கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNSED Schools App-ல் விடுப்பு விவரங்களை பதிவு செய்தல் படிவம் - பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள விடுப்புப் பதிவு வழிகாட்டுதலின்படி தயாரிக்கப்பட்டது (Form for entry of Leave Details in TNSED Schools App - Prepared as per Leave Entry Guidelines issued by the Department of School Education)...

 


>>> TNSED Schools App-ல் விடுப்பு விவரங்களை பதிவு செய்தல் படிவம் - பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள விடுப்புப் பதிவு வழிகாட்டுதலின்படி தயாரிக்கப்பட்டது (Form for entry of Leave Details in TNSED Schools App - Prepared as per Leave Entry Guidelines issued by the Department of School Education)...



>>> TNSED Schools செயலியில் ஆசிரியர்களின் விடுப்பு விவரங்களைப் பதிவு செய்யும் முறை -  தமிழில்...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...





அன்பார்ந்த ஆசிரிய சகோதர சகோதரிகளே,


TNSED Schools Appல் விடுப்பு விவரங்கள் பதிவு செய்வது தொடர்பான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. செயலியில் பதிவு செய்து சரிபார்த்தபின்பே இத்தகவல் பகிரப்பட்டுள்ளது. ஏதேனும் மாற்றம் இருப்பின் தெரிவிக்கவும்.


*Yearly Leaves*


*_1. Casual Leave_* - இந்த ஆண்டில் மீதமுள்ள நாட்கள்


*_2. Restricted Holiday_* - இந்த ஆண்டில் மீதமுள்ள நாட்கள்


*_3. Compensatory Leave -_* ஏதேனும் இருந்தால் அதன் எண்ணிக்கையை பதிவு செய்யலாம்

https://kalvianjal.blogspot.com/2023/03/tnsed-schools-app-form-for-entry-of.html


*Service Leaves*


_*1. Earned Leave*_ - தங்கள் பணிப்பதிவேட்டில் இருப்பில் உள்ள நாட்களின் எண்ணிக்கை (31-05-2022ன் படி) 


_*2. Unearned Leave on Medical Certificate - (ML)* - தங்கள் பணிக்காலத்திற்கு ஏற்ப மீதம் இருப்பில் உள்ள நாட்கள்


5 ஆண்டுகளுக்குள் 90 நாள்கள்


5+ முதல் 10 வரை 180 நாள்கள்


10+ முதல் 15 வரை 270 நாள்கள்


15+ முதல் 20 வரை 360 நாள்கள்


20 ஆண்டுகளுக்கு மேல் 540 நாள்கள்.


துய்த்தது போக மீதியுள்ள நாள்களைப் பதிவேற்ற வேண்டும்.

https://kalvianjal.blogspot.com/2023/03/tnsed-schools-app-form-for-entry-of.html

*_3. EOL on Loss of pay without medical certificate:_*


அதிகபட்சம் 5 ஆண்டுகளுக்குள் 180 நாள்கள்; அதற்குமேல் எனில் 360 நாள்கள். துய்த்தது போக மீதியுள்ள நாள்களைப் பதிவேற்ற வேண்டும்.


_*4. EOL on Loss of pay with medical certificate*_

அதிகபட்ச வரையறை ஏதும் இல்லை. துய்த்த நாள்களை மட்டும் பதிவேற்ற வேண்டும்.


_*5. Unearned Leave on Private Affairs (அரைச்சம்பள விடுப்பு) :*_


அதிகபட்சம் 10 ஆண்டுகளுக்குள் 90 நாள்கள்; அதற்குமேல் எனில் 180 நாள்கள். துய்த்தது போக மீதியுள்ள நாள்களைப் பதிவேற்ற வேண்டும். பெரும்பாலும் B.Ed., கற்பித்தல் பயிற்சிக்கு இவ்விடுப்பைப் பயன்படுத்தியிருப்பர்.


*_6. Special Casual Leave :_*


10 நாள்கள். துய்த்தது போக மீதியுள்ள நாள்களைப் பதிவேற்ற வேண்டும்.


