில் “காட்டு விலங்குகள், மற்றும் தாவரங்கள் அருகிவரும் உயிரினங்களின் சர்வதேச வர்த்தக சாசனம்” (CITES) மூலம் இந்நாளை உலகக் காட்டுயிர் நாளாக தாய்லாந்தினால் முன்மொழியப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.[1]

இம்முயற்சியில் சர்வதேச கவனத்தை ஈர்க்கும் பொருட்டு திரைப்பட விழா, விழிப்புணர்வு கருதரங்கங்களை ஐ. நா நடத்திவருகிறது.


நீதிக்கதை


வித்தைக்காரனை வென்ற கதை


தெனாலி ராமன் கிருஷ்ணதேவராயரின் புகழைக் கேள்விப்பட்டு அவரைக் காண்பதற்காக விஜயநகரத்தை நோக்கிப் புறப்பட்டார். எப்படியாவது அரசரைப் பார்த்து விடுவது என்று முயற்சித்துக் கொண்டே அவ்வூரில் தங்கினார். தினமும் அரண்மனைக்குப் போவதும் திரும்பி வருவதுமாக இருந்தார். ஒரு நாள் வேடிக்கை செய்து காட்டும் செப்படி வித்தைக்காரனை சந்தித்தார். 


அவனும் அரசரிடம் தன் வித்தைகளைக் காட்டிப் பரிசு பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் இருப்பதைப் புரிந்து கொண்டார். அவனிடம் ஒரு வித்தைக்காரனாக சேர்ந்து கொண்டார். அரசர் முன்னிலையில் வித்தைக்காரன் செப்படி வித்தைகளைச் செய்து காட்டி அனைவரையும் மகிழ்வித்தான். அரசரும் மிகவும் மகிழ்ந்து ஆயிரம் பொன் பரிசளித்தார். 


ஆனால் இராமன் அரசே! இவனை விட வித்தையில் நான் வல்லவனானக இருக்கிறேன். நான் செய்யும் வித்தையை இவனால் செய்ய முடியுமா? என்று கேட்டுப் பாருங்கள். பிறகு பரிசு யாருக்கு என்று முடிவு செய்யுங்கள். அரசருக்கு மிக்க மகிழ்ச்சி. போட்டி என்று வந்தாலே மிகவும் சுவையுடையதாக இருக்குமல்லவா? சரி உன் வித்தைகளை காட்டு என்று அனுமதி வழங்கினார். 


செப்படி வித்தைக்காரனுக்கு ஒரே கோபம். உனக்கு என்னென்ன வித்தைகள் தெரியும். நீ அதைச் செய்து காட்டு, அந்த வித்தைகளை நான் செய்து காட்டுகிறேன், என்று சவால் விட்டான். தெனாலிராமனோ பதட்டம் இல்லாமல் முன்னால் வந்து நின்றார். ஐயா! நான் ஒரே ஒரு வித்தையை மட்டும் செய்கிறேன். அதுவும் கண்களை மூடிக்கொண்டு, அதையே நீங்கள் கண்களைத் திறந்து கொண்டு செய்ய வேண்டும். உங்களால் முடியாவிட்டால், அரசர் தரும் ஆயிரம் பொற்காசுகளில் பாதியை எனக்குத் தந்து விட வேண்டும், என்றார். 


வித்தைக்காரனோ வெகு அலட்சியமாக, நீ செய்து காட்டு என்றான். உடனே இராமன் அரசரை வணங்கி கீழே அமர்ந்தான். தன் கை நிறைய மணலை எடுத்துக் கொண்டு மூடிய தன் கண்களில் நிறைய கொட்டிக் கொண்டார். அனைவரும் ஆரவாரம் செய்து சிரித்தனர். மன்னரும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார். இராமன் வித்தைக்காரனைப் பார்த்து இந்த வித்தையை நீர் உமது கண்களைத் திறந்து கொண்டே செய்து காட்ட வேண்டும் என்றார். வித்தைக்காரனால் எப்படி முடியும்? என்னை மன்னித்து விடுங்கள் என்று தலை குனிந்து நின்றான். மன்னர் மகிழ்ந்து இராமனை அழைத்து அவரைப் பற்றி அறிந்து கொண்டார். பிறகு தெனாலி ராமகிருஷ்ணா! உன் புத்தி சாதுர்யத்தை மெச்சினேன். நீ சொன்னபடி ஐநூறு பொற்காசுகளைப் பெற்றுக் கொள் என்றார். 


அரசே! இந்த வித்தைக்காரன் வித்தை காட்டுவதில் தனக்கு மிஞ்சியவர் யாருமில்லை என்று பேசிக் கொண்டிருந்தான். அவன் கர்வமாகப் பேசியதை நான் கேட்டுக் கொண்டிருந்தேன். வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை உணர்த்தவும் அவன் கர்வத்தை அடக்கவும் நான் இவ்வாறு செய்தேன். நான் வித்தைக்காரன் என்று பொய் சொன்னதற்கு என்னை மன்னியுங்கள். ஆயிரம் பொன்னையும் அவருக்கே அளியுங்கள். என்று கேட்டுக் கொண்டார். 


அரசர் மனம் மகிழ்ந்து இராமன் சொன்னபடியே வித்தைக்காரனுக்கு ஆயிரம் பொற்காசுகளையும் பரிசாக அளித்தார்.

இன்றைய செய்திகள்


03.03.2023


* தமிழகத்தில் பருவம் தவறிய கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உயர்த்தப்பட்ட நிவாரணமாக ரூ.112 வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


* கோவை யானைகள் வழித்தடத்தில் உள்ள 118 செங்கற்சூளைகளின் மின் இணைப்பை துண்டிக்க ஐகோர்ட் உத்தரவு.


