கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
2023-24ஆம் கல்வி ஆண்டு - மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க மாணவர் சேர்க்கை கொண்டாட்டம் கொண்டாடுதல் - சார்ந்து - பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணைச் செயல்முறைகள் ந.க.எண்: 007579/ ஜெ2/ 2023, நாள்: 13-04-2023 (Academic Year 2023-24 - Celebration of Enrollment - Celebration to Increase Enrollment in Under Enrolled Schools - Regarding - Joint Proceedings of Commissioner of School Education and Director of Elementary Education RC.No: 007579/ J2/ 2023, Dated: 13-04-2023)...
தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு - பிப்ரவரி 2023 - தேர்வான மாணவர்களின் பெயர் பட்டியல் (National Means cum Merit Scholarship Examination February 2023 - Selected Candidates Lists)...
www.dge.tn.gov.in என்ற வலைதள முகவரியை உள்ளீடு செய்யவும்.
✍️ Results பகுதியில் மாணவர்கள் Registration Number மற்றும் பிறந்த தேதி (YYYY-MM-DD) உள்ளீடு செய்து MAT & SAT மதிப்பெண்கள் தெரிந்து கொள்ளலாம்..
✍️ NMMS merit opinion click செய்து இந்த தேர்வில் PASS ஆன மாணவர்கள் விவரம் தெரிந்து கொள்ளலாம்..
>>> NMMS தேர்வு - கல்வி மாவட்டம் வாரியாக தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மொத்த எண்ணிக்கை...
மாவட்டக் கல்வி அலுவலர் பதவிக்கான முதல்நிலை எழுத்துத் தேர்விற்குரிய (கணினி வழித் தேர்வு) நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் தொடர்பான செய்தி வெளியீடு எண்: 34 /2023, நாள்: 13.04.2023 (Press Release No: 34 /2023, Date: 13.04.2023 regarding Download of Admit Card for Preliminary Written Examination (Computerized Examination) for the post of District Educational Officer to be held on 20.04.2023 morning)...
EMIS இணையதளத்தில் ஆசிரியர்களின் தனிப்பட்ட உள்நுழைவில் (Individual Login) பணியிட மாறுதலுக்கான விண்ணப்ப வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் பணியிட மாறுதல் கலந்தாய்வுக்கான செயல்முறைகள் வெளியிடப்படும் என தெரிகிறது (EMIS website has provided the facility to apply for Transfer in individual login of teachers. It seems that the Proceedings for transfer counseling will be published soon)...
Staff > Transfer Application
Note: Transfer application time window is now closed. Application cannot be submitted now.
Transfer Application
கலந்தாய்வு
The field is required
ஆசிரியரின் அடையாள எண் (EMIS ID No.)
ஆசிரியரின் பெயர்
பாலினம்
ஆண் / பெண்
கைபேசி எண்
பதவியின் பெயர்
நியமிக்கப்பட்ட பாடம்
தற்போது பணிபுரியும் பள்ளியின் UDISE No.
பிறந்தநாள்
தற்போதைய பதவியில் முதன் முதலில் நியமனம் செய்யப்பட்ட நாள்
தற்போது பணிபுரியும் பள்ளியில் பணியேற்ற நாள்
தற்போது பணிபுரியும் பள்ளியின் பெயர் (முழு விலாசம், மாவட்டம், பின்கோடுடன்) மற்றும் பள்ளி நிர்வாகம்
பணியில் சேர்ந்த நாள்
ஆசிரியரின் முழு விலாசம்
மாறுதல் முன்னுரிமை
(முன்னுரிமை கோரும் விவரங்கள் தவறு எனக் கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.)
நாள் :
13/04/2023
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.04.2023 - School Morning Prayer Activities...
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.04.2023 - School Morning Prayer Activities...
திருக்குறள் :
குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : இல்லறவியல்
அதிகாரம் : வெஃகாமை
குறள் எண் : 174
குறள்: இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்.
விளக்கம் : ஐம்புலன்களையும் வென்ற குற்றமில்லாத அறிவை உடையவர், யாம் வறுமை அடைந்தோம் என்று எண்ணியும் பிறர் பொருளை விரும்பார்.