_*7. Special Disability Leave :*_

https://kalvianjal.blogspot.com/2023/03/tnsed-schools-app-form-for-entry-of.html

விபத்தின் நிமித்தம் உடலுறுப்பு செயலிழப்பு ஏற்படும்போது பயன்படுத்தப்படும் விடுப்பு. அதிகபட்சம் 730  நாள்கள். (Appல் 720 நாட்கள் மட்டுமே பதிவாகிறது) துய்த்தது போக மீதியுள்ள நாள்களைப் பதிவேற்ற வேண்டும்.




*_Maternity Leave :_*


பெண்ணாசிரியர்களுக்கு மருத்துவ விடுப்பு 2 குழந்தைகளுக்கு மட்டுமே. ஒரு குழந்தைக்கு அரசாணை 84 நாள்.23.08.21-ன்படி இன்றைய தேதியில் 365 நாள்கள் வீதம் 2 குழந்தைகளுக்கு மொத்தம் 730 நாள்கள். புதிய அரசாணை வருவதற்கு முன்னரே 2 குந்தைகளுக்கும் மகப்பேறு விடுப்பு துய்த்திருப்பின் (அது 730 நாள்களுக்குக் குறைவாகவே இருப்பினும்) தற்போதைய நிலுவை '0' ஆகும். முன்னர் ஒரு குழந்தைக்கு மட்டும் விடுப்பு துய்த்திருப்பின் தற்போதைய நிலுவை 365 நாள்கள்.


*_Adoption Leave :_*

பெண்ணாசிரியர்களுக்கு அதிகபட்சம் 270 நாள்கள். துய்த்தது போக மீதியுள்ள நாள்களைப் பதிவேற்ற வேண்டும்.

https://kalvianjal.blogspot.com/2023/03/tnsed-schools-app-form-for-entry-of.html

*_Abortion Leave :_*

பெண்ணாசிரியர்களுக்கு அதிகபட்சம் 42 நாள்கள். துய்த்தது போக மீதியுள்ள நாள்களைப் பதிவேற்ற வேண்டும்.


*_Leave on Still Born Child birth :_*

கருவுற்ற 28 வாரங்களுக்குப்பின் / பிரசவத்தின் போது குழந்தை இறக்க நேரிட்டால் இவ்விடுப்பு அனுமதிக்கப்படுகிறது. (அதிகபட்சம் 90 நாட்கள்)



இன்றைய (07-03-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 

 

 

 இன்றைய (07-03-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

மார்ச் 07, 2023



நண்பர்களின் ஒத்துழைப்பு மேம்படும். புதிய துறை சார்ந்த தேடல் உண்டாகும். செய்கின்ற செயல்பாடுகளில் தன்னம்பிக்கையும், அனுபவமும் வெளிப்படும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபார பணிகளில் கூடுதல் லாபம் கிடைக்கும். எதிர்ப்புகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம் 




அஸ்வினி : தேடல் உண்டாகும்.


பரணி : ஒற்றுமை அதிகரிக்கும். 


கிருத்திகை : லாபம் கிடைக்கும். 

---------------------------------------



ரிஷபம்

மார்ச் 07, 2023



ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் குறையும். கடனை அடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. சேமிப்பை மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் உண்டாகும். வியாபாரம் நிமிர்த்தமான ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை உருவாக்கும். தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் மேம்படும். சஞ்சலமான சிந்தனைகளின் மூலம் குழப்பம் உண்டாகும். ஜெயம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் ஊதா




கிருத்திகை : இன்னல்கள் குறையும்.


ரோகிணி : நம்பிக்கை உண்டாகும்.


மிருகசீரிஷம் : குழப்பமான நாள்.

---------------------------------------



மிதுனம்

மார்ச் 07, 2023



சிறு தூர பயணங்களின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். பாகப்பிரிவினை தொடர்பான செயல்பாடுகளில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். மனதில் புதிய முயற்சிகள் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த தேடல் அதிகரிக்கும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். ஆதரவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




மிருகசீரிஷம் : மாற்றங்கள் ஏற்படும். 


திருவாதிரை : முயற்சிகள் கைகூடும். 


புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------



கடகம்

மார்ச் 07, 2023



பெரியோர்களின் ஆலோசனைகள் மேன்மையை ஏற்படுத்தும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். மனதில் புரட்சிகரமான சிந்தனைகள் மேம்படும். புதிய செயல்பாடுகளில் கவனத்துடன் செயல்படவும். வெளியூர் பயணங்களின் மீது ஆர்வம் உண்டாகும். தெளிவு பிறக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் 




புனர்பூசம் : மேன்மையான நாள்.


பூசம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.


ஆயில்யம் : ஆர்வம் உண்டாகும். 

---------------------------------------



சிம்மம்

மார்ச் 07, 2023



அக்கம்-பக்கம் இருப்பவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உங்கள் மீது வதந்திகள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சில சந்திப்புகள் மனதில் புதுவிதமான மாற்றத்தை ஏற்படுத்தும். வியாபார பணிகளில் வேலையாட்களை தட்டிக்கொடுத்து செயல்படுவது நல்லது. விளம்பர துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மறைமுக போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். நட்பு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை 




மகம் : புரிதல் உண்டாகும்.


பூரம் : மாற்றமான நாள்.


உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------



கன்னி

மார்ச் 07, 2023



வர்த்தக பணிகளில் ஏற்ற, இறக்கமான சூழல் அமையும். எதிர்பாராத பொருட்சேர்க்கை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். புதிய நபர்களிடம் குடும்ப விவகாரங்கள் பகிர்வதை தவிர்க்கவும். பயனற்ற பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். நிர்வாகம் சார்ந்த பயணங்கள் கைகூடும். தடைகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு 




உத்திரம் : ஏற்ற, இறக்கமான நாள்.


அஸ்தம் : கவனம் வேண்டும்.


சித்திரை : பயணங்கள் கைகூடும். 

---------------------------------------



துலாம்

மார்ச் 07, 2023



எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். நெருக்கமானவர்களின் சந்திப்பால் சில மாற்றங்கள் ஏற்படும். வழக்கு தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதில் புதுவிதமான புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். எதிராக இருந்தவர்களின் தன்மைகளை புரிந்து கொள்வீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பின் மூலம் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். களிப்பு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்




சித்திரை : மாற்றங்கள் ஏற்படும்.


சுவாதி : ஆரோக்கியம் மேம்படும். 


விசாகம் : இழுபறிகள் விலகும்.

---------------------------------------



விருச்சிகம்

மார்ச் 07, 2023



செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் ஏற்படும். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். கலை துறைகளில் உள்ள புதிய விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வெளிப்படையான குணத்தினால் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களால் நெருக்கடிகள் உண்டாகும். சமூக பணிகளில் இருப்பவர்கள் அங்கீகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். தாமதம் விலகும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




விசாகம் : மாற்றங்கள் ஏற்படும். 


அனுஷம் : நெருக்கம் அதிகரிக்கும்.


கேட்டை : அங்கீகாரம் கிடைக்கும். 

---------------------------------------



தனுசு

மார்ச் 07, 2023



பயணங்களால் விரயங்கள் உண்டாகும். மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு பெரியோர்களின் ஆலோசனைகள் தெளிவினை ஏற்படுத்தும். மருத்துவ துறைகளில் இருப்பவர்களுக்கு அனுபவம் மேம்படும். புதுவிதமான பொருட்சேர்க்கை உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். வரவுகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்




மூலம் : விரயங்கள் உண்டாகும். 


பூராடம் : தெளிவு ஏற்படும்.


உத்திராடம் : அனுபவம் பிறக்கும். 

---------------------------------------



மகரம்

மார்ச் 07, 2023



வியாபார பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு வெளிப்படும். அரசு சார்ந்த பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். எதிர்காலத்தை பற்றி குழப்பம் தோன்றி மறையும். பிடிவாத குணத்தினை குறைத்து கொள்ளவும். புதுமையான கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். உடன்பிறந்தவர்கள் வழியில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். சிக்கல்கள் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




உத்திராடம் : அலைச்சல்கள் ஏற்படும்.


திருவோணம் : பொறுமை வேண்டும். 


அவிட்டம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும். 