* தலைமைத் தேர்தல் ஆணையர் நியமனத்துக்கு எதிர்க்கட்சி தலைவரை உள்ளடக்கிய பரிந்துரைக் குழு தேவை: உச்ச நீதிமன்றம்.


* டெல்லி – ஜெய்ப்பூர் இடையே மின்சார விரைவு சாலை: இந்தியாவிலேயே முதல் முறையாக அமைகிறது.


* கிரீஸ் நாட்டில் கோர விபத்து - ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் 36 பேர் உயிரிழப்பு.


* துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி: முன்னனி வீரர் ஜோகோவிச் காலிறுதிக்கு முன்னேற்றம்.


* சர்வதேச போட்டியில் 500 விக்கெட் - ஜடேஜா புதிய சாதனை.


Today's Headlines


* Chief Minister M.K.Stalin has announced that increased relief of Rs.112 will be given to farmers affected by unseasonal heavy rains in Tamil Nadu.


 * Court ordered to disconnect electric connection of 118 brick kilns on  elephant route in coimbatore 


* The appointment of the Chief Election Commissioner requires a nomination committee that includes the Leader of the Opposition: Supreme Court.


 * Delhi-Jaipur Electrified Expressway: First in India


* A terrible accident in Greece - 36 people died when trains collided head-on.


* Dubai Tennis Championships: Top seed Djokovic advances to quarter-finals


* 500 wickets in international matches - Jadeja made a new record.

 

பள்ளிக்கல்வி - அரசுத் தேர்வுகள் இயக்ககம் - பொதுத் தேர்வுகள் - பள்ளிக் கல்வித் துறை இயக்ககங்களைச் சார்ந்த உயர் அதிகாரிகள் / இயக்குநர்கள் / இணை இயக்குநர்கள் மற்றும் துணை இயக்குநர்களை தேர்வுப் பணிகள் கண்காணிக்கும் அதிகாரிகளாக நியமனம் செய்து, மாவட்டங்கள் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு - அரசாணை (வாலாயம்) எண்.41, நாள் 02.03.2023 (G.O. (Walayam) No.41, Dated: 02.03.2023 - School Education - Directorate of Government Examinations - Public Examinations - High Officers/ Directors/ Joint Directors and Deputy Directors of the Directorates of School Education as Officers to Monitor Examinations and Allotment of Districts Issue of Ordinance - G.O. (Walayam) No.41, Dated: 02.03.2023)...

 

>>> பள்ளிக்கல்வி - அரசுத் தேர்வுகள் இயக்ககம் - பொதுத் தேர்வுகள் - பள்ளிக் கல்வித் துறை இயக்ககங்களைச் சார்ந்த உயர் அதிகாரிகள் / இயக்குநர்கள் / இணை இயக்குநர்கள் மற்றும் துணை இயக்குநர்களை தேர்வுப் பணிகள் கண்காணிக்கும் அதிகாரிகளாக நியமனம் செய்து, மாவட்டங்கள் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு - அரசாணை (வாலாயம்) எண்.41, நாள் 02.03.2023 (G.O. (Walayam) No.41, Dated: 02.03.2023 - School Education - Directorate of Government Examinations - Public Examinations - High Officers/ Directors/ Joint Directors and Deputy Directors of the Directorates of School Education as Officers to Monitor Examinations and Allotment of Districts Issue of Ordinance - G.O. (Walayam) No.41, Dated: 02.03.2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


 

ஊக்க ஊதியம் - அரசு / ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி / நடுநிலைப்பள்ளி, நகராட்சி மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் 10.03.2020-க்கு முன் துறையின் முன் அனுமதி பெற்று / துறையின் முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்ற ஆசிரியர்கள் சார்பான விவரங்கள் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க. எண்: 5150/ இ1/ 2023 , நாள்: 02.03.2023 (Incentive - Details of Teachers working in Government / Panchayat Union Primary School / Middle School, Municipal and Government Aided Schools with prior pre-permission of the Department / Teachers pursuing higher education without prior pre-permission of the Department before 10.03.2020 - Proceedings of Director of Elementary Education R.C. No: 5150/ E1/ 2023 , Dated: 02.03.2023)...


>>> ஊக்க ஊதியம் - அரசு / ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி / நடுநிலைப்பள்ளி, நகராட்சி மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் 10.03.2020-க்கு முன் துறையின் முன் அனுமதி பெற்று / துறையின் முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்ற ஆசிரியர்கள் சார்பான விவரங்கள் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க. எண்: 5150/ இ1/ 2023 , நாள்: 02.03.2023 (Incentive - Details of Teachers working in Government / Panchayat Union Primary School / Middle School, Municipal and Government Aided Schools with prior pre-permission of the Department / Teachers pursuing higher education without prior pre-permission of the Department before 10.03.2020 - Proceedings of Director of Elementary Education R.C. No: 5150/ E1/ 2023 , Dated: 02.03.2023)...



>>>  ஊக்க ஊதியம் - அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் 10.03.2020-க்கு முன் துறையின் முன் அனுமதி பெற்று / துறையின் முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்ற ஆசிரியர்கள் சார்பான விவரங்கள் - படிவங்கள் 1, 2, 3 & 4...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Student Threatens to Kill Headmaster - Full Details

  தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த மாணவன் - முழு விவரம் Student Threatens to Kill Headmasters - Full Details கேரளாவில் பாலக்காடு அனக...