பழமொழி :
Whatever is worth doing, is worth doing well.
செய்ய வேண்டியதைச் சரியாக செய்
இரண்டொழுக்க பண்புகள் :
1. என் முன் என்னை புகழ்ந்து பேசுபவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பேன்.
2. எல்லா காரிங்களிலும் நிதானம் கைகொள்வென். அதுவே என் பலன் ஆகும்
பொன்மொழி :
ஒரு மனிதனுடைய குணத்தைப் பற்றி அறிவதற்கு அவனுடைய எண்ணங்களையும் செயல்களையும் ஆராய்ந்தால் போதுமானது.
பொது அறிவு :
1. அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட பெருமையுடைய தமிழ் நூல் எது?
திருக்குறள் .
2. எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் இந்திய பெண் யார்?
பச்சேந்திரி பால்.
English words & meanings :
proclamation - announcement of important government matter. அதிகாரபூர்வ தகவல்
ஆரோக்ய வாழ்வு :
கறிவேப்பிலை உயர் இரத்த சர்க்கரை அளவை 45 சதவிகிதம் குறைப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது. இரத்தத்தில் உள்ள குளுக்கோஸை நிலைநிறுத்த உதவுவதோடு, நீரிழிவு நோயை திறம்பட நிர்வகிக்க கறிவேப்பிலை உதவுகிறது. கறிவேப்பிலையில் வைட்டமின், பீட்டா கரோட்டின் மற்றும் கார்பசோல் ஆல்கலாய்டுகள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அவை ஃப்ரீ ரேடிக்கல்களின் ஆக்ஸிஜனேற்ற சேதத்துடன் தொடர்புடைய பல நோய்களைத் தடுக்கின்றன. அந்த பட்டியலில் வகை 2 நீரிழிவு நோய் முதலிடத்தில் உள்ளது.
கணினி யுகம்
F3 - With the use of F3, you can find anything from your system’s desktop. F2 - The F2 key allows you to rename the selected icon.
ஏப்ரல் 13
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பிறந்தநாள்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (ஏப்ரல் 13, 1930 - அக்டோபர் 8, 1959) ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.
நீதிக்கதை
கதை :
ஒரு ஊர்ல ஒரு வயசான பாட்டி தனியா வசித்து வந்தாள். அந்த ஊர்ல கொஞ்ச நாளா திருடங்க நடமாட்டம் அதிகமிருந்தது.
ஒரு நாள் பாட்டி வெளியே போய்விட்டு வந்து பார்த்த போது வீட்டுக் கதவு திறந்திருந்தது. உள்ளே போன பாட்டிக்கு வீட்டுக்குள் ஒரு திருடன் திரைச்சீலைக்குப் பின்னால் மறைந்து இருப்பது தெரிந்து விட்டது.
அவனை எப்படியும் தப்பிக்க விடக் கூடாது புத்திசாலித் தனமாக பிடிக்கனும்னு நினைச்ச பாட்டி உடனே ஒரு தந்திரம் செய்தாள்.
அங்கிருந்த விளக்கு ஸ்டேண்டின் முன் நின்று கொண்டு, மாய விளக்கே என் மீது கோபமா? நான் வெளியே போய் வந்ததும் என்ன நடந்தது என்று கேட்பாயே இன்று ஏன் கேட்கவில்லை என்றாள். இதைக் கேட்டதும் திருடனுக்கு ஆச்சரியம். பேசும் விளக்கா என்று எட்டிப் பார்த்தான்.
விளக்கு திரைச்சீலையின் அசைவில் லேசாக ஆட பாட்டி, கோபமில்லையா? அப்படியானால் என்ன நடந்தது சொல்கிறேன் கேள். பக்கத்து வீட்டு ஜூலி இன்று கடைத் தெருவுக்குப் போகும் போது ஒரு நாய் அவளைத் துரத்தியது. அவள் சத்தம் போட்டுக் கத்தினாள்.