---------------------------------------



கும்பம்

மார்ச் 07, 2023



புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். நண்பர்களின் உதவியால் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். வித்தியாசமான அணுகுமுறைகளின் மூலம் எண்ணியதை நிறைவேற்றி கொள்வீர்கள். மனதில் ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். சாதனை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




அவிட்டம் : அனுகூலம் ஏற்படும். 


சதயம் : எண்ணங்கள் ஈடேறும்.


பூரட்டாதி : ஒற்றுமை அதிகரிக்கும். 

---------------------------------------



மீனம்

மார்ச் 07, 2023



உத்தியோகம் நிமிர்த்தமான வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். மனதளவில் புதிய நம்பிக்கை உண்டாகும். சிந்தனையின் போக்கில் தெளிவு ஏற்படும். எண்ணிய பணிகளில் இருந்துவந்த தடைகளை வெற்றி கொள்வீர்கள். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மேன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




பூரட்டாதி : பயணங்கள் சாதகமாகும்.


உத்திரட்டாதி : நம்பிக்கை உண்டாகும்.


ரேவதி : வெற்றிகரமான நாள்.

---------------------------------------


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.03.2023 - School Morning Prayer Activities...

 

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.03.2023 - School Morning Prayer Activities...

  

திருக்குறள் :


பால் :அறத்துப்பால் 


இயல்:இல்லறவியல் 


அதிகாரம்: ஒழுக்கம் உடைமை


குறள் : 139

ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய

வழுக்கியும் வாயாற் சொலல்.


பொருள்:

தவறியும்கூடத் தம் வாயால் தகாத சொற்களைச் சொல்வது ஒழுக்கம் உடையவர்களிடம் இல்லாத பண்பாகும்


பழமொழி :

Welcome is the best dish.


முகமலர்ந்து உபசரிப்பதே நல்விருந்து.


இரண்டொழுக்க பண்புகள் :


1. என் கண் இவ்வுலகை கண்டு கற்றுக் கொள்ள உதவும் ஒரு சன்னல். 


2. எனவே என் சன்னலை பாதுகாப்பேன்.


பொன்மொழி :


நல்ல வாழ்க்கை நடத்துவதற்கு நல்ல பண்புகளை முறையாகப் பெற்றிருக்க வேண்டும்.


பொது அறிவு :


1. தமிழ்நாட்டில் மின்சார வாரியம் எப்போது தொடங்கப்பட்டது ? 


1957ஆம் ஆண்டு . 


2.முதுகு தண்டில் உள்ள எலும்புகள் எத்தனை?


 33.


English words & meanings :


Elegant -graceful and stylish in appearance or manner. adjective. She is elegant. நேர்த்தியான. பெயரடை



ஆரோக்ய வாழ்வு :


காய்ச்சல் வந்ததும் பலர் நமக்கு கூறும் அறிவுரைகளில் ஒன்று ஆவி பிடிப்பது. இது உடலுக்கும் நாம் இருக்கும் அறையை ஈரப்பதத்துடன் வைக்கவும் உதவும். எனவே காய்ச்சல் வந்தால் சிறிது நிமிடம் ஆவி பிடியுங்கள் மற்றும் சுடு நீரில் குளியுங்கள்.




நீதிக்கதை


உலகிலேயே வெண்மையான பொருள் எது?


ஒருசமயம், தெனாலிராமன் அரசவையில் இருந்தபோது, தூக்கம் கண்ணைச் செருகியது. அதைக் கண்டு உறுப்பினர்கள் சிரித்து விட்டனர். அப்போது அமைச்சர், அரசே! தெனாலிக்கு வயதாகி விட்டது. ஓய்வு கொடுங்கள் என்றார். அரசரிடம் பதில் இல்லை. மறுநாள் அரசர், என் மனதில் ஒரு கேள்வி, உலகிலேயே வெண்மையான பொருள் எது? இதற்குச் சரியான பதிலை நீங்கள் சொல்லி விட்டால், தெனாலியை ஓய்வு கொடுத்து அனுப்பி விடுவேன் என்றார். 