மீண்டும் விளக்கு காற்றில் அசைய, ஓ எப்படிக் கத்தினாள் என்று கேட்கிறாயா என பாட்டி கேட்டாள். திருடனுக்கோ ஒன்றும் புரியவில்லை. நமக்கு மட்டும் ஒன்னும் கேட்க வில்லை. விளக்கு ஆடுவது தெரியுது. ஆனால் கிழவி பேசுகிறாளே என்று குழம்பினான்.
மாய விளக்கே ஜூலி எப்படிக் கத்தினாள் என்று சொல்கிறேன் என்றபடி பாட்டி ஹெல்ப் ஹெல்ப் என்று உரக்கக் கத்த அக்கம் பக்கம் வீட்டுக்காரர்கள் பாட்டிக்கு ஏதோ ஆபத்து என்று ஓடி வந்தவர்கள் திருடனைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
நீதி :
காலம் அறிந்து அந்த இடத்தில் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும்.
இன்றைய செய்திகள்
13.04.2023
* தமிழகத்தில் நிலநடுக்க கண்காணிப்பு மையம் அமைக்கப்படும் என்றும், நில ஆவண விவரங்களை அறிய செயலி உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
* தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுகளில் என்சிசி மாணவர்களுக்கு சிறப்பு மதிப்பெண்கள் வழங்கப்படுவதாக இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அறிவித்துள்ளது.
* தமிழகத்தில் பரவும் ஒமைக்ரானின் புதிய வகை தொற்றால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. தினசரி பாதிப்பு அதிகரிக்கும் பட்சத்தில் பொது இடங்களில் முகக் கவசம்கட்டாயம் ஆக்கப்படும் என்று சட்டப்பேரவையில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
* இந்த ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் தென்மேற்குப் பருவமழை 96 சதவீதம் வரை பெய்யும் என்றும், குறைந்த மழைப்பொழிவு குறித்து விவசாயிகள் கவலையடையத் தேவையில்லை என்றும் மத்திய புவி அறிவியல் துறைச் செயலாளர் எம்.ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.
* எல்லைப் பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் சட்டவிரோதமாக ஆயுதங்களை விநியோகிக்கிறது பாகிஸ்தான்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா குற்றச்சாட்டு.
* மியான்மரில் ராணுவ ஆட்சி எதிர்ப்பாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பலியானவர்கள் எண்ணிக்கை 100-ஐ கடந்துள்ளது.
* சர்வதேச பேட்மிண்டன் தரவரிசையில் இந்திய வீரர் ரஜாவத் முன்னேற்றம்.
* ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்திய வீராங்கனைகளான நிஷா தஹியா மற்றும் பிரியா பதக்கங்களை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்து உள்ளனர்.
* இந்திய கிரிக்கெட் வாரியம் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக மும்பை, டெல்லி உள்பட 5 மைதானங்களை புதுப்பிக்க முடிவு செய்துள்ளது.
Today's Headlines
* Minister KKSSR Ramachandran said that an earthquake monitoring center will be set up in Tamil Nadu and an app will be developed to know the details of land documents.
* Department of Youth Welfare and Sports Development has announced that special marks will be awarded to NCC students in the Tamil Nadu Uniformed Staff Examinations.
* The new strain of Omicron spreading in Tamil Nadu has not affected much. Health Minister M. Subramanian has said in the Legislative Assembly that face shields will be made mandatory in public places if daily cases increase.
* Union Secretary of Geoscience Department M. Ravichandran has said that during the period from June to September this year, the southwest monsoon will receive up to 96 percent and farmers need not worry about less rainfall.
* Pakistan illegally distributing arms through drones in border areas: UN India accused in Security Council meeting.
* More than 100 people have been killed in an attack on anti-government protesters in Myanmar.
* Indian player Rajawat's progress in international badminton rankings.
* Indian wrestlers Nisha Dahiya and Priya have brought pride to India by winning medals at the Asian Wrestling Championships.
* The Indian Cricket Board has decided to renovate 5 stadiums including Mumbai and Delhi before the Cricket World Cup.
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Conducting Practical Exams for Half Yearly Examination - DSE Proceedings
அரையாண்டுத் தேர்வுக்கான செய்முறைத் தேர்வுகள் நடத்த பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் Proceedings of the Director of School Education fo...