அமைச்சர், வெள்ளி நகை தான்... என்றார். அரசகுரு, பால் தான்! என்றார். சிலர், சம்பா மலர்! என்றனர். வேறு சிலர், மல்லிகை தான் என்றனர். இன்னும் சிலர் சுண்ணாம்பு தான்! என்றனர். அரசர் திருப்தி அடையவில்லை. தெனாலியிடம் கேட்டார். நாளைக்குக் கூறுகிறேன் என்றார் தெனாலி. மறுநாள் தெனாலி வெள்ளி நகை, கொஞ்சம் பால், சம்பா மலர், மல்லிகை மலர்கள் ஆகியவற்றை வரவழைத்தார். சுண்ணாம்பும் வந்தது. பிறகு ஒரு பெரிய அறையில் தரை விரிப்பின் மீது அவற்றை வைத்து, கதவு மற்றும் ஜன்னல்களைச் சாத்தித் திரையிட்டார்.


வெளியில் வந்து, அரசே! இவர்களிடம் உள்ளே போய் அவரவர்கள் வெண்மை என்று கருதும் பொருளை எடுத்து வரச் சொல்லுங்கள்... என்றார். அனைவரும் உள்ளே போயினர். அவர்களுக்கு உள்ளே இருட்டில் எதுவும் தெரியவில்லை. ஒருவருக்குப் பால் பாத்திரம் காலில் இடறி, பால் தரையில் கொட்டியது. இன்னொருவர் காலில் நகைகள் இடறின. வேறொருவர் பூக்களை மிதித்து விட்டார். ஒரு பாத்திரத்தில் இருந்த சுண்ணாம்பு கவிழ்ந்தது. மூவரும் பதறி, ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டனர். அதே சமயம் தெனாலிராமன் அறையில் மேற்புறக் கதவைத் திறந்தார். அறையில் ஒளி பரவியது. அப்போது அங்கிருந்த பொருட்கள் பளிச்சென்று தெரிந்தன. அச்சமயம், அரசர் கிருஷ்ணதேவராயர் உள்ளே வந்தார்.


உடனே தெனாலிராமன், அரசே! என்னுடைய பதில் இப்போது உங்களுக்கு விளங்கியிருக்குமே! உலகில் எல்லாவற்றையும் விட வெண்மையான பொருள் பாலோ, வெள்ளி நகையோ, சுண்ணாம்போ அல்லது மலர்களோ அல்ல. அப்படியிருந்தால், இருட்டறையில் அவை பளிச்சிட்டிருக்க வேண்டுமே! ஏன் கண்ணுக்குத் தெரியவில்லை? எனவே, உலகில் வெண்மையான பொருள் சூரியனின் பிரகாசம் மட்டும்தான். அதனால்தான் உலகின் மற்ற எல்லாப் பொருள்களும் பிரகாசிக்கின்றன என்றார். அதைக் கேட்ட அரசர், மகிழ்ச்சியடைந்து, தெனாலியை வாரி அணைத்துக் கொண்டார்.


சபையினரிடம் அரசர், தெனாலிராமன் நமக்கு ஏன் இத்தனை பிரியமானவனாக இருக்கிறான் என்பதை இப்போது நீங்கள் அறிந்து கொண்டிருப்பீர்களே...? என்றார். தெனாலிக்கு ஓய்வு கொடுத்து அனுப்புங்கள் என்று யோசனை கூறியவர்கள் எல்லாம் வாயடைத்துப் போயினர்.


இன்றைய செய்திகள்


07.03. 2023


* கரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றினாலே H3N2  இன்புளுயன்சா வைரஸ் பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


* ''மக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை அவசியம்'' - மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்.


* முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்காக நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வில் 2 லட்சம் மருத்துவர்கள் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் வரும் 31-ம் தேதி வெளியாகின்றன.


* உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ஸ்க்ரப் டைபஸ் காய்ச்சலுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சையை இந்திய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


* உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாசி மாவட்டத்தில் 3 முறை நிலநலடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதியில் வீட்டை விட்டு வெளியேறினர்.


* இந்தோனேஷியா எரிபொருள் கிடங்கில் பயங்கர தீ விபத்து: 19 பேர் உயிரிழப்பு; 3 பேர் மாயம்.


* மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்: டெல்லி கேபிடல்ஸ் வெற்றி.


* இராணி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.


Today's Headlines


* Minister M. Subramanian has said that by following the rules of corona prevention, we can protect ourselves from the effects of the H3N2 influenza virus.


 * "Immediate action is necessary on the petitions given by the people" - CM Stalin's insistence to the District Collectors.


 * 2 lakh doctors appeared in the NEET exam held across the country for postgraduate medical courses.  The exam results will be released on the 31st.


 * Indian researchers have discovered a better medical treatment for life-threatening scrub typhus fever.


 * 3 earthquakes occurred in the Uttarakhand district of Uttarakhand state.  As a result, people ran out of the house in a panic.


 * Indonesia fuel depot fire: 19 dead;  3 people are missing.


 * Women's Premier League Cricket: Delhi Capitals won.


 * The rest of India won the Irani Cup Cricket Championship.

 

தேன்சிட்டு - ஜனவரி 2023 மாத இதழ் - உலக அறிவுக்குத் தமிழ்ச் சாளரம் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ் - பள்ளிக்கல்வித்துறைக்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியீடு (Then Chittu - January 2023 Monthly Magazine - Tamil window to world knowledge - Magazine for Classes 6 to 9 - Published by Tamil Nadu Textbook and Educational Works Corporation for School Education Department)...

 

>>> தேன்சிட்டு - ஜனவரி 2023 மாத இதழ் - உலக அறிவுக்குத் தமிழ்ச் சாளரம் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ் - பள்ளிக்கல்வித்துறைக்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியீடு (Then Chittu - January 2023 Monthly Magazine - Tamil window to world knowledge - Magazine for Classes 6 to 9 - Published by Tamil Nadu Textbook and Educational Works Corporation for School Education Department)...




>>> தேன்சிட்டு - பிப்ரவரி 2023 மாத இதழ் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ்...






தேன்சிட்டு - பிப்ரவரி 2023 மாத இதழ் - உலக அறிவுக்குத் தமிழ்ச் சாளரம் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ் - பள்ளிக்கல்வித்துறைக்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியீடு (Then Chittu - February 2023 Monthly Magazine - Tamil window to world knowledge - Magazine for Classes 6 to 9 - Published by Tamil Nadu Textbook and Educational Works Corporation for School Education Department)...



>>> தேன்சிட்டு - பிப்ரவரி 2023 மாத இதழ் - உலக அறிவுக்குத் தமிழ்ச் சாளரம் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ் - பள்ளிக்கல்வித்துறைக்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியீடு (Then Chittu - February 2023 Monthly Magazine - Tamil window to world knowledge - Magazine for Classes 6 to 9 - Published by Tamil Nadu Textbook and Educational Works Corporation for School Education Department)...




>>> தேன்சிட்டு - மார்ச் 2023 மாத இதழ் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ்...



தேன்சிட்டு - மார்ச் 2023 மாத இதழ் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ் - பள்ளிக்கல்வித்துறைக்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியீடு (Then Chittu - March 2023 Monthly Magazine - Magazine for Classes 6 to 9 - Published by Tamil Nadu Textbook and Educational Works Corporation for School Education Department)...

 


>>> தேன்சிட்டு - உலக அறிவுக்குத் தமிழ்ச் சாளரம் - மார்ச் 2023 மாத இதழ் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ் - பள்ளிக்கல்வித்துறைக்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியீடு (Then Chittu - March 2023 Monthly Magazine - Magazine for Classes 6 to 9 - Published by Tamil Nadu Textbook and Educational Works Corporation for School Education Department)...




>>> தேன்சிட்டு - ஜனவரி 2023 மாத இதழ் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ்...



>>> தேன்சிட்டு - பிப்ரவரி 2023 மாத இதழ் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ்...


ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் அறிவித்த திட்டங்களுக்கு பல்வேறு ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் நன்றி தெரிவித்துக் கொண்டனர் - புகைப்படங்கள் தொகுப்பு (Representatives of various Teachers Federations thanked the Chief Minister for the schemes announced for the teachers - photo gallery)...



>>> ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் அறிவித்த திட்டங்களுக்கு பல்வேறு ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் நன்றி தெரிவித்துக் கொண்டனர் - புகைப்படங்கள் தொகுப்பு (Representatives of various Teachers Federations thanked the Chief Minister for the schemes announced for the teachers - photo gallery)...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...